02-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தையின் பாகம்
மிகச் சரியானது. அவர் தனக்குரிய நேரத்தில் வருகின்றார், இதில்
சிறிதும் வித்தியாசம் ஏற்பட முடியாது, அவர் வந்ததின்
அடையாளமாகிய சிவராத்திரியை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுங்கள்.
கேள்வி:
எந்த குழந்தைகளின் விகர்மம்
முழுமையாக அழிந்து போவது கிடையாது?
பதில்:
யாருடைய யோகா சரியாக இல்லையோ,
தந்தையின் நினைவு இருப்பதில்லையோ அவர்களது விகர்மம் விநாசம்
ஆவது கிடையாது. யோகயுக்தாக இல்லாததால் அந்த அளவிற்கு சத்கதி
ஏற்படுவது கிடையாது, பாவங்கள் இருந்து விடுகின்றன, பிறகு
பதவியும் குறைந்து விடுகிறது. யோகா இல்லையெனில் பெயர்,
உருவத்தில் ஈர்க்கப்பட்டு மாட்டிக் கொண்டிருப்பர், அவ்வாறு
ஈர்ப்பவர்களது விசயங்கள் மட்டுமே நினைவிற்கு வந்து கொண்டே
இருக்கும், அவர்கள் ஆத்ம அபிமானிகளாக இருக்க முடியாது.
பாடல்:
இன்று அதிகாலையில் யார் வந்தது
......
ஓம் சாந்தி.
அதிகாலை என்பது எத்தனை மணிக்கு ஏற்படுகிறது? பாபா அதிகாலையில்
எத்தனை மணிக்கு வருகின்றார்? (சிலர் 3 மணி என்று கூறினர், சிலர்
4 மணி என்று கூறினர், சிலர் சங்கமத்தில் என்று கூறினர், சிலர்
12 மணி என்று கூறினர்). பாபா சரியான நேரத்தை கேட்கின்றார். 12
மணியை நீங்கள் அதிகாலை என்று கூறமாட்டீர்கள். 12 மணி முடிந்து
ஒரு விநாடி ஆகிவிட்டது, ஒரு நிமிடம் ஆகிவிட்டது எனில் காலை
ஆரம்பமாகி விடுகிறது. இது முழுமையான அதிகாலை நேரம் ஆகும்.
நாடகத்தில் இவரது பாகம் மிகவும் சரியாக இருக்கிறது. விநாடியும்
தாமதம் ஏற்பட முடியாது. இந்த நாடகம் ஏற்கெனவே
உருவாக்கப்பட்டதாகும். 12 மணியாகி ஒரு விநாடி ஆகாத வரை காலை
என்று கூறுவது கிடையாது. இது எல்லையற்ற விசயமாகும். நான்
அதிகாலையில் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். அயல்நாடுகளில்
உள்ளவர்களுக்கு எ.எம், பி.எம்) என்று மிகச் சரியாக நடக்கிறது.
அவர்களது புத்தி நன்றாக இருக்கிறது. அவர்கள் அந்த அளவிற்கு சதோ
பிரதானமாகவும் ஆவது கிடையாது, தமோ பிரதானமாகவும் ஆவது கிடையாது.
பாரதவாசிகள் தான் 100 சதவிகிதம் சதோ பிரதானமாக, பிறகு 100
சதவிகிதம் தமோ பிரதானமாக ஆகின்றனர். ஆக தந்தை மிகச் சரியாக
இருக்கின்றார். அதிகாலை என்றால் 12 மணி ஆகி ஒரு நிமிடம்,
விநாடிக்கான கணக்கு பார்ப்பது கிடையாது. விநாடி கடந்து செல்வது
தெரிந்து கொள்ள முடிவது கிடையாது. இப்பொழுது இந்த விசயங்களை
குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். உலகம்
முற்றிலும் காரிருளில் இருக்கிறது. துக்கத்தின் பொழுது அனைத்து
பக்தர்க ளும் தந்தையை நினைவு செய்கின்றனர் - பதீத பாவனனே
வாருங்கள். ஆனால் அவர் யார்? எப்பொழுது வருகின்றார்? என்று
எதையும் அறியவில்லை. மனிதர்களாக இருந்து கொண்டு மிகச் சரியாக
எதையும் அறியாமல் இருக்கின்றனர். ஏனெனில் பதீதமாக, தமோ
பிரதானமாக இருக் கின்றனர். காமமும் எவ்வளவு தமோ பிரதானமாக
இருக்கிறது! இப்பொழுது எல்லையற்ற தந்தை கட்டளையிடுகின்றார் -
குழந்தைகளே! காமத்தை வென்று உலகை வென்றவர்களாக ஆகுங்கள்.
