28.04.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    23.10.99     Om Shanti     Madhuban


அருள்பவர் ஆகுவதே, காலத்தின் அழைப்பாகும்.


இன்று, பாக்கியத்தின் அதிமேன்மையான அருள்பவரும் சகல சக்திகளை அருள்பவருமான பாப்தாதா, இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து, மதுவனத்தில் இருந்து அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் தனது குழந்தைகள் எல்லோரையும் பார்க்கிறார். நீங்கள் எல்லோரும் எங்கே அமர்ந்திருந்தாலும், நீங்கள் எல்லோரும் இதயபூர்வமாக தனிப்பட்ட முறையில் பாப்தாதாவின் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். எனவே, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரையும் பார்த்து சந்தோஷப்படுகிறார். நீங்கள் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? குழந்தைகளான நீங்களும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். பாப்தாதாவும் சந்தோஷமாக இருக்கிறார். இதயத்தில் உள்ள இந்த நிலையான சந்தோஷம், முழு உலகிலும் உள்ள துன்பங்கள் அனைத்தையும் நீக்கும். உங்களின் இதயங்களில் உள்ள இந்த சந்தோஷம், ஆத்மாக்கள் தந்தையின் அனுபவத்தைப் பெறச் செய்யும். ஏனென்றால், அவர் ஆத்மாக்கள் எல்லோருக்கும் சதா சேவையாளர் ஆவார். அத்துடன் குழந்தைகளான நீங்கள் எல்லோரும் அவரின் சேவை சகபாடிகள் ஆவீர்கள். நீங்கள் எல்லோரும் சகபாடிகள்தானே? நீங்கள் தந்தையின் சகபாடிகள். எனவே நீங்கள் உலகின் துன்பத்தை மாற்றுவதுடன் சதா சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளீர்கள். இதுவே சந்தோஷமாக இருப்பதற்கான வழிமுறையாகும். நீங்கள் சதா சேவையாளர்கள். நீங்கள் வெறுமனே நான்கு மணிநேரம் அல்லது ஆறு மணிநேரம் மட்டும் சேவை செய்பவர்கள் அல்ல. நீங்கள் ஒவ்வொரு விநாடியும் சேவை மேடையில் உங்களின் பாகங்களை நடிக்கும் இறை சகபாடிகள் ஆவீர்கள். எப்படி நினைவென்பது நிலையானதோ, அதேபோல், உங்களின் சேவையும் நிலையானது. நீங்கள் உங்களை நிலையான சேவையாளர்களாகக் கருதுகிறீர்களா? அல்லது, நீங்கள் எட்டு மணிநேரத்திற்கு அல்லது பத்து மணிநேரத்திற்கு மட்டும் சேவை செய்யும் சேவையாளர்களா? இந்தப் பிராமணப் பிறவியானது, நினைவு செய்வதற்கும் சேவை செய்வதற்கும் ஆகும். இதைவிட நீங்கள் செய்வதற்கு வேறு ஏதாவது இருக்கிறதா? இவை அனைத்தையுமே நீங்கள் செய்ய வேண்டும். ஒவ்வொரு விநாடியிலும் ஒவ்வொரு மூச்சிலும், நினைவும் சேவையும் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம். அல்லது, சேவை செய்வதற்கான நேரம், நினைவு செய்யும் நேரத்தில் இருந்து வேறுபட்டதா? அப்படி இல்லைத்தானே? உங்களிடம் நல்லதொரு சமநிலை காணப்படுகிறதா? நீங்கள் 100 சதவீதம் சேவை செய்கிறீர்கள் என்றால், உங்களிடம் 100 சதவீதம் நினைவும் இருக்கிறதா? இரண்டுக்கும் இடையில் சமநிலை காணப்படுகிறதா? இதில் வேறுபாடு இருக்கிறதுதானே? ஒரு கர்மயோகி என்றால், நினைவில் இருந்தவண்ணம் செயலைச் செய்பவர் என்று அர்த்தம். நினைவும் சேவையும் இருக்க வேண்டும். அவற்றில் ஒரு சமநிலை இருக்க வேண்டும். சிலவேளைகளில் நீங்கள் செய்யும் சேவையை விட உங்களின் நினைவானது அதிகமாக இருப்பதாக இருக்கக்கூடாது. அல்லது, உங்களின் சேவை சிலவேளைகளில் உங்களின் நினைவை விட அதிகமாக இருக்கக்கூடாது. ஆத்மாவும் சரீரமும் இந்த மேடையில் இருப்பதனால், அவை இரண்டும் ஒன்றாக இருக்கின்றன. அவற்றைப் பிரிக்க முடியுமா? அதேபோல், நினைவும் சேவையும் ஒன்றிணைந்திருக்க வேண்டும். நினைவு என்றால் தந்தைக்குச் சமமாகுதல் என்று அர்த்தம். உங்களின் சுய மரியாதையின் நினைவும் இருக்க வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்தால், இயல்பாகவே நீங்கள் உங்களின் சுயமரியாதையையும் நினைவு செய்வீர்கள். உங்களிடம் சுயமரியாதை இல்லாவிட்டால், உங்களால் சக்திவாய்ந்த நினைவைக் கொண்டிருக்க முடியாது.

