05.02.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இக்கல்வியே அதி சிறந்தது. இதுவே உங்கள் வருமானத்திற்கான மூலாதாரம் என அழைக்கப்படுகின்றது. உங்களுடைய இக்கல்வியில் நீங்கள் சித்தியெய்த விரும்பினால், தொடர்ந்தும் ஆசிரியரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

பாடல்:
நாடகத்தின் இரகசியங்களை அறிந்திருக்கும்பொழுதும்;, தனது குழந்தைகள் என்ன முயற்சியைச் செய்ய வேண்டும் எனத் தந்தை தூண்டுகின்றார்?

பதில்:
குழந்தைகள் அனைவரும் வரிசைக்கிரமமாகச் சதோபிரதான் ஆகுவதை பாபா அறிவார். ஆனால், அவர் இன்னமும் குழந்தைகளை முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடாத வகையில் அத்தகைய முயற்சியைச் செய்யுங்கள். தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு, இயன்றளவுக்குத் தந்தையை அன்புடன் நினைவுசெய்யுங்கள். நடக்கும்பொழுதும், அமரும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் நினைவில் நிலைத்திருங்கள், அப்பொழுது பெருமளவு சந்தோஷம் இருப்பதுடன், ஆத்மா தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகவும் ஆகுவார்.

ஓம் சாந்தி.
பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தையும், யோகத்தையும் கற்பிக்கின்றார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். உங்களது யோகம் எத்தகையது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். 84 பிறவிகளின் கணக்கு இருப்பதனால், தூய்மையானவர்களாக இருந்த நாங்கள், இப்பொழுது தூய்மையற்றவர்களாகி விட்டோம். இது 84 பிறவிகளின் சக்கரமாகும். 84 பிறவிகளையும் எடுப்பவர்கள் மாத்திரமே இதனை அறிவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து இதனை அறிந்து கொள்கின்றீர்கள். அத்தகைய தந்தையை நீங்கள் இப்பொழுது நம்பவில்லையாயின், பின்னர் வேறு யாரைத்தான் நம்புவீர்கள்? நீங்கள் தந்தையிடமிருந்து வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். அவரை முற்றிலும் நம்பாத பலர் இருக்கின்றனர். பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினர் மாத்திரமே அவரை நம்புவார்கள். தந்தை அத்தகைய தெளிவான கற்பித்தல்களையும் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே வரிசைக்கிரமமாக, நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப இவற்றை ஏற்றுக் கொள்கின்றீர்கள். அனைவரும் அதனைச் சமமாக ஏற்றுக்கொள்வார்கள் என்றில்லை. அனைவரும் ஒரேயளவிற்கு ஆசிரியரின் கற்பித்தல்களைப் பெற்று, கற்றுக் கொள்ள மாட்டார்கள். அது வரிசைக்கிரமமானது: சிலர் 20 புள்ளிகளைப் பெறுகிறார்கள், ஏனையோர் அதிக அல்லது குறைந்த புள்ளிகளைப் பெறுகிறார்கள். சிலர் தோல்வியும் அடைகிறார்;கள். அவர்கள் ஏன் தோல்வி அடைகின்றார்கள்? ஏனெனில் அவர்கள் தங்களது ஆசிரியரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில்லை. அங்கே, நீங்கள் பல வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். இங்கே, நீங்கள் ஒரேயொரு வழிகாட்டலையே பெறுகின்றீர்கள். இது ஓர் அற்புதமான வழிகாட்டலாகும். உண்மையில் நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் பிரவேசிக்கின்ற ஒருவர்;. இதனைக் கூறியவர் யார்? சிவபாபா. நான் பிரவேசிக்கின்றவரே பாக்கிய இரதம் என அழைக்கப்படுகின்றார், இவர் தனது சொந்தப் பிறவிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்களும் அது பற்றி அறிந்திருக்கவில்லை. இப்பொழுது நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். நீங்கள் பல பிறவிகள் சதோபிரதானாக இருந்து, பின்னர் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் சென்று, தொடர்ந்தும் கீழிறங்குகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் கற்பதற்காக இங்கே வந்துள்ளீர்கள். இக்கல்வியே ஒரு வருமானம், உங்கள் வருமானத்திற்கான மூலாதாரமாகும். இக்கல்வியே அதி சிறந்தது. லௌகீகக் கல்வியில், அவர்கள் கூறுவார்கள்: ஐ.