ஒருவேளை இப்பொழுது தூய்மையாக ஆகவில்லையெனில் விநாசம்
ஆகிவிடுவீர்கள். நீங்கள் தூய்மையாக ஆவதன் மூலம் அழிவற்ற பதவியை
அடைவீர்கள். நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்
அல்லவா! தூய்மையாக இருங்கள், யோகியாக இருங்கள் என்ற சுலோகனும்
எழுதுகிறீர்கள். உண்மையில் இராஜயோகியாக இருங்கள் என்று தான்
எழுத வேண்டும். யோகி என்ற வார்த்தை பொதுவானது. பிரம்மத்திடம்
யோகா வைக்கின்றனர், அவர்களும் யோகி ஆகிவிடுகின்றனர். குழந்தைகள்
தந்தையிடம், பெண் ஆணிடம் (நினைத்தல்) யோகா வைக் கின்றனர், ஆனால்
உங்களுடையது இது இராஜயோகம் ஆகும். தந்தை இராஜ யோகம் கற்பிக்
கின்றார், ஆகையால் இராஜயோகம் என்று எழுதுவது சரியானது ஆகும்.
தூய்மையாக மற்றும் இராஜ யோகியாக இருங்கள். நாளுக்கு நாள்
தொடர்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இன்று உங்களுக்கு மிக
ஆழமான விசயங்களைக் கூறுகிறேன் என்று தந்தையும் கூறுகின்றார்.
இப்பொழுது சிவஜெயந்தியும் வரவிருக்கிறது. சிவஜெயந்தியை நீங்கள்
மிகவும் நல்ல முறையில் கொண்டாட வேண்டும். சிவஜெயந்தியை
முன்னிட்டு மிக நல்ல முறையில் சேவை செய்ய வேண்டும். யாரிடத்தில்
கண்காட்சிப் படங்கள் உள்ளனவோ, அனைவரும் அவரவர்களது சென்டரில்
மற்றும் வீட்டில் சிவஜெயந்தியை நல்ல முறையில் கொண்டாடுங்கள்
மற்றும் கீதை ஞானம் கொடுக்கும் வள்ளலாகிய தந்தை
சிவபாபாவிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைவதற் கான வழியை வந்து
கற்றுக் கொள்ளுங்கள் என்று எழுதுங்கள். விளக்குகள் பலவற்றை
எரிய விடுங்கள். வீட்டுக்கு வீடு சிவஜெயந்தி கொண்டாட வேண்டும்.
நீங்கள் ஞான கங்கைகள் அல்லவா! ஆக ஒவ்வொருவரிடமும் கீதா பாடசாலை
இருக்க வேண்டும். வீட்டுக்கு வீடு கீதை படிக்கின்றனர் அல்லவா!
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பக்தியில் தீவிரமாக இருப்பர். கீதை
படிக்கக் கூடிய குடும்பங்களும் உள்ளன. ஆக வீட்டிலும்
சித்திரங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லையற்ற தந்தையிடம்
வந்து மீண்டும் ஆஸ்தியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுத
வேண்டும்.
இந்த சிவஜெயந்தி விழா தான் உண்மையில் உங்களுக்கு உண்மையான
தீபாவளி ஆகும். எப்பொழுது சிவபாபா வருகின்றாரோ அப்பொழுது
வீட்டுக்கு வீடு ஒளிமயமாக ஆகிவிடுகிறது. இந்த விழாவை மிக அதிக
விளக்குகளை எரிய விட்டு ஒளிமயமாக்கிக் கொண்டாடுங்கள். நீங்கள்
உண்மையான தீபாவளி கொண்டாடுகிறீர்கள். இறுதி முடிவு சத்யுகத்தில்
தான் ஏற்படும். அங்கு வீட்டுக்கு வீடு ஒளிமயமாக இருக்கும்.
