11.02.24    காலை முரளி            ஓம் சாந்தி  24.02.98      பாப்தாதா,   மதுபன்


தந்தை, சேவை மற்றும் குடும்பத்தின் மீது அன்பு வைக்கும் போது கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்

இன்று நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகள் தங்களது தந்தையின் ஜெயந்தி கொண்டாடு வதற்காக வந்திருக்கிறீர்கள். எதிரில் அமர்ந்திருந்தாலும் சரி, ஆகார ரூபத்தில் தந்தையின் எதிரில் அமர்ந்திருந்தாலும் சரி - தந்தை அனைத்துக் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒருபுறம் சந்திப்பு செய்வதற்கான குஷி இருக்கிறது, மறுபுறம் விரைவாக பாப்தாதாவை வெளிப்படுத்த வேண்டும் என்ற சேவையில் ஆர்வம்- உற்சாகம் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றார். பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளைப் பார்த்து பல மடங்கு வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். குழந்தைகள் தந்தையின் ஜெயந்தி (பிறந்த நாள்) கொண்டாடுவதற்காக மூளை, முடுக்கிலிருந்து, தூர தூரத்திலிருந்து வந்திருப்பது போல் பாப்தாதாவும் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக வந்திருக்கின்றார். அனைவரையும் விட மிக தூரமான தேசமுடையவர் யார்? தந்தையா அல்லது நீங்களா? நாம் மீக தூர தேசத்திலிருந்து வந்திருக்கிறோம் என்று நீங்கள் கூறலாம். ஆனால் தந்தை கூறுகின்றார் - நான் உங்களை விட தூர தேசத்திலிருந்து வந்திருக்கின்றேன். ஆனால் உங்களுக்கு நேரம் ஏற்படுகிறது, தந்தைக்கு நேரம் ஏற்படுவது கிடையாது. நீங்கள் அனைவரும் விமானம் அல்லது புகைவண்டியில் வர வேண்டியிருக்கிறது, தந்தை இரதத்தை எடுக்க வேண்டியிருக்கிறது. ஆக நீங்கள் மட்டுமே தந்தையின் ஜெயந்தியை கொண்டாட வந்திருக்கிறீர்கள் என்பது கிடையாது. தந்தையும் ஆதியில் துணையாக இருந்த பிராமண ஆத்மாக்கள், பிறப்பின் போது துணையாக இருந்த குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட வந்திருக்கின்றார். ஏனெனில் தந்தை தனியாக அவதாரம் எடுப்பது கிடையாது. ஆனால் பிரம்மா, பிராமணக் குழந்தைகளின் கூடவே தெய்வீக பிறப்பு எடுக்கின்றார். அதாவது அவதாரம் எடுக்கின்றார். பிராமணர்கள் இல்லாமல் தனியாக தந்தை மட்டும் யக்ஞத்தை படைக்க முடியாது. யக்ஞத்தை படைத்தார், பிரம்மாவின் மூலம் பிராமணர்களைப் படைத்தார், அதனால் தான் நீங்கள் அனைவரும் பிறப்பு எடுத்திருக்கிறீர்கள். இரண்டு ஆண்டுகள் ஆனவர்களாக இருந்தாலும், இரண்டு மாதங்கள் ஆனவர்களாக இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் தெய்வீக பிராமண பிறப்பிற்கான வாழ்த்துக்கள். இந்த தெய்வீக பிறப்பு எவ்வளவு சிரேஷ்டமானது! ஒவ்வொரு தெய்வீக பிறப்பு