05-02-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்தப் படிப்பு அனைத்தையும் விடச் சிறந்த படிப்பாகும். இதைத் தான் வருமானத்துக்கு ஆதாரம் எனச் சொல்கின்றனர். படிப்பில் தேர்ச்சி அடைய வேண்டுமானால் ஆசிரியரின் அறிவுரைப்படி நடந்து சென்று கொண்டே இருங்கள்.

கேள்வி:
பாபா டிராமாவின் ரகசியத்தை அறிந்திருந்த போதும் தம்முடைய குழந்தைகளை எந்த ஒரு புருஷார்த்தம் செய்ய வைக்கிறார்?

பதில்:
பாபாவுக்குத் தெரியும், வரிசைக் கிரமமாகத் தான் எல்லாக் குழந்தைகளும் சதோபிரதான் ஆவார்கள். ஆனால் குழந்தைகள் தண்டனை அடையாதிருக்க வேண்டும் - ஆகவே குழந்தைகளே, அப்படிப்பட்ட முயற்சி செய்யுங்கள், என்று செய்ய வைக்கிறார். தண்டனைகளில் இருந்து விடுபடு வதற்கு எவ்வளவு முடியுமோ, அன்போடு பாபாவை நினைவு செய்யுங்கள். போகும் போதும் வரும் போதும், அமரும் போதும் எழும் போதும் பாபாவின் நினைவில் இருங்கள், அப்போது மிகுந்த குஷி இருக்கும். ஆத்மா தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகி விடும்.

ஓம் சாந்தி.
இப்போது குழந்தைகள் அறிவார்கள், பாபா நமக்கு ஞானம் மற்றும் யோகம் கற்றுத் தருகிறார். நம்முடைய யோகம் எப்படி உள்ளது என்பதைக் குழந்தைகள் தான் அறிவார்கள். தூய்மையாக இருந்த நாம் தூய்மை இல்லாதவர்களாகி விட்டோம். ஏனெனில் 84 பிறவிகளின் கணக்கோ வேண்டும் இல்லையா? இது 84 பிறவிகளின் சக்கரம். இதனை அறிந்து கொள்வதும் கூட யார் 84 பிறவிகள் எடுத்திருக்கிறார்களோ, அவர்கள் தான். குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா மூலமாக இது தெரிய வந்துள்ளது. இப்போது அத்தகைய தந்தை சொல்வதையும் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பாக்கி யார் சொல்வதை ஏற்றுக் கொள்வீர்கள்? தந்தையின் வழிமுறை கிடைக்கின்றது. இது போல் முற்றிலும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் அநேகர் உள்ளனர். கோடியில் யாரோ தான் ஏற்றுக் கொள்வார்கள். தந்தை கல்வியையும் எவ்வளவு தெளிவாகக் கற்றுத் தருகிறார்! குழந்தைகளாகிய நீங்கள் தான் வரிசைக்கிரமப்படி முயற்சி செய்வதைப் பொறுத்து ஏற்றுக் கொள்வீர்கள். அனைவரும் ஒரே மாதிரி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆசிரியர் கற்றுத் தருவதை அனைவருமே ஒரே மாதிரி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அல்லது படிக்க மாட்டார்கள். வரிசையில் சிலர் 20 மதிப்பெண் எடுக்கின்றனர். இன்னும் சிலர் வேறு மாதிரி மதிப்பெண் எடுப்பார்கள். சிலரோ தேர்ச்சி பெறுவதில்லை. எதனால் தேர்ச்சி பெறுவதில்லை? ஏனென்றால் ஆசிரியரின் அறிவுரைப்படி நடக்கவில்லை. அங்கே (உலகில்) அநேக வழிமுறைகள் கிடைக் கின்றன. இங்கே ஒரே ஒரு வழிமுறை தான் கிடைக்கின்றது. இது அற்புதமான வழிமுறை. நிச்சய மாக நாம் 84 பிறவிகள் எடுத்துள்ளோம் என்பதைக் குழந்தைகள் அறிவார்கள். பாபா சொல்கிறார் - நான் யாருக்குள் பிரவேசமாகி யிருக்கிறேனோ...... இதை யார் சொன்னார்? சிவபாபா. நான் யாருக்குள் பிரவேசமாகிறேனோ, யாரை பாகீரத் (பாக்கிய ரதம்) எனச் சொல்கிறார்களோ, அவர் தம்முடைய பிறவிகள் பற்றி அறியாதிருந்தார். குழந்தைகள் நீங்களும் கூட அறியாதிருந்தீர்கள். உங்களுக்கு இப்போது புரிய வைக்கிறேன். நீங்கள் இத்தனை பிறவிகள் சதோபிரதானமாக இருந்தீர் கள். பிறகு சதோ-ரஜோ-தமோவில் வந்து கீழே இறங்கி வந்திருக்கிறீர்கள். படிப்பு என்பது வருமானம், வருமானத்துக்கு ஆதாரம், இந்தப் படிப்பு தான் அனைத்திலும் சிறந்தது. அந்தப் படிப்பில் சொல்வார்கள், ஐ.