02.04.24

இன்றைய சிந்தனைக்கு......

பொறுமை:   

திடமான நோக்கம் என்பது, முயற்சியின் பலனை பெற பொறுமையோடு காத்திருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் புதிதாக ஒரு காரியத்தை செய்யவேண்டும் என்று எடுத்துக்கொள்ளும்போது, நாம் திடமான எண்ணத்தோடு இருக்கின்றோம். மேலும், இறுதிவரை சிறப்பானவற்றை கொடுக்க வேண்டும் என்றும் விரும்புகின்றோம். இருந்தபோதிலும், நாம் அதில் சுவாரசியம் இழந்து, முதலில் நாம் தேர்ந்தெடுத்ததை விட்டுவிட்டு, மற்றொரு புதிய காரியத்தை மேற்கொள்கின்றோம். இது மென்மேலும் அதிகரிக்கும்போது, நாம் வெற்றி பெறுவது சிரமமாகிவிடுகிறது.

செயல்முறை:

நான் ஒரு காரியத்தை துவங்கும்போது, திடமான நோக்கத்துடன், பொறுமையும் எனக்கு அவசியம். பொறுமையானதுகாத்திருந்து, நான் செய்த முயற்சியின் பலனை அமைதியாக, உற்று நோக்க எனக்கு உதவி செய்கிறது. திடமான நோக்கம் என்பது, நிச்சயம் பலன் கிடக்கும் என்பதை அறிந்து, மேற்கொண்டு முயற்சிக்கான புதிய விதைகளை விதைக்க எனக்கு ஆற்றலை வழங்குகிறது. அதனால், ஒருபோதும் தோல்வி என்பது இல்லை, ஆனால், இது வெற்றியை எதிர்நோக்கும் ஒரு பயணமாகும்.