அதாவது ஒவ்வொரு ஆத்மாவின் ஜோதியும் ஏற்றப்பட்டு இருக்கும்.
இங்கு இருளாக இருக்கிறது. ஆத்மாக்கள் அசுர புத்தியுடையவர் களாக
ஆகிவிட்டனர். அங்கு ஆத்மாக்கள் தூய்மையாக இருப்பதால் தெய்வீக
புத்தியுடன் இருப்பர். ஆத்மா தான் பதீதமாகவும், ஆத்மா தான்
பாவனமாகவும் ஆகிறது. இப்பொழுது நீங்கள் ஒரு பைசாவிற்கும் உதவாத
நிலையிலிருந்து மதிப்பானவர்களாக (பவுண்ட்) ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். ஆத்மா தூய்மையடைவதன் மூலம் சரீரமும்
தூய்மையானதாகக் கிடைக்கும். இங்கு ஆத்மா அசுத்தமாக இருப்பதால்
சரீரம் மற்றும் உலகம் அசுத்தமாக இருக்கிறது. இந்த விசயங்களை
உங்களிலும் மிகச் சிலர் மட்டுமே யதார்த்தமாகப்
புரிந்திருக்கிறீர்கள், மேலும் அப்படிப்பட்டவர்களிடத்தில்
குஷியும் இருக்கும். வரிசைக்கிரமமான முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள். கிரஹச்சாரமும் இருக்கிறது. சில நேரங்களில்
இராகு திசை அமர்ந்து விடும் பொழுது, ஆச்சரியப்பட்டு ஞானத்தை
ஏற்று, பிறகு வெளியே சென்று விடுகின்றனர். குரு திசை மாறி இராகு
திசை ஆகி விடுகிறது. காம விகாரத்தில் சென்று விட்டால் இராகு
திசை அமர்ந்து விடும். குத்துச் சண்டை (மல்யுத்தம்) இருக்கிறது
அல்லவா! தாய்மார்களாகிய நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.
ஏனெனில் தாய்மார்கள் வீட்டைப் பாதுகாப்பவர்கள் ஆவர். குளவி
வீட்டை உருவாக்கக் கூடியது என்பது இப்பொழுது உங்களுக்குத்
தெரியும். வீட்டை உருவாக்கக் கூடிய மிக நல்ல கலைஞனாக இருக்கிறது,
அதனால் தான் வீட்டைப் பாதுகாக்கக் கூடியது என்ற பெயர்
இருக்கிறது. எவ்வளவு முயற்சி செய்கிறது! அதுவும் உறுதியான
மேஸ்திரி ! இரண்டு-மூன்று அறைகள் உருவாக்குகிறது. 3-4 புழுக்களை
எடுத்து வருகிறது. அதே போன்று நீங்களும் பிராமணிகளாக
இருக்கிறீர்கள். 1-2 பேரை உருவாக் கினாலும், 10-12 பேரை
உருவாக்கினாலும், 100 பேரை உருவாக்கினாலும், 500 பேரை உருவாக்
கினாலும் சரியே. மண்டபம் கட்டுகிறீர்கள் எனில் இதுவும் வீடு
கட்டுவது போன்று ஆகிவிடுகிறது அல்லவா! இதில் அமர்ந்து கொண்டு
அனைவருக்கும் பூம் பூம் என்று (ஞானம்) கூறுகிறீர்கள். பிறகு
சிலர் புரிந்து கொண்டு புழுவிலிருந்து பிராமணர்களாக ஆகின்றனர்,
சிலர் அழுகி விடுகின்றனர் அதாவது இந்த தர்மத்தை சார்ந்தவர்களாக
இல்லை. இந்த தர்மத்தைச் சார்ந்தவர்களுக்குத் தான் முழுமையான
முறையில் டச் (பதியும்) ஏற்படும். இருப்பினும் நீங்களும்
மனிதர்கள் அல்லவா! உங்களது சக்தியானது அவைகளை விட (குளவியை விட)
அதிகமாக இருக்கிறது. 2 ஆயிரம் பேர்களுக்கு முன்பும் நீங்கள்
