04.02.24    காலை முரளி            ஓம் சாந்தி  31.01.98      பாப்தாதா,   மதுபன்


மதிப்புடன் தேர்ச்சி (பாஸ் வித் ஆனர்) பெறுவதற்கு ஒவ்வொரு கஜானாவின் கணக்கையும் சோதித்தறிந்து சேமிப்பு செய்யுங்கள்

இன்று பாப்தாதா நாலாபுறமும் உள்ள ஒவ்வொரு சிறிய-பெரிய, இந்த தேசத்தின் மற்றும் வெளி நாடுகளின் குழந்தைகளின் பாக்கியத்தைப் பார்த்துப் புன்சிரிக்கிறார்கள். அத்தகைய பாக்கியம் முழுக் கல்பத்திலும் பிராமண ஆத்மாக்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது. தேவதைகளும் கூட பிராமண வாழ்க்கையை உயர்ந்தது என மதிக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து பாருங்கள் - நமது பாக்கியம் பிறவி எடுத்ததில் இருந்தே எவ்வளவு உயர்ந்ததாக உள்ளது! வாழ்க்கையில் பிறவி எடுத்ததில் இருந்தே தாய்-தந்தையரின் பாலனையின் பாக்கியம் கிடைக்கிறது. அதன் பிறகு படிப்பின் பாக்கியம் கிடைக்கிறது. அதை யடுத்து குரு மூலமாக வழிமுறையின் வரதானம் கிடைக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்குப் பாலனை, படிப்பு, ஸ்ரீமத் மற்றும் வரதானம் கொடுப்பவர் யார்? பரம ஆத்மாவிடமிருந்து இந்த மூன்றுமே கிடைக்கின்றன. பாலனை பாருங்கள் - பரமாத்ம பாலனை எவ்வளவு கொஞ்சமான, கோடியில் யாரோ சிலருக்கு மட்டும் கிடைக்கிறது! பரமாத்ம ஆசிரியரின் படிப்பு உங்களைத் தவிர வேறு யாருக்குமே கிடைப்பதில்லை. சத்குரு மூலம் ஸ்ரீமத், வரதானம் உங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆக, தங்களின் பாக்கியத்தை நல்லபடியாக அறிந்திருக்கிறீர்களா? பாக்கியத்தை நினைவில் வைத்து, ஊஞ்சலில் ஆடிக் கொண்டு இருக்கின்றீர்களா? பாடல் பாடிக் கொண்டே இருக்கிறீர்களா? - ஆஹா எனது பாக்கியம்!

அமிர்தவேளையில் தொடங்கி, எப்போது எழுகிறீர்களோ, பரமாத்ம அன்பில் மூழ்கியவாறே எழுந்திருக்கிறீர்கள். பரமாத்ம அன்பு தான் உங்களை எழுப்புகிறது. தினச்சரியாவின் ஆரம்பம் பரமாத்ம அன்பாக உள்ளது. அன்பு இல்லை என்றால் எழுந்திருக்க முடியாது. அன்பு தான் உங்கள் சமயத்திற்கான கடிகாரம். அன்பின் கடிகாரம் உங்களை எழுப்புகிறது. நாள் முழுவதும் பரமாத்ம துணை ஒவ்வொரு காரியத்தையும் செய்விக்கிறது. எவ்வளவு பெரிய பாக்கியம் - சுயம் தந்தை தம்முடைய பரந்தாமத்தை விடுத்து உங்களுக்குக் கற்பிப்பதற்காக வருகிறார். பகவான் தினமும் தமது தாமத்தை (இருப்பிடத்தை) விட்டு விட்டுப் படிப்பிப்பதற்காக வருகிறார் என்று எப்போதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆத்மாக்கள் எவ்வளவு தான் தூர-தூரத்திலிருந்து வந்தாலும், பரந்தாமத்தை விடவும் தூரமான எந்த ஒரு தேசமும் கிடையாது. ஏதேனும் தேசம் இருக்கிறதா? அமெரிக்கா, ஆஃப்ரிக்கா தூரமா? பரந்தாமம் உயர்ந்ததிலும் உயர்ந்த தாமம். உயர்ந்ததிலும் உயர்ந்த தாமத்திலிருந்து உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான், உயர்ந்தவரிலும் உயர்ந்த குழந்தைகளுக்குப் படிப்பிப்பதற்காக வருகிறார். அப்படிப்பட்ட பாக்கியத்தை அனுபவம் செய்கிறீர்களா? சத்குரு ரூபத்தில் ஒவ்வொரு காரியத்திற்காகவும் ஸ்ரீமத்தும் கொடுக்கிறார் மற்றும் துணையாக இருக் கிறார். வெறுமனே அறிவுரை