02-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த
நாடகத்திற்குள் மிகப் பெரிய விநாசம் பொருந்தியுள்ளது. நீங்கள்
விநாசத்திற்கு முன்னதாக கர்மாதீதராக ஆக வேண்டும்.
கேள்வி:
தந்தையின் எந்த வார்த்தைகளின்
ஈர்ப்பு நேரிடையாக
பதில்:
தந்தை நீங்கள் என்னுடைய
குழந்தைகள் ஆவீர்கள் என்று நேரிடையாக கூறும் பொழுது இந்த
வார்த்தைகளின் ஈர்ப்பு மிகவுமே ஏற்படுகிறது. நேரிடையாகக்
கேட்கும் பொழுது மிகவும் நன்றாகப்படுகிறது. மதுபன் அனைத்து
குழந்தைகளையும் கவருகிறது. ஏனெனில் இங்கு இருப்பது ஈசுவரிய
குடும்பமாகும். இங்கு பிராமணர்களின் கூட்டம் உள்ளது.
பிராமணர்கள் தங்களுக்குள் ஞானத்தை மட்டுமே பரிமாறிக்
கொள்கிறார்கள்.
பாடல்:
நமது தீர்த்தம் தனிப்பட்டது.. ..
..
ஓம் சாந்தி.
நாம் அவினாசி (அழிவற்ற) யாத்திரை அதாவது ஆன்மீக யாத்திரையில்
சென்று கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இந்த
யாத்திரையிலிருந்து நாம் திரும்பி மரண உலகத்தில் வரமாட்டோம்.
யாத்திரையில் சென்று ஒரு பொழுதும் திரும்பி வர வேண்டிய தில்லை
என்பது போல அப்பேர்ப்பட்ட யாத்திரை கூட ஏதாவது இருக்கும் என்ற
விஷயத்தை மனிதர்கள் அறியாமலே இருக்கிறார்கள். அதிர்ஷ்ட
நட்சத்திரங்களாகிய உங்களுக்கு இப்பொழுது தெரிய வந்துள்ளது. இதை
உறுதியாக நினைவு செய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் பாகத்தை
ஏற்று நடிக்கிறோம். அந்த நாடகத்தில் ஆத்மாவாகிய நான் இந்த ஆடையை
அணிந்து பாகத்தை நடித்தேன் இப்பொழுது வீடு செல்கிறேன் என்று
கூற மாட்டார்கள். அவர்களோ தங்களை சரீரம் என்றே நினைக்கிறார்கள்.
நாம் ஆத்மா ஆவோம்! இந்த சரீரம் என்ற ஆடையை விடுத்து பிறகு
மற்றொன்றை எடுப்போம் என்ற ஞானம் இங்கு குழந்தைகளாகிய உங்களுக்கு
உள்ளது. இது 84 பிறவிகளின் பழைய ஆடை ஆகும். இதை விட்டு விட்டு
புது உலகத்தில் சென்று புதிய ஆடையை எடுப்போம். இந்த இலட்சுமி
நாராயணர் புதிய ஆடை அணிந்துள்ளார்கள் அல்லவா? உங்களுடையது (புதிய)
இராஜதானியினுடையதாகும். ஆவார்கள். நீங்களும் போய் அதே போல
புதிய தெய்வீக ஆடையை அணிவீர்கள். இங்கோ - நான் நிர்குணமானவன்
என்னிடம் எந்த குணமும் இல்லை என்று கூறுகிறார்கள். தந்தை தான்
மீண்டும் இது போல குணவானாக ஆக்குகிறார். எனக்கும் பாகம் உள்ளது
என்று தந்தை கூறுகிறார். வந்து மீண்டும் உங்களை நிர்விகாரியாக
ஆக்குகிறேன். இங்கு இருப்பது ஜீவன் பந்தன தாமம், இராவண
இராஜ்யமாகும். நாம் பதீத நிலையிலிருந்து பாவனமாக மீண்டும் பாவன
நிலையிலிருந்து பதீதமாக எப்படி ஆகிறோம் என்பது உங்களுடைய
புத்தியில் உள்ளது. கலியுகம் என்பது இருள் என்பதை குழந்தை
களாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இராவண இராஜ்யம் இப்பொழுது
முடியப் போகிறது. இராம இராஜ்யம் இப்பொழுது ஆரம்பமாகப் போகிறது.
