02.03.25    காலை முரளி            ஓம் சாந்தி  15.10.2004      பாப்தாதா,   மதுபன்


ஒருவரைப் பிரத்தியட்சம் செய்வதற்காக ஒரே ரசனையின் ஸ்திதியை உருவாக்குங்கள், சுவமானத்தில் இருங்கள், அனைவருக்கும் மரியாதை கொடுங்கள்

இன்று பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் மூன்று பாக்கியத்தின் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒன்று பரமாத்ம பாலனையின் பாக்கியம், பரமாத்ம படிப்பின் பாக்கியம், பரமாத்ம வரதானங்களின் பாக்கியம். இந்த மூன்று நட்சத்திரங்களை அனைவரின் நெற்றியின் நடுவில் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்களும் கூட உங்கள் பாக்கியத்தின் ஜொலிக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? காணப்படு கின்றனவா? அத்தகைய சிரேஷ்ட பாக்கியத்தின் நட்சத்திரங்கள் முழு உலகத்திலும் வேறு யாருக்கும் நெற்றியில் ஜொலித்துக் கொண்டிருப்பதாகக் காணப்படவில்லை. இந்த பாக்கியத்தின் நட்சத்திரங்களோ, அனைவரின் நெற்றியிலும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஜொலிப் பில் அங்கங்கே வேறுபாடு காணப்படுகிறது. சிலருக்கு அந்த ஜொலிப்பு மிக சக்திசாலியாக உள்ளது. சிலருக்கு ஜொலிப்பு மத்யமாக உள்ளது. பாக்கிய விதாதா குழந்தைகள் அனைவருக்கும் பாக்கியத்தை ஒரே சமமாகத் தான் கொடுத்துள்ளார். சிலருக்கு மட்டும் சிறப்பாக என்று எதுவும் தரவில்லை. பாலனையும் ஒரே மாதிரி தான். படிப்பும் ஒன்றாகத் தான். வரதானமும் ஒரே மாதிரி தான் அனைவருக்கும் கிடைத்துள்ளது. முழு உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் படிப்பு எப்போதும் ஒன்று தான். இது ஓர் அற்புதம் - ஒரே தேதி மற்றும் அமிர்த வேளையின் சமயமும் அவரவர் தேசத்தின் கணக்குப்படி ஒன்றாக இருக்கவும் செய்கின்றன வரதானமும் ஒன்று தான். சுலோகனும் கூட ஒன்று தான். வித்தியாசம் உள்ளதா என்ன? அமெரிக்கா மற்றும் லண்டனுக் கிடையில் வித்தியாசம் உள்ளதா? இல்லை அல்லவா? பிறகு ஏன் வித்தியாசம்?

அமிர்த வேளையின் பாலனை நாலாபுறமும் பாப்தாதா ஒரே மாதிரி தான் செய்கிறார். நிரந்தர நினைவுக்கான விதியும் அனைவருக்கும் ஒன்றாகத் தான் கிடைக்கிறது. பிறகு நம்பர்வார் ஏன்? விதி ஒன்று தான். பிறகு சித்தியின் பிராப்தியில் வித்தியாசம் ஏன்? பாப்தாதாவுக்கு நாலாபுறம் உள்ள குழந்தைகளிடம் உள்ள அன்பும் ஒரே மாதிரி தான் உள்ளது. பாப்தாதாவின் அன்பில், புருஷார்த்தத்தின் படி நம்பரில் கடைசி நம்பராக இருந்தாலும் பாப்தாதாவின் அன்பு கடைசி நம்பராக இருந்தாலும் அதே தான். மேலும் அன்போடு கூடவே கடைசி நம்பர் மீது இரக்கமும் உள்ளது - கடைசி நம்பரில் உள்ளவரும் வேகமாகச் சென்று முதல் நம்பரில் வர வேண்டும் என்பதாக. நீங்கள் அனைவரும் தூர-தூரத்திலிருந்து வந்து சேர்ந்திருப்பவர்கள், எப்படி வந்து சேர்ந்தீர்கள்? பரமாத்ம