03.02.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆவீர்களாக. நீங்கள் வெளிச்ச வீடுகள் ஆக வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இதிலே கவனயீனமாக இருக்காதீர்கள்.

பாடல்:
நீங்கள் எவ்வகையில் அதி அற்புதமான மாணவர்கள் ஆகுகின்றீர்கள்?

பதில்:
நீங்கள் உங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழ்வதுடன், உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்காக எட்டு மணித்தியாலங்கள் வேலையும் செய்கின்றீர்கள். எவ்வாறாயினும், அத்துடன், உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்காக நீங்கள் மற்றவர்களைத் தந்தைக்கு சமமானவர்கள் ஆக்கும் சேவையையும் எட்டு மணித்தியாலங்களுக்குச் செய்கின்றீர்கள். அனைத்தையும் செய்யும் பொழுதும், நீங்கள் உங்கள் தந்தையையும் வீட்டையும் நினைவு செய்கின்றீர்கள். இது உங்கள் அற்புதமான மாணவ வாழ்க்கையாகும். ஞானம் மிகவும் இலகுவானது. நீங்கள் தூய்மையாகுவதற்கான முயற்சியையே செய்கின்றீர்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்;ப வரிசைக்கிரமமாகத் தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகின்றார்: நீங்கள் வரிசைக்கிரமமாகவே அசரீரி உலகையும் நினைவு செய்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஆதியில் அமைதிதாம வாசிகளாக இருந்து, பின்னர் சந்தோஷ தாமத்துக்குச் செல்கிறீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் நினைவு செய்து கொண்டிருக்கிறீர்கள். அநேகமாக, இதை நீங்கள் உங்களுக்குள் புரிந்து கொள்;கிறீர்கள். நீங்கள் அசரீரி உலகிலிருந்து கீழிறங்கி வந்த காலம் முதல், இவ்வுலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதும் உங்கள் புத்தியில் இருக்கிறது. நாங்கள் இந்நேரத்தில் பிராமணர்களாக உள்ளோம். பின்னர் நாங்கள் தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், அதன்பின்னர் சூத்திரர்கள் ஆகுவோம். இச்சக்கரம் உங்கள் புத்தியில் சுழல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானம் முழுவதையும் உங்கள் புத்தியில் கொண்டுள்ளீர்கள். தந்தை இதை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். முன்னர் நீங்கள் இதை அறிந்திருக்கவில்;லை. இப்பொழுது, நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள். நாளுக்கு நாள், உங்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும். நீங்கள் ஏனைய பலருக்கும் கற்பிக்கின்றீர்கள். நிச்சயமாக நீங்களே முதலில் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுவீர்கள். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கையில் அவரே உங்கள் தந்தை என்பதை உங்கள் புத்தி அறியும். அவர் எங்களுக்குக் கற்பிக்கும் பரம ஆசிரியரும் ஆவார். நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றிச் செல்கிறோம் என அவர் எங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார் உங்கள் புத்தி நிச்சயமாக இதை நினைவு செய்யும். நீங்கள் இதை ஒவ்வொரு கணமும் உங்கள் புத்தியினால் நினைவு செய்ய வேண்டும். இது ஒரு பெரிய பாடம் அல்ல. இது ஒரு விநாடிக்குரிய பாடம். நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்பதும், பின்னர் இங்கு நீங்கள் எவ்வாறு உங்கள் பாகங்களை நடிப்பதற்கு வருகிறீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் பிரவேசிக்கின்றன. இதுவே 84 பிறவிகளின் சக்கரம். சத்திய யுகத்தில் இத்தனை பிறவிகள் உள்ளன, திரேதா யுகத்தில் இத்தனை