01-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஆத்ம உணர்வுடையவராக (தேஹீ அபிமானி) இருக்கும் பயிற்சி செய்யுங்கள். இந்த பயிற்சியினால் தான் நீங்கள் புண்ணிய ஆத்மா ஆக முடியும்.

கேள்வி:
எந்த ஒரு ஞானத்தின் காரணமாக குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி யுடன் இருக்கிறீர்கள்?

பதில்:
இந்த நாடகம் மிகவுமே அதிசயமாக அமைக்கப்படுள்ளது. இதில் ஒவ்வொரு நடிகரின் அழியாத பாகம் பொருந்தி உள்ளது என்ற ஞானம் உங்களுக்குக் கிடைத்துள்ளது. அனைவரும் தத்தமது நடிப்பை நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த காரணத்தால் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.

கேள்வி:
மற்றவர்களிடம் இல்லாத எந்த ஒரு கலைத்திறமை தந்தையிடம் மட்டுமே உள்ளது?

பதில்:
தேஹீ அபிமானியாக (ஆத்ம உணர்வுடையவராக) ஆக்கும் கலை ஒரு தந்தையிடம் உள்ளது. ஏனெனில் அவர் சுயம் சதா (தேஹீ) ஆத்மாவாக (சுப்ரீம்) உயர்ந்தவராக இருக்கிறார். இந்த கலைத் திறமை எந்த ஒரு மனிதருக்கும் வர முடியாது.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள், அதாவது ஆத்மாக்களுக்கு தந்தை வந்து புரிய வைக்கிறார். தன்னை ஆத்மா என்று உணர வேண்டும் அல்லவா? நான் ஆத்மா ஆவேன் சரீரம் அல்ல என்ற பயிற்சியை முதன் முதலில் செய்யுங்கள் என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளார். தன்னை ஆத்மா என்று உணர்ந்திருக்கும் பொழுது தான் பரமாத்மாவை நினைவு செய்வீர்கள். தன்னை ஆத்மா என்று உணரவில்லை என்றால் பின் அவசியம் லௌகீக உறவினர்கள், தொழில் ஆகியவைதான் நினைவில் வந்து கொண்டிருக்கும். எனவே நான் ஆத்மா ஆவேன் என்ற பயிற்சி தான் முதன் முதலில் செய்ய வேண்டும். அப்போதுதான் ஆன்மீகத் தந்தையின் நினைவு நிலைக்கும். தந்தை தன்னை தேகம் என்று நினைக்காதீர்கள் என்ற இந்தப் படிப்பினையை அளிக்கிறார். இந்த ஞானத்தை தந்தை முழு கல்பத்தில் ஒரே ஒரு முறை அளிக்கிறார். பிறகு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இந்த அறிவுரை கிடைக்கும். தன்னை ஆத்மா என்று உணர்ந்தீர்கள் என்றால் தந்தையும் நினைவிற்கு வருவார். அரைக் கல்பமாக நீங்கள் உங்களை தேகம் என்று நினைத்திருந்தீர்கள். இப்பொழுது தன்னை ஆத்மா என்று உணர வேண்டும். எப்படி நீங்கள் ஆத்மாவாக இருக்கிறீர்களோ அதே போல நான் கூட ஆத்மாவாகவே இருக்கிறேன். ஆனால் சுப்ரீம் (உயர்ந்தவன்) ஆவேன். நான் இருப்பதே ஆத்மா வாக! எனவே எனக்கு எந்த ஒரு தேகமும் நினைவிற்கு வருவதே இல்லை. இந்த தாதாவோ சரீரம் உடையவர் அல்லவா? அந்த தந்தை நிராகாரமானவர் ஆவார். இந்த பிரஜாபிதா பிரம்மாவோ சாகாரி (தேகம் உடையவர்) ஆகிறார். சிவபாபாவின் உண்மையான பெயரே சிவன் என்பதாகும். அவர் இருப்பதே ஆத்மாவாக. ஆனால் அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவராக அதாவது சுப்ரீம் ஆத்மா (உயர்ந்த ஆத்மா) ஆவார். இந்த சமயத்தில் மட்டுமே வந்து இந்த உடலில் பிரவேசம் செய்கிறார். அவர் ஒருபொழுதும் தேக அபிமானியாக (தேக உணர்வுடைய வராக) இருக்க முடியாது. சாகாரி மனிதர்கள் தேக அபிமானியாக