01-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை ஞானம்
நிறைந்தவராக இருக்கின்றார், அவரை அனைத்தையும் அறிந்தவர் எனக்
கூறுவது தலைகீழான (தவறான) மகிமையாகும், உங்களை தூய்மையில்லாத
நிலையி-ருந்து தூய்மையாக்கவே தந்தை வந்திருக்கிறார்.
கேள்வி:
தந்தையின் கூடவே மிகவும் அதிகமான
மகிமை யாருக்கு மற்றும் எவ்வாறு ஏற்படுகின்றது?
பதில்:
1. தந்தையின் கூடவே
பாரதத்திற்கும் மிகவும் மகிமை இருக்கின்றது, பாரதமே அழியாத
கண்டமாக, சொர்க்கமாக ஆகின்றது. பாரதவாசிகளை செல்வந்தராக,
சுகமாக மற்றும் தூய்மையாக தந்தை ஆக்கியிருந்தார். 2. கீதைக்கும்
அளவற்ற மகிமை இருக்கின்றது, அனைத்து சாஸ்திரங் களுக்கும்
முதன்மையானது கீதையாகும். 3. நீங்கள் சைத்தன்யமான ஞான கங்கைகள்,
உங்களுக் கும் மிகவும் மகிமை இருக்கின்றது. நீங்கள் நேரடியாக
ஞான கடலின் மூலம் உருவானவர்கள்.
ஓம் சாந்தி.
ஓம் சாந்தியின் அர்த்தத்தை புதிய மற்றும் பழைய குழந்தைகள்
புரிந்துள்ளனர். நாம் அனைவரும் பரமாத்மாவின் குழந்தைகள் என்பதை
நீங்கள் புரிந்துள்ளீர்கள். பரமாத்மா உயர்ந்த திலும் உயர்ந்த
மற்றும் அன்பிலும் அன்பான அனைவருக்கும் நாயகனாக இருக்கின்றார்.
குழந்தை களுக்கு ஞானம் மற்றும் பக்தியின் இரகசியத்தைப் புரிய
வைத்திருக்கின்றார். ஞானம் என்றால் பகல் - சத்யுகம்,
திரேதாயுகம், பக்தி என்றால் இரவு - துவாபரயுகம், கலியுகம். இது
பாரதத்திற்கான விசயமாகும். முதன்முதலில் நீங்கள் பாரதவாசிகள்
வருகின்றீர்கள். 84 பிறவி சக்கரமும் பாரதவாசிகளாகிய
உங்களுடையதாகும். பாரதம் தான் அழியாத கண்டமாகும். பாரத கண்டமே
சொர்க்க மாகின்றது, வேறு கண்டங்கள் எதுவும் சொர்க்கமாவதில்லை.
புதிய உலகம், சத்யுகம் பாரதத்தில் மட்டுமே உருவாகின்றது என
குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. பாரதம் மட்டுமே
சொர்க்கம் என அழைக்கப் படுகிறது. பாரதவாசிகள் மட்டுமே 84
பிறவிகள் எடுக்கின்றனர், நரகவாசியாக ஆகின்றனர், இவர்களே
மீண்டும் சொர்க்கவாசியாக ஆகின்றனர். இந்த நேரம் அனைவரும்
நரகவாசியாக இருந்தாலும் மற்ற அனைத்து கண்டங் களும் அழிந்தாலும்
பாரதம் மட்டும் அழியாது. பாரத கண்டத்தின் மகிமை அளவற்றதாகும்.
பாரதத்தில் தான் தந்தை வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக்
கற்பிக்கின்றார், இது தான் கீதையின் புருúˆôத்தம சங்கம யுக
மாகும். பாரதமே மீண்டும் புருúˆôத்தம நிலை அடைய வேண்டும்.