பிறவிகள் உள்ளன. நீங்கள் இந்தச் சக்கரத்தை நினைவு செய்;கிறீர்கள், இல்லையா? நீங்கள் பெற்ற அந்தஸ்தையும், நீங்கள் நடித்த பாகங்களையும் உங்கள் புத்தி நிச்சயமாக நினைவு செய்யும். நீங்கள் இரட்டைக் கிரீடம் உடையவர்களாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் ஒற்றைக் கிரீடம் உடையவர்கள் ஆகினீர்கள் என நீங்கள் கூறுவீர்கள். பின்னர் நீங்கள் முழு இராச்சியத்தையும் இழந்து, தமோபிரதான் ஆகினீர்கள். இச்சக்கரம் சுழல வேண்டும். இதனாலேயே நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுகிறீர்கள். ஆத்மா ஞானம் பெற்றுள்ளார். ஆத்மா ஒரு காட்சியைப் பெற்றுள்ளார். தான் இவ்வாறு சக்கரத்தைச் சுற்றிச் சென்றார் என்பதையும், தான் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதையும் ஆத்மா அறிவார். தந்தை கூறியுள்ளார்: என்னை நினைவு செய்வீர்களாயின் நீங்கள் உங்கள் வீட்டை அடைவீர்கள். நீங்கள் இப்பொழுது இந்த ஸ்திதியில் இருக்கிறீர்கள் என்பதல்ல. இல்லை. வெளியுலக விடயங்கள் பல உங்கள் புத்தியில் பிரவேசிக்கின்றன. ஒருவர் ஒரு விடயத்தையும், இன்னொருவர் வேறொரு விடயத்தையும் நினைவுசெய்து கொண்டிருப்பார்கள். இங்கே தந்தை கூறுகிறார்: ஏனைய விடயங்கள் அனைத்தையும் அமிழ்த்தி, ஓரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் பெறுகின்ற ஸ்ரீமத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகி, இறுதிவரை முயற்சியும் செய்ய வேண்டும். முன்னர், நீங்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். அவரை நினைவு செய்வதனால், நீங்கள் அனைத்து விடயங்களையும் அறிந்து கொள்கிறீர்கள். படைப்பவரினதும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் அனைத்து இரகசியங்களும் உங்கள் புத்தியில் பிரவேசிக்கின்றன. உங்களுக்கு இப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. நீங்கள் அவரை வீட்டிலும் நினைவு செய்ய முடியும். இது புத்தியினால் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். நீங்கள் அற்புதமான மாணவர்கள். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் எட்டு மணித்தியாலங்கள் ஓய்வு எடுக்கலாம், எட்டு மணித்தியாலங்கள் உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்காக வேலை செய்யலாம். நீங்கள் அந்த வியாபாரம் போன்றவற்றையும் செய்ய வேண்டும். அத்துடன், தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ள, மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்குகின்ற வியாபாரமும் உங்கள் ஜீவனோபாயத்துக்குரியதே ஆகும். அது தற்காலிகமானது, ஆனால் இந்த ஜீவனோபாயமோ 21 பிறவிகளுக்கான உங்கள் சரீரங்களுக்கு உரியது. இதுவும் நீங்கள் நடிக்கின்ற பாகத்தில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஒருவர் எவ்வளவுக்கு முயற்சி செய்கின்றாரோ, அதற்கேற்பவே பின்னர் பக்திமார்க்கத்தில் பூஜிக்கப்படுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் இவை அனைத்தையும் கிரகிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் நடிகர்கள். பாபா ஞானத்தைக் கொடுக்கின்ற பாகத்தையே நடிக்கின்றார். எவ்வாறாயினும் நீங்கள் உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். பாபா அதனைச் செய்ய மாட்டார். எவ்வாறு இவ்வுலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றது என்பதையும், எவ்வாறு சக்கரம் சுழல்கின்றது என்பதையும் விளங்கப்படுத்துவதற்காகத் தந்தை வருகிறார். அவர் இதனை விளங்கப்படுத்துவதற்கே