07-02-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே - ஆத்ம-அபிமானம் உலகத்திற்கு எஜமானனாக மாற்றுகிறது, தேக-அபிமானம் ஏழையாக்குகிறது, ஆகையினால் ஆத்ம-அபிமானியாக ஆகுக

கேள்வி:
எந்தவொரு பயிற்சி அசரீரியாக ஆவதற்கு உதவி செய்கிறது?

பதில்:
தங்களை எப்போதும் நடிகன் என்று புரிந்து கொள்ளுங்கள், எப்படி நடிகன் நடிப்பு முடிந்த வுடன் ஆடைகளை மாற்றிக் கொள்கிறாரோ, அதுபோல் குழந்தைகளாகிய நீங்களும் கூட இந்த வொரு பயிற்சியை செய்ய வேண்டும், கர்மம் முடிந்தவுடனேயே பழைய சரீரத்தை விட்டு விட்டு அசரீரியாக ஆகி விடுங்கள். ஆத்மா சகோதர சகோதரன், என்ற பயிற்சியை செய்து கொண்டே இருங்கள். இது தான் தூய்மையாவதற்கான சகஜமான வழியாகும். சரீரத்தைப் பார்ப்பதின் மூலம் தவறான எண்ணம் செல்கிறது, ஆகவே அசரீரி ஆகுக.

