02-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இந்த பழைய (பதிதமான)
தூய்மையற்ற உலகத்தின் மீது உங்களுக்கு எல்லையில்லாத வைராக்கியம்
வேண்டும். ஏனெனில் நீங்கள் பாவனமாக (தூய்மையாக) ஆக வேண்டும்.
உங்களது முன்னேறும் கலையினால் எல்லோருக்கும் நன்மை ஆகி
விடுகிறது.
கேள்வி:
ஆத்மா தனக்குத் தானே எதிரி,
தனக்குத் தானே நண்பன் என்று கூறப்படுகிறது. உண்மையான நட்பு
என்பது என்ன?
பதில்:
ஒரு தந்தையின் ஸ்ரீமத்படி
எப்பொழுதும் நடந்து கொண்டே இருத்தல் - இது தான் உண்மையான நட்பு
ஆகும். ஒரு தந்தையை நினைவு செய்து தூய்மையாவது மற்றும்
தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி பெறுவது. இது போல நட்பு
கொள்வதற்கான யுக்தி தந்தை தான் கூறுகிறார். சங்கமயுகத்தில் தான்
ஆத்மா தனது நண்பனாக ஆகிறது.
பாடல்:
நீங்கள் இரவை இழந்தீர்கள்.. ..
..
ஓம் சாந்தி.
அப்படியும் இந்த பாடல் பக்தி மார்க்கத்தினுடையது ஆகும். முழு
உலகத்தில் யாரெல்லாம் பாடல்கள் பாடுகிறார்கள் அல்லது
சாஸ்திரங்கள் படிக்கிறார்கள், தீர்த்தங்களுக்கு செல்கிறார்களோ,
அவை அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும். ஞான மார்க்கம் என்று
எதற்குக் கூறப்படுகிறது, பக்தி மார்க்கம் என்று எதற்குக்
கூறப்படுகிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தான்
புரிந்துள்ளீர்கள். வேதம், சாஸ்திரங்கள், உபநிஷத்துக்கள் ஆகிய
இவை எல்லாமே பக்தி யினுடையது. அரைக்கல்பம் பக்தி நடக்கிறது
மற்றும் அரைக் கல்பம் பின்னர் ஞானத்தின் பிராலப்தம் (பலன்)
நடக்கிறது. பக்தி செய்து செய்து இறங்கவே வேண்டி உள்ளது. 84 மறு
பிறவிகள் எடுத்து கீழே இறங்கு கிறீர்கள். பிறகு ஒரு பிறவியில்
உங்களுக்கு முன்னேறும் கலை ஆகிறது. இதற்கு ஞான மார்க்கம் என்று
கூறப்படுகிறது. ஞானத்திற்கு ஒரு நொடியில் ஜீவன் முக்தி என்று
பாடப்பட்டுள்ளது. துவாபரயுகம் முதல் நடந்து வரும் இராவண
இராஜ்யம் முடிந்து போய் பிறகு இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது.
நாடகத்தில் உங்களுடைய 84 பிறவிகள் முடிவடையும் பொழுது மீண்டும்
முன்னேறும் கலையினால் அனைவருக்கும் நன்மை ஆகி விடுகிறது. இந்த
வார்த்தைகள் எங்கேயோ சிலவரிகள் சில சாஸ்திரங்களில் இருக்கிறது.
முன்னேறும் கலையினால் அனைவருக்கும் நன்மை .அனைவருக்கும் சத்கதி
செய்பவரோ ஒரே ஒரு தந்தை தான் அல்லவா? சந்நியாசி,
வைராக்கியமுள்ளவர் (உதாசி) போன்றோர் அநேக விதமானோர்
இருக்கிறார்கள். நிறைய கொள்கைகள் வழிகள் உள்ளன. எப்படி
சாஸ்திரங்களில் கல்பத்தின் ஆயுள் லட்சக்கணக்கான வருடங்கள் என்று
எழுதி உள்ளார்கள். இப்பொழுது 10 ஆயிரம் வருடங்கள் என்று சங்கரா
சாரியாரின் கருத்து வெளிப்பட்டுள்ளது. எவ்வளவு வித்தியாசம்
ஏற்பட்டு விடுகிறது. ஒருவர் பின் இவ்வளவு ஆயிரம் என்பார்.
