01-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள்
புத்துணர்வு அடைவதற்காக தந்தையிடம் வந்திருக்கிறீர்கள். தந்தை
மற்றும் ஆஸ்தியை நினைத்தால் சதா புத்துணர்வாக இருக்கலாம்.
கேள்வி:
புத்திசாலி குழந்தைகளின் முக்கிய
அடையாளம் என்ன?
பதில்:
புத்திசாலியாக இருப்பவர்களுக்கு
அளவற்ற குஷி இருக்கும். ஒரு வேளை குஷி இல்லை என்றால் முட்டாள்.
புத்திசாலி என்றால் தங்க புத்தி உடையவர்கள். அவர்கள்
மற்றவர்களையும் தங்க புத்தி உடையவர்களாக மாற்றுவார்கள். ஆன்மீக
சேவையில் பிசியாக இருப்பார்கள். பாபா வின் அறிமுகம் கொடுக்காமல்
இருக்க மாட்டார்கள்.
ஓம் சாந்தி.
பாபா வந்து புரிய வைக்கிறார், இந்த தாதாவும் (மூத்த சகோதரர்)
புரிந்து கொள்கிறார். ஏனென்றால் தந்தை வந்து தாதா மூலமாகப்
புரிய வைக்கிறார். நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீ ர்களோ
அப்படியே தாதாவும் புரிந்து கொள்கிறார். தாதாவை பகவான் என்று
கூற முடியாது. இது பகவான் வாக்கு ஆகும். பாபா முக்கியமாக என்ன
புரிய வைக்கிறார்? ஆத்ம உணர்வு உடையவர் களாகுங்கள் என்கிறார்.
இதை ஏன் கூறுகின்றார்? ஏனென்றால் தன்னை ஆத்மா என்று உணர்வ
தினால் பதீத பாவனர் பரம்பிதா பரமாத்மாவினால் தூய்மையாகக்
கூடியவர்கள் ஆவர். இந்த புத்தியில் ஞானம் இருக்கிறது.
அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். நாங்கள் அழுக்காக
இருக்கிறோம் என அழைக்கிறார்கள். புதிய உலகம் நிச்சயம்
தூய்மையாக இருக்கும். புதிய உலகத்தை உருவாக்கக்கூடியவர்,
நிறுவக்கூடியவர் தந்தையாவார். அவரைத் தான் பதீத பாவனர் தந்தை
என அழைக்கிறார்கள். பதீத பாவனர் என்றும், தந்தை என்றும்
கூறுகிறார்கள். தந்தையை தான் ஆத்மாக்கள் அழைக்கின்றன. சரீரம்
அழைக்காது. நம்முடைய ஆத்மாவின் தந்தை பரளெலகீகத்தைச் சார்ந்தவர்.
அவரே பதீத பாவனர். இதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இது புது உலகமா? அல்லது பழைய உலகமா? என புரிந்து கொள்ள முடியும்.
எங்களுக்கு அளவற்ற சுகம் இருக்கிறது, நாங்கள் சொர்க்கத்தில்
இருப்பது போன்று இருக்கிறோம் என நினைக்கும் முட்டாள்களும்
இருக்கிறார்கள். ஆனால் கலியுகத்தை ஒருபோதும் சொர்க்கம் என கூற
முடியாது. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். பெயரே கலியுகம் ஆகும்.
பழைய அழுக்கான உலகம் ஆகும். வித்தியாசம் இருக்கிறதல்லவா?
மனிதர்களின் புத்தியில் இதுவும் பதிய வில்லை. முற்றிலும்
பட்டுப்போன நிலையில் இருக்கிறது. குழந்தைகள் படிக்கவில்லை
என்றால் உனக்கு கல் புத்தி என்று கூறுகிறார்கள் அல்லவா?
