07.02.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வு உங்களை உலக அதிபதிகளாகவும், சரீர உணர்வு உங்களை ஏழ்மையானவர்களாகவும் ஆக்குகின்றது. ஆகவே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆவீர்களாக.

பாடல்:
நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகுவதற்கு, உங்களுக்குப் பெருமளவு உதவுகின்ற பயிற்சி எது?

பதில்:
சதா உங்களை நடிகர்களாகக் கருதுங்கள். நடிகர் ஒருவர் தனது பாகம் முடிந்தவுடன் தனது ஆடையை மாற்றிக் கொள்வதைப் போன்று, குழந்தைகளாகிய நீங்களும் இப் பயிற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் செயற்பாடு;களைச் செய்து முடித்தவுடனேயே, உங்கள் ஆடைகளை (சரீரங்கள்) அகற்றி விட்டு, சரீரமற்றவர்கள் ஆகுங்கள். சகோதர ஆத்மாக்களாக இருக்கின்ற பயிற்சியைத் தொடர்ந்தும் செய்யுங்கள். இதுவே தூய்மை ஆகுவதற்கு இலகுவான வழியாகும். சரீரங்களைப் பார்க்கும்பொழுது, குற்றமான எண்ணங்கள் ஏற்படுகின்றன. ஆகவே, சரீரமற்றவராகுவீர்களாக.

ஓம் சாந்தி.
நீங்கள் மிகவும் விவேகம் அற்றவர்களாகி விட்டதால், குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். 5000 வருடங்களுக்கு முன்னரும் இது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளதுடன், எவ்வாறு தெய்வீகச் செயற்பாடு;களைச் செய்ய வேண்டும் என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தேவ தர்மத்திற்கு உரியவர்களாகி, பின்னர் நாடகத்திற்கு ஏற்ப, தொடர்ந்தும் மறுபிறப்பெடுத்தீர்கள். இது தமோபிரதான் இராவண இராச்சியம் என்பதால், உங்கள் கலைகள் குறைவடைந்து, இப்பொழுது நீங்கள் கலைகள் எதுவுமே அற்ற நிலையை நடைமுறையில் அடைந்துள்ளீர்கள். இந்த இராவண இராச்சியத்திற்கு முன்னர் அனைத்தும் சதோபிரதானாக இருந்தது. பின்னர் அது சதோ, இரஜோ, தமோ நிலைகளினூடாகச் சென்றது. அது இப்பொழுது முற்றிலும் தமோபிரதான் ஆகியுள்ளது. அது இப்பொழுது அதன் இறுதியை அடைந்துள்ளது. இராவண இராச்சியம் அசுர இராச்சியம் என அழைக்கப்படுகின்றது. பாரதத்தில் இராவணனை எரிக்கும் வழக்கம் உள்ளது. பாரத மக்கள் மாத்திரமே இராவண இராச்சியம், இராம இராச்சியத்தையிட்டுப் பேசுகின்றார்கள். இராம இராச்சியம் சத்திய யுகத்தில் உள்ளது, இராவண இராச்சியம் கலியுகத்தில் உள்ளது. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். முற்றாகப் புரிந்துகொள்ளாததால், மிகவும் நல்ல குழந்தைகளும் தமது பாக்கியத்தை இழப்பதைக் கண்டு பாபா வியப்படைகின்றார். இராவணனின் குறைபாடுகள் அவர்களைப் பற்றிக் கொண்டுள்ளன. அவர்களே தெய்வீகக் குணங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள். நீங்களே அந்தத் தேவர்கள் எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் 84 பிறவிகளை அனுபவம் செய்திருக்கின்றீர்கள். இந்த வித்தியாசமும், நீங்கள் எவ்வாறு தமோபிரதான் ஆகியுள்ளீர்கள் என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது இராவண இராச்சியம் ஆகும். இராவணன் கொடிய எதிரி என்பதால், பாரதத்தைக் கடனாளியாகவும், தமோபிரதானாகவும் ஆக்கியுள்ளான். இராம இராச்சியத்தில் அதிகளவானோர் இருப்பதில்லை. அங்கே ஒரே தர்மம் மாத்திரமே உள்ளது. இங்கே, அனைவரின் மீதும் தீய ஆவிகளின் ஆதிக்கம் உள்ளது; கோபம், பேராசை, பற்று ஆகிய தீய ஆவிகள் உள்ளன. நீங்கள் அழிவற்றவர்கள் என்பதனையும், சரீரங்களே அழியக்கூடியவை என்பதனையும் நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் சற்றேனும் ஆத்ம உணர்வில் இருப்பதில்லை. பெருமளவு சரீர உணர்வு உள்ளது. சரீர உணர்விற்கும், ஆத்ம உணர்விற்கும் இடையில் இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. ஆத்ம உணர்வுடைய தேவர்கள் முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றார்கள். சரீர உணர்வு உடையவராகியதால், அவர்கள் ஏழ்மை நிலையை அடைந்துள்ளார்கள். பாரதம் தங்கச் சிட்டுக்குருவியாக இருந்தது. அவர்கள் இதனைப் பற்றிப் பேசுகின்றார்கள், ஆனால் அதன் அர்த்தத்தை அவர்கள் அறியவில்லை. சிவபாபா உங்கள் புத்தியைத் தெய்வீகம் ஆக்கவே வருகின்றார். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். இந்த இலக்ஷ்மியும் நாராயணனுமே உலக அதிபதிகளாக இருந்தார்கள் அவர்களுக்கு அவர்களின் இராச்சியத்தைக் கொடுத்தவர் யார் என்பதை எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அவர்கள் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறும் வகையில் அவர்கள் எத்தகைய செயல்களைச் செய்தார்கள்? அது கர்மம் சம்பந்தப்பட்ட விடயமாகும். மக்கள் அசுர செயல்களைச் செய்யும்;பொழுது, அச் செயல்கள் பாவச் செயல்களாக உள்ளன. சத்திய யுகத்தில் செயல்கள் நடுநிலையானவை. அங்கே கர்மக் கணக்கு இருப்பதில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: புரிந்துகொள்ளாததால், மக்கள் பல தடைகளை விளைவிக்கின்றார்கள். அவர்கள் சிவனும் சங்கரரும் ஒருவரே எனக் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் சிவனை மாத்திரமே அசரீரியானவர் எனக் காட்டுகின்றார்கள், ஆனால் சங்கரரைக் காட்டும்பொழுது, அவரைப் பார்வதியுடன்; காட்டுகின்றார்கள். எனவே, அவர்கள் இருவரின் செயற்பாடுகளும் வேறானவை அமைச்சரும், ஜனாதிபதியும் எவ்வாறு ஒருவராக இருக்க முடியும்? இருவரின் அந்தஸ்தும் முற்றிலும் வேறுபட்டது. ஆகவே அவர்கள் கூறுவது போல், எவ்வாறு சிவனும் சங்கரரும் ஒருவராக இருக்க முடியும்? இராம சமுதாயத்தில் ஒருவராக ஆகாதவர்கள், இதனைப் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அசுர சமுதாயத்தினர் உங்களை இகழ்ந்து, உங்களுக்குத் தடைகளை ஏற்படுத்துவார்கள், ஏனெனில், அவர்களிடம் ஐந்து விகாரங்களும் உள்ளன. தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். அவர்கள் அத்தகைய உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் எந்த விகாரங்களும் அற்றவர்களாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அனைவரும் விகாரத்தின் மூலமே பிறப்பெடுக்கின்றார்கள். சந்நியாசிகளும் விகாரத்தின் மூலமே பிறப்பெடுக்க வேண்டும். அதன்பின்னர் அவர்கள் துறவறத்தை மேற்கொள்கின்றார்கள். சத்திய யுகத்தில் இவ்விடயங்கள் இடம்பெறுவதில்லை. சந்நியாசிகள் சத்திய யுகத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர் எங்கும் இருக்கின்றார் என்றும், இராதையும் எங்கும் இருக்கின்றார் என்றும் கூறுவதைப் போன்று, சத்திய யுகமும் சதாகாலத்திலும் உள்ளது என கூறுகின்றார்கள். பல்வேறு அபிப்பிராயங்களும், எண்ணற்ற சமயங்களும் உள்ளன. இப்பொழுது நீங்கள் பெறுகின்ற தெய்வீக வழிக்காட்டல்கள் அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றன. நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள், பின்னர் நீங்கள் விஷ்ணுவின் குலத்தினராகவும், அதன்பின்னர் சந்திர வம்சத்தினராகவும் ஆகுகின்றீர்கள். அவை இரண்டும் வம்சங்கள் என அழைக்கப்படுகின்றன, ஆனால் 'பிராமணக் குலம்" என்ற கூற்றே உள்ளது. இதனை ஒரு வம்சம் என்று அழைக்க முடியாது; இங்கே இராச்சியம் இருப்பதில்லை. இதனை நீங்கள் மாத்திரமே புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். உங்கள் மத்தியிலும், சிலர் மாத்திரமே இதனைப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். சிலர் தம்மை சற்றேனும் சீராக்கிக் கொள்வதில்லை. அவர்களிடம் ஏதாயினும் ஒரு தீய ஆவி உள்ளது. பேராசை, கோபம் போன்ற