01-06-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இந்த பழைய
உலகத்திலிருந்து தங்கள் முகத்தை திருப்பிக் கொள்ளுங்கள். ஜீவன்
முக்தியடைய நீங்கள் தெய்வீக பழக்கங்களைக் கடைபிடியுங்கள். இது
பாபாவின் ஸ்ரீமத் ஆகும்.
கேள்வி:
எந்த பழக்க வழக்கங்களை பாபாவைத்
தவிர வேறு யாரும் கற்றுத் தர முடியாது?
பதில்:
தூய்மையாக மாற வேண்டும், மேலும்
மாற்ற வேண்டும். இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய தெய்வீக
பழக்க வழக்கமாகும். நீங்கள் இல்லறத்தில் இருந்தாலும் தூய்மையாக
இருங்கள். இந்த பாடத்தை ஒரு பாபா தான் கற்றுக் கொடுக்கின்றார்.
வேறு யாரும் கொடுக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களுடையது
எல்லையற்ற சன்னியாசம் ஆகும். நீங்கள் இந்த பழைய உலகத்தையே
புத்தியினால் மறக்கிறீர்கள். தூய்மையைக் கடைப்பிடிப்பதால் மற்ற
அனைத்து பழக்கங்களும் தானாகவே வருகிறது என்பதை நீங்கள்
அறிகிறீர்கள்.
பாடல்:
இன்று இருளில் இருக்கிறோம்
மனிதர்கள் நாம் ......
ஓம் சாந்தி.
குழந்தைகள் பாடலின் ஒரு வரியை கேட்டீர்கள். ஒரு புறம் பக்தி
மார்க்கத்தைச் சார்ந்த உலகம் இருக்கின்றது. மற்றொரு புறம் ஞான
மார்க்கத்தைச் சார்ந்த குழந்தைகள் இருக்கிறீர்கள். அவர்கள்
பக்தியின் படியில் ஏறிக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகளாகிய
நீங்கள் ஞானத்தின் படியில் ஏறுகிறீர்கள். பக்தியின் படியில்
இறங்குகிறீர்கள். அரைக் கல்பமாக பக்தியின் படியில் ஏறவேண்டி
இருக்கிறது என்பதை குழந்தைகள் அறிகிறார்கள். பக்தி கூட முதலில்
தூய்மையானதாக இருக்கிறது. பிறகு அசுத்தமாகி விடுகிறது.
முற்றிலும் கண்மூடி தனமான மூட நம்பிக்கையில் வந்து
விடுகிறார்கள். எதையும் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் இருளில்
இருக்கிறோம், சத்குரு இல்லை என்றால் காரிருள் என பாடுகிறார்கள்.
இங்கே நிறைய குருக்கள் இருக்கிறார்கள். இப்பொழுது உண்மையான குரு
யார்? சாது சந்நியாசிகள், மகாத்மாக்கள், பக்தர்கள் போன்ற
அனைவரும் சாதனை செய்கிறார்கள். மேலும் நினைக்கிறார்கள்.
சாஸ்திரம், வேதம், உபநிடதம் போன்றவைகளைப் படிக்கிறார்கள்.
