01-08-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் தூய்மை
ஆகாமல் திரும்ப செல்ல முடியாது எனவே பாபாவின் நினைவின் மூலம்
ஆத்மாவின் பேட்டரியை சார்ஜ் செய்யுங்கள் மற்றும் இயற்கையாக
தூய்மையாகுங்கள்
கேள்வி:
பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு
வீட்டிற்கு செல்வதற்காக முதலில் எந்த வொரு விஷயத்தை கற்றுக்
கொடுக்கின்றார்?
பதில்:
குழந்தைகளே, வீட்டிற்குச்
செல்வதற்கு முன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே இறக்க வேண்டும்
ஆகையினால் பாபா உங்களுக்கு முதலிலேயே தேகத்தின் உணர்விலிருந்து
விலகி செல்வதற்கான பயிற்சியை செய்விக்கின்றார் அதாவது வாழ்ந்து
கொண்டே இறப்பதற்கு கற்றுக் கொடுக்கின்றார். மேலே செல்வது
என்றால் இறப்பதாகும். செல்வது மற்றும் வருவதற் கான ஞானம்
இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆத்மாக்களாகிய நாம்
மேலிருந்து கீழே, இந்த சரீரத்தின் மூலம் நடிப்பை நடிப்பதற்கு
வந்துள்ளோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உண்மையில் நாம்
அங்கே இருக்கக் கூடியவர்களாவோம், இப்போது அங்கே தான் திரும்பிச்
செல்ல வேண்டும்.
ஓம் சாந்தி.
தங்களை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்வதில் எந்த
கஷ்டமும் இல்லை, கொட்டாவி விடக்கூடாது. இதை சகஜ நினைவு என்று
சொல்லப்படுகிறது. முதல்-முதலில் தங்களை ஆத்மா தான் என்று
புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மா தான் சரீரத்தை எடுத்து நடிப்பை
நடிக்கிறது. சம்ஸ்காரம் அனைத்தும் ஆத்மாவில் தான் இருக்கிறது.
ஆத்மா சுதந்திரமானதாகும். தங்களை ஆத்மா என்று புரிந்து
தந்தையாகிய என்னை நினைவு செய்யுங் கள் என்று பாபா கூறுகின்றார்.
இந்த ஞானம் இப்போது தான் உங்களுக்கு கிடைக்கிறது, பிறகு
கிடைக்காது. நீங்கள் இந்த அமைதியில் அமருவதை உலகம்
தெரிந்திருக்கவில்லை, இதனை இயற்கையான அமைதி என்று
சொல்லப்படுகிறது. ஆத்மாக்களாகிய நாம் மேலிருந்து இந்த
சரீரத்தின் மூலம் நடிப்பை நடிப்பதற்காக வந்திருக்கிறோம்.
ஆத்மாக்களாகிய நாம் உண்மை யில் அங்கே இருக்கக் கூடியவர்களாவோம்.
இந்த ஞானம் புத்தியில் இருக்கிறது. மற்றபடி இதில் ஹடயோகத்தின்
விஷயம் எதுவும் இல்லை, முற்றிலும் சகஜமாகும். இப்போது
ஆத்மாக்களாகிய நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும் ஆனால்
தூய்மையாக ஆகாமல் செல்ல முடியாது. தூய்மை ஆவதற்கு பரமாத்மா
தந்தையை நினைவு செய்ய வேண்டும். நினைவு செய்து-செய்து பாவம்
அழிந்து விடும். கஷ்டமான விஷயம் எதுவும் இல்லை. நீங்கள் நடந்து
செல்கின்றீர்கள் என்றால் கூட பாபாவின் நினைவில் இருங்கள்.
அப்போது தான் நினைவின் மூலம் தூய்மையாக முடியும். அங்கே அது
தூய்மையான உலகமாகும். அங்கே அந்த தூய்மை யான உலகத்தில் இந்த
ஞானத்தின் அவசியம் எதுவும் இருப்பதில்லை. ஏனென்றால் அங்கே எந்த
விகர்மமும் நடப்பதில்லை. இங்கே நினைவின் மூலம் விகர்மத்தை
அழிக்க வேண்டும். இங்கே நடப்பதைபோல் அங்கே நீங்கள் இயல்பாக
நடக்கின்றீர்கள். பிறகு கொஞ்சம்-கொஞ்ச மாக கீழே இறங்குகிறீர்கள்.
