09.04.24

இன்றைய சிந்தனைக்கு......

சுய – கட்டுப்பாடு:        

உண்மையான கட்டுப்பாடு என்றால், சுயத்தை ஆள்பவர்களாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக, நாம் வெளிப்புற சூழ்நிலைகள் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றோம். அனைத்தும், நாம், சரி எது, தவறு எது என்று சிந்திக்கின்றோமோ, அதன்படி அனைத்தும் சரிவர இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அது அவ்வாறு நடக்காதபோது, நாம் அமைதியிழக்கும் போக்கு உடையவர்களாக இருக்கின்றோம். நம் மனதை நாம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நம்மால் இயலவில்லை. இது எதிர்மறையான சூழ்நிலையை மேலும் மோசமாக்கக்கூடும். மேலும், பிரச்சனைக்கு தீர்வு காண்பது, கடினமாகும்.

செயல்முறை:

என்னை நான் மதித்து, என்னுடைய ஆற்றலை உணரும்போது, என்னுடைய மனதை என்னால், கட்டுப்படுத்த முடிகிறது. ஒரு அரசர், இராஜாங்கத்தை ஆள்வதுபோல், என்னை நான் ஆள்கின்றேன். இது வெளிப்புற சூழ்நிலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. இது, நடக்கும் அனைத்திற்கும் பின் இருக்கும் காரண காரியத்தை பார்க்க வைக்கிறது. அதனால், நான் மனச்சோர்வு அடைவதில்லை.