01-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! - அன்பான மற்றும் அன்பில்லாத (ப்ரீத் மற்றும் விபரீத்) - இவை இல்லற மார்க்கத்தின் வார்த்தைகள் ஆகும். இப்பொழுது உங்களுடைய அன்பு ஒரு தந்தையிடம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் நிரந்தரமாக தந்தையின் நினைவில் இருக்கிறீர்கள்

கேள்வி:
நினைவு யாத்திரைக்கு என்ன ஒரு மறு பெயர் அளிக்கலாம்?

பதில்:
நினைவின் யாத்திரை அன்பின் (ப்ரீத்) யாத்திரை ஆகும். (விபரீத்) அன்பில்லாத புத்தி உடையவர்களிடமிருந்து பெயர் ரூபத்தில் சிக்கிக் கொண்டு விடும் துர்நாற்றம் வருகிறது. அவர்களுடைய புத்தி தமோபிர தானமாக ஆகிவிடுகிறது. யாருடைய அன்பு ஒரு தந்தையிடம் உள்ளதோ அவர்கள் ஞான தானம் செய்து கொண்டே இருப்பார்கள். எந்த ஒரு தேகதாரியிடமும் அவர்களுடைய அன்பு இருக்க முடியாது.

பாடல்:
இந்த நேரம் கழிந்து கொண்டிருக்கிறது.......

ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது இதை நினைவு யாத்திரை என்றும் கூறலாம். பின் அன்பின் யாத்திரை என்றும் கூறலாம். மனிதர்களோ அந்த யாத்திரைகளில் செல்கிறார்கள். இந்த படைப்புக்கள் உள்ளன. அவர்களுடைய யாத்திரை களில் செல்கிறார்கள். பல்வேறு படைப்புக்கள் உள்ளன அல்லவா? படைப்பவர் பற்றியோ யாருக்கும் தெரியவே தெரியாது. இப்பொழுது நீங்கள் படைப்பவரான தந்தையை அறிந்துள்ளீர்கள். அந்த தந்தையின் நினைவில் நீங்கள் ஒரு பொழுதும் நின்று விடக் கூடாது. உங்களுக்கு நினைவினுடைய யாத்திரை கிடைத்துள்ளது. இதற்கு நினைவின் யாத்திரை அல்லது அன்பின் யாத்திரை என்று கூறப்படுகிறது. யாருக்கு அதிகமான அன்பு இருக்குமோ அவர்கள் யாத்திரையும் நன்றாக செய்வார்கள். எந்த அளவு அன்புடன் யாத்திரையில் இருப்பீர்களோ அந்த அளவு தூய்மை யாகிக் கொண்டே செல்வீர்கள். (சிவ பகவானுவாச்) - சிவ பகவான் கூறுகிறார் அல்லவா? விநாச காலத்தில் விபரீத புத்தி மற்றும் விநாச காலத்தில் அன்பான புத்தி. இப்பொழுது விநாச காலம் ஆகும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது அதே கீதையின் அத்தியாயம் நடைபெற்று கொண்டிருக்கிறது. பாபா ஸ்ரீகிருஷ்ணரின் கீதை மற்றும் திரிமூர்த்தி சிவனின் கீதை இவற்றிற்கு இடையே உள்ள வேற்றுமையையும் கூறி இருக்கிறார். இப்பொழுது கீதையின் பகவான் யார்? பரமபிதா சிவபகவான் கூறுகிறார் (சிவபகவானுவாச) . சிவன் என்ற பெயர் கூட அநேகருக்கு உள்ளது. எனவே பரமபிதா பரமாத்மா என்று எழுதும் பொழுது அவர் (சுப்ரீம்) உயர்ந்தவர் ஆகி விடுகிறார். யாருமே தங்களை பரமபிதா என்று கூற முடியாது. சந்நியாசிகள் சிவோஹம் என்று கூறிவிடுகிறார்கள். அவர்களோ தந்தையை நினைவு கூட செய்ய முடியாது. தந்தையை அறியாமலே உள்ளார்கள். தந்தையிடம் அன்பு இல்லவே இல்லை. ப்ரீத் (அன்பு) மற்றும் விபரீத் (அன்பில்லாதது) - இந்த வார்த்தைகள் இல்லற மார்க்கத்தினருக்கானது ஆகும். ஒரு சில குழந்தைகளுக்கு தந்தையிடம் அன்பான புத்தி இருக்கிறது. ஒரு சிலருக்கு விபரீத (அன்பற்ற) புத்தியும் இருக்கும். உங்களிலும் அவ்வாறே உள்ளது. யார் தந்தையின் சேவையில் மும்முரமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தந்தையிடம் (ப்ரீத்) உள்ளது. தந்தையைத் தவிர வேறு யாரிடமும் (ப்ரீத்) அன்பு இருக்க முடியாது. பாபா நாங்களோ உங்களுக்குத் தான் உதவி செய்பவர்கள் ஆவோம் என்று சிவபாபாவிற்குத் தான் கூறுகிறார்கள். இதில் பிரம்மாவின் விஷயமே கிடையாது. எந்த ஆத்மாக்களுக்கு சிவபாபாவிடம் அன்பு இருக்கிறதோ அவர்கள் அவசியம் உதவி செய்பவர்களாக இருப்பார்கள். சிவபாபாவுடன் அவர்கள் சேவை செய்து கொண்டே இருப்பார்கள். அன்பு (ப்ரீத்) இல்லை என்றால் (விபரீத்) அன்பில்லாதவர் ஆகி விடுகிறார்கள்.

விபரீத புத்தி உடையவர்கள் விநாசம் அடைந்து விடுகிறார்கள். யாருக்கு தந்தையிடம் அன்பு இருக்குமோ பின் உதவியாளர்களாகவும் ஆகி விடுகிறார்கள். எவ்வளவு அன்போ அவ்வளவு சேவையில் உதவி செய்பவர்களாக ஆவார்கள். நினைவே செய்வதில்லை என்றால் அன்பு இல்லை. பிறகு தேகதாரிகளிடம் அன்பு ஆகி விடுகிறது. மனிதர்கள் மனிதர்களுக்கு தங்களுடைய நினைவாக பொருள் கூட கொடுக்கிறார்கள் அல்லவா? அது அவசியம் நினைவிற்கு வருகிறது.

இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை அழியாத ஞான இரத்தினங்களின் பரிசை அளிக்கிறார். அதன் மூலம் நீங்கள் இராஜ்யத்தை அடைந்து விடுகிறீர்கள். அழியாத ஞான இரத்தினங்களின் தானம் செய் கிறார்கள் என்றால் அன்பான புத்தி உடையவர்கள் ஆவார்கள். பாபா அனைவருக்கும் நன்மை செய்ய வந்துள்ளார். நாம் கூட உதவியாளர் ஆக வேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள். இது போல அன்பான புத்தி உடையவர்கள் (ப்ரீத் புத்தி விஜயந்தி) வெற்றி அடைபவர்கள் ஆகிறார்கள். யார் நினைவே செய்வதில்லையோ அவர்கள் அன்பான புத்தி உடையவர்கள் இல்லை. தந்தையிடம் அன்பு இருக்கிறது. நினைவு செய்கிறார்கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகி விடும் (பாவங்கள் அழிந்து விடும்). மேலும் மற்றவர்களுக்கும் நன்மைக்கான வழியைக் கூறுவார்கள். பிராமண குழந்தைகளாகிய உங்களிலும் கூட அன்பு (ப்ரீத்) மற்றும் அன்பில்லாமையை (விபரீத்) பொருத்து உள்ளது. தந்தையை அதிகமாக நினைவு செய்கிறார்கள் என்றால் அன்பு இருக்கிறது என்று பொருள். என்னை நிரந்தரமாக நினைவு செய்யுங் கள், எனக்கு உதவி செய்பவர் ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். படைப்பிற்கு ஒரு படைப்புக் கர்த்தாவான தந்தை தான் நினைவிலிருக்க வேண்டும். எந்த ஒரு படைப்பையும் நினைவு செய்யக் கூடாது. உலகத்திலோ படைப்பு கர்த்தாவை யாரும் அறியாமல் உள்ளார்கள், நினைவும் செய்வ தில்லை. சந்நியாசிகள் கூட பிரம்மத்தை நினைவு செய்கிறார்கள். அவர்கள் கூட படைப்பு தான். படைப்பு கர்த்தாவோ அனைவருக்கும் ஒரே ஒருவர் ஆவார் அல்லவா? மேலும் இந்த கண்களால் பார்க்கும் பொருட்கள் அனைத்துமே படைப்பு ஆகும். யார் கண்ணுக்கு தெரிவதில்லையோ அவர் படைப்பு கர்த்தாவான தந்தை ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கும் மடங்கள் உள்ளன. அவர்களும் படைப்பு ஆவார்கள். பாபா தயாரிப்பதற்காகக் கூறி இருக்கும் படங்களின் மேலே "பரமபிதா பரமாத்மா திரிமூர்த்தி சிவ பகவானுவாக்கு என்று எழுத வேண்டும். ஒருவர் தன்னை பகவான் என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் பரமபிதா என்று கூற முடியாது. உங்களுடைய புத்தியோகம் சிவபாபா உடன் உள்ளதேயன்றி சரீரத்துடன் இல்லை. தன்னை அசரீரி ஆத்மா என்று உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை புரிய வைத்துள்ளார். (ப்ரீத்) அன்பு மற்றும் (விபரீத்) அன்பில்லாமை எல்லாமே சேவையை பொருத்தது. நல்ல அன்பு உள்ளது என்றால் தந்தையின் சேவைக் கூட நன்றாகச் செய்வார்கள். அப்பொழுது வெற்றி அடைபவர்கள் (விஜயந்தி) என்று கூறுவார்கள். அன்பு இல்லை என்றால் சேவையும் ஆகாது. பிறகு பதவியும் குறைவு. குறைந்த பதவியினருக்கு உயர்ந்த பதவியிலிருந்து அழிந்து விட்டவர் என்று கூறுவார்கள். பார்க்கப் போனால் விநாசமோ அனைவருக்குமே தான் ஆகிறது. ஆனால் இது குறிப்பாக (ப்ரீத்) அன்புடைய மற்றும் (விபரீத்) அன்பில்லாதவர்களின் விஷயம் ஆகும். படைப்பவரான தந்தையோ ஒரே ஒருவர் ஆவார். அவருக்குத் தான் சிவ பரமாத்மாய நமஹ! என்கிறார்கள். சிவ ஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். சங்கர ஜெயந்தி என்று ஒரு பொழுதும் கேள்விப்படவே இல்லை. பிரஜாபிதா பிரம்மாவின் பெயர் கூட பிரசித்தமானது ஆகும். விஷ்ணுவின் ஜெயந்தி கொண்டாடுவதில்லை. கிருஷ்ணருடையது கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுக்கிடையே என்ன வித்தியாசம் உள்ளது என்பது கூட யாருக்கும் தெரியாது. மனிதர்களினுடையது விநாச காலத்தில் விபரீத புத்தி. எனவே உங்களிலும் கூட அன்பான (ப்ரீத்) மற்றும் அன்பில்லாத (விபரீத்) புத்தி உடையவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? உங்களுடைய இந்த ஆன்மீகத் தொழிலோ மிகவும் நன்றாக உள்ளது என்று தந்தை கூறுகிறார். அதிகாலை மற்றும் மாலையின் பொழுது இந்த சேவையில் ஈடுபட்டு விடுங்கள். மாலையின் நேரத்தில் 6 மணி முதல் 7 மணி வரை நல்ல நேரம் என்று கூறுகிறார்கள். சத்சங்கம் ஆகியவை கூட மாலையில் மற்றும் அதிகாலையில் நிகழ்த்துகிறார்கள். இரவிலோ வாயு மண்டலம் மோசமாகி விடுகிறது. இரவில் ஆத்மா சுயம் சாந்தியில் சென்று விடுகிறார். அதற்கு உறக்கம் என்று கூறுகிறார்கள். பிறகு அதிகாலை விழிக்கிறார். எனது மனமே அதிகாலையில் இராமரை நினைவு செய் என்றும் கூறுகிறார்கள். இப்பொழுது "தந்தையாகிய என்னை நினைவு செய்" என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். சிவபாபா சரீரத்தில் பிரவேசம் செய்யும் பொழுது தானே "என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகி விடும்" என்று கூற முடியும். நாம் எந்த அளவு தந்தையை நினைவு செய்கிறோம் மற்றும் ஆன்மீக சேவை செய் கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிர தானமாக ஆகி விடுவீர்கள் என்று அனை