02-08-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களுடைய உண்மையான (சம்ஸ்காரம்) பழக்கம் தூய்மையாகும், நீங்கள் இராவணனின் சகவாசத்தில் வந்து தூய்மை இழந்தவர்களாக ஆகிவிட்டீர்கள், இப்போது மீண்டும் தூய்மையாகி தூய்மையான உலகின் எஜமானர் ஆக வேண்டும்.

கேள்வி:
அசாந்திக்கான காரணம் மற்றும் அதற்கான நிவாரணம் என்ன?

பதில்:
அசாந்திக்கான காரணம் தூய்மையற்ற தன்மையாகும். இப்போது பகவான் தந்தையிடம் வாக்குறுதி செய்யுங்கள், அதாவது நாங்கள் தூய்மையாகி தூய்மையான உலகத்தை உருவாக்கு வோம், நமது பார்வையை சுத்தமாக வைத்துக் கொள்வோம், கெட்டதாக்கவில்லையெனில், அசாந்தி நீங்கி விடும். நீங்கள் அமைதியை உருவாக்குவதற்கு பொறுப்பான குழந்தைகள் ஒரு பொழுதும் அசாந்தியைப் பரப்ப முடியாது. நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும், மாயாவிற்கு அடிமையாகக் கூடாது.

ஓம் சாந்தி.
தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், கீதையின் பகவானால் கீதை கூறப்பட்டது. ஒருமுறை கூறிவிட்டு பிறகு சென்று விடுவார். இப்பொழுது குழந்தைகள் நீங்கள் கீதையின் பகவானிடமிருந்து கீதையின் ஞானத்தைக் கேட்கின்றீர்கள். மேலும் இராஜயோகத் தையும் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். அவர்கள் எழுதப்பட்ட கீதையைப் படித்து மனப்பாடம் செய்து பிறகு மனிதர்களுக்கு கூறுகின்றார்கள். அவர்களும் சரீரத்தை விட்ட பிறகு அடுத்த பிறவியில் குழந்தையான பிறகு மீண்டும் கூற முடியாது. நீங்கள் இராஜ்யம் அடையும் வரை தந்தை உங்களுக்கு கீதையை கூறுவார். லௌகீக ஆசிரியரும் பாடம் நடத்தி கொண்டே இருப்பார்கள். படிப்பு முடியும் வரை கற்றுக் கொடுப்பார்கள். படிப்பு முடிந்தவுடன் எல்லைக்குட் பட்ட வருமானத்தில் ஈடுபடுவர். ஆசிரியரிடம் படித்து, வருமானம் செய்து, வயதான பிறகு சரீரத்தை விட்ட பிறகு மீண்டும் வேறு சரீரத்தை எடுப்பார்கள். அவர்கள் கீதை கூறுகின்றார்கள், இப்போது இதனால் என்ன பிராப்தி இருக்கிறது? இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. கீதை சொல்பவர்கள் அடுத்த பிறவியில் குழந்தையான பிறகு கூற முடியாது. வளர்ந்து, வயோதி கராகி, கீதையைப் படித்தால் தான் கூற முடியும் இங்கு தந்தை ஒரு முறையே சாந்தி தாமத்திலிந்து வந்து கற்பிக்கின்றார். பிறகு சென்று விடுவார். தந்தை கூறுகின்றார் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்று கொடுத்து நான் நமது வீட்டிற்குச் செல்வேன். யாருக்கு கற்றுத் தருகின்றேனோ அவர்கள் மீண்டும் வந்து தனது பிராப்தியை அனுபவம் செய்வர். தனது வருமானத்தைச் செய்து வரிசைப்படி முயற்சிக்கேற்ப தாரணை செய்து பிறகு செல்வார்கள். எங்கே? புதிய உலகிற்கு. பழைய உலகம் முடிந்து புதிய உலகம் உருவாகும் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. நாம் இராஜயோகம் படிப்பதே புதிய உலகிற்காக என உங்களுக்குத் தெரியும். பிறகு இந்த பழைய உலகமோ, பழைய சரீரமோ இருக்காது. ஆத்மா அழிவற்றது. ஆத்மாக்கள் தூய்மையாகி பிறகு தூய்மையான உலகிற்கு வருகிறது. புதிய உலகம் இருந்தது, அதில் தேவி-தேவாத்மாக்களின் இராஜ்யம் இருந்தது, அதை சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. அந்த புதிய உலகை உருவாக்குபவர் பகவான் தான். அவர் ஒரு தர்மத்தை படைக்க வைக்கின்றார். தேவதை மூலமாக செய்ய வைப்பதில்லை. தேவதை இங்கேயே இல்லை. ஆக அவசியம் மனிதர் மூலமாகவே ஞானம் தருவார், அவரே மீண்டும் தேவதையாகி மறு பிறவி எடுத்து இப்போது பிராமணர் ஆகின்றனர். பகவான் நிராகாரமாக இருக்கின்றார், அவர் புதிய உலகை படைக்கின்றார், இந்த ரகசியத்தை குழந்தைகள் நீங்கள் மட்டுமே அறிந்துள்ளீர்கள்.

