02.05.24

இன்றைய சிந்தனைக்கு

பகுத்தறிதல்

உள்ளதை உள்ளவாறே பார்ப்பது என்பது பலவீனங்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டிருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில் சிறு சூழ்நிலைகளையும் நாம் எதிர்த்து செயல்படுகின்றோம். நம்முடைய உணர்வுகள் நாம் சந்திக்கின்ற சூழ்நிலைகளை பொருத்து இருக்கின்றது. நாம் எதிர்மறையான உணர்வுகளை அனுபவம் செய்யும்போது, நாம் பெரும்பாலும் அதை மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றோம். ஆனால், நம்முடைய குணாதிசயம், அச்சமயத்தில் நாம் முயற்சி செய்து மாற்றம் கொண்டுவர இருக்கும் குணாதிசயம் அல்லது குறிப்பாக ஒரு சவாலான நிகழ்வு ஆகியவற்றில் இது சிரமமானதாக இருக்ககூடும்.

செயல்முறை:

நான் சந்திக்கும் பலவிதமான சூழ்நிலைகளை எதிர்த்து நான் செயல்படுவதை மாற்றுவதற்குஅவற்றை நான் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்வது அவசியமாகின்றது. நான் சூழ்நிலையை அப்படியே உள்ளது போல புரிந்து கொள்வது அவசியம். என்னுடைய குணாதிசயத்தின் சாயல் என்னுடைய புரிந்துணர்வில் பாதிப்பை ஏற்படுத்த நான் அனுமதிக்ககூடாது. சூழ்நிலைகளை அவை இருப்பது போலவே நான் பார்க்கும்போது, வெறுமனே அவற்றை எதிர்த்து செயல்படுவதற்கு பதிலாக, நான் செயல்படும் விதத்தை என்னால் கட்டுப்படுத்த முடியும்.