வருக்கும் இதே அறிமுகம் கொடுக்க வேண்டும். அப்பொழுது துரு நீங்கி விடும். (ப்ரீத் புத்தி) அன்பான புத்தியில் கூட சதவிகிதம் உள்ளது. தந்தை யிடம் அன்பு இல்லை என்றால் அவசியம் தனது தேகத்தின் மீது அன்பு உள்ளது அல்லது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் அன்பு உள்ளது என்று பொருள். தந்தையிடம் அன்பு இருந்தது என்றால் சேவையில் ஈடுபட்டு விடுவார்கள். தந்தையிடம் அன்பு இல்லை என்றால் சேவையில் கூட ஈடுபட மாட்டார்கள். எவரொருவருக்கும் "அல்ஃப்" தந்தை மற்றும் பே (அரசாட்சி யின்) இரகசியத்தைப் புரிய வைப்பது மிகவுமே சுலபமானது. ஹே பகவான், ஹே பரமாத்மா! என்று கூறி நினைவு செய்கிறார்கள். ஆனால் அவரை முற்றிலும் அறியாமல் உள்ளார்கள். ஒவ்வொரு படத்திற்கு மேலேயும் "பரமபிதா திரி மூர்த்தி சிவ பகவானுவாச்" (வாக்கியம்) என்று அவசியம் எழுத வேண்டும் என்று பாபா புரிய வைத்துள்ளார். அப்பொழுது யாரும் எதுவும் கூற முடியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்களோ உங்களுடைய நாற்றை நட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோருக்கும் வழி கூறுங்கள் அப்பொழுது தந்தையிடமிருந்து வந்து ஆஸ்தி பெற முடியும். தந்தையை அறியாமலேயே உள்ளார்கள். எனவே (ப்ரீத் புத்தி) அன்பான புத்தி இல்லவே இல்லை. பாவங்கள் அதிகரித்து அதிகரித்து முற்றிலுமே தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளார்கள். யார் நிறைய நினைவு செய்கிறார்களோ அவர்களுக்குத் தந்தையிடம் அன்பு இருக்கும். அவர் களுடையது தான் "கோல்டன் ஏஜ்) தங்கயுக புத்தியாக இருக்கும். ஒரு வேளை வேறு புறங்களில் புத்தி அலைந்து கொண்டிருந்தது என்றால் தமோபிரதானமாகவே இருந்து விடுவார்கள். முன்னால் அமர்ந்துள்ளார்கள் என்றாலும் கூட (ப்ரீத் புத்தி) அன்பான புத்தி என்று கூற மாட்டார்கள். ஏனெனில் நினைவே செய்வதில்லை. அன்பான புத்தியின் (ப்ரீத் புத்தி) அடையாளமே நினைவு. அவர்கள் தாரணை செய்வார்கள் (நடைமுறைக்கு எடுத்து வருவார்கள்). மற்றவர்கள் மீதும் கருணை புரிந்து கொண்டே இருப்பார்கள், "தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் பாவனம் ஆகிவிடுவீர்கள்" என்பதை யாரொருவருக்கும் புரிய வைப்பது மிகவும் சுலபமானது ஆகும். தந்தை சொர்க்கத்தின் அரசாட்சியின் ஆஸ்தியை குழந்தைகளுக்குத் தான் அளிக்கிறார். அவசியம் சிவபாபா வந்திருந்தார். அதனால் தான் சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள் அல்லவா? கிருஷ்ணர் இராமர் ஆகியோர் எல்லோருமே வாழ்ந்து சென்றுள்ளார்கள். அதனால் தான் கொண்டாட வருகிறார்கள் அல்லவா? சிவபாபாவையும் நினைவு செய்கிறார்கள். ஏனெனில் அவர் வந்து குழந்தைகளுக்கு உலக அரசாட்சி அளிக்கிறார். புதியவர்கள் யாரும் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. பகவான் எப்படி வந்து ஆஸ்தி அளிக்கிறார்? முற்றிலுமே கல் புத்தியாக உள்ளார்கள். நினைவு செய்வதற்கான புத்தி இல்லை. நீங்கள் அரைகல்பத்தின் பிரியதரிசனிகள் ஆவீர்கள் என்று