இருப்பினும் பகவான் வரும் போது தான் நமக்கு சத்கதி கிடைக்கும்
என்றும் கூறுகிறார்கள். சத்கதியளிக்கும் வள்ளலுக்குத் தான்
‘பதீத பாவனர்’ என்று கூறப்படுகிறது. குழந்தை களாகிய நீங்கள்
காரிருளில் இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் ஞான
வெளிச்சத்தில் வந்துள்ளீர்கள். பதீத பாவனர் பாபாவை
அறிந்துள்ளீர்கள். மேலும் அவரை நினைக்கிறீர்கள். எவ்வளவு எந்த
குழந்தை நினைக்கிறதோ ஞானத்தைக் கடைப்பிடிக் கிறதோ அவ்வளவு
அவர்களுடைய அறியாமை இருள் அழிகிறது. இப்போது வெளிச் சத்திற்கு
அழைத்துச் செல்லக்கூடியவர் ஒரே ஒரு தந்தையாவார். ஞான மையை
சத்குரு அளித்தார்... ஏதோ கண்மை கிடையாது. இது ஞானத்தின் விஷயம்
ஆகும். ஞானத்தின் கூடவே யோகமும் இருக்கிறது. பக்தியை
கற்பிக்கிறார்களோ, அவர்களுடன் நினைவில் தொடர்பும் அவசியம்
இருக்கிறது. இப்போது குழந்தைகளாகிய உங்களின் புத்தியின் இணைப்பு
நிராகார் பரம்பிதா பரமாத்மாவுடன் இணைந்திருக்கிறது. உங்களிலும்
கூட வரிசைக்கிரமத்தில் இருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களைத்
தவிர வேறு எந்த மனிதருக்கும் பரம்பிதா பரமாத்மா சர்வ சக்தி
வானுடன் தொடர்பு இல்லை. நீங்கள் பாபாவுடன் மற்றும் முக்தி ஜீவன்
முக்தி தாமத்துடன் தொடர்பு வைக்க வேண்டி உள்ளது. ஜீவன்
முக்தியடைய தெய்வீகப் பழக்க வழக்கங்கள் கூட மிகவும் நன்றாக
இருக்க வேண்டும். இச்சமயமோ அனைவரின் பழக்க வழக்கங்களும் அசுரர்
களைப் போன்று இருக்கிறது. பரம்பிதா பரமாத்மாவின் குணங்களைக்
கூட பாடுகிறார்கள் அல்லவா? மனித சிருஷ்டியின் விதை வடிவமாக
இருக்கிறார், சத்தியமானவராக இருக்கிறார், சைத்தன்யமாக
இருக்கிறார், ஆனந்தக் கடல், ஞானக்கடல் ஆவார். சதா காலத்திற்கும்
தூய்மையின் கடலாவார். அவருடைய இந்த பதவி அழிவற்றதாகும். வேறு
எந்த மனிதருக்கும் இந்த அழிவற்ற பதவி இருக்க முடியாது. இப்போது
நீங்கள் தூய்மையின் கடல், ஞானத்தின் கடல் ஆகிறீர்கள். ஆனால்
எல்லைக்குட்பட்டவராகிறீர்கள். ‘நான் எல்லைக்கு அப்பாற்பட்டவன்’,
என பாபா கூறு கின்றார். உங்களை எல்லைக்கு அப்பாற்பட்டவராக
மாற்ற முடியாது. இல்லையென்றால் இந்த சிருஷ்டியின் விளையாட்டு
எப்படி நடக்கும். 84 பிறவிகளை எப்படி அனுபவிப்பீர்கள். நீங்கள்
சதா காலத்திற்கும் மாற முடியாது. உங்களை
எல்லைக்குட்பட்டவர்களாக மாற்றுகிறேன். 21 பிறவி களுக்கு நீங்கள்
மாறுகிறீர்கள். 21 பிறவிகள் என்று கூட எழுதப்பட்டிருக்கிறது.
நீங்கள் சதா காலத் திற்கும் மாறுங்கள் என்று சட்டம் இல்லை. நான்
சதா காலத்திற்கும் தூய்மையானவனாக இருக்கிறேன். நான்
பரந்தாமத்தில் தான் இருக்கிறேன். என்னிடம் ஞானம், தூய்மை போன்ற
வைகளே இருக்கிறது. இச்சமயம் தந்தை வந்து குழந்தைகளை காரிருளில்
இருந்து விடுவித்து ஞானம் மற்றும் யோகத்தால் தூய்மையாக
மாற்றுகிறார் என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். ‘நான்
பரந்தாமத்தில் இருந்து வந்திருக்கிறேன். இப்போது என்னை
நினையுங்கள்’, என்று வேறு யாரும் கூற முடியாது. என்னுடைய இந்த
மகா வாக்கியங்களையும் வேறு யாரும் காப்பி செய்ய முடியாது.
குழந்தைகளாகிய உங்களை 21 பிறவி களுக்கு இராஜாக்களுக்கு
இராஜாவாக மாற்றவே நான் வருகிறேன். மாறவேண்டும் அல்லவா? யார்
போன கல்பத்தில் மாறினார்களோ அவர்களே மாறுவார்கள்..
