01.02.26    காலை முரளி            ஓம் சாந்தி 15.12.2008      பாப்தாதா,   மதுபன்


ஒரு ராஜ்யம், ஒரு தர்மம், சட்டம் ஒழுங்கின் ஸ்தாபனையின் சமயத்தில் தன்னை மாற்றிக் கொண்டு உலக மாற்றம் செய்பவர் ஆகுங்கள்

இன்று பாப்தாதா தம்முடைய நாலாபுறம் உள்ள ராஜ செல்லக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டி ருக்கிறார். இந்தப் பரமாத்ம செல்லம் கோடியில் யாரோ ஒருவருக்குத் தான் கிடைக்கிறது. பரமாத்ம செல்லத்தில் பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் மூன்று சிம்மாசனங்களின் எஜமானாக ஆக்கியிருக்கிறார். முதலாவது சுயராஜ்ய அதிகாரத்தின் புருவ மத்தி என்ற ஆசனம். இரண்டாவது பாப்தாதாவின் மன சிம்மாசனம் மற்றும் மூன்றாவது உலக ராஜ்ய அதிகாரத்தின் சிம்மாசனம். இந்த மூன்று ஆசனங்களை பாப்தாதா தம்முடைய சிநேகி செல்லக் குழந்தை களுக்குக் கொடுத்திருக்கிறார். ஆக, இந்த மூன்று ஆசனங்கள் நினைவில் இருப்பதன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆன்மிக நஷா உள்ளது. எனவே குழந்தைகள் அனைவரும் பாபா மூலம் கிடைத்துள்ள ஆஸ்தியைப் பார்த்துக் குஷியில் இருக்கிறார்கள் இல்லையா? மனதில் தானாகவே இந்தப் பாடல் ஒலிக்கின்றது-- ஆஹா பாபா ஆஹா! மற்றும் ஆஹா எனது பாக்கியமே ஆஹா! எது கனவிலும் இல்லாமல் இருந்ததோ, அது நடைமுறை வாழ்க்கையில் கிடைத்து விட்டது. சிம்மாசனத்தோடு கூடவே பாப்தாதா இந்த சங்கமயுகத்தில் டபுள் கிரீடத்தின் மூலம் பறக்கும் கலையின் அனுபவியாகவும் ஆக்கியிருக்கிறார். ஆக, பாப்தாதா நாலாபுறம் உள்ள குழந்தைகளின் இந்த டபுள் கிரீடதாரி சொரூபத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் -- ஒன்று, தூய்மையின் ராயல்டியினுடைய கிரீடம். இரண்டாவது, சேவையின் பொறுப்பு என்ற கிரீடம்.

பாப்தாதா இன்று நாலாபுறம் உள்ள குழந்தைகளின் புருஷார்த்தத்தின் வேகத்தை சோதித்துப் பார்த்தார். ஏனென்றால் சமயத்தின் வேகத்தையோ நீங்கள் அனைவருமே பார்த்து மற்றும் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். எனவே பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார் -- ஒவ்வொருவருக்கும் பாபாவிடமிருந்து ராஜ-பாகத்தின், தனது ராஜ்யத்தின், வருங்கால பிராப்திகளின், ஆஸ்தி கிடைத் துள்ளது, அப்போது வருங்காலத்தில் உங்கள் அனைவரின் சம்ஸ்காரங்கள் இயற்கை யானதாக, இயல்பானதாக இருக்கும். அது இப்போதிருந்தே நீண்ட காலத்திற்கு அனுபவம் ஆக வேண்டும். ஏனென்றால் உங்கள் அனைவரின் புதிய சம்ஸ்காரங்களின் மூலம் தான் இந்தப் புது உலகம் உருவாகிக் கொண்டுள்ளது. ஆக, புது உலகத்தின் விசேஷத் தன்மைகளையும் கூட அனுபவம் செய்கிறீர்கள் இல்லையா? நமது ராஜ்யத்தில் என்ன இருக்கும் என்ற நஷா உள்ளது இல்லையா? உள்ளம் சொல்கிறது இல்லையா - நமது