09-02-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! சிவஜெயந்தி அன்று நீங்கள் மிகவும் கோலாகலமாக நிராகார் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை அனைவருக்கும் கூறுங்கள். இந்த சிவஜெயந்தி தான் வைரம் போன்றதாகும்.

கேள்வி:
பிராமணர்களாகிய உங்களின் உண்மையான தீபாவளி எப்போது? மற்றும் எப்படி?

பதில்:
உண்மையில் சிவஜெயந்தி தான் உங்களுக்கு உண்மையிலும் உண்மையான தீபாவளி யாகும். ஏனென்றால் சிவபாபா வந்து ஆத்மாக்களாகிய உங்களின் தீபத்தை ஏற்றுகிறார். ஒவ்வொரு வீட்டு தீபமும் எரிகிறது என்றால் ஆத்ம தீபம் எரிகிறது. அவர்கள் ஸ்தூல தீபத்தை ஏற்றுகிறார்கள். ஆனால் உங்களுடைய உண்மையான தீபம் சிவபாபா வருவதால் எரிகிறது. ஆகையால் நீங்கள் மிகவும் கோலாகலமாக சிவஜெயந்தியைக் கொண்டாடுங்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் சிவஜெயந்தி கொண்டாடு கிறீர்கள். மேலும் பாரதத்தில் தான் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். ஒருவருடைய ஜெயந்தி தான் கொண்டாடப் படுகிறது. பிறகு அவரை சர்வ வியாபி என்கிறார்கள். இப்போது அனைவரின் ஜெயந்தியும் கொண்டாட முடியாது. ஜெயந்தி எப்போது கொண்டாடப்படுகிறது. கர்பத்திலிருந்து வெளிவரும் போது நிச்சயமாக சிவ ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். ஆரிய சமாஜத்தைச் சார்ந்தவர்கள் கூட கொண்டாடுகிறார்கள். இப்போது (2024-ல்) நீங்கள் 88-வது ஜெயந்தியை கொண்டாடுகிறீர்கள் என்றால் பிறந்து 88 வருடங்கள் ஆகிவிட்டது. பிறந்த நாள் அனைவருக்கும் நினைவிருக்கிறது. இந்த நாள் இவர் கர்ப்பத்திலிருந்து வெளி வந்தார். இப்போது நீங்கள் சிவபாபாவிற்கு 88-வது ஜெயந்தியைக் கொண்டாடுகிறீர்கள். இவரோ நிராகாரர். இவருடைய ஜெயந்தி எப்படி நடைபெறும்? பெரிய பெரிய மனிதர்களுக்கு அழைப்பிதழ்கள் போகிறது. எப்படி ஜெயந்தி கொண்டாடுகிறீர்கள் என யாராவது கேட்கிறார்களா? அவர் எப்போது, எப்படி பிறந்தார்? பிறகு அவருடைய சரீரத்திற்கு என்ன பெயர் வைத்தீர்கள். ஆனால் கல் புத்தி உடையவர்களாக இருப்பதால் ஒரு போதும் கேட்பதில்லை. நீங்கள் அவர்களுக்கு, அவர் நிராகாரர் அவருடைய பெயர் சிவன் என தெரிவிக்கலாம். நீங்கள் சாலி கிராமம் குழந்தைகள், இந்த சரீரத்தில் சாலிகிராமம் இருக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். பெயர் சரீரத்திற்குத் தான் வைக்கப்படுகிறது அவர் பரமாத்மா சிவன் ஆவார். இப்போது நீங்கள் எவ்வளவு கோலாகலமாக நிகழ்ச்சிகளை வைக்கிறீர் கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் கோலாகலமாகப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். சிவபாபா பிரம்மாவின் உடலில் பிரவேசம் ஆவதுதான் அவருடைய ஜெயந்தி என போற்றப்படுகிறது. அவருடைய நாள், நேரம், எதுவும் இல்லை. நான் சாதாரண