08.02.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உச்சிக்குடுமிகளான பிராமணர்கள் என்பதை எப்பொழுதும் நினைவு செய்யுங்கள். நீங்கள் மேன்மையானவர் ஆகுகின்றீர்கள் என்பதால் முகமலர்ச்சியுடன் இருங்கள். உங்களுடன் உரையாடக் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் அளவற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள்.

பாடல்:
யாரால் தந்தையிடம் புகலிடம் பெற முடியும்? யாருக்கு தந்தை புகலிடம் கொடுக்கின்றார்?

பதில்:
பற்றை முற்றாக அழித்தவர்களும், தமது புத்தியின் யோகத்தை ஏனைய அனைத்திலிருந்தும் துண்டித்துக் கொண்டிருப்பவர்களுமே தந்தையிடம் புகலிடம் பெறுகின்றார்கள். புத்தியில் நண்பர்களின் அல்லது உறவினர்களின் மீது பற்று இருக்கக் கூடாது. உங்கள் புத்தியில் இருக்க வேண்டியது: என்னுடைவர் ஒரேயொரு பாபாவே அன்றி வேறு எவரும் அல்ல. அத்தகைய குழந்தைகளினாலேயே சேவை செய்ய முடியும். அத்தகைய குழந்தைகளுக்கே தந்தை புகலிடம் கொடுக்கின்றார்.

ஓம் சாந்தி.
அவரே (கடவுள்) ஆன்மீகத் தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் இதனை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உலகத்திற்கு இது தெரியாது. சந்நியாசிகள் சிவோஹம் (நானே சிவன்) என்று தம்மைப் பற்றிக் கூறும் பொழுது, தாமே தந்தையும், ஆசிரியரும், குருவும் என்று கூறுவதில்லை. அவர்கள் தம்மைப் பற்றி கூறும் போது, சிவோஹம், தத்-வம் , நானே சிவன், (அதுவே உங்களுக்கும் பொருந்தும்) என்றே கூறுகின்றார்கள். கடவுள் சர்வவியாபியாக இருந்தால், அனைவருமே தந்தையும் ஆசிரியரும், குருவும் ஆகிவிடுவார்கள். எவ்வாறாயினும், எவரும் தம்மை இவ்வாறு கருதுவதில்லை. மனிதர்கள் தம்மை பரமாத்மாவான கடவுள் என்று அழைத்துக் கொள்வது முற்றிலும் பிழையாகும். தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துவன அனைத்தும் புத்தியால் கிரகிக்கப்படல் வேண்டும். ஏனைய கல்வியில் பல பாடங்கள் உள்ளன. மாணவர்களின் புத்தியில் அனைத்து பாடங்களுமே நிலைத்திருக்கும் என்றில்லை. இங்கே தந்தை கற்பிக்கின்ற அனைத்தும் குழந்தைகளின் புத்தியில் ஒரு விநாடியில் புகுகின்றது. நீங்கள் படைப்பவரதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானத்தைக் கூறுகின்றீர்கள். நீங்கள் முக்காலத்தை அறிந்தவர்களாகவும், சுயதரிசன சக்கரதாரிகள் ஆகவும் ஆகுகின்றீர்கள். பௌதீகக் கல்வியில் பாடங்கள் அனைத்தும் முற்றிலும் வேறுபட்டிருக்கும். ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்கின்றார் என்று நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்தி அதனை நிரூபிக்கின்றீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் பரமாத்மாவை நினைவு செய்கின்றார்கள். அவர்கள் ஓ, தந்தையான கடவுளே என்று கூறுகின்றார்கள். ஆகையால் நீங்கள் நிச்சயமாக தந்தையிடம் இருந்து ஆஸ்தியை பெற வேண்டும்! மக்கள் அந்த ஆஸ்தியை இழக்கும் போதே, துன்பம் அடைகின்றார்கள். இதுவே இன்பம், துன்பம் என்ற விளையாட்டைப் பற்றியதாகும். இந்த