கலியுகத்தில் இருப்பது அநேக மனிதர்கள் அநேக வழிகள் அநேக
தர்மங்கள். சத்யுகத்தில் இருப்பதோ ஒரே ஒரு வழி. தந்தை வந்து
குழந்தைகளாகிய உங்களுக்கு படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய
ஞானத்தைக் கூறுகிறார். இதைக் கூறுவதற்குக் கூட எவ்வளவு காலம்
பிடிக்கிறது. கூறிக் கொண்டே இருக் கிறார். முன் கூட்டியே இவை
எல்லாவற்றையும் ஏன் கூறவில்லை என்று கூற முடியாது. பள்ளிக்
கூடத்தில் படிப்பு வரிசைக்கிரமமாக இருக்கிறது. சிறிய
குழந்தைகளுடைய உறுப்புக்கள் சிறியதாக இருக்கும். எனவே
அவர்களுக்கு கொஞ்சமாக கற்பிப்பார்கள். பிறகு உறுப்புக்கள்
வளர்ந்து கொண்டே செல்லச் செல்ல புத்தியின் பூட்டு திறந்து
கொண்டே போகும். படிப்பை தாரணை செய்து கொண்டே செல்வார்கள்.
சிறிய குழந்தைகளின் புத்தியில் எதுவும் தாரணை ஆக முடியாது.
பெரியவராக ஆன பிறகு வழக்கறிஞர், நீதிபதி ஆகியோர் ஆகிறார்கள்.
இங்கும் அவ்வாறே. ஒரு சிலருடைய புத்தியில் நன்றாக தாரணை ஆகிறது.
நான் தூய்மை அயற்றவர் களை தூய்மையாக்க வந்துள்ளேன் என்று தந்தை
கூறுகிறார். ஆக இப்பொழுது பதீதமான (தூய்மையற்ற) உலகத்தின் மீது
வைராக்கியம் ஏற்பட வேண்டும். ஆத்மா தூய்மையாக்கி விட்ட தென்றால்
பின் தூய்மையற்ற உலகத்தில் இருக்க முடியாது. தூயமையற்ற
உலகத்தில் ஆத்மாவும் தூய்மையற்றதாகவே உள்ளது. மனிதர்களும்
தூய்மையற்றவர்களாக உள்ளார்கள். தூய்மையான உலகத்தில் மனிதர்கள்
கூட தூய்மையானவரகவும், தூய்மையற்ற உலகத்தில் மனிதர்களும்
தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள். இது இருப்பதே இராவண
இராஜ்யமாக. ராஜா ராணி எவ்வாறோ அவ்வாறே பிரஜைகள். இந்த முழு
ஞானமோ புத்தியால் புரிந்து கொள் வதற்கானது ஆகும். இச்சமயத்தில்
எல்லோருடையதும் தந்தையிடம் (விபரீதமான) அன்பில்லாத புத்தியாக
உள்ளது. குழந்தைகளாகிய நீங்களோ தந்தையை நினைவு செய்கிறீர்கள்.
உள்ளுக்குள் தந்தைக்காக அன்பு உள்ளது.. ஆத்மாவின் தந்தைக்காக
அன்பு உள்ளது.மதிப்பு (மரியாதை) உள்ளது. ஏனெனில் தந்தையை
அறிந்துள்ளீர்கள். இங்கு நீங்கள் முன்னால் இருக்கிறீர்கள். சிவ
பாபாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவர் மனித
சிருஷ்டியின் விதை ரூபம், ஞானக் கடல், அன்புக் கடல் மற்றும்
ஆனந்தக் கடல் ஆவார். கீதையின் ஞானத்தை அளிக்கும் பரமபிதா
திரிமூர்த்தி சிவ பரமாத்மாவின் வாக்கு. திரிமூர்த்தி என்ற
வார்த்தையை அவசியம் சேர்க்க வேண்டும். ஏனெனில்
திரிமூர்த்திக்குத் தான் பாடல் உள்ளது அல்லவா? பிரம்மா மூலமாக
ஸ்தாபனை. எனவே அவசியம் பிரம்மா மூலமாகத் தானே ஞானம் கூறுவார்.
