28.04.24    காலை முரளி            ஓம் சாந்தி  23.10.99      பாப்தாதா,   மதுபன்


காலத்தின் அழைப்பு - வழங்குபவராக இருங்கள் !

இன்று சர்வ சிரேஸ்ட பாக்ய விதாதா, சர்வ சக்திகளின் வள்ளலான பாப்தாதா, நாலாபுறமும் உள்ள குழந்தைகளைப் பார்த்து மனம் மகிழ்கின்றார். மதுபனில் நேரில் இருப்பினும், உள் நாடு அயல்நாடு எங்கேயிருப்பினும் நினைவில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பவர்கள், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் இதயத்தால் எதிரில் இருக்கின்றீர்கள். அந்த அனைத்து குழந்தை களையும் பார்த்து பாப்தாதா மனமகிழ்ச்சியடைகின்றார். நீங்கள் அனைவரும் கூட மனம் மகிழ்கின்றனர், பாப்தாதாவும் மனம் மகிழ்வு அகிலம் முழுவதும் உள்ள துக்கத்தை விலக்க வல்லது. இந்த உளப்பூர்வமான மகிழ்வென்பது ஆத்மாக்களுக்கு தந்தையின் அனுபவத்தை செய்விப்பது, ஏனெனில் தந்தையும் அனைத்து ஆத்மாக்களின் சேவகனாக உள்ளார், குழந்தைகளான நீங்களும் தந்தையுடன் சேவையில் துணையாக உள்ளீர்கள். துணை தானே ! தந்தையுடன் துணையாகி உலக துயரத்தை சுகமாக மாற்ற நல்லதொரு வழி காட்டும் சேவையில் சதா இணைந்துள்ளீர்கள். சதா சேகனல்லவா. நீங்கள் நான்கு மணி நேரமோ, ஆறு மணி நேரம் மட்டுமோ சேவை செய்பவரல்ல. ஒவ்வொரு நொடிப் பொழுதும் சேவையெனும் மேடையில் பரமாத்மாவுடன் இணைந்து பணியாற்றுபவர்கள். நிரந்தர நினைவைப் போன்றே சேவையும் நிரந்தரமாக செய்பவர்கள் தன்னை நிரந்தர சேவகனாக அனுபவம் செய்கின்றீர்களா? அல்லது எட்டு மணி நேரமோ பத்து மணி நேரம் மட்டுமே சேவை செய்பவராக உணர்கின்றீர்களா? இந்த பிராமணப் பிறவியே நினைவு மற்றும் சேவைக்காகத்தான். வேறென்ன செய்ய வேண்டும்? இது மட்டுமே போதும். ஒவ்வொரு சுவாசமும் ஒவ்வொரு நொடியும் நினைவும், சேவையும் இணைந்திருப்பதாகும். சேவைக்கான நேரம் வேறு, நினைவிற்க்கான நேரம் வேறானதா? இல்லை தானே. நல்லது சமநிலை? 100 சதவீதம் சேவையெனில் அதே 100 சதவீதம் நினைவும் உள்ளதா? இரண்டும் சமநிலை உள்ளதா? வேறுபாடு உள்ளதா? கர்மயோகியின் அர்த்தமே கர்மமும், நினைவும், சேவையும், நினைவும் இரண்டும் சமநிலை வேண்டும். மாறாக சில நேரம் நினைவு அதிகமாக, சேவை குறைவாக சிலநேரம் சேவை அதிகமாக நினைவு குறைவாக என்பது கூடாது. மேடையில் எப்படி உடலும், உயிரும் இணைந்தே செயல்படுகிறேதா அவ்வாறே செயல்பட வேண்டும். பிரிந்திருக்குமா? அவ்வாறே நினைவும், சேவையும் இணைந்திருக்க வேண்டும். நினைவு என்பது தந்தையைப் போன்று தன்னைப் பற்றிய சுய மரியாதையில் இருப்பது. தந்தை நினைவிருக்கும்போது இயல்பாகவே சுயமரியாதையும் நினைவிருக்கும். சுய மரியாதையில் இல்லையெனில் நினைவிலும் சக்தி வாய்ந்த நிலை இல்லையென்பதாகும்.