ஓம் சாந்தி.
பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஏனென்றால் அதிகம் புரியாதவர் களாக ஆகி விட்டார்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட புரிய வைத்திருந்தேன். மேலும் தெய்வீக கர்மங்களைக் கற்றுக் கொடுத்தேன். நீங்கள் தேவி-தேவதா தர்மத்தில் வந்தீர்கள். பிறகு நாடகத்தின் திட்டப்படி மறுபிறவி எடுத்து-எடுத்து மேலும் கலைகள் குறைந்து-குறைந்து இங்கே நடைமுறையில் முற்றிலும் கலைகளே இல்லாத நிலை ஆகி விட்டது, ஏனென்றால், இது தமோபிர தான இராவண இராஜ்யமாகும். இந்த இராவண இராஜ்யமும் முதலில் சதோபிரதானமாக இருந்தது. பிறகு சதோ, ரஜோ, தமோவாக ஆகி விட்டது. இப்போது முற்றிலும் தமோபிரதானமாக இருக்கிறது. இப்போது இதனுடைய கடைசி நேரமாகும். இராவண இராஜ்யத்தை அசுர இராஜ்யம் என்று சொல்லப்படுகிறது. இராவணனை எரிக்கும் வழக்கம் பாரதத்தில் இருக்கிறது. இராம இராஜ்யம் என்றும் இராவண இராஜ்யம் என்றும் பாரதவாசிகள் சொல்கிறார்கள். இராம ராஜ்யம் சத்யுகத்தில் நடக்கிறது. இராவண இராஜ்யம் கலியுகத்திலாகும். இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். நல்ல-நல்ல குழந்தைகள் கூட முழுமையான விதத்தில் புரிந்து கொள்ளாத காரணத்தினால் தங்களுடைய அதிர்ஷ்டத்தின் குறுக்கே கோடு போட்டுக் கொள் கிறார்கள். பாபாவிற்கு இது அதிசயமாக இருக்கிறது. இராவணனுடைய அவகுணங்களில் உடனே விழுந்து விடுகிறார்கள். அவர்களே தெய்வீக குணங்களை வர்ணனை செய்கிறார்கள். நீங்கள் தான் தேவதைகளாக இருந்தீர்கள் என்பதை பாபா புரிய வைத்திருக்கிறார். நீங்கள் தான் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். நீங்கள் ஏன் தமோபிரதானமாக ஆகியுள்ளீர்கள் என்ற வித்தியாசம் சொல்லப் பட்டிருக்கிறது. இது இராவண இராஜ்யமாகும். இராவணன் மிகப்பெரிய எதிரியாவான், அவன் தான் பாரதத்தை இந்தளவிற்கு ஏழ்மையானதாக தமோபிரதானமாக மாற்றினான். இராம இராஜ்யத்தில் இவ்வளவு மனிதர்கள் இருப்பதில்லை. அங்கே ஒரு தர்மம் தான் இருக்கிறது. இங்கே அனைவரிடத்திலும் பூதம் பிரவேசித்திருக்கிறது. கோபம், பேராசை, பற்று எனும் பூதம் இருக்கின்றன அல்லவா? நாம் அழிவற்றவர்கள், இந்த சரீரம் அழியக் கூடியதாகும் - இதை மறந்து விடுகிறார்கள். ஆத்ம-அபிமானிகளாக ஆவதே இல்லை. தேக-அபிமானிகள் நிறைய பேர் இருக் கிறார்கள். தேக-அபிமானம் மற்றும் ஆத்ம-அபிமானத்திற்கு இடையே இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. அத்ம-அபிமானிகளான தேவி-தேவதைகள் முழு உலகத்திற்கும் எஜமானர்களாக ஆகி விடுகிறார்கள். தேக-அபிமானியாக ஆவதின் மூலம் ஏழைகளாக ஆகி விடுகிறார்கள். பாரதம் தங்கக் குருவியாக இருந்தது என்று சொல்கிறார்கள் ஆனால் புரிந்து கொள்வதில்லை. தெய்வீக புத்தியுடையவர்களாக மாற்றுவதற்காகத் தான் சிவபாபா வருகின்றார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே நான் உங்களை உலகத்திற்கு எஜமானர்களாக மாற்றுகின்றேன், இந்த லஷ்மி - நாராயணன் உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தார்கள் என்று பாபா கூறுகின்றார். இவர்களுக்கு இராஜ்யத்தை கொடுத்தது யார் என்று எப்போதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அவர்கள் இந்தளவிற்கு உயர்ந்த பதவி அடைய அப்படி என்ன செயல்களைச் (கர்மம்) செய்தார்கள்? கர்மத்தினுடைய விஷயம் அல்லவா? மனிதர்கள் அசுர கர்மம் செய்கிறார்கள் எனும்போது அந்த கர்மம் விகர்மமாக ஆகி விடுகிறது. சத்யுகத்தில் கர்மம் அ-கர்மமாக ஆகிறது. அங்கே கர்மங்களுக்கு கணக்கு இருப்பதில்லை. புரியாத காரணத்தினால் நிறைய தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். சிவனும் சங்கரரும் ஒன்று என்று சொல்லி விடுகிறார்கள். சிவன் நிராகாரமானவரை தனியாகக் காட்டுகிறார்கள், சங்கர்-பார்வதியைக் காட்டு கிறார்கள், இருவருடைய காரியமும் முற்றிலும் தனிப்பட்டதாகும். மந்திரியையும் ஜனாதிபதி யையும் எப்படி ஒன்று என்று சொல்ல முடியும். இருவருடைய பதவியும் முற்றிலும் தனிப் பட்டதாகும், அப்படி இருக்கும்போது சிவனையும் சங்கரரையும் எப்படி ஒன்று என்று சொல்லி விடுகிறார்கள். யார் இராம சம்பிரதாயத்தில் வர வேண்டியதில்லையோ அவர்கள் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள் என்பதை தெரிந்துள்ளீர்கள். அசுர சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிந்தனை செய்வார்கள், தடை போடுவார்கள். ஏனென்றால் அவர்களிடத்தில் 5 விகாரங்கள் இருக் கின்றன அல்லவா? தேவதைகள் சம்பூரண நிர்விகாரிகளாவர். அவர்களுடைய பதவி எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது. நாம் எவ்வளவு விகாரிகளாக இருந்தோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இங்கு விகாரத்தின் மூலம் பிறக்கிறார்கள். சன்னியாசிகளும் கூட விகாரத் தின் மூலம் பிறக்க வேண்டும், பிறகு சன்னியாசம் செய்கிறார்கள். சத்யுகத்தில் இந்த விஷயங்கள் நடப்பதில்லை. சன்னியாசிகள் சத்யுகத்தைப் புரிந்து கொள்வது கிடையாது. சத்யுகம் இருக்கவே இருக்கிறது என்று சொல்லி விடுகிறார்கள். எப்படி கிருஷ்ணர் எங்கும் இருக்கிறார், ராதை எங்கும் இருக்கிறார் என்று சொல்வது போலாகும். அனேக வழி முறைகள், அனேக தர்மங்கள் இருக்கின்றன. அரைகல்பம் தெய்வீக வழி நடக்கிறது, அது இப்போது உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் தான் பிரம்மாவின் வாய்வழி வந்தவர்கள் பிறகு விஷ்ணு வம்சத்த வர்கள் பிறகு சந்திரவம்சத்தவர்களாக ஆகின்றீர்கள். அவை இரண்டையும் இராஜ்யம் என்றும் மற்றும் ஒரு பிராமண குலம் என்று சொல்லலாம், இதனை இராஜ்யம் என்று சொல்ல முடியாது. இவர்களுடைய இராஜ்யம் நடப்பதில்லை. இதையும் நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். உங்களில் கூட சிலர் தான் புரிந்து கொள்கிறீர்கள். சிலர் மாறுவதே இல்லை, ஏதாவது ஒரு பூதம் இருக்கிறது. பேராசை எனும் பூதம், கோபம் எனும் பூதம் இருக்கிறது அல்லவா? சத்யுகத்தில் எந்த பூதமும் கிடையாது. சத்யுகத்தில் தேவதைகள் இருக்கிறார்கள், அவர்கள் மிகவும் சுகமானவர்களாக இருக்கிறார்கள். பூதம் தான் துக்கம் கொடுக்கிறது, காமம் எனும் பூதம் முதல்-இடை-கடைசியில் துக்கம் கொடுக்கிறது. இதில் அதிகம் உழைக்க வேண்டும். சித்தி வீட்டிற்குச் செல்வது போல் கிடையாது. சகோதரன் - சகோதரி என்று புரிந்து கொண்டீர்கள் என்றால், குற்றப்பார்வை செல்லாது என்று பாபா கூறிக் கொண்டே இருக்கின்றார். ஒவ்வொரு விஷயத்திலும் தைரியம் வேண்டும். திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லி விடுகிறார்கள். அப்போது தைரியம் வேண்டும். தங்களை சோதித்துக் கொள்ளவும் வேண்டி யிருக்கிறது.