சுயம் தந்தை கூறுகிறார். நான் இப்பொழுது வந்து விட்டுள்ளேன். பக்தி மார்க்கத் தில் நீங்கள் எவ்வளவு அடி வாங்குகிறீர்கள்! ஆனால் பகவானோ யாருக்கும் கிடைக்கவே இல்லை. தந்தை பாரதத்தில் தான் வந்திருந்தார் மற்றும் முக்தி ஜீவன் முக்தியின் வழியைக் கூறி இருந்தார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். கிருஷ்ணரோ இந்த வழியைக் கூறுவதில்லை. பகவானிடம் எப்படி அன்பு இணைய முடியும் என்பதை பாரதவாசி களுக்குத் தான் தந்தை வந்து கற்பிக்கிறார். வருவதும் பாரதத்தில் தான். சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார் என்பதை குழந்தை களாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவருடைய பெயர் சிவன் என்பதாகும். எனவே நீங்கள் சிவஜெயந்தி தான் வைரத்திற்கு சமமானது என்று எழுதுகிறீர்கள் மற்ற எல்லோருடைய ஜெயந்தியும் சோழிக்குச் சமமானது. இவ்வாறு எழுதுவதால் கோபித்துக் கொள்கிறார்கள். எனவே ஒவ்வொரு படத்திலும் சிவபகவானுவாச் (சிவபகவான் கூறுகிறார்) என்று இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். ஒரு சில குழந்தைகள் முழுமையாகப் புரிந்து கொள்ளாமலிருக்கும் பொழுது அதிருப்தி அடைந்து விடுகிறார்கள். மாயையின் கிரகச்சாரத்தின் முதல் தாக்குதல் புத்தியின் மீது தான் செல்கிறது. தந்தையிடமிருந்து புத்தியோகத்தைத் துண்டித்து விடுகிறது. அதனால் ஒரேயடியாக மேலிருந்து கீழே விழுந்து விடுகிறார்கள். தேகதாரிகளிடம் புத்தியோகம் சிக்கி விடுகிறது என்றால் தந்தையிடம் (விபரீத) அன்பில்லாதவர் ஆகி விட்டார்கள் அல்லவா? நீங்கள் ஒரே ஒரு விசித்திர (சரீரமற்ற) விதேஹி (தேகமற்ற) தந்தையிடம் அன்பு கொள்ள வேண்டும். தேகதாரியிடம் அன்பு கொள்வது தீமை பயப்பதாகும். புத்தி மேலிருந்து அறுபட்டு விடுகிறது என்றால் முற்றிலுமாக கீழே விழுந்து விடுகிறார்கள். இது அனாதி அமைந்த அமைக்கப்பட்ட நாடகம் என்றாலும் கூட பிறகும் புரிய வைத்து விடுவார் தான் அல்லவா? (விபரீத) அன்பில்லாத புத்தி உடையவரிடமிருந்தோ பெயர் ரூபத்தில் மாட்டி விடுவதற்கான துர்நாற்றம் வருகிறது. இல்லையென்றால் சேவையில் உறுதியாக நின்று விட வேண்டும். பாபா நேற்றைக்குக் கூட நல்ல முறையில் புரிய வைத்தார் - முக்கியமான விஷயமே கீதையின் பகவான் யார்? என்பதாகும். இதில் தான் உங்களுடைய வெற்றி ஆகப் போகிறது. கீதையின் பகவான் சிவனா? இல்லை ஸ்ரீகிருஷ்ணரா?என்று நீங்கள் கேட்கிறீர்கள். சுகம் அளிப்பவர் யார்? சுகம் அளிப்பவரோ சிவன் ஆவார். எனவே அவருக்கு (வோட்) வாக்களிக்க வேண்டும். அவருக்குத் தான் மகிமை உள்ளது. இப்பொழுது வோட் (வாக்கு) அளியுங்கள் "கீதையின் பகவான் யார்"? சிவனுக்கு வோட் அளிப்பவர் களுக்கு (ப்ரீத் புத்தி) அன்பான புத்தி என்று கூறுவார்கள். இதுவோ மிகப் பெரிய (எலெக்ஷன்) தேர்தல் ஆகும். யார் நாள் முழுவதும் ஞான மனனம் (சிந்தனைக் கடலைக் கடைதல்) செய்து கொண்டே இருப்பார்களோ அவர்களுடைய புத்தியில் இந்த எல்லா யுக்திகளும் வரும்.

