01-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! சாந்திதாமம் தூய்மையான ஆத்மாக்களின் வீடாகும், அந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமானால் சம்பூர்ண தூய்மையாக வேண்டும்.

கேள்வி:
பாபா அனைத்து குழந்தைகளுக்கும் என்ன உத்திரவாதம் தருகின்றார்?

பதில்:
இனிமையான குழந்தைகளே, நீங்கள் என்னை நினைவு செய்தால் தண்டனை அடையாமல் என்னுடைய வீட்டிற்கு செல்லலாம் என்ற உத்திரவாதம் தருகின்றேன். நீங்கள் ஒரு பாபாவிடம் மனதை செலுத்துங்கள், இந்த பழைய உலகத்தை பார்த்தாலும் பார்க்காதீர்கள், இந்த உலகத்தில் இருந்து கொண்டே தூய்மையாகி காட்டுங்கள், அப்போது பாபா உங்களுக்கு உலக இராஜ்யத்தை கண்டிப்பாகக் கொடுப்பார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளிடம் ஆன்மீகத் தந்தை கேட்டுக் கொண்டிருக்கிறார், குழந்தை களாகிய நம்மை நம்முடைய வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக பாபா வந்திருக்கின்றார் என்று குழந்தைகள் தெரிந்திருக் கிறீர்களா? இப்போது வீட்டிற்கு செல்ல மனம் விரும்புகிறதா? அது அனைத்து ஆத்மாக்களின் வீடு ஆகும். இங்கே அனைத்து ஜீவ ஆத்மாக்களின் வீடு ஒன்றாக இருப்பதில்லை. பாபா வந்திருக்கின்றார் என்பதை தெரிந்திருக்கிறீர்கள். பாபாவை நாம் அழைத்திருக்கிறோம். எங்களை வீட்டிற்கு அதாவது சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்லுங் கள். இப்போது பாபா சொல்லுகின்றார், உங்களுடைய மனதிடம் கேளுங்கள் - ஹே ஆத்மாக் களே, தூய்மையற்ற நீங்கள் எப்படி செல்ல முடியும்? கண்டிப்பாக தூய்மையாக வேண்டும். இப்போது வீடு செல்ல வேண்டும். மற்ற எந்த விஷயத்தையும் பாபா சொல்வதில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் இத்தனை காலம் முயற்சி செய்தீர்கள், எதற்காக? முக்திக்காக. வீடு செல்வதற்கான சிந்தனை இருக்கிறதா? என்று இப்போது பாபா கேட்கின்றார். குழந்தைகள் சொல்கின்றனர் - பாபா இதற்காகத் தான் நாங்கள் இவ்வளவு பக்தி செய்தோம். ஜீவ ஆத்மாக்கள் யாரெல்லாம் இருக்கின்றனரோ, அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் தூய்மையாகி வீடு செல்ல வேண்டும், பிறகு தூய்மையான ஆத்மாக்கள் தான் முதன் முதலில் வருகின்றார்கள். தூய்மையற்ற ஆத்மாக்கள் வீட்டில் இருக்க முடியாது. இப்போது இங்கே இருக்கும் கோடிக்கணக்கான ஆத்மாக்கள் அனைவரும் கண்டிப்பாக வீட்டிற்குச் செல்ல வேண்டும். அந்த வீட்டை சாந்திதாமம் அல்லது வானப் பிரஸ்தம் என்று சொல்லப்படுகிறது. ஆத்மாக்களாகிய நாம் தூய்மையாகி தூய்மையான சாந்திதாமம் செல்ல வேண்டும். அவ்வளவு தான். எவ்வளவு சகஜமான விஷயம்! அது ஆத்மாக்களுக்கான தூய்மையான சாந்திதாமம் ஆகும். அது (சத்யுகம்) ஜீவ ஆத்மாக்களுக்கான தூய்மையான சுகதாமம். இது ஜீவ ஆத்மாக் களின் தூய்மையற்ற துக்க தாமம் ஆகும். இதில் குழப்பமடைவதற்கான விஷயமே இல்லை. சாந்திதாமத்தில் அனைத்து தூய்மையான ஆத்மாக்களும் வசிக்கின்றனர். அது ஆத்மாக்களின் தூய்மையான உலகம். விகாரமற்ற நிராகார உலகம் ஆகும். இது அனைத்து ஜீவ ஆத்மாக்களின் பழைய உலகம் ஆகும். அனைவரும் தூய்மையற்று இருக்கிறார்கள். ஆத்மாக்களை தூய்மை யாக்கி தூய்மையான உலகமாகிய சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்ல