02-02-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உயர்ந்த பதவியை அடைவதற்காக தந்தை உங்களுக்கு என்ன கற்பிக்கின்றாரோ அதை அப்படியே மீறாமல் கடைபிடியுங்கள், சதா ஸ்ரீமத் படி நடந்து கொண்டேயிருங்கள்.

கேள்வி:
எப்போதும் துக்கமடையாமல் இருப்பதற்கு எந்த ஒரு விஷயத்தை நல்ல முறையில் சிந்தனை செய்ய வேண்டும்?

பதில்:
ஒவ்வொரு ஆத்மாவும் எந்த ஒரு பாகத்தை நடிக்கின்றதோ அது நாடகத்தில் துல்லியமாக பதிவாகியுள்ளது. நாடகம் முதலும் முடிவும் இல்லாதது. இந்த விஷயத்தை சிந்தனை செய்து பார்த்தால் ஒருபோதும் துக்கம் ஏற்பட முடியாது. யார் நாடகத்தின் முதல்-இடை-கடைசியைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளவில்லையோ அவர்களுக்கு துக்கம் ஏற்படுகிறது. குழந்தைகள் நீங்கள் இந்த நாடகத்தை எது எப்படியோ அப்படியே சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். இதில் அழுவதற்கோ, கோபப்படுவதற்கோ எந்த விஷயமும் இல்லை.

ஓம் சாந்தி.
ஆத்மா மிகச் சிறியது என்று ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். மிகச் சிறிய ஆத்மாவால் எவ்வளவு பெரிய சரீரத்தைக் காண முடிகிறது. சிறிய ஆத்மா தனியாக பிரிந்துவிட்டால் பிறகு எதையும் காண முடிவதில்லை. ஆத்மாவைப் பற்றி சிந்தனை செய்யப்படுகிறது. இவ்வளவு சிறிய புள்ளி என்னென்னவோ காரியங்களைச் செய்கிறது. பூதக் கண்ணாடி மூலம் மிகச் சிறிய வைர துகள்களைக் காண்கின்றனர் - ஏதாவது குறை (தோஷம்) இல்லை தானே என்று. ஆக ஆத்மாவும் மிகச் சிறியது. எவ்வாறு பூதக்கண்ணாடி மூலம் பார்க்கின்றீர்கள் - அவ்வாறு பார்க்கப்படுகிறது. எங்கே வசிக்கிறது? என்ன தொடர்பு? இந்த ஸ்தூல கண்களால் எவ்வளவு பெரிய பூமியை, ஆகாயத்தைப் பார்க்க முடிகிறது. புள்ளி (ஆத்மா) வெளியேறிவிட்டால் எதுவுமே இருப்பதில்லை (பார்க்க முடிவதில்லை) தந்தை எப்படி புள்ளியாக இருக்கிறாரோ அதே போல் ஆத்மாவும் புள்ளி. இந்த சிறிய ஆத்மா தான் தூய்மையாகவும், தூய்மையற்றதாகவும் ஆகிறது. இது அதிகமாக சிந்திக்க வேண்டிய விஷயமாகும். ஆத்மா என்பது என்ன, பரமாத்மா எனப்படுவது என்ன இதை யாரும் தெரிந்திருக்கவில்லை. இவ்வளவு சிறிய ஆத்மா சரீரத்தில் இருந்து கொண்டு என்னவெல்லாம் செய்கிறது, எதையெல்லாம் காண்கின்றது. 84 பிறவிகளின் நடிப்பின் பாகம் அந்த ஆத்மாவில் நிரப்பப்பட்டுள்ளது. எப்படி வேலை செய்கிறது, ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு சிறிய புள்ளியில் 84 பிறவிகளின் நடிப்பின் பாகம் பதிவாகி யுள்ளது. ஆத்மா ஒரு சரீரம் விட்டு மற்றொன்றை எடுக்கிறது. நேரு இறந்தார், கிறிஸ்து இறந்தார், ஆத்மா வெளியேறிவிட்டதெனில் சரீரம் இறந்துவிட்டது. எவ்வளவு பெரிய சரீரம், எவ்வளவு சிறிய ஆத்மா - புரிந்து கொள்ளுங்கள். இந்த படைப்பின் சக்கரம் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சுற்றுகிறது என்பதை மனிதர்களுக்கு எப்படி தெரிய வரும் இதையும் கூட பாபா பல முறை புரிய வைத்துள்ளார். ஒருவர் இறந்துவிட்டார் என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. அவருடைய ஆத்மா இவர் சரீரத்திலிருந்து வெளியேறி வேறொன்றை எடுத்துள்ளது. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் கூட இந்த பெயர் உருவத்திலிருந்து இதே சமயத்தில் வெளியேறி இருந்தது. ஒரு சரீரத்தை விட்டு மற்றொரு சரீரத்தில் பிரவேசிக்கிறோம் என்பது ஆத்மாவிற்குத் தெரிகிறது.