இருப்பார்கள். அவரோ இருப்பதே நிராகாரமானவராக. அவர் வந்து இந்த பயிற்சி செய்விக்க வேண்டி உள்ளது. நீங்கள் உங்களை ஆத்மா என்று உணருங்கள் என்று கூறுகிறார். நான் ஆத்மா ஆவேன், ஆத்மா ஆவேன் - இந்தப் பாடத்தை அமர்ந்து படியுங்கள். நான் ஆத்மா சிவபாபாவின் குழந்தை ஆவேன். ஒவ்வொரு விஷயத்திலும் பயிற்சி வேண்டும் அல்லவா? தந்தை ஒன்றும் புது விஷயத்தைப் புரிய வைப்பதில்லை. நீங்கள் உங்களை ஆத்மா என்று உறுதியாக உணர்ந்து விடும் பொழுது தந்தையின் நினைவும் உறுதியாக இருக்கும். தேக அபிமானம் இருந்தது என்றால், தந்தையை நினைவு செய்ய முடியாமல் இருப்பீர்கள். அரைக் கல்பம் உங்களுக்கு தேகத்தின் அகங்காரம் இருக்கிறது. இப்பொழுது உங்களை ஆத்மா என்று உணருங்கள் என்று உங்களுக்குக் கற்பிக்கிறேன். சத்யுகத்தில் இது போல தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று யாரும் கற்பிப்பது இல்லை. சரீரத்திற்கு பெயர் இடப்படுகிறது தான். இல்லையென்றால் ஒருவரையொருவர் எப்படி அழைக்க முடியும்? இங்கு நீங்கள் தந்தையிடமிருந்து என்ன ஆஸ்தி பெற்றுள்ளீர்களோ அதே பிராலப்தத்தை (பிராப்தி) அங்கு அடைகிறீர்கள். மற்றபடி பெயர் சொல்லி தான் அழைப்பார்கள் அல்லவா? கிருஷ்ணர் என்பது கூட சரீரத்தின் பெயர் தான் அல்லவா? பெயர் இல்லாமல் காரியங்கள் ஆகிய வையோ நடக்க முடியாது. அப்படியின்றி அங்கே தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று கூறுவார்கள் என்பதல்ல. அங்கோ ஆத்ம அபிமானியாக இருக்கவே இருப்பார்கள். இந்தப் பயிற்சி உங்களுக்கு இப்பொழுது செய்விக்கப் படுகிறது. ஏனெனில் பாவங்கள் மிகவும் ஏறி உள்ளன. மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக பாவங்கள் ஏறி ஏறி இப்பொழுது (ஃபுல்) முழுமையான பாவ ஆத்மாவாக ஆகி விட்டுள்ளீர்கள். அரைக் கல்பமாக என்னவெல்லாம் செய்தீர்களோ அது முடிந்து கூட போகும் அல்லவா? மெல்ல மெல்ல குறைந்து கொண்டே போகிறது. சத்யுகத்தில் நீங்கள் சதோபிரதானமாக உள்ளீர்கள். திரேதாவில் சதோ ஆகி விடுகிறீர்கள். ஆஸ்தி இப்பொழுது கிடைக்கிறது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்வதால் தான் ஆஸ்தி கிடைக்கிறது. இந்த தேஹீ அபிமானி ஆவதற்கான படிப்பினையை தந்தை இப்பொழுது அளிக்கிறார். சத்யுகத்தில் இந்தப் படிப்பு கிடைப்பதில்லை. அவரவர் பெயரில் தான் நடப்பார்கள். இங்கு நீங்கள் ஒவ்வொருவரும் நினைவின் பலத்தினால் பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மா ஆக வேண்டும். சத்யுகத்தில் இந்தப் படிப்பின் அவசியமே கிடையாது. இந்தப் படிப்பினையை நீங்கள் அங்கு எடுத்துக் கொண்டு செல்வதும் இல்லை. அங்கு இந்த ஞானத்தையும் எடுத்துச் செல்வ தில்லை. இந்த யோகத்தையும் எடுத்துச் செல்வதில்லை. நீங்கள் பதீத நிலையிலிருந்து (தூய்மையற்ற நிலை) பாவனமாக (தூய்மையாக) இப்பொழுது தான் ஆக வேண்டும். பிறகு மெல்ல மெல்ல கலைகள் குறைகின்றன. எப்படி சந்திரனின் கலை குறைந்து குறைந்து கடைசி யில் ஒரு கோடு அளவு மட்டுமே இருக்கிறது. எனவே இதில் குழம்பாதீர்கள். ஏதாவது புரிய வில்லை என்றால் கேளுங்கள்.