கிருஷ்ணரோ சிவ பகவான் வாக்கியம் என்று கூற மாட்டார். பிரேரணை (ஊக்கமளித்தல்,
தூண்டுதல்) மூலமாக எதுவும் ஆவது இல்லை. அவருக்குள் சிவபாபாவின்
பிரவேசமும் ஆக முடியாது. சிவபாபாவோ அந்நிய தேசத்தில் வருகிறார்.
சத்யுகமோ கிருஷ்ணரின் தேசம் ஆகும் அல்லவா? எனவே இருவருக்குமான
மகிமை தனித் தனி ஆகும். முக்கியமான விஷயமே இது ஆகும்.
சத்யுகத்தில் கீதைதையோ யாரும் படிப்பது இல்லை. பக்தி
மார்க்கத்திலோ ஜன்ம ஜன்மாந்திர மாகப் படிக்கிறார்கள். ஞான
மார்க்கத்திலோ அது இருக்க முடியாது. பக்தி மார்க்கத்தில்
ஞானத்தின் விஷயங்கள் இருப்பதில்லை. இப்பொழுது படைப்பு
கர்த்தாவான தந்தை தான் படைப் பினுடைய முதல் இடை கடை பற்றிய
ஞானத்தை அளிக்கிறார். மனிதர்களோ படைப்புக் கர்த்தாவாக ஆக
முடியாது. நான் படைப்பு கர்த்தா ஆவேன் என்று மனிதர்கள் கூற
முடியாது. நான் மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கிறேன்
என்று சுயம் தந்தை கூறுகிறார். நான் ஞானக் கடல், அன்பு கடல்
அனைவருக்கும் சத்கதி அளிப்பவன் ஆவேன். கிருஷ்ணரின் மகிமையே தனி
ஆகும். எனவே இந்த வேற்றுமைகளை முழுமையாக எழுத வேண்டும்.
அப்பொழுது கீதை யின் ஞானம் அளித்தவர் கிருஷ்ணர் அல்ல என்பதை
மனிதர்கள் படித்த உடனேயே சட்டென்று புரிந்து கொண்டு விடுவார்கள்.
இந்த விஷயத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றால் நீங்கள்
வெற்றி அடைந்து விட்டீர்கள் என்று பொருள். மனிதர்கள்
கிருஷ்ணருக்கு பின்னால் எவ்வளவு பிரமித்து பைத்தியமாகிப்
போகிறார்கள். எப்படி சிவனுடைய பக்தர்கள் சிவனுக்காக கழுத்தை
வெட்டிக் கொள்ளக் கூட துணிந்து விடுகிறார்கள். அவ்வளவு தான்,
நாங்கள் சிவனிடம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதே
போல அவர்கள் கிருஷ்ணரிடம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் கிருஷ்ணரிடம் போக முடியாது. கிருஷ்ணரிடம் பலி ஆகும்
விஷயம் இருப்பதில்லை. தேவிகள் மீது பலி ஆகிறார்கள். தேவர்கள்
மீது ஒரு பொழுதும் பலி ஆவதில்லை. நீங்கள் தேவிகள் ஆவீர்கள்
அல்லவா? நீங்கள் சிவபாபாவினுடையவர்கள் ஆகி உள்ளீர்கள். ஆக
சிவபாபா மீதும் பலி ஆகிறார்கள். சாஸ்திரங்களில் இம்சைக்குரிய
விஷயங் களை எழுதி விட்டுள்ளார்கள். நீங்களோ சிவபாபாவின்
குழந்தைகள் ஆவீர்கள். உடல் மனம் பொருளை பலியிடுகிறீர்கள். வேறு
எந்த விஷயமும் கிடையாது. எனவே சிவன் மற்றும் தேவி களின் முன்பு
பலியிடு கிறார்கள். இப்பொழுது அரசாங்கம் காசியில் பலி ஆவதை
நிறுத்தி விட்டுள்ளார்கள். இப்பொழுது அந்த வாளே இல்லை. பக்தி
மார்க்கத்தில் இது போல செய்து கொள்ளும் தற்கொலை கூட தன்னிடம்
பகைமை பாராட்டுவதற்கான வழி ஆகும். நட்பு கொள்வ தற்கான ஒரே ஒரு
வழி தந்தை கூறுகிறார் - தூய்மையாகி தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி
பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து கொண்டே
இருங்கள். இதுவே நட்பு ஆகும். பக்தி மார்க்கத்தில் ஜீவாத்மா
தனக்கே எதிரியாக இருக்கிறார். பிறகு தந்தை வந்து ஞானம்
அளிக்கும் பொழுது ஜீவாத்மா தனது நண்பராக ஆகிறார். ஆத்மா
தூய்மையாக ஆகி தந்தையிட மிருந்து ஆஸ்தி பெறுகிறார்.