இப்பொழுது சிவஜெயந்தியை கொண்டாடுகிறீர்கள். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் கூட சிவஜெயந்தி கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் வைரத்திற்குச் சமமான சிவஜெயந்தி கொண்டாடப்பட்டே வருகிறது. இவை சரியான விஷயங்கள் தான். இதை எப்படி மற்றவர்களுக்குப் புரிய வைப்பது என்று சிந்தனை செய்ய வேண்டியுள்ளது. இந்த விழா நடந்து கொண்டே வந்துள்ளது, இது ஒன்றும் புதிய விஷயமல்ல என்று நீங்கள் கூறுவீர்கள். வரலாறு மீண்டும் திரும்ப நடக்கிறது, யார் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு யாரெல்லாம் நடிக்க வேண்டியுள்ளதோ அவர்களே தன் சரீரத்தை முன்பு போலவே எடுக்கிறார்கள். ஒரு பெயர், உருவம், தேசம், காலம் இவற்றை விட்டுவிட்டு மற்றொன்றை எடுக்கிறார்கள். இதன் மீது விரிவாக சிந்தனை செலுத்தி எழுதினீர்கள் என்றால் மனிதர்கள் ஆச்சரியப்படுவார்கள். குழந்தைகளிடம் நாம் கேட்கிறோம் அல்லவா - முன்பு என்னை சந்தித்ததுண்டா? என்று. இந்த சிறிய ஆத்மாவிடம் தான் கேட்க வேண்டியுள்ளது அல்லவா. நீங்கள் இந்த பெயர் உருவத்தில் முன்பு எப்பொழுதாவது சந்தித்துள்ளீர்களா? ஆத்மா கேட்கிறது. நிறைய குழந்தைகள் பதில் கூறுகிறார்கள் - ஆம் பாபா, கல்பத்திற்கு முன் சந்தித்துள்ளோம். முழு நாடகத்தின் பாகமும் புத்தியில் பதிவாகி உள்ளது. அவர்கள் எல்லைக்குட்பட்ட நாடக நடிகர்கள், இது எல்லைக்கப்பாற்பட்ட நாடகம். இந்த நாடகம் மிகச் சரியானது. எவ்வித வேறுபாடும் இருக்க முடியாது. உலகத்தில் காண்பிக்கப்படும் சினிமா (பயாஸ்கோப்) எல்லைக்குட்பட்டது, இயந்திரத்தினால் ஓட்டப்படுகிறது. இரண்டு (அல்லது) நான்கு சுருள்கள் (ரீல்) இருக்கலாம், அது தான் மீண்டும் மீண்டும் சுற்றுகிறது. இது முதலும் முடிவு மில்லாத, அழிவற்ற ஒரே ஒரு எல்லையில்லா நாடகம். இதில் இவ்வளவு சிறிய ஆத்மா ஒரு நடிப்பை நடிக்கிறது. பிறகு இரண்டாவதாக (வேறு சரீரத்தில்) வேறொரு நடிப்பை நடிக்கிறது. 84 பிறவிகளுக்கான எவ்வளவு பெரிய படச்சுருள் இருக்கக்கூடும். இது இயற்கை. யாருடைய புத்தியிலும் தங்காது. இது பதிவு செய்யப்பட்ட தகடு (கேஸட்) போன்றது. மிகப் பெரிய அதிசயம். 84 இலட்சம் பிறவிகள் இருக்க முடியாது. 84 பிறவிகளின் சக்கரம் என்று தான், இதன் அறிமுகத்தை (விளக்கத்தை) எப்படி தரலாம். செய்தியாளர்களுக்கு புரிய வைத்துவிட்டால் செய்திதாள்களில் வெளியிடுவார்கள். பத்திரிக்கைகளிலும் அவ்வப்பொழுது போட முடியும். நாம் இந்த சங்கம யுகத்தின் விஷயத்தை தான் பேசிக் கொண்டிருக்கிறோம். சத்திய யுகத்தில் இந்த விஷயமே இருக்காது, கலியுகத்திலும் இருக்காது. தற்போதுள்ள விலங்குகளை மீண்டும் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு காணலாம். எந்த வித்தியாசமும் இருக்காது. இவையனைத்தும் நாடகத் தில் பதிவாகியுள்ளது. சத்திய யுகத்தில் விலங்குகளும் கூட