12-02-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய மோகத்தின் கயிறுகள் இப்பொழுது அறுபட்டு விட வேண்டும். ஏனெனில் இந்த முழு உலகம் விநாசம் ஆகப் போகிறது. இந்த பழைய உலகத்தில் எந்த ஒரு பொருளின் மீதும் விருப்பம் இல்லாதிருக்கட்டும்.

கேள்வி:
எந்த குழந்தைகளுக்கு ஆன்மீக போதை ஏறியபடி இருக்குமோ? அவர்களது (டைட்டில்) பட்டப் பெயர் என்னவாக இருக்கும்? எந்த குழந்தைகளுக்கு போதை ஏறுகிறது?

பதில்:
ஆன்மீக போதையில் இருக்கும் குழந்தைகளுக்கு மஸ்த் கலந்தர் என்று கூறப்படுகிறது. அவர்களே கலங்கீதர் (தவறிழைக்காதோர்) ஆகிறார்கள். அவர்களுக்கு இராஜ்யம் ஆளும் போதை ஏறி இருக்கும். இப்பொழுது நாம் ஏழையிலிருந்து செல்வந்தர் ஆகிறோம் என்பது புத்தியில் இருக்கும். யார் ருத்ர மாலையில் கோர்க்கப் படக் கூடியவர்களோ அவர்களுக்கு போதை ஏறும். நாம் இப்பொழுது வீடு செல்ல வேண்டும். பிறகு புதிய உலகத்தில் வர வேண்டும் என்ற நிச்சயம் யாருக்கு இருக்கிறதோ அந்த குழந்தைகளுக்குப் போதை இருக்கும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளிடம் ஆன்மீக உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இதற்கு ஆத்மாக்களுக்கான ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது. ஞானக் கடல் பரமாத்மா ஆவார். மனிதர்கள் ஒரு பொழுதும் ஞானக் கடல் ஆக முடியாது. மனிதர்கள் பக்தியின் கடல் ஆவார்கள். எல்லோருமே மனிதர்கள் தான். யார் பிராமணர்கள் ஆகிறார்களோ அவர்கள் ஞானக் கடலிட மிருந்து ஞானம் பெற்று மாஸ்டர் ஞானக் கடல் ஆகி விடுகிறார்கள். பிறகு தேவதைகளிடம் பக்தியும் இருக்காது. ஞானமும் இருக்காது. தேவதைகளுக்கு இந்த ஞானம் தெரியாது. ஞானக் கடல் ஒரே ஒரு பரமபிதா பரமாத்மா ஆவார். எனவே அவரைத் தான் வைரம் போல என்று கூறுவார்கள். அவரே வந்து சோழியிலிருந்து வைரமாக, கல் புத்தியிலிருந்து தங்க புத்தியாக ஆக்குகிறார். மனிதர்களுக்கு எதுவுமே தெரியாது. தேவதைகள் தான் மீண்டும் வந்து மனிதர்களாக ஆகிறார்கள். ஸ்ரீமத் மூலமாக. தேவதை களானார்கள். அரைக் கல்பத்திற்கு அங்கு எந்த ஒரு வழியின் (அறிவுரை) அவசியமும் இல்லை. இங்கோ ஏராளமான குருக்களிடம் அறிவுரைப் பெற்றுக் கொண்டே இருப்பார்கள். இப்பொழுது சத்குருவின் ஸ்ரீமத் கிடைக்கிறது என்பதை தந்தை புரிய வைத்துள்ளார். கால்சே (சீக்கியர்களில் பிரிவு) ஜனங்கள் சத்குரு அகால் என்று கூறுகிறார்கள். அதற்கும் பொருள் தெரியாமல் உள்ளார்கள். சத்குரு அகால மூர்த்தி அதாவது சத்கதி அளிக்கக் கூடிய அகால மூர்த்தி என்று அழைக்கவும் செய்கிறார்கள். அகால மூர்த்தி என்று பரமபிதா பரமாத்மாவிற்குத் தான் கூறப்படுகிறது. சத்குருவிற்கும் பிற குருவிற் கிடையேயும் இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. எனவே அது பிரம்மாவின் பகல் மற்றும் இரவு என்று கூறி விடுகிறார்கள். பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு எனவே அவசியம் பிரம்மா புனர் ஜென்மம் எடுக்கிறார் என்பார்கள். பிரம்மாவே இந்த விஷ்ணு என்ற தேவதையாக ஆகிறார். நீங்கள் சிவபாபாவிற்கு மகிமை செய்கிறீர்கள். அவரது வைரம் போன்ற ஜென்மம் ஆகும்.