இப்பொழுது அந்த ஆதி சனாதன தேவி-தேவதா தர்மமும் இல்லை,
இராஜ்யமும், அந்த யுகமும் இல்லை. முழு உலகத்தின் அனைத்து
அதிகாரங்களும் நிறைந்தவர் என ஒரு பகவானை மட்டுமே கூறமுடியும்
இதை குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். பாரதவாசிகள் மிகவும் தவறாக
அவரை அந்தர்யாமி என கூறு கின்றனர், அதாவது அனைவருடைய உள்மனதை
அறிந்தவர் என கூறுகின்றனர். நான் யாருடைய உள் மனதையும் அறிந்து
கொள்வதில்லை என தந்தை கூறுகின்றார், தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குவதே என்னுடைய வேலை யாகும். சிவபாபா நீங்கள்
அந்தர்யாமி என நிறைய பேர் கூறுகின்றனர். நான் அவ்வாறு இல்லை,
நான் யாருடைய உள்ளத்தையும் தெரிந்து கொள்வ தில்லை என பாபா
கூறுகின்றார், நான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்காகவே
வந்திருக்கின்றேன், தூய்மையற்ற உலகில் தான் என்னை அழைத்தீர்கள்.
மேலும், நான் ஒருமுறை மட்டுமே வந்து பழைய உலகைப் புதியதாக
ஆக்குகின்றேன். இந்த உலகம் புதியதில் இருந்து பழையதாக, பழைய
நிலையிலிருந்து புதியதாக எப்போது ஆகின்றது? என மனிதர்களுக்குத்
தெரியாது. ஓவ்வொரு பொருளும் புதிய நிலையிலிருந்து பழைய நிலைக்கு,
அதாவது சதோ, ரஜோ, தமோ நிலைக்கு அவசியம் வந்து சேரும்,
மனிதர்களின் நிலையும் அவ்வாறு ஏற்படுகிறது. குழந்தைப் பருவம்
சதோபிர தானமாக, பிறகு வாலிப பருவம், பிறகு வயோதிக பருவம்
ஏற்படுகிறது. அதாவது ரஜோ, தமோ நிலைக்கு வருகின்றனர். வயோதிக
சரீரமான பிறகு அதை விட்டுவிட்டு மீண்டும் குழந்தையாக ஆகின்றனர்.
பாரதம் புதிய உலகமாக, மிகவும் உயர்வானதாக இருந்தது என
குழந்தைகள் புரிந்துள்ளனர். பாரதத்தின் மகிமை அளவற்றது. இந்தளவு
சுகமாக, செல்வந்தராக, தூய்மையானதாக வேறு எந்த கண்டமும் இல்லை.
பிறகு சதோபிரதானமாக்கு வதற்கு தந்தை வந்திருக்கிறார்.
சதோபிரதானமான உலகின் ஸ்தாபனை ஏற்படுகின்றது. திரி மூர்த்தி
பிரம்மா, விஷ்ணு, சங்கரை படைத்தது யார்? உயர்ந்ததிலும் உயர்ந்த
சிவபாபா. திரிமூர்த்தி பிரம்மா என கூறினாலும் அர்த்தத்தை
புரியாமல் இருக்கின்றனர். திரிமூர்த்தி சிவன் என்று தான் கூற
வேண்டும், திரிமூர்த்தி பிரம்மா அல்ல. தேவ - தேவ மஹாதேவன் எனப்
பாடப்படுகின்றது. சங்கரை மிக உயர்வாக வைத்துள்ளனர். ஆக
திரிமூர்த்தி சங்கர் என கூறவேண்டுமல்லவா! பிறகு திரிமூர்த்தி
பிரம்மா என ஏன் கூற வேண்டும்? சிவன் படைப்பவராக இருக்கின்றார்.
பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலம் பிராமணர்களைப் படைப்பதாகக்
கூறப்படுகின்றது. பக்தி மார்க்கத்தில் ஞானக்கடல் தந்தையை
அனைத்தும் அறிந்தவர் என கூறப்படுகின்றது. ஆக இந்த மகிமையில்
அர்த்தம் இல்லை. தந்தை மூலமாக நமக்கு ஆஸ்தி கிடைக்கின்றது, அவரே
பிராமணர்களாகிய நமக்கு கற்பிக்கின்றார், ஏனென்றால் அவர்
தந்தையாக, மிக மேலான ஆசிரியராகவும் இருந்து உலகின் வரலாறு -
பூகோளத்தின் சுழற்சி எவ்வாறு சுழல்கிறது என்பதையும் புரிய
வைக்கின்றார், அவரே ஞானம் நிறைந்தவராக இருக்கின்றார் என
குழந்தைகள் புரிந்துள்ளனர். மற்றபடி அவர் அனைத்தும் (அனைவர்
உள்ளத்தை) அறிந்தவர் அல்ல, இது தவறாகும். நான் வந்து தூய்மை
யற்றவர்களை தூய்மையாக்குகிறேன். 21 பிறவிகளுக்காக இராஜ்ய
பாக்கியத்தைத் தருகின்றேன். பக்தி மார்க்கத்தில் அல்பகால சுகம்
இருக்கிறது, இதனை சந்நியாசி, ஹடயோகிகள் புரிந்து கொள்ளவில்லை.