ராஜ்யம், நமது புதிய உலகம் இதோ வந்தே விட்டது என்று? ஆக, பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார் - புது உலகின் விசேஷத் தன்மைகள் குழந்தைகளின் புருஷார்த்தி வாழ்க்கையில் எது வரை இமர்ஜ் ஆகி உள்ளன? அறிந்தே இருக்கிறீர்கள் - புதிய சம்ஸ்காரங்கள் மற்றும் புதிய உலகத்தின் விசேஷத் தன்மைகள் என்னவாக இருக்கும் என்று. அனைவரின் புத்தியிலும் புதிய உலகத்தின் விசேஷத் தன்மைகள் இமர்ஜ் ஆகி உள்ளன இல்லையா? அறிவீர்கள் இல்லையா? பாடவும் செய்கிறீர்கள், அறிந்திருக்கவும் செய்கிறீர் கள். முதல் விசேஷத் தன்மை, சோதித்துப் பார்க்க வேண்டும் - ஒவ்வொரு விசேஷத் தன்மையும் எனக்குள் எந்த அளவு இமர்ஜ் ஆகியுள்ளது? முக்கிய விசேஷத் தன்மை - ஒரு ராஜ்யம். எப்படி அங்கே ஒரு ராஜ்யம் இயல்பாகவே இருக்குமோ, வேறு எந்த ஒரு ராஜ்யமும் இல்லை. அது போல் தனது சங்கமயுக வாழ்க்கையில் பாருங்கள் - உங்கள் வாழ்க்கையிலும் ஒரு ராஜ்யம் உள்ளதா? அல்லது அவ்வப்போது வேறு ராஜ்யமும் கூட இருக்கிறதா? போகப்போக சுயத்தின் ராஜ்யத்தோடு கூடவே மாயாவின் ராஜ்யமும் நடைபெறுகிறது என்றால் அப்போது ஒரு ராஜ்யத்தின் சம்ஸ்காரம் இருக்குமா? ஒரு ராஜ்யத்தோடு இன்னொரு ராஜ்யமும் நடக்கவில்லை தானே? பரமாத்மாவின் ஸ்ரீமத்தின் ராஜ்யம் உள்ளதா அல்லது அவ்வப்போது மாயாவின் ஆதிக்கமும் உள்ளதா? மனதில் மாயாவின் ராஜ்யமோ இல்லை தானே? இதை சோதித்துப் பாருங்கள். இந்த விஷயங்கள் மூலம் தனது சார்ட்டை சோதித்துப் பாருங்கள். இப்போது சங்கமயுகத்தில் ஒரு பரமாத்மாவின் ராஜ்யம் உள்ளதா அல்லது மாயாவின் ஆதிக்கமும் ஆகி விடுகிறதா? சோதித்துப் பார்த்தீர்களா? அவ்வப் போது சோதித்துப் பாருங்கள். தனது சார்ட்டையோ பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் இல்லையா? ஆக, இது வரையிலும் கூட இரண்டு ராஜ்யங்கள் உள்ளன என்றால் ஒரு ராஜ்யத்தின் அதிகாரியாக எப்படி ஆவீர்கள்? ஸ்ரீமத்துடன் கூடவே மாயா வின் வழிமுறையும் கலந்து விடுகிறதா என்ன? அது போலவே ஒரு தர்மம், ஒரு ராஜ்யம் இருக்குமென்றால், ஒரு தர்மமும் இருக்கும். தர்மம் என்றால் தாரணை. ஆக, உங்கள் விசேஷ தாரணை எது? பவித்திரதாவின் தாரணை. எனவே சோதித்துப் பாருங்கள் - மனம், சொல், செயல், சம்பந்தம்-தொடர்பில் சம்பூர்ண மற்றும் சதா பவித்திரதாவின் நேச்சர் இயல்பானதாக அமைந்துள்ளதா? எப்படி அங்கே தங்கள் ராஜ்யத்தில் பவித்திரதாவின் சுயதர்மம் தானாகவே இருக்குமோ, அது போல் இச்சமயம் பவித்திரதாவின் தாரணை இயல்பானதாகவும் இயற்கையானதாகவும் ஆகியுள்ளதா? ஏனென்றால் நீங்கள் அறிவீர்கள், உங்கள் அநாதி சொரூபம் மற்றும் ஆதி சொரூபம் பவித்திரதா ஆகும். எனவே சோதித்துப் பாருங்கள் -- ஒரு தர்மம், அதாவது பவித்திரதா இயல்பாக உள்ளதா? எது நேச்சராக இருக்குமோ, அது விரும்பாமலே