01.02.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இதுவரை நீங்கள் கற்றவை அனைத்தையும் மறந்துவிடுங்கள். உங்களுடைய குழந்தைப் பருவ காலத்திற்குச் செல்லுங்கள். அப்பொழுதே உங்களால் இந்த ஆன்மீக கல்வியில் சித்தியடைய முடியும்.

பாடல்:
தெய்வீகப் புத்தியைப் பெற்றுள்ள குழந்தைகளின் அறிகுறிகள் யாவை?

பதில்:
அவர்கள் இந்தப் பழைய உலகைத் தமது பௌதீகக் கண்களால் பார்த்தும் பார்க்காமல் இருப்பார்கள். இந்தப் பழைய உலகம் இப்பொழுது முடிவடையப் போகிறது என்பது அவர்களின் புத்தியில் எப்பொழுதும் இருக்கும். இச்சரீரம் பழையதும், தமோபிரதானுமாகும். ஆத்மாவும் தமோபிரதான் ஆவார். ஆகவே, அவற்றின் மீது நாங்கள் ஏன் அன்பைக் கொண்டிருக்க வேண்டும்? தெய்வீகப் புத்தியைக் கொண்டுள்ள குழந்தைகளின் மீதே தந்தையின் இதயம் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறான குழந்தைகள் மாத்திரமே சதா தந்தையின் நினைவில் இருப்பதுடன், சேவையிலும் முன்னால் செல்லமுடியும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள் தாங்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலந்துவிடுவோம் என்று நம்புவதால், தங்கள் வீட்டையும், குடும்பத்தையும் துறக்கிறார்கள். இதனாலேயே அவர்கள் தாங்கள் உலகின் மீதுள்ள கவர்ச்சிகளைத் துறக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அதனையே அவர்கள் தொடர்ந்தும் பயிற்சி செய்கிறார்கள். அவர்கள் சென்று, ஏகாந்தத்தில் அமர்ந்துகொள்கின்றனர். அவர்கள் பஞ்ச பூதங்களைப்; பற்றிய ஞானத்தைக்; கொண்ட ஹத்த யோகிகள். அவர்கள் தாங்கள் பிரம்மாண்டத்துடன் இரண்டறக் கலந்துவிடுவோம் என்று நம்புகிறார்கள். இதனாலேயே அவர்கள் தங்கள் வீட்டையும், குடும்பத்தையும் துறப்பதுடன், அதிலுள்ள பற்றையும் முடித்துவிடுகிறார்கள். அவர்கள் ஆர்வமின்மையைக் கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் அவர்களின் அந்தப் பற்று உடனடியாகத் துண்டிக்கப்படுவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் தங்கள் மனைவி, குழந்தைகள் போன்றோரையும் நினைவு செய்கிறார்கள். இங்கு நீங்கள் புத்தியில் உள்ள ஞானத்தின் மூலம் அனைத்தையும் மறந்துவிட வேண்டும். எதனையும்; இலகுவில் மறந்துவிட முடியாது. நீங்கள் இப்பொழுது இந்த எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருக்கிறீர்கள். சந்நியாசிகள் அனைவரும் நினைவைக் கொண்டிருந்தாலும்;, தாங்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலந்துவிடுவோம் என்று அவர்களின் புத்தியில் நம்புவதால் அவர்கள் எந்தச் சரீர உணர்வையும் கொண்டிருக்கக் கூடாது என நினைக்கிறார்கள். அது ஹத்த யோகப் பாதையாகும். அவர்கள் தாங்கள் சரீரத்தை நீக்கிவிட்டு, பிரம்மதத்துவத்துடன் இரண்டறக் கலந்துவிடுவோம் என்று நம்புகிறார்கள். தாங்கள் எவ்வாறு அமைதி தாமத்திற்குச் செல்வோம் என்பது அவர்களுக்குத் தெரியாது. நீங்கள், உங்களின் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். வெளிநாடுகளிலிருந்து மக்கள் வரும்போது தாங்கள் மும்பாயூடாக வரவேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளீர்கள். உங்களுடைய தூய்மை நல்லது, உங்களுடைய