எத்தனை குழந்தைகள் தூய்மையாக மாறுகிறார்கள். எவ்வளவு பேர்
‘அஜாமில்’ போன்று பாவிகளாக மாறுகிறார்கள் என்று நீங்கள்
அறிகிறீர்கள். எவ்வளவு அழுக்காக அசுத்தமாக மாறிப் போகிறார்கள்.
தந்தை வந்து அழுக்கான துணியை தூய்மையாக்க வேண்டியிருக்கிறது.
ஆத்மா தான் அழுக்காக மாறுகிறது. உங்களை மாயா எவ்வளவு அழுக்காக
மாற்றியிருக்கிறது. வெறும் ஒரு பிறவியின் விஷயம் இல்லை என
ஆத்மாவிற்குப் புரிய வைக்கிறார். இது பல பிறவிகளின் விஷயமாகும்.
ஆத்மாவை தூய்மைப் படுத்துவதற்காக லட்சியம் என்ற சோப்
அளிக்கிறேன். என்னை நினைவு செய்தால் உங்களுடைய அணைந்த
நிலையிலுள்ள ஆத்மா, எவ்வளவுக் கெவ்வளவு தந்தையாகிய என்னை
நினைக்கிறீர்களோ அவ்வளவு இந்த யோகத்தால் விழித் தெழும். உங்களை
நான் சொர்க்கத்திற்கு அனுப்பினேன், பிறகு மாயை அழுக்காக்கி
விட்டது என நினைவு படுத்துகிறார். இப்பொழுது நான் உங்களை
சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்ற வந்திருக் கிறேன். நான் இந்த
பிரம்மாவின் மூலம் பாடத்தை கற்றுக் கொடுக்கிறேன். ஆத்மாவுடன்
பேசு கிறேன். குழந்தைகளே! லௌகீக தந்தையை மறந்துவிடுங்கள். தேகம்
உட்பட தேகத்தின் அனைத்து உறவுகளையும் மறந்து உங்கள் தந்தையாகிய
என்னை நினைத்தால், உங்கள் ஆத்மா தூய்மையாகி விடும். பிறகு
உங்களுக்கு இந்த உடல் கூட எதிர்காலத்தில் புதியதாகக் கிடைக்கும்.
பிறகு தத்துவம் போன்றவைகள் கூட தூய்மையாக மாறி விடுகிறது.
இப்போது இந்த பழைய உலகத்தை மறந்து கொண்டே செல்லுங்கள். என்னை
நினைத்தால் நீங்கள் என்னிடம் வந்து பிறகு சொர்க்கத்திற்குச்
செல்வீர்கள். இது பழைய உலகமாகும். ஏதாவது புதிய பொருட்களை
உருவாக்கு கின்றார்கள் என்றால், அதற்குப் புதிய பெயர்களை
வைக்கிறார்கள். புது டெல்லி, பழைய டெல்லி என்று கூறுகிறார்கள்
அல்லவா? ஆனால் உலகமோ பழையதல்லவா! இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
இந்த பழைய உலகத்திலிருந்து முற்றிலும் புத்தியினை விலக்க
வேண்டும். ஆத்மாக் களாகிய நமது வீடு ‘ஸ்வீட் ஹோம் ’ அல்லது
‘நிர்வாணதாமம்’ ஆகும். அங்கே போக வேண்டும். தன்னை ஆத்மா என்று
நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். என்னை நினைத்தால் கடைசி
நினைவிற்கு ஏற்ப நிலையை அடையலாம் என பாபா கூறுகின்றார்.
மனிதர்கள் பலரை நினைக் கிறார்கள். சிலர் குருவை நினைக்கிறார்கள்,
சிலர் கிருஷ்ணரை நினைக்கிறார்கள். கிருஷ்ணர் எங்கு
சென்றுவிட்டார்? இதை யாரும் அறியவில்லை. அனைவரும் மறுபிறவி
எடுத்து வந்து தான் ஆகவேண்டும் என்பதை புரிந்து கொள்ளவில்லை.