சுயமரியாதை என்றால் தந்தைக்குச் சமமாக இருத்தல் என்று அர்த்தம். சம்பூரணமான சுயமரியாதை என்றால், தந்தைக்குச் சமமாகுதல் என்று அர்த்தம். இத்தகைய நினைவைக் கொண்டிருக்கும் குழந்தைகள், சதா அருள்பவர்கள் ஆவார்கள். அவர்கள் எடுப்பவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் அருள்பவர்களாக, தேவதேவியர்களாக இருப்பார்கள். இன்று, நீங்கள் எந்தளவிற்கு அருள்பவர்கள் ஆகியுள்ளீர்கள் எனப் பார்ப்பதற்கு பாப்தாதா குழந்தைகள் எல்லோருடைய ஸ்திதிகளையும் சோதித்தார். எதையும் எடுப்பதைப் பற்றி தந்தையால் ஒருபோதும் நினைக்க முடியாது. அவர் சதா வழங்குவதைப் பற்றியே நினைக்கிறார். உங்களிடமுள்ள பழையவை அனைத்தையும் கொடுக்கும்படி அவர் கேட்டாலும், அதற்கு ஈடாக அவர் எல்லாவற்றையும் புதியதாகவே வழங்குகிறார். பெறுவதென்றால், தந்தைக்குக் கொடுத்தல் என்று அர்த்தம். எனவே, தற்போது, பாப்தாதா குழந்தைகளின் ஒரு தலைப்பை மிகவும் விரும்புகிறார். அந்தத் தலைப்பு என்ன? இந்தத் தலைப்பு வெளிநாட்டவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தத் தலைப்பு என்ன? காலத்தின் அழைப்பு.

தற்சமயம், குழந்தைகளான உங்களின் காலத்தின் அழைப்பு என்னவென்று பாப்தாதாவும் பார்த்தார். தற்சமயம் காலத்தின் அழைப்பு என்னவென்று உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சேவைக்காகச் சொற்பொழிவுகள் வழங்குகிறீர்கள். தொடர்ந்தும் அப்படிச் செய்கிறீர்கள்தானே? எவ்வாறாயினும், உங்களைப் பற்றி உங்களிடமே கேட்டுப் பாருங்கள்: தற்சமயம் எனக்கு காலத்தின் அழைப்பு என்ன? அது என்ன? தற்போதைய காலத்தின் அழைப்பு என்ன? இந்த நேரத்திற்கேற்ப, குழந்தைகளான நீங்கள் எல்லோரும் அருள்பவராக இருக்கும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்பதை பாப்தாதா பார்த்தார். சுய முன்னேற்றத்தைப் பொறுத்தவரையும் எல்லோரிலும் அன்பு வைத்திருப்பதைப் பொறுத்தவரையும் அருள்பவராக இருக்கும் உணர்வுகள் உங்களுக்குள் புலப்படும் வகையில் வெளிப்படுகிறதா? மற்றவர்கள் யாராக இருந்தாலும் அல்லது அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், நீங்கள் அருள வேண்டும். அருள்பவர் சதா எல்லையற்ற மனோபாவத்தைக் கொண்டிருப்பார். எல்லைக்குட்பட்ட மனோபாவத்தை அல்ல. அருள்பவர் சதா நிரம்பியிருப்பார் அத்துடன் நிரம்பிவழிவார். அருள்பவர் சதா மாஸ்ரர் மன்னிப்புக்கடலாக இருப்பார். இந்தக் காரணத்தினால், உங்களின் எல்லைக்குட்பட்ட சம்ஸ்காரங்கள் அல்லது மற்றவர்களின் சம்ஸ்காரங்கள் வெளிப்பட்டிருக்காது. ஆனால் அவை அமிழ்ந்தே இருக்கும். ‘நான் அருள வேண்டும். மற்றவர்கள் கொடுத்தாலென்ன கொடுக்காவிட்டாலென்ன, நான் அருள வேண்டும்.’ எந்தவொரு சம்ஸ்காரத்தின் ஆதிக்கத்தின் கீழுள்ள எந்தவோர் ஆத்மாவிற்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டும். அப்போது எவருடைய எல்லைக்குட்பட்ட சம்ஸ்காரங்களும் உங்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒருவர் உங்களை மதித்தாலென்ன மதிக்காவிட்டாலென்ன, நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். இவ்வாறு அருள்பவராக இருக்கும் உங்களின் உணர்வுகள் இப்போது வெளிப்பட வேண்டும். இந்த உணர்வு உங்களின் மனதில் இருக்கிறது, ஆனால்.... என்பதாக இருக்கக்கூடாது. ‘ஆனால்’ என்பது இருக்கக்கூடாது. ‘நான் இதைச் செய்ய வேண்டும்.’ யாராவது ஒருவரின் செயல்களோ அல்லது வார்த்தைகளோ உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவற்றை ஏற்றுக் கொள்ளாதீர்கள். கெட்டுப்போன எதையும் நீங்கள் எடுப்பீர்களா? உங்களின் மனதில் அதைக் கிரகித்தல் என்றால் அதை எடுத்துக் கொள்ளுதல் என்று அர்த்தம். அது உங்களின் தலையையேனும் தொடக்கூடாது. அந்த விடயம் உங்களின் தலைக்குள் பிரவேசிக்கவே அனுமதிக்காதீர்கள். அது தீயதாக இருக்கும்போது, அது நல்லதில்லை எனும்போது, உங்களின் தலைக்குள் அல்லது இதயத்திற்குள் அதை எடுத்துக் கொள்ளாதீர்கள். அதைக் கிரகிக்காதீர்கள். அதற்குப் பதிலாக, ஓர் அருள்பவராகி, நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருங்கள். தீயது எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். இப்போதுள்ள நேரத்திற்கேற்ப, உங்களின் தலையும் இதயமும் வெறுமையாக இல்லாவிட்டால், உங்களால் சதா சேவையாளராக ஆகமுடியாது. உங்களின் தலையும் இதயமும் ஏதாவதொன்றில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது, அவற்றால் என்ன சேவையைச் செய்ய முடியும்? அதன்பின்னர், நீங்கள் எட்டு மணிநேரமோ அல்லது பத்து மணிநேரமோ வேலை செய்தாலும் இங்கும் வெளியுலகிலும் ஒன்றுபோலவே இருக்கும். அப்போது நீங்கள் எட்டு மணிநேரம் அல்லது ஆறு மணிநேரம் சேவை செய்யும் சேவையாளராகவே இருப்பீர்கள். உங்களால் சதா சேவையாளராக இருக்க முடியாது. உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களால், அதாவது, உங்களின் தொடர்பில் உள்ளவர்களுடனும் உறவினர்களுடனும் நீங்கள் பழகும் முறையால் உங்களால் சேவை செய்ய முடியும். ஒவ்வொரு விநாடியும் ஓர் அருள்பவராக, ஒரு சேவையாளராக ஆகுங்கள். உங்களின் தலையை வெறுமையாக வைத்திருப்பதன் மூலம், உங்களால் சேவை செய்வதில், தந்தையின் சகபாடியாக இருக்க முடியும். உங்களின் இதயத்தைச் சதா சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், சேவை செய்வதில் உங்களால் தந்தையின் சதா சகபாடியாக இருக்க முடியும். நீங்கள் எல்லோரும் செய்துள்ள சத்தியம் என்ன? நீங்கள் தந்தையுடனேயே இருந்து, அவருடனேயே திரும்பிச் செல்வீர்கள் எனச் சத்தியம் செய்துள்ளீர்கள். அதுவே உங்களின் சத்தியம், அப்படித்தானே? பாபா முன்னால் செல்வார், நீங்கள் பின்னால் செல்வீர்கள் என்பதல்ல. அது அப்படி இல்லை. நீங்கள் ஒன்றாகவே இருப்போம் எனச் சத்தியம் செய்துள்ளீர்கள்தானே? தந்தை சேவை செய்யாமல் இருக்கிறாரா? அவர் நினைவு செய்யாமலேனும் இருப்பதில்லை. நீங்களும் பாபாவைப் போல் நினைவு செய்கிறீர்கள். ஆனால் முயற்சி செய்தே அவ்வாறிருக்கிறீர்கள். உங்களுக்கும் அந்த நினைவு இருக்கிறது. ஆனால் முயற்சியுடனும் கவனம் செலுத்துவதன் மூலமும் அது நிகழ்கிறது. தந்தைக்கு வேறு என்ன இருக்கிறது? ஆத்மாக்களான நீங்கள் மட்டுமே பரமாத்மாவிற்கு இருக்கிறீர்கள். ஆமாம், ஆத்மாக்கள் எல்லோரும் வரிசைக்கிரமம் ஆனவர்களே. குழந்தைகளான உங்களின் நினைவில்லாமல் தந்தையால் இருக்க முடியாது. குழந்தைகளான உங்களை நினைக்காமல் தந்தையால் இருக்க முடியுமா? உங்களால் பாபாவை நினைக்காமல் இருக்க முடியுமா? சிலவேளைகளில், நீங்கள் குறும்புத்தனம் செய்கிறீர்கள்.

