21.04.24

இன்றைய சிந்தனைக்கு

கொடுப்பது

மற்றவர்களுடைய தேவைகளை அறிந்துநிபந்தனையின்றி கொடுப்பதே உண்மையான சந்தோஷத்துடன் இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் மற்றவர்களிடமிருந்து பெருமளவு எதிர்ப்பார்கின்றோம். பெரும்பாலும், நாம் அவர்களுக்கு திரும்ப கொடுப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கின்றது என்பதை மறந்துவிடுகின்றோம். நாம் நிபந்தனையின்றி கொடுக்க சிரமப்படுவதோடு, மாறாக கொடுப்பதனால் நாம் எதை பெறப் போகிறோம் என சிந்திக்கின்றோம். நாம் என்ன இலாபமடையலாம் என்ற எதிர்பார்ப்பில் கவனம் செலுத்துவதால், கொடுப்பதில் உள்ள சந்தோஷத்தை நாம் இழக்கின்றோம். மேலும், நாம் எதிர்பார்த்தது நமக்கு கிடைக்கவில்லை என்றால், நாம் எதிர்மறையான உணர்வுகளை அனுபவம் செய்கின்றோம்.

செயல்முறை:

கொடுப்பதில் தான் உண்மையான சந்தோஷம் உள்ளது.  என்னால் ஒருவருக்கு உதவி செய்ய முடியும் என்பதை நான்  புரிந்துணரும்போது, பதிலுக்கு எதையும் எதிர்ப்பார்க்காமல் அவர்களுக்கு தேவையானவற்றை நான் கொடுப்பேன். என்னுடையபேறுகளை மற்றவர்களின் நன்மைக்காக நிபந்தனையின்றி பயன்படுத்தி, மகிழ்ச்சியுடன் கொடுப்பதற்கு கற்றுக்கொள்வேன். இது என்னுடைய உள்ளார்ந்த சுயத்துடன் தொடர்பு கொள்ள உதவுவதோடு, உண்மையான சந்தோஷத்தை அனுபவம் செய்யவும் உதவுகின்றது.