குழந்தைகளாகிய நீங்கள் பதமாபதம் பாக்கியசாலிகளாக ஆகிக் கொண்டிருகிறீர்கள். இவை யனைத்தும் அழிந்து விடும். அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும். சிலர் நல்ல தைரியம் வைத்து நடக்கிறார்கள். சிலர் தைரியம் வைத்து பிறகு தோற்று விடுகிறார்கள். பாபா ஒவ்வொரு விஷயத்தையும் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். ஆனால் செய்ய வில்லை என்றால் முழுமையான யோகம் இல்லை என்று அர்த்தமாகிறது. பாரதத்தின் பழமையான இராஜயோகம் புகழ்பெற்றதாகும். இந்த யோகத்தின் மூலம் தான் நீங்கள் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். படிப்பு தான் வருமானத்திற்கான ஆதாரமாகும். படிப்பின் மூலம் தான் நீங்கள் வரிசைக்கிரமமாக உயர்ந்த பதவியை அடைகிறீர்கள். சகோதரன் - சகோதரி என்ற சம்பந்தத்திலும் புத்தி ஓடி விடுகிறது. ஆகையினால் பாபா இன்னும் ஒருபடி மேலே சென்று தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களையும் ஆத்மா சகோதர-சகோதரன் என்று புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். நாம் அனைவரும் சகோதர-சகோதரர்கள் எனும் போது வேறு பார்வை செல்லவே செல்லாது. சரீரத்தைப் பார்க்கும்போது தான் கெட்ட எண்ணம் வருகிறது. பாபா கூறுகின்றார் - குழந்தைகளே அசரீரி ஆகுக, ஆத்ம-அபிமானி ஆகுக! தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். ஆத்மா அழிவற்றதாகும். சரீரத்தின் மூலம் நடிப்பை நடித்தீர்களா, பிறகு சரீரத்தை விட்டு தனியாகி விட வேண்டும். அந்த நடிகர்கள் நடிப்பை முடித்து விட்டு உடையை மாற்றிக் கொள்கிறார்கள். நீங்களும் கூட இப்போது பழைய சரீரத்தை விட்டு விட்டு புதியதை அணிய வேண்டும். இந்த சமயத்தில் ஆத்மாவும் தமோபிரதானமாக இருக்கிறது, சரீரமும் தமோபிரதானமாக இருக்கிறது. தமோபிரதான ஆத்மா முக்திக்குச் செல்ல முடியாது. தூய்மை ஆனால் தான் செல்ல முடியும். தூய்மையற்ற ஆத்மா திரும்பிச் செல்ல முடியாது. இன்னார் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விட்டார் என்று இவர்கள் பொய் சொல்கிறார்கள். ஒருவர் கூட செல்ல முடியாது. அங்கே மரம் உருவாக்கப்பட்டது போல் இருக்கிறது, அப்படியே தான் இருக்கிறது. இதை பிராமண குழந்தைகளாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். கீதையில் பிராமணர்களுடைய பெயர் எதையும் காட்டவில்லை. பிரஜாபிதா பிரம்மாவின் உடலில் பிரவேசிக்கின்றேன் என்றால் தத்தெடுக்கப்பட்டவர்கள் வேண்டும் என்பதைப் புரிய வைக்கின்றேன். அந்த பிராமணர்கள் விகாரிகள், நீங்கள் விகாரமற்றவர்கள். நிர்விகாரிகளாக ஆவதற்கு நிறைய கொடுமைகளைப் பொருத்துக் கொள்ள வேண்டும். இந்த பெயர் ரூபத்தை பார்ப்பதின் மூலம் நிறைய பேருக்கு கெட்ட எண்ணங்கள் வருகின்றன. சகோதரன் - சகோதரி என்ற சம்பந்தத்திலும் கூட விழுந்து விடு கிறார்கள். பாபா நாங்கள் விழுந்து விட்டோம், முகத்தைக் கருப்பாக்கிக் கொண்டோம் என்று கடிதம் எழுதுகிறார்கள். பாபா கூறுகின்றார் - ஆஹா! நான் சகோதர-சகோதரியாக இருங்கள் என்று சொன்னேன் இருந்தும் நீங்கள் இந்த கெட்ட காரியத்தைச் செய்துள்ளீர்கள். பிறகு அதற்கு மிகவும் கடுமையான தண்டனை கிடைத்து விடுகிறது. யாராவது யாரையாவது கெடுத்து விடுகிறார்கள் என்றால் அவர்களை ஜெயிலில் போடுகிறார்கள். நான் ஸ்தாபனை செய்த பாரதம் எவ்வளவு தூய்மையானதாக இருந்தது. அதனுடைய பெயரே சிவாலயம் ஆகும். இந்த ஞானம் கூட யாரிடத்திலும் இல்லை. மற்றபடி இருக்கின்ற சாஸ்திரம் போன்றவைகள் அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சடங்குகளாகும். சத்யுகத்தில் அனைவரும் சத்கதியில் இருக்கிறார்கள், ஆகையினால் அங்கே எந்த முயற்சியும் செய்வதில்லை. இங்கே அனைவரும் கதி-சத்கதிக்கு முயற்சி செய்கிறார் கள். ஏனென்றால் துர்க்கதியில் இருக்கிறார்கள். கங்கையில் குளிக்கச் செல்கிறார்கள் என்றால் கங்கை நீர் சத்கதி கொடுக்குமா என்ன? அது தூய்மையாக்குமா என்ன? எதையும் தெரிந்து கொள்வ தில்லை. உங்களில் கூட வரிசைக்கிரமமாகத் தான் இருக்கிறீர்கள். சிலர் தாங்களே புரிந்து கொள்ள வில்லை எனும்போது மற்றவர்களுக்கு எப்படி புரிய வைப்பார்கள்? ஆகையினால் பாபா அவர்களை அனுப்புவதில்லை. பாடிக்கொண்டே இருக்கிறார்கள் - பாபா தாங்கள் வந்தீர்கள் என்றால், தங்களுடைய ஸ்ரீமத்படி நடந்து தேவதைகளாக ஆவோம். தேவதைகள் சத்யுகம் மற்றும் திரேதா யுகத்தில் இருப்பார்கள். இங்கே அனைத்திலும் அதிகமாக காம விகாரத்தில் மாட்டிக் கொண்டிருக் கிறார்கள். காம விகாரம் இல்லாமல் இருக்க முடிவதில்லை. இந்த விகாரம் தாய்-தந்தையரின் ஆஸ்தியைப் போல் இருக்கிறது. இங்கே உங்களுக்கு இராமனுடைய ஆஸ்தி கிடைக்கிறது. தூய்மை எனும் ஆஸ்தி கிடைக்கிறது. அங்கே விகாரத்தின் விஷயம் இருப்பதில்லை.