எனவே, நீங்கள் எதைக் கேட்டீர்கள்? ‘ஓர் அருள்பவர் ஆகுங்கள்’ என்பதே காலத்தின் அழைப்பாகும். இதுவே மிகவும் அவசியமாக உள்ளது. ‘ஹே, எமது விசேடமான இஷ்ட தெய்வங்களே!’ என்பதே உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோரினதும் அழைப்பாகும். நீங்களே அந்த விசேடமான, இஷ்டதெய்வங்கள், அப்படித்தானே? ஏதாவதொரு ரூபத்தில், நீங்களே ஆத்மாக்கள் எல்லோருடைய விசேடமான, இஷ்ட தெய்வங்கள் ஆவீர்கள். எனவே, ஆத்மாக்கள் எல்லோருடைய அழைப்பும், ‘ஹே விசேடமான, இஷ்ட தெய்வங்களே, தெய்வங்களே தேவிகளே, மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!’ என்பதாகும். இந்த அழைப்பு உங்களுக்குக் கேட்கிறதா? பாண்டவர்களான உங்களுக்கு இந்த அழைப்பு கேட்கிறதா? இந்த அழைப்புக் கேட்டதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு அதைக் கேட்கக்கூடியதாக இருப்பதனால், நீங்கள் ஏதாவது சத்கதி அளிக்கிறீர்களா? அல்லது, ஆமாம், நாம் அதைச் செய்வோம் எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த அழைப்புக் கேட்கிறதா? காலத்தின் அழைப்பைப் பற்றி நீங்கள் மக்களுக்குச் சொல்கிறீர்கள். ஆனால் ஆத்மாக்களின் அழைப்பை நீங்கள் வெறுமனே கேட்கிறீர்கள். எனவே, விசேடமான, இஷ்ட தெய்வங்களே, உங்களின் அருள்கின்ற ரூபம் இப்போது வெளிப்பட வேண்டும். நீங்கள் இப்போது அருள வேண்டும். எந்தவோர் ஆத்மாவிற்கும் கிடைக்காமல் விடுபடக்கூடாது. இல்லாவிட்டால், உங்களுக்கு முறைப்பாடுகளின் மாலையையே போடுவார்கள். மக்கள் முறைப்பாடு செய்வார்கள்தானே? எனவே, நீங்கள் முறைப்பாடுகளின் மாலையை அணியும் இஷ்ட தெய்வங்களா? அல்லது பூமாலைகளை அணியும் தேவதேவியரா? நீங்கள் எந்த விசேடமான தெய்வங்கள்? நீங்கள் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்கள்தானே? நீங்கள் பிந்தி வந்துள்ளீர்கள், மூத்தவர்கள் மட்டுமே அருள்பவர்களாக இருப்பார்கள், உங்களுக்கு அப்படி ஆகுவது சாத்தியம் இல்லை என நினைக்காதீர்கள். இல்லை, எல்லோரும் அருள்பவர்கள் ஆகவேண்டும்.

மதுவனத்திற்கு முதல் தடவையாக வந்திருப்பவர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. முதல் தடவையாக இங்கே வந்திருப்பவர்கள், உங்களால் அருள்பவர்கள் ஆகமுடியுமா அல்லது இரண்டாவது அல்லது மூன்றாம் வருடமே அப்படி நீங்கள் ஆகுவீர்களா? இந்த ஞானத்தை ஒரு வருடமாகப் பின்பற்றுபவர்களால் அருள்பவர்கள் ஆகமுடியுமா? (ஹா ஜி). நீங்கள் மிகவும் புத்திசாலிகள். உங்களின் தைரியத்தைப் பார்க்கும்போது பாப்தாதா எப்போதும் களிப்படைகிறார். நீங்கள் ஒரு வருடமோ அல்லது ஒரு மாதமோ இந்த ஞானத்தில் இருந்தாலும், நீங்கள் ஒரு வருடமாக இருந்தாலென்ன அல்லது ஆறுமாதங்களாக இருந்தாலென்ன, ஒரு மாதத்திலேயே உங்களை பிரம்மாகுமார் அல்லது பிரம்மாகுமாரி என்றே அழைக்கிறீர்கள் என்பதை பாப்தாதா அறிவார். அதனால், ஒரு பிரம்மாகுமார் அல்லது பிரம்மாகுமாரியாக இருத்தல் என்றால், தந்தை பிரம்மாவின் ஆஸ்திக்கான உரிமையைப் பெறுதல் என்று அர்த்தம். நீங்கள் பிரம்மாவை உங்களின் தந்தையாக ஏற்றுக் கொண்டதும் நீங்கள் ஒரு குமார் அல்லது குமாரி ஆகுகிறீர்கள். எனவே, பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளுமான நீங்கள் சிவத்தந்தையினதும் பிரம்மாபாபாவினதும் ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுக் கொள்கிறீர்கள். அல்லது, ஒரு மாதமே ஆகியவர்கள் ஆஸ்தியைப் பெறமாட்டார்களா? ஒரு மாத வயதானவர்கள் ஆஸ்தியைப் பெறுவார்களா? நீங்கள் உங்களின் ஆஸ்தியைப் பெற்றிருப்பதனால், நீங்கள் மற்றவர்களுக்கு அதை வழங்குவதற்கு அருள்பவர்கள் ஆகுவீர்கள்தானே? நீங்கள் எதைப் பெற்றீர்களோ, அதை மற்றவர்களுக்கு வழங்க ஆரம்பிக்க வேண்டும், அப்படித்தானே?