சி.எஸ். தான் அதி சிறந்தது. 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்த தேவர்களாக இருந்த உங்களிடம்;, இப்பொழுது தெய்வீகக் குணங்கள் இல்லை. பாடப்பட்டுள்ளது: நான் நற்குணங்கள் அற்றவன், என்னிடம் நற்குணங்கள் இல்லை. அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் இவ்வாறு கூறுகின்றனர். கடவுள் எங்கும் இருப்பதாகவும், அவர் தேவர்களிலும் இருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதனாலேயே அவர்கள் தேவர்களின் முன்பாக மண்டியிட்டுக் கூறுகின்றனர்: நான் நற்பண்புகளற்றவன். நீங்கள் மாத்திரமே கருணை கொள்கின்றீர்;கள். பாபா பேரானந்தம் நிறைந்தவரும், கருணை நிறைந்தவரும், அவர் எங்கள் மீது கருணை கொண்டிருக்கின்றார் எனவும் நினைவுகூரப்படுகின்றது. மக்கள் கூறுகின்றனர்: ஓ கடவுளே, கருணை காட்டுங்கள்! அவர்கள் தந்தையைக் கூவியழைக்கிறார்கள், தந்தை இப்பொழுது எங்கள் முன்னிலையில் வந்துள்ளார், அத்தகைய தந்தையை அறிந்துகொள்பவர்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவரே ஒவ்வொரு 5000 வருடங்களும் முழு உலக இராச்சியத்தையும் எங்களுக்குக் கொடுக்கின்ற, எல்லையற்ற தந்தையாவார். எனவே, அதிகளவு சந்தோஷம் அனுபவம் செய்யப்பட வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். அரைக் கல்பத்துக்கு இராவணனின் கட்டளைகள் இருக்கின்றன. பாபா தொடர்ந்தும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்;கள். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சதோபிரதானாக வேண்டும். இது இராவண இராச்சியமாகும். நீங்கள் இந்த இராவணனை வெற்றிகொள்ளும்பொழுது மாத்திரமே இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்பட முடியும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை அவதூறு செய்கின்றீர்கள். தந்தையின் பெயரைப் புகழ்வதற்குப் பதிலாக, நீங்கள் அவரை அவதூறு செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை அதிகளவுக்கு அவதூறு செய்துள்ளீர்கள். இதுவும் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. உங்களுக்கு இப்பொழுது வழிகாட்டல்; கொடுக்கப்படுகின்றது: இப்பொழுது, அவ்விடயங்கள் அனைத்தையும் விட்டு விலகி வாருங்கள். ஒரேயொருவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள். சத்தியத்தின் சகவாசம் 21 பிறவிகளுக்கு உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கிறது என்பது நினைவுகூரப்படுகின்றது. எனவே, உங்களை மூழ்கடிப்பவர் யார்? உங்களைக் கடலினுள் மூழ்கடித்தவர் யார்? பாபா தனது குழந்தைகளிடமே இவ்வினாவை வினவுவார், இல்லையா? பூந்தோட்டத்தின் அதிபதி, படகோட்டி என்பவை எனது பெயர்களே என்பதை நீங்கள் அறிவீர்கள். அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாததனாலேயே, அவர்கள் தந்தையை அவதூறு செய்து விட்டார்கள். பின்னர் எல்லையற்ற தந்தை அவர்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். அவர் தன்னை இகழ்ந்தவர்களையும் ஈடேற்றுகின்றார். தாங்கள் அவரை அவதூறு செய்கின்றார்கள் என்பதைக் கூட அவர்கள் புரிந்துகொள்வதில்லை. கடவுள் சர்வவியாபகர் என அவர்கள் சந்தோஷத்துடன் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அது அவ்வாறு இருக்க முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளீர்கள். அது தேவர்களின் இராச்சியமாக இருந்தபொழுது, வேறெந்த இராச்சியங்களும் இருக்கவில்லை என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாரதம் சதோபிரதானாக இருந்தது, ஆனால் அது இப்பொழுது