ஞானம் நல்லது, உங்களுடைய நிறுவனம் நல்லது என்று பலர் கூறுகிறார்கள். தாய்மார் மிகவும் கடினமாக வேலை செய்கின்றனர். ஏனென்றால், அவர்கள் களைப்பின்றி விளங்கப்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் சரீரம், மனம், மற்றும் செல்வம் அனைத்தையும் உபயோகிப்பதால் விரும்பப்படுகிறார்கள். எவ்வாறாயினும், அந்த மக்கள் இதனைத் தாங்கள் பயிற்சி செய்யவேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அரிதாகவே எவரும் வெளிப்படுகிறார்கள். பல மில்லியன்கணக்கானோரில் ஒரு கைப்பிடி அளவினர் மாத்திரமே வெளிப்படுவார்கள், அதாவது, உங்களிடம் வருபவர்கள், என்று தந்தையும் கூறுகிறார். எவ்வாறாயினும் இந்தப் பழைய உலகம் முடிவடைய உள்ளது. தந்தை இப்போது வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு ஒரு காட்சி கிடைக்கின்றதோ, இல்லையோ, எல்லையற்ற தந்தை வந்துவிட்டார் என்று உள்ளுணர்வு கூறுகிறது. ஒரே ஒரு தந்தை மாத்திரமே உள்ளார் என்பது உங்களுக்கும் தெரியும். அந்தப் பரலோகத் தந்தையே ஞானக் கடலாவார். ஒரு பௌதீகத் தந்தையை ஞானக்கடல் என்று ஒருபோதும் அழைக்க முடியாது. தந்தையே வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுக்கிறார். இந்தப் பழைய உலகம் இப்போது முடிவடையப் போகிறது என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் 84 பிறவிகள் என்ற சக்கரத்தைப் பூர்த்தி செய்துள்ளோம். இப்பொழுது நாங்கள் அமைதி தாமத்தினூடாக, சந்தோஷ தாமத்திற்குத் திரும்பிச் செல்வதற்கான முயற்சி எடுக்கிறோம். நாங்கள் நிச்சயமாக அமைதி தாமத்திற்குச் செல்லவேண்டும். பின்னர் நாங்கள் அங்கிருந்து திரும்பிவர வேண்டும். இந்த விடயங்களால் மக்கள் குழம்பிப்போயுள்ளார்கள். எவராவது இறந்தால் அவர் வைகுந்தத்திற்குச் (சுவர்க்கம்) சென்றுவிட்டார் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் வைகுந்தம் எங்கே உள்ளது? பாரத மக்களுக்;கு மாத்திரமே வைகுந்தத்தின் பெயர் தெரியும்;. ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அது தெரியாது. அவர்கள் அப்பெயரைக் கேள்விப்பட்டதுடன், அதன் படங்களையும் பார்த்துள்ளார்கள். தில்வாலா ஆலயத்தைப் போன்று, தேவர்களின் ஆலயங்கள் பலவற்றை அவர்கள் பார்த்துள்ளார்கள். பல நூறாயிரம் அல்லது மில்லியன் ரூபாய் செலவில் அது கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவர்கள் அவற்றைக் கட்டுகிறார்கள். தேவர்கள் வைஷ்ணவர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் விஷ்ணுவின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். எவ்வாறாயினும் அவர்கள் தூய்மையானவர்கள். சத்தியயுகமே தூய உலகம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இதுவோ தூய்மையற்ற உலகமாகும். சத்திய யுகத்திலுள்ள சௌகரியங்கள் இங்கு இல்லை. இங்கு தானியங்கள் போன்ற அனைத்தும் தமோபிரதான் ஆகிவிட்டன. அதன் சுவையும் தமோபிரதான் ஆகிவிட்டது. திரான்ஸில் சென்ற புதல்விகள் திரும்பி வந்து தாங்கள் சுபிராஸ் (மாம்பழச் சாறு) பருகியதாகவும், அது மிகவும் சுவையானதாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். இங்கும்கூட, உங்களால் சமைக்கப்பட்ட உணவினை மக்கள் உண்ணும்போது, அதை