பாபாவும் உங்கள் ஊரைச் சார்ந்தவர் முற்றிலும் கல் புத்தி என
எழுதுகிறார். புரிந்து கொள்வதில்லை. ஏனென்றால் மற்றவர்களுக்கு
புரிய வைப்பது இல்லை. தான் தங்க புத்தி உடையவர்களாக
இருக்கிறார்கள் என்றால் மற்றவர்களையும் மாற்ற வேண்டும். முயற்சி
செய்ய வேண்டும். இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால்
மனிதர்களின் புத்தியில் அரைக் கல்பமாக எதிரான விஷயங்கள்
பதிந்துவிட்டது. அது மறப்ப தில்லை. எப்படி மறப்பது? மறக்க
வைக்கக்கூடிய சக்தி ஒரு தந்தையிடம் தான் இருக்கிறது. தந்தை
இல்லாமல் இந்த ஞானத்தை வேறு யாரும் கொடுக்க முடியாது. அதாவது
அனைவரும் அஞ்ஞானி களாக இருக்கிறார்கள். ஞானக் கடல் தந்தை வந்து
சொல்லாத வரை அவர்களுக்கு ஞானம் எங்கிருந்து வரும்? தமோபிரதானம்
என்றாலே அறியாத உலகம். சதோபிரதானம் என்றாலே தெய்வீக உலகம்.
வித்தியாசம் இருக்கிறதல்லவா? தேவி தேவதைகள் தான் மறுபிறவி
எடுக்கிறார்கள். காலமும் மாறிக் (ஓடிக்) கொண்டே இருக்கிறது.
புத்தியும் பலகீனமாக ஆகிக் கொண்டே போகிறது. புத்தியோகத்தை
இணைப்பதன் மூலம் கிடைக்கும் சக்தியானது பிறகு அழிந்து போகிறது.
இப்பொழுது உங்களுக்கு தந்தை புரிய வைக்கிறார் என்றால் நீங்கள்
புத்துணர்வோடு இருக்கிறீர் கள். நீங்கள் புத்துணர்வோடு
இருந்தீர்கள். ஓய்வில் இருந்தீர்கள். குழந்தைகளே வந்து
புத்துணர்வு அடையுங்கள், மேலும் ஓய்வும் அடையுங்கள் என பாபா
எழுதுகிறார் அல்லவா? நீங்கள் புத்துணர்வு அடைந்த பிறகு நீங்கள்
சத்யுகத்தில் ஓய்வான இடத்திற்குச் செல்கிறீர்கள். அங்கே
உங்களுக்கு மிகவும் ஓய்வு கிடைக்கிறது. அங்கே சுகம், சாந்தி,
செல்வம் போன்ற அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கிறது. எனவே ஓய்வு
பெறுவதற்காக ஓய்வு அடைவதற்காக தந்தையிடம் வருகிறார்கள். சிவபாபா
தான் புத்துணர்வு அடையச் செய்கிறார். தந்தையிடம் ஓய்வும்
அடைகிறார்கள். ஓய்வு என்றால் அமைதி. களைத்துப் போய் ஓய்வு
எடுக்கிறார்கள் அல்லவா. ஓய்வு எடுப்பதற்காக ஒரு சிலர் எங்கேயோ,
இன்னும் சிலர் வேறு எங்கெங்கேயோ செல்கின்றனர். அதில்
புத்துணர்வு அடையக்கூடிய விஷயமே இல்லை. இங்கே பாபா தினந்தோறும்
புரிய வைக்கிறார் என்றால் நீங்கள் இங்கே வந்து புத்துணர்வு
அடைகிறீர்கள். நினைப்பதால் நீங்கள் அழுக்கான நிலையில் இருந்து
தூய்மையான நிலையை அடைகிறீர்கள். தூய்மை அடைவதற்காகத் தான்
நீங்கள் இங்கே வருகிறீர்கள். அதற்கான முயற்சி என்ன? தூய்மை
அடைவதற்காக தந்தையை நினையுங்கள். பாபா அனைத்து போதனைகளையும்
கொடுத்திருக்கின்றார். இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படி சுற்று
கின்றது? உங்களுக்கு ஓய்வு எப்படி கிடைக்கின்றது? வேறு யாரும்
இந்த விஷயங்களை அறிய வில்லை என்றால், அவர்களுக்குப் புரிய
வைக்க வேண்டும். அதாவது அவர்களும் உங்களைப் போன்று புத்துணர்வு
அடையட்டும். அனைவருக்கும் செய்தியை அளிப்பது. நம்முடைய கடமை
யாகும். அழியாத புத்துணர்வு பெறவேண்டும் அழியாத ஓய்வைப் பெற
வேண்டும். அனைவருக்கும் இந்த செய்தியைக் கொடுங்கள். தந்தை
மற்றும் ஆஸ்தியை நினையுங்கள் என நினைவுப்படுத்த வேண்டும்.