சொற்பொழிவு செய்ய முடியும். நாளடைவில் நீங்கள் 4-5 ஆயிரம் பேர்
உள்ள சபைக்கும் செல்வீர்கள். குளவியை உங்களுடன்
ஒப்பிடப்படுகிறது. இன்றைய நாட் களில் சந்நியாசிகளும்
வெளிநாடுகளுக்குச் சென்று நாம் பாரதத்தின் பழமையான இராஜ
யோகத்தைக் கற்பிக்கிறோம் என்றும் கூறுகின்றனர். இன்றைய
நாட்களில் தாய்மார்களும் காவி உடை அணிந்து கொண்டு செல்கின்றனர்,
அயல்நாட்டினரை ஏமாற்றி விட்டு வருகின்றனர். பாரதத்தின் பழமையான
யோகத்தை பாரதத்திற்குச் சென்று கற்றுக் கொள்ளுங்கள் என்று அவர்
களிடம் கூறுகின்றனர். பாரதத்திற்குச் சென்று கற்றுக்
கொள்ளுங்கள் என்று நீங்கள் ஒருபொழுதும் கூறுவது கிடையாது.
நீங்கள் அயல்நாடுகளுக்குச் சென்றால் அங்கேயே அமர்ந்து கொண்டு
புரிய வைப்பீர்கள் - இந்த இராஜயோகம் நீங்கள் கற்றுக் கொண்டால்
உங்களது பிறப்பு சொர்க்கத்தில் ஏற்பட்டு விடும். இதில் ஆடைகளை
மாற்ற வேண்டிய விசயமே கிடையாது. இங்கேயே தேகத்தின் அனைத்து
சம்பந்தங்களையும் மறந்து தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை
நினைவு செய்யுங்கள். தந்தை தான் விடுவிப்பவராக, வழிகாட்டியாக
இருக்கின்றார். அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்கின்றார்.
இப்பொழுது நீங்கள் சதோ பிரதானமாக ஆக வேண்டும். நீங்கள் முதலில்
தங்கயுகத்தில் இருந்தீர்கள். இப்பொழுது இரும்பு யுகத்தில்
இருக்கிறீர்கள். முழு உலகமும், அனைத்து தர்மத்தினரும் இரும்பு
யுகத்தில் இருக்கின்றனர். எந்த தர்மத்தினரைச் சந்தித்தாலும்
அவர்களிடம் கூறுங்கள் - தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு
என்னை நினைவு செய்தால் நீங்கள் பாவனம் ஆகிவிடுவீர்கள், பிறகு
நான் என் கூடவே அழைத்து செல்வேன் என்று தந்தை கூறுகின்றார்.
இந்த அளவிற்கு கூறினால் போதும், அதிகம் வேண்டாம். இது மிகவும்
எளிது. வீட்டுக்கு வீடு செய்தி கொடுத்ததாக உங்களது
சாஸ்திரங்களிலும் இருக்கிறது. யாராவது ஒருவர் இருந்து
விட்டாலும் அவர் புகார் கொடுத்து விடுவார் - எனக்கு யாரும்
கூறவில்லை. தந்தை வந்திருக்கின்றார் எனில் முழுவதுமாக முரசு
கொட்ட வேண்டும். ஒருநாள் அனைவருக்கும் தெரிந்து விடும் -
சாந்திதாமம், சுகதாமத்தின் ஆஸ்தி கொடுப்பதற்காக தந்தை
வந்திருக்கின்றார். தெய்வீக தர்மம் இருந்த பொழுது வேறு எந்த
தர்மமும் கிடையாது. அனைவரும் சாந்திதாமத்தில் இருந்தனர்.
இப்படிப்பட்ட சிந்தனைகள் வர வேண்டும், சுலோகன் உருவாக்க
வேண்டும். தந்தை கூறுகின்றார் - தேக சகிதமாக அனைத்து
சம்பந்தங்களையும் விட்டு விடுங்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து
தந்தையாகிய என்னை நினைவு செய்தால் ஆத்மா தூய்மையாக ஆகிவிடும்.