மட்டும் தருவதில்லை, துணையாகவும் இருக்கிறார். நீங்கள் என்ன பாடல் பாடுகிறீர்கள்? என் கூடவே இருக்கிறீர்கள் என்று தானே! அல்லது தூரத்தில் இருக்கிறீர்கள் என்றா? கூடவே உள்ளார் இல்லையா? கேட்கிறீர்கள் என்றால் பரமாத்ம ஆசிரியரிடம். உணவு உண்ணுகிறீர்கள் என்றால் பாப்தாதாவுடன் கூடவே உண்ணுகிறீர்கள். தனியாக உண்ணுகிறீர்கள் என்றால் அது உங்கள் தவறு. பாபா என்னுடன் உண்ணுங்கள் எனச் சொல்கிறார். குழந்தைகளாகிய உங்களின் உறுதிமொழியும் உள்ளது - கூடவே இருப்போம், கூடவே உண்ணுவோம், கூடவே அருந்துவோம், கூடவே உறங்குவோம் மற்றும் கூடவே செல்வோம், தூங்குவதும் தனியாக இல்லை. தனியாகத் தூங்கினால் தீய கனவுகள் அல்லது தீய சிந்தனைகள் கனவிலும் வருகின்றன. ஆனால் பாபாவுக்கு அவ்வளவு அன்பு உள்ளது - அவர் எப்போதுமே சொல்கிறார் - என்னோடு கூடவே தூங்குங்கள், தனியாகத் தூங்காதீர்கள். ஆக, எழுகிறீர்கள் என்றாலும் அவருடன் கூட எழுகிறீர்கள், தூங்குகிறீர்கள் என்றால் அவருடன் கூடவே தூங்குகிறீர்கள். உண்ணுகிறீர்கள் என்றால் கூட உண்ணுகிறீர்கள், செல்கிறீர்கள் என்றால் கூடவே செல்கிறீர்கள், அலுவலகம் செல்கிறீர்கள் என்றால், வியாபாரம் செய்கிறீர்கள் என்றாலும் வியாபாரத்துக்கு நீங்கள் டிரஸ்டி, ஆனால் எஜமானர் பாபா. அலுவலகம் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் அறிவீர்கள் - நம்முடைய டைரக்டர், பாஸ் (தலைவர்) பாப்தாதா. இது நிமித்த மாத்திரமே, அவருடைய டைரக்சன் (வழி காட்டுதல்) மூலம் காரியமாற்றுகிறேன். எப்போதாவது வருத்தப் படுகிறீர்கள் என்றால் பாபா நண்பராகி மகிழ்விக்கிறார். நண்பராகவும் ஆகி விடுகிறார். சில நேரம் அன்பினால் அழுகிறீர்கள், கண்ணீர் வருகிறதென்றால் அதைத் துடைப்பதற்காகவும் பாபா வருகிறார். உங்கள் கண்ணீரை மனம் என்ற பெட்டகத்தில் முத்துகளுக்குச் சமமாக நிறைத்துக் கொள்கிறார். எப்பொழுதாவது குறும்பு செய்பவராகி, கோபித்துக் கொள்கிறீர்கள் அல்லது வெறுப்பைக் காட்டுகிறீர்கள் என்றாலும் மிக இனிமை யானவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் பாபா கோபித்துக் கொண்டவர்களையும் கூட கொண்டாட வந்திருக்கிறார். குழந்தைகளே, பரவாயில்லை, முன்னேறிச் செல்லுங்கள். என்னென்ன நடந்ததோ, அதெல்லாம் நடந்து முடிந்து விட்டது. அவற்றை மறந்து விடுங்கள். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். அது போல் கொண்டாடவும் செய்கிறார்கள். ஆக, ஒவ்வொரு தினச்சரியாவும் யாரோடு? பாப்தாதாவோடு. பாப்தாதாவுக்கு சில நேரம் குழந்தைகளின் விஷயங்களைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது. பாபா, உங்களை மறந்து விடுகிறோம் என்று சொல்கிறார்கள். ஒரு பக்கம் சொல் கிறார்கள், கம்பைன்டு - இணைந்திருக்கிறோம். கம்பைன்டு எப்போதாவது மறக்குமா என்ன? எப்போது கூடவே இருப்போம் என சொல்கிறீர்களோ, அப்போது துணையாக இருப்பவரை எப்படி மறப்பீர்கள். அப்போது பாபா சொல்கிறார் - சபாஷ் - குழந்தைகளிடம் இவ்வளவு சக்தி உள்ளது - கூடவே இருந்தவரையே தனியாகப் பிரித்து விடுகிறார்கள். இணைந்து தான் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் மாயா கம்பைன்டையும் கூடப் பிரித்துத் தனியாக்கி விடுகிறது.

