28.04.24

இன்றைய சிந்தனைக்கு

நேர்மறைத்தன்மை

அனைத்தையும் உள்ளது போல் பார்ப்பது என்பது எதிர்மறையானவற்றிலிருந்து விடுபட்டு இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பொதுவாக உள்ளதை உள்ளது போல் பார்ப்பதில்லை. ஆனால் நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படி தான் பார்க்கின்றோம். நம்முடைய கடந்தகால அனுபவங்கள் மனோபாவம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் நாம் அனைத்தையும் பார்க்கின்றோம். நம்முடைய கடந்தகால அனுபவங்கள் எதிர்மறையாக இருக்கும் போது, நாமும் எதிர்மறையான மனப்போக்கு உடையவர்களாக இருக்கின்றோம். இதனால் தான் சில சூழ்நிலைகள் துக்கத்தையும் மகிழ்ச்சியற்ற உணர்வுகளையும் கொடுக்கின்றன.

செயல்முறை:

ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏதாவது நல்லது மற்றும் அழகானது இருக்கின்றது. நான் சூழ்நிலையை உள்ளது போல் பார்க்க முயற்சி செய்யும்போது, இந்த நேர்மறையான அம்சத்தை என்னால் பார்க்க முடிகின்றது. அதன் பிறகு, என்னால் கடந்தகால அனுபவங்களுடன் சம்பந்தபட்ட எதிர்மறையான எண்ணங்களை விட்டுவிட முடிகின்றது. மேலும் நிகழ்காலத்தில் இருப்பதை என்னால் பாராட்ட முடிகின்றது.