நீங்கள் நன்றாகத் தயாரித்துள்ளதால், அது மிகவும் சுவையாக உள்ளது என்று கூறுகிறார்கள். அனைவரும் வயிறார உண்கிறார்கள். அது நீங்கள் யோகத்திலிருந்து சமைப்பதால்தான் சுவையாக உள்ளது என்றில்லை. அது வெறும் பயிற்சியே ஆகும். சிலர் மிக நன்றாகச் சமைப்பார்கள். அங்கு அனைத்துமே சதோபிரதானாக இருப்பதனால், அவற்றில் சக்தி நிறைந்துள்ளது. அது தமோபிரதான் ஆகும்போது, அதன் சக்தி குறைவடைகிறது. பின்னர் அதிலிருந்து நோய்கள், துன்பங்கள் போன்றவை ஏற்படுகின்றன. அதன் சரியான பெயரே துன்ப பூமியாகும். சந்தோஷ பூமியில், துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. மிகவும் சந்தோஷம் நிறைந்த ஓர் இடத்திற்கே நாங்கள்; செல்கிறோம். அது சுவர்க்கத்தின் சந்தோஷம் என அழைக்கப்படுகிறது. நீங்கள் தூய்மையாக வேண்டும், அதுவும் இந்தப் பிறவியில் மாத்திரமேயாகும். எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். இப்பொழுதாவது தூய்மையாகுங்கள்! முதலில் உங்களுக்கு இதனைக் கூறுபவர் யார் என்று எண்ணிப் பாருங்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கவேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து சந்தோஷம் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். உங்களுடைய பௌதீகத் தந்தையும், பரலோகத் தந்தையையே நினைவு செய்வதுடன் அவரின் புத்தியும் மேலேயே செல்கிறது. புத்தியில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள குழந்தைகளாகிய நீங்கள், இன்னும் சில நாட்களுக்கே இந்த உலகில் இருக்கப்போகின்றீர்கள் என்பதை உள்ளார்த்தமாக உணர்வீர்கள்;. சரீரம் ஒரு சிப்பியைப் போன்றது. ஆத்மாவும் ஒரு சிப்பியைப் போன்று ஆகிவிட்டார். இது ஆர்வமின்மை எனப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது நாடகத்தை அறிவீர்கள். பக்தி மார்க்கத்தின் பாதையும் தொடரவேண்டும். அனைவரும் பக்தியில் ஈடுபட்டுள்ளனர். அதனை வெறுக்கவேண்டிய தேவையில்லை. சந்நியாசிகள் மக்கள் அதனை வெறுக்குமாறு செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் வீட்டில் சந்தோஷமற்றிருக்கிறார்கள். வீட்டை விட்டுச் செல்வதனால் அவர்கள் சந்தோஷமானவர்கள் ஆகுவதில்லை. எவராலும் முக்தியடைய முடியாது. வந்தவர்கள் எவராலும் திரும்பிச்செல்ல முடியாது. அனைவரும் இங்கேயே உள்ளனர். ஒருவரேனும் நிர்வாண தாமத்திற்கோ அல்லது பிரம்ம தத்துவத்திற்கோ செல்லவில்லை. இன்னார் பிரம்மதத்துவத்துடன் இரண்டறக் கலந்துவிட்டார் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கச் சமய நூல்களில் உள்ளன. தந்தை கூறுகிறார்: அந்தச் சமய நூல்களில் உள்ளவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இதனாலேயே நீங்கள் எதனையும் கற்கவேண்டிய தேவை இல்லை. எவ்வாறாயினும் சிலருக்கு நாவல்களை வாசிக்கும் பழக்கம் உள்ளது. அவர்களிடம் முழு ஞானமும் இல்லை. அவர்கள் சேவல் ஞானிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நாவல்களை வாசித்துக்கொண்டே படுக்கைக்குச் செல்வார்கள். அப்போது அவர்களின் நிலை எவ்வாறிருக்கும்? இங்கு தந்தை கூறுகிறார்: நீங்கள் கற்றவை அனைத்தையும் மறந்துவிடுங்கள். உங்களை ஆன்மீகக் கல்வியில் ஈடுபடுத்துங்கள். கடவுளே