சங்கமயுகத்தில் ஒவ்வொரு ஆத்மாவையும் தந்தை வந்து நண்பனாக
ஆக்குகிறார். ஆத்மா தன்னுடைய நண்பனாக ஆகிறார். ஸ்ரீமத்
கிடைக்கும் பொழுது நாங்கள் தந்தையின் வழி படி தான் நடப்போம்
என்று புரிந்திருப்பார். தங்களுடைய வழிப்படி அரைக்கல்பம்
நடந்தீர்கள். இப்பொழுது ஸ்ரீமத்படி சத்கதியை அடையவேண்டும்.
இதில் தங்களுடைய வழிப்படி நடக்க முடியாது. தந்தையோ வழி மட்டுமே
அளிக்கிறார். நீங்கள் தேவதையாக ஆக வந்துள்ளீர் கள் அல்லவா?
இங்கு நல்ல கர்மம் செய்தீர்கள் என்றால் அடுத்த பிறவியிலும்
நல்ல பலன் அமரலோகத்தில் கிடைக்கும். இப்போது இருப்பதே மரண
உலகமாக. இந்த இரகசியத்தைக் கூட குழந்தைகளாகிய நீங்கள்
வரிசைக்கிரமமாகவே புரிந்துள்ளீர்கள். ஒரு சிலருடைய புத்தியில்
நல்ல முறையில் தாரணை ஆகிறது. ஒரு சிலரால் தாரணை செய்ய
முடியவதில்லை. ஆக இதில் ஆசிரியர் என்ன செய்ய முடியும்?
ஆசிரியரிடம் கிருபை அல்லது ஆசீர்வாதம் வேண்டுவார்களா என்ன?
ஆசிரியரோ கற்பித்து தனது வீட்டிற்குச் சென்று விடுவார். பள்ளிக்
கூடத்தில் முதன் முதலாக குதாவிற்கு வந்து தொழுகை செய்வார்கள்
-"ஹே குதா எங்களை தேர்ச்சி அடையுமாறு செய்து விட்டீர்கள்
என்றால் நாங்கள் போக் பிரசாதம் படைப்போம்". ஆசிரியரிடம் ஒரு
பொழுதும் ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று கூற மாட்டார்கள்.
இச்சமயம் பரமாத்மா நமது தந்தையும் ஆவார், ஆசிரியரும் ஆவார்.
தந்தையின் ஆசீர்வாதமோ இருக்கவே இருக்கிறது. தந்தை குழந்தைகளை
விரும்புகிறார். குழந்தை என்னிடம் வந்தால் என்றால் நான் செல்வம்
கொடுப்பேன். ஆக இது ஆசீர்வாதம் ஆகியது அல்லவா? இது ஒரு நியமம்
ஆகும். குழந்தைக்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது.
இப்பொழுதோ தமோபிரதானமாகவே ஆகிக் கொண்டு செல்கிறார்கள். எப்படி
தந்தையோ அவ்வாறே குழந்தைகள். நாளுக்கு நாள் தத்துவங்களும் கூட
தமோபிர தானமாகவே ஆகிக் கொண்டே போகிறது. இது இருப்பதே
துக்கதாமமாக. 40 ஆயிரம் வருடங்கள் இன்னும் ஆயுள் இருக்கும்
என்றால் என்ன நிலைமை ஆகி விடும். மனிதர்களுடைய புத்தி
முற்றிலுமே தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளது.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் தந்தையுடன் யோகம்
(தொடர்பு) கொண்டி ருக்கும் காரணத்தால் தெளிவு (வெளிச்சம்) வந்து
விட்டுள்ளது. எந்த அளவிற்கு நினைவில் இருப்பீர்களோ அந்த
அளவிற்கு (லைட்) ஒளி அதிகரித்து கொண்டே போகும் என்று தந்தை
கூறுகிறார். நினைவினால் ஆத்மா தூய்மையாக ஆகிறது. பிரகாசம் (லைட்)
அதிகரித்து கொண்டே போகிறது. நினைவே செய்யவில்லை என்றால் லைட் -
ஒளி கிடைக்காது. நினைவினால் ஒளி அதிகமாகிக் கொண்டே போகும்.
