06.02.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, வெற்றியும் தோல்வியும் நிறைந்த உங்கள் வரலாற்றை நினைவு செய்யுங்கள். இது இன்பமும் துன்பமும் நிறைந்த நாடகமாகும். முக்காற்பங்கு சந்தோஷமும், காற்பங்கு துன்பமும் நிறைந்துள்ளது. இன்பமும் துன்பமும் சமமாக இருப்பதில்லை.

பாடல்:
எவ்வாறு இந்த எல்லையற்ற நாடகம் மிக அற்புதமானதாகும்?

பதில்:
முழு உலகத்திலும் ஒவ்வொரு விநாடியும் என்ன இடம்பெறுகின்றதோ அவை மீண்டும் அவ்வாறே இடம்பெறும் என்பதாலேயே இந்த எல்லையற்ற நாடகம் மிகவும் அற்புதமானதாகும். இந்த நாடகம் ஒரு பேனைப் போன்று ஊர்ந்து செல்கின்றது. அது தொடர்ந்தும் நகர்கின்றது. ஒரு நகர்வு அடுத்த நகர்வைப் போன்றிருக்க மாட்டாது. ஆகையாலேயே இந்த நாடகம் மிகவும் அற்புதமாகும். மனிதர்கள் எப் பாகத்தை நடித்தாலும், அது நல்லதோ அல்லது தீயதோ அனைத்தும் நிச்சயிக்கப்பட்டவையாகும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.

ஓம் சாந்தி.
ஒம் சாந்தி என்பதன் அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகியுள்ளீர்கள். நான் ஒர் ஆத்மா என்ற அறிமுகத்தை ஆத்மாவே கொடுக்கின்றார். ஆத்மாக்களின் ஆதி தர்மம் அமைதியாகும். இது ஆத்மாக்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிகழ்விற்கான நேரமாகும். இந்த நிகழ்வை உங்களுக்கு கூறியவர் யார்? இதனை நிச்சயமாக தந்தையே உங்களுக்குக் கூறுவார். ஓ ஆத்மாக்களே, பழைய உலகம் இப்பொழுது முடிவடையவுள்ளது. நடிகர்கள் அனைவரும் இப்பொழுது இங்கே வந்துள்ளார்கள். வெகுசில ஆத்மாக்களே மேலே எஞ்சியுள்ளார்கள். அனைவரும் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். அதன் பின்னர் அப் பாகம் மீண்டும் நடிக்கப்பட வேண்டும். உண்மையில், குழந்தைகளாகிய நீங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். முதன் முதலில் நீங்கள் சத்தியயுகத்திற்கு வந்தீர்கள், பின்னர், மறுபிறவிகள் எடுத்து, இப்பொழுது உங்களுக்கு உரிமையில்லாத இராச்சியத்தில் இருக்கின்றீர்கள்;. ஆத்மாக்களாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். வேறு எவருக்கும் இது தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் கீழே வந்து, இப்பொழுது இராவணனின் அந்நிய இராச்சியத்தில் வீழ்ந்துள்ளீர்கள். நீங்கள் உங்களுக்குரிய இராச்சிய பாக்கியத்தை இழந்துள்ளீர்கள். இற்றைக்கு 5000 வருடங்களின் முன்னர், நீங்கள் சத்தியயுகத்தில் தேவதர்மத்தை சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்கு ஆட்சி செய்தீர்கள் ஏனெனில் நீங்கள் அரைக்கல்பத்திற்கு ஏணியில் இறங்கவே வேண்டும். சத்தியயுகத்திலிருந்து நீங்கள் திரேதாயுகத்திற்குச் சென்று பின்னர் துவாபர யுகத்திற்கும் கலியுகத்திற்கும் செல்ல வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் வெற்றி தோல்வியின் வரலாற்றை நினைவு செய்யுங்கள். சத்தியுகத்தில் நீங்கள் சந்தோஷ உலகின் சதோபிரதான் வாசிகளாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன் பின்னர், மறுபிறவிகள் எடுத்ததால், நீங்கள் துன்ப உலகில் உக்கிய நிலையை அடைந்துள்ளீர்கள். ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து நீண்ட காலம் பிரிந்திருந்ததால், ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையிடமிருந்து மீண்டும் ஒருமுறை ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் நீண்ட காலம் பிரிந்து இருந்தீர்கள். நீங்களே முதன்முதலில் பிரிந்து சென்று, அதன் பின்னர் உங்கள் சந்தோஷபாகத்தை தொடர்ந்தும் நடித்தீர்கள். அதன் பின்னர் உங்கள் இராச்சிய பாக்கியம் அபகரிக்கப்பட்டது. நீங்கள் துன்பமான பாகத்தை நடிக்க ஆரம்பித்தீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அமைதியும் சந்தோஷமும் நிறைந்த இராச்சிய பாக்கியத்தை அடைய வேண்டும். ஆத்மாக்கள் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று கூறுகின்றார்கள். இந்த நேரத்தில் தமோபிரதானாக இருப்பதால், உலகில் அமைதியின்மை நிலவுகின்றது. இது அமைதியும் அமைதியின்மையும், இன்பமும் துன்பமும் நிறைந்த ஒரு நாடகமாகும். 5000 வருடங்களின் முன்னர் உலகில் அமைதி நிலவியது என்பது உங்களுக்குத் தெரியும். அசரீரியான உலகமே அமைதி தாமம் ஆகும். ஆத்மாக்கள் வாழும் அவ் இடத்தில் அமைதியின்மை என்ற கேள்விக்கே இடமில்லை. சத்தியயுகத்தில் அமைதி நிலவியது, பின்னர், கீழே விழும் போது அமைதியின்மை நிலவுகின்றது. இப்பொழுது அனைவருமே உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகின்றார்கள். பெரும் தத்துவமான பிரம்மதத்துவத்தை உலகம் என்று அழைக்க முடியாது. அது ஆத்மாக்களாகிய நீங்கள் வாழ்கின்ற பிரம்மலோகமாகும். ஆத்மாக்களின் ஆதி தர்மம் அமைதியாகும். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கினால், அவர் அமைதி அடைகின்றார், இன்னொரு சரீரத்தை எடுத்தால் மாத்திரமே அவரால் ஒலியெழுப்பவோ அல்லது அசையவோ முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு ஏன் வந்திருக்கின்றீர்கள்? நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, எங்களுடைய அமைதி உலகிற்கும் சந்தோஷ உலகிற்கும் எங்களை அழைத்துச் செல்லுங்கள். அமைதி தாமத்திலோ அல்லது முக்தி தாமத்திலோ சந்தோஷம் அல்லது துன்பத்தற்கான பாகம் இருப்பதில்லை. சத்தியயுகமே சந்தோஷ உலகமாகும். கலியுகமே துன்ப உலகமாகும். நீங்கள் எவ்வாறு கீழே இறங்கினீர்கள் என்பது ஏணிப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் ஏணியில் கீழே இறங்குகின்றீர்கள். நீங்கள் ஒருமுறை மாத்திரமே ஏறுகின்றீர்கள். நீங்கள் தூய்மையாகும் போது ஏறுகின்றீர்கள். தூய்மையற்றவர் ஆகும் போது இறங்குகின்றீர்கள். தூய்மையாகாது உங்களால் ஏற முடியாது. ஆகையாலேயே நீங்கள் கூவி அழைக்கின்றீர்கள்: பாபா, வந்து எங்களை தூய்மை ஆக்குங்கள். நீங்கள் முதலில் தூய உலகிற்குச் செல்வீர்கள். அதன் பின்னர் சந்தோஷ உலகிற்குச் செல்வீர்கள். முதலில் சந்தோஷம் உள்ளது, பின்னர் துன்பம் உள்ளது. சந்தோஷமே அதிகளவில் உள்ளது. சமமாக இருந்தால் அதனால் எந்த நன்மையும் இல்லை. அதனால் எப்பயனும் இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகத்தில், முக்காற்பங்கு