பிரம்மத்தை நினைவு செய்கின்றனர், பிரம்மத்தை பகவான் எனக் கூற
முடியாது. ஓரேயொரு நிராகாரமான சிவன் தான் பகவான், அவரே அனைத்து
ஆத்மாக்களின் தந்தையாக இருக்கின்றார். ஆத்மாக்களாகிய நமது
இருப்பிடம் பிரம்மாண்டம், இனிமையான வீடு ஆகும். அங்கிருந்து
நாம் ஆத்மாக்கள் இங்கு நடிப்பதற்காக வந்துள்ளோம். நான் ஒரு
சரீரத்தை விட்டு இன்னொரு சரீரத்தை எடுக்கிறேன் என ஆத்மா
கூறுகின்றது. 84 பிறவிகளும் பாரதவாசிகளுக்கு உரியதாகும். யார்
அதிக பக்தி செய்தார்களோ அவர்களே அதிகமாக ஞானத்தை எடுப்பார்கள்.
குடும்பச் சூழ்நிலையில் இருங்கள், ஆனால் ஸ்ரீமத்படி நடந்து
செல்லுங்கள் என தந்தை கூறுகின்றார். நீங்கள் அனைவரும்
ஆத்மாக்கள் நாயகனாகிய பரமாத்மாவிற்கு அன்பானவர்கள். பக்தி
மார்க்கத்திலிருந்து நீங்கள் நினைவு செய்து வந்தீர்கள். ஆத்மா
தந்தையை நினைவு செய் கின்றது. இது தான் துக்கமான உலகம். நாம்
ஆத்மாக்கள், சாந்திதாமத்தைச் சேர்ந்தவர்கள். பிறகு
சுகதாமத்திற்கு வந்து சேர்ந்தோம், 84 பிறவிகள் எடுத்தோம். நாமே
அதுவாக ஆகின்றோம் (தத்தத்வம்) என்பதன் பொருள்
புரியவைக்கப்பட்டுள்ளது. ஆத்மாவே பரமாத்மா, பரமாத்மாவே ஆத்மா
என கூறுகின்றனர். ஆனால் நாமே தேவதாவாக, சத்திரியராக, வைசியராக,
சூத்திரராக ஆகின்றோம் என தந்தை புரிய வைத்துள்ளார். இப்போது
நாம் தேவதை ஆவதற்கு பிராமணராக ஆகி உள்ளோம். இதுவே சரியான
அர்த்தமாகும். சத்யுகத்தில் ஒரேயொரு தேவி, தேவதா தர்மம்,
வேறுபாடு இல்லாத தர்மம் இருந்தது. பிற்காலத்தில் மற்ற மதங்கள்
வந்த பிறகு வேறுபாடு ஏற்பட்டு, துவாபர யுகத்திலிருந்து அசுர
இராவண இராஜ்யம் ஆரம்பமானது. சத்யுகத்தில் இராவண இராஜ்யம் இல்லை,
எனவே 5 விகாரங்கள் இருக்க முடியாது. அது முற்றிலும் நிர்விகாரி
உலகம். இராமர் - சீதையைக் கூட 14 கலைகள் சம்பூர்ணமானவர்கள் எனக்
கூறப்படுகிறது. இராமருக்கு ஏன் வில், அம்பு கொடுக்கப்பட்டு
இருக்கிறது என மனிதர்களுக்குத் தெரியாது. இம்சைக்கான விசயம்
இல்லை. நீங்கள் இறைவனின் மாணவர்கள். ஆக, இவர் தந்தையாகவும்
இருக்கின்றார், நீங்கள் மாணவர் எனில் ஆசிரியராகவும்
இருக்கின்றார். பிறகு குழந்தைகளுக்கு சத்கதி கொடுத்து,
சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதால் தந்தை, ஆசிரியர் மற்றும்
குருவாகவும் ஆகின்றார். அவருடைய குழந்தைகளாக ஆனதால் உங்களுக்கு
எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். மனிதர்களுக்கு எதுவும்
தெரியவில்லை, இராவண இராஜ்யம் அல்லவா!
