01.12.24 காலை முரளி
ஓம் சாந்தி 18.01.2003 பாப்தாதா,
மதுபன்
பிராமண ஜென்மத்தின் நினைவுகள் மூலமாக சக்திசாலியாகி அனைவரையும்
சக்திசாலியாக்குங்கள்
இன்று நாலா பக்கங்களிலும் சிநேகமுள்ள எல்லா குழந்தைகளின்,
சிநேகமுடன் கூடிய இனிமை யிலும் இனிமையான நினைவுகள், வித விதமான
பேச்சுக்கள், சிநேக முத்துக்களாலான மாலைகள், பாப்தாதாவிடம்
அமிர்தவேளைக்கு முன்பே வந்து சேர்ந்து விட்டது. குழந்தைகளின்
சிநேகம் (அன்பு) பாப்தாதாவையும் கூட, சிநேக கட-ல் மூழ்க வைத்தது.
ஒவ்வொரு குழந்தையிடமும் சிநேக சக்தி, பிரிக்க முடியாத அளவுக்கு
உறுதியாக இருப்பதைப் பார்த்தார். இந்த சிநேக சக்தி ஒவ்வொரு
குழந்தையையும் சகஜயோகி ஆக்கிக் கொண்டிருக்கிறது. சிநேகத்தின்
ஆதாரத்தில், எல்லா ஆகர்ஷணங்களிலிருந்தும் (கவர்ச்சி)
விலகியிருந்து, முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். பாப்தாதா
விடமிருந்து அல்லது விசேஷ ஆத்மாக்களிடமிருந்து (நியாரா மற்றும்
பியாரா) விலகிய நிலையின் அன்பான சிநேகத்தின் அனுபவம் இல்லை
என்று சொல்லக்கூடிய குழந்தை ஒருவரைக் கூட பார்க்க வில்லை.
ஒவ்வொரு பிராமண ஆத்மாவுக்கும் பிராமண வாழ்க்கை, ஆதிகால சிநேக
சக்தியின் ஆதாரத்திலேயே கிடைத்திருக்கிறது. பிராமண வாழ்க்கையில்,
இந்த சிநேக சக்தி, வரதானமாகி முன்னேறச் செய்து கொண்டிருக்கிறது.
ஆதலால் இந்த நாள் விசேஷமாக தந்தை மற்றும் குழந்தை களுக்கிடையே
உள்ள சிநேகத்தின் நாளாகும். ஒவ்வொருவரும், தங்களுடைய உள்ளத்தின்
சிநேக முத்துக்களாலான மாலைகள் அதிக அளவில் பாப்தாதாவுக்கு
அணிவித்தார்கள். மேலும் சக்திகள், இன்றைய தினம் மூழ்கி
இருந்தார்கள்.. ஆனால் சிநேக சக்தி வெளிப்படையாகவே தெரிகிறது.
பாப்தாதாவும் குழந்தைகளினுடைய, சிநேக கடலில், அன்பில்
மூழ்கியிருக்கின்றார்.
இன்றைய தினத்தை நினைவு நாள் என்று கூறுகிறீர்கள் நினைவு நாள்
பிரம்மா பாபாவின் நினைவு நாள் மட்டுமல்ல, பாப்தாதா பிராமண
ஜன்மம் எடுத்தவுடனேயே ஆதி முதல் இன்று வரையிலும் என்னென்ன
நினைவுகளை, நினைவு படுத்தியிருக்கின்றார் என்பதை இன்றும்
சதாகாலமும் நினை வில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று
கூறுகின்றார். இந்த நினைவுகள் என்னும் மாலையை நினைவு செய்தால்,
மிகப்பெரிய மாலை யாகிவிடும். எல்லாவற்றிலும் முதலாவது நினைவு
எல்லோருக்கும் என்ன கிடைத்தது? முதலாவது பாடம் நினைவிருக்
கிறதல்லவா? நான் யார்? இந்த நினைவு தான் புதிய ஜென்மம்
கொடுத்தது. (உள்ளுணர்வு) விருத்தி, திருஷ்டி, ஸ்மிருதியில்
மாற்றம் ஏற்படுத்தியது. இந்த மாதிரியான எண்ணங்கள் நினைவுக்கு
வந்ததுமே, ஆன்மீக குஷியின் பிரகாசம் கண்களில், முகத்தில்
வந்துவிடுகிறது. நீங்கள் எண்ணங்களை நினைவு செய்கிறீர்கள் ஆனால்
பக்தர்கள் மாலையை ஜெபிக்கிறார்கள். ஒரு நினைவு கூட
அமிர்தவேளையிலிருந்து, கர்மயோகி யாகும் வரையிலும், அடிக்கடி
நினைவிலிருந்தால், நினைவு சக்தி சொரூபமாக்கிவிடுகிறது.