சந்தோஷமும், காற்பங்கு துன்பமும் உள்ளது. சிறுதளவு துன்பமே உள்ளது. ஆகையாலேயே இது சந்தோஷமும் துன்பமும் நிறைந்த நாடகம் என்று அழைக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் அவரை அறிந்து கொள்ள முடியாது என்பது தந்தைக்குத் தெரியும். நான் எனது சொந்த அறிமுகத்தையும் உலகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் அறிமுகத்தையும் உங்களுக்குக் கொடுத்துள்ளேன். நான் உங்களை நாஸ்தீகர்களில் இருந்து ஆஸ்தீகர்கள் ஆக்கியுள்ளேன். நீங்கள் மூவுலகையும் அறிவீர்கள். பாரதமக்கள் கல்பத்தின் காலஎல்லையை அறியாதுள்ளார்கள். பாபா மீண்டும் ஒருமுறை உங்களுக்கு கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் மாத்திரமே அறிந்துள்ளீர்கள். தந்தை மறைமுகமான ஆடையை அணிந்து அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார். பாபாவும் மறைமுகமானவரே. மக்கள் தம்மை பௌதீகமாகவே அறிந்துள்ளார்கள், எனினும் அவர்களுக்கு ஆத்மாவைத் தெரியாது. ஆத்மா அழியாதது, சரீரம் அழியக் கூடியது. நீங்கள் ஆத்மாவையோ அல்லது ஆத்மாவின் தந்தையையோ மறந்துவிடக் கூடாது. எங்கள் ஆஸ்தியை நாங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றோம். நீங்கள் தூய்மையானவர் ஆகும் போது, உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் இந்த இராவண இராச்சியத்தில் நீங்கள் தூய்மையற்றவாக இருப்பதாலேயே நீங்கள் தந்தையைக் கூவி அழைக்கின்றீர்கள். உங்களுக்கு இரு தந்தையர்; உள்ளனர். பரமாத்வான பரமதந்தையே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஆவார். சகோதரர்கள் அனைவரும் தந்தை அல்ல. சமய சார்பான ஆத்மாக்கள் அனைவருக்குமே தந்தையான பரலோகத் தந்தையை, அனைவரும் மறக்கும் போது, பாரதத்தில் அதர்மம் தழைத்தோங்குகின்றது. அப்பொழுது அவர் வருகின்றார். இதுவும் ஒரு நாடகமே. நாடகத்தில் நிகழ்பவை அனைத்தும் மீண்டும் இடம்பெறும். ஆத்மாக்களாகிய நீங்கள் பல தடவைகள் உங்கள் பாகத்தை நடித்துச் சென்றுள்ளீர்கள். இந்த நாடகம் அநாதியாக, ஒரு பேனைப் போன்று ஊர்ந்து செல்கின்றது. அது என்றும் முடிவடைவதில்லை. அது தொடர்ந்தும் நகர்கின்றது. ஆனால் ஒரு நகர்வு அடுத்ததைப் போன்றிருப்பதில்லை. இது மிகவும் அற்புதமான நாடகமாகும். விநாடிக்கு விநாடி உலகில் நடைபெறுகின்ற அனைத்தும் மீண்டும் இடம்பெறும். ஒவ்வொரு சமயத்தினதும் பிரதான நடிகர்கள் காட்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் தமது சொந்த சமயத்தை ஸ்தாபிக்கின்றார்கள். அவர்கள் ஒரு இராச்சியத்தை ஸ்தாபிப்பதில்லை. பரமாத்மாவான பரமதந்தை மாத்திரமே ஒரு சமயத்தையும், ஒரு இராச்சியத்தையும், ஒரு வம்சத்தையும் ஸ்தாபிக்கின்றார். அவர்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிக்கின்றார்கள், பின்னர் அனைவரும் அவர்களைத் தொடர்ந்து கீழே வரவேண்டும். மீண்டும் அனைவரையும் அழைத்துச் செல்பவர் யார்? தந்தையாவார். சிலர் மிகச் சிறிய பாகத்தை நடித்த பின்னர் அது முடிவடைகின்றது. பூச்சிகளும், கிருமிகளும் போன்று