ஒவ்வொரு ஆண்டும் இராவணனை எரிக்கின்றனர், ஆனால் இராவணன் யார்
என்று தெரிய வில்லை. இந்த இராவணன் தான் பாரதத்தின் மிகப்பெரிய
எதிரி என குழந்தைகள் புரிந்துள்ளார்கள். இந்த ஞானம் ஞானக்கடல்
தந்தையிடமிருந்து குழந்தைகள் உங்களுக்குக் கிடைக்கின்றது. இந்த
தந்தையே ஞானக்கடலாக, ஆனந்தக் கடலாக இருக்கின்றார். ஞானக் கடலின்
மூலமாக நீங்கள் மேகத்தை நிரப்பிக் கொண்டு மழையாகப்
பொழிகின்றீர்கள். நீங்கள் தான் ஞான கங்கைகள், உங்களுக்குத்தான்
மகிமை இருக்கின்றது. நான் உங்களை தூய்மை யானவராக்க வந்திருக்
கிறேன், இந்த ஒரு பிறவி தூய்மையாகுங்கள், என்னை நினைவு செய்வ
தால் நீங்கள் தமோபிர தானத்திலிருந்து சதோபிரதானமாவீர்கள் என
தந்தை கூறுகின்றார். நான் தான் பதீத-பாவனராக இருக்கிறேன்,
எவ்வளவு முடியுமோ நினைவு செய்வதை அதிகப்படுத்துங்கள். வாயால்
சிவபாபா என்று சொல்ல வேண்டியதில்லை. அன்பானவர்கள் தனது நாயகனை
ஒரு முறை பார்த்ததுமே நினைவு செய்கின்றனர், பிறகு புத்தியில்
அவருடைய நினைவுதான் இருக்கும். பக்தி மார்க்கத்தில் யார் எந்த
தேவதையை நினைவு செய்கின்றனரோ பூஜை செய்கின்றார்களோ, அவர்களுடைய
காட்சி ஏற்படும். அதுவும் அல்பகாலத்திற்குத்தான். பக்தி செய்து
கீழேதான் இறங்கி வந்தனர். இப்போது மரணம் எதிரிலேயே உள்ளது. ஐயோ
என்ற சூழ்நிலைக்குப் பிறகு வெற்றி முழக்கம் ஏற்படும்.
பாரதத்தில் தான் இரத்த ஆறு ஓடும். உள்நாட்டுப் போருக்கான
சூழலும் தென்படுகிறது. தமோபிரதானமாகி விடுகின்றனர். இப்போது
நீங்கள் சதோபிரதானமாகின்றீர்கள். கல்பத்திற்கு முன்பாக
தேவதைகளாக ஆனவர்களே மீண்டும் தந்தையிடம் வந்து பிராப்தி
அடைவார்கள். குறைவாக பக்தி செய்தவர்கள் ஞானத்தைக் குறைவாக
எடுப்பார்கள், பிறகு பிரஜைகளாக ஆவதிலும் வரிசைப்படி தான் பதவி
அடைவார்கள். நல்ல முயற்சியாளர்கள் ஸ்ரீமத்படி நடந்து நல்ல பதவி
அடைவார்கள், நடைமுறை பழக்கங்களும் நன்றாக இருக்க வேண்டும்,
பிறகு இதுவே 21 பிறவிகளுக்கு சேர்ந்து வரும். இப்போது
அனைவரிடத்திலும் அசுரகுணம் உள்ளது. அசுர உலகமாக, தூய்மை யற்ற
உலகமாக இருக்கிறதல்லவா! குழந்தைகள் உங்களுக்கு உலகின் வரலாறு -
பூகோளம் புரிய வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் நினைவு
செய்வதற்கான முயற்சி, உழைப்பு செய்தால் உண்மையான தங்கம்
ஆவீர்கள் என தந்தை கூறுகின்றார். சத்யுகம் பொன்னான உலகம், பிறகு
திரேதாயுகம் வெள்ளியுகமாகிவிட்டது. கலைகளும் குறைந்து விட்டது.