கூட வேலை செய்யும். ஏனென்றால் குழந்தைகள் பலர் ஆன்மிக உரையாடல் செய்யும் போது என்ன சொல்கிறார்கள் என்றால், மிகவும் இனிமையிலும் இனிமை யான விஷயங்களைப் பேசுகிறார்கள். சொல்கிறார்கள், விரும்பவில்லை, ஆனால் சில நேரம் மனதில், சில நேரம் வார்த்தையில் ஏதேனும் அபவித்திரதாவின் அம்சம் இமர்ஜ் ஆகி விடுகிறது. சம்ஸ்காரம் அநேக ஜென்மங் களுடையது இல்லையா? அதனால் ஆகி விடுகிறது. ஆக, ஒரு தர்மம் என்பதன் அர்த்தம், பவித்திரதாவின் தாரணை இயற்கையாகவும் இயல்பாகவும் இருக்க வேண்டும். வார்த்தையில் ஆவேசம் வந்தாலும் சரி, சொல்கிறார்கள் - கோபம் இருக்கவில்லை, ஆனால் கொஞ்சம் ஆவேசம் வந்து விட்டது. அப்படியானால் ஆவேசம் என்பது என்ன? கோபத்தின் குழந்தை தான். ஆக, ஒரு தர்மத்தின் சம்ஸ்காரம் எப்போது இயல்பானதாக உருவாகும்? எனவே சோதித்துப் பாருங்கள், ஆனால் சோதிப்பதோடு கூடவே பாபாவிடம் கிடைத்துள்ள சக்திகள் மூலம் மாற்றம் செய்யுங்கள். இப்போது பிறகும் பாப்தாதா முதலில் இருந்தே கவனத்தை ஈர்க்கிறார் -- இப்போது பிறகும் சோதித்து மாற்றம் செய்வதற்கான தீவிர புருஷார்த்தம் செய்வீர்களானால் மார்ஜின் (நேரம்) உள்ளது. ஆனால் கொஞ்சம் சமயத்திற்குப் பிறகு திடீரென்று டூ லேட் போர்டு போடப்பட்டு விடும். பிறகு சொல்லக் கூடாது - பாபாவோ சொல்லவே இல்லை என்று. அதனால் இப்போது புருஷார்த்தத்தின் சமயமோ சென்று விட்டது. ஆனால் தீவிர புருஷார்த்தத்திற்கான சமயம் இப்போதும் உள்ளது. எனவே சோதித்துப் பாருங்கள், ஆனால் சோதிப்பது மட்டும் போதாது. அதோடு மாற்றமும் செய்யுங்கள். அநேகர் சோதிக்கின்றனர், ஆனால் மாறுவதற்கான சக்தி இல்லை. சோதிப்பதும் மாற்றம் செய்வதும் கூடக்கூட ஒன்றாகவே நடைபெற வேண்டும். ஏனென்றால் உங்கள் அனைவரின் சுவமான் அல்லது உங்கள் அனைவரின் மகிமை என்ன? டைட்டில் என்ன? மாஸ்டர் சர்வசக்திவான். மாஸ்டர் சர்வசக்திவானா அல்லது வெறும் சக்திவானா? மாஸ்டர் சர்வ சக்திவான் என்று சொல்பவர்கள் கை உயர்த்துங்கள். (அனைவரும் உயர்த்தினார்கள்) நல்லது. ஆக, நீங்கள் மாஸ்டர் சர்வ சக்திவான்கள். வாழ்த்துகள். ஆனால் மாஸ்டர் சர்வசக்திவானாக இருப்பவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை என்றால் என்னவென்று சொல்லப் படுவார்கள்? தங்களுடைய சம்ஸ்காரங்களை, இயல்பை மாற்ற விரும்பினாலும் முடிவதில்லை என்றால் என்ன சொல்வார்கள்? தன்னைத் தான் கேளுங்கள் - மாஸ்டர் சக்திசாவானா அல்லது மாஸ்டர் சர்வசக்திவானா? மாஸ்டர் சர்வசக்திவான் சங்கல்பம் செய்தார் - செய்தே ஆக வேண்டும், இது நடந்தே விட்டது. ஆகி விடும், பார்க்கலாம் இது இருக்காது. எனவே இப்போது சமயத்தின் படி ரிசல்ட் இது தான் இருக்க வேண்டும் - என்ன யோசித்தீர்களோ, சங்கல்பம் மற்றும் சொரூபம் ஆவது கூடக்கூடவே இருக்க வேண்டும்.