நேரத்தில், அனைவரும் தூய்மையற்றவர்களாகவும், சந்தோஷம் அற்றவர்களாகவும் உள்ளனர். நீங்கள் தூய்மையாகுவதன் மூலம், சந்தோஷத்தை நிச்சயமாக அனுபவம் செய்கின்றீர்கள். தந்தையே சந்தோஷ உலகை ஸ்தாபிக்கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையே விளங்கப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவர் ஆவார். தந்தை உலகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார். ஏனைய சமயங்கள் அனைத்தும் தத்தமது நேரத்தில் ஸ்தாபிக்கப்படுகின்றன. இவ்விடயங்கள் வேறு எவரின் புத்தியிலும் இல்லை. தந்தை இந்தக் கல்வியை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் இலகுவாக்கியுள்ளார். அவர் உங்களுக்கு விபரமாக விளங்கப்படுத்துவது: உங்கள் தந்தையான என்னை நினைவு செய்தால், நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். யோகம் அதிகளவில் போற்றப்படுகின்றது. பாரதத்தின் புராதன யோகம் நினைவு கூரப்பட்ட போதிலும், யோகத்திலிருந்து என்ன நன்மை கிடைக்கின்றது என்பதை எவரும் அறியாதுள்ளனர். அசரீரியான கடவுள் கற்பிக்கின்றார் என்று கீதையில் குறிப்பிடப்பட்ட யோகம் இதுவே ஆகும். ஏனைய யோகம் அனைத்தும் மனிதர்களினால் கற்பிக்கப்படுகின்றது. தேவர்களுக்கான யோகம் என்ற கேள்விக்கு இடமில்லை. மனிதர்களே ஹத்தயோகம் போன்றவற்றைக் கற்பிக்கின்றார்கள். தேவர்கள் அவற்றைக் கற்பதும் இல்லை, கற்பிப்பதும் இல்லை. தெய்வீக உலகில், யோகம் என்ற கேள்விக்கு இடமில்லை. யோகத்தின் மூலம் அனைவரும் தூய்மை ஆகுகின்றார்கள். அவர்கள் இங்கேயே நிச்சயமாக அவ்வாறு ஆகுகின்றார்கள். உலகத்தைத் தூய்மை ஆக்குவதற்காகத் தந்தை சங்கமயுகத்திலேயே வருகின்றார். நீங்கள் இப்பொழுது பழைய உலகத்திலிருந்து புதிய உலகிற்கு மாற்றம் செய்யப்படுகின்றீர்கள். இதனை ஒருவருக்கு விளங்கப்படுத்துதல் அற்புதமான விடயமாகும். பிராமணர்களாகிய நாங்களே உச்சிக்குடுமிகள். பிராமணர்கள் அதாவது உச்சிக்குடுமிகள் கலியுகத்திற்கும் சத்தியயுகத்திற்கும் இடையில் உள்ளனர். இதுவே சங்கமயுகம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் போதே நீங்கள் மேன்மையானவர் ஆகுகின்றீர்கள். நீங்களே அதி மேன்மையானவர் ஆகப் போகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்;தியில் நிலைத்திருந்தால் நீங்கள் சதா முகமலர்ச்சியுடன் இருப்பீர்கள். நீங்கள் எந்தளவிற்கு சேவை செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் அதிகளவு முகமலர்ச்சியுடன் இருப்பீர்கள். நீங்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்வதுடன், ஏனையோரும் ஈட்டுவதற்குத் தூண்டுங்கள். நீங்கள் கண்காட்சிகளில் சேவை செய்வது அதிகரிப்பதற்கேற்ப, நீங்கள் கூறுவதைச் செவிமடுப்பவர்களின் சந்தோஷமும் அதிகரிக்கும். அதில் உங்களுக்கும், பிறருக்கும் நன்மையுள்ளது. சிறு நிலையங்களிலும் கூட, 5 அல்லது 6 பிரதான படங்கள் இருக்க வேண்டும். அவற்றை விளங்கப்படுத்துவது இலகுவாகும். நீங்கள் சேவை செய்ய வேண்டும். நாள் முழுவதும் அதிகளவு சேவை செய்ய வேண்டும். உங்களுக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்களின் மீது எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது. உங்கள் கண்களால் காண்பவை அனைத்தும் அழியப்போகின்றன. எவ்வாறாயினும், நீங்கள் தெய்வீகக் காட்சிகளின் மூலம் கண்டவை அனைத்தும் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இவ்வாறாகத் தொடர்ந்தும் உங்களுக்குள் உரையாடினால், நீங்கள் உறுதியானவர் ஆகுவீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையைச் சந்தித்த சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். அரசருக்குப் பிறந்த ஒருவருக்கு தூய பெருமை உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். உங்களுக்காகவே நீங்கள் அனைவரும் முயற்சி செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: காமச் சிதையில் அமர்ந்ததால், நீங்கள் அவலட்சணம் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது ஞானச் சிதையில் அமருங்கள். அப்போது நீங்கள் அழகாகுவீர்கள். இந்த எண்ணங்கள் உங்கள் புத்தியில் தொடர்ந்தும் சுழல வேண்டும். உங்கள் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாலும் நீங்கள் தொடர்ந்தும் நினைவு செய்ய வேண்டும். உங்களுக்கு நேரம் இல்லை என்றில்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆன்மீக வருமானத்தை ஈட்டுங்கள். அது மிகவும் உயர்ந்த வருமானமாகும். ஒரேநேரத்தில் நீங்கள் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் பெறுகின்றீர்கள். அர்ஜுனனதும், ஏகலைவன் (கிராமவாசி) ஒரு கதையுள்ளது. உங்கள் வீட்டில், குடும்பத்துடன் வாழும் போதும் நீங்கள் யோகத்திலும் ஞானத்திலும், இங்கு இருப்பவர்களைவிட விரைவாக முன்னேறிச் செல்ல முடியும். அனைத்தும் நினைவு செய்தலிலேயே தங்கியுள்ளது. நீங்கள் அனைவரும் இங்கேயே இருப்பதாயின், எவ்வாறு சேவை இடம்பெறும்? புத்துணர்வு பெற்று, அதன் பின்னர் சேவையில் ஈடுபட்டிருங்கள். சேவையை பற்றிய எண்ணமே இருக்க வேண்டும். பாபாவும் தாதாவும் சேர்ந்து இருப்பதால், பாபா கண்காட்சிகளுக்கு செல்ல முடியாது. பாபாவின் ஆத்மாவும் இவரின் ஆத்மாவும் ஒன்றாகவே உள்ளனர். அவர்கள் அற்புதமான தம்பதியர் ஆவார்கள். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இந்தத் தம்பதியரை தெரியாது. பாபா தன்னை தம்பதியினரில் ஒருவராகக் கருதுவதுடன், நான் மாத்திரமே நீண்ட நாள் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட பாபாவின் புத்திரன் என்றும் கூறுகின்றார். இலக்ஷ்மியினதும் நாராயணனதும் இப் படத்தை அவர் காணும் போது, இதுவே எனது அடுத்த பிறவி என்று அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார். நான் நிச்சயமாக சிம்மாசனத்தில் அமருவேன். நீங்களும் இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள். இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளது. நீண்ட காலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட பாபாவின் புத்திரர் என்ற சந்தோஷம் இவருக்கு உள்ளது. இருப்பினும், அவரால் அந்த சந்தோஷத்தை எப்பொழுதும் பேண முடிவதில்லை. அவரது