ஒரு சில குழந்தைகள் போகப்போக கோபித்துக் கொண்டு விடுகிறார்கள். இப்பொழுது தான் பார்த்தீர்கள் என்றால் அன்பு (ப்ரீத்) இருக்கும். சிறிது நேரத்தில் பார்த்தீர்கள் என்றால் அன்பு அறுபட்டு விடுகிறது. கோபித்துக் கொண்டு விடுகிறார்கள். ஏதாவதொரு விஷயத்தில் கோபித்துக் கொண்டு விட்டார்கள் என்றால் பின் ஒரு பொழுதும் நினைவு கூட செய்ய மாட்டார்கள். கடிதம் கூட எழுத மாட்டார்கள். அதாவது அன்பு இல்லை. பின்னர் பாபா கூட 6-8 மாதங்கள் கடிதம் எழுத மாட்டார். பாபா காலன்களுக்கெல்லாம் காலன் ஆவார் அல்லவா? கூடவே தர்மராஜரும் ஆவார். தந்தையை நினைவு செய்ய நேரமில்லை என்றால் நீங்கள் என்ன பதவியை அடைவீர்கள்? பதவி மோசமாக ஆகி விடும். ஆரம்பத்தில் பாபா மிகவும் யுக்தியுடன் பதவியை கூறிக் கொண்டிருந்தார். இப்பொழுது அவர்கள் இருக்கிறார்களா என்ன? இப்பொழுதோ மீண்டும் மாலை அமைய வேண்டி உள்ளது. ("சர்விசபிள்) சேவை செய்பவர்களை பாபாவும் மகிமை செய்து கொண்டே இருப்பார். யார் சுயம் சக்கரவர்த்தி ஆகிறார்களோ அவர்கள் நமது இனத்தவரும் அவ்வாறு ஆக வேண்டும் என்பார்கள். இவர்களும் நம்மைப் போல ஆட்சி புரியட்டும். இராஜா விற்கு அன்ன தாதா (உணவளிக்கும் வள்ளல்) தாய் தந்தை என்று கூறுகிறார்கள். இப்பொழுது தாயோ ஜகதம்பா ஆவார். அவர் மூலமாக உங்களுக்கு அளவற்ற சுகம் கிடைக்கிறது. நீங்கள் புருஷார்த்தம் (முயற்சி) மூலமாக உயர்ந்த பதவியை அடைய வேண்டும். யார் யார் என்ன ஆகப் போகிறார்கள் என்பது நாளுக்கு நாள் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரிந்து கொண்டே போகும். சேவை செய்தார்கள் என்றால் தந்தையும் அவர்களை நினைவு செய்வார். சேவையே செய்வ தில்லை என்றால் தந்தை ஏன் நினைவு செய்ய வேண்டும்? யார் (ப்ரீத் புத்தி) அன்பான புத்தி உடையவர்களோ அந்தக் குழந்தைகளை தந்தை நினைவு செய்வார். சேவையே செய்வ தில்லை என்றால் தந்தை ஏன் நினைவு செய்ய வேண்டும். யார் (ப்ரீத் புத்தி) அன்பான புத்தி உடையவர்களோ அந்த குழந்தைகளை தந்தை நினைவு செய்வார். யாராவது கொடுத்த பொருளை நீங்கள் அணிந்து கொண்டீர்கள் என்றால் அவசியம் அவர்களுடைய நினைவு வரும் என்பதையும் பாபா புரிய வைத்துள்ளார். பாபாவின் (களஞ்சியம்) பண்டாராவிலிருந்து பெற்றீர்கள் என்றால் சிவபாபா தான் நினைவிற்கு வருவார். பாபா சுயம் தனது அனுபவத்தைக் கூறுகிறார். அவசியம் நினைவிற்கு வருகிறது. எனவே