தமோபிரதானாகி விட்டது. உலகைச் சதோபிரதான் ஆக்குவதற்கே தந்தை வருகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். முழு உலகமும் இதனை அறிந்திருந்தாலும், அவர்கள் எவ்வாறு இங்கு கற்க வர முடியும்? எனவே, குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு வேறு எதுவுமேயில்லை. நீங்கள் சத்திய யுகத்தில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். தேவர்களின் உணவும், பானமும் மிகவும் சூட்சுமமானவை. அங்கு பெருமளவு சந்தோஷம் இருக்கிறது. நீங்கள் இப்பொழுது சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள் என்பதனை அறிவீர்கள். பாபா இப்பொழுது முதற்தரமான வழிமுறைகளை உங்களுக்குக் கூறுகின்றார். கீதையிலும் கூட மன்மனாபவ என்பதே முதலாவது வார்த்தையாகும். இது கீதையின் அத்தியாயமாகும். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியதன்hல், அவர்கள் அனைத்தையும் குழப்பி விட்டார்கள். அது பக்தி மார்க்கமாகும். தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தை விளங்கப்படுத்துகின்றார். இதில் எவ்விதச் சிக்கலும் கிடையாது. நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகவேண்டும். இவ்வுலகம் தமோபிரதானாக உள்ளது. கலியுகத்தில் உள்ள மக்களின் நிலையைப் பாருங்கள். பலர் இருக்கின்றனர். சத்திய யுகத்தில் ஒரு தர்மமும், ஒரு மொழியும், ஒரு புத்திரனுமே இருந்தனர். அங்கே, ஒரேயொரு இராச்சியமே இருந்தது. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. ஒன்று, உலகச் சக்கரம் பற்றிய ஞானமும், மற்றையது யோகமும் ஆகும். ஞான துரியாவும் (நிறமூட்டப்பட்ட நீரை அனைவர் மீதும் தெளித்தல் - ஹோலிப் பண்டிகைக்கு அடுத்த நாள்), ஹோலியும் (மரங்களை எரித்து அக்கினியை வழிபடுதல்.) உள்ளன. தந்தை பிரதான விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இந்நேரத்தில், இது அனைவரினதும் முற்றிலும் சீரழிந்த, தமோபிரதான் நிலை ஆகும், விநாசம் முன்னாலேயே உள்ளது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! நீங்கள் தூய்மையற்றவர்களாகி விட்டீர்கள். நான் மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றேன். இப்பொழுது என்னுடன் யோகம் செய்யுங்கள். சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நான் உங்களுக்கு அனைத்து விடயங்களையும் சரியாகக் கூறுவேன். நீங்கள் பிறவிபிறவியாக அதர்மம் நிறைந்தவர்களாக இருந்து வந்தீர்கள். நீங்கள் சதோபிரதானிலிருந்து தமோபிரதானாகி விட்டீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகின்றார்: இனிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தமோபிரதானாகி விட்டீர்கள். உங்களை இவ்வாறு ஆக்கியவர் யார்? ஐந்து விகாரங்களே ஆகும். மக்கள் உங்களைக் குழப்பமடையச் செய்கின்ற வகையில் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார்கள். அவர்கள் சமயநூல்களின் அர்த்தம் பற்றித் தங்கள் மத்தியில்; விவாதிக்கும்பொழுது, அது இறுதியில் அவர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகளுடனேயே முடிவடைகின்றது. அவர்கள் ஒருவருக்கொருவர் தடியால் கூட அடிக்கின்றார்கள். இங்கு, தந்தை உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாக்குகின்றார். இதில் சமயநூல்களால் என்னதான் செய்ய முடியும்? நீங்கள் தூய்மையாக வேண்டும். கலியுகத்தின் பின்னர் சத்திய யுகம் நிச்சயமாக வரவேண்டும். நீங்களும் நிச்சயமாகச் சதோபிரதானாகவும் வேண்டும். தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதானாகி விட்டதால், தமோபிரதான் சரீரங்களையே பெறுகின்றீர்கள். தங்கம் எத்தனை கரட்டாக இருக்கின்றதோ, அதற்கேற்பவே ஆபரணமும் இருக்கும். அதில் கலப்படம் கலக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது 24 கரட் தங்கமாக வேண்டும். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆவீர்களாக! சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதனால், நீங்கள் அழுக்காகி விட்டீர்கள். உங்களிடம் எந்தச் சந்தோஷமும் இல்லை. சுகவீனங்கள், நோய்;கள் போன்றவையே இருக்கின்றன. நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள். நான் ஒரு சாது அல்லது சந்நியாசி போன்றவர் அல்ல. எவராவது ஒருவர் இங்கு வரும்பொழுது, தான் குருஜியின் ஒரு கணத் தரிசனத்தைப் பெற வேண்டுமென்று கூறுகிறார். இங்கு குருஜி என எவருமில்லை என அவர்களிடம் கூறுங்கள்; எவ்வாறாயினும், ஒரு கணத் தரிசனத்தை மட்டும் பெறுவதில் எந்த நன்மையும் இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்ற அனைத்தும் இலகுவானது. நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக என்னை நினைவுசெய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாகத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான்; ஆகுவதுடன், பின்னர் தேவர்களாகவும் ஆகுவீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் தேவர்கள் ஆகுவதற்காகவே இங்கே வந்துள்ளீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதால், உங்களிலுள்ள துரு அகற்றப்படுவதுடன், நீங்கள் சதோபிரதானாகவும் ஆகுவீர்கள். நீங்கள் முயற்சி செய்வதனால், இவ்வாறு ஆகுவீர்கள். நடக்கும்பொழுதும், உலாவும்பொழுதும் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்களால் நீராடும்பொழுது தந்தையை நினைவுசெய்ய முடியாதா? உங்களை ஆத்மாக்களாக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள், அப்பொழுது உங்களிலுள்ள துரு அகற்றப்பட்டு, உங்களது சந்தோஷப் பாதரசமும் உயரும். நான் உங்களுக்கு அதிகளவு செல்வத்தைக் கொடுக்கின்றேன். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதற்காகவே இங்கே வந்துள்ளீர்கள். அங்கே, நீங்கள் தங்க மாளிகைகளைக் கட்டுவீர்கள். அங்கே ஏராளமான வைரங்களும், இரத்தினங்களும் இருக்கும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் கட்டியுள்ள ஆலயங்களில் பெருமளவு வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்டிருக்கின்றன. பல அரசர்கள் ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். அதிகளவு வைரங்களும், பெருமளவு தங்கமும் எங்கிருந்து வருகின்றன? இப்பொழுது அது இங்கில்லை. இந்நாடகச் சக்கரம் எவ்வாறு தொடர்ந்தும் சுழல்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதிகளவு பக்தி செய்துள்ளவர்களின் புத்தியில் மாத்திரமே இது இருக்கும். அவர்கள் அதனை வரிசைக்கிரமமாகப் புரிந்துகொள்வார்கள். யார் பெருமளவு சேவை செய்கிறார்கள், யார் மிக சந்தோஷமாக இருந்து, யோகத்திலும் இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். இறுதியில் நீங்கள் அந்த ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். யோகம் அவசியமானது. நீங்கள் சதோபிரதானாக வேண்டும். தந்தை வந்துள்ளார், எனவே நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். இவர் கூறுகிறார்: பாபா என்னுடன் இருக்கின்றார். நான் அவரைச் செவிமடுக்கின்றேன். அவர் உங்களுடன் பேசும்பொழுது, நானும் செவிமடுக்கின்றேன். அவர் எவருடனாவது பேசுவார், இல்லையா? தாய்மார்களாகிய நீங்கள் இந்த ஞானாமிர்தக் கலசத்தைப் பெறுகிறீர்கள். பின்னர், தாய்மார்களாகிய நீங்கள் சேவை செய்வதுடன் அனைவருக்கும் அதைக் கொடுக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் சீதைகள். ஒரேயொருவரே இராமர். நீங்கள் அனைவரும் மணவாட்டிகள், நான் மாத்திரமே மணவாளன். நான் உங்களை அலங்கரித்து, உங்களை உங்கள் புகுந்த வீட்டுக்கு