இப்பொழுது ஆத்மாக்கள் அசுத்தமாக இருக்கின்றன. இப்பொழுது
அனைவரையும் தூய்மையாக்கி தந்தை வழிகாட்டியாக இருந்து திரும்பி
அழைத்துச் செல்வார். அனைவரும் அவரவர்களது பிரிவிற்கு சென்று
விடுவர். பிறகு தெய்வீக தர்மத்தினர் வரிசைக்கிரமமாக வருவர்.
எவ்வளவு எளிதானது! இது புத்தியில் தாரணை ஏற்பட வேண்டும். யார்
சேவை செய்கின்றார்களோ அவர்கள் மறைந்திருக்க முடியாது. தீமை
செய்பவர்களும் (டிஸ்சர்வீஸ்) மறைந்திருக்க முடியாது. சேவை
செய்பவர்களைத் தான் அழைக் கின்றனர். யாரால் சிறிதும் ஞானம் கூற
முடியாதோ அவர்களை அழைக்கமாட்டார்கள். அவர்கள் மேலும் பெயரைக்
கெடுத்து விடுவர். இவ்வாறு பி.கு க்கள் இருப்பார்களா என்ன?
என்று கேட்பர். முழுமையான பதிலளிப்பது கிடையாது. ஆக பெயர்
கெட்டு விடுகிறது அல்லவா! சிவபாபாவின் பெயரைக் கெடுப்பவர்
உயர்ந்த பதவி அடைய முடியாது. இங்கும் பாருங்கள் சிலர்
கோடீஸ்வரர் களாக இருக்கின்றனர், சிலர் இலட்சாதிபதிகளாக
இருக்கின்றனர், சிலர் பசியால் இறந்து கொண்டிருப்பதையும்
பார்கிறீர்கள். இவ்வாறு யாசிப்பவர்களும் வந்து இளவரசர்களாக
ஆவார்கள். இப்பொழுது குழந்தை களாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள்
- சொர்க்கத்தின் இளவரசரான ஸ்ரீகிருஷ்ணர் பிறகு யாசிப்பவராக
ஆகின்றார், பிறகு மீண்டும் யாசிப்பதிலிருந்து இளவரசராக ஆவார்.
இவர் யாசிப்பவராக இருந்தார் அல்லவா! சிறிது அதிகமாகவே
சம்பாதித்தார், அதுவும் குழந்தைகளாகிய உங்களுக்காகத் தான்.
இல்லை யெனில் உங்களுக்கு எப்படி பாலனை கொடுக்க முடியும்? இந்த
விசயங்கள் அனைத்தும் சாஸ்திரங்களில் கிடையாது. சிவபாபா வந்து
தான் கூறுகின்றார். உண்மையில் இவர் கிராமத்து சிறுவனாக
இருந்தார். பெயர் ஸ்ரீகிருஷ்ணர் கிடையாது. இது ஆத்மாவின்
விசயமாகும். அதனால் தான் மனிதர்கள் குழப்பமடைந்து விட்டனர். ஆக
சிவஜெயந்தியன்று ஒவ்வொருவரும் வீட்டுக்கு வீடு சித்திரங்களின்
மூலம் சேவை செய்ய வேண்டும் என்று பாபா புரிய வைக்கின்றார்.
எல்லையற்ற தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கான சொர்க்க இராஜ்யம்
விநாடியில் அடைவது எப்படி? வந்து புரிந்து கொள்ளுங்கள் என்று
எழுதி விடுங்கள். எவ்வாறு தீபாவளி நேரங்களில் மனிதர்கள்
கடைகளைத் திறந்து அமர்ந்திருப்பர்! நீங்களும் அழிவற்ற ஞான
இரத்தினங்களின் கடையைத் திறந்து அமர வேண்டும். உங்களது கடை
மிகவும் அலங்கரிக்கப்பட்ட கடையாக இருக்க வேண்டும். மனிதர்கள்
தீபாவளியன்று திறக் கின்றனர், நீங்கள் சிவஜெயந்தியன்று திறங்கள்.