எடுத்த பிராமண ஆத்மாக்களின் பாக்கிய நட்சத்திரத்தின் ஜொலிப்பைப் பார்த்து தந்தையும் மகிழ்ச்சி அடைகின்றார். மேலும் சதா இந்த பாடல் பாடிக் கொண்டே இருக்கின்றார் - ஆஹா, வைரத்திற்கு சமமான வாழ்க்கையுடைய பிராமணக் குழந்தைகளே ஆஹா ஆஹா-ஆஹா என்று கூறுக் கூடியவர்கள் அல்லவா? தந்தை ஆஹா ஆஹா குழந்தைகளாக ஆக்கி விட்டார். இந்த அலௌகீகப் பிறவியானது தந்தைக்கும் தனிப்பட்டதாக இருக்கிறது, குழந்தைகளாகிய உங்களுக்கும் தனிப்பட்டது மற்றும் அன்பானதாக இருக்கிறது. இந்த ஒரே ஒரு தந்தைக்கு மட்டுமே இப்படிப்பட்ட பிறப்பு அல்லது ஜெயந்தி ஏற்படுகிறது, வேறு யாருக்கும் இப்படிப்பட்ட பிறந்த நாள் ஏற்படவில்லை, ஏற்படாது. நிராகாரம் மற்றும் தெய்வீக பிறப்பு, மற்ற அனைத்து ஆத்மாக்களின் பிறப்பு அவரவர்களது சாகார சரீரத்தில் ஏற்படகிறது. ஆனால் நிராகார தந்தையின் பிறப்பு பரகாய பிரவேசத்தினால் ஏற்படுகிறது. முழு கல்பத்திலும் இந்த விதியின் மூமலம் யாருக்காவது பிறப்பு ஏற்பட்டிருக்கிறதா? ஒரே ஒரு தந்தைக்கு மட்டுமே இவ்வாறு தனிப்பட்ட பிறந்த நாள் ஏற்படுகிறது, அதை சிவஜெயந்தி ரூபத்தில் பக்தர்களும் கொண்டாடி வருகின்றனர். ஆகையால் இந்த தெய்வீக பிறப்பின் மகத்துவத்தை நீங்கள் அறிவீர்கள், பக்தர்கள் அறியவில்லை. ஆனால் என்ன கேட்டார்களோ அதன்படி உயர்ந்ததிலும் உயர்ந்தது என்று புரிந்து கொண்டு கொண்டாடி வருகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் கொண்டாடுவது மட்டுமின்றி கொண்டாடுவதன் கூடவே தன்னை பாப்சமான் ஆக்கவும் செய்கிறீர்கள். அலௌகீக பிறப்பின் மகத்துவத்தை அறிவீர்கள். வேறு எந்த ஒரு தந்தைக்கும் தன் கூடவே குழந்தைகளின் பிறப்பும் ஏற்படுவது கிடையாது. ஆனால் சிவஜெயந்தி என்றால் தந்தையின் தெய்வீக பிறப்பின் கூடவே குழந்தைகளின் பிறப்பும் ஆகும். அதனால் தான் வைரவிழா கொண்டாடி இருக்கிறீர்கள் அல்லவா! ஆக தந்தையின் கூடவே குழந்தைகளுக்கும் தெய்வீக பிறப்பாகும். இந்த ஜெயந்தியைத் தான் வைரத்திற்கு சமமான ஜெயந்தி என்று கூறுகின்றோம். ஆனால் வைரத்திற்கு சமமான ஜெயந்தி கொண்டாடி தானும் வைரத்திற்கு சமமான வாழ்க்கை வாழுகிறீர்கள். இந்த ரகசியத்தை அனைத்து குழந்தைகளும் அறிந்திருக்கிறீர்கள், மற்றவர்களுக்கும் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதா செய்திகளை கேட்டுக் கொண்டிருக்கின்றார், பார்த்துக் கொண்டிருக்கின்றார் - குழந்தைகள் தந்தையின் தெய்வீகப் பிறப்பின் மகத்துவத்தை எவ்வளவு ஆர்வம்-உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள சேவாதாரி குழந்தைகளின் தைரியத்திற்கு கைமாறாக தைரியம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். குழந்தைகளின் தைரியம் மற்றும் தந்தையின் உதவி.