இப்போது பாபா வந்திருக்கின்றார். யார் இராஜயோகம் கற்கின்றார்களோ அவர்கள் தான் பிறகு தூய்மையான சுகதாமத்தில் வருவார்கள். இதுவோ மிக சகஜமாகும், இதில் எந்த விஷயத்தைப் பற்றியும் அதிகமாக சிந்தனை செய்ய வேண்டியதில்லை. புத்தியால் புரிந்து கொண்டால் போதும். நம்மை தூய்மையான சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்ல ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தை வந்திருக்கின்றார். அங்கே செல்வதற்கான வழியை நாம் மறந்து விட்டோம், ஆகையால் இப்போது பாபா சொல்கின்றார். கல்ப கல்பத்திற்கும் நான் இப்படித் தான் வந்து சொல் கின்றேன்- ஹே குழந்தைகளே, சிவ பாபாவாகிய என்னை நினைவு செய்யுங்கள். அனைவருக்கும் சத்கதி கொடுக்கக்கூடிய வள்ளல் ஒரு சத்குரு ஆவார். அவர் தான் வந்து குழந்தைகளுக்கு செய்தி அதாவது ஸ்ரீமத் கொடுக்கின்றார் - குழந்தைகளே இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அரைக் கல்பம் நீங்கள் மிகவும் பக்தி செய்தீர்கள், துக்கம் அடைந்தீர் கள், செலவு செய்து, செய்து ஒன்றுமில்லாதவராகி வீட்டீர்கள். ஆத்மா கூட சதோபிரதானத்தில் இருந்து தமோபிரதானமாகி விட்டது. அவ்வளவு தான், இந்த சிறிது விஷயத்தை புரிந்து கொண்டால் போதும். இப்போது வீடு செல்ல வேண்டுமா? வேண்டாமா? ஆமாம் பாபா, கண்டிப்பாக செல்ல வேண்டும். அது நம்முடைய இனிமையான அமைதி இல்லம் (ஸ்வீட் ஹோம்) ஆகும். இப்போது நாம் தூய்மை இல்லாத காரணத்தினால் செல்ல முடியாது என்பதைக் கூட புரிந்திருக்கிறீர்கள். என்னை நினைவு செய்தால் உங்களுடைய பாவங்கள் அழிந்து விடும் என்று இப்போது பாபா சொல்கின்றார். கல்ப கல்பத்திற்கும் இதே செய்தியைக் கொடுக்கின்றேன். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், இந்த தேகம் அழிந்து போகக் கூடியதாகும். மற்றபடி ஆத்மாக்கள் திரும்பிச் செல்ல வேண்டும். அதை நிராகார உலகம் என்கிறோம். அனைத்து நிராகார ஆத்மாக்களும் அங்கே இருக்கிறார்கள். அது ஆத்மாக் களுடைய வீடாகும். நிராகார தந்தையும் அங்கே இருக்கின்றார். பாபா கடைசியில் வருகின்றார், ஏனெனில் அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு தூய்மையற்ற ஆத்மா கூட இருப்பதில்லை. இதில் குழப்பமடைவதற்கான அல்லது சிரமப் படுவதற்கான விஷயம் எதுவுமில்லை. ஹே! பதீதபாவனரே, வந்து எங்களை தூய்மையாக்கி கூடவே அழைத்துச் செல்லுங்கள் என்று பாடவும் செய்கிறார்கள். அனைவருடைய தந்தையல்லவா! பிறகு எப்போது நாம் புதிய உலகத்தில் நடிப்பை நடிக்க வருகிறோமோ அப்போது மிகவும் கொஞ்ச பேர் தான் இருக்கிறார்கள். மீதமுள்ள கோடிக் கணக்கான ஆத்மாக்களும் எங்கே சென்று இருப்பார்கள்? சத்யுகத்தில் மிகக் குறைவான ஜீவ ஆத்மாக்களே இருந்தார்கள், சிறிய மரமாக இருந்தது.. பிறகு விருத்தி (அதிகமானது) அடைந்தது என்பதைக் கூட தெரிந்திருக்கிறீர்கள். மரத்தில் பலத்தரப் பட்ட தர்மங்கள் இருக்கின்றன. இதைத்தான் கல்ப விருட்சம் என்று சொல்கின்றனர். எதுவும் புரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நிறைய பேர் கேட்கின்றார் கள் - பாபா நாங்கள் கல்பத்தின் ஆயுளை 5000 வருடங்கள் என்று எப்படி ஏற்று கொள்வது? பாபா உண்மையைத் தான் சொல்கின்றார். சக்கரத்தின் விஷயத்தைக் கூட சொல்லியிருக்கின்றார்.