சி.எஸ் தான் சிறந்தது என்று. 16 கலை சம்பூர்ண தேவதையாக இருந்தீர்கள். இப்போது எந்தவொரு நற்குணமும் மீதம் இருக்கவில்லை. பாடுகிறார்கள், குணமற்ற என்னிடம் எந்தவொரு நற்குணமும் இல்லை என்று. அனைவரும் இதுபோல் சொல்லிக் கொண்டே இருக் கின்றனர். அனைவரும் பகவான் என நினைக்கின்றனர். தேவதைகளுக்குள்ளும் கூட பகவான் இருக்கிறார் என நம்புகின்றனர். அதனால் தேவதைகள் முன்னிலையில் அமர்ந்து சொல் கின்றனர், குணமற்ற என்னிடம்.......... உங்களுக்குத் தான் இரக்கம் வரும். பாடவும் படுகின்றது, பாபா கருணை உள்ளம் கொண்டவர், நம் மீது கருணை வைக்கிறார் என்று. வேண்டு கின்றனர், ஹே ஈஸ்வரா, எங்கள் மீது இரக்கம் வையுங்கள். தந்தையை அழைக்கின்றனர் இப்போது அதே தந்தை உங்கள் முன்னிலையில் வந்துள்ளார். அத்தகைய தந்தையை யார் அறிந்திருக்கிறார்களோ, அவர் களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! 5000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழு உலகத்தின் இராஜ்யத்தைத் தருகிறார் என்றால் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்!

நீங்கள் அறிவீர்கள், ஸ்ரீமத் படி நாம் உயர்விலும் உயர்வானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். ஸ்ரீமத்படி நடந்தால் உயர்வானவராக ஆவோம். அரைக்கல்பம் இராவணனின் வழிமுறை நடை பெறுகின்றது. பாபா எவ்வளவு நல்லவிதமாகப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்! நீங்கள் 84 பிறவிகள் எடுத்திருக்கிறீர்கள், நீங்கள் தான் சதோபிரதானமாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். இது இராவண இராஜ்யம். எப்போது இந்த இராவணன் மீது வெற்றி கொள்கிறீர்களோ, அப்போது இராமராஜ்யம் ஸ்தாபனை ஆகும். பாபா சொல்கிறார், நீங்கள் எனக்கு நிந்தனை செய்கிறீர்கள். பாபாவின் பெயரைப் புகழ்பாடுவதற்கு பதில் நிந்தனை செய்கிறீர்கள். பாபா சொல்கிறார், நீங்கள் எனக்கு எவ்வளவு அபகாரம் செய்திருக்கிறீர்கள்! அதுவும் டிராமாவில் உருவாக்கப் பட்டது தான். இப்போது இந்த அனைத்து விவரங்களும் புரிய வைக்கப் படுகின்றது - இந்த அனைத்து விஷயங்களில் இருந்தும் விடுபடுங்கள் என்று. ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள். பாடலும் உள்ளது, சத்தியத்தின் கூட்டு (தொடர்பு) அக்கரை சேர்க்கும், 21 பிறவி களுக்காக. அப்படியானால் மூழ்கடிப்பவர் யார்? உங்களைக் கடலில் யார் மூழ்கடித்தது? குழந்தைகளிடம் தான் கேள்வி கேட்பார் இல்லையா? நீங்கள் அறிவீர்கள், தோட்டக்காரர், படகோட்டி என்பன என்னுடைய பெயர்கள் தான். அர்த்தம் புரியாத காரணத்தால் எல்லையற்ற தந்தைக்கு அதிக நிந்தனைகள் செய்துள்ளனர். பிறகு எல்லையற்ற தந்தை அவர்களுக்கு எல்லையற்ற சுகம் தருகிறார். அபகாரம் செய்பவர்களுக்கு உபகாரம் செய்கிறார். நாம் அபகாரம் செய்கிறோம் என்பதை அவர்கள் புரிந்திருக்கவில்லை. மிகுந்த குஷியுடன் சொல்கின்றனர், ஈஸ்வரன் சர்வவியாபி என்று. இப்போது அப்படியெல்லாம் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பாகம் கிடைத்துள்ளது. இதையும் நீங்கள் அறிவீர்கள், எப்போது தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்ததோ, அப்போது வேறு எந்த ஒரு இராஜ்யமும் இல்லாதிருந்தது. பாரதம் சதோபிரதானமாக இருந்தது. இப்போது தமோபிரதானமாக உள்ளது. பாபா வருவதே உலகத்தை சதோபிரதானமாக ஆக்குவதற்காக. அதுவும் குழந்தை களாகிய உங்களுக்குத் தான் தெரியும். முழு உலகத்துக்கும் தெரிந்திருக்குமானால் இங்கே எப்படி வருவார்கள் படிப்பதற்கு? ஆக, குழந்தைகளாகிய உங்களுக்கு அளவற்ற குஷி இருக்க வேண்டும். குஷியைப் போன்றதொரு டானிக் வேறு இல்லை. சத்யுகத்தில் நீங்கள் மிகுந்த குஷியில் இருந்தீர்கள். தேவதைகளின் உணவு பானம் அனைத்தும் மிகவும் சூட்சுமமாக இருக்கும். மிகுந்த குஷி இருக்கும். இப்போது தான் உங்களுக்குக் குஷி கிடைக்கிறது. நீங்கள் அறிவீர்கள், நாம் சதோபிரதானமாக இருந்தோம் என்று. இப்போது மீண்டும் நமக்கு அப்படிப் பட்ட முதல் தரமான யுக்தி சொல்கிறார். கீதையிலும் முதல்-முதல் வார்த்தை மன்மனாபவ என்று உள்ளது. இது கீதையின் எப்பிஸோட் (சுருக்கம்) இல்லையா? கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் போட்டு அனைத்தையும் குழப்பிவிட்டுள்ளனர். அது பக்தி மார்க்கம். பாபாவும் ஞானத்தைப் புரிய வைக்கிறார். இதில் எந்த ஒரு குழப்பத்திற்கான விஷயமும் இல்லை. தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானம் ஆக வேண்டும். அவ்வளவு தான். இது தமோபிரதானமான உலகம். கலியுகத்தில் பாருங்கள், மனிதர்களின் நிலைமை என்னவாக ஆகி விட்டுள்ளது என்று! ஏராளமான மனிதர்கள் ஆகிவிட்டனர். சத்யுகத்தில் ஒரு தர்மம், ஒரு பாஷை மற்றும் ஒரு குழந்தை இருக்கும். ஒரே இராஜ்யம் நடைபெறும். இந்த டிராமா உருவாக்கப் பட்டுள்ளது. ஆக, ஒன்று சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம், இரண்டாவது யோகம். ஞானத்தின் துரியா மற்றும் ஹோலி. முக்கியமான விஷயம் புரிய வைக்கிறார், இச்சமயம் அனைவருக்கும் தமோபிரதான இற்றுப்போன நிலை. விநாசம் முன்னால் நின்று கொண்டுள்ளது. இப்போது பாபா சொல்கிறார், நீங்கள் என்னை அழைத்ததே எங்களை தூய்மை ஆக்குங்கள் என்று தான். நீங்கள் தூய்மை இல்லாதவர்களாக ஆகி விட்டிருக்கிறீர்கள். பதீத பாவனன் என்று என்னைத் தான் சொல்கின்றனர். இப்போது என்னிடம் யோகம் வையுங்கள். என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். நான் உங்களுக்கு அனைத்தும் சரியானதையே சொல்வேன். மற்றப்படி நீங்கள் பல பிறவிகளாக சரியில்லாதவர்களாக ஆகியே வந்திருக்கிறீர்கள். சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானமாக ஆகி விட்டீர்கள்.