நீங்கள் தந்தையுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தி, அவரை உங்களின் தந்தையாகக் கருதினால், ஒரு நாளில்கூட உங்களால் உங்களின் ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ள முடியும். ‘இது நல்லது, ஏதோ சக்தி இருக்கிறது, எனக்குப் புரிகிறது. ஆனால் இது போதுமானதல்ல’ எனச் சிலர் நினைக்கிறார்கள். குழந்தைகளே ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுக் கொள்கிறார்கள். வெறுமனே புரிந்து அதை அவதானிப்பவர்கள் அல்ல. நீங்கள் உங்களின் இதயபூர்வமாக பாபாவை உங்களின் தந்தை என ஏற்றுக் கொண்டீர்கள் என்றால், ஒரு நாளிலேயே உங்களின் ஆஸ்திக்கான உரிமையை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் எல்லோரும் இத்தகையவர்கள்தானே? நீங்கள் எல்லோரும் பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளும்தானே? அல்லது, நீங்கள் இன்னமும் இப்படி ஆகிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் அப்படி ஆகிவிட்டீர்களா அல்லது அப்படி ஆகுவதற்காக இங்கே வந்திருக்கிறீர்களா? எவராலும் உங்களை மாற்ற முடியுமா? பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளும் ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் வெறுமனே குமார்களும் குமாரிகளும் ஆகுவது சாத்தியமா? பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளும் ஆகுவதில் அதிகளவு நன்மை உள்ளது. இது ஒரு பிறவிக்குரிய நன்மை அல்ல, ஆனால், பல பிறவிகளுக்கான நன்மையாகும். நீங்கள் அரைப் பிறவிக்கு அல்லது உங்களின் பிறவியின் கால்வாசிப் பாகத்திற்கே முயற்சி செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் பெறும் வெகுமதியோ பல பிறவிகளுக்கானது. நன்மையைத்தவிர வேறு எதுவும் இல்லை.

தற்போதைய நேரத்திற்கேற்ப, பாப்தாதா குறிப்பாக உங்களின் கவனத்தை ஒரு விடயத்தை நோக்கி ஈர்க்கிறார். ஏனென்றால், அவர் சதா குழந்தைகளான உங்களின் பெறுபேறுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு மிக நல்ல தைரியம் இருப்பதை உங்களின் பெறுபேறுகளிலே பாபா கண்டார். உங்களுக்கு மிக நல்லதோர் இலட்சியமும் உள்ளது. எவ்வாறாயினும், உங்களின் இலட்சியத்திற்கேற்ப, உங்களின் இலட்சியத்திற்கும் அதன் தகைமைகளுக்கும் இடையே ஒரு வேறுபாடு காணப்படுகிறது. முதல் இலக்கத்தைக் கோர வேண்டும் என்பதே உங்கள் எல்லோருடைய இலட்சியமும் ஆகும். உங்களின் இலட்சியம் 21 பிறவிகளுக்கான இராச்சிய பாக்கியத்தைப் பெறுவதா, சூரிய வம்சத்திற்குரியவர் ஆகுவதா அல்லது சந்திர வம்சத்திற்குரியவர் ஆகுவதா என உங்களில் எவரிடம் பாப்தாதா கேட்டாலும், நீங்கள் எல்லோரும் எதற்குக் கை உயர்த்துவீர்கள்? சூரிய வம்சத்தினர் ஆகுவதற்கே. யாராவது சந்திர வம்சத்தினர் ஆக விரும்புகிறீர்களா? எவருமே இல்லை. (ஒருவர் தனது கையை உயர்த்தினார்) இது நல்லது. இல்லாவிட்டால், அந்த ஆசனம் வெறுமையாக இருக்கும். எனவே, உங்கள் எல்லோருக்கும் மிக நல்லதோர் இலட்சியம் உள்ளது. கவனம் செலுத்துவது அவசியம். அப்போது உங்களின் தகைமைகள் உங்களின் இலட்சியத்திற்கேற்ப இருக்கும். இதற்கான காரணம் என்ன? நீங்களே சிலவேளைகளில் எடுப்பவர்களாக மட்டும் ஆகுகிறீர்கள் என உங்களுக்கு இன்று கூறப்பட்டது. ‘இது நடக்க வேண்டும். இவர் இதைச் செய்ய வேண்டும். இவர் உதவி செய்ய வேண்டும். இவர் மாறினால் நான் மாறுவேன். இந்தச் சூழ்நிலை சரியாகினால் நானும் ஓகேயாகி விடுவேன்.’ இதன் அர்த்தம் எடுப்பவராக இருப்பதேயாகும். இது அருள்பவராக இருப்பதல்ல. ஒருவர் உங்களுக்குக் கொடுத்தாலென்ன கொடுக்காவிட்டாலென்ன, தந்தை உங்களுக்கு எல்லாவற்றையுமே தந்திருக்கிறார். தந்தை யாருக்காவது சிறிது அதிகமாகவும் இன்னொருவருக்கு சிறிது குறைவாகவும் தந்துள்ளாரா? எல்லோருக்கும் ஒரே பாடநெறியே உள்ளது. நீங்கள் ஞானத்தில் 60 வருடங்கள் இருந்தாலென்ன அல்லது ஒரு மாதம் இருந்தாலென்ன, உங்கள் எல்லோருக்கும் ஒரே பாடநெறியே வழங்கப்பட்டது. அல்லது, ஞானத்தில் 60 வருடங்கள் இருந்தவர்களுக்கான பாடநெறி, ஒரு மாதம் ஞானத்தில் இருப்பவர்களுக்கான பாடநெறியில் இருந்து வேறுபட்டதா? இன்று நீங்கள் கற்கின்ற அதே பாடநெறியையே அவர்களும் கற்றார்கள். ஞானம் ஒன்றே. நீங்கள் பெறும் அன்பும் ஒன்றே. நீங்கள் பெறுகின்ற சகல சக்திகளும் ஒன்றேயாகும். அனைத்தும் ஒன்றே. பாபா ஒருவருக்கு 16 சக்திகளையும் இன்னொருவருக்கு 8 சக்திகளையும் வழங்கியுள்ளார் என்பதல்ல. நீங்கள் எல்லோரும் அதே ஆஸ்தியையே பெற்றுள்ளீர்கள். தந்தை உங்கள் எல்லோரையும் முழுமையாகவும் நிரம்பி வழிபவராகவும் ஆக்கியிருப்பதனால், இத்தகைய ஆத்மாக்கள் அருள்பவர்களாக இருப்பார்கள். இன்னமும் எடுப்பவர்களாக இருக்க மாட்டார்கள். நீங்கள் கொடுக்க வேண்டும். ஒருவர் கொடுத்தாலென்ன கொடுக்காவிட்டாலென்ன, உங்களுக்குக் கொடுக்கின்ற விருப்பமே இருக்க வேண்டும். எடுப்பதற்கான ஆசை அல்ல. ஓர் அருள்பவராக எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் கொடுக்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்களின் பொக்கிஷங்கள் அதிகரிக்கும். உதாரணமாக, நீங்கள் யாருக்காவது மரியாதை கொடுக்கும்போது, உங்களின் சொந்த மரியாதையை அதிகரிக்கிறீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். அவ்வாறு வழங்குவதென்பது வழங்குவதல்ல, ஆனால் கொடுப்பதென்றால் எடுப்பது என்று அர்த்தம். எடுக்காதீர்கள். ஆனால் அதற்குப் பதிலாகக் கொடுங்கள். இது பெறுவதை ஒத்ததாகும். எனவே, காலத்தின் அழைப்பு என்னவென்று நீங்கள் புரிந்து கொண்டீர்களா? ஓர் அருள்பவர் ஆகுங்கள். அருள்பவர் என்ற ஒரு வார்த்தையை நினைவில் வைத்திருங்கள். என்னதான் நடந்தாலும், அருள்பவர் என்ற ஒரு வார்த்தையை நினைவில் வைத்திருங்கள். ஆசைகளின் அறிவே இல்லாதவராக இருங்கள். சூட்சுமமான முறையிலோ அல்லது பௌதீகமான முறையிலோ எதையும் பெறுவதற்கு எந்தவிதமான ஆசையும் இருக்கக்கூடாது. ஓர் அருள்பவர் என்றால், முற்றிலும் ஆசைகளின் அறிவே இல்லாதவர், நிரம்பி இருப்பவர் என்று அர்த்தம். நீங்கள் பெறவேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருக்கும் அளவிற்கு உங்களிடம் எதுவும் குறைவாக இருக்காது. நீங்கள் சகல பேறுகளாலும் நிரம்பி வழிவீர்கள். எனவே, உங்களின் இலட்சியம் என்ன? அது நிரம்பி இருக்க வேண்டும் என்பதுதானே? அல்லது, உங்களுக்கு எது கிடைத்தாலும் நீங்கள் சந்தோஷப்படுவீர்களா? நிரம்பி இருத்தல் என்றால் முழுமை அடைதல் என்று அர்த்தம்.