அன்பு உங்களை ஈர்த்து இங்கே கொண்டு சேர்த்துள்ளது இல்லையா? அன்பின் கயிற்றில் ஈர்க்கப்பட்டு வந்து விட்டீர்கள். ஆக, பாப்தாதாவுக்கு அனைவர் மீதும் அன்பு உள்ளது. அந்த மாதிரி புரிந்து கொள்கிறீர்களா அல்லது கேள்வி எழுகிறதா - என்னிடம் அன்பு உள்ளதா? அல்லது குறைவாக உள்ளதா? பாப்தாதாவின் அன்பு ஒவ்வொரு குழந்தையிடமும் ஒருவரைக் காட்டிலும் மற்றவரிடம் அதிகமாக உள்ளது. மேலும் இந்தப் பரமாத்ம அன்பு தான் குழந்தைகள் அனைவரின் விசேஷ பாலனைக்கு ஆதாரம் ஆகும். ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொள்கிறார்கள்? - எனது அன்பு பாபாவிடம் அதிகமா அல்லது மற்றவரின் அன்பு அதிகமா? என்னுடையது குறைவாக உள்ளதா? அந்த மாதிரி புரிந்து கொள்கிறீர்களா? அப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் இல்லையா -எனது அன்பு தான்! என்னுடைய அன்பு - அப்படித் தானே? பாண்டவர்கள் அப்படியா? ஒவ்வொரு வரும் சொல்வார் - என்னுடைய பாபா. இப்படிச் சொல்ல மாட்டார்கள் - சென்டர் இன்சார்ஜின் பாபா, தீதியின் பாபா, ஜானகி தாதியின் பாபா என்று சொல்வீர்களா? சொல்ல மாட்டீர்கள். என்னுடைய பாபா என்று சொல்வீர்கள். என்னுடையவர் எனச் சொல்லி விட்டீர்கள். பாபாவும் என்னுடையவர்கள் எனச் சொல்லி விட்டார் என்றால் ஒரு மேரா (என்னுடையவர்) என்ற வார்த்தையிலேயே குழந்தைகள் பாபாவுடையவர்களாக ஆகி விட்டார்கள் மற்றும் பாபா குழந்தைகளுடையவர் ஆகி விட்டார். இதில் உழைப்பு இருந்ததா என்ன? உழைக்க வேண்டி இருந்ததா? கொஞ்சம்-கொஞ்சம்? இல்லையா? எப்போதாவது அது போல் இருக்கிறதா? இல்லையா? இருக்கிறது. பிறகு உழைக்க வேண்டியது இருக்கிறது என்றால் என்ன செய்கிறீர்கள்? களைத்து விடுகிறீர்களா? மனதார, அன்போடு சொல்லுங்கள் - மேரா பாபா. அப்போது உழைப்பு அன்பாக மாறி விடும். மேரா பாபா என்று சொன்னதுமே சப்தம் பாபாவிடம் சென்று சேர்ந்து விடுகிறது மற்றும் பாபா அதிகப்படியான உதவி தருகிறார். ஆனால் இது மனதின் கொடுக்கல்-வாங்கல். நாக்கின் கொடுக்கல்-வாங்கல் இல்லை. மனதின் கொடுக்கல்-வாங்கல். ஆக, மனதின் கொடுக்கல்-வாங்கல் செய்வதில் நீங்கள் சாமர்த்தியசாலிகள் தாம் இல்லையா? (அதைச் செய்வ தற்கு) வருகிறது இல்லையா? பின்னால் இருப்பவர்களுக்கு வருகிறதா? அதனால் தான் வந்து சேர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? ஆனால் அனைவரை விடவும் தூரதேசி யார்? அமெரிக்காவா? அமெரிக்காக்காரர்கள் தூரதேசத்தவரா அல்லது பாபா தூரதேசத்தவரா? அமெரிக்காவோ இந்த உலகத்தில் உள்ளது. பாபாவோ வேறொரு உலகத்திலிருந்து வருகிறார். ஆக, அனைவரைக் காட்டிலும் தூரதேசி யார்? அமெரிக்கா இல்லை. அனைவரை விடவும் தூரதேசி பாப்தாதா. ஒருவர் ஆகார (சூட்சும) வதனத்திலிருந்து வருகிறார், ஒருவர் பரந்தாமத்திலிருந்து வருகிறார். ஆக, அமெரிக்கா அதற்கு முன்னால் என்ன? ஒன்றுமே இல்லை.