இப்போது இராவண இராஜ்யம் இருக்கிறது. நீங்கள் கேட்கலாம் கலியுக தூய்மையற்றதா அல்லது சத்யுக தூய்மையானதா? ஆனால் புரியவில்லை. இப்போது தந்தை குழந்தைகளுக்குக் கூறுகின்றார், நான் உங்களுக்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவும் புரிய வைத்தேன். குழந்தைகள் உங்களை அரைக் கல்பத்திற்கு சுகமாக ஆக்குவதற்காகவே நான் வருகின்றேன். பிறகு இராவணன் வந்து உங்களை துக்கமானவராக ஆக்குகிறான். இது சுகம் துக்கத்தின் விளையாட்டாகும். கல்பத்தின் ஆயுள் 5 ஆயிரம் ஆண்டுகள், எனவே பாதி பாதியாக இப்படித் தான் இருக்கும். இராவண இராஜ்யத்தில் அனைவரும் தேக அபிமானியாக, விகாரிகள் ஆகின்றனர். இந்த விசயங்களைக் கூட நீங்கள் இப்போது புரிந்துள்ளீர்கள், முன்பு தெரியவில்லை. கல்ப கல்பமாக யார்? புரிந்து கொண்டனரோ அவர்களே புரிந்துகொள்வார்கள். யார் தேவதை ஆக மாட்டார்களோ அவர்கள் வரவே மாட்டார்கள். நீங்கள் தேவதா தர்மத்தின் நாற்று நடுகின்றீர்கள். எப்போது அவர்கள் அசுரத் தன்மையுடைய தமோபிரதானமாக ஆகிவிடு வார்களோ அவர்களை தெய்வீக மரத்தைச் (தர்மத்தை) சேர்ந்தவர்கள் என கூறமாட்டார்கள். மதமும் (தர்மம்) கூட புதியதாக இருந்த போது சதோபிரதானமாக இருந்தது. நாம் அதன் இலைகளாக தேவி-தேவதைகளாக இருந்தோம், பிறகு ரஜோ, தமோவாகி, பழைய தூய்மை இழந்த சூத்திரர் ஆனோம். பழைய உலகில் பழைய மனிதர்களே இருப்பார்கள். பழையதை மீண்டும் புதியதாக ஆக்க வேண்டும். இப்போது தேவி- தேவதை தர்மமே மறந்து விட்டது. தந்தை கூறுகிறார்: எப்போழுதெல்லாம் தர்மத்திற்கு களங்கம் ஏற்படுகிறது என்று சொல்லும் போது, எந்த தர்மத்திற்கு நிந்தனை எற்பட்டது? என நீங்கள் கேட்க வேண்டும் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்திற்கு என அவசியம் கூறுவார்கள், அதை நான் ஸ்தாபனை செய்தேன், அந்த தர்மமே மறைந்து விட்டது. அதற்குப் பதிலாக அதர்மம் ஆகி விட்டது. எப்போது தர்மத் திலிருந்து அதர்மமாக வளர்கின்றதோ அப்போது தந்தை வருகின்றார். தர்மத்தின் வளர்ச்சி எனக் கூற முடியாது, தர்மமே மறைந்து விடுகிறது. மற்றபடி அதர்மம் வளர்ந்து விட்டது. எல்லா தர்மங்களும் வளர்கின்றது. ஒரு கிறிஸ்து மூலமாக எவ்வளவு கிறிஸ்தவ தர்மம் வளர்கிறது. மற்றபடி தேவி-தேவதா தர்மம் மறைந்து விட்டது. தூய்மை இல்லாது போன தன்னையே நிந்தனை செய்கின்றனர். தர்மத்திலிருந்து அதர்மமாகி விடுகிறது. மற்றவை அனைத்தும் சரியாக நடக்கிறது. அனைவரும் தனது தர்மத்தில் நிலையாக உள்ளனர். எந்த ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் நிர்விகாரியாக இருந்ததோ, அது விகாரியாகி விட்டது. நம்மால் தூய்மை யான உலகம் உருவானது. பிறகு அதுவே