பாபா குழந்தைகளிடம் பேசுகிறார் - இனிமையான குழந்தைகளே, இப்போது உங்களுடைய ஆத்மா தமோபிரதானமாகிவிட்டது. யார் ஆக்கியது? 5 விகாரங்கள். மனிதர்களோ, அத்தனைக் கேள்விகள் கேட்கின்றனர், புத்தியையே கெடுத்துக் கொள்கின்றனர். மாநாட்டில் விவாதிக்கின்றனர் என்றால் தங்களுக்குள் அடித்துக் கொள் கின்றனர். ஒருவர் மற்றவரைக் கம்பாலும் அடிக்கின்றனர். இங்கோ பாபா உங்களை தூய்மை இல்லாததிலிருந்து தூய்மை ஆக்குகின்றார். இதில் சாஸ்திரங்கள் என்ன செய்யும்? தூய்மை ஆக வேண்டும் அல்லவா? கலியுகத்திற்குப் பின் மீண்டும் சத்யுகம் அவசியம் வந்தாக வேண்டும். சதோபிரதானமாகவும் அவசியம் ஆக வேண்டும். பாபா சொல்கிறார், தன்னை ஆத்மா என உணருங்கள். ஆத்மா நீங்கள் தமோபிர தானமாக ஆகியிருக்கிறீர்கள் என்றால் சரீரமும் தமோபிரதானமாகக் கிடைக்கின்றது. தங்கம் எத்தனை கேரட் இருக்குமோ, அப்படித் தான் அதனால் செய்யப்படும் நகையும் இருக்கும். கறை படிகின்றது இல்லையா? இப்போது நீங்கள் 24 கேரட் தங்கமாக ஆக வேண்டும். ஆத்ம அபிமானி ஆகுக. தேக அபிமானத்தில் வருவதால் நீங்கள் அசுத்தமாக ஆகிவிட்டீர்கள். எந்த ஒரு குஷியும் இல்லை. நோய்கள் முதலான அனைத்தும் உள்ளன. இப்போது பதீத பாவனன் நான் தான். என்னை நீங்கள் அழைத்தீர்கள். நான் ஒன்றும் சாது சன்னியாசியெல்லாம் கிடையாது. யாராவது வருகிறார்கள், சொல்கிறார்கள் குருஜியை தரிசனம் செய்ய வேண்டும் என்று. சொல்லுங்கள், குருஜி என்று யாரும் கிடாது, தரிசனம் செய்வதால் எந்த ஒரு பயனும் இல்லை என்று. பாபாவோ ஒவ்வொரு விஷயத்தையும் சகஜமாகப் புரிய வைக்கிறார். எவ்வளவு நினைவு செய்கிறீர்களோ, அந்தளவு தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆவீர்கள். பிறகு தேவதை ஆகி விடுவீர்கள். நீங்கள் இங்கே மீண்டும் தேவதையாக, சதோபிரதானம் ஆவதற்காக வந்திருக்கிறீர்கள். பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வதன் மூலம் உங்களுடைய கறை நீங்கி விடும். சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். முயற்சி செய்வதன் மூலம் தான் ஆவீர்கள் இல்லையா? அமரும் போதும் எழுந்திருக்கும் போதும் நடமாடும் போதும் பாபாவை நினைவு செய்யுங்கள். குளிக்கும் போது பாபாவை உங்களால் நினைவு செய்ய முடியாதா என்ன? தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்வீர் களானால் கறை நீங்கும், குஷியின் அளவு அதிகரிக்கும். உங்களுக்கு எவ்வளவு செல்வம் கொடுக் கிறேன்! நீங்கள் வந்திருக்கிறீர்கள், உலகத்தின் எஜமானராக ஆவதற்கு. அங்கே நீங்கள் தங்கத் தினால் மாளிகை அமைப்பீர்கள். எவ்வளவு