ஆக, இன்று தூரதேசி பாபா இந்த சாகார உலகின் தூரதேசி குழந்தைகளோடு சந்தித்துக் கொண்டிருக்கிறார். நஷா உள்ளது இல்லையா? இன்று நமக்காக பாப்தாதா வந்திருக்கிறார். பாரதவாசிகளோ பாபாவுடைவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இரட்டை வெளிநாட்டினரைப் பார்த்து பாப்தாதா விசேஷமாகக் குஷியடைகிறார். ஏன் குஷியடைகிறார்? பாப்தாதா பார்த்திருக் கிறார் - பாரதத்திலோ பாபா வந்திருக்கிறார், அதனால் பாரவாசிகளுக்கு இந்த நஷா அதிகப்படியாக உள்ளது. ஆனால் இரட்டை வெளிநாட்டினர் பல்வேறு கலாச்சாரஙகளைக் கொண்டிருந் தாலும் பிராமணக் கலாச்சாரத்திற்கு மாறி விட்டுள்ளனர். அதனால் அவர்கள் மீது அதிக அன்பு உள்ளது. மாறி விட்டீர்கள் இல்லையா? இப்போதோ சங்கல்பம் வருவதில்லை - இது பாரதத்தின் கலாச்சாரம், நமது கலாச்சாரமோ வேறு? இல்லை. இப்போது பாப்தாதா ரிசல்ட்டில் பார்க்கிறார் - அனைவரும் ஒரே கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாக ஆகி விட்டனர். எங்கே இருப்பவர்களாயினும் சாகார சரீரத்தினால் தேசம் வெவ்வேறாக இருந்தாலும் ஆத்மா பிராமணக் கலாச்சாரத்தினுடைய தாக உள்ளது. மேலும் இரட்டை வெளிநாட்டினரின் ஒரு விஷயம் பாப்தாதாவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எது என்று தெரியுமா? (விரைவாக சேவை சேவையில் ஈடுபடுகின்றனர்) இன்னும் சொல்லுங்கள். (வேலையும் செய்கின்றனர், சேவையும் செய்கின்றனர்) அது போலவோ இந்தியா விலும் கூட செய்கிறார்கள். (எது நடந்தாலும் உண்மையோடு தங்களின் பலவீனத்தைச் சொல்லி விடுகின்றனர். ஒளிவு மறைவு இல்லாதவர்கள்) இந்தியர்கள் ஒளிவு மறைவற்றவர்களாக இல்லையா?

பாப்தாதா இதைப் பார்த்திருக்கிறார் - தூரத்தில் இருந்தாலும் பாபாவின் அன்பின் காரணத்தால் அன்பில் பெரும்பாலோர் பாஸ். பாரதத்திற்கோ பாக்கியம் இருக்கவே செய்கிறது. ஆனால் தூத்திலிருந்தாலும் அனைவரும் பாஸ். பாப்தாதா கேட்பாரானால் அன்பில் சதவிகிதம் உள்ளதா என்ன? பாபாவிடம் அன்பு என்ற பாடத்தில் சதவிகிதம் உள்ளதா? அன்பில் 100 சதவிகிதம் என யார் நினைக்கிறார்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். (அனைவரும் கை உயர்த்தினர்) நல்லது, 100 சதவிகிதம்? பாரதவாசிகள் கை உயர்த்தவில்லை? பாருங்கள், பாரதத்திற்கோ அனைத்திலும் பெரிய பாக்கியம் கிடைத்துள்ளது - பாபா பாரதத்தில் தான் வருகிறார். இதில் பாபாவுக்கு அமெரிக்கா பிடிக்கவில்லை. ஆனால் பாரதம் பிடித்திருக்கிறது. இவர்கள் (அமெரிக்காவின் காயத்திரி பெஹன்) முன்னால் அமர்ந்துள்ளார். அதனால் அமெரிக்காவைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தூரத்தில் இருந்தாலும் அன்பு நன்றாக உள்ளது. பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன, ஆனாலும் பாபா-பாபா எனச் சொல்லி அதை முடித்து விடுகின்றனர்.