தூய்மையின்றி, சூத்திரராக ஆகி விடுகிறது, அதாவது அந்த தர்மத்திற்கு களங்கம் ஏற்படுகிறது. தூய்மையற்றவராக ஆகி தனக்கு நிந்தனை செய்விக் கின்றனர். விகாரத்தில் செல்வதால் தூய்மை இல்லாதவர்களாகின்றனர், தன்னைத் தான் தேவதை என்று கூறிக்கொள்ள முடியாது. சொர்க்கத்திலிருந்து நரகமாக மாறி விட்டது. ஆக யாருமே ஆஹா (தூய்மையாவது) என்பது போல் இல்லை நீங்கள் எவ்வளவு சீச்சீயாக அசுத்தமாகி விட்டீர்கள். தந்தை கூறுகின்றார் உங்களை நல்ல நல்ல மலர்களாக ஆக்கியிருந்தேன், பிறகு இராவணன் உங்களை முள்ளாக ஆக்கி விட்டான். தூய்மையிலிருந்து தூய்மையற்றவர்களானீர்கள் தன்னுடைய தர்மத்தின் நிலையைப் பாருங்கள். எங்களது நிலையைப் பாருங்கள் நாங்கள் எவ்வளவு அசுத்தமாகி விட்டோம், மீண்டும் எங்களை தூய்மையாக்குங்கள் என அழைக்கின்றனர். தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்கு வதற்கு தந்தை வருகின்றார் எனவே, தூய்மையாக வேண்டும், மற்றவர்களையும் ஆக்க வேண்டும்.

குழந்தைகள் நீங்கள் தன்னைத் தான் பாருங்கள், நாம் சர்வகுண சம்பன்னமாக ஆகிவிட்டோமா? நமது நடத்தை தேவதைகள் போல் இருக்கிறதா? தேவதைகளின் இராஜ்யத்தில் உலகில் அமைதி இருந்தது. இப்பொழுது உலகில் அமைதி எப்படி உருவாகும் என்பதை மீண்டும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்க வந்துள்ளேன். ஆகவே நீங்களும் அமைதியாக இருந்தாக வேண்டும். அமைதியாக இருப்பதற்கான யுக்தி கூறுகின்றேன், நீங்கள் என்னை நினைவு செய்வதால் அமைதியாகி சாந்திதாமம் செல்வீர்கள். சில குழந்தைகள் அமைதியாக இருந்து மற்றவர்களையும் அமைதியாக இருக்கக் கற்றுக் கொடுக்கின்றனார். சிலர் அசாந்தியாக்கு கின்றனர். தானும் அசாந்தியாகி மற்றவர்களையும் அசாந்தியாக ஆக்குகின்றனர். அமைதியின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அமைதியைக் கற்றுக்கொள்ள இங்கு வருகிறார்கள்.; பிறகு இங்கிருந்து சென்று அமைதியில்லாமல் ஆகி விடுகின்றனர். தூய்மை இல்லாத காரணத்தால் அசாந்தி ஏற்படுகிறது. பாபா நாங்கள் உங்களுடையவர்கள் தான்; உங்கள் மூலம் உலக அரசாட்சி அடைவோம், நாங்கள் தூய்மையாக இருந்து மீண்டும் உலகிற்கு எஜமானராக அவசியம் ஆவோம்; என வாக்குறுதி தருகின்றனர். பிறகு வீட்டிற்குச் சென்றவுடன் மாயா புயலைக் கொண்டு வருகிறது. யுத்தம் நடக்கிறது அல்லவா? பிறகு மாயாவிற்கு அடிமையாகி அசுத்தமாக விரும்புகின்றனர். தூய்மையாக இருப்போம் என வாக்குறுதி அளித்த பின்னரும் மாயாவுடைய சண்டையினால் வாக்குறுதியை மறந்து விட்டு அவர்களே பெண்களை கொடுமை செய்கின்றனர். நாங்கள் தூய்மையாகி தூய்மையான உலகத்தின் பிராப்தி அடைவோம், சுத்தமான பார்வை வைப்போம், கெட்ட