இப்பொழுது இருப்பது சங்கமம். கல்பத்தினுடைய சங்கமயுகத்தில்
தந்தை தான் வர வேண்டி உள்ளது. இப்பொழுது விநாசத்தின் நேரம்
ஆகும். மேலும் ஸ்தாபனையின் பொருட்டு பகவான் எங்கோ மறைமுகமான
வேடத்தில் இருக்கிறார் என்று உலகத்தார் கூட இப்பொழுது
புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது மறைமுகமான வேடத்திலோ
ஆத்மாக்களாகிய நீங்கள் கூட இருக்கிறீர்கள். ஆத்மா தனி ! சரீரம்
தனி ! இந்த மனித ஆடை என்பது மறைமுகமான வேடமாகும். தந்தை கூட
இவருக்குள் வர வேண்டி உள்ளது. உங்களுக்கு சரீரத்தின் மீது பெயர்
ஏற்படுகிறது. அவருக்கோ சரீரம் கிடையாது. நீங்களும் ஆத்மா
ஆவீர்கள். அவரும் ஆத்மா ஆவார். ஆத்மாவிற்கு இப்பொழுது
ஆத்மாவுடன் மோகம் ஏற்பட்டுள்ளது. மற்ற தொடர்பை விடுத்து
உன்னிடம் தொடர்பை இணைப்பேன் என்று பாடவும் செய்கிறார்கள்.
எப்படி நீங்கள் மோகத்தை வென்றவராக (மோகஜீத்) இருக்கிறீர்களோ அதே
போல நாமும் ஆகிடுவோம். பாபா மிகவுமே மோகஜீத் ஆக இருக்கிறார்.
ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள். அனைவரும் காமச் சிதை மீது
அமர்ந்து எரிந்து விட்டுள்ளார்கள். பரமபிதா பரமாத்மா வருவதே
பழைய உலகத்தின் விநாசம் செய்விக்க. பிறகு மோகம் எப்படி இருக்க
முடியும்? பதீதர்களின் விநாசம் ஆகும் பொழுது தானே அமைதியின்
இராஜ்யம் ஆக முடியும். இச்சமயத்தில் சுகம் யாருக்குமே இல்லை.
எல்லோருமே தமோபிரதானமாக, துக்கமுடைய வர்களாக ஆகி
விட்டுள்ளார்கள். இது இருப்பதே பதீதமான உலகமாக! சிவபாபா தான்
வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். அதற்கு சிவாலயம் என்று
பெயர் இடப்பட்டுள்ளது. சிவபாபா தேவதைகளின் இராஜாங்கத்தை ஸ்தாபனை
செய்தார். அது உயிரூட்ட முடைய (சைதன்யமான) சிவாலயம் ஆகும்.
மேலும் எங்கு சிவனின் சித்திரம் இருக்கிறதோ அந்த சிவாலயம்
ஜடமானதாக ஆகி விட்டது. இலட்சுமி நாராயணர் உண்மையில்
சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தார்கள் என்பதை இப்பொழுது நீங்கள்
புரிந்துக் கொண்டுள்ளீர்கள். பூஜைக்குரியவராக இருந்தார்கள்.
இப்பொழுது மீண்டும் பூஜைக்குரியவர்களாக ஆகிக் கொண்டு
இருக்கிறார்கள். உங்களுக்கு இப்பொழுது ஞானம் உள்ளது. நீங்கள்
இலட்சுமி நாராயணரினுடைய கோவிலுக்குச் சென்று அவர்களுக்கு முன்
தலை வணங்க மாட்டீர்கள். நீங்களோ அவர்களுடைய இராஜ்யத்தில்
உயிரோட்டமாகச் செல்கிறீர்கள். நாம் தேவதைகளாக இருந்தோம்.
இப்பொழுது இல்லை என்பதை அறிந்துள்ளீர்கள். யார் வாழ்ந்து
சென்றுள்ளார்களோ அவர்களுடைய சித்திரங்களை அமைக் கிறார்கள்.