தீய ஆவிகள் உள்ளன. சத்திய யுகத்தில் எந்தத் தீய ஆவியும் இருப்பதில்லை. தேவர்கள் சத்திய யுகத்திலேயே இருக்கின்றார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷமானவர்கள். தீய ஆவிகளே துன்பத்தை விளைவிக்கின்றன. காமம் என்ற தீய ஆவி அதன் ஆரம்பம் முதல், அதன் மத்தியினூடாக இறுதி வரை துன்பத்தை விளைவிக்கின்றது. இங்கே நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். இது உங்கள் மாமியாரின் வீட்டிற்குப் போவது போன்றதல்ல! தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் கூறுகின்றார்: உங்களை நீங்கள் சகோதர, சகோதரிகள் எனக் கருதினால், குற்றப் பார்வை இருக்க முடியாது. அனைத்திற்கும் தைரியமே தேவைப்படுகின்றது. சிலர் கூறுகின்றார்கள்: உங்களுக்குத் திருமணம் செய்ய விருப்பம் இல்லாவிடில், இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுங்கள்! ஆகவே தைரியம் தேவைப்படுகின்றது. உங்களை நீங்கள் சோதித்தும் பார்க்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். இவை அனைத்தும் அழிவடையப் போகின்றன. அனைத்தும் தூசாகப் போகின்றது. சிலர் தொடர்ந்தும் மிகவும் தைரியத்துடன் முன்னேறிச் செல்கின்றார்கள். சிலரிடம் தைரியம் இருந்தபொழுதிலும் பின்னர் தோல்வி அடைகின்றார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பற்றித் தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும் நீங்கள் எதுவும் செய்யாதிருந்தால், நீங்கள் முழுமையான யோகத்தில் இருப்பதில்லை என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. பாரதத்தின் புராதன இராஜயோகம் மிகவும் பிரபல்யமானது. இந்த யோகத்தின் மூலமே நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இக்கல்வியே உங்கள் வருமானத்திற்கான மூலாதாரம் ஆகும். இதனைக் கற்பதன் மூலமே நீங்கள் வரிசைக்கிரமமாக உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். சகோதர, சகோதரி எனும் உறவுமுறையிலும் சிலரின் புத்தி விஷமத்தனத்தை விளைவிக்கின்றது. இதனாலேயே தந்தை உங்களை அதிலும் உயர்வாக அழைத்துச் செல்கின்றார்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். அத்துடன் பிறரையும் சகோதர ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் எனில், வேறு எந்தப் பார்வையும் இருக்க முடியாது. நீங்கள் ஒரு சரீரத்தைப் பார்க்கும்பொழுதே, குற்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சரீரமற்றவர்கள் ஆவீர்களாக. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆவீர்களாக. உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஒரு சரீரத்தின் மூலம் நீங்கள் உங்கள் பாகத்தை நடித்த பின்னர், நீங்கள் அந்தச் சரீரத்திலிருந்து விடுபட வேண்டும். அந்த நடிகர்கள் தங்கள் பாகங்களை நடித்து முடித்த பின்னர் தமது ஆடைகளை மாற்றிக் கொள்கின்றார்கள். நீங்களும் இப்பொழுது உங்கள் பழைய ஆடைகளை அகற்றி, புதியவற்றை அணிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், ஆத்மாக்கள்; தமோபிரதானாக உள்ளனர். சரீரங்களும் தமோபிரதானாக உள்ளன. தமோபிரதான் ஆத்மாக்களினால் முக்திக்குச் செல்ல முடியாது. அவர்கள் தூய்மையாகும்பொழுதே, அவர்களால் அங்கு செல்ல முடியும். தூய்மையற்ற ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியாது. இன்ன இன்னார் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலந்து விட்டார் என்று அவர்கள் கூறுதல் பொய்யாகும். ஒருவரேனும் அங்கு செல்ல முடியாது. அங்கே ஒரு வம்சாவளி விருட்சம் உருவாக்கப்பட்டிருப்பதைப் போன்றதாகும்; அது அவ்வாறே