அனுப்புகிறேன். அவரே தந்தையர்க்;கெல்லாம் தந்தையும், கணவர்க்;கெல்லாம் கணவரும் எனப் பாடப்படுகின்றது. ஒருபுறம் அவர்கள் அவரைப் புகழ்கின்றார்கள், மறுபுறம் அவர்கள் அவரை அவதூறு செய்கின்றார்கள். சிவபாபாவின் புகழானது ஸ்ரீ கிருஷ்ணரின் புகழிலிருந்து வேறுபட்டது. ஒவ்வொருவரின் தராதரமும் வேறுபட்டது. இங்கு, அவர்கள் அனைவரையும் ஒன்றாகக் கலந்து ஒன்றாக்கி விட்டார்கள். இது இருண்ட நகரமாகும். நீங்கள் இப்பொழுது பாபாவிற்கு உரியவர்கள். நீங்கள் சிவபாபாவின் பேரர்களும், பேத்திகளும் ஆவீர்கள். உங்கள் அனைவருக்கும் ஓர் உரிமை இருக்கின்றது. இந்த பாபாவிடம் சொத்துக்கள் எதுவுமில்லை. நீங்கள் எல்லைக்குட்பட்டதும், எல்லையற்றதுமான சொத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் ஆஸ்தியைப் பெறக்கூடியதாக மூன்றாவது நபர் எவரும் இல்லை. இவர் கூறுகின்றார்: நானும் அவரிடமிருந்தே எனது ஆஸ்தியைப் பெறுகிறேன். அனைவரும் பரலோக, பரமாத்மாவாகிய பரமதந்தையை நினைவுசெய்கிறார்கள். நீங்கள் அவரைச் சத்திய யுகத்தில் நினைவுசெய்வதில்லை. சத்திய யுகத்தில் ஒரேயொரு தந்தை மாத்திரமே இருக்கின்றார், இராவண இராச்சியத்திலோ இரு தந்தையர் இருக்கின்றார்கள். சங்கம யுகத்தில் மூன்று தந்தையர் இருக்கின்றார்கள்: லௌகீகத் தந்தையும், பரலோகத் தந்தையும், மூன்றாமவர் அற்புதமான அலௌகீகத் தந்தையும் ஆவார்கள். தந்தை இவர் மூலமாக உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். இவரும் ஆஸ்தியை அவரிடமிருந்தே பெறுகின்றார். பிரம்மா ஆதாம் எனவும் அழைக்கப்படுகின்றார். அவர் முப்;பாட்டனார் என அழைக்கப்படுகின்றார். சிவன் தந்தை என்று மாத்திரமே அழைக்கப்படுவார். மனித வம்சாவளி விருட்சமானது பிரம்மாவுடனேயே ஆரம்பிக்கின்றது. இதனாலேயே அவர் முப்;பாட்டனார் என அழைக்கப்படுகின்றார். ஞானம் மிக இலகுவானது. நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். இதனை விளங்கப்படுத்துகின்ற படங்களும் இருக்கின்றன. அனைத்து விதமான தவறான கேள்விகளையும்; கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ரிஷிகளிடமும், முனிவர்களிடமும் வினவும்பொழுது, அவர்கள் நேற்றி, நேற்றி (இதுவுமில்லை, அதுவுமில்லை) என்று கூறுவதுண்டு. இப்பொழுது, தந்தை வந்து, தனது சொந்த அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். எனவே, அத்தகைய தந்தையை நீங்கள் அதிகளவு அன்புடன் நினைவுசெய்ய வேண்டும். இப்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்திற்கேற்ப படிப்படியாக மேலேறுகின்றீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும், நீங்கள் வரிசைக்கிரமமாக, சதோபிரதான், சதோ, ரஜோ, தமோவாக ஆகுகின்றீர்கள். நீங்கள் பின்னர் அதற்கேற்ப, அங்கு ஓர் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். இதனாலேயே தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் தண்டனையை அனுபவம் செய்யாதிருக்கும் வகையில் அத்தகைய நல்ல முயற்சியைச் செய்யுங்கள். அவர் இன்னமும் உங்களை நிச்சயமாக முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார். முன்னைய கல்பத்தில் ஏதாவதொன்றாக ஆகியவர்கள் மாத்திரமே அவ்வாறு ஆகுவார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டாலும் நிச்சயமாக அவர் உங்களை முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார். நெருக்கமாக உள்ளவர்களே, மிக நன்றாக வழிபடுபவர்கள். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் என்னை வழிபட்டீர்கள், பின்னர் நீங்கள் தேவர்களை வழிபட்டீர்கள். நீங்கள் இப்பொழுது தேவர்களாக வேண்டும். நீங்கள் யோக சக்தியின் மூலம் உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். நீங்கள் யோக சக்தியின் மூலம் உலக இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். பௌதீக சக்தியின் மூலம் எவராலும் உலக இராச்சியத்தைப் பெற முடியாது. அம்மக்கள் சகோதரர்களை ஒருவரோடொருவர் சண்டையிடச் செய்கிறார்கள். அவர்கள் பல போர்த் தளபாடங்களை உற்பத்தி செய்கின்றார்கள். அவர்கள் அவற்றைத் தொடர்ந்தும் பிறருக்குக் கடனுக்கு விற்கின்றார்கள். எவ்வாறாயினும், அப்போர்த் தளபாடங்கள் விநாசத்துக்கானவையே. ஆயினும், இது எவருடைய புத்தியிலும் பிரவேசிப்பதில்லை, ஏனெனில் ஒவ்வொரு சக்கரமும் நூறாயிரக் கணக்கான வருடங்களைக் கொண்டது என அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் காரிருளில் இருக்கிறார்கள். விநாசம் நடைபெறும், அவர்கள் கும்பகர்ண உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருப்பார்கள்;; அவர்கள் விழித்தெழ மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் விழித்தெழுந்து விட்டீர்கள். தந்தை ஏற்றப்பட்ட ஒளியும், ஞானம் நிறைந்தவரும் ஆவார். அவர் குழந்தைகளாகிய உங்களைத் தன்னைப் போல் ஆக்குகிறார். அது பக்தியும், இது ஞானமும் ஆகும். நீங்கள் ஞானத்தின் மூலம் சந்தோஷமடைகின்றீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகுகின்றீர்கள் என்பதை உணர வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இது எல்லையற்ற துறவறம் என அழைக்கப்படுகிறது. இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. இயற்கை அனர்த்தங்களும் உதவிபுரியும். அந்நேரத்தில், நீங்கள் உண்பதற்குப் போதுமான உணவு கூட இருக்காது. நாங்கள் சந்தோஷப் போஷாக்கில் தங்கியே உயிர் வாழ்வோம். இவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனைப் பற்றிக் குழப்பமடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. நான் குழந்தைகளாகிய உங்களை மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆக்குவதற்காக வந்துள்ளேன். இதுவே ஒவ்வொரு கல்பத்திலும் எனது கடமையாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கடவுளே உங்கள் மீது கருணை கொண்டுள்ளார், அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற போதையைப் பேணுங்கள். இக்கல்வியே உங்கள் வருமானத்தின் மூலாதாரம் என்பதால் நீங்கள் அதைத் தவற விடக்கூடாது.

2. நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்து, மற்றவர்களுக்கும் இந்த அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் ஆத்ம உணர்வுடையவர்களாக இருந்து, தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, நிச்சயமாக ஆத்மாவைச் சதோபிரதானாக ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்டர் சர்வசக்திவானாக இருந்து, நேரத்திற்கேற்ப, நடைமுறை வடிவில் ஒவ்வொரு சக்தியையும் அனுபவம் செய்வீர்களாக.

ஓர் அதிபதியாக இருப்பது எனில், நேரத்திற்கேற்ப நீங்கள் வரவழைக்கின்ற சக்தி அனைத்தையும், அந்தக் கணத்திலேயே நடைமுறை ரீதியில் அனுபவம் செய்கின்றீர்கள் என்பதாகும். நீங்கள் அதற்குக் கட்டளையிட்டவுடன், அது பிரசன்னமாக வேண்டும். நீங்கள் சகித்துக் கொள்ளும் சக்திக்குக் கட்டளையிடும்பொழுது, அதற்குப் பதிலாக உங்கள் முன்னிலையில் முகங்கொடுக்கும் சக்தி வருவதாக இல்லாதிருக்கட்டும். அது ஓர் அதிபதியாக இருப்பது என்று அழைக்கப்பட மாட்டாது. எனவே, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தேவைப்படுகின்ற சக்தியானது அந்நேரத்திலேயே பயன்படுத்தப்படக் கூடியதாக வருகின்ற வகையில், ஒரு பரீட்சார்த்தத்தைச் செய்யுங்கள். ஒரு விநாடி வித்தியாசம் இருந்தாலும், வெற்றியாளர்களாக இருப்பதற்குப் பதிலாக, நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் புத்தி இறை போதையைக் கொண்டிருக்கின்ற அளவிற்கேற்ப, உங்கள் செயல்களில் அந்தளவு பணிவும் இருக்கட்டும்.