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இல்லற விவகாரங்களில் இருந்தபடியே தூய்மை ஆகிறீர்கள். நீங்கள் தூய்மையாக ஆகி இந்த ஞானத்தை தாரணை செய்ய வேண்டும். குமாரி களுக்கோ எந்த பந்தனமும் இல்லை. அவர்களுக்கு தாய் தந்தை அல்லது சகோதர சகோதரியின் நினைவு மட்டும் இருக்கும். பிறகு புகுந்த வீடு சென்றவுடன் இரண்டு பரிவாரம் (குடும்பம்) ஆகி விடுகிறது. இப்பொழுது தந்தை அசரீரி ஆகி விடுங்கள் என்று உங்களுக்குக் கூறுகிறார். இப்பொழுது நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களுக்கு தூய்மை ஆவதற்கான யுக்தியும் கூறுகிறேன். பதீத பாவனர் நான் தான் ஆவேன். நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள் என்றால் இந்த யோக அக்னியில் உங்களுடைய பல பிறவிகளின் பாவங் கள் சாம்பலாகி விடும் என்ற உத்தரவாதம் நான் கொடுக்கிறேன். எப்படி பழைய தங்கத்தை நெருப்பில் காய்ச்சுவதால் அதிலிருந்து துரு நீங்கி விடுகிறது. உண்மையான தங்கம் இருந்து விடுகிறது. இதுவும் யோக அக்னி ஆகும். இந்த சங்கமத்தில் தான் பாபா இந்த இராஜ யோகத்தைக் கற்பிக்கிறார். எனவே அவருக்கு மிகுந்த மகிமை உள்ளது. பகவான் கற்பித்திருந்த இராஜ யோகத்தை அனைவரும் கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். வெளிநாட்டிலிருந்து கூட சந்நியாசிகள் நிறைய பேரை அழைத்து வருகிறார்கள். இவர்கள் சந்நியாசம் செய்துள்ளார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இப்பொழுது சந்நியாசிகளோ நீங்களும் ஆவீர்கள். ஆனால் எல்லையில்லாத சந்நியாசம் பற்றி யாருக்குமே தெரியாது. எல்லையில்லாத சந்நியாசமோ ஒரு தந்தை தான் கற்பிக்கிறார். இந்த பழைய உலகம் முடியப் போகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த உலகத்தின் எந்த ஒரு பொருளிலும் நமக்கு விருப்பம் இருப்பதில்லை. குறிப்பிட்ட இன்னார் சரீரம் விட்டார். பாகத்தை நடிப்பதற்காக போய் மற்றொரு சரீரம் எடுக்கின்றார். நாம் பின் ஏன் அழ வேண்டும்? மோகத்தின் கயிறுகள் நீங்கி விடுகின்றன. நமது சம்மந்தம் இப்பொழுது புது உலகத்துடன் இணைந்துள்ளது. இப்பேர்ப்பட்ட குழந்தைகள் பக்குவமான "மஸ்த் கலங்கீதர். போதையுடைய, கிரீடம் அணிந்தவர் ஆகிறார்கள். உங்களிடம் இராஜ்யம் பெறும் போதை உள்ளது. நாம் போய் இந்த கலங்கீதர் (கிரீடம் அணிந்தவர்) ஆகப் போகிறோம் என்ற போதை பாபாவிடமும் உள்ளது அல்லவா? ஏழையிலிருந்து செல்வந்தர் ஆகி விடுவோம். உள்ளுக்குள் போதை ஏறி உள்ளது. எனவே மஸ்த் கலந்தர் போதை யுடைய துறவி என்று கூறுகிறார்கள். இவரது சாட்சாத்காரம் கூட செய்கிறார்கள். எனவே எப்படி இவருக்கு போதை ஏறி உள்ளதோ அப்படி உங்களுக்கும் ஏற வேண்டும். நீங்களும் ருத்ர மாலையில் கோர்க்கப்படுபவர்கள் ஆவீர்கள். யாருக்கு பக்குவமான நிச்சயம் ஏற்பட்டு விடுகிறதோ அவர்களுக்கு போதை ஏறும். ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது வீடு செல்ல வேண்டும். பிறகு புது உலகத்தில் வருவோம். இந்த நிச்சயத்துடன் யார் இவரையும் (பிரம்மா பாபா) பார்க்கிறார் களோ அவர்களுக்கு குழந்தையாக (ஸ்ரீ கிருஷ்ணர்) இவர் தென்படுகிறார். எவ்வளவு அழகாக இருக்கிறார். கிருஷ்ணரோ இங்கு இல்லை. அவருக்குப் பின்னால் எவ்வளவு பிரமித்துப் போகிறார் கள். ஊஞ்சல் அமைத்து அவருக்கு பாலூட்டுகிறார்கள். அது ஜட சித்திரம் ஆகும். இதுவோ உண்மை அல்லவா? நான் பாலகனாக ஆகப் போகிறேன் என்று இவருக்கும் நிச்சயம் உள்ளது. பெண் குழந்தைகளாகிய (சகோதரிகள்) நீங்கள் கூட திவ்ய திருஷ்டியில் சிறிய குழந்தையைப் பார்க்கிறீர்கள். இந்த கண்களாலோ பார்க்க முடியாது. ஆத்மாவிற்கு திவ்ய திருஷ்டி கிடைக்கும் பொழுது சரீர உணர்வு இருப்பதில்லை. அச்சமயத்தில் தங்களை மகாராணி மற்றும் அவரை குழந்தை என்றும் நினைப்பார்கள். இந்த சாட்சாத்காரம் கூட இச்சமயத்தில் நிறைய பேருக்கு ஆகிறது. வெண்ணிற ஆடை அணிந்தவரின் சாட்சாத்காரம் கூட அநேகருக்கு ஆகிறது. பிறகு அவருக்கு கூறுகிறார், நீங்கள் இவரிடம் செல்லுங்கள். ஞானம் எடுங்கள். பிறகு நீங்கள் இவர் போல இளவரசர் ஆகி விடுவீர்கள். இது மாயாஜால அற்புதம் அல்லவா? வியாபாரம் கூட மிகவும் நன்றாக செய்கிறார். சோழியைப் பெற்று வைரம், முத்துக்கள் அளிக்கிறார். நீங்கள் வைரம் போல ஆகிறீர்கள். உங்களை சிவபாபா வைரம் போல ஆக்குகிறார். எனவே அவருக்குத் தான் நன்றி கூற வேண்டும். மனிதர்கள் புரியாத காரணத்தால் மந்திரஜாலம் என்று கூறி விடுகிறார்கள். யார் ஆச்சரியப்படும் வகையில் ஓடிப் போகிறவர்களாக ஆகி விடுகிறார்களோ அவர்கள் போய் தப்பும் தவறுமாக கூறுகிறார்கள். இது போல நிறைய பேர் துரோகி ஆகி விடுகிறார்கள். இப்பேர்ப்பட்ட துரோகி ஆகுபவர்கள் உயர்ந்த பதவியை அடைய முடியாது என்ற கூறப்படுகிறது. இங்கோ சத்திய மான தந்தை இருக்கிறார் அல்லவா? இதுவும் இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். மனிதர்களோ அவர் (யுகே யுகே) ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் வருகிறார் என்று கூறி விடுகிறார்கள். நல்லது. 