மிகவும் எளிய விஷயம் ஆகும். எல்லையற்ற தந்தை சொர்க்கத்தைப்
படைக்கிறார். சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். இப்போது
நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் மாயாவின்
சாபத்தையும் அப்பாவின் ஆஸ்தியையும் அறிகிறீர்கள். மாயா
இராவணனின் சாபம் கிடைக்கும் பொழுது தூய்மையும் அழிகிறது. சுகம்
சாந்தியும் அழிகிறது. செல்வமும் அழிகிறது. எப்படி மெல்ல மெல்ல
அழிகிறது என பாபாவும் புரியவைத்துள்ளார். எத்தனை பிறவி கள்
எடுக்கின்றார் கள். துக்கதாமத்தில் யாரும் ஓய்வு எடுக்க
முடியாது. சுகதாமத்தில் சதா ஓய்வேதான் மனிதர்களை பக்தி எவ்வளவு
களைப்படையச் செய்கிறது. பல பறவிகளின் பக்தி களைப்படையச்
செய்திருக்கிறது. ஏழையாக்கி விடுகிறது. இதையும் இப்பொழுது
உங்களுக்கு பாபா புரிய வைக்கிறார். புதிது புதிதாக வருகிறார்கள்
என்றால் எவ்வளவு புரிய வைக்க வேண்டி யிருக்கிறது. ஒவ்வொரு
விஷயத்தைப் பற்றியும் மனிதர்கள் மிகவும் யோசிக் கிறார்கள். மாய
மந்திரமாக இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். அட, நீங்கள்
மந்திரவாதி என்கிறீர்கள். நானும் மந்திரவாதி என்கிறேன். ஆனால்
வெள்ளாடு - செம்மறியாடாக மாற்றக்கூடிய மந்திரம் கிடையாது.
விலங்கு அல்லவா? இது புத்தியினால் புரிந்து கொள்ளப்படுகிறது.
அழகான தேவலோக இசை......(கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை) (தேவதைகளின்
சபையின் தெய்வீகத்தை அறியாத தேக அபிமானி) இச்சமயம் மனிதர்கள்
செம்மறி ஆடுகளைப் போன்று இருக்கிறார்கள். இந்த விஷயங்கள்
இவ்விடத்திற்கே ஆகும். சத்யுகத்தில் பாடுவதில்லை. இச்சமயத்தில்
தான் பாடப்பட்டு இருக்கிறது. சண்டிகா தேவிக்குக் கூட எவ்வளவு
திருவிழா நடக்கிறது. அவர் யார் என கேளுங்கள். தேவி என்பார்கள்.
இப்போது இப்படிப்பட்ட பெயர் அங்கே வைப்பதில்லை. சத்யுகத்தில்
எப்பொழுதும் நல்ல பெயர்களே இருக்கும். ஸ்ரீ ராமச்சந்திரன், ஸ்ரீ
கிருஷ்ணன்...... உயர்ந்தவர் களுக்கு ஸ்ரீ என்று கூறப்படுகிறது.
சத்யுக சம்பிரதாயத்தை சிரேஷ்டமானவை என கூறப்படுகிறது. கலியுக
விகார சம்பிரதாயத்தை (சமூகத்தை) சிரேஷ்டமானது என்று எப்படி கூற
முடியும்? ஸ்ரீ என்றாலே சிரேஷ்டமானவர்கள் இப்போதைய மனிதர்கள்
சிரேஷ்டமானவர்கள் கிடையாது. மனிதனிலிருந்து தேவதை..... என்று
பாடப்பட்டு இருக்கிறது. பிறகு தேவதையிலிருந்து மனிதரா கிறார்கள்.
ஏனென்றால் ஐந்து விகாரங்களில் சென்று விடுகிறார்கள். இராவண
இராஜ்யத்தில் அனைத்து மனிதர்களும் மனிதர்களே! அங்கே தேவதைகள்
இருக்கிறார்கள். அதற்கு தெய்வீக உலகம் என்றும் இதற்கு மனித
உலகம் என்றும் பெயர். தெய்வீக உலகத்திற்கு பகல் என்று
கூறப்படுகிறது. மனித உலகத்திற்கு இரவு என்று கூறப்படுகிறது.
