24.04.24

இன்றைய சிந்தனைக்கு

சுய கட்டுப்பாடு

தன்னைதானே கட்டுப்பாட்டில் வைத்திருப்பதேஉண்மையான கட்டுப்பாடு ஆகும்.    

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாககட்டுபாடு என்றால்மற்றவர்களை அல்லது சூழ்நிலைகளை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது  என நாம் புரிந்துகொள்கின்றோம். அதனால்ஏதாவது தவறாக நடக்கும்போது நம்முடைய முதல் எண்ணம்கட்டுப்பாட்டை உபயோகிப்பது தான். ஆனால்சூழ்நிலைகளோ அல்லது மனிதர்களோ நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பதால்நாம் அவர்களை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைய முடியவில்லை.

செயல்முறை:

என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை  கட்டுப்படுத்துவதற்கு பதிலாக,  எவ்வாறு என்னைக் நான் கட்டுப்படுத்திக்கொள்வது என்று கற்றுக்கொள்வது அவசியம். என்னுடைய சொந்த செயல்கள் மற்றும் விளைவுகளை நான் விழிப்புணர்வில் வைத்திருப்பதன் மூலம்,  என்னால் சுயக் கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்ள முடியும். இதுசூழ்நிலைகள் தவறாக செல்லும்போது,  நான் நடந்து கொள்ளும் விதத்தை பாதிக்கும். மேலும்சூழ்நிலைகள் மற்றும் மனிதர்களை அதிகமான நேர்மறையான தன்மையோடுஆக்கப்பூர்வமான வழியில் அணுகுவதற்கு என்னை அனுமதிக்கின்றது.