08.04.24

இன்றைய சிந்தனைக்கு......

எளிமை:

எளிமையாக இருப்பதென்றால், உண்மையில், இராஜரீகமாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எளிமை என்பது, பொதுவாக, அலங்காரமின்றி, சாதாரணமாக இருப்பது என்று கருதப்படுகிறது. அதனால், எளிமையைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, பெரும்பாலும் நாம் அதனால், கவரப்படுவதில்லை. மற்றவர்களை கவரத்தக்க வகையில் இருக்க நாம் அதிகமான முயற்சி செய்பவர்களாக இருக்கின்றோம். ஆனால்நடைமுறையில் நம்முடைய உள்ளார்ந்த தூய்மையையும் கள்ளங்கபடமற்ற தன்மையையும் நாம் இழந்துவிடுகின்றோம். அதனால், நம்முடைய சொந்த உண்மையான அழகை வெளிப்படுத்த முடியாமல் இருக்கிறோம். 

செயல்முறை:

எளிமை என்றால், முழுமையான தூய்மையாகும். அகந்தையற்று, அனைத்து விதமான எதிர்மறைத்தன்மையிலிருந்து, விடுபட்டு இருப்பதாகும். அதனால், என்னுடைய இயற்கையான எளிமைக்கு நான் திரும்பும்போது, என்னுடைய சொந்த அழகையும் பலத்தையும் என்னால் வெளிப்படுத்த முடியும்.