4 யுகங்கள் தானே பிறகு 24 அவதாரங்கள் என்று எப்படி கூற முடியும்? பிறகு அணு அணுவிலும், கல், மண் எல்லாவற்றிலும் பரமாத்மா இருக்கிறார் என்கிறார்கள். எனவே எல்லோரும் பரமாத்மா ஆகி விட்டார்கள். சோழியிலிருந்து வைரம் போல ஆக்கக் கூடிய என்னை கல், மண்ணில் தள்ளி விட்டீர்கள் என்று தந்தை கூறுகிறார். சர்வவியாபி ஆவார் என்றால் எல்லா வற்றிலும் வியாபித்திருக்கிறார் - பிறகோ எந்த மதிப்பும் இல்லை. எப்படி எனக்கு அபகாரம் செய்கிறார்கள். இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது என்று பாபா கூறுகிறார். இது போல ஆகி விடும் பொழுது தான் மீண்டும் தந்தை வந்து உபகாரம் செய்கிறார். அதாவது மனிதனை தேவதையாக ஆக்குகிறார்.

உலகத்தினுடைய சரித்திரம் பூகோளம் மீண்டும், திரும்ப நடை பெறும். சத்யுகத்தில் மீண்டும் இந்த லட்சுமி நாராயணர் தான் வருவார்கள். அங்கு பாரதம் மட்டுமே இருக்கும். ஆரம்பத்தில் மிகவும் குறைந்த தேவதைகள் இருப்பார்கள். பிறகு எண்ணிக்கை அதிகமாகி 5 ஆயிரம் வருடங்களில் எவ்வளவு பேர் ஆகி விட்டார்கள். இப்பொழுது இந்த ஞானம் வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. மற்றது பக்தி ஆகும். தேவதைகளின் படங்களுக்கு மகிமை பாடுகிறார்கள். இவர்கள் (சைதன்யமாக) உயிருள்ளவர்களாக இருந்தார்கள். பிறகு எங்கு சென்றார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. படங்களுக்கு பூஜை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் கூட தமோபிரதானமாக ஆகி பிறகு சதோபிரதானமாக ஆக வேண்டி உள்ளது. இது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. அப்பேர்ப்பட்ட தமோபிரதான புத்தியை மீண்டும் சதோபிர தானமாக ஆக்குவது தந்தையினுடைய வேலை ஆகும். இந்த லட்சுமி நாராயணர் வாழ்ந்து சென்றுள்ளார்கள். எனவே இவர்களுக்கு மகிமை உள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஒருவரே ஆவார். மற்றபடி எல்லோரும் புனர் ஜென்மம் எடுத்துக் கெண்டே இருக்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை தான் அனைவருக்கும் முக்தி ஜீவன் முக்தி அளிக்கிறார். அவர் வராமல் இருந்திருந்தால் இன்னுமே ஒரு பைசாவுக்குக் கூட மதிப்பற்று தமோபிரதானமாக ஆகி இருப்பார்கள். இவர்கள் ஆட்சி புரியும் பொழுது மிகுந்த மதிப்புடையவர்களாக இருந்தார்கள். அங்கு ஒன்றும் பூஜை ஆகியவை செய்து கொண்டு இருக்கவில்லை. பூஜிக்க தக்க தேவதைகள் தான் பூசாரி ஆகி விட்டார்கள். வாம மார்க்கத்தில் விகாரி ஆகி விட்டார்கள். இவர்கள் சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. பிராமணர்களாகிய உங்களிடை யேயும் இந்த விஷயங்களை வரிசைக்கிரமமாகப் புரிந்துள்ளீர்கள். சுயம் தாங்களே முழுமையாகப் புரிந்திருக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு என்ன புரிய வைக்க முடியும். பெயர் பிரம்மா