ஏனென்றால், எப்படி நினைவோ, அது இயல்பாகவே சக்தியாகிவிடுகிறது.
ஆதலால் இன்றைய நினைவு நாளுடன் கூடவே, சக்தியளிக்கும் நாள்
என்றும் சொல்லப்படுகிறது. பிரம்மா பாபா எதிரில் வந்ததுமே,
தந்தையின் திருஷ்டி பட்டதுமே, ஆத்மாக்களில் சக்தி
வந்துவிடுகிறது. எல்லோருக் கும் அனுபவம் இருக்கிறது. சாகார (ஸ்தூலம்)
ரூபத்தில் பார்க்கும் போதும், அவ்யக்த ரூபத்தின் பாலனையில்
இருக்கும் போதும், முதலில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம்
செய்கிறீர்கள். ஒரு நொடியில் உள்ளத்திலிருந்து பாப்தாதா என்று
சொன்னதுமே சக்தி இயல்பாகவே வந்து விடுகிறது. ஆதலால் அந்த
சக்தியுள்ள ஆத்மாக்களாகி இருப்பவர்கள் இப்போது மற்ற
ஆத்மாக்களையும் தனது சக்தியின் மூலம் சக்திசாலி ஆக்குங்கள்.
ஆர்வம் இருக்கிற தல்லவா? ஊக்கம் உள்ளதா? சக்தியற்றவர் களை
சக்திசாலியாக்க வேண்டு மல்லவா? பாப்தாதா நாலா பக்கங்களிலும்,
பலவீனமான ஆத்மாக் களை சக்திசாலியாக்குவதற்கான ஆர்வம் நன்றாக
இருப்பதை பார்த்தார்.
சிவராத்திரி புரோகிராம், விமரிசையாக தயார் செய்து
கொண்டிருக்கிறீர்கள். எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிற தல்லவா?
இருக்கிறதா, ஆர்வம்? ஆர்வம் இருந்தால் போதும், இந்த
சிவராத்திரியில், அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுவார்கள்.
யாருக்கு ஆர்வம் இருக்கிறதோ, அவர்கள் கை உயர்த்துங்கள். இந்த
அற்புதத்தின் மூலமாக, பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஆஹா!
சக்திசாலி ஆத்மாக்களே, ஆஹா! என்ற வெற்றி முழக்கம் உண்டாகட்டும்.
எல்லா ஜோன்களிலும் (மண்டலம்) புரோகிராம் தயார்
செய்திருக்கிறார்கள் அல்லவா? பஞ்சாப் கூட செய்திருக்கிறதல்லவா?
நல்லது. தவித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள், தாகத்துடன்
இருக்கும் ஆத்மாக்கள், அசாந்தி யிலுள்ள ஆத்மாக்கள்,
இப்படிப்பட்ட ஆத்மாக்களுக்கு ஆசி (அஞ்சலி) வழங்குங்கள். இன்னும்
உங்களுடைய சகோதர, சகோதரிகள் இருக்கின்றார்கள். ஆதலால்
உங்களுடைய சகோதரர்கள் மீது உங்களுடைய சகோதரி கள் மீது, இரக்கம்
வருகிறதல்லவா? இந்தக் காலத்தில், ஆபத்தான நேரத்தில் பரமாத்மாவை
நினைவு செய்வதைப் பார்க்கிறீர்கள். ஆனால் சக்திகளை,
தேவதைகளிலும் கூட கணேஷ் (விநாயகர்), ஹனுமான் மற்றும் இதர தேவதை
களையும் அதிகமாக நினைவு செய்கிறார்கள் என்றால் இவர்கள் யார்?
நீங்கள் தானே? உங்களை தினந்தோறும் நினைவு செய்கிறார்கள்.
கிருபாளு, தயாளு, கருணைக் காட்டுங்கள் என்று கூக்குரல்
இடுகிறார்கள். கொஞ்சம், சுகம், சாந்தியின் ஒரு துளி தாருங்கள்.
