22.04.24

இன்றைய சிந்தனைக்கு

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு கொடுக்ககூடிய ஒருவருக்கு, அனைத்து காரியமும் சுலபமானதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலும்நாம் அனைத்தையும் தனியாக செய்வதற்கு விருப்பப்படுகின்றோம். மாறுபட்ட  குணாதிசயங்களால் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக, பலரை ஒரு காரியத்தில் ஈடுபடுத்தாமல் இருப்பது, சுலபமாக இருக்கும் என நாம் எண்ணுக்கின்றோம். ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பானது, நம்மை, கீழ் அமுக்கும் பாரமுள்ள சுமையை போன்று நம்மை உணரச் செய்யகூடும்.

செயல்முறை:

ஒன்று சேர்ந்து பணியாற்றுவதே வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான தனிப்பட்ட  திறமைகளை கொண்டிருக்கின்றனர் என்பதை நான் அறிந்துகொள்வது அவசியம். மேலும், என்னால் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்போது, நாம் ஒன்றாக சேர்ந்து பணியாற்றி, அக்காரியத்தை செய்து முடிக்க முடியும். அனைவரும் ஒத்துழைக்கும்போது, மிகப்பெரிய திட்டம் கூட சுலபமாகிவிடுகின்றது. என்னுடைய ஆக்கபூர்வமான உணர்வுகளும், ஈடுபட்டிருக்கும் அனைவருடைய நல்லாசிகளும் சேர்ந்து, நாம் வெற்றிபெற உதவி செய்யும்.