அறியாமை இருளுக்கு இரவு என்று பெயர். இந்த வித்தியாசத்தை
நீங்கள் அறிகிறீர்கள். முன்பு எங்களுக்கு எதுவும் தெரிய வில்லை
என நினைக்கிறீர்கள். இப்போது அனைத்து விஷயங்களும் புத்தியில்
இருக்கிறது. ரிஷி முனிகளிடம் படைப்பு மற்றும் படைப்பினுடைய
முதல் இடை கடையை அறிந்திருக்கிறீர்களா என கேட்டால் அவர்களும்
தெரியாது தெரியாது என கூறிவிட்டார்கள். நாங்கள் அறியவில்லை
என்கிறார்கள். நாமும் முன்பு நாஸ்திகர்களாக இருந்தோம் என்று
புரிந்து கொள்கிறீர்கள். எல்லையற்ற தந்தையை அறியவில்லை. அவர்
உண்மையில் அழியாத தந்தை, ஆத்மாக்களின் தந்தையாவார். நாம் அந்த
எல்லையற்ற தந்தையினுடையவர்களாகி விட்டோம். அவர் ஒரு போதும்
எரிவதில்லை என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். இங்கு
அனைவரும் எரிகிறார் கள். இராவணனையும் எரிக்கிறார்கள். சரீரம்
இருக்கிறதல்லவா. இருப்பினும் ஆத்மாவை ஒருபோதும் யாரும் எரிக்க
முடியாது. பாபா குழந்தைகளுக்கு அவரிடமுள்ள ரகசிய ஞானத்தைக்
கூறுகின்றார். இந்த ஆத்மாவில் குப்த ஞானம் இருக்கிறது.
ஆத்மாவும் குப்தமாக இருக்கிறது. ஆத்மா இந்த (பிரம்மா) வாய்
மூலமாகப் பேசுகிறது. குழந்தைகளே தேக உணர்வுடையவர்கள் ஆகாதீர்கள்,
ஆத்ம உணர்வில் இருங்கள் என பாபா கூறுகின்றார். இல்லை என்றால்
தலைகீழாகி விடுகிறது. நான் ஆத்மா என்பதை மறந்து போகிறார்கள்.
நாடகத்தின் ரகசியத்தையும் கூட நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாடகத்தில் என்ன நிச்சயிக்கப்பட்டு இருக்கிறதோ அது அப்படியே
ரிப்பீட் ஆகிறது. இது யாருக்கும் தெரியவில்லை. நாடகத்தின் படி
ஒவ்வொரு நொடியும் எப்படி செல்கிறது என்ற ஞானம் புத்தியில்
இருக்கிறது. ஆகாயத்தை யாரும் கடந்து போக முடியாது. பூமியை அடைய
முடியும். ஆகாயம் சூட்சுமமாக இருக்கிறது. பூமி ஸ்தூலமாக
இருக்கிறது. சில பொருள்களின் முடிவைப் பெற முடிவதில்லை. ஆகவே
தான் ஆகாயமே ஆகாயம், பாதாளமே பாதாளம் என்கிறார்கள்.
சாஸ்திரங்களில் கேட்டிருக்கிறார்கள் அல்லவா? மேலேயும் சென்று
பார்க்கிறார்கள். அங்கேயும் உலகத்தை உருவாக்குவதற்கு முயற்சி
செய்கிறார்கள். உலகம் நிறைய உருவாக்கப்பட்டிருக்கிறதல்லவா?
பாரதத்தில் ஒரே ஒரு தேவி தேவதா தர்மம் இருந்தது. மேலும் வேறு
எந்த கண்டமும் இல்லை. பிறகு எவ்வளவு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நீங்கள் சிந்தியுங்கள். பாரதத்தின் எவ்வளவு சிறிய பாகத்தில்
தேவதைகள் இருக்கிறார்கள். யமுனை ஆற்றங்கரை இருக்கிறது. டில்லி
சொர்க்கமாக இருந்தது. இவ்வுலகிற்கு சுடுகாடு என்று பெயர். அகால
மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அமரலோகத்திற்கு
சொர்க்கம் என்று பெயர். அங்கே மிகவும் இயற்கை அழகு இருக்கிறது.