அங்கேயுள்ளது. பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். அவர்கள் கீதையில் பிராமணர்களின் பெயரை முற்றாகவே குறிப்பிடவில்லை. அவர் (சிவபாபா) பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தில் தான் பிரவேசிப்பதாக விளங்கப்படுத்துகின்றார். ஆகவே, தத்தெடுத்தல் நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. அந்தப் பிராமணர்கள் விகாரம் நிறைந்தவர்கள், ஆனால் நீங்களோ விகாரமற்றவர்கள். நீங்கள் விகாரமற்றவர்களாகும்பொழுது, பல துன்புறுத்தல்களைச் சகித்துக் கொள்ள நேரிடும். பெயரையும், வடிவத்தையும் பார்க்கும்பொழுது பலரும் தீய எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். சகோதர, சகோதரி என்ற உறவுமுறையிலும், அவர்கள் வீழ்ந்து விடுகின்றார்கள். அதன்பின்னர் அவர்கள் எழுதுகின்றார்கள்: பாபா, நான் வீழ்ந்து விட்டேன்; நான் எனது முகத்தை அழுக்காக்கிக் கொண்டேன். தந்தை கூறுகின்றார்: அற்புதம்! நான் கூறினேன்: ஒரு சகோதரரும் சகோதரியுமாக வாழ்ந்த பின்னர் நீங்கள் மீண்டும் பிழையான செயல்கள் செய்தீர்கள்! அதன்பின்னர் அதற்காக மிகவும் தீவிரமான தண்டனைகளைப் பெற நேரிடும். உண்மையில், ஒருவர் தீய செயல்களில் ஈடுபடும்பொழுது, சிறையில் அடைக்கப்படுகின்றார். நான் ஸ்தாபித்த பாரதம் மிகவும் தூய்மையாக இருந்தது, அதன் பெயரே சிவாலயம் ஆகும். எவரிடமும் இந்த ஞானம் இல்லை. சமயநூல்கள் போன்ற யாவும் பக்தி மார்க்கத்தின் பௌதீகமான சம்பிரதாயமாகும். சத்திய யுகத்தில், அனைவரும் சற்கதியில் உள்ளனர், இதனாலேயே அவர்கள் முயற்சி செய்யத் தேவையில்லை. இங்கே அனைவரும் சீரழிந்திருப்பதால், முக்திக்கும், சற்கதிக்குமான முயற்சியைச் செய்கின்றார்கள். அவர்கள் கங்கையில் நீராடுகின்றார்கள். ஆனால் கங்கை நீர் அவர்களுக்குச் சற்கதியைப் பெற்றுத் தருமா? அவர்களை அது தூய்மையாக்குமா? அவர்கள் எதனையும் அறியார்கள். உங்கள் மத்தியிலும், நீங்கள் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். சிலர் தாங்களே இதனைப் புரிந்துகொள்ளாததால், அவர்கள் எதனைப் பிறருக்கு விளங்கப்படுத்துவார்கள்? அதனாலேயே பாபா அவர்களை எங்கும் அனுப்புவதில்லை. நீங்கள் தொடர்ந்தும் பாடுகின்றீர்கள்: பாபா, நீங்கள் வரும்பொழுது, நான் உங்கள் வழிகாட்டல்களைப் பின்பற்றி ஒரு தேவர் ஆகுவேன். தேவர்கள் சத்திய, திரேதா யுகங்களில் வசிக்கின்றார்கள். இங்கே, அதிகமாகக் காம விகாரத்திலேயே மக்கள் சிக்குண்டுள்ளார்கள். அவர்களால் காமம் என்ற விகாரம் இல்லாதிருக்க முடியாது. அவர்கள் அதனைத் தமது தாய், தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியாகப் பெற்றுக் கொண்டதைப் போலுள்ளது. இங்கே, நீங்கள் உங்கள் ஆஸ்தியை இராமரிடமிருந்து பெறுகின்றீர்கள். நீங்கள் தூய்மை என்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அங்கே விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஸ்ரீ கிருஷ்ணரைக் கடவுள் என்று பக்தர்கள் கூறுகின்றார்கள். நீங்கள் அவரை 84 பிறவிகள் எடுப்பவராகவே காட்டுகின்றீர்கள். ஓ! ஆனால் கடவுள் அசரீரியானவர். அவரின் பெயர் சிவன் என்பதாகும். தந்தை உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அவர் கருணையும் கொண்டிருக்கின்றார். அவர் கருணைமிக்கவர். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சிறந்தவர்களும், விவேகமானவர்களும் ஆவீர்கள். உங்களிடம் பெருமளவு பகட்டு உள்ளது. தங்களில் ஞான, யோக சக்தியுடையவர்கள் பிறரைக் கவர்கின்றார்கள். மிகவும் நன்கு கற்றவர்கள் மிகவும் சிறந்த மரியாதையைப் பெறுகின்றார்கள். கல்வி அறிவற்றவர்கள் மரியாதையைப் பெறுவதில்லை. இந்நேரத்தில் அனைவரும் அசுர சமுதாயத்தினர் என்பதை நீங்கள் அறிவீர்கள்; அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. சிவனுக்கும் சங்கரருக்கும் உள்ள வேறுபாடு மிகவும் தெளிவாகியுள்ளது. அவர் அசரீரி உலகில் இருக்கின்றார், இவர் சூட்சும உலகில் இருக்கின்றார். அவர்கள் இருவரும் எவ்வாறு ஒருவராக இருக்க முடியும்? இது தமோபிரதான் உலகமாகும். இராவணன் அசுர சமுதாயத்திற்கு உரிய, எதிரியாவான். அவன் உங்களையும் தன்னைப் போன்று ஆக்குகின்றான். தந்தை இப்பொழுது உங்களைத் தன்னைப் போன்று ஆக்கி, உங்களைத் தேவ சமுதாயத்திற்கு உரியவர்கள் ஆக்குகின்றார். அங்கு இராவணன் இருப்பதில்லை. அவன் அரைக் கல்பத்திற்கு எரிக்கப்படுகின்றான். சத்திய யுகத்தில் இராம இராச்சியம் இருக்கின்றது. காந்திஜியும் இராம இராச்சியத்தை விரும்பினார். ஆனால் அவரால் எவ்வாறு இராம இராச்சியத்தை ஸ்தாபிக்க முடியும்? அவர் ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கான கற்பித்தல்களை எவருக்கும் கொடுக்கவில்லை. தந்தை மாத்திரமே சங்கம யுகத்தில் கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆவீர்களாக! இது மேன்மையானவர்கள் ஆகுவதற்கான யுகம். தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் தந்தையை அதிகளவு அன்புடன் மீண்டும் மீண்டும் நினைவுசெய்ய வேண்டும்: பாபா, இது உங்கள் அற்புதம்! நாங்கள் மிகவும் கல்லுப் புத்தி உடையவர்களாக இருந்தோம். நீங்கள் இப்பொழுது எங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றீர்கள். உங்கள் வழிகாட்டல்களை மாத்திரமே நாங்கள் பின்பற்றுவோம்; வேறு எவரது வழிகாட்டல்களையும் நாங்கள் பின்பற்ற மாட்டோம். இறுதியில் அனைவரும் கூறுவார்கள்: பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் தெய்வீக வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். பாபா அத்தகைய நல்ல விடயங்களை உங்களுக்குக் கூறுகின்றார். அவர் ஆரம்பம் மத்தி, இறுதியின் அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்து, உங்கள் குணாதிசயத்தையும் சீராக்குகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் பார்வையைத் தூய்மையாகவும், சுத்தமாகவும் ஆக்குவதற்கு, எவருடைய பெயரையும் வடிவத்தையும் பார்க்காதீர்கள். சரீரமற்றவர் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள். உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, உங்கள் சகோதர ஆத்மாவுடன் பேசுங்கள்.

2. அனைவரிடமிருந்தும் மரியாதையைப் பெறுவதற்கு, ஞான, யோக சக்திகளைக் கிரகியுங்கள். தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆகுங்கள். உங்கள் குணாதிசயத்தை விருத்தி செய்வதால், சேவை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் நோய் உணர்வுடையவராக இருப்பதற்குப் பதிலாக, உங்கள் கர்மக் கணக்குகளைச் சந்தோஷமாகத் தீர்த்து, ஆத்ம உணர்வுடையவராக இருப்பீர்;களாக.

அனைவரின் சரீரமும் இப்பொழுது பழையதாகி விட்டதால், ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு சிறிய அல்லது பெரிய நோய் உள்ளது. எவ்வாறாயினும், உங்கள் சரீரம் உங்கள் மனதைப் பாதித்தால், இரட்டை நோய் உடையவர்களாகி, நோய் உணர்வு கொண்டவர்களாகி விடுவீர்கள். ஆகவே, உங்கள் மனதில் நோய் உணர்வு எதுவும் இல்லாதிருக்கட்டும், அப்பொழுதே நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள். என்றுமே நோய் எதனையும் பற்றிப் பயப்படாதீர்கள். மருந்து வடிவில் சிறிது பழத்தை எடுத்து, நோய்க்கு விடைகொடுங்கள், உங்கள் கர்மக் கணக்குகளைச் சந்தோஷமாகத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

சுலோகம்:
ஒவ்வொரு தெய்வீகக் குணத்தையும், சக்தியையும் அனுபவம் செய்வதெனில், ஓர் அனுபவ சொரூபமாக இருப்பதாகும்.