மிக அழகாக இருக்கும். இந்த முழு உலகத்தினுடைய வரலாறும் திரும்ப நடக்கும். இவ்வாறு நாடகத்தின் படப்பதிவு நடக்கிறது. ஈ பறந்து சென்றது என்றால் அதுவும் திரும்பவும் நடக்கும். இந்த சின்ன சின்ன விஷயங்களைப் பற்றி இப்போது நாம் நினைக்க வேண்டாம். முதலாவதாக தந்தை அவரே கூறுகிறார் - நான் ஒவ்வொரு கல்பத்தின் சங்கமயுகத்தில் பாக்கியசாலி ரதத்தில் தான் வருகிறேன். எவ்வளவு சிறிய புள்ளியாகிய ஆத்மா கூறுகிறது எவ்வாறு வருகிறது என்று. அவரை ஞானக்கடல் என்றழைக் கிறோம். இந்த விஷயங்கள் குழந்தைகள் உங்களில் யார் புத்திசாலியோ அவர்கள் தான் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு நான் வருகிறேன். இந்த படிப்பு எவ்வளவு மதிப்புமிக்கது. தந்தையிடம் தான் மிகச் சரியான ஞானம் உள்ளது அதைத்தான் குழந்தைகளுக்கு அளிக்கின்றார். உங்களிடம் யாரேனும் கேட்டால் நீங்கள் சத்திய யுகத்தின் ஆயுள் 1250 வருடங்கள் என்று உடனே கூறிவிடுவீர்கள். ஒவ்வொரு பிறவியின் ஆயுட்காலம் 150 வருடங்கள். எத்தனை பாகத்தை நடிக்கிறது. புத்தியில் முழு சக்கரமும் சுற்றுகிறது. நாம் 84 பிறவிகள் எடுக்கிறோம். முழு படைப்புமே இது போலவே சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இது முதலும் முடிவுமில்லாத அழிவில்லாத உருவாக்கப்பட்ட நாடகம். இதில் புதியதாக எதையும் சேர்க்க முடியாது. நடக்க முடியாத ஒன்றை யோசிக்க வேண்டாம் என்று பாடப்படுகிறது. என்னவெல்லாம் நடக்கின்றதோ அவை நாடகத்தில் அடங்கியுள்ளது. சாட்சியாக இருந்து பார்க்க வேண்டியுள்ளது. அந்த (உலகாயத) நாடகத்தில் வருகின்ற ஒரு காட்சியைப் பார்த்து பலவீன மனமுடையவர்கள் அழ ஆரம்பித்துவிடுகின்றனர். செயற்கையான நாடகமல்லவா. இந்த நாடகம் உண்மையானது, இதில் ஒவ்வொரு ஆத்மாவும் தத்தமது பாகத்தை நடிக்கிறது. நாடகம் ஒருபோதும் முடிவதில்லை. இதில் அழுவதற்கோ கோபப்படுவதற்கோ எந்த விஷயமும் இல்லை. நாடகத்தின் முதல்-இடை-கடைசியைப் பற்றி அறிந்து கொள்ளாதவர்களே துக்கமடைகின்றனர் இதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இந்த சமயத்தில் நாம் இந்த ஞானத்தினால் பதவியைப் பெறுகிறோம், சக்கரத்தை சுழற்றுவதால் மீண்டும் (இழந்துவிட்ட) அதையே அடைவோம். இது ஆச்சரியத்துக்குரிய சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களாகும். எந்த மனிதனும் இந்த விஷயங்களை அறிந்து கொள்ளவில்லை. எங்களுக்கு படைப்பவரையோ படைப்பை பற்றியோ தெரியாது என்று ரிஷி, முனிவர்கள் கூறிவிட்டனார். படைப்பவர் இவ்வளவு சிறிய புள்ளி என்று அவர்களுக்கு என்ன தெரியும். அவர் தான் புதிய படைப்பை படைக்கக் கூடியவர். குழந்தைகள் உங்களுக்கு கற்பிப்பவர் ஞானக்கடலான அவர் தான். இந்த விஷயங்களை குழந்தைகள் நீங்கள் தான் புரிய வைக்கின்றீர்கள். எங்களுக்குத் தெரியாது என்று ஒருபோதும் கூறமாட்டீர்கள். தந்தை இந்த சமயத்தில் அனைத்தையும் புரிய வைக்கின்றார்.