இப்போது புது வருடம், அவ்யக்த வருடம் வரப் போகிறது. அவ்யக்தமாகி 40 வருடங்கள் ஆகின்றன. அப்போது அவ்யக்த பாலனை மற்றும் வ்யக்த ரூப பாலனைக்கு 72 வருடங்கள் முடிந்து விட்டன (2008-ல் 72 வருடம்). அப்போது இரண்டு தந்தையரின் பாலனைக்குப் பிரதிபலன் (ரிட்டர்ன்) பாப்தாதா வுக்குக் கொடுக்க மாட்டீர்களா? யோசித்துப் பாருங்கள் - பாலனை என்ன மற்றும் நடைமுறை என்ன? பாப்தாதா பார்த்தார் - இப்போதும் கூட கவனக்குறைவு மற்றும் ராயல் சோம்பல். ராயல் சோம்பல் என்பது - ஆகி விடும், ஆகியே விடுவோம், போய்ச் சேர்ந்து விடுவோம் மற்றும் கவனக் குறைவு என்பது -- செய்து கொண்டு தானே இருக்கிறோம் இதுவோ நடந்தே ஆக வேண்டும், இதையோ செய்தே ஆக வேண்டும், சொல்வதிலும் செய்வதிலும் வித்தியாசம் ஆகி விடுகிறது. பாப்தாதா ஒரு காட்சியைப் பார்த்து விட்டுப் புன்சிரிக்கிறார். என்ன செய்கிறார்கள்? இது ஆகி விடும் இல்லையா, இவர் செய்து விடுவார் இல்லையா? அப்போது மிக நன்று, நான் முன்னேறிச் செல்ல முடியும். மற்றவர்களை மாற்றுவதற்கான உள்ளுணர்வு இருக்கிறது. ஆனால் சுய மாற்றத்திற்கான உள்ளுணர்வு அங்கங்கே குறைந்து விடுகிறது. இப்போது மற்றவர்களைப் பார்ப்பது என்ற உள்ளுணர்வை மாற்றுங்கள். பார்ப்பதாக இருந்தால் விசேஷத் தன்மையைப் பாருங்கள். இதுவோ ஆகத் தானே செய்கிறது, நடக்கத் தானே செய்கிறது, இவரும் கூடத் தான் செய்கிறார் இந்த பாவனையைக் குறைத்து விடுங்கள். தன்னைப் பாருங்கள். பாபாவை முன்னால் வையுங்கள். மற்றப்படி யாராக இருந்தாலும், மகாரதியாக இருந்தாலும், இடைப்பட்டவராக இருந்தாலும் புருஷார்த்தத்தில் ஏதேனும் ஒரு குறைபாட்டை மாற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். எனவே தந்தையைப் பாருங்கள், இரட்டைத் தந்தையரைப் பாருங்கள். பிரம்மா பாபாவைப் பாருங்கள், சிவபாபாவைப் பாருங்கள். எப்போது பாபா உங்களைத் தமது மனசிம்மசனத்தில் அமர்த்தி விட்டாரோ, மற்றும் நீங்களும் கூட தங்களின் மனசிம்மாசனத்தில் பாபாவை அமர்த்தி விட்டீர் களோ, அப்போது உங்கள் ஸ்லோகனும் கூட -- தந்தையைப் பாருங்கள் என்பது தான். சகோதரனைப் பாருங்கள், சகோதரியைப் பாருங்கள் என்பதெல்லாம் கிடையாது. ஏதேனும் குறைபாடுகள் அனைவரிடமும் இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மற்றவர் களைப் பார்ப்பதானால் விசேஷத் தன்மையைப் பாருங்கள். என்ன குறைபாடு இருந்ததோ, அதைத் தனக்குள்ளிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறேன். அவரைப் பார்க்காதீர்கள். இரண்டாவது விஷயமோ- தனது ராஜ்யத்தில், நினைவிருக்கிறது இல்லையா தனது ராஜ்யம்? நேற்றோ அது இருந்தது மற்றும் நாளை அது இருக்கப் போகிறது. உங்கள் புத்தியில், கண்களில் உங்கள் ராஜ்யம் தெளிவாக வந்து விட்டது இல்லையா? எத்தனை தடவைகள் ராஜ்யம் செவய்திருக்கிறீர்கள்? சொன்னதுமே முன்னால் வந்து விட்டது. தனது ராஜ்ய அதிகாரி ரூபம் மற்றும் சிரேஷ்ட ராஜ்யம். எப்படி தனது ராஜ்யத்தில் சட்டம்-ஒழுங்கு தானாகவே நடைபெறுகிறது! அனைவரும் ஞானம் நிறைந்த சம்ஸ்காரம் உள்ளவர்கள். சட்டம் என்பதென்ன, ஒழுங்கு என்பதென்ன என்று அறிந்திருக்கிறார்கள். அது போல் இப்போது தனது வாழ்க்கையில் பாருங்கள் - பாபாவின் கட்டளைப்படி நடக்கிறீர்களா அல்லது சில நேரம் மாயாவின் கட்டளைப்படியும் நடந்து விடுகிறதா? சில நேரம் பரமத், மன்மத் (மற்றவர் வழி மற்றும் மனதின் வழி) ஸ்ரீமத் தவிர வேறு வழியில் நடப்பதில்லை தானே? மற்றும் சட்டம் எது? சட்டம் என்பது கவலையற்ற மகாராஜா, எந்த ஒரு கவலையும் இல்லை. ஏனென்றால் அனைத்துப் பிராப்திகளும் உள்ளன. அதே போல் சோதித்துப் பாருங்கள் - சங்கமயுகத்தின் சிரேஷ்ட ஜென்மத்திலும் கூட அனைத்துப் பிராப்திகளும் உள்ளனவா? பாபா என்ன கொடுத்தாரோ, அது பகவானின் பிரசாதம் ஆகிறது இல்லையா? அப்போது பிரசாதத் திற்கு எவ்வளவு மகத்துவம் வைக்கிறீர்கள்? ஆக, பாபாவின் பிராப்திகள் என்னென்ன உள்ளனவோ, அவை பிரபு பிரசாதமாகக் கிடைத்துள்ளன. பிரபு பிரசாதத்தின் மகத்துவம் உள்ளதா? ஆஸ்தியும் உள்ளது. அதிகாரமும் உள்ளது. மற்றும் பிரசாதமும் உள்ளது. எனவே சோதித்துப் பாருங்கள் - சட்டம் மற்றும் ஒழுங்கு இரண்டிலும் நிறைவாக உள்ளதா?

பாப்தாதா ஒரு விஷயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் - பெரும்பான்மையோரை மாற்றுவதற் கான சக்தி கிடைத்துள்ளது. அந்தப் பரிவர்த்தன் சக்தியை சமயத்தில் காரியத்தில் கொண்டு வந்தால் எந்தக் கடின உழைப்பும் இல்லை. பாருங்கள், அனைவர்க்கும் அனுபவம் உள்ளது - எப்போதாவது மாயாவினால் எந்த விதமான தோல்வி ஏற்பட்டால் அனைத்து சொற்பொழிவு களிலும் சொல்கிறீர்கள், வகுப்பும் நடத்துகிறீர்கள் என்றால் இதைத் தான் சொல்கிறீர்கள் -- இரண்டு சொற்கள் வீழ்த்துவனவாகவும் உள்ளன. உயர்த்துவனவாகவும் உள்ளன. அந்த இரண்டு சொற்களை அனைவரும் அறிவீர்கள். அனைவரின் மனதிலும் வந்து விட்டது. அந்த இரண்டு சொற்கள் -- நான் மற்றும் எனது.. சொற்பொழிவில் சொல்கிறீர்கள் இல்லையா? வகுப்பும் நடத்து கிறீர்கள். பாப்தாதா வகுப்பையும் கேட்கிறார். என்ன சொல்கிறார்கள்? இப்போது இந்த இரண்டு சொற்களையும் பரிவர்த்தன் சக்தி மூலம் பரிவர்த்தன் செய்யுங்கள். எப்போதெல்லாம் நான் என்ற சொல்லைச் சொல்கிறீர்களோ, அப்போதெல்லாம் நான் இன்னார், அல்லது