இன்றைய நாட்களில் அனைத்து குழந்தைகளின் ஒரே ஒரு அன்பான சங்கல்பம் அடிக்கடி பாப்தாதாவிடம் வருகின்றது - இப்பொழுது பாபாவிற்கு சமமாக விரைவாக ஆகியே தீர வேண்டும். தந்தையும் கூறுகின்றார் - இனிய குழந்தைகளே! ஆகியே தீர வேண்டும். ஒவ்வொருவருக்கும் இந்த திட நிச்சயம் இருக்கிறது, இன்னும் நான் ஆகவில்லை எனில் வேறு யார் ஆவார்கள் என்று அடிகோடிட வேண்டும். நாம் தான் இருந்தோம், நாம் தான் இருக்கின்றோம், மேலும் நாம் தான் ஒவ்வொரு கல்பத்திலும் ஆகிக் கொண்டே இருப்போம். இந்த நிச்சயம் பக்கவாக இருக்கிறது தானே? இரட்டை அயல்நாட்டினரும் சிவஜெயந்தி கொண்டாட வந்திருக்கிறீர்கள்? நன்று. இரட்டை அயல்நாட்டினர் கை உயர்த்துங்கள். இரட்டை அயல்நாட்டினருக்கு உலகின் எந்த ஒரு மூலையும் விடுபட்டு விடக் கூடாது என்பதில் ஆர்வம்-உற்சாகம் அதிகமாக இருப்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கின்றார். பாரதத்திற்கு சேவை செய்வதற்கு அதிக காலம் கிடைத்திருக்கிறது, மேலும் பாரதத்தில் ஊருக்கு ஊர் செய்தி கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் இரட்டை அயல்நாட்டினர்களுக்கு பாரதத்தை விட சேவைக்கான காலம் குறைவாக கிடைத்திருக்கிறது. இருப்பினும் ஆர்வம்-உற்சாகத்தின் காரணத்தினால் பாப்தாதா வின் எதிரில் சேவைக்கான நிரூபனம் நன்றாக கொண்டு வந்திருக்கிறீர்கள், கொண்டு வருவீர்கள். தற்பொழுது பாரதத்தில் அனைத்து தொழில்துறை சார்ந்தவர்களின் (விங்-வர்க்கம்) சேவை ஆரம்பமாகி இருக்கிறது, இதன் காரணத்தினால் அனைத்து வர்கத்தினருக்கும் செய்தி கொடுப்பது எளிதாகி விட்டது. ஏனெனில் ஒவ்வொரு வர்கத்தினரும் தங்களது வர்கம் முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே இந்த வர்க சேவையின் கண்டுபிடிப்பு நன்றாக இருக்கிறது. இதனால் பாரதத்தின் சேவையிலும் விசே ஆத்மாக்கள் வருவது நன்றாக இருக்கிறது. நன்றாக இருக்கிறது அல்லவா! வர்க சேவை பிடித்திருக்கிறது தானே? அயல்நாட்டினரும் தங்களது நல்ல நல்ல குழுவை அழைத்து வருகின்றனர், பயிற்சி முகாம் செய்விக்கின்றனர், முறைகள் நன்றாக வைத்திருக் கின்றனர். எவ்வாறு பாரதத்தில் வர்க சேவைக்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறதோ, அதே போன்று இவர்களுக்கும் இந்த விதி மிக நன்றாக இருக்கிறது. பாப்தாதாவிற்கு இரண்டு புறத்தின் சேவையும் பிடித்திருக்கிறது, நன்றாக இருக்கிறது. ஜெகதீஷ் குழந்தை நல்ல கண்டுபிடிப்பு செய்திருக்கின்றார், மேலும் அயல்நாட்டில் இந்த பயிற்சி முகாம் (ரெட்ரீட்), கலந்துரையாடல் (டயலாக்) ஆரம்பித்தது யார்? (அனைவரும் சேர்ந்து செய்திருக்கின்றோம்). பாரதத்திலும் இணைந்து