நீங்கள் எந்தவொரு விஷயத்திற்காகவும் துக்கமடைவதற்கான அவசியம் இல்லை. எப்போதுமே புன்சிரிப்புடன் இருக்க வேண்டும். அந்த நாடகத்தின் பதிவு நாடாக்கள் போகப் போக தேய்ந்துவிடும், பழையதாகிவிடும் பிறகு மாற்றுகின்றனர். பழையதை அழித்துவிடுகிறார்கள். இதுவே எல்லை கடந்த அழிவில்லாத நாடகம். இதுபோன்ற விஷயங்களைப் பற்றி சிந்தனை செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும், இது நாடகம் என்று. நாம் தந்தையின் ஸ்ரீமத் படி நடந்து தூய்மையில்லாமலிருந்து தூய்மை ஆகிக் கொண்டிருக்கிறோம். வேறெதனாலும் நாம் தூய்மை இல்லாமலிருந்து தூய்மையாகிவிடுவோம் அதாவது தமோபிரதானத்திலிருந்து சதோபிரதான மாகி விடுவோம் என்பது முடியாது. நம் பாகத்தில் நடித்து நடித்தே சதோபிரதானத்திலிருந்து தமோ பிரதானமாகி விட்டோம், மீண்டும் சதோபிரதானமாக வேண்டும். ஆத்மாவும் அழிவதில்லை, நடிப்பின் பாகமும் மாற்றமடை வதில்லை (வேறுபடுவதில்லை). இப்படியான விஷயங்களின் மீது யாருக்கும் சிந்தனை ஓடுவதில்லை. மனிதர்கள் இதைக் கேட்டு அதிசயப்படுவார்கள். அவர்கள் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களை மட்டுமே படிக்கின்றனர். இராமாயணம், பாகவதம், கீதை எல்லாமே பக்திக்கானதே. இதில் சிந்தனையை செலுத்த வேண்டும். எல்லையற்ற தந்தை என்ன புரிய வைக்கின்றாரோ அதை அப்படியே கடைபிடித்தால் நல்ல பதவியைப் பெற முடியும். அனை வராலும் ஒரே மாதிரி கடைபிடிக்க முடியாது. சிலர் மிக நல்ல முறையில் புரிய வைக்கின்றனர். இப்பொழுது சிறைச் சாலைகளுக்கெல்லாம் கூட சென்று சொற்பொழிவாற்றுகின்றனர். வேசியர் கள், பேசமுடியாதவர்கள், காது கேளாதோர் ஆகியோரிடமும் செல்ல வேண்டும், அவர்களுக்கும் (தெரிந்து கொள்ள) உரிமையுண்டு. சைகை மூலமாக புரிய வைக்க முடியும். உள்ளே இருக்கும் ஆத்மா புரிந்து கொள்ளும். சித்திரங்களை எதிரில் வைத்தால் படிக்க முடியுமல்லவா. புத்தி ஆத்மா வில் உள்ளதல்லவா. பார்வையற்றவர்கள், ஊனமுற்றோர் ஆகியோர் ஏதாவதொரு விதத்தில் புரிந்து கொள்ள முடியும். கண் பார்வையில்லை என்றாலும் காது இருக்கிறதல்லவா. உங்களுடைய ஏணிப்படி சித்திரம் மிக நன்றாக உள்ளது. இந்த ஞானத்தை யாருக்கு வேண்டு மானாலும் புரிய வைத்து சொர்க்கத்திற்குச் செல்ல தகுதியானவர்களாக்க முடியும். ஆத்மா தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய முடியும், சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மனித உறுப்புகள் ஊனமடைந்துவிட்டன. அங்கே ஊனமுற்றவர்களே இல்லை. அங்கே ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே தங்கம் போல் ஆகிவிடும். இயற்கையும் தங்கமாக (சாதகமாக) இருக்கும். புதிய பொருட்கள் நிச்சயமாக சதோபிரதானமாகிவிடும். இதுவும் நாடகத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. ஒரு