இந்த பழக்க வழக்கம் சிருஷ்டியின் ஆரம்பத் திலிருந்து வந்து
கொண்டு இருக்கின்றது. சத்யுகத்தின் ஆதியில் தேவி தேவதைகள்
இருக்கிறார் கள். நிச்சயமாக மறுபிறவி என்பது அங்கிருந்து தான்
ஆரம்பமாகியிருக்கும். முதன் முதலில் ஸ்ரீகிருஷ்ணர் முதல்
பரிசுத்தமான மனிதர், அவருக்கு நிறைய மகிமைகள் இருக்கின்றது.
லட்சுமி நாராணனருக்கே இவ்வளவு கிடையாது. ஏனென்றால், குழந்தைகள்
பரிசுத்தமாக சதோபிரதானமாக இருக்கிறார்கள். அதனால் குழந்தைகளின்
மகிமை பாடப்படுகிறது. கிருஷ்ணருக்கு நிறைய மகிமை கள் இருக்கிறது.
ஆனால் கிருஷ்ணபுரி எங்கே இருக்கிறது என்பதை அறியவில்லை.
சத்யுகத்தை ‘வைகுண்டம்’ என்று கூட கூறுகிறார்கள். பிறகு
கிருஷ்ணரை ஏன் துவாபரயுகத்தில் காண்பித்தனர் என தெரியவில்லை.
அதே பொருள் வேறு பெயர், தேசத்தில், ரூபத்தில் வர முடியாது. அதே
பெயர் ரூபம் அடுத்த பிறவியில் இருக்க முடியாது. கிருஷ்ணர்
சத்யுகத்தில் இருந்தார். இந்த ஜகத் மாதா, ஜகத் பிதாவே லட்சுமி
நாராயணராக மாறுகிறார்கள் என நீங்கள் அறிகிறீர்கள்.
சத்யுகத்திற்கு ‘கிருஷ்ணபுரி’ என்று பெயர். இது கம்சபுரி ஆகும்.
இது அனைத்தும் அசுர பெயர்கள் ஆகும். அங்கே தெய்வீக இராஜ்யம்
இருந்தது. இங்கே அசுர சம்பிரதாயமாக இருக்கிறது. தந்தை
சங்கமத்தில் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். அந்த தந்தையே
படைக்கக் கூடியவர். ‘மனித சிருஷ்டியின் விதை ரூபம்’, என்று
அவருக்கு கூறப்படுகிறது. நிச்சயமாக புது மனிதர் உள்ள சிருஷ்டியை
அவர் படைப்பார். பாபா, நீங்கள் பதீத பாவனர்! என பாடுகின்றீர்கள்.
இந்த பதீத சிருஷ்டியை வந்து பாவனமாக்குங்கள் என்கிறீர்கள்.
தூய்மையான உலகை படைத்து தூய்மையற்ற படைப்பை அழித்து விடுங்கள்,
பிரம்மாவின் மூலம் தூய்மையான உலகை படைத்து சங்கர் மூலம் தூய்மை
இல்லாத படைப்பை அவசியம் அழித்து விடுகின்றார். இந்த விஷயங்களை
வேறு யாரும் அறியவில்லை. இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
பாபாவோடு தொடர்பு கொள்கிறீர்கள். பாபா அழுக்கான உடைகளை அடித்து
துவைப்பதை நீங்கள் பார்க் கிறீர்கள். சில கிழிந்து போகிறது.
சில சுக்கு நூறாகின்றது,. சிலரோ முற்றிலும் அழுக்காக அஜாமில்
போன்ற பாவிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முற்றிலும் தாரணை
ஆகாது. பாபா எவ்வளவு நல்ல விஷயங்களைப் புரிய வைக்கின்றார்.
இனிமையான செல்ல குழந்தைகளே ! மிகவும் அன்பான தந்தையான என்னை
நினையுங்கள்! மிகவும் அன்பான சுகதாமத்தை நினையுங்கள்! இதைக்
கூட இப்பொழுது தான் நீங்கள் அறிகிறீர்கள். உலகத்தில் யாருக்கும்
தெரியவில்லை. இதுவோ துக்கம் நிறைந்த உலகம் ஆகும். மனிதர்கள் ஐயோ!
ஐயோ! என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர்
அடித்துக் கொள்கிறார்கள். பகவானே! பாதுகாப்பு அளியுங்கள் என்று
கூறுகிறார்கள். இப்படி நிச்சயமாக இது வாயிலிருந்து வரும். பாபா
விடுவிக்கக் கூடியவர் ஆவார்.