இலட்சுமி நாராயணரினுடைய கோவிலை எல்லோரையும் விட அதிகமாக பிர்லா
அமைக்கிறார். எனவே அவருக்குக் கூட சேவை செய்ய வேண்டும். எந்த
லட்சுமி நாராயணருக்கு நீங்கள் கோவில் அமைக்கிறீர்களோ
அவர்களுடைய 84 பிறவிகளின் கதையைக் கூறுகிறோம். யுக்தியுடன்
இந்த பரிசைக் கொடுக்க வேண்டும். பாபா சேவைக்கான யுக்திகளைக்
கூறுகிறார். தாய்மார்கள் சென்று கூற வேண்டும், நீங்கள்
அவர்களுக்கு கோவில் கட்டுகிறீர்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கை
சரித்திரத்தை அறியாமல் உள்ளீர்கள். நாங்கள் அறிந்துள்ளோம்.
மேலும் எங்களால் புரிய வைக்கவும் முடியும். புரிய வைப்பவர்,
மிகவும் சுவையுடன் புரிய வைக்க வேண்டும். தந்தையும் வந்து
புரிய வைக்கிறார் அல்லவா? உங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை
என்றால் வீட்டில் அமர்ந்தபடியே நினைவு செய்யுங்கள் என்று பாபா
கூறுகிறார். நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம் என்பதை
அறிந்துள்ளீர்கள். முரளியும் கிடைத்து விடுகிறது. இங்கு வந்து
விடுவதால் நினைவு யாத்திரை நன்றாக இருக்கும். வீட்டில்
அமர்ந்திருப்பதால் நினைவு யாத்திரை குறைந்து விடும் என்பதல்ல.
மேகங்கள் வருவதே புத்துணர்வு பெற. நீங்களும் புத்துணர்வு பெற
வருகிறீர்கள். பாபாவிடம் நேரிடையாகச் செல்லலாம். ஆத்மாவிற்கு
ஞானம் இருக்கிறது. நேரிடையாகக் கேட்கும் பொழுது நன்றாக
இருக்கிறது. விஷயமோ அதுவே தான். சிவபாபா எப்படி அமர்ந்து
குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் என்பதை பார்க்கிறீர்கள்.
குழந்தை களே! நீங்கள் என்னுடையவர் ஆவீர்கள். நீங்கள் 84
பிறவிகளின் பாகத்தை நடித்தீர்கள். நீங்கள் ஜன்ம மரணத்தில்
வருகிறீர்கள். நான் வருவதில்லை. நான் புனர் ஜென்மம்
எடுப்பதில்லை. அஜன்மா (பிறப்பற்றவன்) என்பதும் கிடையாது.
வருகிறேன், ஆனால் ஒரு வயோதிக உடலில் பிரவேசம் செய்கிறேன்.
ஆத்மாவாகிய நீங்கள் சிறிய குழந்தையின் உடலில் பிரவேசம்
செய்கிறீர் கள். நான் கீழே (பூலோகம்) பாகம் ஏற்று நடிக்க
பரந்தாமத்திலிருந்து வருகிறேன். நான் விகாரி யின் கர்ப்பத்தில்
வருவதில்லை. என்னை த்வமேவ மாதாஸ்ச பிதா .. .. .. (தந்தையும்
நீயே தாயும் நீயே) என்று கூறுகிறீர்கள். எனக்கு யாரும் தாய்
தந்தை இருக்க முடியாது. நான் சரீரத்தின் ஆதாரம் மட்டுமே எடுத்து
பாகத்தை நடிக்கிறேன். என்னை நீங்கள் துக்கத்தை நீக்கி சுகம்
அளிப்பதற்காக அழைக்கிறீர்கள். இப்பொழுது நேரிடையாக வந்துள்ளேன்.
ஆத்மாக்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இங்கோ எல்லோருமே
பிராமணர்கள் ஆவார்கள். நீங்கள் வெளியில் செல்லும் பொழுது அன்னம்
மற்றும் கொக்கு ஆக ஆகி விடுகிறீர்கள். இங்கு (மதுபனில்)
உங்களுடைய சகவாசமே பிராமணர் களினுடையது ஆகும். தங்களுக்குள்
ஞானத்தினுடைய விஷயங்களையே தான் பேசுவீர்கள். நாம் நமது
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறோம். பாபா வந்து
விட்டுள்ளார். ஒருவருக்கொருவர் பாபாவை நினைவு செய்வதற்கான
யுக்தியை (வழி முறை) கூறிக் கொண்டே இருங்கள். உணவு உட் கொள்ளும்
பொழுது கூட தந்தையை நினைவு செய்யுங்கள் என்ற சமிக்ஞையை
ஒருவருக்கொருவர் அளித்துக் கொண்டே இருங்கள். மிகப் பெரிய
கூட்டமைப்பு ஆகும் அல்லவா? அங்கோ விகாரிகள் கூட இருக்கிறார்கள்.