யார் கொடுத்த பொருளையும் வைத்துக் கொள்ளக் கூடாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஒரு விதேஹி (தேகமற்ற) விசித்திர (சரீரமற்ற) தந்தையிடம் இதயத்தின் உண்மையான அன்பு கொள்ள வேண்டும். மாயையின் கிரகச்சாரம் ஒரு பொழுதும் புத்தியை தாக்கக் கூடாது என்ற கவனம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

2. ஒரு பொழுதும் தந்தையிடம் கோபித்துக் கொள்ளக் கூடாது. சர்விசபிள் (சேவை செய்பவர்) ஆகி தங்களது வருங்காலத்தை உயர்ந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும். எவரொருவர் கொடுத்த பொருளையும் தன்னிடம் வைக்கக் கூடாது.

வரதானம்:
தூய்மையின் விதி மூலம் கோட்டையை உறுதியாக்கக் கூடிய சதா வெற்றியாளராக மற்றும் தடையற்றவராக ஆகுக

இந்தக் கோட்டையில் ஒவ்வொரு ஆத்மாவும் சதா வெற்றியாளராக மற்றும் தடையற்றவராக ஆகவேண்டும். அதற்காக விசேஷமான சமயத்தில் நாலாபுறங்களிலும் ஒன்றுபோல் அனைவரும் சேர்ந்து யோகத்திற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள். பிறகு, யாரும் இந்தக் கம்பியைத் துண்டிக்க முடியாது. ஏனெனில், எந்தளவு சேவையை அதிகமாக்கிக் கொண்டே செல்வீர்களோ, அந்தளவு மாயா தன்னுடையவர் ஆக்குவதற்கான முயற்சி செய்யும். ஆகையினால், எவ்வாறு எந்தவொரு காரியத்தையும் துவக்கும் சமயத்தில் தூய்மையின் விதியை தனதாக்குகின்றீர்களோ, அதேபோல் குழு ரூபத்தில் சர்வ சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களுக்கு வெற்றியாளர் என்ற இந்த ஒரே ஒரு சுத்தமான எண்ணம் இருக்க வேண்டும். இதுவே தூய்மையின் விதி ஆகும். இதன் மூலம் கோட்டை உறுதியானதாக ஆகிவிடும்.

சுலோகன்:
யுக்தி யுக்தான மற்றும் யதார்த்தமான சேவையின் பிரத்யட்ச பலன் குஷி ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை : சத்தியம் மற்றும் பண்பு நிறைந்த கலாச்சாரத்தை தனதாக்குங்கள்

பிராமண வாழ்வில் முதல் நம்பர் கலாச்சாரம் சத்தியம் மற்றும் பண்பாடு ஆகும். எனவே, ஒவ்வொருவருடைய முகம் மற்றும் நடத்தையில் இந்த பிராமண கலாச்சாரம் வெளிப்பட வேண்டும். ஒவ்வொரு பிராமணரும் புன்சிரித்த முகத்துடன் ஒவ்வொருவருடைய தொடர்பில் வரவேண்டும். ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நீங்கள் தன்னுடைய கலாச்சாரத்தை ஒரு போதும் விடாதீர்கள், அப்பொழுது சகஜமாக பரமாத்மா பிரத்யட்சம் ஆகுவதற்கு நிமித்தமாக ஆகுவீர்கள்.