குறிப்பாக குழந்தைகளாகிய நம்மை மற்றும் பொதுவாக அனைவரையும்
அழைத்துச் செல்வதற் காக தந்தை வந்திருக்கிறார் என நீங்கள்
அறிகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குள் கூட
வரிசைக்கிரமத்தில் தான் இந்த பெருமிதம் இருக்கிறது. இந்த
படிப்பு சாதாரணமானது அல்ல. யாரைப் படிக்க வைக்கிறார் என்று
பாருங்கள். அஜாமில் போன்று பாவம் செய்த ஆத்மாக்களைப் படிக்க
வைத்து, சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுகின்றார். அனைவரும்
கீழானவராக இருக் கிறார்கள். அவர்களை மிகதூய்மையான உலகத்திற்கு
அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இங்கே தெய்வீக குணங்களைக்
கடைபிடிக்க வேண்டும் என குழந்தைகளுக்கு அடிக்கடி புரிய
வைக்கப்படுகிறது. இங்கே உங்களுக்கு புத்தியில் குறிக்கோள்
இருக்கிறது. இந்த தூய்மையின் பழக்க வழக்கங்களை வேறு யாரும்
கற்றுத் தர முடியாது. சந்நியாசிகளோ வீடு வாசலைத் துறக்க
வைக்கிறார்கள். இங்கே நீங்கள் வீடு வாசலை விட வேண்டாம் என பாபா
கூறுகின்றார். நீங்கள் இந்த பழைய உலகத்தை விட வேண்டும். அது
எல்லைக்குட்பட்ட சன்னியாசம் ! இது எல்லைக்கப் பாற்பட்ட
சன்னியாசம்! அந்த சன்னியாசி களுக்கும் கூட எவ்வளவு மரியாதை
கிடைக்கின்றது. சாதுக்கள் அமைப்பு அரசாங்கத்திற்கு கூட ஆலோசனை
வழங்குகிறது. இன்னும் போகப்போக இந்த சன்னியாசி போன்றோர்கள் கூட
தாய்மார்களாகிய உங்களின் கால்களில் விழுவார்கள். தாய்மார்கள்
இல்லாமல் அவர்கள் முன்னேற (காப்பாற்றப்பட) முடியாது. ஏனென்றால்,
நீங்கள் ஞானத்தை கொடுக்கிறீர்கள். மற்றபடி கால்களில்
விழக்கூடிய விஷயம் கிடையாது. ஆம், யாராவது நமஸ்தே, ராம் ராம்
என கூறுகின்றார்கள் என்றால் பதில் அளிக்க வேண்டும். குழந்தைகளே!
நமஸ்காரம், என்று பாபா கூட கூறுகின்றார். நான் குழந்தைகளாகிய
உங்களை என்னை விட உயர்ந்தவர்களாக மாற்றுகிறேன். உங்களை
பிரம்மாண்டம் மற்றும் சிருஷ்டி இரண்டிற்கும் அதிபதியாக
மாற்றுகின்றேன். பிறகு நான் வானப்பிரஸ்த நிலைக்குச் செல்கிறேன்.
ஆனால் நீங்கள் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். இந்த பழைய உலகத்தில்
இருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டும். இராவணன் மற்றும்
சீதையின் பொம்மை கூட இருக்கிறதல்லவா? சீதையின் பக்கம் இராவணன்
வந்ததும் சீதை முகத்தைத் திருப்பி இராமரைப் பார்க்கும் படி
இருக்கிறது. நரகத்தை எட்டி உதைப்பது போன்றும், சொர்க்கத்தை
கையில் வைத்திருப்பதைப் போன்றும் கிருஷ்ணரின் படம் இருக்கிறது.