இதனை உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்குத் தேவர்கள் ஆகுவீர்கள். இதுவரை கற்றவை அனைத்தையும் நீங்கள் மறந்துவிட வேண்டும். நேரடியாக மீண்டும் உங்கள் குழந்தைப் பருவத்திற்குச் செல்லுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அந்தக் கண்களால் நீங்கள் அனைத்தையும் பார்த்தாலும், அவற்றைப் பார்க்காதிருங்கள். நீங்கள் தெய்வீகப் புத்தியையும், தெய்வீகக் கண்ணையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே இந்த முழு உலகமும் பழையது, அது இப்போது முடிவடைய உள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இங்குள்ளவை அனைத்தும் மயான பூமியாகப் போகின்றது. ஆகவே, ஏன் நீங்கள் உங்கள் இதயத்தை அதனுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்? இப்பொழுது நீங்கள் தேவதைகளின் பூமியைச் சேர்ந்தவர்களாக ஆகவேண்டும். இப்பொழுது நீங்கள் மயான பூமிக்கும் (கப்ரிஸ்தான்) தேவதைகளின் பூமிக்கும் (பரிஸ்தான்) இடையில் அமர்ந்திருக்கிறீர்கள். தேவதைகளின் பூமி இப்போது படைக்கப்படுகிறது. நீங்கள் இப்பொழுது பழைய உலகில் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால், உங்கள் புத்தியின் யோகம் இப்போது அங்கேயே உள்ளது. நீங்கள் புதிய உலகிற்கான முயற்சியைச் செய்கின்றீர்கள். நீங்கள் அதி மேன்மையான மனிதர்கள் ஆகுவதற்காக, இப்போது நடுவில் அமர்ந்திருக்கிறீர்கள். மிகவும் மங்களகரமான இந்தச் சங்கம யுகத்தைப் பற்றி எவருக்கும் தெரியாது. தர்மம் செய்வதற்கான புண்ணிய மாதத்தைப் பற்றிய அல்லது புண்ணிய ஆண்டைப் பற்றிய அர்த்தத்தையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அதிபுண்ணிய சங்கமயுகம் ஒரு குறுகிய காலத்தைக் கொண்டதாகும். நீங்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் தாமதமாகச் சேர்ந்தால், அதிக முயற்சி செய்யவேண்டியிருக்கும். சிலருக்கு நினைவில் நிலைத்திருக்க முடியாதுள்ளது. மாயை தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்துகிறாள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்தப் பழைய உலகம் முடிவடையப்போகிறது. தந்தை இங்கு அமர்ந்திருக்கின்ற போதிலும், நீங்கள் அனைத்தையும் பார்;க்கின்ற போதிலும், இவை அனைத்தும் முடிவடையப்போகின்றது என்பது உங்கள் புத்திக்கும் தெரியும். எதுவுமே எஞ்சியிருக்காது. இது பழைய உலகமாகும். அத்துடன் உங்களுக்கு அதில் ஆர்வமில்லை. சரீரதாரிகள் அனைவரும் பழையவர்கள் ஆகிவிட்டார்கள். சரீரம் பழையதும், தமோபிரதானுமாகும். ஆத்மாவும் தமோபிரதான் ஆவார். அவ்வாறானவற்றைப் பார்த்து நாங்கள் என்ன செய்யவேண்டும்? இவை எதுவும் எஞ்சியிருக்க மாட்டாது. ஆகவே எங்களுக்கு அவற்றில் அன்பு இல்லை. தந்தையை மிக நன்றாக நினைவு செய்வதுடன், சேவையும் செய்கின்ற குழந்தைகள் தந்தையின் இதயத்தைத் தொட்டுவிடுகிறார்கள். எவ்வாறாயினும் அனைவரும் குழந்தைகளே. பல குழந்தைகள் உள்ளார்கள். அனைவரும் அவரைப் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு பிரஜாபிதா பிரம்மாவையும் தெரியாது. அவர்கள் பிரஜாபிதா பிரம்மாவின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தாம் அவரிடமிருந்து