குமார், குமாரி என்பதாகும் - புரிய வைக்க முடியவில்லை என்றால் நஷ்டம் ஏற்படுத்தி விடு கிறார்கள். எனவே நாங்கள் பெரிய சகோதரியை அழைக்கிறோம், அவர் உங்களுக்குப் புரிய வைப்பார் என்று கூற வேண்டும். பாரதம் தான் வைரம் போல இருந்தது. இப்பொழுது சோழி போல உள்ளது. ஏழையான பாரதத்தை தலையின் கிரீடமாக யார் ஆக்குவது? லட்சுமி நாராயணர் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்? கணக்கு கூறுங்கள்? அவர்களால் கூற முடியாது. அவர்கள் பக்தியின் கடல் ஆவார்கள். அதே போதை ஏறி உள்ளது. நீங்கள் ஞானக் கடல் ஆவீர்கள். அவர்களோ சாஸ்திரங் களைத் தான் ஞானம் என்று நினைக்கிறார்கள். சாஸ்திரங்களில் பக்தியின் பழக்க வழக்கங்கள் உள்ளன என்று தந்தை கூறுகிறார். எந்த அளவு உங்களுக்குள் ஞானத்தின் பலம் நிரம்பிக் கொண்டு போகுமோ அந்தளவு நீங்கள் காந்தம் போல, ஆகி விடுவீர்கள். பிறகு அனைவருக்கும் கவர்ச்சி ஏற்படும். இப்பொழுது இல்லை. இருந்தாலும் அவரவர் யோகத்திற்கேற்ப அவரவர் சக்திக்கேற்ப அந்த அளவு தந்தையை நினைவு செய்கிறீர்கள். எப்பொழுதுமே தந்தையை நினைவு செய்கிறீர்கள் என்பதல்ல. பிறகோ இந்த சரீரம் கூட இருக்காது. இப்பொழுதோ அநேகருக்கு செய்தி அளிக்க வேண்டி உள்ளது. செய்தி தூதுவர் ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தான் தூதர் ஆகிறீர்கள். வேறு யாரும் ஆவதில்லை. கிறிஸ்து ஆகியோர் வந்து தர்ம ஸ்தாபனை செய்கிறார்கள். அவர்களுக்கு பைகம்பர் என்று கூறப்பட மாட்டாது. கிறிஸ்துவ தர்மத்தை ஸ்தாபனை செய்தார். வேறு ஒன்றுமே செய்யவில்லை. அவர் யாரோ ஒருவருடைய சரீரத்தில் வந்தார். பின் அவருக்கு பின்னால் மற்றவர்கள் வருகிறார்கள். இங்கோ இந்த ராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நாம் என்னவாக ஆகி விடுவோம். இந்த இந்த விகர்மம் நாம் செய்தோம் .என்பதெல்லாம் இனி முன்னால் போகப்போக உங்கள் எல்லோருக்குமே சாட்சாத்காரம் ஆகும். சாட்சாத்காரம் ஆவதில் தாமதம் ஏற்படுவதில்லை. காசி கல்வட் என்று சொல்வார்கள். ஒரேயடியாக நின்று கொண்டு கிணற்றில் குதித்து விடுவார்கள். இப்பொழுது அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதனால் நாங்கள் முக்தி அடைவோம் என்று நினைக்கிறார்கள். முக்தியை யாருமே அடைய முடியாது என்று தந்தை கூறுகிறார். சிறிது நேரத்திற்குள் அநேக பிறவிகளின் தண்டனை கிடைத்து விட்டது போல ஆகி விடுகிறது. பிறகு புதியதாக கணக்கு வழக்கு ஆரம்பமாகிறது. திரும்பியோ யாருமே போக முடியாது. எங்கு போய் இருப்பார்கள். ஆத்மாக்களின் பரம்பரையே கெட்டு போய் விடுமே. வரிசைக்கிரமமாக வருவார்கள். பிறகு செல்வார்கள். குழந்தைகளுக்கு சாட்சாத்காரம் ஆகிறது. அதனால் தான் இந்த படங்கள் ஆகியவற்றை தயாரிக்கிறார்கள். 