இப்போது, எந்த கலையும் இல்லாத நிலையில் தந்தை வந்திருக்கிறார்,
இது கூட நாடகத்தில் பதிவாகி யுள்ளது.
இந்த இராவண இராஜ்யத்தில் அனைவரும் ஏதும் அறியாதவர்களாக ஆகி
விட்டனர், எல்லையற்ற நாடகத்தில் நடிகராக இருந்தும் நாடகத்தின்
மூன்று காலத்தை அறியாமல் இருக்கின்றனர். நீங்கள் அனைவரும்
நடிகர்கள் தான் அல்லவா! நாம் இங்கு நடிப்பதற்காக வந்துள்ளோம்
என நீங்கள் புரிந்துள்ளீர்கள், ஆனால் அவர்கள் நடித்துக் கொண்டே
அறியாமல் உள்ளனர். ஆக நீங்கள் எவ்வளவு ஒன்றும் அறியாதவர்களாக
ஆகி விட்டீர்கள் என தந்தை கூறுவார் அல்லவா! இப்போது நான் உங்களை
புத்திசாலியாக வைரம் போன்று ஆக்கு கின்றேன், பிறகு இராவணன்
சோழிக்குச் சமமாக ஆக்கி விடுவார். நான் வந்து தான் அனை வரையும்
சேர்த்து அழைத்துச் செல்கிறேன், பிறகு தூய்மையற்ற உலகமும்
அழிந்து விடும். கொசுக் கூட்டம் போல் அனைவரையும் அழைத்துச்
செல்வேன். உங்களுடைய இலட்சியம், குறிக்கோள் எதிரிலேயே
இருக்கின்றது. அவ்வாறு நீங்கள் தூய்மையாவதன் மூலம் சொர்க்கவாசி
ஆவீர்கள். நீங்கள் பிரம்மாகுமார், குமாரிகள் இந்த முயற்சி
செய்கின்றீர்கள். மனிதர்களின் புத்தி தமோபிரதானமானதாக
இருப்பதால் புரிந்து கொள்ளவில்லை. இவ்வளவு பி.கே. இருக்கின்றனர்
எனில் அவசியம் பிரஜாபிதா பிரம்மாவும் இருக்க வேண்டும். பிராமணர்
குடுமியாக, பிராமணர்களிலிருந்து தேவதையாக... சித்திரங்களில்
பிராமணர்களையும், சிவனையும் மறைத்து விட்டனர். நீங்கள்
பிராமணர்கள் இப்போது பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகின்றீர்கள்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உயர்ந்த பதவிக்காக ஸ்ரீமத்படி நடந்து நல்ல நடைமுறை
பழக்கங்களை தாரணை செய்ய வேண்டும்.
2. சத்தியமான அன்பானவராகி ஒரு நாயகனை மட்டுமே நினைவு செய்ய
வேண்டும். எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவு நினைவுக்கான
பயிற்சியை அதிகப்படுத்த வேண்டும்.
வரதானம்:
கருவி என்ற தன்மையின் நினைவு மூலமாக மாயையின் வாயிலை மூடி விடக்
கூடிய டபுள் லைட் ஒளியாகவும் லேசாகவும் இருப்பீர்களாக.
யார் எப்பொழுதும் சுயம் தங்களை கருவி என்று நினைத்து
நடக்கிறார்களோ அவர்களுக்கு இயல்பாகவே டபுள்லைட் ஸ்திதியின்
அனுபவம் ஏற்படும்.செய்பவரும் செய்விப்பவருமானவர் செய்வித்து
கொண்டிருக்கிறார், நான் கருவியாக இருக்கிறேன் - இதே நினைவினால்
வெற்றி ஏற்படுகிறது. நான் என்ற தன்மை வந்து விட்டது என்றால்
மாயையின் கேட் திறந்து விட்டது. நிமித்தம் என்று புரிந்து
இருக்கிறீர்கள் என்றால் மாயையின் கேட் மூடி விடும். எனவே
நிமித்தம் என்று புரிந்து இருக்கும் போது மாயையை வென்றவராக ஆகி
விடுகிறீர்கள் மற்றும் டபுள்லைட் கூட ஆகி விடுகிறீர்கள்.கூட
கூடவே வெற்றியும் அவசியம் கிட்டுகிறது.இதே நினைவு நம்பர் ஒன்
ஆவதற்கான ஆதாரம் ஆகி விடுகிறது.