இன்று, வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது நல்லது. வெளிநாட்டில் இருப்பவர்கள் முதல் வாய்ப்பை எடுத்துள்ளார்கள். எனவே, நீங்களே விசேடமான, அன்புக்குரியவர்கள் ஆவீர்கள். ஏனைய அனைவருக்கும் பாரதத்தில் இருந்து வரவேண்டாம் எனக்கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்கள் அனைவரும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். பாப்தாதா குழந்தைகள் எல்லோரையும் நினைவு செய்கிறார். ஆனால், இரட்டை வெளிநாட்டவர்கள் எல்லோருடைய தைரியத்தையும் பார்க்கும்போது அவர் சந்தோஷப்படுகிறார். தற்சமயம், அந்தளவு குழப்பம் உங்களுக்குக் கிடையாது. இப்போது ஒரு வேறுபாடு காணப்படுகிறது. ஆரம்பத்தில், இந்தியக் கலாச்சாரம் மற்றும் வெளிநாட்டுக் கலாச்சாரம் என நீங்கள் கேள்விகள் கேட்பதுண்டு. இப்போது, நீங்கள் எல்லாவற்றையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். இப்போது, நீங்கள் பிராமணக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள். இது இந்தியக் கலாச்சாரமும் இல்லை, வெளிநாட்டுக் கலாச்சாரமும் இல்லை! இது இப்போது பிராமணக் கலாச்சாரம்! இந்தியக் கலாச்சாரம் சிறிது சிக்கலை ஏற்படுத்தும். ஆனால், பிராமணக் கலாச்சாரம் இலகுவானது. பிராமணக் கலாச்சாரம் என்பது உங்களின் சுயமரியாதையைப் பேணுவதுடன் சுய இராச்சிய உரிமையைப் பெற்றுக் கொள்வதாகும். இதுவே பிராமணக் கலாச்சாரம். நீங்கள் இதை விரும்புகிறீர்கள்தானே? எப்படி இந்தியக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பது என்ற எந்தவிதமான கேள்விகளும் உங்களிடம் இப்போது இல்லைத்தானே? அல்லது, அது கஷ்டமா? அது இலகுவாகிவிட்டதுதானே? இது இலகுவா? கவனமாக இருங்கள். நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபின்னர், கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது எனச் சொல்லாதீர்கள். வீட்டுக்குச் சென்றபின்னர் இப்படி எழுதாதீர்கள். நீங்கள் இது இலகுவாக இருக்கும் எனச் சொன்னீர்கள், ஆனால் உண்மையில் அது சிறிது கஷ்டமாக இருக்கிறது என எழுதாதீர்கள். இது இலகுவா? அல்லது, கொஞ்சம் கஷ்டமா? இதில் எந்தவிதக் கஷ்டமும் இல்லை. இது மிகவும் இலகுவானது. உங்களின் விளையாட்டுக்கள் அனைத்தும் முடிந்துவிட்டதால் நீங்கள் வியப்படைகிறீர்கள். நீங்கள் இப்போது மிகவும் பலசாலிகள் ஆகிவிட்டீர்கள். உங்களின் குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் முடிவடைந்துவிட்டன. நீங்கள் அனைவரும் இப்போது அனுபவசாலிகள் ஆகிவிட்டீர்கள். பழையவர்கள் எந்தளவிற்குப் பலசாலிகள் ஆகுகிறார்களோ, அந்தளவிற்குப் புதியவர்களும் பலசாலிகள் ஆகுவார்கள். நீங்கள் ஒருவரையொருவர் முன்னேறச் செய்வது நல்லதே. நீங்கள் மிக நல்ல முயற்சிகளைச் செய்கிறீர்கள். நீங்கள் தாதிகளிடம் நடந்த சம்பவங்களைப் பற்றி இப்போதெல்லாம் கூறுவதில்லைத்தானே? இப்போது நீங்கள் தாதிகளிடம் கதைகளையும் சம்பவங்களையும் கூறுகிறீர்களா? இப்போது அது குறைந்துவிட்டது. ஒரு வேறுபாடு உள்ளதல்லவா? (தாதி ஜான்கியிடம்) எனவே, இப்போது நீங்கள் நோய்வாய்ப்படக்கூடாது! இந்தக் கதைகளாலும் சம்பவங்களாலுமே உங்களுக்கு நோய் வருகிறது. இப்போது அவை அனைத்தும் முடிந்துவிட்டன. நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். உங்கள் எல்லோரிடமும் சிறந்த, விசேடமான நற்குணங்கள் உள்ளன. உங்களின் இதயங்களின் சுத்தம் மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் எதையும் உள்ளே வைத்திருப்பதில்லை. நீங்கள் அவை அனைத்தையும் நீக்கிவிடுகிறீர்கள். சூழ்நிலை எதுவாக இருந்தாலும், நீங்கள் அதை நேர்மையாகப் பேசுகிறீர்கள்: இது இப்படி இல்லை, இது இப்படி உள்ளது. நீங்கள் எல்லாவற்றையும் உள்ளதை உள்ளவாறே சொல்கிறீர்கள். இந்தச் சிறப்பியல்பு நல்லது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: அவர் உண்மையான, சுத்தமான இதயத்தையிட்டுக் களிப்படைகிறார். ஆமாம் என்றால் ஆமாம். இல்லை என்றால், இல்லை. நீங்கள் வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் கட்டாயத்தின் பேரில் செயல்படுவதில்லை. நீங்கள் பாதையைப் பின்பற்றினால், அதை முழுமையாகப் பின்பற்றுகிறீர்கள். இல்லையென்றால், பின்பற்றுவதில்லை. அச்சா.