பார்வையில் இருக்க மாட்டோம், விகாரத்தில் செல்லமாட்டோம், குற்றமான பார்வையை விடுவோம் என பகவானிடம் வாக்குறுதி செய்தும் பிறகு மாயா இராவணனிடம் தோல்வி அடைகின்றனர். நிர்விகாரியாக ஆக விரும்புவோரையும் தொல்லை செய்கின்றனர். எனவே அப்பாவி பெண்கள் மீது கொடுமை நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆண்கள் பலசாலியாகவும், பெண்கள் பலவீனமானவராகவும் உள்ளனர். போரில் ஆண்கள் செல்கின்றனர், ஏனென்றால் பலசாலியாக உள்ளனர், பெண்கள் இளகிய மனம் உடையவர்கள். அவர்களின் கடமை வேறுபட்டது, அவர்கள் வீட்டை பராமரித்து, குழந்தைகளைப் பெற்றெடுத்து பாலனை செய்வார்கள். அங்கு ஒரு குழந்தை தான் இருக்கும் ஆனாலும் விகாரம் என்ற பெயரில்லை என்பதையும் தந்தை புரிய வைக்கின்றார். இங்கு சந்நியாசியும் கூட அவ்வபோது கூறுகின்றார் அதாவது ஒரு குழந்தையாவது அவசியம் வேண்டும், கெட்ட பார்வை உடையோர் இவ்வாறு பொய்யான போதனை செய்கின்றனர். வினாசம் எதிரில் இருக்கிறது, எல்லாம் முடிந்து விடும், இக்காலத்து குழந்தைகளால் என்ன பயன் என தந்தை கூறுகிறார். பழைய உலகை வினாசம் செய்யவே வந்திருக்கிறேன். மற்ற விசயங்கள் சந்நியாசிகளுடையது, அவர்களுக்கு வினாசத்தைப் பற்றித் தெரியாது. இப்பொழுது வினாசம் ஆகும் என எல்லையற்ற தந்தை புரிய வைக்கின்றார். உங்களுடைய குழந்தைகள் வாரிசாக முடியாது. எங்களுடைய குலத்தின் அடையாளம் வேண்டுமென நீங்கள் தெரிந்துள்ளீர் கள். ஆனால் தூய்மையற்ற உலகத்தின் எந்த அடையாளமும் இருக்காது. தூய்மையான உலகில் இருந்தோமென புரிந்துள்ளீர்கள், மனிதர்களும் நினைவு செய்கின்றனர் ஏனென்றால் தூய்மையான உலகம் இருந்தது, அது சொர்க்கம் என அழைக்கப்படுகிறது, ஆனால் இப்போது தமோபிர தானமாக ஆனதால் புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் பார்வையே கெட்டதாக இருக்கிறது, இது தர்மத்தின் நிந்தனையாகும். ஆதிசனாதன தர்மத்தில் இப்படிபட்ட விசயங்கள் இல்லை பதீத பாவனரே வாருங்கள்; நாங்கள் தூய்மை இழந்து துக்கமாக இருக்கிறோம் என அழைக்கின்றனர். தந்தை புரிய வைக்கின்றார் நான் உங்களை தூய்மையாக்கினேன், பிறகு, மாயா இராவணனால் தூய்மை இழந்தீர்கள், இப்போது மீண்டும் தூய்மையாகுங்கள். தூய்மை யாகும்போது மாயாவின் யுத்தம் நடக்கிறது. தந்தையிடமிருந்து பிராப்தியடைய முயற்சி செய்தார்கள், ஆனால் மீண்டும் முகத்தை கருப்பாக்கிக்கொண்டால் எப்படி பிராப்தி அடைவார் கள். அழகாக ஆக்குவதற்கு தந்தை வந்திருக்கிறார்; எந்த தேவதைகள் அழகாக இருந்தனரோ, அவர்களே கருப்பாகி விட்டனர். தேவதைகளின் சரீரத்தை கருப்பாக்கி விட்டனர், கிறிஸ்து, புத்தரை எப்பொழுதாவது