சுயமரியாதை என்றாலே தந்தைக்க நிகராவதாகும். சம்பூரண சுயமரியாதையே பாப்சமான் ஆவதாகும். இவ்வாறு நினைவில் இருக்கும் குழந்தைகள் என்றென்றும் வள்ளலாக இருப்பார்கள். பெறுபவரல்ல, தருபவரே தேவதை இன்று பாப்தாதா வள்ளலின் பிள்ளைகள் எவ்வளவு தூரம் வள்ளலாக உள்ளார்கள்? என்பதை சோதனை செய்து கொண்டிருந்தார். தந்தை ஒருபோதும் பெறுவதற்கான எண்ணம் வைப்பதில்லை. தருவதற்காகவே நினைக்கின்றார். ஒருவேளை சொன்னாலும் பழைய அனைத்தையும் கொடுங்கள் என்று பதிலாக புதியவற்றை தருகின்றார். பெறுவதும் தந்தையைப் பொறுத்தவரை தருவதேயாகும். நிகழ்காலத்தின் பாப்தாதாவிற்கு குழந்தைகளின் ஒரு தலைப்பு மிகவும் பிடித்துள்ளது. என்ன தலைப்பு? அயல்நாட்டவரின் தலைப்பு எது? (காலத்தின் அழைப்பு)

பாப்தாதா குழந்தைகளுக்காக நேரத்தின் கூக்குரல் என்ன என்பதை பார்த்துக் கொண்டிருந்தார். பாப்தாதாவின் சேவையில் இணைந்தே இருப்பதால் நீங்களும் உலகின் சேவைக்காக பார்க்கின்றீர்கள். ஆனால் பாப்தாதா குழந்தைகளுக்காக நேரத்தின் கூக்குரல் என்ன? என்பதை பார்க்கின்றார். நீங்களும் நேரத்தின் கூக்குரலை புரிந்துள்ளீர்களா? தனக்காக சிந்தியுங்கள், சேவைக்காக சொற்பொழிவு என அதிகம் செய்கின்றீர்கள். ஆனால் தனக்காக தன்னிடமே கேளுங்கள் எனக்காக நேரத்தின் கூக்குரல் என்ன? நிகழ்காலத்தில் நேரம் என்ன சொல்கிறது? பாப்தாதா பார்க்கின்றார் தற்போதைய சமயத்திற்கேற்ப குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரமும் வள்ளலாக அதிகம் சிந்திக்க வேண்டும். சுய முன்னேற்றம் மற்றும் பிறர் முன்னேற்றம் யாவிலும் அன்பு கலந்த வள்ளல் தன்மை தென்பட வேண்டும். பிறர் யாராயினும் எப்படி இருப்பினும் நான் தரவேண்டும். வள்ளல் என்பவர் எப்போதுமே எல்லையில்லா உள்ளுணர்வுடன் வள்ளலாக முழுமை நிரம்பப் பெற்றவராக இருப்பார். வள்ளல் என்பவர் என்றுமே மன்னிப்பின் மாஸ்டர் கடலாவார், இதனால் தன்னிடமோ பிறரிடமோ தனது பழைய எல்லைக்குட்பட்ட சம்ஸ்காரங்களை வெளிப்படுத்தமாட்டார். நான் தர வேண்டும். பிறர் கொடுத்தாலும் மறுத்தாலும் நான் வள்ளலாவேன். ஏதேனும் சம்ஸ்காரத்தின் வசமாக பீடிக்கப்பட்டிருப்பினும் நான் ஒத்துழைப்பு தர வேண்டும் இவ்வாறு இருக்கும்போது எவரது சம்ஸ்காரமும் உங்களை ஆக்கிரமிக்காது. பிறர் மதித்தாலும், இல்லையென்றாலும் நான் மரியாதை தருவேன், அத்தகைய வள்ளல குணம் இப்போது வேண்டும். மனதில் நல்ல பாவணை உள்ளது. ஆனால் .... ஆனால் என்பது கூடாது. நான் செய்தாக வேண்டும், பிறர் தனது ஒவ்வாத வகையில் பேசினாலும், நடந்து கொண்டாரும் அதனை ஏற்றுக் கொள்ளாதீர்கள். கெட்ட பொருளை பெறுவார்களா? மனதளவில் நினைத்தாலும் பெறுவதேயாகும், புத்திவரையிலும் கூட செல்லக் கூடாது. புத்தியாலும் ஏற்கக் கூடாது. நல்லது அல்ல தீயது எனும் போது உள்ளத்தாலும் புத்தியாலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். மாறாக வள்ளலாகி சுபபாவனை, நல் விருப்பங்களையே தருக. ஏற்காதீர்கள். ஏனெனில் தற்சமயத் திற்கேற்ப உள்ளமும், புத்தியும் காலியாக இல்லையெனில் நிரந்தர சேவாதாரியாக முடியாது. உள்ளமும், புத்தியும் ஏதேனும் விசயங்களால் நிரம்பியிருந்தால் சேவை என்ன செய்வீர்கள்? பிறகு லௌகீகத்தில் சிலர் 8 மணி நேரம், 10 மணி நேரம் வேலை செய்வது போலவே இங்கும் இருக்கும் 8 மணி நேரம், 6 மணி நேரம் சேவை செய்பவர்கள் நிரந்தர சேவாதாரி ஆக முடியாது, மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ, உறவு முறையிலோ எவ்வகையிலாவது ஒவ்வொரு நொடியும் வள்ளலாகி சேவை செய்யுங்கள், உள்ளத்தை காலியாக வைத்துக் கொண்டால் தான் தந்தையின் சேவையில் துணையாக முடியும், உள்ளத்தை எப்போதும் சுத்தமாக வைப்பதாலேயே தந்தையுடன் சேவையில் எப்போதும் துணையாக முடியும். உங்கள் அனைவருடைய வாக்கு என்ன? உடனிருப்போம், உடன் சொல்வோம் இது தானே வாக்கு? மாறாக நீங்கள் முன்னால் செல்லுங்கள், நாங்கள் பின்னால் வருவோம் என்பதா? இல்லைதானே? துணையாவோம் என்பது தானே வாக்கு? தந்தை சேவையின்றி மேலும் எந்தளவு நினைவு இன்றி இருக்கின்றாரோ அந்தளவு நீங்கள் முயற்சியுடன் இருக்கின்றீர்கள். நினைவில் இருக்கின்றீர்கள ஆனால் முயற்சி மற்றும் கவனத்துடன் இருக்கின்றீர்கள். தந்தைக்கென இருப்பதெல்லாம் என்ன? பரமாத்மாவிற்கென இருப்ப தெல்லாம் ஆத்மாக்கள் தானே. ஆத்மாக்கள் நம்பர் வாரியாகவே உள்ளார்கள். குழந்தைகளை நினைவு செய்யாமல் தந்தையால் இருக்கவே முடியாது. தந்தை குழந்தைகளை நினைக்காமல் இருக்க முடியுமா? நீங்கள் இருப்பீர்களா? சில சில நேரம் குரும்பு செய்கிறார்கள்.