நான் பிராமணனாகவோ இருக்கிறேன், ஆனால் நான் யார்? பாப்தாதா என்ன சுவமான் கொடுத்திருக்கிறாரோ, எப்போ தெல்லாம் நான் என்ற சொல்லைச் சொல்கிறீர்களோ, அப்போது ஏதேனுமொரு சுவமானைச் சேர்த்துச் சொல்லுங்கள் அல்லது புத்தியில் கொண்டு வாருங்கள். நான் என்ற சொல்லைச் சொன்னீர்கள் என்றால் சுவமான் நினைவில் வந்து விட வேண்டும். என்னுடைய என்ற சொல்லைச் சொல்வீர்களானால் பாபா நினைவு வர வேண்டும். மேரே பாபா - இது இயற்கையான ஸ்மிருதி ஆகிவிட வேண்டும். இந்த மாற்றத்தைச் செய்து விடுங்கள், போதும். மேலும் இன்னொரு விஷயம் - அதிகமாக எப்போது சம்பந்தம்-தொடர்பில் வருகிறீர்களோ, அப்போது இரண்டு சொற்கள் மூலமாக மாயா வருகிறது. ஒன்று பாவ். இன்னொன்று பாவனை. ஆக, எப்போதெல்லாம் பாவ் (எனது கருத்து) என்ற சொல்லைச் சொல்கிறீர்களோ, அப்போது ஆத்மிக பாவ், பாவ் என்ற சொல்லைச் சொன்னதுமே ஆத்மிக பாவ் முதலில் நினைவு வர வேண்டும். மேலும் பாவனை என்றால் சுப பாவனை நினைவு வர வேண்டும். சொல்லின் அர்த்தத்தை மாற்றி விடுங்கள். உங்கள் டைட்டில் என்ன? விஷ்வ பரிவர்த்தக் (உலக மாற்றம் செய்பவர்) உலகை மாற்றுபவர் இந்தச் சொல்லின் அர்த்தத்தை மாற்ற முடியாதா? எனவே சமயத்தில் இந்தப் பரிவர்த்தன் சக்தியைப் பயன்படுத்திப் பாருங்கள். தாமதமாக வருகிறது. எப்போது சமயம் கடந்து விடுகிறதோ, மனதுக்குப் பிடிக்கவில்லையோ, மனம் தானே யோசிக்கிறது. ஆனால் சமயமோ கடந்து விட்டது இல்லையா? எனவே இப்போது தீவிர வேகத்தின் அவசியம் உள்ளது. எப்போதாவது இல்லை. அந்த மாதிரி யோசிக்காதீர்கள் -- அதிக சமயமோ சரியாக உள்ளது என்று. ஆனால் பாப்தாதா சொல்லியிருக் கிறார் -- கடைசி நேரத்தைப் பற்றிய எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. திடீரென விளையாட்டு நடந்துவிடப் போகிறது. குழந்தைகள் பலர் பாபாவுக்கே மிக இனிமையிலும் இனிமையான விஷயங்களைச் சொல்கிறார்கள். சமயம் கொஞ்சம் அதிக பட்சத்தில் செல்லும் இல்லையா, அப்போது வைராக்கியமோ வரும். அதனால் வைராக்கியத்தின் சமயத்தில் தானாகவே வேகம் அதிகமாகி விடும் என்கிறார்கள். ஆனால் பாப்தாதா சொல்லியிருக்கிறார் - நீண்ட காலத்தின் புருஷார்த்தம் தேவை. கொஞ்ச சமயத்தின் புருஷார்த்தம் என்றால் பிராலப்தமும் கொஞ்ச சமயத்திற்குத் தான் கிடைக்கும். முழு 21 பிறவிகளுக்கும் பிராலப்தம் உருவாகாது. பாப்தாதாவின் மூன்று சொற்களை நினைவு வையுங்கள் - ஒன்று அச்சானக் (திடீரென எதுவும் எப்போதும நடக்கலாம்) இரண்டாவது எவர் ரெடி மற்றும் மூன்றாவது, நீண்ட காலம். இந்த மூன்று சொற்களை சதா புத்தியில் வையுங்கள். எந்த