02.02.24

இன்றைய சிந்தனைக்கு......

கொடுப்பவராக இருப்பது என்றால் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவராக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்காதுஆனால் தன்னிடம் உள்ள  வளங்களிலிருந்து மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடியவர்வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவராவார். இப்படிபட்டவரால் அடுத்தவரின்  நற்பண்புகளை அறிந்துகொண்டு தன்னுடைய சொந்த நற்குணங்களை இழக்காமல் மற்றவரின் மதிப்பு முறையை (value system) அடையாளம் காணவும் அதற்கேற்ப  சுயத்தை மாற்றிக்கொள்ளவும் முடியும்.

அனுபவம்:

நான் கொடுப்பவராக இருக்கும்போது, எனது மதிப்பு முறைக்கு (value system) ஏற்ப மற்றவர்கள் மாறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லைஆனால் மற்றவரின் மதிப்பு முறைக்கு (value system) ஏற்ப ஒரு வழியை மிக எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது. மற்றவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லைஆனால் என்னால் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே யாருக்கும் ஒருபோதும் எதிர்மறை உணர்வு இல்லை.