அங்கேயும் நீங்கள் இந்த பயிற்சியை செய்ய வேண்டும் என்பது
கிடையாது. பயிற்சியை இப்போது தான் செய்ய வேண்டும். பேட்டரியை
இப்போது சார்ஜ் செய்ய வேண்டும், பிறகு மெது-மெதுவாக பேட்டரி
டிஸ்-சார்ஜ் (குறைவு) ஆகத்தான் வேண்டும். பேட்டரி சார்ஜ்
ஆவதற்கான ஞானம் இப்போது ஒரு முறை தான் உங்களுக்குக் கிடைக்கிறது.
சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானமாக ஆவதற்கு உங்கள் எவ்வளவு
காலம் பிடிக்கிறது! ஆரம்பத்திலிருந்து ஏதாவது கொஞ்சம் பேட்டரி
குறைந்து கொண்டே செல்கிறது. மூலவதனத் தில் ஆத்மாக்கள் தான்
இருக்கின்றன. சரீரம் இல்லை. எனவே இயல்பாக இறங்குவதற்கான அதாவது
பேட்டரி குறைவதற்கான விஷயமே இல்லை. மோட்டார் ஓடினால் தான்
பேட்டரி குறைந்து கொண்டே செல்லும். மோட்டார் (கார்) நின்று
கொண்டிருந்தால் பேட்டரி இயங்குமா? மோட்டார் ஓடினால் தான்
பேட்டரி இயங்கும். மோட்டாரில் பேட்டரி சார்ஜ் ஆகிக் கொண்டே
இருக்கிறது ஆனால் உங்களுடைய பேட்டரி ஒரு முறை தான் சார்ஜ்
ஆகிறது. பிறகு நீங்கள் இங்கே சரீரத்தின் மூலம் கர்மம்
செய்யும்போது கொஞ்சம் பேட்டரி குறைந்து கொண்டே செல்கிறது.
முதலில் அவர் பரமதந்தை என்பதைப் புரிய வைக்க வேண்டும், அவரை
அனைத்து ஆத்மாக்களும் நினைவு செய்கின்றன. ஹே பகவான் என்று
சொல்கிறார்கள், அவர் தந்தை, நாம் குழந்தைகளாவோம். பேட்டரியை
எப்படி சார்ஜ் செய்வது என்று இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு
புரிய வைக்கப்படுகிறது எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்,
சுற்றுங்கள், பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் சதோபிரதானமாக
ஆகி விடுவீர்கள். எந்த விஷயத்தை யாவது புரிந்து கொள்ள
வில்லையென்றால் கேளுங்கள். முற்றிலும் சகஜமானதாகும். 5 ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பிறகு நம்முடைய பேட்டரி டிஸ்-சார்ஜ் ஆகி
விடுகிறது. பாபா வந்து அனைவருடைய பேட்டரியையும் சார்ஜ் செய்து
விடுகிறார். வினாச காலத்தில் அனைவரும் ஈஸ்வரனை நினைவு
செய்கிறார்கள். வெள்ளம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்,
அப்போது யார் பக்தர்களாக இருப்பார்களோ, அவர்கள் பகவானைத் தான்
நினைவு செய்வார்கள் ஆனால் அந்த சமயத்தில் பகவானுடைய நினைவு வர
முடியாது. நண்பர்கள்-உறவினர்கள், செல்வம்-சொத்துகள் தான்
நினைவுக்கு வந்து விடுகிறது. ஹே பகவான்! என்று என்னவோ
சொல்கிறார்கள் ஆனால் அதுவும் வெறும் சொல்லில் மட்டுமே ஆகும்.
பகவான் தந்தை, நாம் அவருடைய குழந்தைகளாவோம். இதை
தெரிந்திருக்கவே இல்லை. அவர்களுக்கு சர்வவியாபி என்ற தலைகீழான
ஞானம் கிடைக்கிறது. பாபா வந்து சரியான ஞானத்தைக் கொடுக்கின்றார்.
பக்தியின் துறை தனிப்பட்டதாகும். பக்தியில் ஏமாற்றம் அடைய
வேண்டியிருக்கிறது. பிரம்மாவின் இரவு என்றால் பிராமணர்களின்
இரவாகும். பிரம்மாவின் பகல் என்றால் பிராமணர் களுக்கும் பகல்.