கிருஷ்ணர் தான் பகவான் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். நீங்கள் அவரை 84 பிறவிகளில் காட்டுகிறீர்கள். அட, பகவான் நிராகாரமானவர் ஆவார். அவருடைய பெயர் சிவன் என்பதாகும். பாபா எவ்வளவு நல்ல விதத்தில் புரிய வைக்கின்றார். இரக்கமும் வருகிறது. இரக்க மன முடையவர் அல்லவா? இவர் (பிரம்மா) எவ்வளவு புத்திசாலி குழந்தையாக இருக்கின்றார். ஞானத்தின் எழுச்சியும் நன்றாக இருக்கிறது. யாரிடம் ஞானம் மற்றும் யோகத்தின் சக்தி இருக்கிறதோ அவர்கள் நன்றாக கவர்ச்சிக்கிறார்கள். படிப்பறிவுள்ளவருக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. படிக்காதவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. இந்த சமயத்தில் அனைவரும் அசுர சம்பிரதாயத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துள்ளீர்கள். எதையும் புரிந்து கொள்வதில்லை. சிவன் மற்றும் சங்கருடைய வித்தியாசம் முற்றிலும் தெளிவாக இருக்கிறது. அவர் மூலவதனத்தில் இருக்கிறார், இவர் சூட்சுமவதனத்தில் இருக்கிறார், அனைவரும் ஒரே மாதிரி எப்படி இருக்க முடியும்? இந்த உலகமே தமோபிரதானமானதாகும். இராவணன் அசுர சம்பிர தாயத்தைச் சேர்ந்த எதிரியாவான், தனக்குச் சமமாக மாற்றி விடுகிறான். இப்போது பாபா உங்களை தனக்குச் சமமாக தெய்வீக சம்பிரதாயத்தவர்களாக மாற்றுகின்றார். அங்கே இராவணன் இருப்பதே இல்லை. அரைகல்பமாக அவனை எரிக்கிறார்கள். இராம இராஜ்யம் சத்யுகத்தில் இருக்கிறது. காந்திஜி இராம ராஜ்யத்தை விரும்பினார். ஆனால் அவர் எப்படி இராம ராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய முடியும்? அவர் ஒன்றும் ஆத்ம-அபிமானியாக ஆவதற்கான கல்வியை கற்பிக்கவில்லை. பாபா தான் சங்கமயுகத்தில் ஆத்ம-அபிமானியாக ஆகுங்கள் என்று கூறுகின்றார். இது உத்தமர்களாக ஆவதற்கான யுகமாகும். பாபா எவ்வளவு அன்போடு புரிய வைத்துக் கொண்டி ருக்கின்றார். அடிக்கடி பாபாவை எவ்வளவு அன்போடு நினைவு செய்ய வேண்டும் - பாபா தங்களுடைய காரியம் அதிசயமானதாகும். நாங்கள் எவ்வளவு கல் புத்தியுடையவர்களாக இருந்தோம், தாங்கள் எங்களை எவ்வளவு உயர்ந்தவர்களாக மாற்றுகிறீர்கள்! தங்களுடைய வழியின் படி அல்லாமல் வேறு யாருடைய வழிப்படியும் நடக்க மாட்டோம். கடைசியில் அனைவரும் சொல்வார்கள் பிரம்மா குமார-குமாரிகள் தான் சரியாக தெய்வீக வழிப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு நல்ல-நல்ல விஷயங்களைச் சொல்கிறார்கள். முதல்-இடை-கடைசியின் அறிமுகத்தைக் கொடுக்கிறார்கள். குணங்களை (பழக்க வழக்கம்) மாற்றுகிறார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பார்வையை சுத்தமாக தூய்மையாக்குவதற்காக யாருடைய பெயர் ரூபத்தையும் பார்க்காமல் அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்ய வேண்டும். தங்களை ஆத்மா என்று புரிந்து, ஆத்மா சகோதரனிடம் பேச வேண்டும்.