முதலிலோ நான் ஆத்மா ஆவேன் என்பதில் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுடைய ஆத்மா தான் இப்பொழுது தமோபிரதானமாக ஆகியுள்ளது. முதலில் சதோபிர தானமாக இருந்தது. பின் நாளுக்கு நாள் கலை குறைந்து கொண்டே போகிறது. நான் ஆத்மா ஆவேன் என்பது உறுதியாக நினைவு இல்லாத காரணத்தினால் தான் நீங்கள் தந்தையை மறக்கிறீர்கள். முதன் முதலான அடிப்படை விஷயமே இது தான். ஆத்ம அபிமானி ஆகி விடும் பொழுது தந்தை நினைவிற்கு வருவார். பின் ஆஸ்தியும் நினைவிற்கு வரும். ஆஸ்தி நினைவிற்கு வந்தது என்றால் தூய்மையாகவும் இருப்பீர்கள். தெய்வீக குணங்களும் இருக்கும். இலட்சியமோ (ஏம் - ஆப்ஜெக்ட்) முன்னால் உள்ளது அல்லவா? இது காட்லி யுனிவர்சிட்டி (ஈசுவரிய பல்கலைக் கழகம்). பகவான் கற்பிக்கிறார். (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடைய வராக அவர் தான் ஆக்க முடியும். மேலும் வேறு யாருக்குமே இந்த கலைத் திறமை பற்றி தெரியவே தெரியாது. ஒரு தந்தை தான் கற்பிக்கிறார். இந்த தாதா கூட புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறார். தந்தையோ தேஹி அபிமானியாக ஆவதற்கான (புருஷார்த்தம்) முயற்சி செய்ய வேண்டிய வகையில் அவர் ஒரு பொழுதும் தேகம் எடுப்பதே இல்லை. உங்களை ஆத்ம அபிமானி ஆக்குவதற்காக இந்த சமயம் மட்டுமே அவர் வருகிறார். "யாருடைய தலை மீது இத்தனை விஷயங்கள் உள்ளதோ அவர் எப்படி உறங்க முடியும்" என்ற பழமொழி உள்ளது. நிறைய தொழில்கள் ஆகியவை அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்றால், அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. மேலும் யாருக்கு நேரம் இருக்கிறதோ அவர்கள் பாபாவிற்கு முன்னால் புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வருகிறார்கள். ஒரு சிலர் புதியவர்களும் வருகிறார்கள். ஞானமோ மிகவும் நன்றாக உள்ளது என்று நினைக்கிறார்கள். தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களது பாவங்கள் அழிந்து விடும் என்ற வார்த்தைகள் கீதையில் கூட உள்ளது. எனவே தந்தை இதைப் புரிய வைக்கிறார். தந்தை யார் மீதும் குறை கூறுவதில்லை. நீங்கள் பாவன நிலையிலிருந்து தூய்மையற்றவராக (பதீதமாக) ஆகவே வேண்டி உள்ளது மற்றும் நான் வந்து பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்கவே வேண்டி உள்ளது என்பதையோ அறிந்துள்ளீர்கள். இது ஏற்கனவே அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். இதில் யாரையுமே நிந்திக்க வேண்டிய விஷயமே கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானத்தை நல்ல முறையில் அறிந்துள்ளீர்கள். வேறு யாருமே இறைவனை அறியாமலே உள்ளார்கள். எனவே அநாதைகள், நாஸ்திகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இப்பொழுது தந்தை குழந்தை களாகிய உங்களை எவ்வளவு அறிவாளியாக ஆக்குகிறார்! ஆசிரியர் ரூபத்தில் கல்வி அளிக்கிறார். இந்த சிருஷ்டியின் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்ற இந்தப் படிப்பு கிடைப்பதன் மூலம் நீங்களும் திருந்துகிறீர்கள். சிவாலயமாக இருந்த பாரதம் இப்பொழுது வேசியாலயம் ஆகும் அல்லவா? இதில் நிந்தை பற்றிய விஷயமே கிடையாது. இது விளையாட்டாகும். இது பற்றி தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் தேவதை யிலிருந்து அசுரராக ஆகியிருக்கிறீர்கள். ஏன் ஆனீர்கள் என்று கூறுவதில்லை. தந்தை வந்திருப்பதே