சூத்திரர்களின் பகல், சூத்திரர்களின் இரவு என்று சொல்ல மாட்டார்
கள். இந்த இரகசியத்தை பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார். இது
எல்லையற்ற இரவு அல்லது பகலாகும். இப்போது நீங்கள் பகலுக்கு
செல்கிறீர்கள், இரவு முடிகிறது. இந்த வாக்கியம் சாஸ்திரங்களில்
இருக்கிறது. பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என்று
சொல்கிறார்கள் ஆனால் தெரிந்திருக்க வில்லை. உங்களுடைய புத்தி
இப்போது எல்லையற்றதில் சென்று விட்டது. சொல்லப்போனால்
தேவதைகளுக்கும் சொல்லலாம் - விஷ்ணுவின் பகல், விஷ்ணு வின் இரவு
என்று, ஏனென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சம்மந்தமும்
புரிய வைக்கப் படுகிறது. திருமூர்த்தியின் தொழில் என்ன? - இதை
வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் பகவானையே ஆமை -
மீனில் அல்லது பிறப்பு-இறப்பு சக்கரத்தில் கொண்டு போய்
விட்டார்கள். இராதா-கிருஷ்ணன் போன்றவர்களும் கூட மனிதர்களே,
ஆனால் தெய்வீக குணமுடையவர்களாவர். இப்போது நீங்கள் அப்படி ஆக
வேண்டும். அடுத்த பிறவியில் தேவதைகளாக ஆகி விடுவீர்கள். 84
பிறவிகளின் கணக்கு-வழக்கு என்ன இருந்ததோ அது இப்போது முடிகிறது.
பிறகு திரும்பவும் நடக்கும். இப்போது உங்களுக்கு இந்தப்
படிப்பினை கிடைத்துக் கொண்டிருக்கிறது.
பாபா கூறுகின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தங்களை
ஆத்மா என்று நிச்சயம் செய்து கொள்ளுங்கள். நாம் நடிகர்கள்
என்றும் சொல்கிறார்கள். ஆனால் ஆத்மாக் களாகிய நாம் எப்படி
மேலிருந்து வருகின்றோம் என்பதை புரிந்து கொள்ள வில்லை. தங்களை
தேகதாரிகள் என்றே புரிந்து கொள்கிறார்கள். ஆத்மாக்களாகிய நாம்
மேலிருந்து வருகிறோம் பிறகு எப்போது செல்வோம்? மேலே செல்வது
என்றால் இறப்பது, சரீரத்தை விடுவதாகும். யார் இறக்க
விரும்புகிறார்கள்? நீங்கள் இந்த சரீரத்தை மறந்து கொண்டே
செல்லுங்கள் என்று இங்கே பாபா கூறியுள்ளார். வாழ்ந்து
கொண்டிருக்கும்போதே இறப்பதற்கு கற்றுக் கொடுக் கின்றார், இதை
வேறு யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. நீங்கள் வந்திருப்பதே
தங்களுடைய வீட்டிற்குச் செல்வதற்கு ஆகும். வீட்டிற்கு எப்படி
செல்வது என்ற ஞானம் இப்போது தான் கிடைக்கிறது. இந்த மரண
லோகத்தில் இது உங்களுடைய கடைசி பிறவியாகும். சத்யுகத்தை தான்
அமரலோகம் என்று சொல்லப்படுகிறது. நாம் சீக்கிரம் சீக்கிரமாக
செல்ல வேண்டும் என்பது இப்போது குழந்தைகளாகிய உங்களுடைய
புத்தியில் இருக்கிறது. முதல்-முதலில் முக்திதாமமான
வீட்டிற்குச் செல்ல வேண்டும். இந்த சரீரம் எனும் ஆடையை இங்கேயே
விட வேண்டும் பிறகு ஆத்மா வீட்டிற்குச் சென்று விடும். எப்படி
எல்லைக்குட்பட்ட நாடகத்தின் நடிகர்கள் இருக்கிறார் கள், நாடகம்
முடிந்தது என்றால் ஆடையை அங்கேயே விட்டு விட்டு வீட்டின் ஆடையை
அணிந்து கொண்டு வீட்டிற்கு செல்கிறார்கள். நீங்களும் கூட
இப்போது இந்த சரீரத்தை விட்டு விட்டு செல்ல வேண்டும்.