இந்த கல்பத்தின் சங்கமயுகத்தில் தான் பாபா வந்து தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். அது இப்போது இல்லை. சத்யுகத்தில் பிறகு ஒரு தெய்வீக இராஜ்யம் இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு படைப்பு மற்றும் படைப்பவர் பற்றிய ஞானம் சொல்கின்றார். நான் கல்ப கல்பத்திற்கும் கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகின்றேன், புதிய உலகத்தை ஸ்தாபனை செய்கின்றேன் என்று பாபா சொல்கின்றார். பழைய உலகம் அழிந்து போக வேண்டும். நாடகத் திட்டபடி புதியது பழையதாகவும், பழையது புதியதாகவும் ஆகின்றது. இதனுடைய நான்கு பாகங்களும் (யுகங்களும்) முழுமையடைந்து விட்டது. இதை ஸ்வஸ்திகா என்றும் சொல் கின்றார்கள், ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. பக்தி மார்க்கத்தில் பொம்மை விளையாட்டு விளையாடி கொண்டிருக்கின்றனர். நிறைய சித்திரங்கள் இருக்கின்றன. தீபாவளிக்கு நிறைய கடைகள் திறக்கின்றார்கள். விதவிதமான சித்திரங்கள் வைக்கின்றார்கள். இப்போது நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள், ஒன்று சிவபாபா மற்றும் நாம் குழந்தைகள் ஆவோம். பிறகு இங்கே இலட்சுமி நாராயணனுடைய இராஜ்யம், பிறகு இராமர் சீதையின் இராஜ்யம், பிறகு பல பல தர்மங்கள் வருகின்றன. இந்த தர்மங்களுக்கும் குழந்தைகளாகிய உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் தத்தமது நேரப்படி வருகின்றார்கள், பிறகு அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்களும் வீடு செல்ல வேண்டும். இந்த முழு உலகமும் அழிந்து போக வேண்டும். இப்போது இங்கே ஏன் இருக்க வேண்டும்! இந்த உலகத்தை மனம் விரும்புவதில்லை. மனதை ஒரு நாயகன் மீது செலுத்த வேண்டும். என் ஒருவனோடு மனதை செலுத்தினால் நீங்கள் தூய்மையாகி விடுவீர்கள் என்று அவர் சொல்கின்றார். இப்போது நிறைய நேரம் முடிந்து விட்டது. கொஞ்ச நேரம் இருக்கிறது. நேரம் சென்று கொண்டிருக்கிறது. யோகத்தில் இருக்கவில்லை என்றால் பிறகு கடைசியில் அவர்கள் மிகவும் பட்சாதாபம் அடைவார்கள், தண்டனை அடைவார்கள், பதவியும் கீழானதாகி விடும். நம்முடைய வீட்டை விட்டு வந்து எவ்வளவு காலமாகி விட்டது என்பது கூட இப்போது நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். வீட்டிற்கு செல்வதற்காக தலையை உடைத்து கொள்கிறார்கள் அல்லவா! பாபா கூட வீட்டில் தான் இருப்பார். சத்யுகத்தில் பாபா இருப்பதில்லை. முக்திதாமம் செல்வதற்காக மனிதர்கள் எவ்வளவு முயற்சி செய்கிறார்கள். அதை பக்தி மார்க்கம் என்று சொல்லப்படுகிறது. இப்போது நாடகப்படி பக்தி மார்க்கம் முடிந்து போக வேண்டும். இப்போது உங்களை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக நான் வந்திருக்கின்றேன். கண்டிப்பாக அழைத்துச் செல்வேன். எந்தளவு யார் தூய்மையடைவார்களோ அந்தளவு உயர்ந்த பதவி அடைவார்கள். இதில் குழப்பமடைவதற்கான விஷயமே இல்லை. பாபா சொல்கின்றார்- குழந்தைகளே! நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் தண்டனை அடையாமல் வீட்டிற்குச் செல்வீர்கள் என்று நான் உத்திரவாதம் செய்கின்றேன். நினைவின் மூலமாக உங்களுடைய விகர்மங்கள் (பாவக் கர்மங்கள்) விநாசம் ஆகும். நினைவு செய்யவில்லை எனில் தண்டனைகள் அடைய வேண்டியிருக்கும், பதவியும் கீழானதாகி விடும். ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு பிறகும் நான் இதைத் தான் வந்து புரிய வைக்கின்றேன். உங்களை திரும்ப அழைத்துச் செல்ல நான் பலமுறை வந்திருக்கின்றேன். குழந்தைகளாகிய நீங்கள் தான் வெற்றி தோல்விக்கான நடிப்பை நடிக்கின்றீர்கள், பிறகு நான் அழைத்துச் செல்வதற்காக வருகின்றேன். இது தூய்மையற்ற உலகமாகும். ஆகையினால் பதீதபாவனரே வாருங்கள், நாங்கள் விகாரிகளாக தூய்மையற்றவர் களாக இருக்கின்றோம் வந்து எங்களை நிர்விகாரியாக தூய்மையாக ஆக்குங்கள் என்று பாடவும் செய்கிறார்கள். இது விகார உலகமாகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் சம்பூர்ண நிர்விகாரியாக வேண்டும். யார் பின்னால் வருகின்றார்களோ அவர்கள் தண்டனை அடைந்து செல்கின்றார்கள். ஆகையால் அவர்கள் இரண்டு கலைகள் குறைந்து விட்ட யுகத்தில் தான் வருகின்றார்கள். அவர்களை சம்பூர்ண தூய்மையானவர்கள் என்று சொல்ல முடியாது. ஆகையால் இப்போது முழுமையான முயற்சி செய்ய வேண்டும். பதவி குறைந்து விடும் அளவிற்கு ஆகிவிடக் கூடாது. இராவண இராஜ்யம் இல்லை என்றாலும் பதவி வரிசைக் கிரமமாகத் தான் இருக்கின்றதல்லவா! ஆத்மாவில் துரு படியும் போது சரீரம் கூட அப்படித் தான் கிடைக்கும். ஆத்மா தங்க யுகத்திலிருந்து வெள்ளி யுகமாக ஆகிவிடுகிறது. வெள்ளி யின் துரு ஆத்மாவில் படிகிறது, நாளுக்கு நாள் மிகவும் அசுத்தமாகிக் கொண்டே போகிறது. பாபா மிக நல்ல முறையில் புரிய வைக்கின்றார். யாருக்கு புரியவில்லை என்றால் கை தூக்குங்கள். யார் 84 பிறவிகளின் சக்கரம் சுற்றி முடித்துள்ளார்களோ அவர்களுக்குத் தான் பாபா புரிய வைக்கின்றார். இவருடைய (பிரம்மா) 84 பிறவிகளின் கடைசியில் நான் வந்து பிரவேசிக் கின்றேன் என்று பாபா சொல்கின்றார். இவர் தான் பிறகு முதல் நம்பரில் வருவார். யார் முதலில் இருந்தாரோ அவர் தான் கடைசியில் வருகின்றார். யார் பல பிறவிகளின் கடைசியில் தூய்மையை இழந்து விடுகிறாரோ, அவர் தான் முதல் நம்பரில் போக வேண்டும், பதீதபாவனனாகிய நான் அவருடைய உடலில் தான் வருகின்றேன், அவரை தூய்மையாக்கு கின்றேன். எவ்வளவு தெளிவாக புரிய வைக்கின்றேன்!