அவர்கள் தோன்றிய பின்னர் உடனடியாக மரணித்து விடுகின்றார்கள். அவர்களுக்கு நாடகத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லாதைப் போன்றுள்ளது. உங்கள் கவனம் எங்கு செல்கின்றது? ஓ தந்தையான கடவுளே! ஒ பரமாத்மாவான பரமதந்தையே! என்று அனைவரும் கூறுகின்ற படைப்பவரிடமே செல்கின்றது. அவரே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஆவார். முதன் முதலில் ஆதி சனாதன தர்மமே இருந்தது. இது மிகவும் பெரிய எல்லையற்ற விருட்சமாகும். பல அபிப்பிராயங்கள் உள்ளதுடன் அத்தகைய பல்வேறு விடயங்களும் தோன்றியுள்ளன. அவற்றைக் கணக்கிடுவது கூட கடினமாக உள்ளது. அத்திவாரம் இல்லாதுள்ளது. ஏனைய அனைவரும் இன்னமும் இங்குள்ளனர். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, அனைத்துச் சமயங்களும் இங்குள்ள போது நான் வருகின்றேன். ஆனால் ஒரேயொரு சமயம் மாத்திரம் இருப்பதில்லை. அத்திவாரம் மறைந்துள்ளது. அவற்றிற்கான ஞாபகார்த்தங்கள் மாத்திரமே எஞ்சி உள்ளன. ஒரேயொரு அநாதியான தர்மம் மாத்திரமே இருந்தது. பின்னரே ஏனைய அனைத்தும் வந்தன. சுவர்க்கத்திற்குச் செல்லாத பலர் திரேதாயுகத்தில் உள்ளனர். நீங்கள் இப்பொழுது சுவர்க்கமான புதிய உலகிற்குச் செல்லவே முயற்சி செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை நினைவு செய்தால், சுவர்க்கத்திற்குச் செல்வதுடன், தூய்மையாகி தெய்வீகக் குணங்களையும் கிரகிப்பீர்கள். எவ்வாறாயினும் விருட்சத்தில் பல கிளைகளும், பிரிவுகளும் உள்ளன. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது விருட்சத்தையும், சுவர்க்கத்தில் எவ்வாறு அந்த அநாதியான தேவர்கள் உள்ளார்கள் என்பதும் தெரியும். இப்பொழுது சுவர்க்கம் இல்லை. இப்பொழுது நரகமே உள்ளது. ஆகையாலேயே தந்தை ஒரு கேள்வி படிவத்தை தயாரித்துள்ளார்: நீங்கள் சுவர்க்கத்தின் சத்தியயுகத்தினராக உங்களைக் கருதுகின்றீர்களா, அல்லது நரக வாசியாக உங்களைக் கருதுகின்றீர்களா? நீங்கள் சத்தியயுகத்திலிருந்து, கலியுகத்திற்குக் கீழே இறங்கி வருகின்றீர்கள். அவ்வாறாயின், பின்னர் எவ்வாறு மேலே செல்வீர்கள்? தந்தை உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: நீங்கள் எவ்வாறு தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள்? உங்களை ஆத்மாவெனக் கருதி என்னை நினைவு செய்தால், இந்த யோகத்தீயில் உங்கள் பாவங்கள் அழிந்து விடும். முன்னைய கல்பத்திலும் நான் உங்களுக்கு ஞானத்தைக் கற்பித்து உங்களைத் தேவர்கள் ஆக்கினேன். நீங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். பின்னர், உங்களை நிச்சயமாக சதோபிரதான் ஆக்கிய ஒருவர் இருக்க வேண்டும். எந்த மனிதரும் தூய்மையாக்குபவர் ஆக இருக்க முடியாது. மக்கள் தூய்மையாக்குபவரே! ஓ கடவுளே! என்று கூறும் போது அவர்களின் புத்தி மேல் நோக்கிச் செல்கின்றது. அவர் அசரீரியானவர் ஆவார். ஏனைய அனைவரும் நடிகர்கள் ஆவார்கள். அவர்கள் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கின்றார்கள். நான் மறுபிறவிக்கு அப்பாற்பட்டவன். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அதனை எவருக்கும் தெரியாது. உங்களுக்கும் அது தெரிந்திருக்கவில்லை. நீங்கள் இப்பொழுது சுயதரிசன சக்கரத்தை சுழற்றுபவர் என்று அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் ஆத்மாவின் தர்மத்தில் உறுதியாக இருக்கின்றீர்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையை கொண்டிருங்கள். இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழலுகின்றது என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஆகையாலேயே நீங்கள் சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். வேறு எவருக்கும் இந்த ஞானம் இல்லை. எனவே, நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். தந்தையே எங்களது ஆசிரியர் ஆவார். அவர் மிகவும் இனிய பாபா ஆவார். பாபாவைத் தவிர இனிமையானவர் எவரும் இல்லை. பரலோகத் தந்தையின் குழந்தைகளாகிய நீங்கள் அப்பாற்பட்ட உலகில் (பரலோகம்) வாழ்கின்ற ஆத்மாக்கள் ஆவீர்கள். தந்தையும் பரந்தாமத்திலேயே வாழ்கின்றார். லௌகீகத் தந்தைக்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களை அவர் பராமரிக்கின்றார், அவர்களே வாரிசுகள் என்பதால் இறுதியில் அனைத்தையும் அவர்களுக்கே கொடுக்கின்றார். அதுவே நியதியாகும். அதுபோன்றே, நீங்களும் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது அனைவரும் சப்தமற்ற தங்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அங்கே, அமைதியுள்ளது, பின்னர் அசைவும், அதன் பின்னர் பேச்சும் உள்ளது. குழந்தைகள் சூட்சும உலகிற்குச் சென்று காட்சிகளைக் காண்கின்றார்கள். அப்பொழுது ஆத்மா சரீரத்திலிருந்து நீங்குவதில்லை. நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை அனைத்தும் விநாடிக்கு விநாடி மீண்டும் இடம்பெறுகின்றது. ஒரு விநாடி அடுத்த விநாடியைப் போன்றிருப்பதில்லை. ஒரு மனிதர் எப்பாகத்தை நடிக்கின்றாரோ, அது நல்லதோ அல்லது தீயதோ அனைத்தும் நிச்சயிக்கப்பட்டவையாகும். சத்தியயுகத்தில் நல்லதொரு பாகம் உள்ளது. கலியுகத்தில் தீய பாகம் உள்ளது. கலியுகத்தில் மக்கள் மிகவும் சந்தோஷமற்றவர்களாக உள்ளார்கள். இராம இராச்சியத்தில் தீய விடயங்கள் இடம்பெறுவதில்லை. இராம இராச்சியமும், இராவண இராச்சியமும் ஒரேநேரத்தில் இருக்க முடியாது. நாடகத்தை அறியாததால், அவர்கள் கடவுள் சந்தோஷம், துன்பம் இரண்டையும் கொடுக்கின்றார் என்று கூறுகின்றார்கள். சிவபாபாவை எவருக்கும் தெரியாதைப் போன்றே இராவணனையும் எவருக்கும் தெரியாது. அவர்கள் ஒவ்வொரு வருடமும் சிவனின் பிறப்பைக் கொண்டாடுவதைப் போன்றே, இராவணனின் இறப்பையும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகின்றார்கள். எல்லையற்ற தந்தை இப்பொழுது தனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார்: உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். தந்தை மிகவும் இனிமையானவர். பாபா அமர்ந்திருந்து தன்னைத்தானே புகழ்ந்து பாட மாட்டார். அவரிடமிருந்து சந்தோஷத்தைப் பெற்றவர்கள், அவரின் புகழ் பாடுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தையே