சத்யுகத்தில் குறைவான தேவதைகளே இருக்கிறார்கள். இங்கேயே
கணக்கிலடங்காத மனிதர்கள் இருக்கிறார்கள். அங்கே ஒரு ஆதி சனாதன
தேவி-தேவதா தர்மம் மட்டும் தான் இருக்கும். இப்போது தங்களை
ஹிந்து என்று சொல்கிறார்கள். தங்களுடைய உயர்ந்த தர்மம்-கர்மத்தை
மறந்து விட்டார்கள் ஆகையினால் துக்கமுடையவர்களாக ஆகியுள்ளார்கள்.
சத்யுகத்தில் உங்களுடைய கர்மம், தர்மம் உயர்ந்ததாக இருந்தது.
இப்போது கலியுகத்தில் தர்மம் கீழானதாக இருக்கிறது. நாம் எப்படி
விழுந்தோம் என்று புத்தியில் வருகிறது இப்போது நீங்கள்
எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கின்றீர்கள்.
எல்லையற்ற தந்தை தான் வந்து புதிய உலகம் சொர்க்கத்தைப் படைக்
கின்றார். மன்மனாபவ என்று கூறுகின்றார். இது கீதையின்
வார்த்தையே ஆகும். சகஜ இராஜயோகம் என்ற பெயர் வைக்கப்பட்டு
விடுகிறது. இது உங்களுடைய பாடசாலையாகும். குழந்தைகள் வந்து
படிக்கிறார்கள் என்றால் நம்முடைய தந்தையின் பாடசாலை என்று
சொல்வார்கள். எந்த குழந்தையின் தந்தையாவது கல்லூரி முதல்வராக
இருந்தால், நான் என்னுடைய தந்தையின் கல்லூரியில் படிக்கின்றேன்
என்று சொல்வார். அவருடைய தாயும் முதல்வராக இருந்தால் எங்களுடைய
தாய்-தந்தை இருவருமே முதல்வராக இருக்கிறார்கள் என்று சொல்வார்.
இருவருமே படிப்பிக்கிறார்கள். எங்களுடைய தாய்-தந்தையரின்
கல்லூரியாகும். எங்களுடைய மம்மா-பாபாவின் பாடசாலை என்று நீங்கள்
சொல்வீர்கள். இருவருமே படிப்பிக்கிறார்கள். இருவருமே இந்த
ஆன்மீகக் கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தைத் திறந்திருக்
கிறார்கள். இருவரும் ஒன்றாக படிப்பிக்கிறார்கள். பிரம்மா
தத்தெடுத்திருக்கிறார் அல்லவா! இது மிகவும் ஆழமான ஞானத்தின்
விஷயங்களாகும். பாபா ஒன்றும் புதிய விஷயத்தைப் புரிய
வைப்பதில்லை. கலபத்திற்கு முன்பு கூட இந்த ஞானத்தைக்
கொடுத்திருக்கிறார். நாளுக்கு நாள் ஆழமான ஞானமாகிக் கொண்டே
செல்கிறது அந்தளவிற்கு ஞானம் இருக்கிறது. ஆத்மாவின் ஞானம்
உங்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று பாருங்கள்! இவ்வளவு சிறிய
ஆத்மாவில் 84 பிறவிகளின் நடிப்பு நிரம்பியுள்ளது. அது ஒருபோதும்
வினாசம் ஆவதில்லை. ஆத்மா அழிவற்றது எனும்போது அதிலுள்ள
நடிப்பும் அழிவற்றதாக இருக்கிறது. ஆத்மா காதுகளின் மூலம்
கேட்டது. சரீரம் இருக்கிறது என்றால் நடிப்பு இருக்கிறது.