வருகிறார். அவர் தொடர்ந்தும் இதனைச் சாதுரியமாக விளங்கப்படுத்துகிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, தவறுகள் எதனையும் செய்யாதீர்கள். சுயதரிசனச் சக்கரதாரிகளாகவும் வெளிச்ச வீடுகளாகவும்; ஆகுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். சரீரம் இல்லாது ஓர் ஆத்மாவினால் தனது பாகத்தை நடிக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் முற்றிலும் எதனையும் அறியார்கள். அவர்கள் உங்களிடம் வந்து இது சிறந்தது என்று கூறினாலும் அவர்களால் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகமுடியாது. நீங்கள் இதனை இங்கு பெருமளவிற்குப் பயிற்சி செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் எங்கு சென்றாலும், ஒரு ஞானக்கடல் போன்று ஆகுவீர்கள். இது மாணவர்கள் கற்ற பின்னர் கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஆகும்பொழுது கற்பிப்பதைப் போன்றதோ அல்லது தங்களை வியாபாரத்தில் ஈடுபடுத்திக் கொள்வது போன்றதோ ஆகும். ஓர் ஆசிரியர் ஆகுவதே உங்கள் தொழிலாகும். அனைவரையும் ஒரு சுயதரிசனச் சக்கரதாரி ஆக்குங்கள். எவ்வாறு இரட்டைக் கிரீடமுடைய அரசர்கள் ஒற்றைக் கிரீடம் உடையவர்கள் ஆகுகிறார்கள் என்ற படத்தைக் குழந்தைகள் உருவாக்கியுள்ளார்கள். அது மிகவும் சிறந்தது. எவ்வாறாயினும், அவர்கள் எப்பொழுதிலிருந்து எப்பொழுது வரை இரட்டைக் கிரீடத்தைக் கொண்டிருந்தார்கள்? எப்பொழுதிலிருந்து எப்பொழுது வரை ஒற்றைக் கிரீடமுடையவர்கள் ஆகினார்கள்? பின்னர் எப்பொழுது, எவ்வாறு அவர்களிடமிருந்து இராச்சியம் அபகரிக்கப்பட்டது? நீங்கள் அந்தத் திகதிகளை எழுத வேண்டும். இது ஒரு பெரிய எல்லையற்ற நாடகமாகும். நீங்கள் மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பது நிச்சயமே. நீங்கள் இப்பொழுது பிராமணர்கள். பிராமணர்கள் மாத்திரமே சங்கமயுகத்திற்கு உரியவர்கள். நீங்கள் அவர்களுக்குக் கூறும்வரை எவருமே இதை அறியார்கள். இது உங்கள் அலௌகீகப் பிறவி. நீங்கள் லௌகீகமானவரிடமிருந்தும், பரலோகத்திலிருப்பவரிடமிருந்தும் ஓர் ஆஸ்;தியைப் பெறுகிறீர்கள். அலௌகீகமானவரிடமிருந்து உங்களால் ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. தந்தை இவர் மூலம் உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். ஓ பிரபு (கடவுளே)! என்று பாடப்படுகின்றது. ஓ பிரஜாபிதா பிரம்மா என ஒருபொழுதும் கூறப்படுவதில்லை. நீங்கள் உங்கள் லௌகீகத் தந்தையையும், பரலோகத் தந்தையையும் நினைவு செய்கிறீர்கள். வேறு எவரும் இவ்விடயங்களை அறியார்கள். நீங்கள் அவற்றை அறிவீர்கள். நீங்கள் பரலோகத் தந்தையிடமிருந்து ஓர் அழிவற்ற ஆஸ்தியையும், லௌகீகத் தந்தையிடமிருந்து ஓர் அழியக்கூடிய ஆஸ்தியையும் பெறுகின்றீர்கள். ஒருவர் ஓர் அரசரின் குழந்தையாக இருந்து, ஐந்து மில்லியன் ஆஸ்;தியைப் பெறலாம். எவ்வாறாயினும், நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகின்ற ஆஸ்தியை உங்கள் முன்னால் வைத்து மற்றையதுடன் ஒப்பிட்டால், இந்த ஆஸ்தி அழிவற்றதும், ஆனால் அந்த அதுவோ முடிவடைந்து விடும் எனவும்; கூறுவீர்கள். இன்று மில்லியன்களைக் கொண்டிருப்பவர்களை, மாயை பற்றிப் பிடித்துள்ளாள்;, அவர்கள் இங்கு வரமாட்டார்கள். தந்தை ஏழைகளின் பிரபு ஆவார். பாரதம் மிகவும் ஏழ்மையானது. பாரதத்தில் உள்ள பலர் ஏழைகள். நீங்கள் இப்பொழுது பலருக்கும் நன்மை அளிப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள். பொதுவாக, நோய்வாய்ப்படுகின்றவர்கள் விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நினைக்கிறார்கள்: வாழ்வதில் பயனில்லை. நான் முக்திதாமத்திற்குச் செல்லக்கூடிய பாதையைக் கண்டடைய வேண்டும். அவர்கள் வேதனையிலிருந்து விடுபடுவதற்காகவே முக்தியை வேண்டுகின்றார்கள். சத்தியயுகத்தில் வேதனைகள் எதுவும் இல்லாததால், அவர்கள் எதனையும் வேண்ட மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். பாபாவின் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும். சூரிய, சந்திர வம்சத்துத் தேவர்களாக ஆகவுள்ளவர்கள் மாத்திரமே தாங்கள் செய்கின்ற முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக வந்து இந்த ஞானத்தைப் பெறுவார்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையை விட்டுவிட்டு, வேறு எங்கும் செல்ல மாட்டீர்கள். தந்தையை நேசிப்பவர்களினால் இந்த ஞானம் மிக இலகுவானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும், ஆனாலும் நீங்கள் தூய்மையாகுவதிலேயே மாயை தடைகளை ஏற்படுத்துகின்றாள். நீங்கள் எதையிட்டேனும் ஏதாவது தவறுகள் செய்யும் பொழுது, அந்தத் தவறுகளினால் தோற்கடிக்கப்படுகின்றீர்கள். குத்துச் சண்டையின் உதாரணம் ஒப்பிட்டுப் பார்ப்பதற்குச் சிறந்த ஒன்றாகும். குத்துச்சண்டையில் ஒவ்வொருவரும் மற்றவரைத் தோற்கடிப்பதற்கே முயற்சி செய்கிறார்கள். மாயை உங்களைத் தோற்கடிக்கின்றாள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இதற்கு முயற்சி தேவைப்படுகிறது என்பதைத் தந்தை புரிந்து கொள்கிறார். தந்தை உங்களுக்கு ஓர் இலகுவான வழிமுறையைக் காட்டுகின்றார். நான் ஓர் ஆத்மா. நான் இந்தச் சரீரத்தை நீக்கி இன்னுமொன்றைப் பெற்று, எனது பாகத்தை நடிக்கின்றேன். நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் புத்தியின் யோகத்தை மாயை துண்டிக்கின்றாள் என்று பாபா உணர்கின்றார். இது வரிசைக்கிரமமானது. இதன் அடிப்படையிலேயே இராச்சியம் உருவாக்கப்படுகிறது. அனைவருமே ஒரேமாதிரியானவர்களாக இருந்தால், ஓர் இராச்சியம் உருவாக்கப்பட மாட்டாது. அரசர்கள், அரசிகள், செல்வந்தர்கள், பிரஜைகள் ஆகிய அனைவரும் உருவாக்கப்பட வேண்டும். உங்களைத் தவிர வேறு எவரும் இவ்விடயங்களை அறியார். நாங்கள் எங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். உங்கள் மத்தியிலும் விசேட, அன்புக்குரியவர்கள் மாத்திரமே இவ்விடயங்களை நினைவு செய்கின்றார்கள். இவ்விடயங்கள் என்றுமே மறக்கப்படக்கூடாது. நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவதால், பெருமளவு சந்தோஷம் இருக்கும். நீங்கள் வெறுமனே அதைப் பற்றிப் பேசுவதால் அன்றி, முயற்சி செய்வதினால் மாத்திரமே அவ்வாறு ஆக முடியும். பாபா இங்கு வந்தவுடன் அவர் வினவுகின்றார்: குழந்தைகளே, எச்சரிக்கையாக இருங்கள்! நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகளாக இங்கு அமர்ந்திருக்கிறீர்களா? சுயதரிசனச் சக்கரதாரியாகவும் இருக்கின்ற தந்தை இவரினுள் பிரவேசிக்கிறார். விஷ்ணு சுயதரிசனச் சக்கரதாரி என மக்கள் நினைக்கிறார்கள். அவரே (விஷ்ணு) இலக்ஷ்மியும் நாராயணனும் என்பதை அவர்கள் அறியார்கள். அவர்கள் இலக்ஷ்மி நாராயணனின் அந்தஸ்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்தவர் யார்? கிருஷ்ணர் சுயதரிசனச் சக்கரத்தினால் அசுரர்களைக் கொல்வதாக அவர்கள் சித்தரிக்கிறார்கள். அந்தப் படங்களை உருவாக்கியவர்களையிட்டு நீங்கள் வியப்படைகிறீர்கள். இணைந்த இல்லற ஆச்சிரமத்தின் அடையாளமே விஷ்ணு ஆவார். அந்த உருவம் சிறந்தது, ஆனால் அது சரியான உருவமல்ல. முன்னர் நீங்களும் அதனை அறிந்திருக்கவில்லை. எவ்வாறு நான்கு கரங்களுடைய ஒருவர் இங்கு வர முடியும்? நீங்களும் இதை வரிசைக்கிரமமாகவே அறிவீPர்கள். தந்தை கூறுகின்றார்: அனைத்தும் நீங்கள் செய்கின்ற முயற்சியிலேயே தங்கியுள்ளது. தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது அதிகபட்சமான, முதல் இலக்க முயற்சியாக இருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு நேரம் கொடுத்துள்ளார். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும். இல்லாவிடில் உங்கள் குழந்தைகள் போன்றோரை யார் பராமரிப்பார்கள்? அனைத்தையும் செய்யும் பொழுதும் நீங்கள் இதைப் பயிற்சி செய்ய வேண்டும். எவ்வாறாயினும், வேறு எதுவும் இல்லை. அவர்கள் கிருஷ்ணர் சுயதரிசனச் சக்கரத்தின் மூலம் அகாசூரன், பகாசூhன் போன்ற அசுரர்களைக் கொல்வதாகச் சித்தரித்துள்ளனர். சக்கரம் போன்றவை என்ற கேள்விக்கே இடமில்லை என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். அதிகளவு வேறுபாடு உள்ளது! தந்தை மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். மனிதர்களினால் மனிதர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. மனிதர்களினால் மனிதர்களுக்குச் சற்கதியை அருள முடியாது. அவர்கள் எவராலுமே படைப்பவரின் அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்த முடியாது. தந்தை மாத்திரமே உங்களுக்குச் சுயதரிசனச் சக்கரத்தின் அர்த்தத்தை விளங்கப்படுத்தியுள்ளார். அவர்கள் சமயநூல்களில் அத்தகைய கதைகளை எழுதியுள்ளார்கள், கேட்கவும் வேண்டாம்! அவர்கள் கிருஷ்ணரை வன்முறையாளராகக் காட்டியுள்ளார்கள். இங்கு, நீங்கள் ஏகாந்தத்தில் இருந்து ஞானக்கடலைக் கடைய வேண்டும். இரவில் பாதுகாப்புக் கடமையில் உள்ளவர்களுக்கு அது மிகச்சிறந்த நேரமாகும்; அவர்களால் பெருமளவு நினைவினைக் கொண்டிருக்க முடியும். தந்தையை நினைவு செய்யும் பொழுது, தொடர்ந்தும் சுயதரிசனச் சக்கரத்தையும் சுழற்றுங்கள். நீங்கள் சந்தோஷமாக நினைவில் நிலைத்திருந்தால், அந்தச் சந்தோஷத்தினால் உங்கள் உறக்கத்தையும் இழப்பீர்கள். செல்வத்தைப் பெறுபவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்;. அவர்கள் ஒருபொழுதும் தூங்கிவிழ மாட்டார்கள். நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்கள் இதில் உங்களை மிக நன்றாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நாடகத்திற்கேற்ப, எது நிகழ்ந்தாலும் நல்லதே என்பதைத் தந்தை அறிவார். அவர் இன்னமும் தொடர்ந்தும் உங்களை முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார். தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். ஞானத்தையோ அல்லது யோகத்தையோ கொண்டிராத பலர் உள்ளனர். ஓர் அறிவாளியோ அல்லது ஒரு கல்விமானோ வந்தால் அவர்களால் அவருடன் பேச முடியாதிருக்கும். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதிலே சிறந்தவர்கள் யார் என்பதைச் சேவாதாரிக் குழந்தைகள் அறிவார்கள். வந்திருப்பவர் ஓர் அறிவாளியும், நன்கு கற்றவரும்;, ஒரு நல்லவரும் என்பதையும், ஆனால் அவருக்கு விளங்கப்படுத்துபவர் ஒரு புத்து (விவேகமற்றவர்) என்பதையும் பாபா பார்க்கும் பொழுது, பாபாவே வந்து அந்நபரை ஈடேற்ற முடியும். எனவே, உண்மையான குழந்தைகள், தாங்கள் போதுமான ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், தந்தையே அமர்ந்திருந்து அந்நபருக்கு விளங்கப்படுத்தினார் என்றும் கூறுவார்கள். சிலர் அகங்காரம் கொண்டவர்கள் ஆகுகின்றார்கள். அவர் வந்து, உதவி செய்வது