என்ன கேட்டீர்கள் நேரத்தின் அழைப்பில் வள்ளல் ஆகுக. தேவை அதிகம். அகிலத்தின் ஆத்மாக்கள் அனைவரது அழைப்பும் எங்கள் இஸ்ட தெய்வங்களே ... இஸ்ட தெய்வங்கள் தானே என்று ஏதேனும் ஒரு ரூபத்தில் அனைத்து ஆத்மாக்களும் அழைக்கின்றனர். இஸ்ட தெய்வமே நீங்கள் இப்போது அனைத்து ஆத்மாக்களின் அழைப்பு எமது இஸ்ட தேவனே, தேவியே அமையுங் கள் இந்த உலகத்தை மாற்றி என்ற இந்த குரல் காதில் விழுகிறதா? பாண்டவர்கள் காதில் விழுகிறதா? கேட்டு என்ன செய்கின்றீர்கள்? கேட்ட மாத்திரமே சமாதானம் தருகின்றீர்களா, ஆம் செய்வோம் என யோசிக்கின்றீர்களா? அழைப்பு காதில் விழுகிறதா? ஒரு புறம் நேரத்தின் அழைப்பும், இன்னொரு புறம் ஆத்மாக்களின் அழைப்பும் கேட்பதோடு மட்டும் உள்ளதா? இஸ்ட தேவனே தேவியே தனது வள்ளல் தன்மையை இப்போது வெளிக் கொணருங்கள். தர வேண்டும் எந்த ஒரு ஆத்மாவும் வஞ்சிக்கப்பட்டு விடக் கூடாது. இல்லையெனில் புகார் மாலையே விழும். புகார் செய்வார்கள் தானே !