எண்ணங்கள் பல்வேறு திசைக்கு திருப்பப்படுகின்றன. நினைவு சதா நிலைத்திருப்பதும், வேறு எந்த எண்ணங்களும் வரமாட்டாதென்பதும் நாடகத்தின் நியதி அல்ல. மாயையின் புயல் உங்களை நினைவு செய்ய அனுமதிப்பதில்லை. பாபா எனக்குள் பிரவேசித்திருப்பதால், எனக்கு அது இலகுவானது என்பது எனக்குத் தெரியும். நானே முதல் இலக்கத்துக்குரிய, நீண்டகாலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட பாபாவின் குழந்தை ஆவேன்;. நானே முதல் இலக்கத்து இளவரசன் ஆவேன். இருப்பினும் நினைவு செய்ய நான் மறந்து விடுகிறேன். பல வகையான எண்ணங்கள் வருகின்றன. இதுவே மாயை ஆகும். இந்த பாபாவிற்கு இவ் அனுபவங்கள் கிடைத்தால், மாத்திரம் அவரால் குழந்தைகளாகிய உங்களுக்கு அவற்றை விளங்கப்படுத்த முடியும். நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடையும் போதே இந்த எண்ணங்கள் முடிவடையும். ஆத்மா முழுமையடையும் போதே, சரீரம் இல்லாது போகும். சிவபாபா எப்பொழுதும் தூய்மையாகவே இருக்கின்றார். தூய்மையற்ற உலகிற்கு வந்து ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசித்து, இந்தத் தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குவது அவரின் பாகமாகும். அவரும் இந்த நாடகத்திற்கு கட்டுப்பட்டவர் ஆவார். நீங்கள் தூய்மை ஆகும் போது, உங்களுக்கு ஒரு புதிய சரீரம் தேவையாகும். சிவபாபாவிற்கு தனக்கென ஒரு சரீரம் இல்லை. இந்தச் சரீரத்தில் உள்ள இந்த ஆத்மாவிற்கே (பிரம்மபாபா) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் என்ன உள்ளது? அவர் முரளியைப் பேசி, விடைபெற்றுச் சென்றதும் அவர் விடுதலையடைகின்றார். சிலவேளைகளில் அவர் இங்கு வருகின்றார். சிலவேளைகளில் அவர் வேறு எங்காவது செல்கின்றார். சிவபாபாவே முரளியை கூறுகின்றார் என்று குழந்தைகளாகிய நீங்களும் உணர்கின்றீர்கள். தந்தைக்கு உதவி செய்யவே நீங்கள் இந்த இறை சேவையில் ஈடுபட்டிருக்கின்றீர்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் எனது இனிய வீட்டை விட்டு உங்களுக்காகவே வருகின்றேன். பரந்தாமம் என்றால், அப்பால் உள்ள பிரதேசமான அசரீரிய உலகமாகும். எவ்வாறாயினும், முழு நாடகமும் இந்த பூமியிலேயே இடம்பெறுகின்றது. இது ஓர் அற்புதமான நாடகம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். எவ்வாறாயினும் ஒரேயொரு உலகமே உள்ளது. அம் மக்கள் சந்திரனுக்குச் செல்வதற்கு முயற்சிக்கின்றார்கள். அது விஞ்ஞான சக்தியாகும். நாங்கள் மௌன சக்தியினால், விஞ்ஞானத்தை வெற்றி கொள்ளும் போது, விஞ்ஞானமும் சந்தோஷத்தைக் கொடுக்கும். இங்கே விஞ்ஞானம் சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொடுக்கின்றது. அங்கே சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. அங்கே துன்பம் என்பதன் சுவடே இருக்க மாட்டாது. இவ்விடயங்கள் நாள் முழுவதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். பாபாவிற்குப் பல எண்ணங்கள் உள்ளன. பந்தனத்தில் உள்ளவர்கள் நஞ்சுக்காக அதிகளவு