சரீரத்திலிருந்து ஆத்மா தனியாகி விடுகிறது என்றால் பதில்
கிடைப்ப தில்லை (பேச்சு இருக்காது). குழந்தைகளே, இப்போது
நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று பாபா
கூறுகின்றார். இந்த புருஷோத்தம யுகம் வரும்போது தான் திரும்பிச்
செல்ல வேண்டி யிருக்கிறது, இதில் தூய்மை தன்மை தான் முக்கியமாக
வேண்டும். சாந்திதாமத்தில் தூய்மையான ஆத்மாக்கள் தான்
இருக்கின்றன. சாந்திதாமம் மற்றும் சுகதாமம் இரண்டுமே
தூய்மையானவைகளாகும். அங்கே சரீரமே இல்லை. ஆத்மா தூய்மையாக
இருக்கிறது, அங்கே பேட்டரி டிஸ்-சார்ஜ் ஆவதில்லை. இங்கே
சரீரத்தை எடுப்பதின் மூலம் மோட்டார் வேலை செய்கிறது. மோட்டார்
நின்றுவிட்டால் பெட்ரோல் குறையுமா என்ன? இப்போது உங்களுடைய
ஆத்மாவின் தீபம் மிகவும் குறைந்து விட்டது. ஒரேயடியாக அணைந்து
விடுவதில்லை. யாராவது இறந்து விட்டால் தீபம் ஏற்றுகிறார்கள்.
பிறகு அது அணைந்து விடாமல் மிகவும் பாதுகாக்கிறார்கள்.
ஆத்மாவின் ஜோதி ஒருபோதும் அணைந்து விடுவதில்லை, அது
அழிவற்றதாகும். இந்த விஷயங்கள் அனைத்தை யும் பாபா வந்து புரிய
வைக்கின்றார். இவர்கள் மிகவும் இனிமையான குழந்தைகள், இவர்கள்
அனைவரும் காமச் சிதையில் அமர்ந்து எரிந்து பஸ்மமாகி விட்டார்கள்
பிறகு இவர்களை விழிக்கச் செய்கின்றேன், என்பதை பாபா
தெரிந்துள்ளார். முற்றிலும் தமோபிரதானமாக இறந்தவர்களை போல் ஆகி
விட்டார்கள். பாபாவைத் தெரிந்திருக்கவே இல்லை. மனிதர்கள் ஒரு
காசுக்கும் கூட மதிப்பற்றவர்களாகி விட்டார்கள். மனிதர்களுடைய
சாம்பல் ஒரு வேலைக்கும் உதவுவதில்லை. பெரிய மனிதர் களின்
சாம்பல் உதவும், ஏழைகளுடையது உதவாது என்பதில்லை. யாராக
இருந்தாலும் மண்ணோடு மண்ணாகி விடுகிறது. சிலர் எரிக்கிறார்கள்,
சிலர் இடுகாட்டில் புதைத்து விடுகிறார்கள். பாரசீகக்காரர்கள்
கிணற்றில் வைத்து விடுகிறார்கள் பிறகு பறவைகள் கறியை சாப்பிட்டு
விடுகிறது. பிறகு மீதியுள்ள எலும்புகள் கீழே சென்று விடுகின்றன.
இருந்தாலும் கூட ஏதோ ஒன்றிற்கு பயன்படுகிறது. உலகத்தில் அதிக
மனிதர்கள் இறக்கிறார்கள். இப்போது நீங்கள் தாங்களாகவே சரீரத்தை
விட வேண்டும். நீங்கள் வந்திருப்பதே சரீரத்தை விட்டு விட்டு
வீட்டிற்கு திரும்பிச் செல்வதற்கு அதாவது இறப்பதற்கு ஆகும்.
நாம் ஜீவன் முக்திக்குச் செல்வோம் என்று நீங்கள் குஷி-குஷியோடு
செல்கிறீர்கள்.
யார் என்ன நடிப்பை நடித்தார்கள், அதையே கடைசிவரை நடிப்பார்கள்.
பாபா முயற்சி செய்வித்துக் கொண்டே இருப்பார், சாட்சியாக இருந்து
பார்த்துக் கொண்டே இருப்பார். இது புரிந்து கொள்ள வேண்டிய
விஷயமாகும், இதில் பயப்படுவதற்கான விஷயம் எதுவும் இல்லை. நாம்
சொர்க்கத்திற்கு செல்வதற்காக நாமே முயற்சி செய்து சரீரத்தை
விட்டு விட்டு விடு கிறோம். பாபாவையே நினைவு செய்து
கொண்டிருந்தோம் என்றால் கடைசியில் புத்தியில் என்ன இருக்கிறதோ
அப்படியே அடுத்த பிறவியில் அந்த நிலை ஏற்பட்டு விடும், இதில்
தான் உழைப்பு இருக்கிறது. ஒவ்வொரு படிப்பிலும் உழைப்பு
இருக்கிறது. பகவான் வந்து படிப்பிக்க வேண்டியிருக்கிறது.