இவ்வாறு உங்களிடமிருந்து ஒரு துளிக்கு தாகமுடையவர்களாக
இருக்கிறார்கள். ஆதலால் துன்பத்தில் இருப்பவர்களுக்கு,
தாகத்தில் இருக்கும் ஆத்மாக்களின் குரல், ஹே, சக்திகளே! ஹே,
தேவர்களே!, கேட்கவில்லையா? என்கிறார்கள். கேட்கிறதா? பாப்தாதா
எப்போது இந்தக் குரலைக் கேட்கின்றாரோ அப்போது சக்திகளின்,
தேவர்களின் நினைவு பாப்தாதாவுக்கு வருகிறது. ஆகவே, தாதிகள்
நல்ல புரோகிராம்கள் செய்திருக்கிறார்கள். பாபாவுக்குப்
பிரியமானதாக இருக்கிறது. நினைவு நாள் என்றால் சதாகாலத்திற்கும்
நினைவு நாள். இருந்தாலும், இன்றைய நாள் நினைவு மூலமாக எல்லா
சக்திகளையும் பிராப்திகளையும் விசேஷமாக அடைந்திருக்கிறீர்கள்.
இனி நாளை முதல் சிவராத்திரி வரையிலும், பாப்தாதா நாலா
பக்கங்களிலுமுள்ள குழந்தை களுக்கும் என்ன கூறுகின்றார் என்றால்
இந்த விசேஷ தினத்தில் ஒரு லட்சியம் கொள்ள வேண்டும் அதாவது
எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு, ஆத்மாக்களுக்கு, மனம்
மூலமாகவும், பேச்சின் மூலமாகவும் சம்மந்தம் மற்றும் தொடர்பில்
இருப்பவர்களுக்கு எந்த ஒரு விதி மூலமாகவும், அவசியம் செய்தி
சொல்ல வேண்டும். உங்களுடைய புகார்களை விட்டு விடுங்கள். விநாசம்
எப்போது ஆகும் என்ற தேதி இன்னும் தெரியவில்லையே என்று
குழந்தைகள் நினைக்கிறார்கள். இந்தப் புகாரை எந்த நேரத்திலும்
தீர்க்க முடியும். ஆனால் உடனே செய்து விடமுடியாது. ஏனெனில்
எங்களுக்கு இதுவரை யாரும் செய்தி சொல்லவில்லையே என்ற புகார்
யாரிடமிருந்தும் வராமலிருக்க வேண்டும். இல்லையேல் இவர்களுடைய
நிந்தனைக்கு ஆளாக நேரிடும். நாம் கூட ஏதோ கொஞ்சம் செய்கிறோம்,
இதன் காரணமாக ஆஹா, பிரபு! என்று சொல்லும் அளவுக்குத்தான்
இருக்கிறது. ஆகையால் அவர்களும் கொஞ்சம் ஆஸ்தி பெற்றுக்
கொள்ளட்டும். அவர்களுக்கும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ஒரு
துளி மூலமாகமாவது, அவர்களுடைய தாகத்தை தணியுங்கள். தாக
முள்ளவர்களுக்கு, ஒரு துளி கூட மிக்க மகத்துவம் உடைய தாகி
விடுகிறது. இந்த புரோகிராம் தானே! நாளை முதல் பாப்தாதாவும் கூட,
பச்சைக்கொடி அல்ல, முரசு கொட்டுவார். ஹே, திருப்தி யான
ஆத்மாக்களே! எல்லா ஆத்மாக்களுக்கும், செய்தி சொல்லுங்கள்,
செய்தி சொல்லுங்கள் என்று முரசொலி எழுப்புவார். குறைந்த பட்சம்,
சிவராத்திரி அன்று தந்தையின் ஜென்ம தினத்தன்று, எங்களுக்குச்
செய்தி கிடைத்து விட்டது என்று முக மகிழ்ச்சியோடு சொல்கின்ற
மகிழ்ச்சி எனும் இனிப்பை வழங்குங்கள். இந்த தில்குஷ் (மனதிற்கு
மகிழ்ச்சி தரும்) மிட்டாய் பற்றி எல்லோருக்கும் சொல்லுங்கள்
சாப்பிடச் செய்யுங்கள். சாதாரண சிவராத்திரி கொண்டாட வேண்டாம்.
கொஞ்சம் அற்புதம் நிகழ்த்திக் காட்டுங்கள். ஆர்வம் உள்ளதா?
முதல் லைனில் அமர்ந்திருப்பவர்களுக்கு இருக்கிறதா? நாலா
பக்கமும் இந்தப் புகை பரவட்டும். சிவராதிரிக்கு இவ்வளவு மகிமை
இருக்கிறதா? என்றாவது குறை பட்சம் புரிந்து கொள்ளட்டும்.
நம்முடைய தந்தையின் ஜன்ம தினம் என்பதை அறிந்து, மகிழ்ச்சியுடன்
கொண்டாடட்டும். நல்லது.