பாபா மிகவும் நன்றாகப் புரிய வைக்கின்றார். ஆனால் விரல் விட்டு
எண்ணிப்பார்க்கும் அளவிற்கு சில வியாபாரிகள் இந்த வியாபாரத்தை
செய்கிறார்கள். பாபாவிற்கு தன்னுடைய பழைய உடல், மனதை, செல்வத்தை
கொடுத்து விட்டு புதியதாக பெறுங்கள். இது மிகவும் முதல் தரமான
இன்சூரன்ஸ் ஆகும். நீங்கள் உங்கள் ஆத்மாவை தூய்மை யாக
மாற்றினால் உடலும் தூய்மையாகக் கிடைக்கும், என பாபா
கூறுகின்றார். நீங்கள் சொர்க்கத் திற்கே இராஜா ஆவீர்கள். ஆகவே
அவரை, வியாபாரி, மந்திரவாதி என கூறு கின்றார்கள்.
அழுக்கானவர்களை தூய்மையானவராக மாற்றுவது ஈஸ்வரிய மந்திரம்
அல்லவா ! நரகவாசி களை சொர்க்கவாசியாக்குங்கள் என பாபா
கூறுகின்றார். எப்படிப்பட்ட முதல் தரமான மந்திரம் ஆகும். இதில்
நிறைய பிராப்தி இருக்கின்றது. இராஜாக்களுக்கு இராஜா ஆகுங்கள்.
என்னைப் பின்பற்றுங்கள் என பாபா கூறுகின்றார். பாபா இருக்கிறார்
அல்லவா? இவர் அதர்குமார் (திருமண மானவர்), மம்மா குமாரி
கன்னியாவாக இருக்கின்றார். எனவே பின்பற்ற வேண்டும். ஆஸ்தி
தந்தையிடமிருந்து தான் கிடைக்கின்றது. நாம் அனைவரும் சகோதரன்
சகோதரிகள் தந்தையிட மிருந்து ஆஸ்தி அடைகிறோம் என நீங்கள்
கூறுகின்றீர்கள். லௌகீக முறைப்படி சகோதரிகளுக்கு ஆஸ்தி
கிடைப்பதில்லை. சகோதரருக்குத் தான் ஆஸ்தி கிடைக்கின்றது. இங்கே
உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள்
அனைவரும் ஆத்மாக்கள் அல்லவா? நீங்கள் அனைவரும் என்னிடம்
வரவேண்டும் என பாபா கூறுகின்றார். பிறகு இந்த சகோதரன் சகோதரி
என்ற உறவும் விட்டுப் போகும். அங்கே அப்பா மற்றும் குழந்தை
என்ற உறவு இருக் கின்றது. நிர்வாண தாமத்தில் நாம் அனைவரும்
சகோதரர்கள் என்று இதனால் தான் கூறுகின்றார் கள். ஒரு வேளை
ஈஸ்வர் சர்வ வியாபி என்றால், அனைவரும் தந்தை என்றாகிவிடும்.
இந்த ‘சர்வவியாபி’ என்ற ஞானம் எவ்வளவு நஷ்டத்தை
ஏற்படுத்திவிட்டது.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபாவின் நினைவு
இருக்கின்றது. பாபாவை நினைப்பதில் தான் உழைப்பு அதிகமாக
இருக்கிறது. உங்களை யாராவது அப்படியே நிஷ்டையில் அமர வைக்க
வேண்டும் என்பது கிடையாது. உங்களுக்கு லட்சியம்
கிடைத்திருக்கின்றது. இங்கேயோ நீங்கள் முரளியை மட்டும் கூறு
கிறீர்கள். உங்களுடைய யோகம் எப்பொழுதும் இருக்கின்றது. முரளியை
கேட்டீர்கள், பிறகு போகும்பொழுதும் வரும் பொழுதும் நினைவில்
இருக்க வேண்டும். நாம் யாத்திரையில் சென்று கொண்டு
இருக்கின்றோம். எவ்வளவு முடியுமோ நாம் நினைவில் இருக்க வேண்டும்.
8 மணி நேரம் வேலை செய்யுங்கள் அதற்கு அனுமதி இருக்கின்றது.
மீதமுள்ள நேரத்தைக் கொடுக்க வேண்டும். தூய்மையாக மாறுவதே
முக்கியமான விஷயம் ஆகும். இது முட்களின் காடு என உங்களுக்குத்
தெரியும். ஒருவருக்கொருவர் முள்போல குத்திக் கொண்டே
இருக்கின்றார்கள். ஸ்ரீமத்படி நடங்கள் என சிவபாபா கூறிக்கொண்டே
இருக்கின்றார். பிரம்மா பாபாவும் கூறுகிறார், ஆனால் சிவபாபா
நமக்கு கற்பிக்கிறார் என்பதை அறிவீர்கள், நாம் மாணவர்கள், அவர்
நம்முடைய தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சர் மற்றும்
சத்குருவாகவும் இருக்கிறார் என நீங்கள் கூறுகின்றீர்கள்.
உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வேன் என உங்களுக்கு உறுதி
அளிக்கின்றார். இவ்வாறு வேறு யாரும் உத்திரவாதம் அளிக்க
முடியாது. இறை தந்தை தான் சுகத்தை அளிக்கக்கூடிய தர்மத்தை
உருவாக்கு கின்றார் என்பதை இந்த தந்தை தான் கூறுகின்றார். அந்த
தந்தையை யாரும் அறியவில்லை. ஒரு வேளை பாபாவை தெரிந்திருந்தால்
பாபாவின் சொத்தையும் அறிந்திருப்பார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. குறிக்கோளை எப்பொழுதும் (எதிரில்) நினைவில் வைத்து தெய்வீக
குணங்களைக் கடைபிடிக்க வேண்டும். சதோபிரதானமான உலகத்திற்குச்
செல்வதற்காக தூய்மையின் பழக்க வழக்கத்தை தனதாக்கிக் கொள்ள
வேண்டும். புத்தியினால் எல்லையற்ற சன்னியாசம் செய்ய வேண்டும்.
2. மிகவும் அன்பான தந்தை மற்றும் தங்களுடைய சுக தாமத்தை நினைவு
செய்ய வேண்டும். இந்த துக்க உலகத்தி-ருந்து புத்தியின் தொடர்பை
துண்டிக்க வேண்டும்.
வரதானம்:
அனைவருடைய குணத்தைப் பார்த்து திருப்தி செய்வதற்கான ஆர்வத்தின்
மூலமாக எப்போதும் ஒரே சீரான உற்சாகத்தில் இருக்கும் குணமூர்த்தி
ஆகுக
சதா ஒரே சீரான ஊக்கம்-உற்சாகத்தில் இருப்பதற்கு தொடர்பில் வரும்
அனைவரையும் திருப்தி செய்வதற் கான மிகுந்த ஆர்வம் வேண்டும்.
பார்ப்பவரிடம் எல்லாம் எப்போதும் குணûயே பார்க்க வேண்டும்.
அனைவரிட மிருந்தும் குணமெனும் சக்தி கிடைப்பதால் உற்சாகம் சதா
நிலை பெறும். பிறருடைய விதவிதமான சொரூபங் களையும், விதவிதமான
விசயங்களையும் பார்க்கும் போதும் கேட்கும் போதும் உற்சாகம்
குறைகிறது. ஆனால் குணத்தைப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தால் ஒரே
சீரான உற்சாகம் இருக்கும். பிறரிடம் குணம் பார்ப்பதால் தானும்
குண மூர்த்தி ஆகிவிடலாம்.
சுலோகன்:
மாபெறும் வைராக்கிய உள்ளுணர்வெனும் அஸ்திவாரம்
உறுதியாக இருந்தால் ஒரு நொடியில் அசரீரி ஆவது சுலபமாகும்.
அவ்யக்த சமிக்ஞை: சதா முக மலர்ச்சியுடன் இருக்க தனது
இயல்பான குணத்தை சரளமாக்கிக் கொள்ளுங்கள்,
பொறுமையுள்ளவராகுங்கள்.
தனது இந்த முகத்தை எப்போதும் மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ள
வேண்டும். இதுவே சங்கம யுகத்தின் மிகப்பெரிய பரிசாகும்.
முகத்தில் ஒருபோதும் குழப்பத்தின் சாயல் கூடாது. முழு நிலவு
பௌர்ணமி போன்று தனது முகம் சதா மலர்ந்திருக்கட்டும். பிறர் தன்
முகத்தை உங்கள் முகத்தில் பார்க்கும் வகையில் உங்கள் முகம்
பளிச்சென்று தென்படவேண்டும். இதற்காக தனது இயல்பான குணத்தை
சரளமாக வையுங்கள், பொறுமைசாலி ஆகுங்கள்.