நேரத்திலும் எங்கேயும் எவருடைய கடைசி காலமும் வரலாம். இப்போது பாருங்கள், எத்தனை பிராமணர்கள் போய்க் கொண்டே இருக்கிறார்கள்! அவர்களுக்குத் தெரிந்திருக்குமா? எனவே நீண்ட கால புருஷார்த்தத்தின் மூலம் முழு 21 பிறவிகளுக்கான ஆஸ்தி பெற்றே தீர வேண்டும். இந்தத்தீவிர புருஷார்த்த ஸ்மிருதியில் இருங்கள். உங்கள் ராஜ்யத்தின் முதல் நம்பர், முதல் பிறவி. என்ன யோசித்திருக்கிறீர்கள்? முதல் பிறவியில் வர வேண்டும் இல்லையா? எதில் மஜா இருக்கும்? முதல் பிறவியிலா அல்லது வேறு எதிலுமா? தங்களின் ராஜ்யத்தில் முதல் பிறவியில் ஸ்ரீகிருஷ்ணரோடு கூடவே பார்ட் இருக்கும் என்று யார் புரிந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். (அனைவரும் கை உயர்த்தினர்) நல்லது. பார்ட் முதலில்? கையைப் பார்த்ததுமே குஷியாகி விட்டோம். கை தட்டுங்கள். முதல் பிறவியில் வாருங்கள். அதற்கான வாழ்த்துகள்! ஆனால் ஆனால் என்னவென்று சொல்லட்டுமா? சொல்ல வேண்டாமா? முதலில் வரத் தான் வேண்டும். பிறகு இரண்டாம் விஷயம் ஏன் சொல்ல வேண்டும்? நல்லது, எவ்வளவு பேர் வந்திருக்கிறீர்களோ, அனைவரும் முதல் பிறவியில் வரத் தான் வேண்டும். கை தட்டி விட்டீர்கள். முதல் பிறவி மற்றும் முதல் ஸ்டேஜும் கூட. ஆக, முதல் ஸ்டேஜை உருவாக்கத் தான் வேண்டும். இது யாருடைய திட சங்கல்பம், வேகமாகச் செல்லத் தான் வேண்டும், எந்த ஒரு விக்னம் வந்தாலும் விக்னமாக இருக்காது, விக்ன விநாசக் முன்னால் வெற்றியின் ரூபத்தில் மாறி விடும். ஏனென்றால் நீங்கள் அனைவரும் விக்ன விநாசக். டைட்டில் என்ன? விக்ன விநாசக். ஆக, விக்னங்கள் வந்தாலும் விளையாட்டை விளையாடுவதற்காக வரும். ஆனால் நீங்கள் தூரத்திலிருந்தே அறிந்து கொள்ளுங்கள். ராயல் ரூபத்தில் வரும். ஆனால் நீங்கள் விக்ன விநாசக் தூரத்திலிருந்தே அறிந்து கொள்வீர்கள் - என்ன விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று. அதனால் பாப்தாதாவும் இதையே விரும்புகிறார் - அதாவது குழந்தைகள் அனைவரும் கூடவே செல்ல வேண்டும். பின்தங்கி விடக் கூடாது. பாப்தாதாவுக்குக் குழந்தைகள் இல்லாமல் மஜா வருவதில்லை. ஆக, உறுதித்தன்மையை ஒரு போதும் பலவீனமாக்கக் கூடாது. செய்தே ஆக வேண்டும். வோம் வோம் என்று சொல்லக் கூடாது. செய்வோம், பார்ப்போம், பார்க்கலாம் இந்த வார்த்தைகளைச் சொல்லக் கூôது. உறுதித்தன்மை என்பது வெற்றிக்கான சாவி ஆகும். இந்தச் சாவியை ஒரு போதும் தொலைத்துவிடக் கூடாது. மாயாவும் தந்திரமானது இல்லையா? அது சாவியைத் தேடுகிறது. எனவே இந்தச் சாவியை நல்லபடியாகப் பாதுகாத்து வையுங்கள். நல்லது.