நாடகத்தில் அவரது பாகமாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகம் தனித்துவமானது. அதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு பரந்த, எல்லையற்ற புத்தி தேவைப்படுகின்றது. அனைவருமே அழகானவர்களாக இருக்கின்ற, ஓர் இராச்சியத்தை நீங்கள் இப்பொழுது ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கு அவலட்சணமானவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். நீங்களும் ஒரு படத்தை உருவாக்கி அவலட்சணமானவரும் அழகானவரும் என எழுத முடியும். 63 பிறவிகளாகக் காமச்சிதையில் அமர்ந்ததால், நீங்கள் மிகவும் அவலட்சணமானவர்கள் ஆகிவிட்டீர்கள்! ஆத்மா அவ்வாறு ஆகிவிட்டார். அவர்கள் இலக்ஷ்மி, நாராயணனின் அவலட்சணமான ரூபத்தையும் உருவாக்கியுள்ளார்கள். ஆத்மாவே அவலட்சணமானவர் ஆகுகின்றார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் சத்தியயுகத்தின் அதிபதிகளாக இருந்தார்கள், அவர்கள் அழகானவர்களாக இருந்தார்கள், பின்னர், காமச்சிதையில் அமர்ந்ததால் அவர்கள் அவலட்சணமானவர்கள் ஆகினார்கள். ஆத்மா மறுபிறவி எடுத்து, தமோபிரதான் ஆகுகின்றார். ஆத்மா அவலட்சணமானவர் ஆகுகிறார், சரீரமும் அவலட்சணமாகுகின்றது. நீங்கள் அவர்களிடம் நகைச்சுவையாக வினவ முடியும்: அவர்கள் ஏன் சில இடங்களில் இலக்ஷ்மி நாராயணனை அழகானவர்களாகவும், ஏனைய இடங்களில் அவலட்சணமானவர்களாகவும் காட்டியுள்ளார்கள்;? அதற்கான காரணம் என்ன? அவர்கள் ஞானம் எதனையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஏன் கிருஷ்ணரின் அழகான உருவத்தையும், பின்னர் ஓர் அழகற்ற உருவத்தையும் உருவாக்குகின்றார்கள்? இந்நேரத்தில் நீங்கள் அதனை அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சந்தோஷம் நிறைந்தவர்களாக இருப்பதற்கு, ஏகாந்தத்தில் இருந்து நீங்கள் பெற்றுள்ள ஞானச் செல்வத்தைக் கடையுங்கள். தூய்மையாகுவதற்கும், சதா நோயிலிருந்து விடுபட்டிருப்பதற்கும், நினைவில் நிலைத்திருப்பதற்கும் முயற்சி செய்யுங்கள்.

2. தந்தையைப் போன்று ஒரு மாஸ்டர் ஞானக்கடலாகி, அனைவரையும் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குங்கள். ஒரு வெளிச்ச வீடு ஆகுங்கள். உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான சரீர ஜீவனோபாயத்திற்காக சம்பாதிப்பதற்கு, நிச்சயமாக ஓர் ஆன்மீக ஆசிரியர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
~~மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்|| ஆகி, உங்கள் திரிகாலதரிசி ஸ்திதியினால் முக்காலத்தையும் தெளிவாக அனுபவம் செய்வீர்களாக.

திரிகால ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவர்களால், ஒரு விநாடியில் முக்காலத்தையும் தெளிவாக பார்க்க முடியும். ~~நான் நேற்று என்னவாக இருந்தேன்? இன்று நான் என்னவாக இருக்கிறேன்? நாளை என்னவாக இருப்பேன்?||. அவை அனைத்தும் அத்தகைய ஆத்மாக்களின் முன்னால் தெளிவாக இருக்கும். ஒரு நகரத்தின் மிக உயரமான இடத்திலிருந்து, கீழே பார்க்கும் போது, கீழே உள்ள முழு நகரத்தையும் பார்த்து இரசிக்க முடியும். அவ்வாறாகவே, சங்கமயுகம் மிக உயர்வான ஸ்தானமாகும். இந்த மிக உயர்வான ஸ்தானத்திலிருந்து முக்காலத்தையும் பார்த்து, மிகவும் போதையின் பிரகாசத்துடன் கூறுங்கள்: நான் ஒரு தேவனாக இருந்தேன், மீண்டும் அவ்வாறாக ஆகுவேன். இதுவே ~~மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்|| எனப்படுகின்றது.

சுலோகம்:
ஒவ்வொரு கணமும், இறுதிக்கணம்: இந்த விழிப்புணர்வுடன் எப்பொழுதும் தயாராக இருங்கள்.