அன்பிலோ பாப்தாதா பாஸாக்கி விட்டார். இப்போது எதில் பாஸாக வேண்டும்? ஆகவும் வேண்டும் இல்லையா? இருக்கவும் செய்கிறது, ஆகவும் வேண்டும். ஆக, இப்போதைய சமயத்தின் பிரமாணம் பாப்தாதா இதைத் தான் விரும்புகிறார் - ஒவ்வொரு குழந்தையிடமும் மாற்றத்தின் சக்தி யினுடைய சதவிகிதம், எப்படி அன்பின் பாடத்தில் அனைவரும் கை உயர்த்தினீர்கள், அனைவரும் கை உயர்த்தினீர்கள் இல்லையா? அவ்வளவு சுய மாற்றத்திற்கான தீவிர வேகம் உள்ளதா? இதில் பாதி கை உயர்த்துவீர்களா, அல்லது முழுமையாக உயர்த்துவீர்களா? என்ன உயர்த்துவீர்கள்? மாற்றம் செய்யவும் செய்கிறீர்கள். ஆனால் சமயம் பிடிக்கிறது. சமயத்தின் சமீபத்தின் பிரமாணம் அந்த மாதிரி தீவிரமாக வேண்டும் - காகிதத்தின் மீது புள்ளி வைக்கிறீர்கள் என்றால் எவ்வளவு நேரத்தில் முடிகிறது? எவ்வளவு நேரம் பிடிக்கிறது? புள்ளி வைப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது? ஒரு விநாடி நேரம் கூட இல்லை. சரி தானே? ஆக, அவ்வளவு தீவிர வேகம் உள்ளதா? இதில் கை உயர்த்தச் சொல்லட்டுமா? இதில் பாதி கை உயர்த்துவீர்கள். சமயத்தின் வேகம் அதிகமாக உள்ளது. சுய மாற்றத்தின் சக்தி அந்த மாதிரி தீவிரமாக இருக்க வேண்டும். மேலும் எப்போது மாற்றம் எனச் சொல்கிறீர்களோ, மாற்றத்திற்கு முன்னால் முதலில் சுயம் என்ற சொல்லை சதா நினைவு வையுங்கள். மாற்றம் இல்லை, சுய மாற்றம். பாப்தாதாவுக்கு நினைவுள்ளது - குழந்தைகள் ஒரு வருடத்திற்காக உறுதிமொழி கொடுத்திருந்தீர்கள் - சம்ஸ்கார மாற்றத்தின் மூலம் உலக மாற்றத்தைக் கொண்டு வருவோம். நினைவுள்ளதா? வருடத்தைக் கொண்டாடி னீர்கள் - சம்ஸ்கார மாற்றத்தின் மூலம் உலக மாற்றம். ஆக, உலகத்தின் வேகமோ அதிக பட்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் சம்ஸ்கார மாற்றத்தின் வேகம் அந்த அளவு வேகமாக உள்ளதா? அதே போல் வெளிநாட்டின் விசேஷதா - பொதுவான வடிவத்தில் வெளிநாட்டினர் வேகமாகச் செல் கின்றனர். வேகப் படுத்துகின்றனர். எனவே பாபா கேட்கிறார் - சம்ஸ்கார மாற்றத்தில் வேகமாக இருக்கிறீர்களா? ஆக, பாப்தாதா சுயமாற்றத்தின் வேகத்தை இப்போது தீவிரமானதாகப் பார்க்க விரும்புகிறார். அனைவரும் கேட்கிறீர்கள் இல்லையா - பாப்தாதா எதை விரும்புகிறார்? உங்களுக் குள் ஆன்மிக உரையாடல் செய்கிறீர்கள் இல்லையா? அப்போது ஒருவர் மற்றவரிடம் கேட்கிறீர்கள் - பாப்தாதா எதை விரும்புகிறார்? ஆக, பாப்தாதா இதைத் தான் விரும்புகிறார். ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட வேண்டும். எப்படி காகிதத்தில் புள்ளி வைக்கிறீர்கள் இல்லையா? அதை விடவும் வேகமாக, மாற்றத்தில் எது யதார்த்தம் அல்லாததாக உள்ளதோ, அதில் புள்ளி வைக்க வேண்டும். புள்ளி வைக்க வருகிறது இல்லையா? ஆனால் சில நேரம் கேள்விக்குறி ஆகி விடுகிறது. வைப்பது புள்ளி, ஆனால் அது கேள்விக்குறி ஆகி விடுகிறது. இது ஏன், இது என்ன? இந்த ஏன், என்ன இது புள்ளியைக் கேள்விக்குறியாக மாற்றி விடுகிறது. பாப்தாதா இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறார் - ஒய்-ஒய் (ஏன்-ஏன்) எனக் கேட்காதீர்கள். என்ன சொல்ல வேண்டும்? வாஹ்-வாஹ்! (ஆஹா-ஆஹா) எனச் சொல்ல வேண்டும். ஃப்ளை அல்லது ஆஹா. ஆஹா சொல்லுங்கள், அல்லது ஃப்ளை (பறப்பது) சொல்லுங்கள். ஒய்-ஒய் சொல்லாதீர்கள். ஒய்-ஒய் எனச் சொல்வது சீக்கிரம் வருகிறது இல்லையா? வந்து விடுகிறதா? எப்போது ஒய் வருகிறதோ, அப்போது அதை வாஹ்-வாஹ்! எனச் சொல்லுங்கள். யாராவது ஏதேனும் செய்தாலும் என்ன சொன்னாலும் ஆஹா டிராமா, ஆஹா! இவர் ஏன் செய்கிறார்? இவர் ஏன் சொல்கிறார்? இவர் செய்தால் நான் செய்கிறேன் என்று அப்படி இல்லை.