2) அனைவருடைய மரியாதையையும் அடைவதற்கு ஞான-யோகத்தின் சக்தியை தாரணை செய்ய வேண்டு தெய்வீக குணங்களினால் நிறைந்தவர்களாக ஆக வேண்டும். குணங்களை மாற்றுவதற்கான சேவை செய்ய வேண்டும்.

வரதானம்:
நோய்-உணர்வுள்ளவர் ஆவதற்கு பதிலாக குஷி-குஷியோடு கணக்கு-வழக்கை முடித்து விடக்கூடிய ஆத்ம-உணர்வுள்ளவர் ஆகுக.

உடலோ அனைவர்க்குமே பழையது தான். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சின்ன-பெரிய நோய் இருக்கவே செய்கிறது. ஆனால் உடலின் பிரபாவம் மனதின் மீது வந்து விட்டதென்றால் இரட்டை நோய் ஆகி, நோய்-உணர்வுள்ளவராக ஆகி விடுகிறார்கள். எனவே மனதில் ஒரு போதும் நோயின் சங்கல்பம் வரக் கூடாது. அப்போது ஆத்ம உணர்வுள்ளவர் எனச் சொல்வார்கள். நோயைப் பார்த்து ஒரு போதும் பயப்படாதீர்கள். கொஞ்சம் மருந்து ரூப பழங்கள் சாப்பிட்டு அதற்கு விடை கொடுங் கள். குஷி-குஷியோடு கணக்கு-வழக்கை முடித்து விடுங்கள்.

சுலோகன்:
ஒவ்வொரு குணம், ஒவ்வொரு சக்தியை அனுபவம் செய்வது என்றால், அனுபவி மூர்த்தி ஆவதாகும்.