உண்மையில் பாரதத்தை சொர்க்கம் என்கின்றனர். இந்த லட்சுமி
நாராயணன் சொர்க்கத்திற்கு அதிபதி அல்லவா? எவ்வளவு அழகானவர்களாக
இருக்கிறார்கள். சதோபிரதானமாக இருக்கிறார்கள் அல்லவா? இயற்கை
அழகு இருக்கிறது. ஆத்மா வும் மின்னிக் கொண்டு இருக்கிறது.
கிருஷ்ணரின் பிறவி எப்படி இருக்கும் என குழந்தை களுக்குக்
காண்பிக்கப்பட்டது. அறை முழுவதும் ஒளிப்பிரகாசமாக இருக்கும்.
பாபா குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார். இப்போது நீங்கள்
சொர்க்கத்திற்குப் போவதற்காக முயற்சி செய்து கொண்டு
இருக்கிறீர்கள். வரிசைக்கிரமம் நிச்சயம் இருக்க வேண்டும்.
ஒருவரைப் போல அனைவரும் இருக்க முடியாது. இவ்வளவு சிறிய ஆத்மா
எவ்வளவு பெரிய பாகத்தை நடிக்கிறது என்பது சிந்திக்கப்பட
வேண்டியது. உடலைவிட்டு ஆத்மா வெளியேறியதும் உடலின் நிலை எப்படி
ஆகிறது. முழு உலகிலும் இருக்கும் நடிகர்கள் அனாதியாக
உருவாக்கப்பட்ட அதே நடிப்பை நடிக் கிறார்கள். இந்த சிருஷ்டியும்
அனாதியாகும். அதில் ஒவ்வொருவருடைய நடிப்பும் அனாதியாகும். இந்த
சிருஷ்டி என்பது மரம் போன்று என தெரிந்து கொள்ளும் போது அதை
அதிசயம் என்று கூறுகின்றனர். பாபா எவ்வளவு நன்றாகப் புரிய
வைக்கின்றார். நாடகத்தில் யாருக்கு எவ்வளவு நேரமோ அவ்வளவு
புரிந்து கொள்வதிலும் நேரமாகிறது. புத்தியில் வித்தியாசம்
இருக்கிற தல்லவா? ஆத்மா மனம் புத்தியுடன் இருக்கிறது அல்லவா?
எனவே எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. நாம் உதவித்தொகை பெற
வேண்டும் என குழந்தை களுக்குத் தெரியும். மனதிற்கு குஷி
ஏற்படுகிறது அல்லவா? இங்கேயும் உள்ளே வரும் போதே குறிக்கோள்
எதிரில் தெரிகிறது என்றால் நிச்சயம் மகிழ்ச்சி ஏற்படும் அல்லவா?
இப்போது இவ்வாறு மாறுவதற்கு இங்கே படிப்பதற்கு வந்திருக்கிறோம்
என அறிந்திருக்கிறீர்கள். இல்லை என்றால் ஒருபோதும் யாரும்
வரமுடியாது. இது குறிக்கோள் ஆகும். அடுத்த பிறிவியின்
குறிக்கோளைப் பார்க்கும் அளவிற்கு இதுபோன்ற பள்ளி வேறு எங்கும்
கிடையாது. இவர்கள் சொர்க்கத்திற்கே அதிபதி. நாமும் இவ்வாறு
மாறுகின்றோம் என நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
இப்போது நாம் சங்கமயுகத்தில் இருக்கிறோம். அந்த இராஜ்யத்திலும்
இல்லை. இந்த இராஜ்யத்திலும் இல்லை. நாம் இடையில் இருக்கிறோம்.