அன்புக்கடல் ஆவார். சத்தியயுகத்தில், நீங்கள் அன்பானவரும், இனிமையானவரும் ஆகவுள்ளீர்கள். அங்கும் விகாரங்கள் இருக்கின்றன என்று எவராவது கூறினால், அங்கே இராவண இராச்சியம் இருப்பதில்லை என்று அவரிடம் கூறுங்கள். துவாபரயுகத்திலேயே இராவண இராச்சியம் ஆரம்பமானது. அனைத்தும் உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் வரலாற்றையும், புவியியலையும் எவரும் அறியாதுள்ளார்கள். இந் நேரத்தில் மாத்திரமே அது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். தேவர்களை விட மேலானவர்கள் எவரும் இல்லை. ஆகையாலேயே, அங்கே குருமார்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இங்கே பல குருமார்கள் உள்ளனர். அங்கே ஒரேயொரு சற்குரு மாத்திரமே உள்ளார். சீக்கியர் அமரத்துவ சற்குருவைப் பற்றிப் பேசுகின்றார்கள். சற்குரு மாத்திரமே அமரத்துவ உருவமானவர். அவரே மரணத்திற்கெல்லாம் மரணமான மகாகாலனாவார். அந்த மரணம் ஒரேயொருவரையே எடுத்துச் செல்கின்றது. தந்தை கூறுகின்றார்: நான் அனைவரையும் அழைத்துச் செல்கின்றேன். உங்கள் அனைவரையும் நான்; தூய்மையாக்கி, முதலில் சாந்தி தாமத்திற்கும் பின்னர் சந்தோஷதாமத்திற்கும் அழைத்துச் செல்கின்றேன். எனக்குரியவர்களாகிப் பின்னர் மாயைக்கு உரியவர்கள் ஆகுகின்றவர்கள் பற்றிக் கூறும் போது சற்குருவை இகழ்பவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது என்று கூறப்படுகின்றது. அவர்களால் சுவர்க்கத்தின் முழுச் சந்தோஷத்தையும் பெற முடியாது. அவர்கள் பிரஜைகளில் ஒருவராக ஆகுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தாதீர்கள். நான் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குவதால் நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களைச் சந்தோஷ உலகின் அதிபதிகள் ஆக்கவே வந்துள்ளேன். தந்தையே அன்புக் கடலாவார். ஆனால் மனிதர்களோ துன்பம் கொடுப்பதிலேயே கடலாக உள்ளார்கள். அவர்கள் காம வாளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கின்றார்கள். அங்கே இவ்விடயங்கள் இடம்பெற மாட்டாது. அங்கே, இராம இராச்சியமே உள்ளது. குழந்தைகள் யோகசக்தியினால் பிறக்கின்றார்கள். இவ் யோகசக்தியினால், நீங்கள் முழு உலகத்தையும் தூய்மை ஆக்குகின்றீர்கள். நீங்கள் போராளிகள், ஆனால் எவரும் அறியாதவர்கள். நீங்கள் மிகவும் பிரபல்யமானவர் ஆகி, பின்னர் பக்தி மார்க்கத்தில், இறைவிகளான உங்களுக்குப் பல ஆலயங்கள் கட்டப்படுகின்றன. அமிர்த கலசம் தாய்மார்களின் தலையில் வைக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. தாய் பசு என்றே கூறப்படுகின்றது. இதுவே ஞானமாகும். தண்ணீர் என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்கள் சிவசக்தி சேனையினர் ஆவீர்கள். அவர்கள் உங்களைப் பிரதி செய்து, குருமார் ஆகியுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது சத்தியப்படகில் அமர்ந்துள்ளீர்கள். எனது படகை அக்கரைக்குச் சேருங்கள் என்று கூறப்படுகின்றது. உங்கள் படகை அக்கரையில் சேர்க்கின்ற