பாப்தாதா குழந்தைகளின் விளையாட்டைப் பார்த்து இதைத் தான் சொல்கிறார் - குழந்தைகளே, உங்கள் பாக்கியத்தை சதா நினைவில் வையுங்கள். ஆனால் என்ன நடக்கிறதென்றால், யோசிக்கிறீர்கள் - ஆம், எனது பாக்கியம் மிக உயர்ந்தது. ஆனால் யோசிக்கும் சொரூபமாகி விடு கிறீர்கள், ஸ்மிருதி சொரூபம் ஆவதில்லை. மிக நன்றாகவே யோசிக்கிறீர்கள் - நானோ இப்படி இருக்கிறேன், அப்படி இருக்கிறேன் சொல்வதும் மிக நன்றாகவே சொல்கிறீர்கள். ஆனால் என்ன யோசிக்கிறீர்களோ, என்ன சொல்கிறீர்களோ, அதன் சொரூபமாக ஆகி விடுங்கள். சொரூபம் ஆவதில் குறைவு ஏற்பட்டு விடுகிறது. ஒவ்வொரு விஷயத்தின் சொரூபம் ஆகி விடுங்கள். எதை யோசிக்கிறீர்களோ, அதன் சொரூபத்தையும் அனுபவம் செய்யுங்கள். அனைத்திலும் பெரியதிலும் பெரியது அனுபவி மூரத் ஆவதாகும். அநாதி காலத்தில் பரந்தாமத்தில் இருக்கும் போது யோசிக்கும் சொரூபம் இல்லை. ஸ்மிருதி சொரூபமாக இருக்கிறீர்கள். நான் ஆத்மா, நான் ஆத்மா - இதுவும் கூட யோசிப்பதற்கானதில்லை, சொரூபம் தான். ஆதி காலத்திலும் கூட இச்சமயத்தின் புருஷார்த்தத்தின் பிராலப்த சொரூபமாகும். யோசிக்க வேண்டியதில்லை - நான் தேவதா, நான் தேவதா அது சொரூபம்.. ஆக, அநாதி காலம், அநாதி காலத்தில் சொரூபம் உள்ளதென்றால், இப்போதும் கடைசி காலத்தில் சொரூபமாகுங்கள். சொரூபமாவதால் தன்னுடைய குணங்கள், சக்திகள் தாமாகவே இமர்ஜ் ஆகின்றன. எப்படி எந்த ஒரு தொழில் செய்பவரும் தமது இருக்கையில் அமரும் போது அவரது தொழிலின் குணம், காரியம் தானாகவே இமர்ஜ் ஆகி விடும். அதே போல் நீங்கள் சதா சொரூபத்தின் இருக்கையில் செட் ஆகி இருப்பீர்களானால் ஒவ்வொரு குணம், ஒவ்வொரு சக்தி, ஒவ்வொரு விதமான நஷா தானாகவே இமர்ஜ் ஆகும். முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இது தான் பிராமண வாழ்க்கையின் இயற்கையான இயல்பு எனச் சொல்லப்படும். இதில் மற்ற அனைத்து அநேக ஜென்மங்களின் இயல்புகள் முடிந்து போகும். பிராமண வாழ்க்கையின இயற்கையான இயல்பே குண சொரூபம், சர்வ சக்தி சொரூபம் மற்றும் என்னென்ன பழைய இயல்புகள் உள்ளனவோ, அவை பிராமண வாழ்க்கையின் இயல்புகள் அல்ல. என்னுடைய