நினைவு செய்யவில்லை மற்றும் ஏதாவது விகர்மம் செய்து விட்டீர்கள்
என்றால் லைட் குறைந்து போய் விடும். நீங்கள் சதோபிரதானமாக
ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறீர்கள். இது மிகவுமே
புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். நினைவினால் தான்
உங்களுடைய ஆத்மா தூய்மை ஆகிக் கொண்டேபோகும். இந்த படைப்பவர்
மற்றும் படைப்பின் ஞானத்தை ஸ்ரீகிருஷ்ணர் அளிக்க முடியாது
என்பதையும் நீங்கள் எழுதலாம். அதுவோ பிராலப்தம் (பிராப்தி)
ஆகும். 84 வது கடைசி பிறவியில் கிருஷ்ணரின் ஆத்மா மீண்டும்
ஞானத்தை எடுத்து கொண்டிருக்கிறார், பிறகு முதல் நம்பரில்
செல்கிறார் என்பதையும் எழுதி விட வேண்டும். சத்யுகத்தில் 9
லட்சம் பேர் தான் இருப்பார்கள் என்பதையும் தந்தை புரிய
வைத்துள்ளார். பிறகு அதிலிருந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கும்
அல்லவா? முழுமையாக 84 பிறவிகள் எடுக்கக் கூடிய தாசர்கள்,
தாசிகள் கூட இருப்பார்கள் அல்லவா? 84 பிறவி கள் தான்
கணக்கிடப்படுகிறது. யார் நல்ல முறையில் தேர்வில் தேர்ச்சி
பெறுகிறார்களோ அவர்கள் முதன் முதலில் வருவார்கள். எவ்வளவு
தாமதமாக வருவார்களோ பின் வீட்டையும் பழையது என்றே தான்
கூறுவார்கள் அல்லவா? புதிய வீடு உருவாக்கப்படுகிறது. பிறகு
நாளுக்கு நாள் ஆயுள் குறைந்து கொண்டே போகும். அங்கோ
தங்கத்தினால் மாளிகை கள் அமையும். அவையோ பழையதாக ஆக முடியாது.
தங்கமோ எப்பொழுதுமே பிரகாசித்துக் கொண்டு தான் இருக்கும்.
பிறகும் அவசியம் சுத்தப்படுத்த வேண்டி இருக்கும். நகை கூட
கலப்ப்டம் இல்லாத தயாரித்திருப்பீர்கள் என்றாலும் கூட கடைசியில்
சற்று பிரகாசம் குறைந்து விடுகிறது. பிறகு அதற்கு (பாலிஷ்)
மெருகூட்ட வேண்டி இருக்கும். நாம் புது உலகிற்குச் செல்கிறோம்
என்ற குஷி குழந்தைகளாகிய உங்களுக்கு எப்பொழுதும் இருக்க
வேண்டும். இந்த நரகத்தில் இது கடைசி பிறவி ஆகும். இந்த கண்களால்
எதெல்லாம் பார்க்கிறீர்களோ, இது பழைய உலகம், பழைய சரீரம் ஆகும்
என்பதைப் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது நாம் சத்யுகமாகிய புதிய
உலகத்தில் புதிய சரீரம் எடுக்க வேண்டும். 5 தத்துவங்கள் கூட
புதியதாக இருக்கும். இது போல சிந்தனைக் கடலை கடைய (விசார் சாகர்
மந்தன்) வேண்டும். இது படிப்பு ஆகும் அல்லவா? கடைசி வரையில்
உங்களுடைய இந்த படிப்பு நடக்கும். படிப்பு முடிந்து போய்
விட்டது என்றால் விநாசம் ஆகி விடும். எனவே தங்களை மாணவர் என்று
உணர்ந்து "பகவான் நமக்கு கற்பிக்கிறார்" என்ற இந்த குஷியில்
இருக்க வேண்டும் அல்லவா? இந்த குஷி குறைவானதா என்ன?ஆனால் கூடவே
மாயை கூட தவறான காரியத்தைச் செய்வித்து விடுகிறது. 5-6
வருடங்கள் பவித்திரமாக (தூய்மையாக) இருக்கிறார்கள். பிறகு மாயை
வீழ்த்தி விடுகிறது. ஒரு முறை விழுந்து விட்டார்கள் என்றால்
அந்த நிலை மீண்டும் அமைய முடியாது. நாம் விழுந்து விட்டோம்.