இப்போது பாப்தாதா பார்த்தார் - அதைச் சொல்லட்டுமா? மாற்றம் செய்ய வேண்டும் இல்லையா? ஆக, இப்போதைய ரிசல்ட்டில் வெளிநாடுகளில் என்றாலும் சரி, இந்தியாவில் என்றாலும் சரி, இரண்டு பக்கமும் ஒரு விஷயத்தில் அலை உள்ளது, அது என்ன? இது நடந்தாக வேண்டும், இது கிடைத்தாக வேண்டும் நான் என்ன யோசிக்கிறேனோ, சொல்கிறேனோ அது நடந்தாக வேண்டும் சங்கல்பத்தில் கூட இந்த வேண்டும்-வேண்டும் என்பது இருந்தால் அது வீண் (வேஸ்ட்) சிந்தனை ஆகும். அது சிறந்தவராக (பெஸ்ட்) ஆக விடாது. பாப்தாதா அனைவரின் சிறந்தவற்றின் சார்ட்டைச் சிறிது நேரம் நோட் செய்தார். சோதித்தார். பாப்தாதாவிடமோ சக்திசாலி மெஷினரி உள்ளது இல்லையா? உங்களிடம் உள்ளது போன்ற கம்ப்யூட்டர் இல்லை. உங்கள் கம்ப்யூட்டரோ தவறாக வும் காண்பிக்கும். ஆனால் பாப்தாதாவிடம் சக்திசாலி மெஷினரி மிகவும் வேகமானது. ஆக, பாப்தாதா பார்த்தார் - பெரும்பாலானவர்களுக்கு வீண் சிந்தனைகள் நாள் முழுவதும் நடைபெறு கின்றன. என்ன நடக்கிறது என்றால், இந்த வீண் சங்கல்பங்களின் எடை அதிகமாகி விடுகின்றது. மற்றும் சிறந்த எண்ணங்களின் எடை குறைந்து விடுகிறது. ஆக, இடையிடையே நடைபெறும் இந்த வீண் எண்ணங்கள் புத்தியை பாரமாக்கி விடுகின்றன. புருஷார்த்தத்தை பாரமாக ஆக்கி விடுகின்றனர். சுமை இருக்கிறது இல்லையா, அது தன் பக்கமாகக் கவர்ந்து இழுத்து விடுகிறது. எனவே சுப சங்கல்பம், சுய முன்னேற்றத்திற்கான லிஃப்ட், ஏணிப்படியும் இல்லை, அது லிஃப்ட். அது குறைந்த காரணத்தால் உழைப்பு என்ற ஏணிப்படி ஏற வேண்டியதாக உள்ளது. இரண்டு சொற் களை மட்டும் நினைவு செய்யுங்கள் - வீணானவற்றை முடித்து விடுவதற்காக அமிர்தவேளை தொடங்கி இரவு வரை இரண்டு சொற்கள் சங்கல்பத்தில், பேச்சில் மற்றும் கர்மத்தில், காரியத்தில் கொண்டு வாருங்கள். நடை முறையில் கொண்டு வாருங்கள். அந்த இரண்டு சொற்கள் - ஸ்வமான் (சுயமரியாதை) மற்றும் சம்மான் (மதிப்பு- மரியாதை) சுயமரியாதையில் இருக்க வேண்டும் மற்றும் மரியாதை கொடுக்க வேண்டும். ஒருவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும், சுயமரியாதை யில் இருக்க வேண்டும். இரண்டுக்கும் சமநிலை இருக்க வேண்டும். சில நேரம் சுய மரியாதையில் இருந்து, சில நேரம் மரியாதை கொடுப்பதில் குறைவு ஏற்பட்டு விடுகிறது. யாராவது மரியாதை கொடுத்தால் நான் கொடுப்பேன் என்று அப்படி அல்ல. நான் வள்ளல் ஆக வேண்டும். சிவசக்தி பாண்டவ சேனை வள்ளலின் குழந்தைகள் வள்ளல்கள். அவர் கொடுத்தால் நான் கொடுப்பேன் என்றால் அது (கொடுக்கல்-வாங்கல்) வியாபாரமாகி விடுகிறது, வள்ளல் இல்லை. ஆக, நீங்கள் வியாபாரியா? அல்லது வள்ளலா? வள்ளல் ஒரு போதும் யாசிப்பவராக ஆக மாட்டார். தனது உள்ளுணர்வு மற்றும் பார்வையில் இதே லட்சியம் வையுங்கள் - நான் சதா ஒவ்வொரு