செய்திருக்கிறீர்கள், இருப்பினும் நிமித்தமாக ஆகியிருக்கின்றார். ஒவ்வொருவரும் தங்களது அருகிலுள்ள குழுக்களுடன் இருப்பது நன்றாக இருக்கிறது. இரண்டு புறத்தின் சேவையில் அநேக ஆத்மாக்கள் நெருக்கத்தில் வருவதற்கான வாய்ப்பு கிடைத்திருக் கிறது. பலன் நன்றாக இருக்கிறது தானே? ரெட்ரீட்டின் ரிசல்ட் நன்றாக இருந்ததா? வர்க சேவையின் ரிசல்ட்டும் நன்றாக இருக்கிறது, உள்நாடு, அயல்நாட்டில் ஏதாவது புது கண்டுபிடிப்பு செய்து கொண்டே இருக்கின்றனர், செய்து கொண்டே இருப்பீர்கள். பாரதத்திலும், அயல் நாட்டிலும் சேவைக்கான ஆர்வம் நன்றாக இருக்கிறது. யார் உண்மையான உள்ளத்துடன், சுயநலமற்று சேவையில் முன்னேறிக் கொண்டு செல்கிறார்களோ, அவர்களது கணக்கில் புண்ணியத்தின் கணக்கு மிக நன்றாக சேமிப்பு ஏற்பட்டுக் கொண்டிருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். ஒன்று தனது முயற்சியின் பலனுக்கான கணக்கு, மற்றொன்று திருப்தியாக இருந்து திருப்திபடுத்துவதன் மூலம் ஆசீர்வாதத்தின் கணக்கு, மூன்றாவது யதார்த் யோகயுக்த், யுக்தியுக்த் சேவைக்கு கைமாறாக புண்ணிய கணக்கு சேமிப்பு ஆகிறது. இந்த மூன்று கணக்குகளையும் பாப்தாதா ஒவ்வொருரிடத்திலும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒருவருக்கு மூன்றின் கணக்கிலும் சேமிப்பாகிறது எனில் அதன் அடையாளம் - அவர் சதா எளிய முயற்சியாளர் என்று தானும் அனுபவம் செய்வார், மற்றவர்களுக்கும் அந்த ஆத்மாவின் மூலம் எளிய முயற்சிக்கான தூண்டுதல் தானாகவே கிடைக்கும். அவர் எளிய முயற்சியாளருக்கான சின்னமாக இருப்பார். கடின உழைப்பு செய்ய வேண்டியிருக்காது, தந்தையிடம், சேவையில் மற்றும் குடும்பத்தில் அனைவரிடத்திலும் அன்பு இருப்பதால் இந்த மூன்று வகையான அன்பு கடின உழைப்பிலிருந்து விடுவித்து விடும்.

பாப்தாதா அனைத்து குழந்தைகளிடமும் இந்த சிரேஷ்ட ஆசை தான் வைக்கின்றார் - குழந்தைகள் அனைவரும் எளிய முயற்சியாளர்களாக சதா இருக்க வேண்டும். 63 பிறவிகள் பக்தியில், குழப்பங்களில், அலைவதில் கடின உழைப்பு செய்து விட்டீர்கள். இப்பொழுது இந்த ஒரே ஒரு பிறப்பு கடின உழைப்பிலிருந்து விடுபடுவதற்கான பிறப்பாகும். அதிக காலமாக கடின உழைப்பு செய்து கொண்டே இருந்தீர்கள் எனில் பிறகு இந்த சங்கமயுகத்தின் அன்பின் மூலம் எளிய முயற்சியாளர் என்ற வரதானத்தை எப்பொழுது பெறுவீர்கள்? யுகம் முடிந்து விட்டால் வரதானமும் முடிவடைந்து விடும். எனவே இந்த வரதானத்தை சதா காலத்திற்காக சீக்கிரமாகவே எடுத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு பெரிய காரியமாக இருக்கட்டும், எந்த ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கட்டும், ஒவ்வொரு காரியம், ஒவ்வொரு பிரச்சனையையும் வெண்ணெய்யிலிருந்து நெய் கிடைத்து என்று நீங்கள் கூறுவது போன்று கடந்து விடுங்கள். சில குழந்தைகளின் சிறு சிறு விளையாட்டுக்களை பாப்தாதா பார்க்கின்றார், சிரிக்கவும் செய்கின்றார். குழந்தைகளைப் பார்க்கும் போது கருணையும் வருகிறது. ஏதாவது பிரச்சனை அல்லது ஒரு பெரிய காரியம் முன்னால் வருகிறது எனில் சில நேரங்களில் குழந்தைகளின் முகத்தில் சிறிது பிரச்சனையின் அல்லது காரியத்தின் அலைகள் தென்படுகிறது. சிறிது முகம் மாறி விடுகிறது. என்ன நடந்தது? என்று யாராவது கேட்டால் அதிக காரியம் இருந்தது அல்லவா! என்று கூறுகின்றனர். விக்ன விநாசக்கின் முன் விக்னம் வந்தால் விக்ன விநாசக் என்ற பட்டம் எப்படி கொடுக்க முடியும்? முகத்தில் சிறிது களைப்பு அல்லது சிறிதளவு மூட் மாறுவதற்கான அடையாளம் வரவே கூடாது. ஏன்? அரைகல்பமாக பூஜிக்கப்படும் உங்களது சிலையில் சிறிதளவு களைப்பு அல்லது மூட் மாறும் அடையாளம் தென்படுமா என்ன? உங்களது சிலையே புன்முறுவலுடன் இருக்கும் போது அது யாருடைய சிலை? உங்களுடையது தானே? சைத்தன்யத்தின் நினைவுச் சின்னம் தான் இந்த சிலையாகும். ஆகையால் சிறிதளவும் களைப்பு அல்லது சிடுசிடுப்பு என்பது வரவே கூடாது. சதா புன்முறுவல் முகம் தான் பாப்தாதா மற்றும் அனைவருக்கும் பிடிக்கிறது. ஒருவர் சிடுசிடுவென்று இருக்கின்றார் எனில் அவர் எதிரில் செல்வீர்களா? இப்பொழுது கூறலாமா? வேண்டாமா? என்று யோசிப்பீர்கள். உங்களது ஜடசிலையின் முன் பக்தர்கள் மிகவும் உற்சாகத்துடன் வருகின்றனர், ஆனால் சைத்தன்யத்தில் சுமையானவர்களாக ஆகிவிட்டால் நன்றாக இருக்குமா? இப்பொழுது பாப்தாதா அனைத்து குழந்தைகளின் முகத்தில் சதா பரிஸ்தா ரூபம், வரதானி ரூபம், வள்ளல் ரூபம், கருணை உள்ளம், களைப்பற்ற நிலை, சகஜயோகி அல்லது சகஜ முயற்சியாளர் ரூபம் பார்க்க விரும்புகின்றார். பிரச்சனை இவ்வாறு இருந்ததால் என்று கூறாதீர்கள். பிரச்சனை எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும், ஆனால் ரூபம் புன்முறுவலுடன் இருக்க வேண்டும், சீதளமாக, கம்பீரமாக மற்றும் ரமணீகரமாக இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும். ஒருவர் திடீரென்று வந்து விடுகின்றார், ஆனால் நீங்கள் பிரச்சனையின் காரணத்தினால் அல்லது காரியத்தின் காரணத்தினால் சகஜ முயற்சியாளர் ரூபத்தில் இல்லையெனில் அவர் என்ன பார்ப்பார்? உங்களது அதே சித்திரத்தைத் தான் எடுத்துச் செல்வார். ஒரு மாதமுடையவர்களாக இருந்தாலும், இரண்டு மாதமுடையவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு நேரத்தில் திடீரென்று ஒருவர் உங்களது முகத்தை போட்டோ எடுத்தால் நான் என்ன கூறியிருந்தேனோ அப்படிப்பட்ட சித்திரமாக இருக்க வேண்டும். வள்ளல் ஆகுங்கள். பெறுபவர்கள் அல்ல, வள்ளல். ஒருவர் என்ன வேண்டுமென்றாலும் கொடுக்கட்டும். நல்லதோ அல்லது கெட்டது கொடுத்தாலும், நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் குழந்தைகள் பரந்த உள்ளம் உடையவர்கள், ஒருவேளை கெட்டது உங்களுக்கு கொடுத்தாலும் பரந்த உள்ளத்துடன் கெட்டதை தனக்குள் சுவீகாரம் செய்யாமல் வள்ளலாகி நீங்கள் அவர்களுக்கு சகயோகம் கொடுங்கள், அன்பு கொடுங்கள், சக்தி கொடுங்கள். ஏதாவது குணத்தை தனது ஸ்திதியின் மூலம் பரிசாக கொடுங்கள். அந்த அளவிற்கு உயர்ந்த உள்ளமுடைய மிகப் பெரிய தந்தையின் குழந்தைகளாக இருக்கிறீர்கள். கருணை காட்டுங்கள். உள்ளத்தில் அந்த ஆத்மாவிற்கு அதிகப்படியான அன்பு வெளிப்படுத்துங்கள். அந்த அன்பு சக்தியின் மூலம் அவர் மாறி விட வேண்டும். அந்த அளவிற்கு பரந்த உள்ளமுடையவராக இருக்கிறீர்களா? அல்லது குறுகிய உள்ளமுடையவர்களாக இருக்கிறீர்களா? அனுசரிக்கும் சக்தி இருக்கிறதா? அனுசரியுங்கள். கடலில் எவ்வளவு தான் குப்பைகள் கொட்டினாலும், குப்பை கொட்டுபவர்களுக்கு அது குப்பைக்கு கைமாறாக குப்பை கொடுப்பது கிடையாது. நீங்கள் ஞானக் கடல், சக்தி கடலின் குழந்தைகள், மாஸ்டராக இருக்கிறீர்கள்.

ஆக பாப்தாதா என்ன விரும்புகிறார் என்பதை கேட்டீர்களா? மெஜாரிட்டி குழந்தைகள் இந்த ஆண்டு மாறியே தீர வேண்டும் என்ற இலட்சியம் வைத்திருக்கிறீர்கள். செய்யலாம், யோசிக்கலாம் - இல்லை, செய்தே ஆக வேண்டும். செய்தே ஆக வேண்டுமா? அல்லது அங்கு சென்று யோசிப்பீர்களா? செய்தே ஆக வேண்டும் நினைப்பவர்கள் ஒரு கையினால் கை தட்டுங்கள். (அனைவரும் கை அசைத்தனர்) மிகவும் நன்று. இந்த கையை மட்டும் உயர்த்தினால் போதாது, மனதில் திட சங்கல்பம் என்ற கை உயர்த்த வேண்டும். இந்த (ஸ்தூல) கை உயர்த்துவது மிகவும் எளிது. மனதின் திட சங்கல்பத்தின் கை சதா வெற்றி சொரூபமாக ஆக்குகிறது. என்ன யோசிக்கிறீர்களோ அது நடந்தே தீரும். நேர்மறையானது தான் யோசிப்பீர்கள் அல்லவா! எதிர்மறையானது யோசிக்கவே கூடாது. எதிர்மறையாக யோசிக்கும் வழி சதா காலத்திற்கும் மூடிவிட வேண்டும். மூடுவதற்கு வருகிறதா? அல்லது திறந்து விடுகிறதா? எப்படி இப்பொழுது புயல் வந்தது அல்லவா! அப்போது கதவு தானாகவே திறக்கப்பட்டு விட்டது, அவ்வாறு ஏற்படுவது இல்லை தானே? மூடி விட்டு வந்ததாக நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் புயல் திறந்து விடுகிறது, இவ்வாறு தளர்வாக ஆக்கி விடக் கூடாது. நல்லது.