அமிருத வேளையில் மெஜாரிட்டியினருக்கு, நினைவும், ஈஸ்வரிய
பிராப்தி பற்றிய நஷாவும் மிக நன்றாக இருக்கிறது. ஆனால் கர்மயோகி
ஸ்திதியை அமிருதவேளையில் இருக்கின்ற நஷாவோடு ஒப்பிட்டுப்
பார்க்கும்போது, வித்தியாசமாக இருக்கிறது. காரணம் என்ன? கர்மம்
செய்யும்போது ஆத்ம உணர்வு மற்றும் கர்ம உணர்வு இரண்டுமே இருக்
கிறது. இதற்கான விதி என்னவென்றால், கர்மம் செய்யும்போது, நான்
ஆத்மா, எப்படிப்பட்ட ஆத்மா, இதெல்லாம் தெரியும் விதவிதமான
ஆத்மாக் களுக்கான ஸ்வமான் கிடைத்திருக் கிறது. இப்படிப்பட்ட
ஆத்மா செய்விப்பவர் என்ற நிலை யிலிருந்து, இந்த
கர்மேந்திரியங்கள் மூலமாக கர்மம் செய்பவன். இந்த
கர்மேந்திரியங்கள் வேலைக் காரர்கள். ஆனால் வேலைக்காரர் மூலமாக,
கர்மம் செய்விக்கக்கூடிய, செய்விப்பவன், நியாரி. (விலகியிருப்பவன்)
லௌகிகத்திலும் கூட, டைரக்டர் தன்னுடைய கூட்டாளிகள் மூலம்,
நிமித்தமாக சேவை செய்பவர்கள் மூலமாக சேவை செய்விக்கிறார்.
எப்படிச் செய்ய வேண்டுமென்று வழிகாட்டு கின்றார். இப்படி தர்மம்
செய்து கொண்டிருக்கும்போது, நான் டைரக்டர் என்பதை மறந்து விடு
கின்றார். தன்னை செய்விக்கும் சக்திசாலி ஆத்மா என்பதும், இதை
புரிந்து கொண்டு காரியங்களை செய்யுங்கள். இந்த ஆத்மா மற்றும்
சரீரம், இவற்றில் ஒன்று செய்பவர் (சரீரம்), இன்னொன்று
செய்விப்பவர் (ஆத்மா) இந்த நினைவு அமிழ்ந்து போய்விடுகிறது.
உங்கள் எல்லோருக்கும், பழைய சகோதரர்களுக்கும், தெரியும்.
பிரம்ம பாபா ஆரம்பத்தில் என்ன பயிற்சி செய்தார்? ஒரு டைரியை
பார்த்தீர்கள் அல்லவா? முழு டைரியிலும் ஒரேவிதமான வார்த்தை தான்
இருந்தது. நானும் ஆத்மா, யசோதாவும் ஆத்மா தான், இந்தக்
குழந்தைகளும் ஆத்மாக்களே, ஆத்மாக்கள், ஆத்மாக்கள்.... இந்த
அஸ்திவாரத்தை சதா பயிற்சி செய்து கொண்டேயிருந்தார். அதாவது நான்
யார்? இது தான் முதல் பாடம். இதனுடைய அப்பியாசம் அடிக்கடி
செய்து கொண்டேயிருக்க வேண்டும். சோதிக்க வேண்டும். நான் ஆத்மா
தானே என்று வெறுமனே நினைக்கக் கூடாது. பயிற்சி செய்ய வேண்டும்.
ஆத்மாவாகிய நான், செய்விப்பவராகி, கர்மம் செய்வித்துக் கொண்டி
ருக்கிறேன் என்று அனுபவம் செய்ய வேண்டும். செய்பவர் வேறு,
செய்விப்பவர் வேறு. இப்படி வெவ்வேறானவராக இருக்கின்றார். இந்த
கர்மேந்திரி யங்கள், வேலைக்காரர்கள் என்ற அனுபவம் பிரம்மா
பாபாவுக்கு இருந்தது என்பதையும் கேள்விப் பட்டீர்கள் தானே.
