10.04.24

இன்றைய சிந்தனைக்கு......

அமைதி:                 

அமைதியை அனுபவம் செய்வதென்றால், மற்றவர்களுக்கு அமைதியின் அனுபவத்தை கொடுப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் அமைதியின்மையை அனுபவம் செய்யும்போது, பொதுவாக மற்றவர்களை குற்றம் சாட்டுகின்றோம். மற்றவர்களோ அல்லது சூழ்நிலையோ நம்மை அமைதியிழக்க வைத்துவிட்டதாக நாம் கருதுகின்றோம். நமக்கு இந்த மனநிலை பிடிக்கவில்லை என்றால்கூட, அதை மாற்றுவதற்கு நாம் அதிகமாக முயற்சி செய்வதில்லை. நம்முடைய சொந்த திருப்தியின்மையால்நம்மைச்  சுற்றியுள்ளவர்களும், அமைதியின்மையை அனுபவம் செய்வார்கள்.

செயல்முறை:

சூழ்நிலையை மாற்றுவதற்கு, முதலில் நான் ஏன் அமைதியற்று இருக்கின்றேன் என்பதை கவனிக்க வேண்டும். என்னுடைய உள்ளார்ந்த கருத்து வேற்றுமையை நான் நிவர்த்தி செய்யும்போது, நான் மீண்டும் அமைதி அடைவேன். மேலும், இந்த அனுபவத்தை மற்றவர்களுடன் என்னால் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.