நொடி போல அடுத்தது இருக்காது. ஏதாவதொரு வேறுபாடு இருக்கும். இப்படிப்பட்ட நாடகத்தை உள்ளதை உள்ளபடியே சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும் இந்த ஞானம் நமக்கு இப்போது கிடைக்கின்றது, பிறகு எப்போதும் கிடைக்காது. இதற்கு முன் இந்த ஞானம் இல்லவே இல்லை. இதை ஆரம்பமும் முடிவும் இல்லாத அழிவற்றதாக உருவாக்கப்பட்ட நாடகம் எனக் கூறப்படுகிறது. இதை நல்ல முறையில் புரிந்து, கடைபிடித்து மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

பிராமணர்கள் நீங்கள் தான் இந்த ஞானத்தை அறிந்துள்ளீர்கள். இது சக்தி அளிக்கக்கூடிய மருந்து. மிக நல்ல பொருட்களுக்கு மகிமை செய்யப்படுகிறது. புதிய உலகம் எவ்வாறு ஸ்தாபனை ஆகிறது, இராஜ்யம் மீண்டும் எப்படி உருவாகும் இதை சிலர் வரிசைக்கிரமமாகத்தான் தெரிந்து கொண்டுள்ளனர்.. யார் தெரிந்து கொண்டுள்ளார்களோ அவர்கள் மற்றவருக்கும் புரிய வைக்க முடியும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான நடிப்பின் பாகம் உள்ளது. யாருடைய புத்தியில் பதிந்துள்ளதோ, சிந்தனைக் கடலை கடைந்துள்ளார்களோ அவர்கள் மற்றவர்களுக்கும் புரிய வைப்பார்கள். உங்களுடைய இந்த படிப்பினால் நீங்கள் தேவதை ஆகின்றீர்கள். நீங்கள் அனை வருக்கும் புரிய வையுங்கள் நீங்கள் ஆத்மா என்று. ஆத்மாதான் பரமாத்மாவை நினைவு செய்கிறது. ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். இறைவன் ஒருவரே என்ற முதுமொழி உண்டு. மற்றபடி மனிதர்கள் அனைவரிடமும் ஆத்மா உள்ளது. எல்லா ஆத்மாக்களுக்கும் பரலௌகிக தந்தை ஒருவர்தான். யார் உறுதியான நிச்சய புத்தி உள்ளவராக இருப்பாரோ அவரது நிலையில் மாற்றம் ஏற்படாது. அரைகுறையானவர்கள் விரைவில் மாறிவிடுவார்கள். சர்வவியாபி என்ற ஞானத்தின் மீது எவ்வளவு விவாதங்கள் செய்கின்றனர். அவர்கள் கூட அவர்களுடைய அந்த ஞானத்தில் உறுதியாக இருக்கின்றனர், நமக்கு இந்த ஞானத்தில் அந்தளவு இருப்பதில்லை. அவர்களிடம் தேவதா தர்மத்தை எவ்வாறு எடுத்துரைக்க முடியும். ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் என்பதோ மறைந்து போய்விட்டது. நம்முடைய ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் தான் தூய்மையான இல்லற மார்க்கமாக இருந்தது என்று குழந்தைகள் உங்களுக்குத் தெரியும். இப்போது தூய்மையற்று போய்விட்டது. யார் பூஜைக்கு தகுதியானவர்களாக இருந்தனரோ அவர்களே பூஜாரிகளாக ஆகிவிட்டனர். நிறைய கருத்துகள் மனப்பாடம் ஆகிவிட்டால் புரிய வைத்துக் கொண்டிருக்க முடியும். இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை தந்தை உங்களுக்குப் புரிய வைக்கின்றார் பிறகு நீங்கள் மற்றவர் களுக்குப் புரிய வையுங்கள். உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. உங்களில் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள்.