இரட்டை அயல்நாட்டினரின் உற்சவம் மிகவும் நன்றாக இருந்தது. (10 ஆண்டுகளுக்கும் மேலாக ஞானத்தில் இருக்கும் ஏறத்தாழ 400 இரட்டை அயல்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு கௌரவிக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது) நன்றாக இருந்ததா? யார் கொண்டாடினீர்கள் மற்றும் பிடித்திருந்ததோ அவர்கள் கை உயர்த்துங்கள். பாண்டவர்களும் இருக்கின்றனர். இதன் மகத்துவம் என்ன? கொண்டாடுவதன் மகத்துவம் என்ன? கொண்டாடுவது என்றால் ஆவது. சதா இவ்வாறு கிரீடதாரி, சுய முயற்சி மற்றும் சேவைக்கான பொறுப்பு - என்ன கூறுவது, மகிழ்ச்சி என்று தான் கூறலாம், சேவையின் மகிழ்ச்சி கொண்டாடுவது என்ற கிரீடம் தான் அணிந்திருக்க வேண்டும். மேலும் தங்க தோடு எதற்காக அணிந்திருக்கிறீர்கள்? சதா தங்க உலக ஸ்திதி, சில்வர் (வெள்ளி) அல்ல, தங்கம். மேலும் இரண்டு இரண்டு மாலைகளும் அணிந்திருந்தீர்கள். எந்த இரண்டு மாலை அணிவீர்கள்? ஒன்று சதா தந்தையின் கழுத்து மாலை. ஒருபோதும் கழுத்திலிருந்து நீங்கி விடக் கூடாது, சதா கழுத்தில் இருக்க வேண்டும். மற்றொன்று சதா சேவையின் மூலம் மற்றவர்களையும் தந்தையின் கழுத்து மாலையாக ஆக்க வேண்டும். இது இரட்டை மாலையாகும். ஆக கொண்டாடுபவர்களுக்கும் நன்றாக இருந்தது, பார்ப்பவர்களுக்கும் நன்றாக இருந்தது. ஆக இந்த உற்சவம் கொண்டாடுவதில் சதா கால உற்சவத்தின் இரகசியம் கலந்திருக்கிறது. கூடவே மேலும் ஊக்கம்-உற்சாகத்தை அதிகப்படுத்துவதையும் கொண்டாடுங்கள். அனைவரின் அனுபவத்தையும் பாப்தாதா பார்த்து விட்டார். நல்ல அனுபவம் இருக்கிறது. அனைவரின் முகத்திலும் குஷி மற்றும் போதை தென்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வளவு தான், இவ்வாறு தனது சக்திசாலியான, புன்முறுவலாக, ரமணீகரமான மற்றும் கம்பீர சொரூபம் சதா வெளிப்படையாக வைத்துக் கொண்டே முன்னேறுங்கள். ஏனெனில் இன்றைய கால சூழ்நிலையில் கேட்பவர்கள் அதிகம்பேர், புரிந்து கொள்பவர்கள் மிகவும் குறைவு, பார்த்து அனுபவம் செய்பவர்கள் அதிகமாக இருக்கின்றனர். உங்களது முகத்தின் மூலம் தந்தையின் அறிமுகம், கேட்பதற்குப் பதிலாக தென்பட வேண்டும். நன்றாக செய்திருக்கிறீர்கள். பாப்தாதாவும் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றார். இந்த ஆண்டு அல்லது இந்த சீசனை விசேமாக உற்சவமான சீசனாக கொண்டாடினீர்கள். ஒவ்வொரு நேரமும் ஒரே மாதிரியாக இருக்காது.

