05.02.24

இன்றைய சிந்தனைக்கு......

சரியாக பகுத்தறியகூடியவரால் உண்மையான நன்மையைக் கொண்டு வர முடிகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

அனைவரும் இயல்பாகவே சுயம் மற்றும் பிறரின் நலனுக்காகவே செயல்படுகிறார்கள். ஆனால் சரியாக பகுத்தறியகூடியவரால் மற்றவரின் தேவையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப கொடுக்க முடிகின்றது. எனவே செய்யப்படும் அனைத்தும் இயற்கையாகவே மற்றவர்களுக்கும் சுயத்திற்கும் நன்மை அளிக்கிறது.

அனுபவம்:

என்னால் சரியான நபருக்கு சரியான நேரத்தில் சரியான விஷயத்தின் மூலம் நன்மையை கொண்டு வர முடிந்ததால்மற்றவர்களின்  நம்பகத்தன்மையை என்னால் வெல்ல முடிகிறது. நான் பதிலுக்கு எதுவும் எதிர்பார்க்கவில்லைஆனால் சரியான நேரத்தில் உதவி செய்யமுடிந்ததில் திருப்தி அடைகிறேன்.