12.02.24

இன்றைய சிந்தனைக்கு......

ஒருவரின் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பதில் சிறப்புதன்மை அமிழ்ந்துள்ளது.

சிந்திக்க வேண்டிய கருத்து: ஒருவருக்கு அவரின் அதிர்ஷ்டத்தை குறித்த விழிப்புணர்வு இருக்கும்போது, ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் சிறப்புதன்மை காணப்படுகிறது, ஏனென்றால் அனைத்தையும் சிறந்த முறையில் செய்ய விருப்பம் இருக்கிறது. இத்துடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தூய விருப்பமும் உள்ளது. இதுவும் ஒருவரை சிறப்பானவராக ஆக்கும் அம்சமாகும்.

தீர்வு: என்னுடைய சொந்த அதிர்ஷ்டத்தை நான் அங்கீகரித்து, என்னிடம் என்ன இருக்கிறது என்பதை அறிந்திருக்கும்போது நான் திருப்தியாக இருப்பதை காண்கின்றேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, ஆனால் என்னுடைய நன்மைக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்னிடம் ஏற்கனவே இருப்பதைப் மிகச் சிறப்பாக பயன்படுத்துகின்றேன். எனவே, நான் சிறப்பாக இருப்பதுடன், என்னுடைய சொந்த அதிர்ஷ்டத்தை உருவாக்குவதையும் காண்கிறேன்.