எனவே அவர்களுடைய கவர்ச்சி ஆகிறது. இங்கோ யாருடைய கவர்ச்சியும்
இருப்பதில்லை. படைவீரர்கள் படைவீரர்களுடன் இருப்பார்கள். இது
உங்களுடைய குடும்பம் ஆகும். புத்தியில் இதே தான் இருக்கிறது -
யாரைச் சந்தித்தாலும் பகவானை நினைவு செய்து கொண்டே இருங்கள்
என்று தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இரண்டு
தந்தையர் இருக்கிறார்கள் அல்லவா? லௌகீக தந்தை இருந்தும் கூட
பகவானை நினைவு செய்கிறீர்கள் அல்லவா? அவர் லௌகீக தந்தை ஆவார்.
லௌகீக தந்தைக்கு காட்ஃபாதர் என்று கூற மாட்டார்கள். இவர் பரலோக
தந்தை ஆவார். அவசியம் காட்ஃபாதரிடமிருந்து ஆஸ்தி
கிடைத்திருக்கக் கூடும். இது போல பூம் பூம் என்று ஊதிக் கொண்டே
இருங்கள். நீங்கள் பிராமணர்கள் ஆவீர்கள் அல்லவா? சந்நியாசிகள்
கூட பூம் பூம் என்று ஊதுகிறார்கள் அல்லவா? இந்த உலகத்தின் சுகம்
காக்கை எச்சத்திற்கு சமமாகும். எவ்வளவு துக்கம் இருக்கிறது.
அவர்களோ ஹடயோகிகள், துறவற மார்க்கத்தினர், அவர்களுடைய தர்மமே
தனி. சத்யுகத்தில் நாம் எவ்வளவு சுகமாக தூய்மையாக இருக்கிறோம்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாரதம் இல்லற மார்க்கத்
தினுடையதாக இருந்தது. தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. யார்
பவித்திரமாக (தூய்மை) இருந்தார்களோ அவர்களே பதீதமாக ஆகி
விட்டுள்ளார்கள். ஹே, பதீத பாவனரே ! வாருங்கள் என்று அழைத்துக்
கொண்டும் இருக்கிறார்கள். பிறகு பரமாத்மா சர்வவியாபி என்று கூறி
விடுகிறார்கள். நாங்கள் போய் ஜோதி ஜோதியுடன் கலந்து விடுவோம்.
புனர் ஜென்மத்தைக் கூட ஏற்றுக் கொள்வதில்லை! அனேக வழிகள் உள்ளன
அல்லவா? நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. சந்நியாசி
களினுடைய வளர்ச்சி கூட எப்படி ஆகிறது என்பதையும் கூற வேண்டும்.
நாகர்கள் (நிர்வாண சந்நியாசி) என்ற தர்மத்தினருடையது கூட
வளர்ச்சி ஆகிறது. யாருடையது எந்த தர்மமோ அதிலேயே இருக்கும்
பொழுது பிறகு அந்த் மதி சோ கதி (கடைசியில் புத்தி எவ்வாறோ
அவ்வாறே கதி) (அடுத்த பிறவியும்) ஆகி விடுகிறது. யார் எதை
அதிகமாக அப்பியாசம் செய்கிறார்களோ - யாராவது சாஸ்திரம் ஆகியவை
படிக்கிறார்கள் என்றால் அந்த் மதி சோ கதி - பிறகு சிறு வயதிலேயே
சாஸ்திரங்கள் மனப்பாடம் ஆகி விடுகின்றது. இப்பொழுது தந்தை
கூறுகிறார் - நான் இன்னார் ஆவேன், இது ஆவேன்.. .. இந்த எல்லா
தேக அபிமானத்தின் விஷயங்களையும் விட்டு விடுங்கள். தன்னை அசரீரி
ஆத்மா என்று உணருங்கள் மற்றும் தந்தையை நினைவு செய்யுங்கள்.