84 பிறவிகளின் முழு சிருஷ்டி சக்கரத்தின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் உங்களுக்குக் கிடைத்துள்ளது. பிறகு உங்களிடையேயும் வரிசைக் கிரமமாக உள்ளார்கள். ஒரு சிலர் நிறைய மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைகிறார்கள். ஒரு சிலருக்கு குறைவான மதிப்பெண்கள். 100 மதிப்பெண்களோ யாருமே ஆவதில்லை. ஒரே ஒரு தந்தைக்குத் தான் 100. அப்படி வேறு யாரும் ஆக முடியாது. சிறிது சிறிது வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. ஒன்று போல ஆகவும் முடியாது. எத்தனை ஏராளமான மனிதர்கள் உள்ளார்கள். அனைவருடைய தோற்றங்களும் தனித் தனியானது ஆகும். ஆத்மாக்கள் எல்லோரும் எவ்வளவு சிறிய பிந்துவாக இருக்கிறார்கள். மனிதர்கள் எவ்வளவு பெரிய பெரியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தோற்றங்கள் ஒருவர் போல மற்றவரது இருக்க முடியாது. எத்தனை ஆத்மாக்கள் இருக்கிறார் களோ அவ்வளவே மீண்டும் இருப்பார்கள். அப்பொழுது தானே அங்கு வீட்டில் இருப்பார்கள். இதுவும் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எதுவும் வித்தியாசம் ஏற்பட முடியாது. ஒரு முறை திரைப் படம் பிடித்து விட்டால் (ஷுட்டிங்) பின் அதையே தான் மீண்டும் பார்ப்பார்கள். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயும் நாம் இவ்வாறே சந்தித்திருந்தோம் என்று நீங்கள் கூறுவீர்கள். ஒரு வினாடி கூட குறைவாகவோ அதிகமாகவோ ஆக முடியாது. நாடகம் ஆகும் அல்லவா? யாருக்கு இந்த படைப்பு மற்றும் படைப்பு கர்த்தா பற்றிய ஞானம் புத்தியில் உள்ளதோ அவர்களுக்கு சுயதரிசன சக்கரதாரி என்று கூறப்படுகிறது. தந்தையிடமிருந்து தான் இந்த ஞானம் கிடைக்கிறது. மனிதர்கள் மனிதர்களுக்கு இந்த ஞானத்தை அளிக்க முடியாது. மனிதர்கள் பக்தியைக் கற்பிக்கிறார்கள். ஞானத்தை ஒரு தந்தை கற்பிக்கிறார். ஞானக்கடலோ ஒரே ஒரு தந்தை ஆவார். பிறகு நீங்கள் ஞான நதிகள் ஆகிறீர்கள். ஞானக்கடல் மற்றும் ஞான நதிகளிலிருந்து தான் முக்தி ஜீவன் முக்தி கிடைக்கிறது. அதுவோ தண்ணீரின் நதிகள் ஆகும். தண்ணீரோ எப்பொழுதும் இருக்கவே இருக்கிறது. ஞானம் கிடைப்பதே சங்கமத்தில் தான். தண்ணீரின் நதிகளோ பாரதத்தில் ஓடிக் கொண்டு தானிருக்கின்றன. அடுத்து, இத்தனை எல்லா நகரங்களும் அழிந்து போய் விடும். கண்டங்களே இருக்காது. மழையோ பொழிந்து கொண்டே இருக்கும். தண்ணீர் தண்ணீரில் போய் கலக்கும். இப்படித்தான் பாரதம் இருக்கும்.