தந்தை என புரிந்து தொடர்பை இணைத்தாலும் ஒரே நாளிலும் ஆஸ்தி பெறலாம். மாறாக ஆம் நன்றாக உள்ளது, ஏதோ சக்தி உள்ளது புரிகிறது.....என்பதல்ல. குழந்தைகளே ஆஸ்திக்கு அதிகாரிகள், புரிபவர், பார்ப்பவர் அல்ல. ஒரு நாளில் உளமாற தந்தை என ஏற்றுக் கொண்டால் ஆஸ்திக்கு அதிகாரி ஆகலாம். நீங்கள் அனைவரும் அதிகாரிகள் தானே? நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார், குமாரிகளா அல்லது மாறிக் கொண்டிருக்கின்றீர்களா? ஆகிவிட்டீர்கள். ஆக வந்துள்ளீர்களா? யாரேனும் உங்களை மாற்றிவிட முடியுமா? பிரம்மா குமார், குமாரிக்கு பதிலாக குமார், குமாரியாக மட்டும் இருங்கள் என்றால் மாறமாட்டீர்கள் தானே? பிரம்மா குமார் குமாரி ஆவதால் ஏற்படும் நன்மைகள் எத்தனை ஒரு பிறவிக்கான இலாபம் அல்ல அனேக பிறவிகளுக் கான இலாபம் உள்ளது. முயற்சி செய்வது என்னவோ பாதி பிறவி, முக்கால் பிறவி தான் பலனோ அனேக பிறவிகள் இலாபமே இலாபம் தான்.

பாப்தாதா நேரத்திற்கேற்ப தற்சமயம் ஒரு விசயத்தில் முக்கிய கவனத்தை திருப்புகின்றார். ஏனென்றால் பாப்தாதா குழந்தைகளின் ரிசல்ட்டை பார்த்துக் கொண்டேயிருக்கின்றார். ரிசல்ட்டைப் பார்க்கும் பொழுது தைரியம் மிக நன்றாக உள்ளது. இலட்சியமும் மிக நன்றாகவே உள்ளது. இலட்சியத்திற்கேற்ப இதுவரையிலும் இலட்சியம் மற்றும் இலட்சணம் இரண்டிற்கு மிடையே வேறுபாடு உள்ளது, அனைவரது இலட்சியமும் நம்பர் ஒன்றாக உள்ளது. பாப்தாதா உங்களது இலட்சியம் 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்யம் பெறுவதா, சூரியவம்சியாக வேண்டுமா, சந்திரவம்சியாக வேண்டுமா என யாரிடம் கேட்டாலும் அனைவரும் எதற்காக கை உயர்த்து வீர்கள்? சூரிய வம்சி என்றுதானே, யாரேனும் சந்திர வம்சி ஆக விரும்புவீர்களா? யாருமில்லை ( ஒருவர் கை உயர்த்துங்கள்) நல்லது இல்லையெனில் அந்த சீட் காலியாகவே இருந்து விடும். இலட்சியம் அனைவருக்கும் மிக நன்றாகவே உள்ளது. இலட்சியம் மற்றும் இலட்சணம் இவற்றின் சமநிலை இதில் கவனம் மிகவும் அவசியம் அதற்கென்ன காரணம் ? இன்று கூறியது தான் அவ்வப்போது பெறுபவராகின்றீர்கள். இப்படியிருந்தால் இவர் செய்தால், இவர் உதவி செய்தால், இவர் மாறினால் நான் மாறுவேன். இந்த விசயம் சரியாகி விட்டால் நான் சரியாகி விடுவேன், இதுவே பெறுவதாகும். வள்ளல் தன்மையல்ல, ஒருவர் கொடுத்தாலும் இல்லை யென்றாலும் பாபா அனைத்தும் கொடுத்து விட்டார். பாபா ஒருவருக்கு குறைவாக ஒருவருக்கு அதிகமாக கொடுத்தாரா? ஒரே பாடம் தானே. 60 வருடமானவராயினும், ஒரு மாதமானவராயினும் எல்லோருக்கும் ஒரே பாடம் தானே தனித்தனியாக இல்லை? அன்றும் இன்றும் ஒரே பாடம் தான். அதே ஞானம், அதே அன்பு, அதே சர்வசக்திகள், அனைவருக்கும் ஒன்று தான் அவருக்கு 16 சக்திகள் இவருக்கு 8 சக்திகள் என்று கிடையாது. அனைவருக்கும் ஒரே ஆஸ்தி, தந்தை அனைவருக்கும் நிரப்பி கொடுத்துள்ளார் அப்படி நிரம்பியவர் வள்ளல் ஆவாரே தவிர பெறுபவரல்ல. நானே தர வேண்டும், பிறர் கொடுத்தாலும் இல்லையென்றாலும் பெறும் எண்ணம் கூடாது. தரும் எண்ணமே வேண்டும். எவ்வளவு தருவீர்களோ, வள்ளல் ஆவீர்களோஅவ்வளவு பொக்கிஷம் வளர்ந்து கொண்டே செல்லும். பிறருக்கு தருவது தனது மரியாதை அதிகரிப்பதாகும். தருவதல்ல, தருவதே பெறுவதாகும். பெற வேண்டாம். தருவதே பெறுவதாகும். புரிந்ததா. நேரத்தின் அழைப்பு என்ன? வள்ளல் ஆகுக ஒரு சொல்லை நினைவில் கொள்க. என்ன ஆனாலும் வள்ளல் என்ற சொல்லை சதா நினைவில் கொள்ளவும். ஆசை என்றாலே என்னவென்று தெரியாத நிலை. எதையும் பெறுவதற்கான விருப்பம் இல்லையெனும் அனுபவம் இல்லாத நிலை, பிராப்திகள் அனைத்தும் நிரம்பிய நிலை, இலட்சியம் என்ன? முழுமை பெறுவது தானே? அல்லது எவ்வளவு கிடைத்ததோ நல்லது என்பீர்களா? சம்பன்னமாவதே சம்பூர்ணம் ஆவதாகும்.