பாபா கூட கருத்துகளை திரும்ப திரும்ப கூற வேண்டியுள்ளது ஏனெனில் புதிது புதிதாக குழந்தைகள் வருகின்றனர். ஆரம்பத்தில் எப்படி ஸ்தாபனை ஆகியது என்று உங்களிடம் கேட்பார்கள் அப்போது நீங்களும் திரும்ப கூற வேண்டியிருக்கும். நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். சித்திரங்கள் மூலமாகவும் புரிய வைக்க முடியும். ஆனால் ஞானத்தின் தாரணை அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. இதற்கு ஞானம் தேவை, நினைவு தேவை, தாரணை மிக நன்றாக இருக்க வேண்டும். சதோபிரதானமாவதற்கு தந்தையின் நினைவு அவசியம் வேண்டும் சில குழந்தைகள் தன்னுடைய தொழிலில் மாட்டிக் கொள்கின்றனர். கொஞ்சம் கூட முயற்சி செய்வதே இல்லை. இது கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. கல்பத்திற்கு முன் எந்தளவு முயற்சி செய்தார்களோ அதே அளவுதான் இப்போதும் செய்வார்கள். பிற்காலத்தில் நீங்கள் ஒன்றாக சகோதர சகோதர்களாகி இருக்க வேண்டும். அசரீரியாக வந்தீர்கள் அசரீரியாகச் செல்ல வேண்டும். கடைசி காலத்தில் வேறு யாருடைய நினைவும் வரக்கூடாது. இப்போது யாருமே திரும்ப செல்ல முடியாது. எதுவரை விநாசம் ஆகவில்லையோ சொர்க்கத்திற்கு எப்படி செல்ல முடியும். இல்லையெனில் சூட்சும வதனம் செல்வீர்கள் இல்லையேல் மீண்டும் இங்கேயே பிறவி எடுப்பீர்கள். மீதமுள்ள (வயதில்) குறைந்த பேர் முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். அவர்களும் வளர்ந்த பிறகு புரிந்து கொள்வார்கள். இவை கூட நாடகத்தில் பதிவாகி உள்ளது. உங்களுடைய ஒருவரின் ரசனையில் (ஏக்ரஸ்) இருக்கும் மனநிலை கடைசியில் தான் உண்டாகும். எழுதுவதால் மட்டுமே நினைவு ஏற்படும் என்பது கிடையாது. பிறகு நூல் நிலையங்களில் (லைப்ரரி) இவ்வளவு புத்தகங்கள் எதற்கு? டாக்டர்கள், வக்கீல் முதலானோர் நிறைய புத்தகங்கள் வைத்துள்ளனர். படிக்கின்றார்கள், மனிதர்கள் மனிதர்களை வக்கீலாக்குகின்றனர். ஆத்மாக்களாகிய நீங்கள் ஆத்மாக்களுக்கு வக்கீலாகின்றீர்கள். ஆத்மாக்கள் ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றது. அது உடல் பற்றிய படிப்பு. இது ஆன்மீகப் படிப்பு. இந்த ஆன்மீகப் படிப்பு பிறகு 21 பிறவிகளுக்கு மறந்து போவதே இல்லை. மாயாவின் உலகில் நிறைய மறந்துவிடுகிறது. (தவறுகள் ஏற்படுகின்றன) இந்த காரணத்தால் சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது. யார் முழுமையாக படிப்பதில்லையோ அவர்கள் கர்மாதீத் நிலையை அடைய முடியாது எனவே சகித்துக் கொண்டு தான் ஆக