சுலோகன்:
திரிகாலதரிசி ஆகி ஒவ்வொரு செயலையும் செய்தீர்கள் என்றால்,
வெற்றி சுலபமாக கிடைத்து கொண்டே இருக்கும்.
மாதேஸ்வரிஜீயின் மகாவாக்கியம்
1) மனித ஆத்மா தனது முழு வருமானத்தின் ஆதாரத்தில் எதிர் கால
பிராப்தியை அனுபவிக்கின்றது.
நாம் முந்தைய பிறவியில் செய்த நல்ல வருமானத்தினால் தான் இப்போது
இந்த ஞானத்தை பலனாக அடைந்து கொண்டிருக்கிறோம் என்று பலர்
நினைக்கின்றனர். ஆனால் இவ்வாறு கிடையாது. முந்தைய பிறவியின்
நல்ல பலனை நாம் அறிவோம். கல்ப சக்கரம் சுற்றிக் கொண்டே
இருக்கிறது, சதோ, ரஜோ, தமோ என்று மாறிக் கொண்டே இருக்கிறது.
ஆனால் நாடகப்படி முயற்சியின் மூலம் பிராப்திக்கான இடைவெளி
வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் அங்கு சத்யுகத்தில் சிலர்
இராஜா-ராணியாக, சிலர் வேலைக்காரர்களாக, சிலர் பிரஜைக்கான
பதவியும் அடைகின்றனர். எனவே இது தான் முயற்சிக்கான வெற்றியாகும்,
அங்கு பிரிவினைகள், வெறுப்பு இருக்காது. அங்கு பிரஜைகளும்
சுகமாக இருப்பர். தாய் தந்தை தங்களது குழந்தைகளை கவனிப்பது
போன்று அங்கு இராஜா- ராணி பிரஜைகளை கவனிப்பார்கள். அங்கு ஏழை,
செல்வந்தர் அனைவரும் திருப்தியாக இருப்பர். இந்த ஒரு பிறவியின்
முயற்சியின் ஆதாரத்தில் 21 பிறவி களுக்கு சுகம் அனுபவிப்பீர்கள்,
இது அழிவற்ற வருமானமாகும், இந்த அழிவற்ற வருமானத்தின் மூலம்,
அழிவற்ற ஞானத்தின் மூலம் அழிவற்ற பதவி கிடைக்கிறது. இப்போது
நாம் சத்யுக உலகிற்கு சென்று கொண்டிருக்கிறோம். இந்த விளையாட்டு
நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. இங்கு எந்த மாயா
ஜால மந்திரத்திற்கான விசயம் கிடையாது.