கண்டிப்பாக படிப்பு பெரியதாக இருக்கும், இதில் தெய்வீக குணமும்
வேண்டும். இந்த இலஷ்மி - நாராயணனாக வேண்டும் அல்லவா! இவர்கள்
சத்யுகத்தில் இருந்தார்கள். இப்போது நீங்கள் மீண்டும் சத்யுக
தேவதைகளாக ஆவதற்கு வந்துள்ளீர்கள். குறிக்கோள் எவ்வளவு
சகஜமானதாக இருக்கிறது! திருமூர்த்தியில் தெளிவாக இருக்கிறது.
இந்த பிரம்மா, விஷ்ணு, சங்கர் போன்றவர்களின் சித்திரம்
இல்லையென்றால் நாம் எப்படி புரிய வைக்க முடியும்?
பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா.
பிரம்மாவிற்கு 8 கைகள், 100 கைகள் காட்டுகிறார்கள், ஏனென்றால்
பிரம்மாவின் குழந்தைகள் எவ்வளவு அதிகமானோர் இருக்கிறார்கள்.
அவர்கள் சித்திரங்களை உருவாக்கி விட்டார்கள். மற்றபடி இவ்வளவு
கைகளையுடைய மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? இராவணனுடைய 10 தலை
களுக்கும் அர்த்தம் இருக்கிறது, அப்படி மனிதர்கள் யாரும் இல்லை.
இதை பாபா தான் அமர்ந்து புரிய வைக்கின்றார், மனிதர்கள் எதையும்
தெரிந்திருக்கவில்லை. இது கூட விளையாட்டாகும், இது எப்போது
ஆரம்பமானது என்பது யாருக்கும் தெரியவில்லை. பரம்பரையாக நடந்து
வருகிறது என்று சொல்லி விட்டார்கள். அட, அதுவும்
எப்போதிலிருந்து? எனவே இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு
பாபா படிப்பிக்கின்றார், அவர் டீச்சராகவும் இருக்கின்றார்
குருவாகவும் இருக்கின்றார். எனவே குழந்தைகளுக்கு எவ்வளவு குஷி
இருக்க வேண்டும்?
இந்த அருங்காட்சியகம் போன்றவைகளை யாருடைய வழிகாட்டுதலின்படி
திறக்கிறீர்கள்? இங்கு இருப்பதே தாய், தந்தை மற்றும் குழந்தைகள்.
வழிகாட்டுதலின்படி திறந்து கொண்டே இருக்கிறார்கள். பகவானுடைய
மகாவாக்கியம் என்று சொல்கிறீர்கள் அப்படியென்றால் இரதத்தின்
மூலம் எங்களுக்கு பகவானின் காட்சியை பார்க்க வையுங்களேன், என்று
மக்கள் கேட்கிறார்கள். அட, நீங்கள் ஆத்மாவின் காட்சியைப்
பார்த்திருக்கிறீர்களா? இவ்வளவு சிறிய புள்ளியின் காட்சியைப்
பார்த்து நீங்கள் என்ன செய்ய முடியும்! அவசியமே இல்லை.
ஆத்மாவைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆத்மா இருபுருவங்களுக்கு
மத்தியில் இருக்கிறது, இதனுடைய ஆதாரத்தில் தான் இவ்வளவு பெரிய
சரீரம் நடக்கிறது! இப்போது உங்களிடத்தில் ஒளியின் கிரீடமும்
இல்லை, இரத்தினங்களினால் அலங்கரிக்கப்பட்ட கிரீடமும் இல்லை.
இரண்டு கிரீடங்களையும் பெறுவதற்கு மீண்டும் நீங்கள் முயற்சி
செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு கல்பமும் நீங்கள்
பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைகிறீர்கள். முன்பு எப்போதா வது
சந்தித்துள்ளீர்களா? என்று பாபா கேட்கிறார். ஆமாம் பாபா,
ஒவ்வொரு கல்பமும் சந்தித்து வந்துள்ளோம் என்று சொல்கிறார்கள்.
