10.02.24

இன்றைய சிந்தனைக்கு......

வீணானவற்றை நோக்கமுடையதாகவும் சக்திவாய்ந்ததாகவும் மாற்றுவது என்றால் லேசாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

வீணானவற்றை வெற்றிகரமாகவும் சக்திவாய்ந்தாகவும் அர்த்தமுள்ள ஒன்றாகவும் மாற்றுவது என்பது சூழ்நிலைக்கு அப்பால்அது கற்பிக்க வேண்டியதைப் பார்ப்பதாகும். இதைச் செய்யும் திறன் இருக்கும்போதுமிகவும் சவாலான தடைகளை மீறிச் செல்லும் திறன் உள்ளது. ஒரு நோக்கம் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற ஆழமான புரிதல் உள்ளது. வீணான சகவாசத்தில் நேரமும் சக்தியும் வீணாகாது.

அனுபவம்:

நடக்கும் அனைத்தின் முக்கியத்துவத்தையும் நான் புரிந்து கொள்ளும்போதுஒரு நொடியில் என்னால் என்னை மாற்றிகொள்ள முடிகிறது. எனவே என்னால் லேசாக இருக்க முடிகிறதுஏனென்றால் என்னால் நேர்மையான முயற்சியில் ஈடுபட முடிகிறதுமேலும் வீணானவற்றின் சுமையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள முடிகிறது. என் உறவுகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதையும் நான் காண்கிறேன், ஏனென்றால் மற்றவர்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள முடிகிறது.