வேண்டும். பிறகு பதவியும் குறைந்ததாகிவிடும். சிந்தனைக் கடலை கடைந்து மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தால் கவலைகள் நீங்கிவிடும். குழந்தைகளுக்குத் தெரியும் கல்பத்திற்கு முன்பும் இது போலவே தந்தை வந்திருந்தார், அவருடைய சிவஜெயந்தி கொண்டாடப்படுகிறது என்று. போர் முதலான எந்த விஷயமும் இல்லை. அவைகள் எல்லாம் சாஸ்திரங்களின் விஷயங்கள். இது படிப்பு (ஞானம்). வருமானமடைவதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. யாருக்கு ஒரு இலட்சம் கிடைக்கிறது அவருக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது. சிலர் இலட்சாதிபதியாக ஆகின்றனர், சிலர் குப்பை கூளங்களுக்கு அதிபதியாகி விடுகின்றனர். அதாவது மிகக் குறைந்த செல்வமுடையவர் களாகின்றனர். ஆகவே யாரிடம் எவ்வளவு ஞான ரத்தினங்கள் உள்ளதோ அவ்வளவு குஷி ஏற்படுகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞான சிந்தனை செய்து சுயம் ஞான ரத்தினங்களால் நிறைவு பெற்றவர்களாக வேண்டும். நாடகத்தின் இரகசியத்தை நன்றாகப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டு எந்த விஷயத்திலும் வருத்தமடையாமல் சதா புன்சிரிப்புடன் இருக்க வேண்டும்.

2. தனது மனநிலையை நீண்ட காலத்திற்கு ஒரே ரசனையுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் அதனால் பிற்காலத்தில் ஒரு தந்தையைத் தவிர இரண்டாவதாக வேறு யாருடைய நினைவும் வராமலி ருக்கட்டும். நாம் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரர் கள், இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்ற பயிற்சியை செய்ய வேண்டும்.

வரதானம்:
அலட்சியம் என்ற அலைக்கு விடை கொடுத்து சதா ஆர்வம்-உற்சாகத்துடன் இருக்கக் கூடிய புத்திசாலி ஆத்மா ஆகுக.

சில குழந்தைகள் மற்றவர்களைப் பார்த்து சுயம் அலட்சியம் ஆகிவிடுகின்றனர். இவ்வாறு நடக்கவே செய்கிறது, இவ்வாறு ஏற்படவே செய்கிறது என்று கூறுகின்றனர். ஒருவர் ஏமாறுகிறார் எனில் அவரைப் பார்த்து அலட்சியப்பட்டு தானும் ஏமாற்றம் அடைவது புத்திசாலித்தனமா? பாப்தாதாவிற்கு கருணை ஏற்படுகிறது - இவ்வாறு அலட்சியத்துடன் இருப்பவர்கள் பட்சாதாபப் படும் நேரம் மிகவும் கடுமையாக இருக்கும். ஆகையால் புத்திசாலியாகி அலட்சியத்தின் அலையை, மற்றவர்களைப் பார்க்கும் அலையை மனதார விடை கொடுங்கள். மற்றவர்களைப் பார்க்காதீர்கள், தந்தையைப் பாருங்கள்.

சுலோகன்:
வாரிசு குவாலிட்டி தயார் செய்யுங்கள், அப்பொழுது தான் பிரத்ட்சதாவிற்கான முரசு ஒலிக்கும்.