தினந்தோறும் இரவில் கச்சேரி நடந்ததல்லவா? (அன்றைய தினம்,
ஆத்மாவின் நிலை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைப்பற்றி,
ஒவ்வொருவரும் சபையில் கூறுவது தான் கச்சேரி என்று கூறப்படுகிறது)
அதாவது எஜமானனாகி, இந்த கர்மேந்திரியங்களாகிய, வேலைக்காரர்
களைப்பற்றிய நிலையை கேட்பார்கள் அல்லவா? இந்த மாதிரியாக பிரம்மா
பாபா இந்த அப்பியாசம் என்ற அஸ்திவாரத்தை நன்றாக உறுதியாக்கினார்
(பக்கா). யாரெல்லாம் கடைசியிலும் கூட, கூடவே இருந்தார்களோ,
அவர்களுக்கு, பாபா சரீரத்தில் இருந்து கொண்டி ருந்தபோதும்,
இங்குமங்கும் சென்று கொண்டிருந்தபோதும் அசரீரி ஸ்திதி அனுபவம்
ஆனது. கர்மக்கணக்கையும் முடிக்க வேண்டிய தாயிருந்தது,
இருப்பினும் சாட்சியாக இருந்து செய்தார். தான் (சுயம்) கர்மக்
கணக்கின் வசமாகாம லுமிருந்தார். தான் கர்மக்கணக்கை முடித்துக்
கொண்டிருக்கிறேன் என்ற அனுபவம் மற்றவர்களுக்கு ஏற்படாத வகையில்
செய்து முடித்தார். பிரம்மா பாபா அவ்யக்தமாகிக்
கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்ததா? இல்லை.
தெரியவில்லை. ஆகவே, இவ்வளவு நியாராவாக, சாட்சியாக, அசரீரி யாக
அதாவது கர்மாதீத் நிலையை வெகுகாலம் பயிற்சி செய்து
கொண்டிருந்தார். இதன் காரணமாக, கடைசியில், அதே சொரூபம் அனுபவம்
ஆனது. இப்படி, வெகுகால அப்பியாசம் சரியான நேரத்தில் உதவியாக
இருந்தது. கடைசி நேரத்தில் தேக அபிமானத்தை விட்டு விடுவோம்
என்று நினைக்காதீர்கள். முடியாது. வெகுகாலத்து அசரீரி நிலை,
தேகத்திலிருந்து விடுபட்டிருக்கும் நிலை, செய்விப்பவர் என்ற
ஸ்திதி அனுபவத்தில் இருக்க வேண்டும். கடைசி காலம் என்பது,
இளமைப் பருவத்தினருக்கும், முதியோருக்கும், ஆரோக்கியமாக
இருப்பவர்களுக்கும், நோயாளிகளுக்கும், வேறு யாராக இருந்தாலும்,
எந்த நேரத்திலும் வரமுடியும். ஆதலால் சாட்சியாக இருக்கும்
அனுபவம் வெகுநாள் அனுபவமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம்
செலுத்துங்கள். எப்படிப்பட்ட இயற்கையினால் உண்டாகும்
ஆபத்துக்கள் வந்தாலும், இந்த அசரீரியாக இருக்கும் ஸ்திதி,
உங்களுக்கு எளிதாக விலகி யிருக்கவும் (நியாரா) தந்தைக்கு
அன்புடையவராக (பியாரா) இருக்கவும் உதவியாயிருக்கும். ஆதலால்
வெகு காலம் என்ற வார்த்தையை பாப்தாதா கோடிட்டு காட்டுகின்றார்.
என்ன ஆனாலும் சரி, முழு நாளில் சாட்சி நிலை, செய்விப்பவன் என்ற
நிலை, அசரீரியாக இருக்கும் நிலையின் அப்பியாசத்தை அடிக்கடி
செய்யுங்கள். அப்போது தான், கடைசி மூச்சிலும் கூட பரிஸ்தா ஸோ
தேவதை என்பது நிச்சயிக்கப்பட்டு விடும். பாபா சமானமாக ஆக
வேண்டுமானால், பாபா நிராகாரமாகவும், பரிஷ்தாவாகவும்
இருக்கின்றார். பிரம்மா பாபா சமானமாக ஆக வேண்டும். அதாவது
பரிஷ்தா ஸ்திதியில் இருக்க வேண்டும். எவ்வாறு பரிஷ்தா ஸ்திதியை,
சாகார ரூபத்தில் பார்த்தீர்களோ, பேசுவதைக் கேட்டாலும்,
பேசினாலும், காரிய விவகாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், பாபா
சரீரத்தில் இருந்தாலும் நியாராவாக இருக்கின்றார் என்பது அனுபவம்
ஆகியது. காரியம் செய்வதை விட்டுவிட்டு, அசரீரி நிலையிலிருப்பது
என்பது கொஞ்சநேரத்திற்குத்தான் முடியும். ஆனால் காரியம் செய்து
கொண்டி ருக்கும்போது, நேரம் எடுத்துக்கொண்டு அசரீரியாக,
பவர்புல் ஸ்திதியில் இருக்கும் அனுபவம் செய்து கொண்டேயிருங்கள்.