நேச்சர் (பழக்கம்) இப்படி என்று இது போல் சொல்கிறார்கள். எனது நேச்சர் என்று சொல்வது யார்? பிராமணரா சத்திரியரா? அல்லது முந்தைய ஜென்மத்தின் ஸ்மிருதி சொரூப ஆத்மா சொல்கிறதா? பிராமணர்களின் நேச்சர் - எது பிரம்மா பாபாவின் நேச்சரோ, அது பிராமணர் களின் நேச்சர். ஆக யோசியுங்கள் -- எந்தச் சமயம் சொல்கிறீர்களோ - எனது நேச்சர், எனது சுபாவம் இப்படி என்று - பிராமண வாழ்க்கையில் அந்த மாதிரி சொல் - எனது நேச்சர், எனது சுபாவம் என்று இருக்க முடியுமா? இது வரையிலும் கூட நீக்கிக் கொண்டிருக்கிறீர்கள் மற்றும் கடந்த காலத்தின் நேச்சர் இமர்ஜ் ஆகி விடுகிறது என்றால் புரிந்து கொள்ள வேண்டும் - இச்சமயம் நான் பிராமணன் இல்லை. சத்திரியன். நீக்குவதற்காக யுத்தம் செய்து கொண்டிருக்கிறேன். அப்படி யானால் சில நேரம் பிராமணன், சில நேரம் சத்திரியன் என்று ஆகி விடுகிறீர்களா? உங்களை என் னவென்று சொல்லிக் கொள்கிறீர்கள்? சத்திரிய குமாரா, பிரம்மா குமாரா? யார் நீங்கள்? சத்திரிய குமாரா என்ன? பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள். வேறு பெயரோ கிடையாது. சத்திரிய குமார், வாருங்கள் என்று யாரையாவது அழைக்கிறீர்களா என்ன? அது போல் சொல்கிறீர்களா, அல்லது தன்னை - நான் பிரம்மா குமார் இல்லை, நான் சத்திரிய குமார் என்று சொல்லிக் கொள்கிறீர்களா? ஆக, பிராமணன் என்றால், எது பிரம்மா பாபாவின் நேச்சரோ, அது பிராமணர்களின் நேச்சர். இந்த வார்த்தையை இப்போது ஒரு போதும் சொல்லக் கூடாது, தவறுதலாகக் கூட சொல்லக் கூடாது, யோசிக்கவும் கூடாது -- என்ன செய்வேன், எனது நேச்சர் இப்படி! இது சாக்குப்போக்கு சொல்வ தாகும். இவ்வாறு சொல்வதும் கூட தன்னைத் தான் விடுவித்துக் கொள்வதற்கான சாக்குப் போக்காகும். புதிய ஜென்மம் ஆகி விட்டது, புதிய ஜென்மத்தில் பழைய நேச்சர், பழைய சுபாவம் எங்கிருந்து இமர்ஜ் ஆகும்? ஆக, முழுமையாக இறக்கவில்லை. கொஞ்சம் உயிர் உள்ளது, கொஞ்சமாகச் செத்திருக்கிறீர்களா என்ன? பிராமண வாழ்க்கை என்றால் எது பிரம்மா பாபாவின் ஒவ்வொரு அடியாக உள்ளதோ, அது பிராமணர்களின் அடியாக இருக்க வேண்டும்.

