11.02.24

இன்றைய சிந்தனைக்கு......

இரக்கமுள்ளவர் என்றால் மற்றவர்களின் வேதனையையும் துக்கத்தையும் மாற்றுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

இரக்கமுள்ளவருக்கு எப்போதும் கருணை உணர்வு உண்டுஅவர்களால் தேவையுள்ளவர்கள் அல்லது துயரத்தில் இருப்பவர்களுக்கு உதவ முடியும். அத்தகைய நபரால் தனது சொந்த தூய்மையான உணர்வுகளால் மற்றவர்களிடமும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அவரால் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கான பங்களிப்பாக மாறும் முயற்சியில் ஈடுபட முடிகிறது.

அனுபவம்:

நான் மற்றவர்களிடம் கருணை காட்டும்போதுஅவர்களின் உணர்வுகள் மற்றும் நடத்தை ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு சரியான வகையில் மன ஆதரவை வழங்கவும் முடிகிறது. அவர்களின் வலி மற்றும் துக்க உணர்வுகளால் எதிர்மறையாக பாதிக்கப்படாமல் என்னால் அவர்களுக்கு தைரியம் கொடுக்க முடிகிறது. அனைத்து சூழ்நிலைகளிலும் என்னை நேர்மறையாக வைத்திருக்க முடிந்ததால் என் கருணை என்னை நேர்மறையாக பாதிக்கிறது.