துன்புறுத்தப்படுகின்றனர். எவ்வாறாயினும் சிலர் பற்றினால் சிக்கிக் கொள்கின்றனர். புத்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் உடனடியாகவே நாங்கள் அமிர்தத்தைப் பருக வேண்டும் என்று கூறுகின்றார்கள். இதற்கு நீங்கள் பற்றை அழிப்பவர்கள் ஆக வேண்டும். பழைய உலகத்திலிருந்து உங்கள் இதயம் அகற்றப்பட வேண்டும். அத்தகைய சேவை செய்பவர்களே இதய சிம்மாசனத்தில் அமர முடியும். அவர்களுக்கு புகலிடம் கொடுக்க முடியும். ஒரு குமாரிக்கு கணவனால் புகலிடம் கொடுக்கப்பட்ட போதிலும், அவர் நஞ்சு இல்லாது இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, அவர் தந்தையிடம் புகலிடம் பெற வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் நீங்கள் முற்றிலும் பற்றை அழிக்க வேண்டும். நாங்கள் கணவருக்கெல்லாம் கணவரை சந்தித்து உள்ளதால், நாங்கள் எங்கள் புத்தியின் யோகத்தினால் அவருடன் நிச்சயிக்கப்பட்டுள்ளோம். என்னுடையவர் ஒரேயொருவரே அன்றி வேறு எவரும் இல்லை. ஒரு குமாரி தனது கணவரின் மீது அன்பு கொண்டிருப்பதைப் போன்று, இந்த ஆத்மாவின் அன்பு பரமாத்மாவுடன் இருக்க வேண்டும். அவரிடமிருந்து (லௌகீகக் கணவரிடம் இருந்து) நீங்கள் துன்பத்தையே பெறுவீர்கள், ஆனால் இவரிடமிருந்து நீங்கள் சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். இது சங்கமயுகமாகும். இதனைப் பற்றி எவருக்கும் தெரியாது. உங்களுக்குள் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். எங்களை பூந்தோட்டத்திற்கு அழைத்துச் செல்கின்ற படகோட்டியையும், தோட்டக்காரரையும் நாங்கள் சந்தித்துள்ளோம். இந்த நேரத்தில் மனிதர்கள் அனைவரும் முட்களைப் போன்று ஆகியுள்ளனர். காமமே மிகப் பெரிய முள்ளாகும். முதன் முதலில் நீங்கள் விகாரமற்ற பூக்களாக இருந்தீர்கள். அதன் பின்னர் உங்கள் சுவர்க்கக்கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்து, இப்பொழுது நீங்கள் பெரிய முட்களாகி உள்ளீர்கள். பாபா பபுல்நாத் (முட்களின் பிரபு) என்று அழைக்கப்படுகின்றார். ஆதியான பெயர் சிவன் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். அவர் முட்களை மலர்கள் ஆக்குவதால், பபுல்நாத் என்று அழைக்கப்படுகின்றார். பக்தி மார்க்கத்தில் அவருக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உண்மையில் சிவன் என்ற ஒரு பெயர் மாத்திரமே உள்ளது. உருத்திர ஞானயாகம் என்று கூறினாலும், சிவஞானயாகம் என்று கூறினாலும் இரண்டும் ஒன்றேயாகும். உருத்திர ஞானயாகத்திலிருந்தே விநாசச் சுவாலையும், கிருஷ்ணதாமமும், அதாவது, ஆதிசனாதன தேவ தர்மமும் உருவாகியது. இந்த யாகத்திலிருந்தே நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். அவர்கள் மிகவும் அற்புதமான படங்களை தயாரிக்கின்றார்கள். பிரம்மா விஷ்ணுவின் தொப்புள் கொடியிலிருந்து உருவாகுவதைப் போன்று காட்டுகின்றார்கள். உங்களுக்கு இவை அனைத்தும் தெரியும். பிரம்மாவும், சரஸ்வதியுமே இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது. இலக்ஷ்மியும் நாராயணனும்; 84 பிறவிகளை எடுத்த பின்னர் பிரம்மாவும் சரஸ்வதியும் ஆகுகின்றார்கள். இவ்விடயங்களை