இந்த சரீரத்தை பார்த்தும் பார்க்காதீர்கள். தேகத்துடன் சேர்த்து
தேகத்தின் சம்மந்தங்கள் அனைத்தையும் விடுங்கள். தன்னை ஆத்மா
என்று நிச்சயம் செய்யுங்கள். பரமாத்மாவை நினைவு செய்யுங்கள்.
இதில் நிறைய நேரம் பிடிக்கிறது. மாயை நினைவு செய்ய விடுவதில்லை.
இல்லை என்றால் வானப்பிரஸ்தியினருக்கு மிகவுமே சுலபம் ஆகும்.
இப்பொழுது சிறியவர்கள் பெரியவர் களாகிய உங்கள் அனைவருக்குமே
வானப்பிரஸ்த நிலை ஆகும் என்று சுயம் தந்தை கூறுகிறார். ஒரு
புறம் விநாசமும் ஆகிக் கொண்டு இருக்கும். மறுபுறம் ஜென்மமும்
எடுத்துக் கொண்டே இருப்பார்கள். புனர்ஜென்மம் எடுக்க வேண்டி
இருந்தது என்றால் வந்து விடுவார்கள். குழந்தை களும்
பிறப்பார்கள். பின் விநாசமும் ஆகி விடும். இதையெல்லாம் நீங்கள்
அறிந்துள்ளீர்கள் - ஒரு சிலர் கர்ப்பத்தில் இருப்பார்கள். ஒரு
சிலர் எங்கோ - எல்லாமே முடிந்து போய் விடுவார்கள். அனைவரும்
அவரவர் கணக்கை முடித்து, திரும்பிச் செல்வார்கள். கணக்கு வழக்கு
மீதம் இருந்தது என்றால் அதிக தண்டனைகள் வாங்க வேண்டி வரும்.
பிறகு அதுவும் லேசாகி விடும். அப்படியின்றி யோகத்திலும்
இருங்கள் மற்றும் பாவங்களும் செய்து கொண்டே இருங்கள் என்பதல்ல.
ஒரு சில குழந்தைகள் ஒரு பக்கம் சார்ட் கூட எழுதிக் கொண்டே
இருக்கிறார்கள். பின் மாயை முகத்தை கருப்பாக்கி விட்டது என்றும்
கூறுகிறார்கள். மாயை தோற்கடித்து விட்டது என்றால் பக்குவமற்றவர்
என்றே கூறுவார்கள் அல்லவா? எனவே நாம் சிறிது நாட்களுக்குத் தான்
இங்கு இருப்போம். பிறகு சென்று விடுவோம் என்று நீங்கள்
உணர்ந்திருங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். இவை
எல்லாவற்றின் விநாசம் ஆகிக் கொண்டிருக்கிறது. என்னை நினைவு
செய்தீர் கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகி விடும் என்று
தந்தை கூறுகிறார். உங்களுடைய சார்ட்டைப் பார்த்து கொண்டே
இருங்கள் - நாம் எத்தனை பேருக்கு வழி கூறுகிறோம், மேலும்
முயற்சி செய்விக்கிறோம்? உடல் மனம் பொருளால் ஆன்மீக சேவையில்
உதவியாளர் ஆக வேண்டும். மனதை சிந்தனையற்றதாக (எண்ண
ஒட்டமில்லாமல்) செய்ய முடியாது என்று கூறு கிறார். ஆத்மாவோ
இருப்பதே சாந்தமாக. ஆத்மாவாகிய நாம் நமது பரந்தாமத்தில் போய்
அமருவோம். உலகத்தின் எந்த சங்கல்பம் கூட வராது. அப்படியின்றி
கண்களை மூடிக் கொண்டு மயக்கமடைந்து விடுவது அல்ல. இது போல
நிறைய பேர் கற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். 10-15 நாட்கள்
கூட மயக்கமடைந்த (சமநிலையின்றி) நிலையில் இருக்கிறார்கள். இதை
அப்பியாசம் செய்கிறார்கள். பிறகு இத்தனை காலத்திற்குப் பிறகு
விழித்துக் கொள்வோம். எப்படி (டைம் பாம்) நேரப்படி வெடிக்கும்
அணு குண்டுகள் இருக்கின்றன அல்லவா? அதற்கும் நேரம்
குறித்திருப்பார்கள். இத்தனை மணி நேரத்திற்கு பின்னால்
வெடிக்கும் என்று.
