03.02.24

இன்றைய சிந்தனைக்கு......

நம் வாழ்க்கையில் நாம் எதிர்க்கொள்ளும் அனைத்திற்கும் மதிப்பளிப்பது என்றால் பணிவுதன்மையோடு இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எளிமையான விஷயங்களை நேசிப்பது என்றால் பணிவுடன் இருப்பதாகும். இது வாழ்க்கையில் நாம் எதிர்க்கொள்ளும் அனைத்திற்கும் மதிப்பளிப்பதற்கு நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அதாவது அனைத்தையும் சரியான முறையில் பாராட்டவும் மதிப்பிடவும் ஒரு திறன் உள்ளது. ஆகவேஒருவர் தன்னுடைய மற்றும் பிறரின் நலனுக்காக வாழ்க்கையில் தாம் எதிர்க்கொள்ளும் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

அனுபவம்:

நான் பணிவுடன் இருக்கும்போதுஎன் உள்ளார்ந்த அமைதியில் கவனம் செலுத்த முடிகிறதுமேலும் என்னுடைய தனிப்பட்ட நல்லுணர்வை நான் இழக்காமல் இருக்கின்றேன். என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்திலிருந்தும் என்னால் கற்றுக் கொள்ள முடிகிறதுமேலும் இந்த நல்லுணர்வை அதிகரிக்கவும் முடிகிறது. எந்தவொரு சூழ்நிலையும் பணியாற்றுவதற்கு கடினம் அல்லது சாத்தியமற்றது என்றல்லஆனால் என்னால் அனைத்து சவால்களையும் எளிதாக சமாளிக்க முடிகிறது.