இன்று அயல் நாட்டவருக்கு பிரத்யேகமான வாய்ப்பு கிடைத்துள்ளது நல்லது. முதல் வாய்ப்பே (அயல்) வெளி நாட்டவருக்கு கிடைத்துள்ளது. பிரியமானவர்கள் ஆகிவிட்டீர்கள். மற்ற அனைவருக்கும் மறுக்கப்பட்டது அயல், வெளி நாட்டவருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது, பாப்தாதா விற்கு அனைத்து குழந்தைகளின் நினைவு உள்ளது. இருப்பினும் இரட்டை அயல் நாட்டவரைப் பார்த்து அவர்களது தைரியத்தைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியடைகின்றார். இப்போது அந்தளவிற்கு குழப்பம் ஏற்படுவதில்லை. இப்போது மாற்றம் வந்துள்ளது. ஆரம்பத்தில் இந்தியப் பண்பாடு, ஆங்கிலப் பண்பாடு என்ற கேள்வி இருந்தது. இப்போது புரிந்து கொண்டீர்கள் இப்போது பிராமணப் பண்பாட்டில் வந்து விட்டார்கள். இந்தியனும் அல்ல, ஆங்கிலேயரும் அல்ல. பிராமணப் பண்பாடு வந்து விட்டது. இந்திய பண்பாடு சற்று தடுமாற்றமாக இருந்தது, பிராமணப் பண்பாடு சுலபமானது. சுயமரியாதையில் இரு. சுயராஜிய அதிகாரி ஆகுங்கள். என்பதே பிராமண பண்பாடு. இது பிடித்துள்ளதல்லவா? இப்போது கேள்வி ஏதுமில்லையே இந்திய கலாச்சாரத்தில் எப்படி வருவது, கடினமாயிற்றே? சுலபமாகி விட்டதல்லவா? பாருங்கள் அங்கு சென்ற பிறகு சற்று கடினம் என சொல்லக் கூடாது. அங்கு சென்ற பிறகு இப்படி எழுதக் கூடாது. சுலபம் என சொல்லிவிட்டீர்கள் இருப்பினும் சிறிது கடினமா, சுலபமா கொஞ்சம் கடினமா? கொஞ்சம் கடினமல்ல. மிக சுலபமே. இப்போது விளையாட்டு அனைத்தும் முடிந்தது எனவே சிரிப்பு வருகிறது, இப்பொழுது பக்காவாகி விட்டீர்கள் குழந்தை பருவ விளையாட்டு இப்போது முடிவிற்கு வந்தது. இப்போது அனுபவி ஆகி விட்டீர்கள். பாப்தாதா பார்க்கின்றார் எந்தளவிற்கு பழைய குழந்தைகள் பக்கா ஆகின்றார்களோ அந்தளவிற்கு புதியதாக வருபவர்களும் பக்கா ஆகிவிடுகின்றார்கள். ஒருவரையொருவர் பார்த்து முன்னேறுவது நல்லது. நன்கு முயற்சி செய்கின்றார்கள். இப்போது தாதிமார்களிடம் யாரும் அழைத்துச் செல்வதில்லை. தாதிகளிடம் கதைகள் கேட்பதில்லை. குறைந்து விட்டது. மாறி விட்டது தானே? (தாதி ஜானகியிடம்) நீங்ள அனைவரும் நலம் தானே? வந்த வியாதியும் முடிந்து விட்டது நல்லது. அனைவரிடமும் நல்ல நல்ல குணம் உள்ளது. உள்ளத் தூய்மை நன்றாக உள்ளது உள்ளே எதையும் வைப்பதில்லை. வெளியில் சொல்லிவிடுவார்கள் நடந்ததை உண்மையை சொல்லிவிடுவார்கள். இப்படியல் அப்படி இப்படி அப்படி என தாறுமாறாக செயல்படு வதில்லை. உள்ளது உள்ளபடி சொல்பவர்கள். இந்த சிறப்பம்சம் நல்லது. எனவே பாபா சொல்கிறார் உண்மையும் தூய்மையும் உள்ள உள்ளத்தில் தந்தை குடியிருப்பார். ஆம் என்றால் ஆம் இல்லை என்றால் இல்லை ! பார்க்கலாம் என்று கிடையாது. வலுக்கட்டாயமாக செய்ய வேண்டுமென செய்வதில்லை செய்தால் முழுமையாக செய்வது இல்லையெனில் இல்லை நல்லது !