நீங்கள் எல்லோரும் பரிஷ்தாக்கள். தந்தை மூலமாக இந்த பிராமண
வாழ்க்கையை ஆதாரமாக வைத்து, செய்தி சொல்வதற்காக காரியம் செய்து
கொண்டிருக்கிறீர்கள். பரிஷ்தா என்றால் தேகத்தில் இருந்தாலும்
நியாரா (சரீரத்திலிருந்து விலகியிருக்கும் நிலை) இந்த உதாரணத்தை
பிரம்மா பாபாவிடம் பார்த்தீர்கள். இப்படி யெல்லாம் இருப்பது
சாத்தியமில்லை என்பது அல்ல. கண்ணால் பார்த்தீர்கள். அனுபவமும்
செய்தீர்கள். யாரெல்லாம் நிமித்தமாக இருக்கின்றார்களோ,
விஸ்தாரமாக இருக்கிறது, ஆனால் எவ்வளவு பிரம்மா பாபாவின் புதிய
ஞானம், புதிய வாழ்க்கை, புதிய உலகைப்படைக்கின்ற பொறுப்பு
இருந்தபோதிலும், அவ்வளவு இப்போது யாருக்குமில்லை. ஆதலால்
எல்லோரு டைய லக்ஷியமும் பிரம்மா பாபா சமானமாக ஆக வேண்டும்
அதாவது பரிஷ்தா ஆக வேண்டும் என்பது. சிவபாபாவிற்கு சமானமாக
ஆகவேண்டும். அதாவது நிராகார ஸ்திதியில் நிலைத்திருக்க வேண்டும்.
கஷ்டமாக இருக்கிறதா என்ன? பாப் (தந்தை) மற்றும் தாதா (பிரம்மா
பாபா) விடம் அன்பு இருக்கிறதல்லவா? யாரிடம் அன்பு இருக்கிறதோ,
அவரைப் போல ஆகவேண்டும், பாபா சமானமாக ஆகிய தீரவேண்டும் என்ற
சங்கல்பம் எப்போது இருக்கிறதோ, அப்போது கஷ்டம் இருக்காது.
அடிக்கடி கவனம் கொடுத்துக் கொண்டே யிருக்க வேண்டும். சாதாரண
வாழ்க்கை அல்ல. சாதாரணமாக வாழ்க்கை நடத்துபவர்கள் ஏராளமாக
இருக்கின்றனர். பெரிய, பெரிய காரியங்கள் செய் பவர்கள் கூட
நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் உங்களைப் போல காரியம்
செய்பவர்கள், பிராமண ஆத்மாக்களாகிய உங்களைத் தவிர, வேறு
யாராலும் செய்ய முடியாது.
ஆதலால் நினைவு நாளாகிய இன்று, பாப்தாதா சமான மாவதில் சமீபத்தில்
வாருங்கள். சமீபத்தில் வாருங்கள் என்று வரதானம் தருகிறார்.
எல்லோரும் எல்லைக்குட்பட்ட விஷயத்திலிருந்து சங்கல்பமானாலும்,
பேசுவதனாலும் கர்மம் செய்வதானாலும், சம்மந்தம், தொடர்புகள்
ஆனாலும் விலகியிருங்கள். தன்னுடைய மனம் எனும் படகை, இந்த
எல்லைக்குட்பட்ட லௌகீக விஷயங் களிலிருந்தெல்லாம் விடுவித்துக்
கொள்ளுங்கள். இப்போதிருந்தே, வாழ்க்கையில் இருக்கும்போதே,
விடுதலையாகி (முக்தி) இவ்வாறு ஜீவன் முக்த், அலௌகிக அனுபவம்
அதிக காலம் செய்யுங்கள். நன்று.
நாலா பக்கங்களிலிருந்தும் வந்திருக்கின்ற குழந்தைகளின்
கடிதங்கள் அதிகமாக வந்து சேர்ந்திருக்கின்றன. மேலும் மதுபன்
வாசிகளின் கோபத்திலிருந்து விடுதலையாகியிருக்கும் (குரோத முக்த்
ரிப்போர்ட், ஆகிய சமாச்சாரங்கள் பாப்தாதாவிடம் வந்து
சேர்ந்திருக்கின்றன. இந்த தைரியத்தைப் பார்த்து, பாப்தாதா குஷி
அடைகின்றார். மேலும், இனிமேலும் சதா முக்த் நிலை
யிலிருப்பதற்காக, பொறுமை சக்தியை கவசமாக அணிந்து கொண்டேயிருக்க
வேண்டும். இதன் மூலம் யார், எந்த விதமாக நடந்து கொண்டாலும்,
நீங்கள் சதா பாதுகாப்பாக இருப்பீர்கள்.