உடலில் பிரவேசம் ஆகிறேன் என்கிறார். ஆனால் எப்போது எந்த நேரத்தில் என்பதை சொல்லவில்லை. நாள் நேரம், கிழமை போன்றவைகளைக் கூறினால் இந்த தேதி என்று கூறலாம். இவருக்கு ஜாதகம் ஏதும் கிடையாது. உண்மையில் எல்லோரையும் விட இவருடைய ஜாதகமே மிக உயர்ந்தது. எல்லோரையும் விட இவருடைய கடமையும் மிக உயர்ந்தது. பிரபுவே! உம்முடைய மகிமை அளவு கடந்தது என்கிறார்கள். நிச்சயமாக ஏதாவது செய்திருப்பார். பல பேருடைய மகிமைகள் பாடப்படுகிறது. நேரு, காந்தி, போன்றவர்களின் மகிமைகளைப் பாடப்படுகிறது. ஆனால் இவருடைய மகிமையை யாரும் சொல்ல முடியாது. அவர் ஞானக் கடல், அமைதியின் கடல், என நீங்கள் புரிய வைக்கிறீர்கள். அவர் ஒரே ஒருவர் அல்லவா! பிறகு அவரை எப்படி சர்வ வியாபி என கூற முடியும்? ஆனால் எதையும் புரிந்துக் கொள்வதில்லை. மேலும் நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்றால் யாரும் கேட்கத் துணிவதில்லை. சிவஜெயந்தி கொண்டாடப்படுகிறது, மகிமை பாடப் படுகிறது என்றால் நிச்சயமாக யாராவது வந்து போயிருக்க வேண்டும் என கேட்க வேண்டும். அனேக பக்தர்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை அரசாங்கம் ஏற்க வில்லை என்றால் பக்தர்கள், சாதுக்கள் குருக்களின் தபால் தலை கூட வெளியிடக் கூடாது. அரசு எப்படி இருக்கிறதோ அப்படியே பிரஜைகளும் இருக்கிறார்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையின் வாழ்க்கை வரலாறு நன்றாகப் புரிய வந்துள்ளது. உங்களுக்கு எவ்வளவு பெருமிதம் இருக்கிறதோ அவ்வளவு வேறு யாருக்கும் இருப்பதில்லை. சிவஜெயந்தி வைரம் போன்றது மற்ற அனைத்தும் சோழியைப் போன்றது என நீங்கள் தான் கூறுகிறீர்கள். தந்தையே வந்து சோழியை வைரம் போன்று மாற்றுகிறார். தந்தை மூலமாகத் தான் ஸ்ரீ கிருஷ்ணரும் இவ்வளவு உயர்ந்தவராக ஆகி இருக்கிறார். ஆகவே அவருடைய பிறவி வைரம் போன்றது எனப் பாடப்படுகிறது. முதலில் சோழியைப் போன்றிருக்கும், பிறகு வைரம் போன்று பாபா மாற்றுகிறார். இந்த விஷயங்களை மனிதர்கள் யாரும் அறியவில்லை. அவரை (ஸ்ரீ கிருஷ்ணரை) இவ்வாறு உலகத்திற்கே இளவரசனாக யார் மாற்றியது? இதையும் புரிய வைக்க வேண்டும்: கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடுகிறார்கள் தாயின் கர்ப்பத்திலிருந்து குழந்தை பிறந்தது. அவரை கூடையில் வைத்து எடுத்துச் சென்றனர். பிறகு கிருஷ்ணர் உலகத்திற்கே இளவரசானக இருந்தார். பிறகு அவர் எதற்கு பயப்பட வேண்டும்? அங்கே கம்சன் போன்றோர் எங்கிருந்து வந்தனர்? இந்த விஷயங்கள் அனைத்தும் சாஸ்திரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் நன்றாகப் புரிய வைக்க வேண்டும். புரிய வைப்பதற்கு மிகவும் யுக்திகள் (வழிகள்) வேண்டும். அனைவரும் ஒன்று போல படிக்க வைக்க முடியாது. யுக்தியாக புரிய வைக்காததால் மேலும் சேவையில் தடை ஏற்படுகிறது.