நாம் யோகம் செய்து கொண்டிருக்கிறோம் என்பது குழந்தைகளாகிய
உங்களுக்குத் தெரியும். தமோபிரதான குப்பை நீங்கி விடும் பொழுது
தான் சதோபிரதானமாக ஆகி விடுவோம். பிறகு இந்த சரீரத்தை விட்டு
விடுவோம். நாம் இப்பொழுது யோகத்தின் யாத்திரையில் இருக்கிறோம்.
நேரம் கிடைத்துள்ளது. பிறகு இந்த சரீரத்தை விடவே வேண்டும்.
பிறகு எல்லாமே முடிந்து போய் விடும். நேரம் நிச்சயிக்கப்பட்டு
உள்ளது. பிறகு கடைசியில் கொசுக்களை போல சரீரத்தை விடுவார்கள்.
விநாசம் ஆகி விடும். நீங்கள் கர்மாதீத நிலையை அடைந்தவுடன்
விநாசம் ஆரம்ப மாகி விடும். விநாசத்தின் மிகப் பெரிய காட்சி
ஆகும். இது நாடகத்தில் மிக பெரியளவில் பொருந்தி உள்ளது. நமது
மனநிலை ஒரே ரசனையுடன் கூடியதாக இருக்கும் என்பதை நீங்கள்
அறிவீர்கள். குஷியில் எப்பொழுதும் முகமலர்ச்சியுடன்
இருப்பீர்கள். இந்த உலகமோ முடியத் தான் போகிறது. கல்ப கல்பமாக
சங்கமயுகம் நடக்கிறது. அப்பொழுது விநாசம் ஆகும் என்பதை
அறிந்துள்ளீர்கள். குண்டுகள் மட்டுமல்ல இயற்கை சேதங்களும் உதவி
செய்கின்றன. எனவே இப்பொழுது நாம் போக வேண்டும் என்பது
குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். எந்த அளவு பாபாவை
நினைவு செய்வீர்களோ அந்த அளவு விகர்மங்கள் விநாசம் ஆகும்.
உயர்ந்த பதவியை அடைவீர்கள். தானம் முதலில் நம் வீட்டில் (தன்னிடமிருந்து)
துவங்கட்டும். முயற்சி செய்ய வேண்டும். ஒரு கன்னிகை பிறந்த
வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் உயர்வு செய்பவர் ஆவார். எனவே
தானம் வீட்டில் துவங்கும் அல்லவா? சேவையில் ஈடுபட்டிருக்க
வேண்டும் - என்னை நினைவு செய்தால் ஆஸ்தி கிடைக்கும் என்று
சிவபாபா கூறுகிறார் என்பதைக் கூறுங்கள். நேரான (உண்மையான)
விஷயம் ஆகும். அல்ஃப் தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள்
என்றால் சொர்க்கத்தின் ஆஸ்தி உங்களுடையது. நீங்கள் உலகத்தின்
அதிபதி ஆகி விடுவீர்கள். இப்பொழுது ஆஸ்தி பெற வேண்டும் என்றால்
என்னை நினைவு செய்யுங்கள். இந்த செய்தியை அளிப்பது குழந்தைகளின்
கடமை ஆகும். முன்பேயும் கொடுத்திருந்தீர்கள். விநாசம் எதிரிலேயே
உள்ளது என்பதைக் கூற வேண்டும். கலியுகத்திற்குப் பின்னால்
சத்யுகம் வரும். தந்தை தான் வந்து ஆஸ்தி அளிக்கிறார். இராவணன்
நரகவாசியாக ஆக்குகிறான். தந்தை வந்து சொர்க்க வாசியாக
ஆக்குகிறார். கதை பாரதத்தினுடையது ஆகும். பாரதவாசிகளை
விழித்தெழச் செய்ய வேண்டும். முதலில் சிவனின் கோவிலுக்கு போய்
புரிய வைக்க வேண்டும். இந்த தந்தை புதிய படைப்பைப் படைப்பவர்
ஆவார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசம்
ஆகும் என்று கூறுகிறார். இந்த நிராகார பாபா வந்துள்ளார்.
பிரம்மா மூலமாக சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார்.
இப்பொழுது தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். 84
பிறவிகள் முடிந்துள்ளன. இப்பொழுது நாங்கள் உங்களுக்குக்
கூறுகிறோம். இப்பொழுது ஏற்பதோ ஏற்காமலிருப்பதோ உங்கள் விருப்பம்.