வரு காகவும் அதாவது அனைவர்க்காகவும், அஞ்ஞானியாக இருந்தாலும், ஞானியாக இருந்தாலும், அஞ்ஞானிகளுக்காகப் பிறகும் கூட சுப பாவனை வைக்கிறீர்கள். ஆனால் ஞானம் நிறைந்த ஆத்மாக்களுக்காகத் தங்களுக்குள் ஒவ்வொரு சமயம் சுப பாவனை, சுப விருப்பம் இருக்க வேண்டும். உள்ளுணர்வு அந்த மாதிரி உருவாக வேண்டும், பார்வை அந்த மாதிரி ஆகிவிட வேண்டும். பார்வையில் ஸ்தூல பிந்தி உள்ளதென்றால் எப்போதாவது பிந்தி மறைந்து விடுகிறதா என்ன? கண்களில் இருந்து பிந்தி மறைந்து விடுமானால் என்னவாகி விடும்? பார்க்க முடியுமா? ஆக, எப்படி கண்களில் பிந்தி உள்ளதோ, அது போல் ஆத்மா அல்லது பாபா பிந்தி கண்களில் நிறைந்திருக்க வேண்டும். எப்படி பார்க்கக் கூடிய பிந்தி ஒரு போதும் மறைவதில்லை. அது போல் ஆத்மா அல்லது பாபாவின் ஸ்மிருதியின் பிந்தி உள்ளுணர்வில் இருந்து, திருஷ்டியில் இருந்து, மறையக் கூடாது. தந்தையைப் பின்பற்ற வேண்டும் இல்லையா? ஆகவே எப்படி பாபாவின் திருஷ்டி மற்றும் உள்ளுணர்வில் ஒவ்வொரு குழந்தைக்காவும் சுய மரியாதை உள்ளது, மரியாதை உள்ளது, அதே போல் தனது திருஷ்டி உள்ளுணர்வில் சுயமரியாதை, மரியாதை. மரியாதை கொடுப்பதால் மனதில் என்ன வருகிறதோ, - அதாவது இவர் மாறிவிட வேண்டும், இதைச் செய்யக்கூடாது, இவர் இப்படி இருக்க வேண்டும், அது கல்வி போதனையால் நடைபெறாது. ஏனென்றால் மரியாதை கொடுப்பீர்களானால் மனதில் என்ன சங்கல்பம் உள்ளதோ, இது நடக்கட்டும், இவர் மாறட்டும், இவர் இப்படிச் செய்யட்டும் என்றால், அவர் செய்யத் தொடங்கி விடுவார். உள்ளுணர்வினால் மாறுவார், சொல்வதால் மாற மாட்டார். ஆக, என்ன செய்வீர்கள்? சுய மரியாதை மற்றும் மரியாதை - இரண்டும் நினைவிருக்கும் இல்லையா? அல்லது சுய மரியாதை மட்டும் நினைவிருக்குமா? மரியாதை கொடுப்பது என்றால் மரியாதை பெறுவதாகும். யாருக்காவது மரியாதை கொடுப்பது என்றால் மரியாதைக்குரியவராக ஆவதாகும் எனப் புரிந்து கொள்ளுங்கள். ஆத்மிக அன்பின் அடையாளம் -- மற்றவர்களின் குறையைத் தன் சுப பாவனை, சுப விருப்பத்தின் மூலம் மாற்றம் செய்ய வேண்டும். பாப்தாதா இப்போது கடைசி செய்தியும் அனுப்பியுள்ளார் -- தற்போதைய சமயத்தில் தனது சொரூபத்தை இரக்கம் நிறைந்ததாக ஆக்குங்கள். கடைசிப் பிறவி யிலும் கூட உங்களது ஜட சித்திரங்கள் இரக்கமுள்ளவையாகி பக்தர்கள் மீது இரக்கம் காட்டு கின்றன. சித்திரங்கள் இவ்வளவு இரக்கத்துடன் இருக்கும் போது சைதன்யத்தில் என்ன நடக்கும்? சைதன்யமோ இரக்கத்தின் சுரங்கம். இரக்கத்தின் சுரங்கமாகி விடுங்கள். யார் வந்தாலும் இரக்கம் கொள்ள வேண்டும். இது தான் அன்பின் அடையாளம். செய்ய வேண்டும் இல்லையா? அல்லது வெறுமனே கேட்க வேண்டுமா? செய்தே ஆக வேண்டும், ஆகியே தீர வேண்டும். ஆக, பாப்தாதா என்ன விரும்புகிறார்? இதற்கான பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேள்வி கேட்கிறார்கள் இல்லையா? எனவே பாப்தாதா அதற்கான பதில கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய சமயம் சேவையில் நல்ல விருத்தி ஏற்பட்டுக் கொண்டுள்ளது. பாரதத்திலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, பாப்தாதா விரும்புவது -- அந்த மாதிரி யாராவது நிமித்த ஆத்மாவை உருவாக்குங்கள் -- ஏதேனும் விசேஷகாரியம் செய்து காட்ட வேண்டும். அந்த மாதிரி யாராவது சகயோகி ஆக வேண்டும் -- இது வரை என்ன செய்ய விரும்புகிறார்களோ, அதைச் செய்து காட்ட வேண்டும். புரோகிராம்களோ நிறைய செய்திருக்கிறீர்கள். எங்கெல்லாம் புரோகிராம் செய்திருக் கிறீர்களோ, அந்தப் புரோகிராம்கள் அனைத்திற்காகவும் பாப்தாதா பக்கமிருந்து வாழ்த்துகள் கொடுக்கிறார். இப்போது வேறு ஏதேனும் புதுமையைக் காட்டுங்கள். அது உங்கள் பக்கமிருந்து உங்களுக்கு சமமாக பாபாவைப் பிரத்தியட்சம் செய்ய வேண்டும். பரமாத்மாவின் படிப்பு என்பது அவர்கள் வாயிலிருந்து வெளிப்பட வேண்டும். பாபா-பாபா என்ற வார்த்தை மனதிலிருந்து வெளிப்பட வேண்டும். சகயோகி ஆகின்றனர். ஆனால் இப்போது இந்த ஒரு விஷயம் மிச்சம் உள்ளது - இந்த ஒருவர் தான், இந்த ஒருவர் தான், இந்த ஒருவர் தான் இந்த சப்தம் பரவ வேண்டும். பிரம்மா குமாரிகள் நல்ல காரியம் செய்து கொண்டிருக்கிறார்கள், செய்ய முடியும் என்று இது வரை வந்துள்ளனர். ஆனால் இது ஒன்று தான் மற்றும் பரமாத்ம ஞானம். பாபாவைப் பிரத்தியட்சம் செய்யக்கூடிய பயமற்றவர். நீங்கள் சொல்கிறீர்கள் பரமாத்மா காரியம் செய்து கொண்டிருக்கிறார், ஆனால் அவர்கள் சொல்ல வேண்டும் - எந்தப் பரமாத்மா தந்தையை அனைவரும் அழைத்துக் கொண்டிருக் கிறார்களோ, அந்த ஞானம் இது. இப்போது இந்த அனுபவத்தைச் செய்வியுங்கள். எப்படி உங்கள் மனதில் ஒவ்வொரு சமயமும் என்ன உள்ளது? பாபா, பாபா, பாபா இது போல் ஏதேனும் குரூப் வெளிப்பட வேண்டும். நன்றாக உள்ளது, இவர்களால் செய்ய முடியும் - இது வரை சரி தான். மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கடைசி மாற்றம் - ஒருவர், ஒருவர், ஒருவர். இது எப்போது நடக்கும் என்றால் பிராமணப் பரிவாரம் ஏக்ரஸ் ஸ்திதி உள்ளவர்களாக ஆகும் போது. இப்போது ஸ்திதி மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரே சமநிலையின் (ஏக்ரஸ்) ஸ்திதி ஒருவரைப் பிரத்தியட்சம் செய்யும். சரி தானே? ஆக, இரட்டை வெளிநாட்டினர் உதாôரணமாகுங்கள். மரியாதை கொடுப்பதில், சுய மரியாதையில் இருப்பதில் உதாரணம் ஆகுங்கள். நம்பர் பெற்றுக் கொள்ளுங்கள். நாலாபுறமும் எப்படி மோகத்தை வென்ற பரிவாரத்தின் உதாரணம் சொல்கிறார்கள் இல்லையா? அதில் சேவகனும், வேலைக்காரனும், அனைவருமே மோகத்தை வென்றவர்கள். அதே போல் எங்கே சென்றாலும், அமெரிக்கா சென்றாலும், ஆஸ்ட்ரேலியா சென்றாலும், ஒவ்வொரு தேசத்திலும் ஏக்ரஸ், ஏக்மத் (ஒரே வழி) சுயமரியாதை யில் இருப்பவர்கள், மரியாதை கொடுப்பவர்கள், இதில் நம்பர் பெறுங்கள். பெற முடியுமா?