ஆக, பாப்தாதா பாக்கியத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு சிரேஷ்ட பாக்கியம், அந்த பாக்கியத்திற்கு முன்னால் இந்த வார்த்தை நன்றாக இருக்காது. இந்தத் தடவை முக்தி வருடம் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? என்ன வகுப்பு நடத்துகிறீர்கள்? இது முக்தி வருடம். ஆக, இது முக்தி வருடமா அல்லது 99-இல் வர வேண்டுமா? அல்லது 98-ஆம் வருடம் முக்தி வருடமா? இந்த வருடம் முக்தி வருடம் என யார் நினைக்கிறார்களோ, அவர்கள் கை அசையுங்கள். பாருங்கள், கை அசைப்பது மிகவும் சுலபம். என்ன நடக்கிறது? வாயுமண்டலத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? குஷியில் (பெருமிதத்துடன்) நடந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால் கை அசைக்கிறீர்கள். ஆனால் மனப் பூர்வமாகக் கை அசையுங்கள். உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் - எது போனாலும் சரி, ஆனால் முக்தி வருடத்தின் உறுதிமொழி போய் விடக் கூடாது. அது போல் பக்கா உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? பாருங்கள், கவனமாகப் பார்த்துக் கை உயர்த்துங்கள். இந்த டி.வி.யில் வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி, பாப்தாதாவிடமோ உங்கள் சித்திரம் வெளி வந்து கொண்டிருக்கிறது. எனவே இப்படி-இப்படி பலவீனமான வார்த்தையிலிருந்தும் முக்தி (விடுபட்டிருங்கள்). வார்த்தை அந்த மாதிரி இனிமை யானதாக இருக்க வேண்டும் - பாபாவிற்கு சமமாக இருக்க வேண்டும், சதா ஒவ்வோர் ஆத்மாவுக் காகவும் சுப-பாவனையின் வார்த்தையாக இருக்க வேண்டும். இது தான் யுக்தியுக்த் வார்த்தை எனச் சொல்லப்படும். சாதாரண வார்த்தை கூட நடமாடும் போது இருக்கக் கூடாது. யாராவது திடீரென வந்து விட்டால் அந்த மாதிரி அனுபவம் செய்யவேண்டும் -- இது வார்த்தையா அல்லது முத்தா? சுப-பாவனையின் வார்த்தை வைரம், முத்துக்கு சமமாகும். ஏனென்றால் அநேக தடவை இந்த சமிக்ஞை கொடுத்திருக்கிறார் - சமயத்தின் பிரமாணம் சர்வ கஜானாக்களையும் சேமித்துக் கொள்வதற்கு இப்போது கொஞ்ச சமயமே உள்ளது. இந்தச் சமயத்தில் - சமயத்தின் கஜானா, சங்கல்பத்தின் கஜானா, சொற்களின் கஜானா, ஞான செல்வத்தின் கஜானா, யோக சக்திகளின் கஜானா, தெய்வீக வாழ்க்கையின் சர்வ குணங்களின் கஜானாக்களை சேமித்துக் கொள்ளவில்லை என்றால் பிறகு இது போல் சேமிப்பதற்கான சமயம் கிடைப்பது சுலபமாக இருக்காது. முழு நாளிலும் தன்னுடைய இந்த ஒவ்வொரு கஜானாவின் கணக்கையும் சோதித்துப் பாருங்கள். எப்படி ஸ்தூல செல்வத்தின் கஜானாவை சோதித்துப் பார்க்கிறீர்கள் இல்லையா - இவ்வளவு சேமிப்பாகி இருக்கிறது என்று? அது போல் ஒவ்வொரு கஜானாவின் கணக்கையும் சேமித்துக் கொள்ளுங்கள். சோதித்துப் பாருங்கள். சர்வ கஜானாக்களும் இருக்க வேண்டும். பாஸ் வித் ஆனர் ஆக விரும்பு கிறீர்கள் என்றால் ஒவ்வொரு கஜானாவின் சேமிப்புக் கணக்கும் அவ்வளவு நிறைவாக இருக்க வேண்டும் - 21 பிறவிகளுக்கு சேமிப்பான கணக்கிலிருந்து பலனை அனுபவம் செய்வதாக இருக்க வேண்டும். இன்னும் சமயத்தின் டூ லேட் என்பதற்கான மணி அடிக்கப் படவில்லை. ஆனால் அடிக்கப்படப் போகிறது. நாளும் தேதியும் சொல்ல மாட்டோம். திடீரென்று தான் வெளியாகும் - டூ லேட். பிறகு என்ன செய்வீர்கள்? அந்தச் சமயம் சேமிப்பீர்களா? எவ்வளவு தான் விரும்பினாலும் சமயம் மீண்டும் கிடைக்காது. எனவே பாப்தாதா அநேக முறை சமிக்ஞை கொடுத்திருக்கிறார் - சேமித்துக் கொள்ளுங்கள், சேமித்துக் கொள்ளுங்கள், சேமித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களுக்கு இப்போதும் டைட்டில் - சர்வசக்திவான், சக்திவான் இல்லை. சர்வசக்திவான். வருங் காலத்திலும் உள்ளது - சர்வகுண சம்பன்னம், வெறுமனே குண சம்பன்னம் இல்லை. இந்த அனைத்துக் கஜானாக்களையும் சேமிப்பது என்றால் குணங்கள் மற்றும் சக்திகள் சேமிப்பாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கஜானாவுக்கும் குணம் மற்றும் சக்தியோடு சம்பந்தம் உள்ளது. எப்படி சாதாரண வார்த்தை இல்லையென்றால் இனிமையாகப் பேசுவது - இது ஒரு குணமாகும். இது போல் ஒவ்வொரு கஜானாவுக்கும் தொடர்பு உள்ளது.