இப்போது சிவஜெயந்தி கொண்டாடப்படுகிறது என்றால் நிச்சயமாக சிவனின் மகிமையைத்தான் செய்வார்கள். காந்தி ஜெயந்தி அன்று காந்தியின் மகிமையை செய்வார்கள். வேறு எதுவே நினைவில் இல்லை. இப்போது நீங்கள் சிவஜெயந்தி கொண்டாடுகிறீர்கள் என்றால் நிச்சயமாக அவருடைய மகிமைகள் அவருடைய வாழ்க்கை வரலாறு அல்லது வாழ்க்கை சரித்திரமும் இருக்கும். நீங்கள் அந்த நாள் அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுங்கள். சிவஜெயந்தி எப்படி ஆரம்பமாகியது என்று யாரும் கேட்பதில்லை என்று பாபா கூறுகிறார். அதைப் பற்றி எந்த வர்ணனையும் இல்லை. அவருடைய மகிமைகளோ அளவு கடந்தது. சிவ பாபாவை போலாநாத் என கூறி நிறைய மகிமைகள் செய்கிறார்கள். அவரோ கள்ளம் கபடம் இல்லாதவர். அவரை சிவ சங்கர் என்கிறார்கள். சங்கரரை போலாநாத் என நினைக்கிறார்கள். உண்மையில் போலாநாத் சங்கர் கிடையாது. கண்ணைத் திறந்ததும் உலகம் அழிந்து விட்டது என அவருக்குக் கூறுகிறார் கள். ஊமத்தையை சாப்பிடுகிறார் என்றால் அவருக்கு எப்படி போலாநாத் என்று கூற முடியும்? ஒரே ஒருவருக்குத் தான் மகிமை உண்டு. நீங்கள் சிவனுடைய கோவிலுக்குச் சென்று புரிய வைக்க வேண்டும். அங்கு நிறைய பேர் வருகிறார்கள் என்றால், சிவனின் வாழ்க்கை வரலாற்றைக் கூற வேண்டும். கள்ளம் கபடம் அற்றவர் சிவபாபா என்கிறார்கள். இப்போது சிவன் மற்றும் சங்கரருக்கு உள்ள வித்தியாசங்களைக் கூட நீங்கள் தான் தெரிவித்துள்ளீர்கள். சிவன் கோவிலில் சிவனின் பூஜை நடக்கிறது. எனவே நீங்கள் அங்கே சென்று சிவனின் வாழ்க்கைக் கதையைக் கூற வேண்டும். வாழ்க்கைக் கதையைக் கேட்டு பிறருக்கு எப்படி கூறுவார்கள் என மனிதர்கள் ஆச்சரியப்படுவார்கள். ஆச்சரியமான விஷயம் என புரிந்துக்கொள்ள பலர் வருவார்கள். அழைப்பை ஏற்று வருவபர்களுக்கு, நாங்கள் நிராகார் பரம்பிதா பரம்பிதாவின் கதையை சொல்லுவோம் என கூறுங்கள். காந்தி போன்றவர்களின் வாழக்கை வரலாற்றை கேட்கிறார்கள் அல்லவா? இப்போது நீங்கள் சிவனின் மகிமையை செய்தீர்கள் என்றால் மனிதர்களின் புத்தியிலிருந்து சர்வவியாபி என்ற விஷயம் பறந்து போகும். ஒருவரின் மகிமை இன்னொரு வரைப் போன்று இருக்காது. மண்டபத்தைக் கட்டுகிறார்கள் அல்லது படக் கண்காட்சி வைக்கிறார்கள் என்றால் அது ஒன்றும் சிவனின் கோவில் கிடையாது. உண்மையிலும் உண்மை யான சிவனின் கோவில் இது தான் என நீங்கள் அறிகிறீர்கள். ஏனெனில், இங்கு தான் படைக்கக் கூடியவர் வந்து படைப்பின் முதல் இடை கடை பற்றிய ரகசியத்தைப் புரிய வைக்கிறார். படைக்கக் கூடியவரின் வாழ்க்கை கதை அல்லது வரலாற்றைக் கூறுவோம் என நீங்கள் எழுதலாம். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுங்கள். பெரியவர்களிடம் செல்லும் போது இவர்கள் யார் பரம்பிதா பரமாத்மாவின் வாழக்கை வரலாற்றை கூறுகிறார்கள் என ஆச்சரியப்படுவார்கள். படைப்பைப் பற்றி கூறினீர்கள் என்றால் பிரளயம் நடந்தது, பிறகு புதிய படைப்பு படைக்கப்பட்டது என நினைப்பார்கள். ஆனால் இல்லை. நீங்கள் புரிய வைக்க வேண்டும். பாபா பதீதர்களை வந்து பாவனமாக மாற்றுகிறார் என்றால் மனிதர்கள் அதிசயப்படுவார்கள். சிவனுடைய கோவிலுக்கு நிறைய பேர் வருவார்கள். ஹால் அல்லது மண்டபம் பெரியதாக இருக்க வேண்டும். நீங்கள் ஊர்வலம் நடத்துகிறீர்கள், அதில் கூட இந்த லஷ்மி நாராயணனின் இராஜ்யம் எப்படி உருவாகியது என அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அனைத்து ஆத்மாக்களின் தந்தை நிராகார் சிவபாபாவே வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். எப்படி சிவனின் கோவிலுக்குச் சென்று புரிய வைக்கலாம் என சிந்தனைக் கடலைக் கடைய வேண்டும். சிவனின் கோவிலில் அதிகாலையில் பூஜை செய்கிறார்கள். மணி கூட காலையில் அடிக்கிறார்கள். சிவபாபாவும் அதிகாலை நேரத்தில் வருகிறார். நள்ளிரவு என கூற மாட்டோம். அச்சமயம் நீங்கள் ஞானம் கூட கூற முடியாது. ஏனென்றால் மனிதர்கள் அப்போது தூங்கிக் கொண்டிருப்பார்கள். இருப்பினும் இரவில் மனிதர்களுக்கு நேரம் கிடைக்கிறது. விளக்குகள் எரிகின்றது. நன்கு வெளிச்சம் ஏற்படச் செய்ய வேண்டும். சிவபாபா வந்து ஆத்மாக்களாகிய உங்களை எழுப்புகிறார். இது தான் உண்மையான தீபாவளி. ஒவ்வொருவருடைய வீட்டு தீபமும் எரிகிறது. அதாவது ஆத்ம ஜோதி எரிகிறது. அவர்கள் வீட்டில் ஸ்தூல தீபங்களை ஏற்றுகிறார்கள். ஆனால் இது தான் தீபாவளியின் பொருளாகும். ஆனால் சிலருடைய தீபங்கள் முற்றிலும் எரிவதில்லை. நம்முடைய தீபம் எப்படி எரிகிறது என உங்களுக்குத் தெரியும். யாராவது இறந்து விட்டால் இருள் ஏற்படக் கூடாது என தீபம் ஏற்றுகிறார்கள். ஆனால் முதலில் ஆத்ம தீபத்தை ஏற்ற வேண்டும். அப்போதுதான் இருள் இல்லாமல் இருக்கும். இல்லை என்றால் மனிதர்கள் ஆழ்ந்த இருளில் இருக்கிறார்கள். ஆத்மா நொடியில் ஒரு உடலை விட்டு இன்னொன்றை எடுக்கிறது. இருள் போன்ற விஷயங்கள் இங்கு இல்லை. இது பக்தி மார்க்கத்தின் பழக்கம் ஆகும். நெய் தீர்ந்ததும் தீபம் அணைந்து விடுகிறது. இருளின் பொருள் எதுவும் புரியவில்லை. பித்ருக்களுக்கு (முன்னோர்) உணவளிப்பதன் பொருளை யும் அறிவதில்லை. முன்பு ஆத்மாக்களை அழைத்தார்கள், ஏதாவது கேட்டனர், இப்போது அவ்வாறு கிடையாது. இங்கு கூட வருகிறார்கள், சில நேரங்களில் ஏதாவது கூறுகிறார்கள். நீங்கள் சுகமாக இருக்கிறீர்களா