03.05.24

இன்றைய சிந்தனைக்கு

எளிமை

எளிமையாக இருப்பதென்றால் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எளிமை என்பது சாதாரணமாக இருப்பது என்று தவறாக கருதப்படுகின்றது. இது சிலசமயங்களில்வர்ணங்களும் விதவிதமான வகைகளும் இல்லாதிருப்பதுடன் சம்பந்தப்படுத்தப்படுகின்றது. அதனால் நம்முடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள் எளிமையாக இருக்கவேண்டியதில், நாம் அரிதாகவே கவனம் செலுத்துகின்றோம். அதற்கு பதிலாககவரக்கூடியதாகவோ அல்லது ஈர்புமிக்கதாகவோ ஆக்குவதற்கு நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு வர்ணங்களை சேர்க்க முனைகின்றோம். இதற்கிடையில் நம்மை நம்முடைய ஆதியான தன்மையைவிட்டு நாம் விலகி தூர எடுத்து செல்கின்றோம்.

செயல்முறை:

எளிமையாக இருப்பது என்றால், என்னை ஒரு விதையை போல் கருதுவதாகும். அதாவது முழுமையாக இருக்கும்போதிலும் எளிமையாக இருப்பதாகும். உண்மையான எளிமை என்பது என்னுடைய உள்ளார்ந்த குணங்களை கண்டுபிடித்து பயன்படுத்துவதாகும். அதாவது என்னுடைய உண்மையான இயல்பிற்கு அருகாமையில் வருவதாகும். என்னுடைய உண்மையான இயல்பிலிருந்து, உள்ளார்ந்த தன்மைகள் வெளிவர நான் அனுமதிக்கும்போது, மற்றவர்கள் என்னிடமிருந்து ஊக்கம் பெற முடிகின்றது. என்னுடைய சொந்த எளிமையினால், மற்றவர்களுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பேன்.