நாலாபுறம் உள்ள லவ்லி மற்றும் லக்கி திட சங்கல்பம் உள்ள குழந்தைகளுக்கு, நினைத்ததும் செய்தார்கள். செய்வோம், பார்ப்போம் என்பதல்ல. நினைத்தார்கள், செய்தார்கள், சதா தன்னை நஷ்டோமோகா நிலையில், வெறுமனே சம்பந்தத்தின் மோகம் இல்லை, தனது தேக உணர்வு மற்றும் தேக அபிமானத்தின் மோகமும் இல்லை. அந்த மாதிரி நஷ்டோமோகா எவர் ரெடி குழந்தைகளுக்கு, சதா ஸ்ரீமத்தில் கையோடு கை சேர்த்து, சேர்ந்தே பறக்கக்கூடிய மற்றும் சேர்ந்தே பிரம்மா பாபாவுடன் தங்களின் ராஜ்யத்தில் வரக்கூடிய, அத்தகைய தீவிர புருஷார்த்தி பறக்கும் கலையின் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் மிக-மிக ஆசிர்வாதங்கள் மற்றும் அன்பு நினைவுகளை ஸ்வீகாரம் செய்து கொள்ளவும் மற்றும் பாலக் ஸோ மாலிக் குழந்தைகளுக்கு நமஸ்தே.

ஆசீர்வாதம்:
பரிவர்த்தன் சக்தி மூலம் அனைவரின் நன்றிக்குப் பாத்திரமாக ஆகக்கூடிய விக்னங்களை வென்றவர் ஆகுக.

யாராவது உங்களுக்கு அபகாரம் செய்வார்களானால் நீங்கள் ஒரு விநாடியில் அபகாரத்தை உபகாரமாகப் பரிவர்த்தன் (மாற்றம்) செய்து விடுங்கள். யாராவது தங்களின் சம்ஸ்கார-சுபாவ ரூபத்தில் பரீட்சை ஆகி முன்னால் வருவார்களேயானால் உங்கள் ஒருவரின் ஸ்மிருதி மூலம் அத்தகைய ஆத்மாவுக்காகவும் இரக்க மனதின் சிரேஷ்ட சம்ஸ்கார-சுபாவத்தை தாரணை செய்யுங்கள். யாராவது தேகதாரி திருஷ்டியுடன் முன்னால் வருவார் களானால் அவர்களின் திருஷ்டியை ஆத்மிக திருஷ்டியாகப் பரிவரித்தன் செய்து விடுங்கள். இது போல் பரிவர்த்தன் செய்வதற்கான யுக்தி வந்து விடுமானால் விக்னங்களை வென்றவர் ஆகி விடுவீர்கள். பிறகு தொடர்பில வரக்கூடிய ஆத்மாக்கள் அனைவரும் உங்களுக்கு நன்றி சொல்வார்கள்.

சுலோகன்:
அனுபவங்களின் சொரூபமாகி விடுவீர்களானால் முகத்தின் மூலம் அதிர்ஷ்டத்தின் ஜொலிப்பு காணப்படும்.


அவ்யக்த இஷாரா: ஒற்றுமை மற்றும் விசுவாசத்தின் விசேஷதா மூலம் வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்

அநேக தேசங்கள், அநேக பாஷைகள், அநேக வடிவங்கள்-நிறங்கள் இருந்த போதும் அனைவரின் மனதிலும் ஒற்றுமை காணப்பட வேண்டும். ஏனென்றால் ஒரு தந்தையின் குழந்தைகள் நீங்கள். அனைவரும் ஒரே விருட்சத்தின் கிளைகள். ஒருவரின் ஸ்ரீமத் படி நடப்பவர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்பிப்பது, கெட்டுப்போனவரை சீர்திருத்துவது, அநேகருக்குள் ஒற்றுமையைக் கொண்டு வருவது, இவையனைத்தும் பெரிய சேவையாகும். இது தான் அற்புதமாகும். மேலும் இதுவே வெற்றிக்கான ஆதாரமாகும்.