குழந்தை களுக்கு தனது அறிமுகத்தை அளிக்கவே! மேலும் சிருஷ்டியின் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பது பற்றிய ஞானம் (நாலேஜ்) அளிக்கிறார். மனிதர்கள் தான் அறிந்து கொள்வார்கள் அல்லவா? இப்பொழுது நீங்கள் அறிந்து கொண்டு பின் தேவதை ஆகிறீர்கள். இந்தப் படிப்பு மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்காகவே. இதை தந்தையே வந்து கற்பிக்கிறார். இங்கோ எல்லோரும் மனிதர்களே மனிதர்களாக உள்ளார்கள். தேவதைகளோ ஆசிரியராக ஆகி கற்பிக்கும் வகையில் இந்த சிருஷ்டியில் (படைப்பு) வர முடியாது. கற்பிக்கக் கூடிய தந்தை எப்படி படிப்பிக்க வருகிறார் பாருங்கள்! பரமபிதா பரமாத்மா ஏதோ ஒரு இரதம். (ஆதாரமாக) எடுக்கிறார் என்ற பாடல் கூட உள்ளது. எந்த ரதம் எடுக்கிறார் என்று முழுவதுமாக எழுதுவதில்லை. திரிமூர்த்தியின் இரகசியம் பற்றிக் கூட யாரும் புரிந்து கொள்வது இல்லை. பரமபிதா என்றால் பரம ஆத்மா. அவர் யாராக இருக்கிறார் என்பது பற்றி அவர் தனது அறிமுகத்தை அளிப்பார் அல்லவா? அகங்காரத்தின் விஷயம் இல்லை. புரியாத காரணத்தினால் இவருக்கு அகங்காரம் இருக்கிறது என்கிறார்கள். இந்த பிரம்மாவோ நான் பரமாத்மா ஆவேன் என்று கூறுவது இல்லை. இதுவோ புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒருவர் ஆவார் என்பதோ தந்தையின் மகா வாக்கியம் ஆகும். இவருக்கு தாதா என்று கூறப்படுகிறது. இவர் பாக்கியசாலி இரதம் ஆவார் அல்லவா? பெயர் கூட பிரம்மா என்று வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பிராமணர்கள் வேண்டும் அல்லவா? ஆதி தேவன் பிரஜாபிதா பிரம்மா ஆவார். பிரஜைகளின் பிதா (தந்தை) ஆவார்.இப்பொழுது பிரஜைகள் என்பது யார்? பிரஜாபிதா பிரம்மா சரீரதாரி ஆவார்.எனவே தத்து எடுத்துள்ளார் அல்லவா? நான் தத்து எடுப்பதில்லை என்று குழந்தைகளுக்கு சிவபாபா புரிய வைக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் என்றைக்குமே என்னுடைய குழந்தைகளாக இருக்கவே இருக்கிறீர்கள். நான் உங்களை (குழந்தைகளாக) ஆக்குவதில்லை. நானோ ஆத்மாக்களாகிய உங்களின் அனாதி தந்தை ஆவேன். தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார்! பிறகும் தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று கூறுகிறார். நீங்கள் முழு பழைய உலகத்தை சந்நியாசம் செய்கிறீர்கள். எல்லோரும் இந்த உலகத்திலிருந்து திரும்பிச் சென்று விடுவோம் என்பதை புத்தி மூலமாக அறிந்துள்ளீர்கள். அப்படியின்றி சந்நியாசம் செய்து காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதல்ல. முழு உலகத்தை சந்நியாசம் செய்து நாம் நமது வீட்டிற்குச் சென்று விடுவோம். எனவே ஒரு தந்தையைத் தவிர எந்த பொருளும் நினைவிற்கு வரக் கூடாது. 60 வருடங்களின் ஆயுள் முடிந்து விட்டது என்றால் பின் சப்தத்திற்கு அப்பாற்பட்டு வான பிரஸ்தத்தில் செல்வதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். இந்த வானப் பிரஸ்தத்தின் விஷயம் இப்பொழுதினுடையது ஆகும். பக்தி மார்க்கத்திலோ வானப்பிரஸ்தம் பற்றி யாருக்கும் தெரியவே தெரியாது. வானபிரஸ்தம் என்பதன் பொருளை அவர்களால் கூற முடியாது. வாணி ஸே பரே (சப்தத்திற்கு அப்பாற்பட்டது) என்று மூல வதனத்திற்குக் கூறுவார்கள். அங்கு எல்லா ஆத்மாக்களும் வசிக் கிறார்கள். எனவே எல்லோருக்கும் வானப் பிரஸ்த நிலை ஆகும். எல்லோரும் வீடு செல்ல வேண்டும்.