வைர-வைடூரியங்கள் இருக்கும்! பக்தியில் கட்டப் படும் கோவில்களில் எவ்வளவு வைர-வைடூரியங்கள் உள்ளன! அநேக ராஜாக்கள் கோவில் கட்டு கின்றனர். இவ்வளவு வைரமும் தங்கமும் எங்கிருந்து வருகின்றன? இப்போதோ கிடையாது. இந்த டிராமா பற்றியும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் - சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்று. யார் அதிக பக்தி செய்திருக் கிறார்களோ, அவர்களின் புத்தியில் தான் இதுவும் பதியும். நம்பர்வார் தான் புரிந்து கொள்வார்கள். யார் அதிக சேவை செய்கிறார்கள், மிகுந்த குஷியில் இருக்கிறார்கள், யோகத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். அந்த நிலை கடைசியில் இருக்கும். யோகமும் அவசிய மாகும். சதோபிரதானமாக வேண்டும். பாபா வந்திருக்கிறார் என்றால் அவரிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். இதையும் சொல்கின்றனர், பாபாவோ நம்மோடு கூடவே இருக்கிறார். நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு சொல்கிறார் என்றால் நானும் கூட (பிரம்மா) கேட்டுக் கொண்டே இருக்கிறேன். யாருக்காவது சொல்வார் இல்லையா? ஞான அமிர்தத்தின் கலசம் தாய்மார்களாகிய உங்களுக்குக் கிடைக்கின்றது. மாதாக்கள் ஞானத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கின்றனர். சேவை செய்கின்றனர். நீங்கள் அனைவரும் சீதைகள். இராமர் ஒருவர். நீங்கள் அனைவரும் மணமகள்கள். நான் மணமகன். உங்களை அலங்கரித்து மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். பாடவும் செய்கின்றனர், அவர் தந்தைக்கெல்லாம் மேலான தந்தையாக உள்ளார். பதிகளுக் கெல்லாம் மேலான பதியாக உள்ளார். ஒரு பக்கம் மகிமை செய்கின்றனர், இன்னொரு பக்கம் நிந்தனை செய்கின்றனர். சிவபாபாவின் மகிமை வேறு, கிருஷ்ணரின் மகிமை வேறு. அந்தஸ்து (மகிமை) அனைவருக்கும் தனித்தனியாக உள்ளது. இங்கே அனைவரை யும் ஒன்றாக ஆக்கி விட்டுள்ளனர். இருள் நிறைந்த நகரம்...... நீங்கள் இப்போது பாபாவுடையவர்களாக ஆகி விட்டீர்கள். சிவபாபாவின் பேரன்-பேத்திகள் நீங்கள். உங்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த பாபா விடமோ (பிரம்மா) ஆஸ்தி கிடையாது. எல்லைக்குட்பட்ட மற்றும் எல்லையற்ற ஆஸ்தி கிடைக் கிறது. மூன்றாவது யாரும் இல்லை, அவரிடமிருந்து ஆஸ்தி கிடைப்பதற்கு. இவர் (பிரம்மா) சொல் கிறார், நானும் கூட அவரிடமிருந்து ஆஸ்தி பெறுகிறேன். பரலௌகீக் பரமபிதா பரமாத்மாவை அனைவரும் நினைவு செய்கின்றனர். சத்யுகத்தில் நினைவு செய்வதில்லை. சத்யுகத்தில் ஒரு தந்தை. இராவண இராஜ்யத்தில் இரண்டு தந்தையர். சங்கமயுகத்தில் மூன்று