பாப்தாதாவுக்குக் குழந்தைகளிடம் அன்பு உள்ளது. எனவே பிறகும் கூட சமிக்ஞை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஏனென்றால் இன்றைய சபையில் பலவகையானோர் உள்ளனர். சின்னக் குழந்தைகளும் உள்ளனர், டீச்சர்களும் உள்ளனர். ஏனென்றால் டீச்சர்கள் சமர்ப்பணமாகி இருக்கிறார்கள். குமாரிகளும் உள்ளனர், இல்லற வாசிகளும் உள்ளனர். அனைத்து வெரைட்டிகளும் உள்ளனர். நல்லது. அனைவருக்கும் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. இது மிக நன்று. குழந்தை களுக்கோ சில காலமாகவே கோரிக்கை இருந்தது. இருந்தது இல்லையா குழந்தைகளே? நமக்கு சந்திப்பதற்கான வாய்ப்பு எப்போது கிடைக்கும்? ஆக, அனைத்து வெரைட்டியின் பூச்செண்டு பாப்தாதாவின் முன்னிலையில் உள்ளது.

நல்லது. பாப்தாதாவுக்கு முழு உலகின் நிமித்த டீச்சர்களுக்காக ஒரு சுப-பாவனை உள்ளது - இந்த வருடம் யாருக்கும் எந்த ஒரு புகாரும் வரக் கூடாது. புகார்களின் ஃபைல் முடிந்து போக வேண்டும். பாப்தாதா விடம் இது வரையிலும் கூட அநேக ஃபைல்கள் உள்ளன. ஆக, இவ்வருடம் புகார்களின் ஃபைல் முடிந்தது என்று இருக்க வேண்டும். அப்போது ஃபைன் (சிறந்தவராக) ஆகிவிட வேண்டும். சிறந்தவரில் இருந்து மிகச் சிறந்தவராக ஆக வேண்டும். பிடித்திருக்கிறது இல்லையா? ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரோடு செல்வதற்கான விதியைக் கற்றுக் கொள்ளுங் கள். யாராவது என்ன தான் செய்தாலும், அடிக்கடி விக்ன ரூபம் ஆகி முன்னால் வந்தாலும் இந்த விக்னங்களில் சமயத்தை ஈடுபடுத்துவது, கடைசியில் அதுவும் எது வரை? இதன் நிறைவு விழாவும் கூட இருக்க வேண்டும் இல்லையா? ஆக, மற்றவர்களைப் பார்க்கக் கூடாது. இவர் இப்படிச் செய்கிறார், நான் என்ன செய்ய வேண்டும்? அது மலை என்றால் நான் விலகிச் செல்ல வேண்டும். மலை விலகிப் போகாது. இவர் மாறினால் நாம் மாறலாம் - இது மலை விலகினால் நாம் முன்னேறலாம் என்பது போலாகும். மலையும் விலகாது, நீங்களும் இலக்கைச் சென்றடைய முடியாது. எனவே அந்த ஆத்மாவுக்காக சுப-பாவனை உள்ளது. அப்போது சமிக்ஞை கொடுத்து விட்டு, மனம்-புத்தியால் காலியாகி விட வேண்டும். தன்னைத் தான் அந்த விக்ன ரூபம் ஆகிறவரின் சிந்தனையில் ஈடுபடுத்தாதீர்கள். நம்பர்வார் இருக்கும் போது நிலையும் (ஸ்டேஜ்) கூட நம்பர்வார் இருக்கவே செய்யும். ஆனால் நாம் நம்பர் ஒன் ஆக வேண்டும். இது போல் விக்ன அல்லது வீணான சங்கல்பங்கள் செய்கிற ஆத்மாக்களுக்காக சுயம் மாற்றமடைந்து அவர் களுக்காக சுப-பாவனை வைத்துக் கொண்டே செல்லுங்கள். சமயம் கொஞ்சம் ஆகும். முயற்சி கொஞ்சம் தேவைப்படும். ஆனால் கடைசியில் யார் சுய மாற்றம் செய்கிறார்களோ, அவர்கள் கழுத்தில் மாலை விழும். சுப-பாவனை