ஆத்மா புருவ மத்தியில் பிரகாசிக்கும் நட்சத்திரம் ஆகும் என்று சாஸ்திரங்களில் காண்பிக்கி றார்கள். ஒரு சிலர் ஆத்மா பெரு விரல் போன்று உள்ளது என்று நினைக்கிறார்கள். கட்டை விரல் போன்று என்று நினைவு செய்கிறார்கள். நட்சத்திரத்தை எவ்வாறு நினைவு செய்வது? பூஜை எப்படி செய்வது? எனவே நீங்கள் தேக அபிமானத்தில் வரும் பொழுது பூசாரி ஆகி விடுகிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். பக்தியின் காலம் ஆரம்பம் ஆகும் பொழுது அதை பக்தியின் கலாச்சாரம் என்று கூறுகிறார்கள். ஞானத்தின் கலாச்சாரம் தனி. ஞானம் மற்றும் பக்தி சேர்ந்திருக்க முடியாது. பகலும் இரவும் சேர்ந்திருக்க முடியாது. பகல் என்று சுகத்திற்குக் கூறப்படுகிறது மற்றும் இரவு என்று துக்கம் அதாவது பக்திக்குக் கூறப்படுகிறது. பிரஜாபிதா பிரம்மாவின் பகல் மற்றும் பின் இரவு என்று கூறுகிறார்கள். எனவே பிரஜைகள் மற்றும் பிரம்மா இருவருமே அவசியம் சேர்ந்து இருப்பார்கள் அல்லவா? பிராமணர்களாகிய நாங்கள் தான் அரைக் கல்பம் சுகம் அனுபவிக்கிறோம். பிறகு அரை கல்பம் துக்கம் அனுபவிக் கிறோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இது புத்தி மூலமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். எல்லோரும் தந்தையை நினைவு செய்ய முடியாது என்பதையும் அறிந்துள்ளீர் கள். பிறகும் தன்னை ஆத்மா என்று உணருங்கள் மற்றும் என்னை நினைவு செய்யுங்கள் அப்பொழுது நீங்கள் பாவனமாக ஆகி விடுவீர்கள் என்று சுயம் தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். இந்த செய்தியை எல்லோருக்கும் சேர்ப்பிக்க வேண்டும். சேவை செய்ய வேண்டும். யார் சேவையே செய்வதில்லையோ அவர்கள் மலர்களாக இல்லை. தோட்டத்தின் எஜமானர் தோட்டத்திற்கு வரும்பொழுது அவருக்கு மலர்கள் தான் முன்னால் வேண்டும் - யார் சர்விசபிள் ஆக (சேவை செய்யக் கூடியவர்கள்) இருக்கிறார்களோ, நிறைய பேர்களுக்கு நன்மை செய்கிறார்களோ அவர்கள் மலர்கள் ஆவார்கள். யாருக்கு தேக அபிமானம் உள்ளதோ அவர்கள் நாங்கள் மலர்களாக இல்லை என்பதை தாங்களும் புரிந்திருப்பார்கள். பாபாவிற்கு முன்னாலோ நல்ல நல்ல மலர்கள் அமர்ந்துள்ளார்கள். பின் தந்தையின் பார்வை அவர்கள் மீது செல்லும். டான்ஸ் (நடனம்) கூட நன்றாக நடக்கும். (டான்ஸிங் கர்ல் - நாட்டிய பெண்ணின் உதாரணம்) பள்ளிக் கூடத்தில் கூட யார் முதல் எண், யார் இரண்டாம் எண் மற்றும் மூன்றாம் எண்ணில் உள்ளார்கள் என்பதை ஆசிரியரோ அறிந்திருப்பார் அல்லவா? தந்தையின் கவனம் கூட சேவை செய்பவர்கள் பக்கம் தான் செல்லும். இதயத்திலும் கூட அவர்கள் தான் இடம் பெறுவார்கள். டிஸ்சர்வீஸ் (சேவைக்கு தடை) செய்பவர்கள் இதயத்தில் இடம் பெறுவார்களா