தந்தையர் - லௌகிக், பரலௌகீக், மற்றும் மூன்றாவது, அற்புதமான இந்த அலௌகீக் தந்தை (பிரம்மா). இவர் மூலம் சிவபாபா ஆஸ்தி தருகிறார். இவருக்கும் கூட அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. பிரம்மாவை ஆதாம் எனவும் சொல்கின்றனர். கிரேட் கிரேட் கிரான்ட் ஃபாதர். சிவனையோ ஃபாதர் என்று தான் சொல்வார்கள். மனித வம்சாவளி பிரம்மாவிடமிருந்து ஆரம்பமாகின்றது. அதனால் அவர் கிரேட் கிரேட் கிரான்ட் ஃபாதர் என்று சொல்லப்படுகின்றார். ஞானமோ மிகவும் சுலபமானது. நீங்கள் 84 பிறவிகளை எடுத்திருக்கிறீர்கள். புரிய வைப்பதற்காகச் சித்திரங்களும் உள்ளன. இப்போது இதில் தலைகீழான கேள்விகள் கேட்பதற்கான அவசியம் இல்லை. ரிஷி, முனிகளிடமும் கூடக் கேட்டனர் என்றால் அவர்களும் கூட நேத்தி-நேத்தி (தெரியாது தெரியாது) எனச் சொல்லி விட்டனர். இப்போது பாபா வந்து தம்முடைய அறிமுகத்தைத் தருகிறார். ஆக, அப்படிப்பட்ட தந்தையை எவ்வளவு அன்போடு நினைவு செய்ய வேண்டும்!

இப்போது கொஞ்சம்-கொஞ்சமாக குழந்தைகள் நீங்கள் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறீர்கள், டிராமாவின் அனுசாரம். கல்ப-கல்பமாக நம்பர்வார் சிலர் சதோபிரதானம், சதோ, ரஜோ, தமோ என்று ஆகிறார்கள். அப்படியே தான் பதவியும் அங்கே கிடைக்கின்றது. அதனால் பாபா சொல்கிறார் - குழந்தைகளே, நல்லபடியாக முயற்சி செய்யுங்கள், தண்டனை அடையாம லிருப்பதற்கு. முயற்சி அவசியம் செய்ய வைக்கிறார். புரிந்து கொண்டிருக்கலாம், கல்பத்திற்கு முன் என்னவாக ஆனோமோ, அதே தான் இப்போதும் ஆவோம் என்று. இருந்தாலும் புருஷார்த்தம் அவசியம் செய்ய வைப்பார். யார் அருகில் இருப்பவர்களோ, அவர்கள் தான் நல்லபடியாகப் பூஜையும் செய்வார்கள். முதன்-முதலில் நீங்கள் எனக்குத் தான் பூஜை செய்கிறீர்கள். பிறகு தேவதைகளுக்குப் பூஜை செய்கிறீர்கள். இப்போது நீங்கள் தேவதை ஆக வேண்டும். நீங்கள் உங்கள் இராஜ்யத்தை யோகபலத்தினால் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். யோகபலத்தினால் நீங்கள் உலகத்தின் ராஜபதவி பெறுகிறீர்கள். புஜ பலத்தினால் எவரும் உலகத்தின் ராஜபதவியைப் பெற முடியாது. அந்த மனிதர்கள் சகோதர- சகோதரர்களைத் தங்களுக்குள் அடித்துக் கொள்ளுமாறு செய்து கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு வெடி மருந்துகளைத் தயாரிக்கின்றனர்! இரவலாக ஒருவர் மற்றவருக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். வெடி மருந்துகள் விநாசத்திற்காகத் தான். ஆனால் இது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. ஏனென்றால் கல்பம் இலட்சக் கணக் கான