செவிமடுக்கும் போது, மக்கள் ஆச்சரியப்படுகின்றார்கள். அவர்கள் சந்தோஷத்தையும் அனுபவம் செய்கின்றார்கள். எவ்வாறாயினும் மாயையும் குறைந்தவள் அல்ல. காமமே கொடிய எதிரியாகும். மாயை உங்களைப் பெயரிலும் வடிவத்திலும் சிக்கச் செய்து உங்களை வீழ்த்துகின்றாள். நீங்கள் தந்தையை நினைவு செய்ய அவள் அனுமதிப்பதில்லை. பின்னர் அந்தச் சந்தோஷம் குறைவடைகின்றது. நீங்கள் பலருக்கும் விளங்கப்படுத்தியுள்ளீர்கள் என்பதில் சந்தோஷம் அடைந்து விடக் கூடாது. நீங்கள் எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்கின்றீர்கள் என்று முதலில் பார்க்க வேண்டும்: நான் உறங்கச் செல்வதற்கு முன்னர் பாபாவை நினைவு செய்கின்றேனா இல்லையா? சில குழந்தைகள் தமது ஒழுக்கத்தில் மிகவும் உறுதியாக உள்ளனர். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தந்தையின் தலையில் பெருஞ்சுமை உள்ளது. எவ்வாறாயினும், இரதத்திற்கு சலுகை கிடைக்கின்றது. அவருக்கு ஞானமும் யோகமும் உள்ளது. இவை இல்லாதிருந்தால், அவர் எவ்வாறு இலக்ஷ்மி நாராயணன் என்ற அந்தஸ்தை அடைய முடியும்? பாபாவிற்குத் தான் மாத்திரம் தந்தையின் ஒரேகுழந்தையும், பல குழந்தைகளைக் கொண்டிருப்பவரும் என்ற சந்தோஷம் உள்ளது. அவருக்கு இந்தப் போதை இருந்த போதிலும், மாயை தடைகளை உருவாக்குகின்றாள். குழந்தைகளாகிய நீங்களும் மாயையிடம் இருந்து தடைகளை அனுபவம் செய்பவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் முன்னேறிச் செல்லும் போது, கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். இந்த பாபாவும் தாதாவும் ஒன்றாகவே உள்ளனர். அவர் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தந்தையே அன்புக்கடலாவார்....... இவரது ஆத்மாவும் அவருடனேயே உள்ளார். இவருக்கும் அன்பு உள்ளது. தான் செய்கின்ற செயல்களைப் பார்க்கின்றவர்களும் அதையே செய்வார்கள் என்பதை அவர் புரிந்து கொள்கின்றார். நீங்கள் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் விவேகமானவராக இருக்க வேண்டும். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வளவு விவேகமாக உள்ளார்கள் என்று பாருங்கள். அவர்கள் விவேகமாக இருப்பதன் மூலம் உலக இராச்சியத்தைப் பெறுகின்றார்கள். கண்காட்சிகளின் மூலம் பல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள். பாரதம் மிகவும் பெரியது என்பதால், நீங்கள் அதிகளவு சேவை செய்ய வேண்டும். இரண்டாவதாக நீங்கள் நினைவில் நிலைத்திருந்து, உங்கள் பாவங்களை அழித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவது எவ்வாறு என்பதே மிகவும் சிறந்த அக்கறையாகும். இதற்கு முயற்சி தேவையாகும். சேவை செய்வதற்கு அதிகளவு சந்தர்ப்பங்கள்; உள்ளன. நீங்கள் புகைவண்டியில் சின்னத்தையும் (பட்ஜை) அணிந்தவாறே சேவை செய்ய வேண்டும்: இது பாபாவும், அது ஆஸ்தியும் ஆகும். பாரதம் 5000 வருடங்களுக்கு முன்னர் நிச்சயமாக சுவர்க்கமாக இருந்தது. அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாகும். அவர்களின் இராச்சியம் நிச்சயமாக மீண்டும் வர வேண்டும். பாபாவை நினைவு செய்வதன் மூலம் நாங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுகின்றோம். புகைவண்டியில் அதிகளவு சேவை செய்ய வேண்டும். ஒவ்வொரு பெட்டியாகச் சென்று சேவை செய்ய வேண்டும். சேவை செய்பவர்கள் இதய சிம்மாசனத்தைப் பெறுகின்றார்கள். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் நற்செய்தி ஒன்றை உங்களுக்குக் கூற விரும்புகின்றோம். நீங்கள் பூஜைக்குரிய தேவர்களாக இருந்தீர்கள். பின்னர் 84 பிறவிகளின் போது, நீங்கள் பூஜிப்பவர் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் பூஜைக்குரியவர்கள் ஆகுங்கள். ஏணிப்படம் மிகவும் நல்லது. அதைப் பயன்படுத்தி சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளை நிரூபிக்கலாம். பாடசாலைகளில் பரீட்சைக்காலத்தின் போது, மாணவர்களுக்கு பாய்ந்து முன்னேறுவதில் ஆர்வம் இருக்கும். இங்கேயும், நேரத்தை வீணாக்குபவர்கள், ஓடோடி சேவை செய்ய வேண்டும் என்று விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சேவை செய்வதற்கு அதிக இடம் உண்டு. பாபா அனுப்புகின்ற இடங்களுக்குச் சென்று சேவை செய்யக் கூடிய புத்திரிகள் பலர் வெளிப்பட வேண்டும். ஆலயங்களில் நல்ல சேவைகள் செய்யலாம். தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாகவே புரிந்து கொள்வார்கள். கங்கையில் நீராடச் செல்கின்ற இடங்களுக்குச் சென்றும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். அவர்களின் இதயம் இதனை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு ஆன்மீக சேவை செய்யுங்கள். உண்மையான வருமானத்தை சம்பாதிப்பதுடன், பிறரும் வருமானம் ஒன்றை ஈட்டுவதற்குத் தூண்டுங்கள். உங்களுக்கும் பிறருக்கும் நன்மை செய்யுங்கள். புகைவண்டியில் உங்கள் பட்ஜ் மூலம் சேவை செய்யுங்கள்.

2. பழைய உலகத்திலிருந்து உங்கள் இதயத்தை அகற்றுங்கள். பற்றை வென்றவர்கள் ஆகுங்கள். ஒரேயொரு தந்தையின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சங்கமயுகத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, அதனால் ஒவ்வொரு கணத்திற்கும் விசேடமான கவனம் செலுத்துவதன் மூலம், ஒரு கதாநாயக நடிகர் ஆகுவீர்களாக.

ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும், சதா இந்த ஆசீர்வாதத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள்: நான் ஒரு கதாநாயக நடிகர். அப்போது, உங்களின் ஒவ்வொரு செயலும் விசேடமாக இருக்கும். அதனால், ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் எண்ணமும் மேன்மையாக இருக்கும். ஐந்து நிமிடங்கள் மட்டுமே சாதாரணமானவை என உங்களால் சொல்ல முடியாது. சங்கமயுகத்தின் ஐந்து நிமிடங்களும் மிகவும் முக்கியமானவை. இங்குள்ள ஐந்து நிமிடங்களும் அங்குள்ள ஐந்து வருடங்களை விட மகத்தானவை. அதனால், நேரத்தில் கவனம் செலுத்துங்கள். எல்லா வேளையும் உங்களின் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவதற்கு, எல்லா வேளையும் கவனம் செலுத்துங்கள்.

சுலோகம்:
தமது எண்ணங்களில் திடசங்கற்ப சக்தியைக் கொண்டிருப்பவர்களுக்கு ஒவ்வொரு பணியும் சாத்தியமானது.