என்ன? தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்தீர்கள் என்றால் அப்பொழுது தான் தந்தையின் நினைவு நிலைக்கும் என்ற முதன் முதலாவதான முக்கிய விஷயத்தை தந்தை புரிய வைக்கிறார். தேக அபிமானம் இருந்தது என்றால் தந்தையின் நினைவு நிலைக்காது. லௌகீக உறவினர்களின் பக்கம், தொழில் ஆகியவற்றின் பக்கம் புத்தி சென்று விடும். (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக ஆகும் பொழுது பரலௌகீக தந்தை தான் நினைவிற்கு வருவார். தந்தையையோ மிகவும் அன்புடன் நினைவு செய்ய வேண்டும். தன்னை ஆத்மா என்று உணருவது - இதில் உழைப்பு உள்ளது. ஏகாந்தம் (தனிமை) வேண்டும். 7 நாள் பட்டியின் (கோர்ஸ்) பாட முறை மிகவும் கடினமானது ஆகும். யாருடைய நினைவும் வரக் கூடாது. யாருக்கும் கடிதம் கூட எழுதக்கூடாது. இது உங்களுடைய ஆரம்ப பட்டியாக இருந்தது. இங்கோ எல்லோரையும் வைக்க முடியாது. எனவே வீட்டில் இருந்தபடியே பயிற்சி செய்யுங் கள் என்று கூறப்படுகிறது. பக்தர்கள் கூட பக்திக்காக தனி இடம் அமைத்து விடுகிறார்கள். உள்ளே ஒரு சிறிய அறையில் அமர்ந்து மாலையை நினைவு செய்கிறார்கள். எனவே இந்த நினைவு யாத்திரையில் கூட ஏகாந்தம் (தனிமை) தேவை. ஒரு தந்தையைத் தான் நினைவு செய்ய வேண்டும். இதில் பேச வேண்டிய எந்த விஷயம் கூட இல்லை. இந்த நினைவின் பயிற்சிக்கு நேரம் தேவை.

லௌகீக தந்தை எல்லைக்குட்பட்ட (கிரியேட்டர்) படைப்பவர், இவர் எல்லை யில்லாதவர் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிரஜாபிதா பிரம்மாவோ எல்லை யில்லாதவர் ஆகிறார் அல்லவா? குழந்தைகளை தத்து எடுக்கிறார். சிவபாபா தத்து எடுப்ப தில்லை. அவருடைய குழந்தைகளாக எப்பொழுதும் இருக்கவே இருக்கிறார்கள். சிவபாபா வின் குழந்தைகளாக ஆத்மாக்களாகிய நாம் அனாதியாக இருக்கவே இருக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். பிரம்மா உங்களை சுவீகாரம் செய்துள்ளார். ஒவ்வொரு விஷயமும் நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. தந்தை தினமும் குழந்தை களுக்குப் புரிய வைக்கிறார். பாபா நினைவு இருப்பதில்லை என்று கூறுகிறார்கள். இதில் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்று தந்தை கூறுகிறார். ஒரு சிலர் முற்றிலுமே நேரம் ஒதுக்க முடியாது. அப்பேர்ப்பட்டவர்களும் இருக்கிறார்கள். புத்தியில் நிறைய வேலை இருக்கும். பிறகு நினைவின் யாத்திரை எப்படி இருக்கும்? தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் பாவனமாக (தூய்மையாக) ஆகி விடுவீர்கள் என்பதே அடிப்படை விஷய மாகும் என்று தந்தை புரிய வைக்கிறார். நான் ஆத்மா ஆவேன், சிவபாபாவின் குழந்தை ஆவேன்... இது மன்மனாபவ ஆகியது