(டிரில்) அனைவரிடத்திலும் ஆளுமை சக்தி இருக்கிறதா) கர்மேந்திரியங்களின் மீது எப்போது தேவையோ அப்போது ஆளுமை செய்ய முடிகிறதா? சுயராஜ்ய அதிகாரி ஆகியிருக்கிறீர்களா? யார் சுயராஜ்ய அதிகாரிகளோ அவர்களே விஷ்வ இராஜ்ய அதிகாரி ஆவார்கள். எப்போது வேண்டுமோ, எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருக்கட்டும், ஆனால் மனம்-புத்திக்கு ஸ்டாப் என்று கட்டளையிடுங்கள், முடிகிறதா? அல்லது நேரம் தேவைப்படுகிறதா? இந்த பயிற்சி ஒவ்வொருவரும் முழு நாளும் இடையிடையில் செய்வது அவசியமாகும். மேலும் எந்த நேரத்தில் மனம்-புத்தி பிசியாக இருக்கிறதோ, அந்த நேரத்திலும் ஒரு விநாடியில் நிறுத்த (ஸ்டாப்) விரும்பிகிறீர்கள் எனில் செய்ய முடிகிறதா? ஸ்டாப் ஆவதில் 3 நிமிடம், 5 நிமிடம் ஏற்படுகிறதா என்று யோசியுங்கள். இந்த பயிற்சி கடைசியில் மிகவும் பயன்படும். இதன் ஆதாரத்தில் நேர்மையுடன் தேர்ச்சி பெற முடியும். நல்லது

சதா மனதில் ஆர்வம்-உற்சாகத்தின் உற்சவம் கொண்டாடக் கூடிய அன்பான ஆத்மாக்களுக்கு, சதா வைரத்திற்கு சமமான வாழ்க்கையின் அனுபவம் செய்யக் கூடியவர்களுக்கு, அனுபவ அதாரிட்டியுடைய விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா தனது முகத்தின் மூலம் தந்தையின் அறிமுகம் கொடுக்கக் கூடிய தந்தையை வெளிப்படுத்தக் கூடிய சேவாதாரி ஆத்மாக்களுக்கு, சதா கம்பீரம் மற்றும் ரமணீகரம் இரண்டையும் சமமாக வைத்திருக்கக் கூடிய அனைவரின் ஆசிர்வாதத்திற்கும் அதிகாரி ஆத்மாக்களுக்கு, இவ்வாறு நாலாபுறங்களிலும் உள்ள உள்நாடு-வெளிநாட்டு குழந்தைகளுக்கு சிவராத்திரியின் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். கூடவே திலாராம் (மனதை கொள்ளைக் கொண்ட) பாப்தாதாவின் உள்ளப்பூர்வமான, அன்பான அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

வரதானம்:
தனது இராஜ்ய அதிகாரி அல்லது பூஜ்ய சொரூபத்தின் நினைவின் மூலம் வள்ளலாகி கொடுக்கக் கூடிய அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்தவர் ஆகுக.

நான் பூஜ்ய ஆத்மா, மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடிய வள்ளல், பெறுபவன் அல்ல, கொடுப்பவன் என்ற நினைவில் சதா இருங்கள். எவ்வாறு தந்தை உங்கள் அனைவருக்கும் தானாகவே கொடுத்தார், அவ்வாறு நீங்களும் மாஸ்டர் வள்ளல் ஆகி கொடுத்துக் கொண்டே செல்லுங்கள், கேட்காதீர்கள். தனது இராஜ்ய அதிகாரி அல்லது பூஜ்ய சொரூபத்தின் நினைவில் இருங்கள். இன்று வரை உங்களது ஜட சிலையிடம் சென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், எங்களை காப்பாற்றுங் கள் என்று கூறுகிறார்கள். ஆக நீங்கள் காப்பாற்றக் கூடியவர்கள், காப்பாற்றுங்கள்-காப்பாற்றுங்கள் என்று கூறக் கூடியவர்கள் அல்ல. ஆனால் வள்ளல் ஆவதற்கு நினைவின் மூலம், சேவையின் மூலம், சுப பாவனையின் மூலம், சுப விருப்பத்தின் மூலம் அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்தவர் ஆகுங்கள்.

சுலோகன்:
நடத்தை மற்றும் முகத்தின் மகிழ்ச்சி தான் ஆன்மீக அழகின் அடையாளமாகும்.