சிவபாபா தான் அனைவரின் தீபத்தையும் ஏற்றுகின்றார், உங்களை
உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். அவர்கள் இலட்சுமியிடம்
அழியும் செல்வத்தைக் கேட்கின்றனர், ஆனால் இங்கு உங்களுக்கு
ஜெகதம்பாவிடமிருந்து உலக இராஜ்யம் கிடைக்கிறது. இந்த இரகசியத்தை
தந்தை புரிய வைக்கின்றார். பாபா எந்த சாஸ்திரங் களையும்
எடுத்துக் கொள்வது கிடையாது. நான் ஞானம் நிறைந்தவன் அல்லவா
என்று தந்தை கூறுகின்றார். ஆம், இந்தக் குழந்தை மிகவும் நன்றாக
சேவை செய்கின்றார், அதனால் தான் நினைவு வருகிறது என்பதை அறிவார்.
மற்றபடி ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை அறிவேன் என்பது கிடையாது.
சில நேரங்களில் இவர் பதீதமானவர் என்பது தெரிந்து விடுகிறது,
வெட்கம் ஏற்படுகிறது. அவர்களது முகம் உற்சாகமற்றதாக
ஆகிவிடுகிறது, ஆக பாபாவும் இவரிடம் கேளுங்கள் என்று கூறி
அனுப்பி வைக்கின்றார். இதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது.
சிலருக்காகக் கூறுகின்றார், அதற்காக அனைவருக்கும் கூறுவார்
என்பது கிடையாது. இவ்வாறு பலர் முகத்தை கருப்பாக்கிக்
கொள்கின்றனர். யார் வெளியே செய்வார்களோ அவர்கள் தங்களையே
நஷ்டப்படுத்திக் கொள்வர். உண்மை கூறுவதனால் சிறிது நன்மை
ஏற்படும், கூறா விட்டால் மேலும் நஷ்டப்படுத்திக் கொள்வர். பாபா
நம்மை தூய்மையாக்க வந்திருக்கின்றார், ஆனால் நான் என்னை
கருப்பான முகம் ஆக்கிக் கொள்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள
வேண்டும். இந்த உலகமே முட்கள் நிறைந்ததாகும். மனித முட்கள்
ஆகும். சத்யுகம் அல்லாவின் பூந்தோட்டம் என்று கூறப்படுகிறது.
மேலும் இது காடாகும். அதனால் தான் தந்தை கூறுகின்றார் -
எப்பொழுதெல்லாம் தர்ம நிந்தனை ஏற்படுகிறதோ அப்பொழுது நான்
வருகிறேன். முதல் நம்பர் ஸ்ரீகிருஷ்ணர் கடைசியில் என்ன
ஆகிவிடுகிறார் என்பதைப் பாருங்கள். இப்பொழுது அனைவரும் தமோ
பிரதானமாக இருக்கின்றனர். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே
இருக்கின்றனர். இவையனைத்தும் நாடகத்தில் இருக்கிறது. பிறகு
சொர்க்கத்தில் இவை எதுவும் இருக்காது. கருத்துக்கள் நிறைய
இருக்கின்றன, குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். வக்கீல்கள்
கருத்துக் கான புத்தகம் வைத்துக் கொள்கின்றனர் அல்லவா!
மருத்துவர்களும் புத்தகம் வைத்துக் கொள் கின்றனர். அதைப்
பார்த்து மருந்துகளைக் கொடுக்கின்றனர். ஆக குழந்தைகள் எவ்வளவு
நல்ல முறையில் படிக்க வேண்டும்! சேவை செய்ய வேண்டும்! பாபா
நம்பர்ஒன் மந்திரம் கொடுத்திருக் கின்றார் - மன்மனாபவ. தந்தை
மற்றும் ஆஸ்தியை நினைவு செய்தால் சொர்க்கத்திற்கு எஜமானர் களாக
ஆகிவிடுவீர்கள். சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர். ஆனால் சிவபாபா
என்ன செய்தார்? அவசியம் சொர்க ஆஸ்தி கொடுத்திருக்க வேண்டும்.
கொடுத்து 5 ஆயிரம் ஆண்டு காலம் ஆகியிருக்கிறது.