எனவே அந்த வெறுப்பு ஏற்படுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய
நீங்கள் முழுவதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பிறவியில்
செய்த பாவங்கள் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தங்களது வாழ்க்கை பற்றியோ
தெரியும் அல்லவா? ஒரு சிலர் மந்த புத்தியாக ஒரு சிலர் விசால
புத்தியினராக இருப்பார்கள். சிறுவயதினுடைய சரித்திரம் நினைவிலோ
இருக்கும் அல்லவா? இந்த பாபா கூட சிறு வயதினுடைய ஹிஸ்ட்ரி (சரித்திரம்)
கூறுகிறார் அல்லவா? பாபாவிற்கு அந்த வீடு ஆகியவை கூட நினைவில்
இருக்கிறது. ஆனால் இப்பொழுதோ அங்கு கூட எல்லாமே புதிய வீடுகளாக
அமைக்கப்பட்டிருக்கக்கூடும். 6 வயது முதற்கொண்டு தங்களது
வாழ்க்கை சரித்திரம் நினைவில் இருக்கும். ஒரு வேளை மறந்து
விட்டிருந்தது என்றால் மந்த (டல்) புத்தி என்று கூறுவார்கள்.
உங்கள் வாழ்க்கை சரித்திரத்தை எழுதுங்கள் என்று தந்தை
கூறுகிறார். வாழ்க்கை யினுடைய (லைஃப்) விஷயம் ஆகும் அல்லவா?
வாழ்க்கையில் எவ்வளவு அதிசயங்கள் இருந்தன என்று தெரிய வரும்.
காந்தி, நேரு ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு பெரிய
பெரிய புத்தகங் கள் எழுதப்பட்டுள்ளன. வாழ்க்கையோ உண்மையில்
உங்களுடையது மிகவுமே மதிப்பு வாய்ந்தது. இது அதிசயமான வாழ்க்கை
ஆகும். இது மிகவுமே விலை மதிப்பு வாய்ந்த, விலை மதிப்பிட
முடியாத வாழ்க்கை ஆகும். இதனுடைய மதிப்பை சொற்களால் கூற
முடியாது. இச்சமயம் நீங்கள் தான் சேவை செய்கிறீர்கள். இந்த
லட்சுமி நாராயணர் எதுவுமே சேவை செய்வதில்லை. உங்களுடைய வாழ்க்கை
மிகவுமே மதிப்பு வாய்ந்தது. இந்த வாழ்வில் தான் மற்றவர்களுடைய
வாழ்க்கையையும் இது போல ஆக்குவதற்கான சேவை செய்கிறீர்கள். யார்
நன்றாக சேவை செய்கிறார்களோ அவர்கள் மகிமைக்கு உகந்தவர்களாக
ஆகிறார்கள். வைஷ்ணவ தேவியின் கோவில் கூட உள்ளது அல்லவா?
இப்பொழுது நீங்கள் உண்மையிலும் உண்மையான வைஷ்ண வராக ஆகிறீர்கள்.
வைஷ்ணவர் என்றால் தூய்மையாக இருப்பவர்கள். இப்பொழுது உங்களுடைய
உணவு பழக்கங்கள் கூட வைஷ்ணவர்களினுடையது ஆகும். முதல் நம்பர்
விகாரத்தைப் பொறுத்த வரை நீங்கள் வைஷ்ணவர்களாக (பவித்திரமாக)
இருக்கவே இருக்கிறீர்கள். ஜகதம்பாவின் குழந்தைகளாகிய இவர்கள்
அனைவருமே பிரம்மா குமார், குமாரிகள் ஆவார்கள் அல்லவா? பிரம்மா
மற்றும் சரஸ்வதி. மற்ற குழந்தைகள் அவர்களுடைய சந்ததியினர்
ஆவார்கள். தேவிகள் கூட வரிசைக்கிரமமாக உள்ளார்கள். அவர்களுக்கு
பூஜை ஆகிறது. மற்றபடி இத்தனை புஜங்கள் ஆகியவை கொடுத்து
விட்டுள்ளார்கள். அவை அனைத்துமே தேவையற்றது. நீங்கள் அநேகரை
உங்களுக்கு சமானமாக ஆக்குகிறீர்கள். எனவே புஜங்களைக் கொடுத்து
விட்டுள்ளார்கள். பிரம்மா வைக் கூட 100 புஜங்கள் உடையவராக 1000
புஜங்களை உடைய வராக காண்பிக்கிறார்கள். இவை எல்லாமே பக்தி
மார்க்கத்தின் விஷயங்கள் ஆகும். உங்களுக்கு பிறகு "தெய்வீக
குணங்களையும் தாரணை செய்ய வேண்டும்" என்று தந்தை கூறுகிறார்.
