04.02.24

இன்றைய சிந்தனைக்கு......

இதயத்தில் சுத்தமாக இருப்பது என்றால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சுத்தமான இதயம் உள்ளவர்தன் தொடர்பில் வரும் மக்களுக்கு எப்போதும் சிறந்ததைச் செய்ய முயற்சி செய்வார். இப்படிப்பட்டவர் மற்றவர்களை அவர்கள் உள்ளது போலவே ஏற்றுக்கொள்வதொடு அவர்கள் செய்யும் எந்த தவற்றையும் புறக்கணிக்கும் திறனையும் வளர்த்துக்கொள்கின்றார். மாறாகஅவரால் சமநிலையை இழக்காமல் சரியான செயலை செய்ய முடிகிறது. எனவே அத்தகையவர் அவர் செய்யும் ஒவ்வொரு செயலினாலும் தனக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியைத் கொடுக்கின்றார்.

அனுபவம்:

எனக்கு சுத்தமான இதயம் இருக்கும்போது எனது உள்ளார்ந்த குணங்களின் அனுபவத்தை என்னால் பெற முடிகிறது. வெவ்வேறு உறவுமுறைகளின் அழகையும்ஒவ்வொரு உறவையும்ஒவ்வொரு நபரின் தனித்துவத்தையும் என்னால் ரசிக்க முடிகின்றது. இதனால் மற்றவர்களாலும் அவர்களின் உள் அழகோடு தொடர்பு கொள்ள முடிகிறது. எனவே அனைவரும் மகிழ்ச்சியை அனுபவம் செய்கிறார்கள்.