என்றால் ஆமாம் என்பார்கள். நிச்சயமாக இங்கிருந்து யார் போகிறார்களோ அவர்கள் நல்ல வீட்டில் பிறப்பார்கள். நிச்சயமாக அஞ்ஞானி வீட்டில் தான் பிறப்பார்கள். ஞானி வீட்டில் பிறக்க முடியாது. ஏனென்றால், ஞானி பிராமணர்கள் விகாரத்தில் ஈடுபட முடியாது. அவர்கள் பவித்திரமாக இருப்பார்கள். மற்றபடி நல்ல சுகமான வீட்டில் சென்று பிறப்பார்கள் எப்படி இறுதி மனநிலையோ அப்படியே அடுத்த பிறப்பு என்று விவேகம் கூட கூறுகிறது. பிறகு அங்கே தனது பொலிவைக் காண்பிக்கிறார்கள் சரீரம் சிறியதாக இருக்கிறது, ஆகவே பேச முடியாது. கொஞ்சம் பெரியதானதும் ஞானத்தின் அழகைக் கண்டிப்பாக வெளிப்படுத்துவார்கள். எப்படி சிலர் சாஸ்திரங்களின் சம்ஸ்காரத்தை எடுத்து செல்கிறார்கள் என்றால் சிறிய வயதிலேயே அதில் ஈடுபட்டு விடுகிறார்கள். அதுபோன்று இங்கிருந்து கூட ஞானத்தை எடுத்துச் செல்கிறார்கள் என்றால் நிச்சயமாக அதன் மகிமை வெளிப்படும்.

நீங்கள் சிவ ஜெயந்தி கொண்டாடுகிறீர்கள் அவர்கள் எந்த பொருளையும் புரிந்துக் கொள்வதில்லை. ஒருவேளை அவர் சர்வ வியாபி என்றால் ஜெயந்தி எப்படி கொண்டாட முடியும் என கேட்க வேண்டும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் தந்தை யாகவும் இருக்கிறார், டீச்சராகவும் இருக்கிறார், சத்குருவாகவும் இருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். சத் ஸ்ரீ அகால் என சீக்கியர்கள் கூட கூறுகிறார்கள் என பாபா புரிய வைக்கிறார். இப்போது உண்மையில் அகால் மூரத் அனைத்து ஆத்மாக்களும் தான். ஆனால் ஒரு சரீரத்தை விட்டு விட்டு இன்னொன்றை எடுக்கின்றன. ஆகவே பிறப்பு-இறப்பு என கூறப்படுகிறது. ஆத்மா அதே தான். ஆத்மா 84 பிறவிகளை எடுக்கிறது. கல்பம் முடிகின்ற போது தானே வந்து தான் யார் என்பதையும், நான் எப்படி இவருக்குள் பிரவேசம் ஆகிறேன் என்றும் தெரிவிக்கிறார். இதன் மூலம் நீங்களே உங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வீர்கள். முதலில் நீங்கள் அறியவில்லை. ஆம், பரமாத்மா பிரவேசம் ஆகிறார், ஆனால் எப்படி? எப்போது? எதுவும் தெரியாது. ஒவ்வொரு நாளும் உங்களுடைய புத்தியில் இந்த விஷயங்கள் வந்துக் கொண்டே இருக்கின்றன. புதுப்புது விஷயங்களை நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். முன்பு இரண்டு தந்தையரைப் பற்றிய ரகசியத்தைக் கூறினாரா என்ன? முன்பு நீங்கள் சிறிய குழந்தைகளைப் போன்று இருந்தீர்கள். இப்போது கூட பலர் பாபா நாங்கள் தங்களின் இரண்டு நாள் குழந்தை என கூறுகிறார்கள். நான் இத்தனை நாள் குழந்தை. எது நடக்கிறதோ அது போன கல்பத்தைப் போன்று என புரிந்துக் கொள்கிறார்கள். இதில் மிகப் பெரிய