என்னை நினைவு செய்தால் உங்களுடைய பாவம் பஸ்பமாகி விடும் என்று பாபா சொல்கின்றார். கீதை ஞானத்தை நீங்கள் நிறைய கேட்டு இருக்கின்றீர்கள் மற்றும் சொல்லியிருக்கின்றீர்கள் ஆனால் அதன் மூலமாக நீங்கள் சத்கதியை அடையவில்லை. நிறைய சந்நியாசிகள் உங்களுக்கு இனிமையிலும் இனிமையான வார்த்தைகளால் சாஸ்திரங்கள் சொன்னார்கள், அவற்றைக் கேட்டு பெரிய பெரிய மனிதர்கள் சென்று சேர்கின்றனர் சிறிது நேரத்திற்கான சுகமாக இருக்கிறதல்லவா! பக்தி மார்க்கமே அல்ப கால சுகம் ஆகும். இங்கே ஆத்மா பாபாவை நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கம் இப்போது முழுமையடைகிறது. நான் குழந்தைகளாகிய உங்களுக்கு யாரும் அறிந்திராத ஞானம் சொல்ல வந்திருக்கின்றேன் என்று பாபா சொல்கின்றார். நான் தான் ஞானக் கடலாக இருக்கின்றேன். நாலேஜ் என்பதை ஞானம் என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு அனைத்தையும் படிப்பிக்கின்றார். 84 பிறவிகளின் சக்கரத்தையும் புரிய வைக்கின்றார், உங்களுக்குள் முழு ஞானமும் இருக்கின்றது. ஸ்தூல வதனத்தில் இருந்து சூட்சும வதனத்தைக் கடந்து மூல வதனத்திற்கு செல்கின்றீர்கள். முதன்

முதலில் இலட்சுமி நாராயணருடைய வம்சம் ஆகும். அங்கே விகார குழந்தைகள் இருக்க மாட்டார்கள், இராவண இராஜ்யம் இருப்பது இல்லை. யோக பலத்தின் மூலம் அனைத்தும் நடக்கிறது. இப்போது குழந்தையாகி கர்ப்ப மாளிகைக்குள் செல்ல வேண்டும் என்று உங்களுக்குள் சாட்சாத்காரம் ஏற்படுகிறது, மகிழ்ச்சியாக செல் கின்றனர். இங்கேயோ மனிதர்கள் எவ்வளவு அழுகின்றார்கள், கூச்சலிடுகின்றார்கள்! இங்கே கர்ப்ப சிறைக்குள் செல்கின்றார்கள் அல்லவா! அங்கே அழுவதற்கான விஷயமே இல்லை. கண்டிப்பாக சரீரம் மாறித்தான் ஆக வேண்டும். பாம்பின் உதாரணமும் இருக்கின்றது. இதில் குழப்பம் அடைவதற்கான விஷயமே இல்லை. நிறைய கேட்பதற்கு அவசியம் இல்லை. ஒரேயடியாக தூய்மையாவதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட வேண்டும். பாபாவை நினைவு செய்வது சிரமமா என்ன! பாபாவின் முன்பு அமர்ந்திருக்கிறீர்கள் அல்லவா! நான் உங்களுடைய தந்தை, உங்களுக்கு சுகத்தின் ஆஸ்தி கொடுக்கின்றேன். நீங்கள் இந்த கடைசி ஒரு பிறவியில் நினைவில் இருக்க முடியாதா என்ன? இங்கே நல்ல முறையில் புரிந்து கொள்கிறார்கள், பிறகு வீட்டிற்கு சென்று மனைவி, மற்றவரின் முகத்தைப் பார்த்ததும் மாயை தின்று விடுகிறது. யார் மீதும் பற்று வைக்காதீர்கள், அவையனைத்தும் அழியத்தான் போகிறது என்று பாபா சொல்கின்றார். ஒரு பாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும். நடக்கும் போதும், சுற்றும் போதும் பாபா மற்றும் தன்னுடைய இராஜ்யத்தை நினைவு செய்யுங்கள், தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். சத்யுகத்தில் இதுபோன்ற அழுக்கான பொருட்கள், மாமிசம் போன்றவை இருக்காது. விகாரங்களை விட்டு விடுங்கள் என்று பாபா சொல்கின்றார். நான் உங்களுக்கு உலகத்தின் இராஜ்யத்தைக் கொடுக்கின்றேன், எவ்வளவு வருமானம் ஏற்படுகின்றது! ஆக ஏன் தூய்மையாக இருக்கக்கூடாது! வெறும் ஒரு பிறவிக்கு தூய்மையாவதன் மூலம் எவ்வளவு பெரிய வருமானம் கிடைக்கின்றது! சேர்ந்திருந்தாலும் (கணவன்-மனைவி) ஞானத்தின் வாள் இடையில் இருக்கட்டும். தூய்மையாக இருந்து காட்டினால் அனைவரையும் விட உயர்ந்த பதவியை அடைவீர்கள். ஏனெனில் பால பிரம்மச்சாரியாக இருக்கின்றீர்கள். பிறகு ஞானமும் வேண்டும். மற்றவர்களை தனக்கு சமமாக மாற்ற வேண்டும். எப்படி சேர்ந்திருந்தாலும் நாங்கள் தூய்மையாக இருக்கின்றோம் என்று சந்நியாசிகளுக்குக் காட்ட வேண்டும். ஆக இவர்களுக்குள் நிறைய சக்தி இருக்கின்றது என்று புரிந்து கொள்வார்கள். இந்த ஒரு பிறவி தூய்மையாக இருப்பதன் மூலம் 21 பிறவிகளுக்கு நீங்கள் உலகத்தின் எஜமானர் ஆகி விடுவீர்கள் என்று பாபா சொல்கின்றார். இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் போது ஏன் தூய்மையாக இருந்து காட்டக்கூடாது! நேரம் கூட கொஞ்சம் தான் இருக் கின்றது. சப்தம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும், செய்திதாள்களில் வரும். ஒத்திகைக்கூட பார்த்தீர்கள் அல்லவா! ஒரு அணுகுண்டு போடுவதன் மூலம் நிலமை என்ன ஆகிவிடுகிறது! இப்போது வரை மருத்துவ மனைகளில் இருக்கின்றார்கள். எந்த சிரமமும் இல்லாமல் உடனடியாக முடிந்து விடும் அளவு அப்படிப்பட்ட குண்டுகளை தயார் செய்கின்றார்கள். இது ஒத்திகை பார்க்கப்பட்டு பிறகு முடிவு செய்யப்படும். உடனடியாக இறந்து போகிறார்களா, இல்லையா? என்று பார்ப்பார்கள், பிறகு வேறு ஏதாவது யுக்தி செய்வார்கள். அப்போது மருத்துவ மனைகள் போன்றவைகள் இருக்காது. யார் அமர்ந்து சேவை செய்வார்கள்! உணவு ஊட்டுவதற்கு பிராமணர்கள் போன்றோர்கள் இருக்க மாட்டார்கள். குண்டுகள் போட்டதும் முடிந்து போய் விடும். நில நடுக்கத்தில் அனைவரும் இறந்து போய் விடுவார்கள். இதற்கு நேரம் எடுக்காது. இங்கே நிறைய மனிதர்கள் இருக்கின்றார்கள். சத்யுகத்தில் மிகவும் கொஞ்ச பேர் இருப்பார்கள். ஆக இவ்வளவு பேரும் எப்படி அழிந்து போவார்கள்! போகப்போக பார்ப்பீர்கள், அங்கேயோ ஆரம்பத்தில் 9 இலட்சம் பேர் இருக்கின்றார்கள்.