எதனைப் பெறுகின்றோம் என்பது அவர்களுக்குத் தெரியாது. பிரம்மாவிற்கு ஓர் ஆலயம் உள்ளது. அங்கு அவர்கள் அவரை ஒரு தாடியுடன் காட்டியுள்ளார்கள். எவ்வாறாயினும் நீங்கள் அவரிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதில்லை என்பதால் அவரை எவரும் நினைவுசெய்வதில்லை. ஆத்மாக்கள், தங்கள் லௌகீகத் தந்தையிடமிருந்தும், பரலோகத் தந்தையிடமிருந்தும் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். எவருக்கும் பிரஜாபிதா பிரம்மாவைத் தெரியாது. இது அற்புதமானது! தந்தையாக இருந்தும் அவர் உங்களுக்கு ஓர் ஆஸ்தியை கொடுக்கவில்லையாயின், அவர் அலௌகீகமாகவே இருக்க வேண்டும், இல்லையா? எல்லைக்குட்பட்ட ஆஸ்தியும், எல்லையற்ற ஆஸ்தியும் உள்ளன. இடைப்பட்ட வேறு எந்த ஆஸ்;தியும் இல்லை. அவர் பிரஜாபிதா என்று அழைக்கப்பட்டாலும், அவரிடமிருந்து ஆஸ்தி என்று எதுவுமில்லை. இந்த அலௌகீகத் தந்தையும் தனது ஆஸ்தியைப் பரலோகத் தந்தையிடமிருந்தே பெறுகிறார். ஆகவே அவர் எவ்வாறு ஒர் ஆஸ்தியைக் கொடுக்க முடியும்.? பரலோகத் தந்தை அவர் மூலமாக அதனைக் கொடுக்கிறார். அவர் இரதமாவார். ஏன் நீங்கள் அவரை நினைவு செய்யவேண்டும்? அவரும்கூட அந்தத் தந்தையையே நினைவு செய்யவேண்டும். நீங்கள் பிரம்மாவைக் கடவுள் என்று கருதுவதாக அம்மக்கள் நினைக்கிறார்கள். நாங்கள் அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை, நாங்கள் சிவபாபாவிடமிருந்தே ஆஸ்தியைப் பெறுகிறோம், இவர் இடையிலுள்ள முகவராவார், அவரும் எங்களைப் போன்ற ஒரு மாணவராவார் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். இதில் பயம் என்ற கேள்விக்கு இடமில்லை. தந்தை கூறுகிறார்: இந்நேரத்தில் முழு உலகமும் தமோபிரதானாக உள்ளது. நீங்கள் யோக சக்தியின் மூலம் சதோபிரதான் ஆகவேண்டும். உங்களுடைய பௌதீகத் தந்தையிடமிருந்து நீங்கள் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியையே பெறுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் புத்தியை எல்லையற்றதில் இணைக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: தந்தை ஒருவரிடமிருந்து அல்லாது வேறு எவரிடமிருந்தும் நீங்கள் எதனையும் பெறமாட்டீர்கள். தேவர்;களிடமிருந்தும் பெறமாட்டீர்கள். இப்போது அனைவரும் தமோபிரதானாக இருக்கிறார்கள். எப்படியும், நீங்கள் உங்கள் பௌதீகத் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆகவே இந்த இலக்ஷ்மி நாராயணனிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் பிறப்பு இறப்பு அற்றவர்களென்றும், அவர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லை என்றும், அவர்கள் ஒருபோதும் தமோபிரதான் ஆகுவதில்லை என்றும் அந்த மக்கள் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும் சதோபிரதானாக இருந்தவர்கள், பின்னர் தமோபிரதான் நிலைக்கு வந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இலக்ஷ்மி நாராயணன் திருமணமான தம்பதிகள் என்பதால், ஸ்ரீகிருஷ்ணர் அவர்களிலும் பார்க்க மேன்மையானவராகக் கருதப்படுகிறார். ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததிலிருந்து தூய்மையானவர் ஆதலால், அவர் அதிகம் புகழப்படுகிறார். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைத் தொட்டிலிலிட்டு ஆட்டுகிறார்கள். அத்துடன் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்கள். ஏன் அவர்கள் இலக்ஷ்மி நாராயணனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை? ஞானம் இல்லாததால், அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைத் துவாபர யுகத்தில் காட்டியுள்ளார்கள். கீதையின் ஞானம் துவாபர யுகத்தில் கொடுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இதனை யாருக்காவது விளங்கப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது! தொன்றுதொட்ட காலம்; முதல் ஞானம் இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். தொன்றுதொட்ட காலம் என்பது எப்போது இருந்து உள்ளது? இது எவருக்கும் தெரியாது. அவர்களுக்குத் தாங்கள் எப்போது முதல் பூஜிக்க ஆரம்பித்தார்கள் என்றும் தெரியாது. இதனாலேயே அவர்களுக்குப் படைப்பவரைப் பற்றியோ அல்லது உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியோ தெரியாது. ஒவ்வொரு கல்பமும் நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் என்று கூறுவதால், அவர்கள் தொன்றுதொட்டு என்று கூறுகிறார்கள். அவர்களுக்குக் காலமோ அல்லது திகதியோ தெரியாது. அவர்கள் இலக்ஷ்மி நாராயணனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. அதுவே அறியாமை என்ற இருளாகும். உங்களில் சிலரும்கூட இந்த விடயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாது இருக்கிறீர்;கள். இதனாலேயே யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்று கூறப்பட்டுள்ளது. முதலை யானையை விழுங்கியது. முதலை பெரியது. பாம்பு தவளையை விழுங்குவது போன்று அது முழுதாகவே உங்களை விழுங்கிவிடும். கடவுள் ஏன் பூந்தோட்டத்தின் அதிபதி என்றும், தோட்டக்காரர் என்றும் படகோட்டி என்றும் அழைக்கப்படுகிறார்? இப்போது, நீங்கள் அதனைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை வந்து, உங்களை நச்சுக் கடலிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார். அவர் உங்களை அக்கரைக்கு அழைத்துச்; செல்வதனாலேயே நீங்கள் கூறுகிறீர்கள்: எனது படகை அக்கரைக்குக் கொண்டுசெல்லுங்கள். எவ்வாறு நீங்கள் அக்கரைக்குச் செல்கிறீர்கள் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். பாபா எங்களைப் பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு வேதனை அல்லது துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் இதனைக் கேட்டு மற்றவர்களுக்கும் கூறுகிறீர்கள்: எங்கள் படகை அக்கரைக்குக் கொண்டுசெல்லும் படகோட்டி எங்களுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். முன்னர் நீங்கள் பாற்கடலில் இருந்தீர்கள். இப்போது நச்சுக் கடலை அடைந்துவிட்டீர்கள். முதலில் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். சுவர்க்கமே உலக அதிசயமாகும். முழு உலகினதும் ஆன்மீக அதிசயம் சுவர்க்கமாகும். அதன் பெயரைக் கேட்டதும் நீங்கள் சந்தோஷமடைகிறீர்கள். நீங்கள் சுவர்க்கத்தில் இருப்பீர்கள். இங்கு அவர்கள் ஏழு அதிசயங்களைக் காட்டுகிறார்கள். அவர்கள் தாஜ்மஹாலை ஓர் அதிசயமென அழைக்கிறார்கள். ஆனால் எவராலும் அங்கு