இப்பொழுது உங்களுக்கு முழு ஞானம் கிடைத்துள்ளது. இது ஞானம் ஆகும். மற்றது பக்தி ஆகும். வைரம் போன்றவர் ஒரே ஒரு சிவபாபா ஆவார். அவருடைய ஜெயந்தி கொண்டாடப் படுகிறது. சிவபாபா என்ன செய்தார் என்று கேட்க வேண்டும். அவரோ வந்து தூய்மை இல்லா தவர்களை தூய்மையாக ஆக்குகிறார். முதல் இடை கடை பற்றிய ஞானம் கூறுகிறார். அதனால் தான் ஞான சூரியன் வெளிப்பட்டார் என்று பாடப் படுகிறது. ஞானத்தினால் பகல் பக்தியினால் இரவு ஆகிறது. நாம் 84 பிறவிகள் முடித்து விட்டுள்ளோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது பாபாவை நினைவு செய்வதால் தூய்மையாக ஆகி விடுவீர்கள். பிறகு சரீரமும் தூய்மையானதாகக் கிடைக்கும். நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக தூய்மை யாகிறீர்கள். எவ்வளவு சகஜமான விஷயம் ஆகும். முக்கியமான விஷயம் நினைவினுடையது ஆகும். நிறைய பேருக்கு தங்களை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்வது கூடத் தெரிவதில்லை. பிறகும் குழந்தைகள் ஆகியுள்ளார்கள், பிறகும் கூட சொர்க்கத்தில் அவசியம் வருவார்கள். இச்சமயத்தின் முயற்சிக்கேற்பவே இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் மாஸ்டர் ஞான கடல் ஆவோம் என்ற இதே போதையில் எப்பொழுதும் இருக்க வேண்டு சுயம் தன்னில் ஞானத்தின் சக்தியை நிரப்பி, காந்தம் ஆக வேண்டும். ஆன்மீகத் தூதர் ஆக வேண்டும்.

2. சத்குருவான தந்தைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் எந்த செயலும் செய்யக் கூடாது. என்ன ஆனாலும் சரி, ஒரு பொழுதும் அழக் கூடாது.

வரதானம்:
சத்தியத்தின் தன்மையின் அஸ்திவாரத்தின் மூலம் நடத்தை மற்றும் முகத்தினால் தெய்வீகத் தன்மையின் அனுபவத்தை செய்ய வைக்கக்கூடிய உண்மைக்கு தலைவன் (சத்யவதி) ஆகுக.

உலகத்திலுள்ள பலர் தன்னை சத்யமானவர் என்று கூறிக்கொள்கின்றனர், ஆனால் சம்பூரண உண்மை என்பது தூய்மையின் ஆதாரத்தில் இருக்கிறது. தூய்மைத் தன்மை இல்லையென்றால் எப்பொழுதும் உண்மையாக இருக்க முடியாது. உண்மை தன்மையின் ஆதாரம் தூய்மையாகும், மற்றும் சத்தியத்தன்மையின் நிரூபணம் முகம் மற்றும் நடத்தையில் தெய்வீகத் தன்மையாகும். தூயமையின் ஆதாரத்தில் சத்யத்தன்மையின் சொரூபம் இயல்பாகவும், எளிதாகவும் ஏற்பட்டு விடும். ஆத்மா மற்றும் உடல் இரண்டும் தூய்மையாக இருக்கும் பொழுது தான் சம்பூரண சத்யவதி என்று அதாவது தெய்வீகத் தன்மை என்று சொல்ல முடியும்.

சுலோகன்:
எல்லைக்கு அப்பாற்பட்ட சேவையில் பிஸியாக இருந்தால் எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கியம் தானாகவே வந்துவிடும்.