யாருக்குமே துக்கம் கொடுக்காதீர்கள். யாருக்காவது தப்பும்
தவறுமான வழி கூறி சர்வநாசம் செய்யாதீர்கள். தந்தை மற்றும்
ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்ற ஒரே ஒரு முக்கியமான விஷயத்தை
தான் புரிய வைக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாடல் மற்றும் பூஜைக்கு உகந்தவர் ஆக வேண்டும் என்றால்
பக்குவமான வைஷ்ணவர் ஆக வேண்டும். தூய உணவு பழக்கத்தின் கூடவே
தூய்மையாகவும் இருக்க வேண்டும். இந்த மதிப்பு வாய்ந்த
வாழ்க்கையில் சேவை செய்து அநேகருடைய வாழ்க்கையையும் சிறந்ததாக
ஆக்க வேண்டும்.
2. ஆத்மாவின் பிரகாசம் அதிகரித்து கொண்டே செல்லும் அளவிற்கு
தந்தையுடனான யோகம் (தொடர்பு) கொள்ள வேண்டும். எந்த ஒரு
விகர்மமும் செய்து பிரகாசத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடாது.
தங்களுக்கு தாங்களே நட்பு கொள்ள வேண்டும்.
வரதானம்:
சுய ஸ்திதியின் இருக்கையில் நிலைத்திருந்து பரிஸ்திதிகள் மீது
வெற்றி பெறக்கூடிய மாஸ்டர் படைப்பவர் ஆகுக.
எந்த ஒரு பரிஸ்திதியும் இயற்கையின் மூலம் வருகிறது. எனவே
பரிஸ்திதி என்பது படைப்பு மற்றும் மாஸ்டர் சர்வசக்திவான் ஒரு
போதும் தோல்வி அடைய முடியாது. அது நடக்க முடியாதது. யாராவது
தமது இருக்கையை விட்டு விடுகிறார் என்றால் தோல்வி ஏற்படுகிறது.
இருக்கையை விடுவது என்றால் சக்தியற்றவராக ஆவதாகும். இருக்கையின்
ஆதாரத்தில் சக்திகள் தாமாகவே வருகின்றன. யார் இருக்கையில்
இருந்து கீழே இறங்கி விடுகிறாரோ, அவர் மீது மாயாவின் தூசி
படிகிறது. பாப்தாதாவின் செல்லமான, மறு பிறவி எடுத்த பிராமணர்கள்
ஒரு போதும் தேக அபிமானத்தின் மண்ணில் விளையாட மாட்டார்கள்.
சுலோகன்:
திடத்தன்மை (உறுதி) கடுமையான சம்ஸ்காரங்களையும் கூட மெழுகு போல்
உருக்கி (அழித்து) விடும்.
அவ்யக்த இஷாரா : இணைந்த ரூபத்தின் ஸ்மிருதி மூலம் சதா
வெற்றியாளர் ஆகுங்கள்
எப்படி ஞான சொரூபமாக இருக்கிறீர்களோ, அது போல் அன்பு சொரூபம்
ஆகுங்கள். ஞானம் மற்றும் அன்பு இரண்டும் இணைந்தே இருக்க
வேண்டும். ஏனென்றால் ஞானம் என்பது விதை. அன்பு அதற்குத்
தண்ணீராகும். விதைக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் பழம்
கொடுக் காது. ஞானத்துடன் கூடவே மனதின் அன்பு இருக்குமானால்
பிராப்தி என்ற பழம் கிடைக்கும்.