ஞானம் இருக்கிறது. புரிந்துக் கொள்ள நேரம் ஆகிறது. பிறக்கிறார்கள். பிறகு இறந்தும் போகிறார்கள். இரண்டு மாதம், எட்டு மாதம் ஆன பிறகும் இறந்து போகிறார்கள். உங்களிடம் வருகிறார்கள். இது சரியே என கூறுகிறார்கள். அவர் நம்முடைய தந்தை, நாம் அவருடைய வாரிசு. ஆம்.... ஆம்.... என்கிறார்கள். மிகவும் பிரபாவம் அடைந்து விட்டனர் என குழந்தைகள் கூட எழுதுகிறார்கள். பிறகு வெளியே சென்றதும் முடிந்தது. அவ்வளவு இறந்து போகின்றனர். பிறகு வருவதே இல்லை என்றால் என்ன ஆகும்? கடைசியில் வந்து புத்துணர்வு அடைவார்கள் அல்லது பிரஜையில் வருவார்கள். இந்த விஷயங்கள் அனைத்தையும் புரிய வைக்க வேண்டும். நாம் சிவஜெயந்தியை எப்படி கொண்டாடுகிறோம். சிவ பாபா எப்படி சத்கதி கொடுக்கிறார். சிவபாபா சொர்க்கத்தின் பரிசை எடுத்து வந்திருக்கிறார். நானே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். உலகத்திற்கு அதிபதியாக்குகிறேன். பாபா சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர் என்றால், நிச்சயமாக சொர்க்கத்திற்கு அதிபதியாக்குவார். நாம் அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றோம், எப்படி சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். எப்படி இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் வந்து கற்றுக் கொள்ளுங்கள், பாபா புரிய வைப்பதைப் போன்று குழந்தைகள் புரிய வைக்க முடியாதா? இதில் நன்கு புரிய வைப்பவர்கள் வேண்டும். சிவன் கோவிலில் மிகவும் நன்றாகக் கொண்டாடுவார்கள். அங்கே சென்று புரிய வைக்க வேண்டும். லஷ்மி நாராயணனின் கோவிலில் சிவனின் வாழ்க்கைக் கதையைக் கூறினால் யாருக்கும் நல்லது என்று தோன்றாது. சிந்தையில் வராது. பிறகு அவர்களுக்கு நன்கு புத்தியில் பதிய வைக்க வேண்டும். லஷ்மி நாராயணனின் கோவிலுக்கும் நிறைய பேர் வருகிறார்கள். அவர்களுக்கும் லஷ்மி நாராயணன், இராதை கிருஷ்ணரின் ரகசியத்தைப் புரிய வைக்கலாம், அவர்களுக்குத் தனித் தனி கோவில் இருக்கத் தேவை இல்லை. கிருஷ்ண ஜெயந்தி அன்று நீங்கள் கிருஷ்ணரின் கோவிலுக்குச் சென்று கிருஷ்ணரை வெள்ளை கிருஷ்ணர், கருப்பு கிருஷ்ணர் என ஏன் பாடப்பட்டிருக்கிறது என புரிய வைக்கலாம். கிராமத்து பையன் என்கிறார்கள். கிராமங்களில் ஆடு, மாடுகள் மேய்த்திருப்பார் அல்லவா? பாபா தாமும் கிராமத்து பிள்ளை தான் என எண்ணிப் பார்க்கிறார். தொப்பியும் இல்லை, செருப்பும் இல்லை. நாம் எப்படி இருந்தோம், இப்போது பாபா வந்து பிரவேசமாகி இருக்கிறார் என்பது நினைவிற்கு வருகிறது. எனவே பாபாவின் லட்சியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதாவது சிவபாபாவை நினையுங்கள். அவர் தான் சத்கதியின் வள்ளல். நீங்கள் இராமச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூட தெரிவிக்க முடியும். அவருடைய ராஜ்யம் எப்போது ஆரம்பமாகியது, எத்தனை வருடங்கள் ஆகியது, இப்படிப்பட்ட எண்ணங்கள் வர வேண்டும். சிவனின் கோவிலில் சிவனின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிவிக்க வேண்டும். லஷ்மி நாராயணினின் கோவிலில் லஷ்மி நாராயணனின் மகிமையை செய்ய வேண்டும் இராமரின் கோவிலுக்கு சென்றால் இராமரின் வாழ்க்கைக் கதையைக் கூறுவார்கள். இப்போது நீங்கள் தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபிக்க முயற்சி செய்கிறீர்கள் இந்து தர்மத்தை (மதம்) யாரும் ஸ்தாபனை செய்யவில்லை. மற்றபடி இந்து என்று தர்மம் ஏதும் கிடையாது இதை நேரடியாகக் கூறினால் கொந்தளிப்பார்கள். நீங்கள் கிறிஸ்துவர்கள் என நினைப்பார்கள். நாங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினர், அதைத் தான் இந்து என்று கூறிவிட்டனர் என கூறுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சிவஜெயந்தியை கோலாகலமாகக் கொண்டாடுங்கள். சிவபாபாவின் கோவிலில் சிவனைப் பற்றியும் லஷ்மி நாராயணனின் கோவிலில் லஷ்மி நாராயணனைப் பற்றியும் மற்றும் இராதா கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றையும் கூறுங்கள். அனைவருக்கும் யுக்தியோடு புரிய வைக்க வேண்டும்.

2. அறியாமை இருளில் இருந்து தப்பிப்பதற்கு ஆத்மா என்ற தீபத்தை ஞான நெய் மூலம் சதா பிரகாசமாக எரிய வைக்க வேண்டும். மற்றவர்களையும் அறியாமை இருளில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும்.

வரதானம்:
அனைத்து பொக்கிஷங்களிலும் முழுமையானவர்களாகி நிரந்தர சேவை செய்யக் கூடிய அளவற்ற, அகண்ட மகாதானி ஆகுக.

பாப்தாதா சங்கமயுகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் அளவற்ற-அகண்ட என்ற வரதானம் கொடுத்திருக்கின்றார். யார் இந்த வரதானத்தை வாழ்க்கையில் தாரணை செய்து அகண்ட மகாதானி அதாவது நிரந்தர சகஜ சேவாதாரி ஆகிறார்களோ, அவர்கள் நம்பர் ஒன் ஆகிவிடு கின்றனர். துவாபர யுகத்தி-ருந்து பக்த ஆத்மாக்களும் தானி ஆகின்றனர், ஆனால் அளவற்ற பொக்கிஷங்களின் தானியாக ஆக முடியாது. அழியக் கூடிய பொக்கிங்கள் அல்லது பொருட்களின் தானி ஆகின்றனர். ஆனால் வள்ள-ன் குழந்தைகளாகிய நீங்கள் அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள், ஆகையால் ஒரு விநாடியும் தானம் கொடுக்காமல் இருக்க முடியாது.

சுலோகன்:
சரள சுபாவம் இருக்கும் போது தான் உள்ளார்ந்த சத்தியம், தூய்மை வெளிப்படும்.