குழந்தைகள் யாரெல்லாம் அன்பு நினைவுகளை அனுப்பினார்களோ அந்த குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதா, அன்பு நினைவுகளை ஏற்றுக் கொண்டார். கடிதம் மூலமாகவும் பல்வேறு சாதனங்கள் மூலமாகவும் அன்பு நினைவுகளை அனுப்பி உள்ளார்கள் அவை அனைத்தும் தந்தையிடம் வந்து சேர்ந்தது கைமாறாக பாப்தாதாவும் வள்ளல் ஆவதற்கான வரதானமும் தருகின்றார். நல்லது !

ஒரு நொடியில் பறக்க முடியுமா? சிறகுகள் பலமாக உள்ளதா? பாபா என்றவுடன் பறந்தீர்கள் ( டிரில் )

நாலாபுறமும் உள்ள சர்வ சிரேஷ்ட பாப்சமான் வள்ளல் தன்மையில் இருப்பவர்கள், நிரந்தர நினைவு, மற்றும் சேவையில் இருக்கும் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பரமாத்மாவின் சேவையில் துணையாகி சதா லட்சியமும், லட்சணமும் சமநிலை வைப்பவர்களுக்கு சதா தந்தையின் அன்பில், சமநிலையில் அருகாமையில் உள்ளவர்கள், பாப்தாதாவின் கண்ணின் மணியாகி என்றென்றும் உலக நன்மைக்கான பாவனையில் உள்ள இரக்க மனமுள்ளவர்கள், மாஸ்டர் மன்னிக்கும் கடலான குழந்தைகளுக்கு தொலைவில் இருப்பவர்கள், மதுபனில் கீழே அமர்ந்திருப் பவர்கள் மேலும் பாப்தாதாவின் எதிரில் அமர்ந்துள்ளவர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம் !

வரதானம்:
உள்ளத்தில் ஒரு திலாரமை வைத்து ஒருவரோடு அனைத்து சர்வ சம்பந்தங்களையும் அனுபவம் செய்யும் திருப்தி ஆத்மா ஆகுக !

ஞானத்தை உள்ளடக்கும் இடம் புத்தி ஆனால் அன்பானவரை உள்ளடக்கும் இடம் உள்ளம் சில சில பிரியதர்சினிகள் அதிகமாக புத்தியை செயல்படுத்துகின்றார்கள். ஆனால் பாப்தாதா உண்மையான உள்ளத்திலே உறைபவர் எனவே உள்ளத்தின் அனுபவம் உள்ளமே அறியும் திலாராம் அறிவார். உளமாற சேவை செய்தாலும் நினைவு செய்தாலும் அதில் உழைப்பு குறைவு திருப்தி அதிகம் கிடைக்கிறது. உளமாற செயல்படுபவர்கள் என்றென்றும் திருப்தியான பாடல் பாடுவார்கள். அவர்களுக்கு தக்க சமயத்தில் ஒருவரிடமிருந்து சர்வ சம்மந்தங்களின் அனுபவம் ஏற்படுகிறது.

சுலோகன்:
அமிர்தவேளையில் தெளிவான புத்தியுடன் அமர்ந்தால் சேவைக்கான புதிய விதிகள் உதயமாகும்.