நாம் சென்று கொண்டு இருக்கிறோம். படகோட்டியாக (பாபா) நிராகாரர்
இருக்கிறார். படகும் (ஆத்மா) நிராகாரராக இருக்கிறது. படகை
இழுத்து பரந்தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். நிராகார தந்தை
நிராகார குழந்தைகளை அழைத்துச் செல்கிறார். தந்தை தான்
குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வார். இந்தச் சக்கரம் முடியப்
போகின்றது. பிறகு அப்படியே ரிப்பீட் ஆகும். ஒரு உடலை
விட்டுவிட்டு இன்னொன்றை எடுக்கும். சிறியவர்களாகி பிறகு
பெரியவர்களாவோம். மாங்கனியின் கொட்டையை மண்ணிற்குள்
புதைத்துவிட்டால் மீண்டும் அதிலிருந்து மாங்கனி கிடைப்பது
போன்றாகும். அது எல்லைக்குட்பட்ட மரம், இது மனித சிருஷ்டி என்ற
மரமாகும். இது விதவிதமான மரமாகும் என்றும் கூறப் படுகிறது.
சத்யுகத் திலிருந்து கலியுகம் வரை அனைத்து பாகத்தையும்
நடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அழிவற்ற ஆத்மா 84 பிறவிகளின்
பாகத்தை நடிக்கிறது. லட்சுமி நாராயணர் இருந்தனர். இப்போது இல்லை.
சக்கரத்தில் சுழன்று இவ்வாறு ஆகிறார்கள். முதலில் இந்த லட்சுமி
நாராயணனன் இருந்தனர். பிறகு அவர்களே கடைசி பிறவியில் பிரம்மா
சரஸ்வதியாக இருக்கிறர்கள் என்று கூறுவார்கள். இப்போது அனைவரும்
திரும்பப் போக வேண்டும். சொர்க்கத்தில் இவ்வளவு மனிதர்கள் இல்லை.
இஸ்லாமியர்களும் இல்லை, பௌத்தர்களும் இல்லை...... தேவி
தேவதைகளைத் தவிர வேறு எந்த தர்மத்தைச் சார்ந்த நடிகர்களும்
இல்லை. இதுவும் யாருடைய புத்தியிலும் இல்லை. புத்திசாலிகளுக்கு
டைட்டில் கிடைக்க வேண்டும் அல்லவா? யார் எவ்வளவு படிக்கிறார்களோ
அவ்வளவு முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமத்தில் பதவியை
அடைகிறார்கள். எனவே குழந்தை களாகிய நீங்கள் இங்கே வரும் பொழுதே
இந்த குறிகோளைப் பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும்.
மகிழ்ச்சிக்கு அளவில்லை. பாடசாலை அல்லது பள்ளி என்றால் இப்படி
இருக்க வேண்டும். எவ்வளவு மறைவாக இருக்கிறது. ஆனால் எவ்வளவு
சக்தி தரும் பாடசாலையாகும். எவ்வளவு பெரிய படிப்போ அவ்வளவு
பெரிய கல்லூரியாகும். அங்கே அனைத்து வசதிகளும் கிடைக்கிறது.
ஆத்மா படிக்க வேண்டும். பிறகு தங்க சிம்மாசனத்தை விரும்பினாலும்
சரி. மர சிம்மாசனத்தில் ஏற விரும்பினாலும் சரி. சிவ பகவான்
வாக்கு என்றால், குழந்தைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்க
வேண்டும். முதல் நம்பரில் இந்த உலகத்தின் இளவரசர் இருக்கிறார்.
குழந்தைகளுக்கு இப்பொழுது தெரிகிறது. ஒவ்வொரு கல்பமும்
தந்தைதான் வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கிறார். நான்
இவருக்குள் பிரவேசமாகி குழந்தைகளாகிய உங்களைப் படிக்க வைத்துக்
கொண்டு இருக்கிறேன். தேவதைகளுக்குள் இந்த ஞானம் கிடையாது. ஞானத்
தினால் தேவதை களாகின்றனர். பிறகு படிப்பின் அவசியம் இல்லை.
இதில் புரிந்து கொள்வதற்கு மிகவும் விசாலமான (கூர்மையான) புத்தி
வேண்டும் நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு,
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த அசுத்தமான உலகத்தை புத்தியில் சன்னியாசம் செய்து பழைய
தேகம் மற்றும் தேகத்தின் உறவுகளை மறந்து தன்னுடைய புத்தியை
தந்தை மற்றும் சொர்க்கத்தின் பக்கம் ஈடுபடுத்த வேண்டும்.