நீங்கள் ஏழைகள், எனவே தான் (சாஹேப்) தலைவன் சிவபாபா உங்களை நேசிக்கின்றார். உங்களுக்கும் அவரிடம் அன்பு உள்ளது. இப்போது அனைத்தையும் விட்டுவிட்டு தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டீர்கள். இப்படிப்பட்ட ஏழைகளுக்கு பாபா மீது அன்பு இருக்கிறது. சத்யுகத்தில் மிகச் சிறிய மரமாக இருக்கும். நிறைய விஷயங்களை பாபா புரிய வைக்கின்றார். யாரெல்லாம் நடிகர்களாக இருக்கின்றார்களோ அனைத்து ஆத்மாக்களும் அழியாதவர்கள் ஆவர், தத்தமது நடிப்பை நடிக்க வருகிறார்கள். கல்ப கல்பத்திற்கும் நீங்கள் தான் வந்து பாபாவிடம் மாணவர்களாகி படிக்கின்றீர்கள். பாபா நம்மை தூய்மையாக்கி கூடவே அழைத்துச் செல்வார் என்று தெரிந்திருக்கின்றீர்கள். பாபா கூட நாடகத்தில் கட்டுண்டு இருக்கின்றார், அனைவரையும் கண்டிப்பாக அழைத்துச் செல்வார். ஆகையால் பெயர் கூட பாண்டவ சேனையாகும். பாண்டவர்களாகிய நீங்கள் என்ன செய்து கொண்டிருக் கின்றீர்கள்? நீங்கள் பாபாவிடம் இருந்து கல்பத்திற்கு முன்பு அடைந்ததைப் போல வரிசைக்கிரமமான முயற்சியின் படி இராஜ்ய பாக்கியத்தை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) பாபாவிற்கு அன்பானவர் ஆவதற்காக முழுமையான ஏழையாக வேண்டும். தேகத்தையும் மறந்து தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்வது தான் ஏழையாவதாகும். பாபாவிடம் இருந்து பெரியதிலும் பெரிய பரிசை அடைவதற்காக சம்பூர்ண தூய்மை ஆகிக் காட்ட வேண்டும்.

(2) வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும், ஆகையால் பழைய உலகத்தின் மீது மனதை செலுத்தக் கூடாது. ஒரு நாயகன் மீது தான் மனதை செலுத்த வேண்டும். பாபா மற்றும் இராஜ்யத்தை நினைவு செய்ய வேண்டும்.

வரதானம்:
பிராமண வாழ்க்கையில் எப்பொழுதும் சியர்ஃபுல் மற்றும் கேர்ஃபுல் மூட் - மகிழ்ச்சியான மற்றும் கவனமான மனநிலையில் இருக்கும் கம்பைண்டு - இணைந்த ரூபம் உடையவர் ஆவீர்களாக.

எந்தவொரு நிலைமையிலும், மகிழ்ச்சியின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது என்றால், அதை சதாகால மகிழ்ச்சி என்று கூற மாட்டார்கள். பிராமண வாழ்க்கையில் எப்பொழுதும் சியர்ஃபுல் மற்றும் கேர்ஃபுல் - மகிழ்ச்சி நிறைந்த மற்றும் கவனமான மனநிலை இருக்க வேண்டும். மூட் - மனநிலை மாறக் கூடாது. மூட் - மனநிலை மாறும் பொழுது, எனக்கு தனிமை வேண்டும் என்பார்கள். இன்றைக்கு எனது மூட் இப்படி இருக்கிறது. நீங்கள் தனியாக ஆகி விடும் பொழுது தான் மூட் மாறுகிறது. எப்பொழுதும் கம்பைண்டு - இணைந்த ரூபத்தில் இருந்தீர்கள் என்றால், மூட் (மனநிலை) மாறாது.

சுலோகன்:
எந்தவொரு உற்சவத்தை (விழாவை) கொண்டாடுவது என்றால்,
நினைவு மற்றும் சேவையின் உற்சாகத்தில் இருப்பது.