வருடங்கள் எனப் புரிந்து கொண்டுள்ளனர். பயங்கர இருளில் உள்ளனர். விநாசம் ஆகிவிடும், அனைவரும் கும்பகர்ண உறக்கத்தில் உறங்கிக் கொண்டே இருப்பார்கள். விழித்துக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் இப்போது விழித்துக் கொண்டிருக்கிறீர்கள். பாபா எரிந்து கொண்டிருக்கின்ற ஜோதியாகவே உள்ளார். அவர் ஞானம் நிறைந்தவர். குழந்தைகளாகிய உங்களைத் தம்மைப்போல் ஆக்குகிறார். அது பக்தி, இது ஞானம். ஞானத்தினால் நீங்கள் சுகமானவராக ஆகிறீர்கள். நாம் மீண்டும் சதோபிரதானமாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு புத்தியில் வர வேண்டும். பாபாவை நினைவு செய்ய வேண்டும். இது எல்லையற்ற சன்னியாசம் எனப்படும். இந்தப் பழைய உலகமோ விநாசமாகப் போகின்றது. இயற்கை சேதங்களும் உதவி செய்யும். அந்தச் சமயம் உங்களுக்கு உணவு கூட முழுமையாகக் கிடைக்காது. நாம் நம்முடைய குஷியின் சத்துணவிலேயே இருப்போம். இவையனைத்தும் அழிந்து போகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் குழம்புவதற்கான விஷயம் இல்லை. நான் வருவதே குழந்தைகளாகிய உங்களை மீண்டும் சதோபிரதானமாக ஆக்குவதற்காக. இது கல்ப-கல்பமாக என்னுடைய வேலை தான். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சுயம் பகவான் நம் மீது கருணையுள்ளவராகி இருக்கிறார். அவர் நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். இந்த நஷாவில் இருக்க வேண்டும். படிப்பு வருமானத்திற்கான ஆதாரம். அதனால் அதைத் தவறவிடக் கூடாது.

2) அளவற்ற குஷியின் அனுபவம் செய்யவும் செய்விக்கவும் வேண்டும். நடமாடும் போதும் சுற்றிவரும் போதும் ஆத்ம அபிமானி ஆகி பாபாவின் நினைவில் இருந்து ஆத்மாவை சதோபிரதானமாகஅவசியம் ஆக்க வேண்டும்.

வரதானம்:
காலத்திற்கேற்ப ஒவ்வொரு சக்தியின் நடைமுறை சொரூபத்தில் கொண்டு வரக்கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

எந்த சக்தியை எந்த நேரத்தில் அழைக்கிறோமோ, அந்த சக்தி, அந்த நேரத்தில் நடைமுறை சொரூபத்தில் அனுபவம் செய்வது தான் மாஸ்டர் (சர்வசக்திவான்) என்பதின் பொருளாகும். ஆணை பிறப்பித்ததும், சக்தி வந்தடைய வேண்டும். ஆனால் கட்டளை பிறப்பித்தது பொறுமை சக்திக்கு, வந்தடைந்தது எதிர்நோக்கும் சக்தி என்பது போன்று அல்ல. இதை மாஸ்டர் என்று சொல்ல முடியாது. எனவே எந்த நேரம் எந்த சக்தி தேவைப் படுகிறதோ, அந்த நேரத்தில் அதே சக்தி செயலில் வருகிறதா? ஒரு நொடியின் தாமதம் ஏற்பட்டால் கூட வெற்றிக்கு பதிலாக தோல்வி ஏற்பட்டுவிடும்.

சுலோகன்:
புத்தியில் எந்தளவு நஷா இருக்கிறதோ, அந்தளவு செயலில் பணிவும் இருக்க வேண்டும்.