வாழமுடியாது. நீங்கள் உலக அதிசயத்திற்கு அதிபதிகள் ஆகுகிறீர்கள். தந்தை நீங்கள் வாழ்வதற்காக மிகவும் அற்புதமான சுவர்க்கத்தை உருவாக்குகிறார். நீங்கள் 21 பிறவிகளுக்கு பல்கோடீஸ்வரர்கள் ஆகுகிறீர்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அக்கரைக்குச் செல்கின்றீர்கள் என்று சந்தோஷமடைய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பல தடவைகள் சுவர்க்கத்திற்குச் சென்றுள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்தும் இச்சக்கரத்தைச் சுற்றி வருகிறீர்கள். புதிய உலகில் முதலாவதாக வருவதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும். ஒரு பழைய வீட்டிற்குச் செல்வதுபோன்று நீங்கள்; உணரமாட்டீர்கள். புதிய உலகிற்கு நீங்கள் செல்வதற்கு முயற்சி செய்யவேண்டுமென்று பாபா வலியுறுத்திக் கூறுகிறார். பாபா எங்களை உலகின் அதிசயத்திற்கு அதிபதிகள் ஆக்குகிறார். ஆகவே ஏன் நாங்கள் அவ்வாறான ஒரு தந்தையை நினைவு செய்வதில்லை? நீங்கள் அதிக முயற்சி செய்யவேண்டும். இந்த உலகைப் பார்த்தும் பார்க்காதது போன்றிருங்கள். தந்தை கூறுகிறார்: நான் அனைத்தையும் பார்த்தாலும், நான் ஒரு சில நாட்களுக்கே பயணியாக இருக்கிறேன் என்ற ஞானம் என்னிடம் உள்ளது. அதேபோன்று நீங்களும் உங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். ஆகவே அதிலிருந்து உங்கள் பற்றை நீக்கிவிடுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஆன்மீகக் கல்வியைக் கற்பதில் சதா மும்முரமாக இருங்கள். நாவல்கள் போன்றவற்றை வாசிக்கும் எந்தத் தீய பழக்கத்தையும் கொண்டிராதீர்கள். இதுவரை நீங்கள் கற்றவை அனைத்தையும் மறந்து, தந்தையை நினைவு செய்யுங்கள்.

2. உங்களை ஒரு விருந்தாளியாகக் கருதியவாறு இந்த உலகில் வாழுங்கள். அதன்மீது எந்த அன்பையும் கொண்டிராதீர்கள். அதனைப் பார்த்தும் பார்க்காதிருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தைரியம் மற்றும் ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகளுடன் பறக்கும் ஸ்திதியைக் கொண்டுள்ள தீவிர முயற்சியாளர் ஆகுவீர்களாக.

பறக்கும் ஸ்திதியின் இரண்டு இறக்கைகளும் தைரியமும் மற்றும் ஊக்கம், உற்சாகமும் ஆகும். எந்தவொரு பணியிலும் வெற்றி அடைவதற்கு, தைரியத்தையும் மற்றும் ஊக்கம், உற்சாகத்தையும் கொண்டிருத்தல் மிகவும் அத்தியாவசியமானதாகும். எங்கும் ஊக்கமோ அல்லது உற்சாகமோ இல்லையோ, அங்கே களைப்புக் காணப்படும். களைப்படைந்தவர்களால் வெற்றி பெற முடியாது. இந்த நேரத்திற்கேற்ப, உங்களிடம் பறக்கும் ஸ்திதி இல்லாதவரை உங்களால் உங்களின் இலக்கை அடைய முடியாது. ஏனென்றால், நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி இந்த ஒரேயொரு பிறவிக்கே ஆகும். ஆனால் நீங்கள் பெறும் பேறுகளோ, 21 பிறவிகளுக்கு மட்டுமன்றி, முழுக்கல்பத்திற்கும் ஆகும். எனவே, இந்த நேரத்தின் புரிந்துணர்வை நீங்கள் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்தால், உங்களின் முயற்சிகள் இயல்பாகவே தீவிரமடையும்.

சுலோகம்:
எல்லோருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே, காமதேனு (எல்லோரின் ஆசைகளையும் பூர்த்தி செய்யும் பசு) ஆவார்கள்.