ஏன்? இந்த இலஷ்மி- நாராயணனாக ஆவதற்கு. இவர்கள் அனைவரும் ஒரே
விஷயத்தை தான் சொல்வார்கள். பாபா சொல்கிறார் - நல்லது, நல்லதை
பேசுகிறீர்கள், இப்போது முயற்சி செய்யுங்கள். அனைவரும்
நரனிலிருந்து நாராயணனாக ஆக மாட்டார்கள், பிரஜைகளும் வேண்டும்
அல்லவா! சத்திய நாராயணனுடைய கதையும் இருக்கிறது. அவர்கள் கதை
சொல்கிறார்கள், ஆனால் புத்தியில் எதுவும் வருவதில்லை. அது
சாந்திதாமம், நிராகார உலகம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள். பிறகு அங்கிருந்து சுகதாமத்திற்குச்
செல்வீர்கள். சுகதாமத்திற்கு அழைத்துச் செல்பவர் ஒரு பாபாவே
ஆவார். நீங்கள் யாருக்கு புரிய வைக்கின்றீர்கள் என்றால்,
இப்போது வீட்டிற்கு திரும்பி செல்வீர்களா? என்று கேளுங்கள்.
ஆத்மாவை தன்னுடைய வீட்டிற்கு அசரீரி தந்தை தான் அழைத்துச்
செல்வார். இப்போது பாபா வந்துள்ளார், அவரைத்
தெரிந்திருக்கவில்லை. நான் எந்த உடலில் வந்திருக்கின்றேனோ,
அவரையும் தெரிந்திருக்க வில்லை என்று பாபா கூறுகின்றார்.
இரதமும் இருக்கிறது அல்லவா! ஒவ்வொரு ரதத்திலும் ஆத்மா
பிரவேசிக்கிறது. அனை வருடைய ஆத்மாவும் இருபுருவங்களுக்கு
இடையில் இருக்கிறது. பாபா வந்து புருவங்களுக்கு மத்தியில்
அமருவார். மிகவும் சகஜமாக புரிய வைக்கின்றார். தூய்மையற்றவர்களை
தூய்மை யாக்குபவர் ஒரு பாபாவே ஆவார், பாபாவின் அனைத்து
குழந்தைகளும் சமமானவர்களே. அதில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய
நடிப்பு இருக்கிறது, இதில் யாரும் குறுக்கிட முடியாது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்த சரீரம் எனும் ஆடையிலிருந்து பற்றை நீக்கி
வாழ்ந்து கொண்டே இறக்க வேண்டும் அதாவது தங்களுடைய அனைத்து பழைய
கணக்கு-வழக்குகளையும் முடிக்க வேண்டும்.
2) இரட்டை கிரீடதாரிகளாக ஆவதற்கு படித்து உழைக்க வேண்டும்.
தெய்வீக குணத்தை தாரணை செய்ய வேண்டும். எப்படி இலட்சியம்
இருக்கிறதோ, சுப வார்த்தைகள் இருக்கிறதோ, அதுபோல் முயற்சி
செய்ய வேண்டும்.
வரதானம்:
நன்மையற்ற எண்ணங்களை அழித்து அபகாரிகளுக்கும் உபகாரம் செய்யும்
ஞானம் நிறைந்த ஆத்மா ஆகுக
சிலர் தினமும் உங்களை இழிவு செய்கிறார், கெடுதல் செய்கிறார்,
அவதூறாக பேசலாம். இருப்பினும் அவர் பொருட்டு மனதில்
வெறுப்பில்லாமல் அபகாரிக்கும் உபகாரம் செய்வது. இதுவே ஞானி
ஆத்மாவின் செயலாகும். குழந்தைகளான நீங்கள் தந்தையை 63
பிறவிகளாக இழிவு செய்தீர்கள் - இருப்பினும் தந்தை மங்களமான
பார்வையிலேயே பார்க்கின்றார். அவ்வாறே தந்தையை பின்பற்றுங்கள்.
அனைவர் மீதும் நன்மை செய்வதே ஞானம் நிறைந்த ஆத்மாவின்
பொருளாகும். எண்ணத்தாலும் தீமை கூடாது.
சுலோகன்:
மன்மனா பவ நிலையில் நிலைத்திருந்தால் பிறரின் மனோபாவங்களை (மனநிலையை)
கண்டறியலாம்.