மூலம் அவரை மாற்ற முடியும் என்றால் செய்யுங்கள். இல்லையென்றால் சமிக்ஞை கொடுங்கள். தனது பொறுப்பை முடித்து விடுங்கள் மற்றும் சுய மாற்றம் செய்து முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். இந்த விக்ன ரூபமும் கூட பற்றுதலாகிய தங்கக் கயிறாகும். இதுவும் பறக்க விடாது. இது மிகவும் நுட்பமான மற்றும் மிகுந்த சத்தியத்தின் திரை கயிறாகும். இதுவோ உண்மையான விஷயம் என்று யோசிக்கிறீர்கள் இல்லையா? இதுவோ நடக்கத் தான் செய்கிறது இல்லையா? இதுவோ நடக்கக் கூடாது இல்லையா? ஆனால் எது வரை பார்த்துக் கொண்டு, எது வரை நின்று கொண்டே இருப்பீர்கள்? இப்போதோ தன்னை நுட்பமான கயிற்றிலிருந்து விடுவியுங்கள். முக்தி வருடம் கொண்டாடுங்கள். எனவே குழந்தைகளின் ஆசைகள் என்னென்ன உள்ளனவோ, ஊக்கம், உற்சாகம் என்ன உள்ளதோ, இதன் அனைத்து ஃபங்ஷனையும் (விழாக்களை) கொண்டாடி பாப்தாதா முழுமை அடையச் செய்து கொண்டிருக் கிறார். ஆனால் இந்த வருடத்தின் கடைசி ஃபங்ஷன் (விழா) முக்தி வருடத்தின் ஃபங்ஷனாக இருக்கட்டும். ஃபங்ஷனில் தாதிகளுக்குப் பரிசும் கொடுக்கிறீர்கள். ஆக, பாப்தாதாவுக்கு இந்த முக்தி வருட ஃபங்ஷனில் சுயத்தின் சம்பூர்ண நிலையின் பரிசு கொடுங்கள். நல்லது.

நாலாபுறத்தின் பரமாத்ம பாலனை, படிப்பு மற்றும் ஸ்ரீமத்தின் பாக்கியத்தின் அதிகாரிகளான விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா யோசிப்பது மற்றும் சொரூபமாவது, இரண்டையும் சமமாக்கக் கூடிய பாப்-சமான் ஆத்மாக்களுக்கு, சதா பரமாத்ம வில்பவர் மூலம் சுயத்தில் மற்றும் சேவையில் சகஜமாக வெற்றி பெறக்கூடிய மாசற்ற சேவாதாரிக் குழந்தைகளுக்கு, சதா தந்தையைக் கம்பைன்டு ரூபத்தில் அனுபவம் செய்யக்கூடிய, சதா துணையாக வைத்து துணையாக இருக்கக் கூடிய குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

வரதானம்:
சம்பந்தம் தொடர்பில் திருப்தியின் விசேஷதா மூலம் மாலையில் வரக்கூடிய திருப்தி மணி ஆகுக.

சங்கமயுகம் என்பது திருப்தியின் யுகமாகும். யார் தனக்குத் தானே திருப்தியாக இருக்கிறார்களோ. மற்றும் சம்பந்தம், தொடர்பிலும் கூட சதா திருப்தியாக இருந்து மற்றும் திருப்திப் படுத்துகிறார் களோ, அவர்கள் தாம் மாலையில் மணியாக வருவார்கள். ஏனென்றால் மாலை சம்பந்தத்தினால் உருவாகிறது. மணியோடு மணியின் தொடர்பு இல்லையென்றால் மாலை உருவாகாது. எனவே திருப்தியின மணி ஆகி சதா திருப்தியாக இருங்கள் மற்றும் அனைவரையும் திருப்திப் படுத்துங் கள். பரிவாரத்தின் அர்த்தமே திருப்தியாக இருப்பதும் திருப்திப் படுத்துவதும் ஆகும். எந்த விதமான மோதலும் இருக்கக் கூடாது.

சுலோகன்:
விக்னங்களின் வேலை வருவது மற்றும் உங்கள் வேலை விக்னங்களை வெற்றி அடைவதாகும்.