2) குரு வழி, சாஸ்திரங்களின் வழியானது பரமாத்மாவின் வழி அல்ல
பரமாத்மா கூறுகின்றார் - குழந்தைகளே! குரு வழி, சாஸ்திரங்களின்
வழி எனது வழி முதலானவை கிடையாது. அவர்கள் எனது பெயரின் பேரில்
வழி கொடுக்கின்றனர், ஆனால் எனது வழியை நான் அறிவேன், என்னை
சந்திப்பதற்கான வழியை நான் வந்து கூறுகின்றேன், இதற்கு முன்பு
எனது விலாசத்தை யாரும் அறியவில்லை. கீதையில் பகவானின்
மகாவாக்கியம் என்று கூறப்பட்டிருக்கிறது, ஆனால் கீதையும் மனிதன்
உருவாக்கியது, பகவான் சுயம் ஞானக் கடலாக இருக்கின்றார், பகவான்
கூறிய மகாவாக்கியங்களின் நினைவார்த்தமாக கீதை உருவாக்கப்
பட்டிருக்கிறது. பரமாத்மா சமஸ்கிருதத்தில் மகா வாக்கியங்களை
கூறியிருக்கின்றார், அதை கற்றுக் கொள்ளாமல் பரமாத்மாவை
சந்திக்க இயலாது என்று வித்வான்கள், பண்டிதர்கள், ஆச்சாரியர்கள்
கூறுகின்றனர். இவர்கள் மேலும் தலைகீழான காரியங்களில் மாட்ட
வைக்கின்றனர். வேத சாஸ்திரங்கள் படித்து படி ஏறி விட்டால் பிறகு
அதே போன்று கீழே விழவும் வேண்டியிருக்கும், அதாவது அதை மறந்து
ஒரு பரமாத்மாவிடம் புத்தியின் மூலம் தொடர்பை இணைக்க
வேண்டியிருக்கும். ஏனெனில் பரமாத்மா தெளிவாகக் கூறுவது
என்னவெனில் இந்த வேத, சாஸ்திரங்கள் படிப்பதனால் என்னை அடைய
முடியாது. துருவன், பிரகலாதன், மீரா போன்றவர்கள் எந்த
சாஸ்திரங்களை படித்திருந்தனர்? இங்கு படித்த அனைத்தையும் மறக்க
வேண்டும். அர்ஜுனனும் படித்தவைகளை மறக்க வேண்டியிருந்தது.
பகவானின் தெளிவான மகாவாக்கியம் என்ன வெனில் சுவாசத்திற்கு
சுவாசம் என்னை நினைவு செய்யுங்கள். இதற்கு எதுவும் செய்ய
வேண்டிய அவசியமில்லை. இந்த ஞானம் இல்லாத வரை பக்தி நடைபெற்று
கொண்டே இருக்கும். ஆனால் ஞான தீபம் ஏற்றப்பட்டு விட்டால் இது
போன்றவைகள் சாஸ்திர சம்பிரதாயங்கள் நீங்கி விடுகிறது. ஏனெனில்
பக்தி செய்து செய்து ஒருவேளை சரீரம் விட்டு விட்டால் என்ன பதவி
கிடைக்கும்? பிராப்தி உருவாகவேயில்லை, கர்ம பந்தனத்தில் கணக்கு
வழக்கி-ருந்தும் முக்தி கிடைக்கவில்லை. பொய் பேசாமல் இருப்பது,
திருடாமல் இருப்பது, மற்றவர்களுக்கு துக்கம் கொடுக்காமல்
இருப்பது. இது தான் நல்ல காரியம் என்று மனிதர்கள்
நினைக்கின்றனர். ஆனால் இங்கு சதா காலத்திற்கும் கர்ம
பந்தனங்களி-ருந்து விடுபட வேண்டும். மேலும் பாவ காரியத்தின்
வேரி-ருந்து நீங்க வேண்டும். நாம் இப்போது நல்ல விதையை தெளித்து
நல்ல மரம் உருவாக வேண்டும் என்று நாம் இப்போது விரும்புகின்றோம்.
ஆனால் மனித வாழ்க்கையின் காரியத்தை அறிந்து உயர்ந்த காரியங்கள்
செய்ய வேண்டும். நல்லது ஓம்சாந்தி.
அவ்யக்த சமிக்ஞை: இணைந்த ரூபத்தின் நினைவின் மூலமாக எப்பொழுதும்
வெற்றியாளர் ஆகுங்கள்.
சிவசக்தி என்பதன் அர்த்தமே இணைந்த ரூபம். தந்தை மற்றும் நீங்கள்
-இரண்டையும் சேர்த்து சிவசக்தி என்று கூறுகிறோம்.எனவே யார்
இணைந்து இருக்கிறார்களோ அவர்களை யாருமே பிரிக்க முடியாது. நாம்
இணைந்து இருப்பதற்கான அதிகாரி ஆகிவிட்டோம் என்பதையே நினைவில்
கொள்ளுங்கள். முதலில் தேடிக் கொண்டிருந்தவர்களாக இருந்தோம்.
மேலும் இப்பொழுது கூடவே இருப்பவர்களாக இருக்கிறோம். இந்த போதை
எப்பொழுதும் இருக்கட்டும்.