நாலாபுறமும் உள்ள, பாபாவின் கண்களில் நிறைந்துள்ள, கண்களின் மணிகளான குழந்தைகளுக்கு, சதா ஏக்ரஸ் ஸ்திதியில் நிலைத்திருக்கும் குழந்தைகளுக்கு, சதா பாக்கியத்தின் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பாக்கியவான் குழந்தைகளுக்கு, சதா சுய மரியாதை மற்றும் மரியாதையும் கூடக்கூடவே வைக்கக்கூடிய குழந்தைகளுக்கு, சதா புருஷார்த்தத்தைத் தீவிரமாக வேகப்படுத்தும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள், ஆசிர்வாதங்கள் மற்றும் நன்ஸ்தே.

வரதானம்:
உண்மையான துணைவரின் துணையைப் பெறக்கூடிய, அனைவரிடமிருந்தும் விலகிய, அன்பான, மோகமற்றவர் ஆகுக.

தினந்தோறும் அமிர்தவேளையில் சர்வ சம்பந்தங்களின் சுகத்தை பாப்தாதாவிடமிருந்து பெற்று மற்றவர்களுக்கு தானம் கொடுங்கள். சர்வ சுகங்களின் அதிகாரி ஆகி, மற்றவர்களையும் ஆக்குங்கள். எந்த ஒரு காரியமாக இருந் தாலும் அதில் சாகாரத் துணை நினைவு வரக்கூடாது. பாபாவின் நினைவு வர வேண்டும். ஏனென்றால் உண்மையான நண்பராக பாபா இருக்கிறார். உண்மையான துணைவரின் துணையைப் பெற்றுக் கொள்வீர்களானால் சலபமாகவே அனைவரிட மிருந்தும் விலகியவராக, மற்றும் அன்பானவராக ஆகி விடுவீர்கள். யார் சர்வ சம்பந்தங்களிலும் ஒவ்வொரு காரியத்திலும் ஒரு பாபாவை நினைவு செய்கிறார்களோ, அவர்கள் சகஜமாகவே மோகமற்றவராக ஆகி விடுவார்கள். அவருக்கு எந்தப் பக்கமும் பற்றுதல், அதாவது வளைந்து கொடுத்தல் இருப்பதில்லை. எனவே மாயாவிடம் தோல்வியும் ஏற்பட முடியாது.

சுலோகன்:
மாயாவைப் பார்ப்பதற்கு அல்லது அறிந்து கொள்வதற்கு திரிகாலதரிசி மற்றும் திரிநேத்திரி ஆகுங்கள். அப்போது வெற்றியாளர் ஆவீர்கள்.

அவ்யக்த இஷாரா - சத்தியதா மற்றும் பண்பாடு என்ற கலாச்சாரத்தைத் தனதாக்கிக் கொள்ளுங்கள்

சத்தியதாவின் அடையாளம் பண்பாடு ஆகும். நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள், சத்தியதாவின் சக்தி உங்களிடம் உள்ளது என்றால் பண்பாட்டை ஒரு போதும் விடாதீர்கள். சத்தியதாவை நிரூபியுங்கள்.ஆனால் அதைப் பண்பாட்டுடன் செய்யுங்கள். பண்பாட்டை விட்டுவிட்டு, பண்பாடற்ற முறையில் வந்து சத்தியதாவை நிரூபிக்க விரும்புகிறீர்கள் என்றால் சத்தியம் நிரூபணம் ஆகாது. பண்பாடற்ற நிலையின் அடையாளமாவது பிடிவாதம் மற்றும் பண்பாட்டின் அடையாளம் பணிவு. சத்தியதாவை நிரூபிப்பவர் எப்போதும் தாம் பணிவாக இருந்து பண்பாடு பூர்வமாக விவகாரம் செய்வார்.