அல்லவா? இதில் உழைப்பு வேண்டும். ஆசீர்வாதத்தின் விஷயம் கிடையாது. இதுவோ படிப்பு ஆகும். இதில் கிருபை அல்லது ஆசீர்வாதம் நடக்காது. நான் எப்பொழுதாவது உங்கள் சிரத்தின் மீது கை வைக்கிறேனா என்ன? எல்லையில்லாத தந்தையிடமிருந்து நாம் ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அமர பவ, ஆயுஷ்வான் பவ.. இதில் எல்லாமே வந்து விடுகிறது. நீங்கள் முழு ஆயுளை அடைகிறீர்கள். அங்கு ஒருபொழுதும் அகால மரணம் ஏற்படுவது இல்லை. இந்த ஆஸ்தியை எந்த ஒரு சாது சந்நியாசி ஆகியோர் அளிக்க முடியாது. அவர்கள் புத்திரவான் பவ.. என்பார்கள். எனவே மனிதர்கள் அவர்களது அருளினாலே குழந்தை பிறந்தது என்று நினைக் கிறார்கள். அவ்வளவு தான். யாருக்கு குழந்தை இல்லையோ அவர்கள் போய் அவருடைய சீடராக ஆகி விடுகிறார்கள். ஞானமோ ஒரே ஒரு முறை கிடைக்கிறது. ஒருவரைப்பற்றிய ஞானம் ஆகும். அதனுடைய பிராலப்தம் அரைகல்பம் நடக்கிறது. பிறகு இருப்பது அஞ்ஞானம். பக்திக்கு அறியாமை என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு விஷயம் கூட எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கப்படுகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இப்பொழுது வானப் பிரஸ்த நிலை ஆகும். எனவே புத்தி மூலமாக அனைத்தையும் சந்நியாசம் செய்து ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். தனிமையில் அமர்ந்து நான் ஆத்மா ஆவேன்... ஆத்மா ஆவேன் என்ற பயிற்சி செய்ய வேண்டும்.

2. சர்விசபிள் (சேவை புரியும்) மலர் ஆக வேண்டும். டிஸ்சர்விஸ் ஆகி விடும் வகையில் தேக அபிமானத்திற்கு வசப்பட்டு அப்பேர்ப்பட்ட எந்த செயலும் செய்யக் கூடாது. அனேகருக்கு நன்மை செய்வதற்கான கருவி ஆக வேண்டும். சிறிது நேரம் நினைவிற்காக அவசியம் ஒதுக்க வேண்டும்.

வரதானம்:
பரமாத்ம ஞானத்தின் புதுமையான தூய்மையை தாரணை செய்யக்கூடிய அனைத்து பற்றுதல்தளிலிருந்தும் விடுபட்டவர் ஆவீர்களாக.

இந்த பரமாத்ம ஞானத்தின் புதுமையே தூய்மை ஆகும். தீயும் பஞ்சும் சேர்ந்து இருக்கும் பொழுதும் நெருப்பு பிடிக்க முடியாது என்று பெருமிதத்துடன் கூறுகிறீர்கள். தூய்மை இல்லாமல் யோகி அல்லது ஞானமுடைய ஆத்மா ஆக முடியாது என்று நீங்கள் அனைவரும் உலகத்திற்கு சவால் விடுகிறீர்கள். எனவே தூய்மை என்றாலே முழுமையாக பற்றுதல் களிலிருந்து விடுபட்ட நிலை. எந்த ஒரு மனிதர் அல்லது சாதனங்கள் மீது கூட பற்றுதல் இல்லாமலிருக்க வேண்டும். அப்பேர்பட்ட தூய்மை மூலமாகத்தான் இயற்கையை பாவனமாக ஆக்கக்கூடிய சேவையை செய்யக்கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள்.

சுலோகன்:
தூய்மையே உங்களது வாழ்க்கையின் அஸ்திவாரம். பூமியே பிளந்தாலும் தர்மத்தை விடாதீர்கள்.