சொர்க்கத்திலிருந்து நரகம், நரகத்திலிருந்து சொர்க்கமாக ஆகும்.
தந்தை புரிய வைக்கின்றார் - குழந்தைகளே! யோகயுக்த் ஆகின்ற
பொழுது உங்களுக்கு ஒவ்வொரு விசயமும் நல்ல முறையில் புரிந்து
கொள்ள முடியும். ஆனால் யோகா சரியாகயில்லை, தந்தை யின் நினைவு
இல்லையெனில் எதுவும் புரிந்து கொள்ள முடியாது. விகர்மமும்
விநாசம் ஆகாது. யோகயுக்த் ஆகாமல் உயர்ந்த சத்கதியும் ஏற்படுவது
கிடையாது, பாவங்கள் இருந்து விடுகிறது. பிறகு பதவியும் குறைந்து
விடுகிறது. பலருக்கு யோகா முற்றிலும் இருப்பதே கிடையாது, பெயர்,
உருவத்தில் மாட்டிக் கொண்டு இருக்கின்றனர், அவர்களது நினைவே
வந்து கொண்டிருந்தால் விகர்மம் எப்படி அழியும்? தந்தை
கூறுகின்றார் - ஆத்ம அபிமானியாக ஆகுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய்யும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சிவஜெயந்தியின் பொழுது அழிவற்ற ஞான இரத்தினத்தின் கடை
திறந்து சேவை செய்ய வேண்டும். வீட்டுக்கு வீடு ஒளிமயமாக்கி
அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும்.
2) சத்திய தந்தையிடம் சத்தியமானவர்களாக இருக்க வேண்டும், எந்த
பாவ காரியமும் செய்து விட்டு மறைக்கக் கூடாது. எந்த பாவமும்
இருந்து விடாத அளவிற்கு யோகயுக்தாக ஆக வேண்டும். யாருடைய பெயர்,
உருவத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது.
வரதானம்:
நான் என்ற உணர்வை நீக்கக் கூடிய பிரம்மா பாபா சமமான சிரேஷ்ட
தியாகி ஆகுக!
சம்பந்தத்தின் தியாகம், வைபவத்தின் தியாகம் என்பது பெரிய
விசயமல்ல, ஆனால், ஒவ்வொரு காரியத்திலும், சங்கல்பத்திலும்
மற்றவர்களை முன்னே வைக்கும் பாவனையுடையவர் என்றால் தான் என்ற
நிலையை நீக்கிவிடுவதாகும், முதலில் தாங்கள் இதுவே உயர்ந்த
தியாகமாகும். இதுவே தான் என்ற உணர்வை விலக்குவதாகும். எப்படி
பிரம்மா பாபா சதா குழந்தைகளை முன்னே வைத்தார். நான் முன்னே
இருப்பேன் என்பதிலும் தியாகியாக இருந்தார், இந்த தியாகத்தின்
காரணத்தினால் அனைவரைக்காட்டிலும் முன்னே அதாவது நம்பர் ஒன்னில்
செல்லும் பலன் கிடைத்தது. எனவே பாபாவை பின்பற்றுங்கள்.
சுலோகன்:
மற்றவர்களின் குறையை கண்டுபிடிப்பது கூட துக்கம் கொடுப்பதாகும்
தனது சக்திசாலியான மனதின் மூலம் சக்தி கொடுக்கும் சேவை
செய்யுங்கள்
எப்படி உயர்ந்த கோபுரத்திலிருந்து சகாஷ் கொடுக்கிறார்கள், ஒளி
சக்தியைப் பரப்புகிறார்கள். அதுபோல குழந்தைகளாகிய நீங்களும்
உயர்ந்த ஸ்திதி அதாவது உயர்ந்த இடத்தில் அமர்ந்து குறைந்ததிலும்
குறைந்தது 4 மணி நேரம் ஒளி - சக்தி கொடுங்கள். சூரியன் மேலே
இருக்கும் போது தான் உலகிற்கு ஒளி தருகிறது. ஆகையால் சாகார
உலகத்திற்கு சக்தி கொடுப்பதற்காக உயர்ந்த இடத்தில்
வீற்றிருப்பவராக ஆகுங்கள்.