இவ்வாறு, எல்லா திட சங்கல்பதாரி, சதா ஸ்மிருதி சொரூப
ஆத்மாக்களுக்கு சதா, அனைத்து எல்லா சக்தி களையும் வேண்டிய
நேரத்தில் காரியத்தில் பயன் படுத்தக்கூடிய விசேஷ ஆத்மாக்களுக்கு,
அனைத்து ஆத்மாக்கள் மீதும் கருணை உள்ளம் உடைய ஆத்மாக்களுக்கும்,
சதா பாப்தாதா சமான் ஆக வேண்டும் என்ற சங்கல் பத்தை சாகார
ரூபத்தில் (நடை முறையில்) கொண்டு வரக்கூடிய இப்படிப்பட்ட மிக
மிக மிக அன்பாக விலகி யிருக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
டபுள் ஃபாரினர்ஸ்:
டபுள் பாரினர்ஸ்களிடம் டபுள் நஷா இருக்கிறது. ஏன் டபுள் நஷா?
ஏனென்றால், எப்படி பாபா தூர தேசத்தைச் சேர்ந்தவராக
இருக்கின்றாரோ, அது போல நாங்களும் கூட தூர தேசத்திலிருந்து
வந்திருக்கிறோம் என்று நினைக்கிறார்கள். பாப்தாதா டபுள் விதேஷி
குழந்தை களிடம் ஒரு விசேஷத்தைப் பார்த்தார். தீபத்தின் மூலமாக
தீபமேற்றி அநேக தேசங்களில் பாப்தாதா வின் ஒளி
வீசிக்கொண்டிருக்கும் தீபங்களின் தீபாவளி கொண்டாடினார்கள்.
டபுள் விதேஷிகளிடம் செய்தி அளிக்க வேண்டுமென்ற ஆர்வம் நன்றாக
உள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் 30-40 தேசங்களிலிருந்து வருவதை
பாப்தாதா பார்க்கின்றார். நல்வாழ்த்துக்கள். சதா, தானும் கூட (சுயம்)
பறந்து கொண்டேயிருங்கள். பரிஷ்தாவாகி பறந்து பறந்து, செய்தி
அளித்துக் கொண்டேயிருங்கள். நல்லது. 35 தேசங்களைச் சார்ந்த
உங்களை மட்டும் பாப்தாதா பார்க்கவில்லை, இன்னும் மற்ற
தேசங்களில் இருப்பவர்களும் உங்களுடன் சேர்ந்திருப்பதை
பார்க்கின்றார். நம்பர் ஒன், பாபாவிற்கு சமானமாக
ஆகப்போகிறவர்கள் இல்லையா? நம்பர் ஒன்னா? நம்பர் வாரா? நம்பர்
ஒன். நம்பர் வார் அல்ல. நம்பர் ஒன் ஆகுதல் என்றால், ஒவ்வொரு
சமயத் திலும் வெற்றியடைபவர்கள் (வின்) யார் வெற்றி (வின்)
அடைபவர்களோ, அவர்கள் ஒன்னாக இருக்கிறார்கள். ஆதலால்
இப்படித்தானே! மிகவும் நல்லது. வெற்றியாளர்கள் மேலும் சதா
வெற்றியடைபவர்கள். நல்லது. எல்லோருக்கும், எங்கெங்கு
செல்கின்றீர்களோ, அங்கு நினைவூட்ட வேண்டும். அதாவது அனைத்து
டபுள் ஃபாரினர்ஸ்களும் நம்பர் ஒன் ஆகவேண்டும் என்று கூறுங்கள்
நல்லது.
பாப்தாதா எல்லா மாதர்களுக்கும், கோபாலுக்குப் பிரியமான
மாதர்களுக்கு, நிறைந்த மனதுடன் அன்பு நினைவுகளை அளிக்கின்றார்.
மேலும் பாண்டவர்கள், குமாரர்களானாலும், குடும்பத்தினரானாலும்,
பாண்டவர்கள் பாண்டவ பதியுடன் இருக்கிறார்கள். இப்படி
கூட்டாளிகளாக இருக்கின்ற பாண்டவர்களுக்கு பாப்தாதா மிகுந்த
அன்பு நினைவுகளைத் தருகின்றார்.
தாதிமார்களுடன்:
இந்த நாளில் என்ன நினைவுக்கு வருகிறது? வில்பவர் கிடைத்ததல்லவா?
வில்பவர் வரதானம் இருக்கிறது மிக நல்ல பார்ட் செய்தீர்கள்.