2. அழிவற்ற ஓய்வை அனுபவம் செய்வதற்கு தந்தை மற்றும் ஆஸ்தியின்
நினைவில் இருக்க வேண்டும். அனைவருக்கும் பாபாவின் செய்தியைக்
கொடுத்து புத்துணர்வு அடையச் செய்ய வேண்டும். ஆன்மீக சேவையில்
வெட்கப்படக்கூடாது.
வரதானம்:
குழுவில் - ஒருமித்த கருத்து (ஏக்மத்) மற்றும் மாறாத, ஒரே
விதமான மனோநிலை (ஏக்ரஸ் ஸ்திதி) மூலமாக வெற்றியை பெறக்கூடிய
உண்மையான சினேகி (அன்பானவர்) ஆகுக.
குழுவில் - ஒருவர் சொன்னார், மற்றொருவர் ஏற்றுக்கொண்டார் என்பது
தான் உண்மையான அன்பிற்கான பதில். அப்படிப்பட்ட அன்பான
குழந்தைகளின் உதாரணத்தை பார்த்து மேலும் பலர் நெருக்கத்தில்
வருவதற்கு தைரியம் வைக்கிறார்கள். குழுவும், சேவைக்கான சாதனமாக
(கருவி யாக) ஆகி விடுகிறது. எங்கே ஒற்றுமை நன்றாக இருக்கிறது,
முற்றுகையிடப்பட்டுள்ளது என்பதை மாயா பார்க்கிறதோ, அங்கே
வருவதற்கு மாயா தைரியம் வைப்பதில்லை. ஒருமித்த கருத்து (ஏக்மத்)
மற்றும் மாறாத, ஒரே விதமான மனோநிலையின் (ஏக்ரஸ் ஸ்திதி)
சன்ஸ்காரம் தான் சத்யுகத்தில் ஒரு இராஜ்ஜியத்தினுடைய (ஏக்
ராஜ்ய) ஸ்தாபனையை செய்கிறது.
சுலோகன்:
கர்மம் மற்றும் யோகத்தில் சமநிலை வைப்பவர்கள் தான் வெற்றிபெறும்
யோகியாக இருக்கிறார்கள்.
சங்கமயுகத்தின் அனைத்து தீவிர புருஷார்த்தி - சகோதரன்,
சகோதரிகளுக்கு, புது யுகத்தின் கூடவே புது வருடத்திற்கான
பலமடங்கு வாழ்த்துக்கள்!
புது வருடத்தின், இந்த முதல் மாதமான ஜனவரி மாதம் - இனிமையான
சாகார பாபாவின் நினை வினுடைய மாதம். நாம் அனைவரும் பாபாவின்
அவ்யக்த குழந்தைகள் - வதனத்தின் சூட்சம லீலைகளை அனுபவம்
செய்வதற்காக மேலும் தன்னை பிரம்மா பாபாவிற்கு சமமாக, சம்பன்னம்
(முழுமை) மற்றும் சம்பூர்ணம் (நிறைவு) ஆக்குவதற்காக, முழு
மாதமும் - பந்தன்முக்த் மற்றும் ஜீவன்முக்த் மனோநிலையை
உருவாக்குவதற்காக - மனதின் மற்றும் வாயின் அளவில் மௌனமாக
இருப்போம். புத்தி பலத்தின் மூலமாக அவ்யக்த வதனத்திற்கு பயணம்
செய்வோம். இந்த லட்சியத்துடன் இந்த மாதத்திற்கான அவ்யக்த
சமிக்கைகளை அனுப்புகிறோம்.
அவ்யக்த சமிக்கை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தன்முக்த் ஆக
இருந்து ஜீவன்முக்த் மனோநிலையை அனுபவம் செய்யுங்கள்
பாப்தாதா விரும்புகிறார் - என்னுடைய ஒவ்வொரு குழந்தையும்,
முக்தி மற்றும் ஜீவன் முக்தி யினுடைய ஆஸ்திக்கு அதிகாரி ஆக
வேண்டும். இன்றைய பயிற்சியின் மூலமாக சத்யுகத்தில் இயற்கையான
வாழ்க்கை (ஜீவன் முக்த் வாழ்க்கை) ஏற்படும். ஆனால் ஆஸ்திக்கான
அதிகாரம் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றது எனவே ஏதேனும்
பந்தனம் ஈர்த்தால் காரணத்தை யோசியுங்கள் மேலும் நிவாரணம்
செய்யுங்கள்.