விஷயங்களோ மிகவுமே நல்லவை ஆகும். தந்தை தான் துக்கத்தை நீக்கி
சுகம் அளிப்பவர் ஆவார். சிறிதளவு புரிய வைத்தாலும் அவர் போய்
விடுவார். இது உங்களுடைய தொழில் ஆகும். உழைப்போ எதுவும் இல்லை.
என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார் என்பதை வாயால்
மட்டும் கூற வேண்டும். ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். சிவனினுடைய
பூசாரிகளிடம் செல்லுங்கள். பிறகு இலட்சுமி நாராயணரின்
பூசாரிகளிடம் செல்லுங்கள். அவர்களுக்கு அவரது வாழ்க்கை
சரித்திரத்தைக் கூறுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உடல் மனம் பொருளால் ஆன்மீக சேவையில் உதவி செய்பவர் ஆக
வேண்டும். எல்லோருக்கும் தந்தையின் அறிமுகத்தை அளித்து
ஆஸ்திக்கு அதிகாரி ஆக்க வேண்டும். விநாசத்திற்கு முன்னதாக
கர்மாதீத் நிலையை (கர்மத்தின் எந்த பாதிப்பும் இல்லாத நிலை)
அடைவதற்கு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்.
2. தந்தைக்குச் சமமாக மோகத்தை வென்றவர் ஆக வேண்டும்.
ஆத்மாவிற்கு ஆத்மா மீது ஏற்பட்டுள்ள மோகத்தை நீக்கி ஒரு
தந்தையிடம் ஈடுபாடு கொள்ள வேண்டும்.
வரதானம்:
சர்வ சக்திவானுடைய துணையின் நினைவு மூலம்
பிரச்சனைகளை தூரமாக விரட்டக்கூடிய பரமாத்ம சிநேகி ஆகுக.
எந்தக் குழந்தைகள் பரமாத்மா சிநேகியாக இருக்கின்றார்களோ,
அவர்கள் சிநேகமானவரை சதா தன்னுடன் வைத்துக்கொள்வார்கள்.
ஆகையினால், எந்த பிரச்சனையும் அவர;கள் முன்னால் வருவதில்லை.
யாருடன் சுயம் சர்வ சக்திவான் தந்தை இருக்கின்றாரோ, அவர்களுக்கு
முன்னால் பிரச்சனை நிற்க முடியாது. பிரச்சனை உருவாகிறது என்றால்
அங்கேயே அழித்து விடுங்கள், அப்போது அது வளராது. இப்பொழுது
பிரச்சனைகளின் உருவாக்கத்தை கட்டுப்படுத்துங்கள். சம்பூரண
தன்மையை அருகாமையில் கொண்டுவர வேண்டும் மற்றும் பிரச்சனைகளை
தூரமாக விரட்டவேண்டும் என்பதை சதா நினைவில் கொள்ளுங்கள்.
சுலோகன்:
அன்பிற்குரியவர் ஆவதற்கான முயற்சி அல்லாமல், விடுபட்டவர்
ஆகுவதற்கான முயற்சி செய்தீர்கள் எனில் அன்பிற்குரியவராக தானாகவே
ஆகிவிடுவீர்கள்.
அவ்யக்த இஷாரா - சதா ஆடாத, அசையாத, ஒரே சமநிலையின்
ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்
நேரத்திற்கு நேரம் அநேக விதமான தடைகள் வருகின்றன. ஒரு நல்ல
சிறப்பான மாணவர், மாயைக்கு வசமாகி எதிர்ப்பவர், ஆகிவிடுகின்றார்.
மேலும் சேவையில் தடை செய்கின்றார் எனில் அப்படிப்பட்ட சமயத்தில்
பயப்படுவதில்லை தானே! அவர்களுக்கு நன்மை நிறைந்த உணர்வோடு கருணை
காட்டவேண்டும். ஆனால், அதன் காரணமாக வீண் எண்ணங்கள் எழுப்புவது
என்பது அசைந்து விடுவதாகும். யார் ஒவ்வொரு ஆத்மாவின்
பாகத்தையும் சாட்சி பார்வையாளர் மனோ நிலையில் இருந்து
பார்க்கின்றார்களோ, அவர்கள் ஆடாத அசையாத ஏக்ரஸ் நிலையில் இருக்
கின்றார்கள்.