குழந்தைகள் எல்லோரும் கடிதங்கள் மூலமாகவோ அல்லது மற்றவர்களின் மூலமாகவோ அனுப்பிய அன்பையும் நினைவுகளையும் பாப்தாதா ஏற்றுக் கொண்டார். அதற்குப் பிரதிபலனாக, பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் அருள்பவர்களாக இருக்கும் ஆசீர்வாதத்தை வழங்குகிறார். அச்சா, உங்களால் ஒரு விநாடியில் பறக்க முடிகிறதா? உங்களின் இறக்கைகள் சக்திவாய்ந்தவைதானே? ‘பாபா’ என்று நீங்கள் சொன்னவுடனேயே, பறக்கிறீர்கள். (பாபா அப்பியாசத்தைச் செய்வித்தார்).

தந்தையைப் போல் அருள்பவராக இருக்கும் உணர்வுகளைக் கொண்டுள்ள எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும், நினைவைக் கொண்டிருந்து சேவை செய்வதில் சதா ஈடுபட்டுள்ள மேன்மையான ஆத்மாக்கள் எல்லோருக்கும் தமது இலட்சியத்தையும் தகைமைகளையும் சமமாக ஆக்குகின்ற இறைவனின் சேவை சகபாடிகள் எல்லோருக்கும் சதா அன்பாகவும் தந்தைக்குச் சமமாக இருப்பதுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் பாப்தாதாவின் கண்ணின் நட்சத்திரங்களுக்கும் சதா உலகிற்காக உபகார உணர்வுகளைக் கொண்டுள்ள கருணைநிறைந்த ஆத்மாக்களுக்கும் பாபாவிடம் இருந்து தொலைவில் அமர்ந்துள்ள அல்லது மதுவனத்தில் கீழே (தியான மண்டபம், ஹிஸ்ரி மண்டபம்) அமர்ந்திருக்கும் மாஸ்ரர் மன்னிப்புக்கடல்களுக்கும் பாப்தாதாவின் முன்னால் அமர்ந்திருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் அன்பு, நினைவுகள் மற்றும் நமஸ்தே.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரேயொருவருடன் ஒவ்வோர் உறவுமுறையையும் அனுபவம் செய்வதுடன் உங்களின் இதயத்தில் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரை அமிழ்த்திவைத்திருக்கும் திருப்தி ஆத்மா ஆகுவீர்களாக.

ஞானத்தைக் களஞ்சியப்படுத்தி வைக்கும் இடம் மூளை ஆகும். ஆனால் அதியன்பிற்குரியவருக்கு உரிய இடம் இதயமாகும். சில காதலிகள் தமது தலைகளை அதிகளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் பாப்தாதாவோ நேர்மையான இதயங்களைக் கொண்டவர்களை இட்டுக் களிப்படைகிறார். ஆகவே, இதயத்தின் அனுபவத்தை இதயம் அறியும், இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரும் அறிவார். தமது இதயபூர்வமாக நினைவைக் கொண்டிருந்து சேவை செய்பவர்கள், குறைவாகவே சிரமப்படுவார்கள். அவர்கள் மகத்தான திருப்தியை அனுபவம் செய்வார்கள். தமது இதயபூர்வமாகச் செயல்படுபவர்கள், சதா திருப்திக்கான பாடல்களைப் பாடுவார்கள். அவர்கள் காலத்திற்கேற்ப, ஒரேயொருவருடன் ஒவ்வோர் உறவுமுறையையும் அனுபவம் செய்வார்கள்.

சுலோகம்:
அமிர்தவேளையில், புத்தியை வெறுமையாக்கிக் கொண்டு அமர்ந்திருங்கள். சேவை செய்வதற்கான புதிய வழிமுறைகளின் தொடுகையைப் பெறுவீர்கள்.