படகோட்டியை நீங்கள் இப்பொழுது கண்டுள்ளீர்கள். அவர் உங்களை விலைமாதர் இல்லத்திலிருந்து சிவாலயத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அவர் தோட்டத்தின் அதிபதி என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் முட்காட்டைப் பூந்தோட்டமாக ஆக்குகின்றார். அங்கே, சந்தோஷத்தைத் தவிர வேறேதுவும் இல்லை. ஆனால் இங்கேயோ துன்பமே உள்ளது. நீங்கள் அச்சடிக்க வேண்டும் என்று பாபா கூறிய துண்டுப்பிரசுரத்தில் எழுதப்பட்டுள்ளது. உங்கள் இதயத்தையே கேளுங்கள்: நீங்கள் சுவர்க்க வாசியா? அல்லது நரகவாசியா? நீங்கள் பல கேள்விகளைக் கேட்கலாம். ஊழல் நிறைந்துள்ளது என்று அனைவருமே கூறுகின்றார்கள். ஒரு நேரத்தில், நிச்சயமாக, மேன்மையானவர்களும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் தேவர்களாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் இப்பொழுது இல்லை. தேவ தர்மம் மறையும் பொழுதே, தந்தை ஒரே தர்மத்தை ஸ்தாபிப்பதற்காக வர வேண்டும். அதாவது, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுக்காக நீங்கள் சுவர்க்கத்தை ஸ்;தாபிக்கின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. துன்பக்கடல் அல்லாது தந்தையைப் போன்று ஓர் அன்புக்கடல் ஆகுங்கள். தந்தைக்கு அபகீர்த்தி விளைவிக்கத்தக்க எக் காரியங்களையும் செய்யாதீர்கள். மிகவும் இனிமையானவரும் அன்பானவரும் ஆகுங்கள்.

2. யோக சக்தியினால் தூய்மையானவர் ஆகி, பிறரையும் அவ்வாறு ஆக்குங்கள். முட்காட்டைப் பூந்தோட்டமாக மாற்றுகின்ற சேவையைச் செய்யுங்கள். உங்கள் இனிய பாபாவே தந்தையும், ஆசிரியரும் என்பதால் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள். அவரைப் போன்று இனிமையானவர் வேறு எவரும் இல்லை.

ஆசீர்வாதம்:
தற்போது நீங்கள் கடவுளின் அன்பையும் பரிவையும் பெற்ற இராஜரீகமான அன்பிற்கினியவர்களாக இருப்பதைப் போன்றே, எதிர்காலத்திலும் அவ்வாறாகவே இருப்பீர்களாக.

சங்கமயுகத்தில், பாக்கியசாலி குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதயத்திற்கு சௌகரியம் அளிப்பவரின் அன்பையும் பரிவையும் பெறத் தகுதியானவர்கள் ஆவீர்கள். பலமில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடி அளவினரே கடவுளின் இந்த அன்பையும் பரிவையும் பெறுகின்றார்கள். இந்தத் தெய்வீக அன்பினாலும் பரிவினாலுமே நீங்கள் இராஜரீகமான, அன்பிற்கினியவர்கள் ஆகுகிறீர்கள். இராஜரீகமான, அன்பிற்கினியவர்கள் என்றால், இப்பொழுது இராஜரீகமாகவும் எதிர்காலத்திலும் இராஜரீகமாகவும் இருப்பது என்று அர்த்தமாகும். எதிர்காலத்தில் இவ்வாறு ஆகுவதற்கு முன்னரே, இந்த நேரத்தில் நீங்கள் சுயாட்சியாளர் ஆகியுள்ளீர்கள். எதிர்கால இராச்சியத்தின் புகழானது: ~~ஒரே இராச்சியம், ஒரே தர்மம்||. அவ்வாறே இங்கே ஒவ்வொரு ஆத்மாவினது இராச்சியமும் சகல பௌதீக புலன்கள் என்ற ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக இருப்பதாகும்.

சுலோகம்:
தமது முகத்தினூடாக தந்தையின் குணாதிசயத்தை வெளிப்படுத்துபவர்களே கடவுளால் நேசிக்கப்படுகின்றார்கள்.