இதற்கு வாழ்த்துக்கள். எல்லோரு டைய ஆசிகளும் உங்களுக்கு நிறைய
இருக்கிறது. உங்களைப் பார்த்துத்தான் எல்லோரும் குஷி
அடைகிறார்கள். பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி, உங்களுக்கு
ஏதாவது ஆனால், தங்களுக்கு ஏற்பட்டதாக நினைக்கிறார்கள். இவ்வளவு
அன்பு இருக்கிறது. எல்லோருக்கும் இருக்கிறது.
எல்லோரிடமிருந்தும் நிறைய அன்பு இருக்கிறது. நம்முடைய அன்பு
அனைவரை விட அதிகமான அன்பு ஆகும். இந்த அன்பு தான், எல்லோரையும்
நடத்திக் கொண்டிருக்கிறது. தாரணை குறை வாக இருந்தாலும் சரி,
அதிகமாக இருந்தாலும் சரி, அன்பு நடத்திக் கொண்டிருக்கிறது.
மிகவும் நல்லது.
ஈஷு தாதியுடன்:
இவரும் கூட கணக்கை முடித்து விட்டார். பரவாயில்லை . இவருடைய
சகஜ புருஷாரத்தம், சகஜமாக கணக்கை முடித்து விட்டது. சகஜமாகவே
ஆகி விட்டது. ஓய்வு எடுத்து, எடுத்து சரியாகிப்போனது.
விஷ்ணுவின் படுக்கை போல ஓய்வு கிடைத்தது. நல்லது. இருந்தாலும்
சாகாரத்தில் இன்றுவரையிலும் யக்ஞ ரக்ஷகராக இருக்கிறீர்கள்.
யக்ஞ ரக்ஷகராக இருப்பவருக்கு ஆசிகள் நிறைய கிடைக் கின்றன.
எல்லா தாதிகளும் பாப்தாதாவுக்கு அருகாமையில் இருக்கிறார்கள்.
சமீப ரத்தினங்கள். மேலும் மற்றவர்களுக்கு தாதிகள் விலைமதிக்க
முடியாதவர்கள் கூட்டாளிகளும் (தோழிகளும்) நன்றாக இருக்கிறார்கள்.
தாதிகளின் கூட்டு முயற்சியானது இவ்வளவு காலம் யக்ஞத்தை
ரக்ஷகராக இருந்து பாதுகாத்து வந்தது. இனிமேலும் பாதுகாத்துக்
கொண்டேயிருப்பீர்கள். இந்த ஒற்றுமை தான் எல்லா வெற்றிக்கும்
ஆதாரம். பாபா இடையில் இருக்கின்றார். இந்த விஷயத்தில் மிகவும்
கவனம் கொடுத்திருக்கிறீர்கள். நல்லது. எல்லோரும் நன்றாக
இருக்கிறீர்கள்.
வரதானம்:
சர்வ சம்பந்தங்களிலும் ஒரு பாபாவைத் தன்னுடைய துணைவராக ஆக்கிக்
கொள்ளக் கூடிய சகஜ புருஷார்த்தி ஆகுக.
பாபா தாமே சர்வ சம்பந்தங்களிலும் துணையாக இருப்பதற்கு
முன்வருகிறார். எப்படி சமயமோ, அப்படி சம்பந்தத்தில் பாபாவின்
துணையாக இருங்கள் மற்றும் பாபாவைத் துணைவராக ஆக்கிக்
கொள்ளுங்கள். எங்கே சதா துணையும் உள்ளது, துணைவரும் இருக்கிறாரோ,
அங்கே எந்த ஒரு கஷ்டமும் இருக்க முடியாது. எப்போதெல்லாம்
தன்னைத் தனியாக இருப்பதாக அனுபவம் செய் கிறீர்களோ, அப்போது
பாபாவின் பிந்து ரூபத்தை நினைவு செய்யாதீர்கள். பிராப்திகளின்
பட்டியலை முன்னால் கொண்டு வாருங்கள். வெவ்வேறு சமயங்களின்
ரமணீகர (மனதை மகிழ்விக்கும்) அனுபவங்களின் கதைகளை நினைவில்
கொண்டு வாருங்கள். சர்வ சம்பந்தங்களின் ரசனையை அனுபவம்
செய்வீர்களானால் கடின முயற்சி முடிந்து போகும் மற்றும் சகஜ
புருஷார்த்தி ஆகி விடுவீர்கள்.
சுலோகன்:
அநேக ரூபம் கொண்டவராகி (பகுரூபி) மாயாவின் அநேக ரூபங்களைக்
கண்டறிந்தால் மாஸ்டர் மாயாபதி ஆகி விடுவீர்கள்.