கருப்பாகப் பார்த்திருக்கிறீர்களா? தேவி-தேவதைகளின் சித்திரத்தை கருப்பாக ஆக்கிவிட்டனர். அனைவருக்கும் சத்கதி தரும் வள்ளல் பரமபிதா பரமாத்மா அனைவருக்கும் தந்தையாக இருக்கிறார். பரமபிதா பரமாத்மாவைக் காப்பாற்றுங்கள் என அழைக்கின்றனர், அவர் கருப்பாக இருக்க முடியுமா, அவர் எப்போதும் அழகான, என்றும் தூய்மையானவராக இருக்கிறார். கிருஷ்ணர் அடுத்த சரீரத்தை எடுத்தாலும் தூய்மையாகத்தான் இருப்பார். தேவதைகளைத்தான் மகான் ஆத்மா என கூறப்படுகிறது. ஆக கிருஷ்ணரும் தேவதைதான், இப்போது கலியுகமாக இருக்கிறது, கலியுகத்தில் மஹான் ஆத்மா எங்கிருந்து வர முடியும். ஸ்ரீ கிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவரசராக இருந்தார். அவரிடம் தெய்வீக குணம் இருந்தது. இப்பொழுது தேவதையாக யாருமில்லை. சாது, சந்நியாசிகள் தூய்மையா கின்றனர் இருந்தாலும் விகாரத்தினால் மறுபிறவி எடுக்கின்றனர், மீண்டும் சந்நியாச தர்மத்தை தாரணை செய்ய வேண்டும். தேவதைகள் எப்போதும் தூய்மை யானவர்கள். இங்கு இராவண இராஜ்யமாக இருக்கிறது. இராவணனுக்கு 10 தலைகள் காட்டப்படுகிறது- 5 பெண்ணிற்காகவும், 5 ஆணிற்காகவும் ஆனது. இதுவும் தெரியும், அதாவது 5 விகாரங்கள் ஒவ்வொரு வரிடமும் இருக்கிறது, தேவதைகளிடம் இருப்பதில்லை தானே. அதுதான் சுகமான உலகமாகும். அங்கும் இராவணன் இருந்தால் பிறகு துக்கமான உலகமாகி விடும். தேவதைகளும் கூட குழந்தைகள் பெற்றெடுக்கின்றனர், அவர்களும் விகாரி தானே என மனிதர்கள் புரிந்துள்ளனர். தேவதைகளின் மகிமை சம்பூர்ண நிர்விகாரி எனப்படுகிறது. அவர்களுக்கு பூஜை செய்யப்படுகிறது. இதைப்பற்றி அவர்களுக்குத் தெரியாது. சந்நியாசிகளுக்கும் அமைப்பு இருக்கிறது. ஆண்கள் சந்நியாசம் செய்து அமைப்பைப் பெரிதாக்குகின்றனர். தந்தை மீண்டும் இல்லற மார்க்கத்தின் புதிய அமைப்பை உருவாக்குகின்றார். ஜோடிகளைத்தான் தூய்மையாக்குகிறார். பிறகு, நீங்கள் தேவதை ஆவீர்கள். நீங்கள் இங்கு சந்நியாசி ஆவதற்காக வரவில்லை. நீங்கள் உலகிற்கு எஜமானராக வந்துள்ளீர்கள். அவர்கள் இல்லறத்தில் பிறவி எடுத்து பிறகு வெளியேறுகின்றனர். தூய்மையே உங்களின் சம்ஸ்காரமாகும். இப்போது தூய்மை இல்லாதவர்களாகி விட்டீர்கள் மீண்டும் தூய்மையாக வேண்டும். தந்தை தூய்மையான இல்லற ஆசிரமத்தை உருவாக்கு கின்றார். தூய்மையான உலகம் சத்யுகம் என்றும் தூய்மை இல்லாத உலகம் கலியுகம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு எவ்வளவு பாவ ஆத்மாக்கள் உள்ளனர், சத்யுகத்தில் இந்த விசயங்கள் இருப்பதில்லை. தந்தை கூறுகின்றார் எப்போதெல்லாம் பாரத்தின் தர்மத்திற்கு நிந்தனை ஏற்படுகிறதோ அதாவது தேவி-தேவதை தர்மத்தினர் தூய்மை இல்லாமல் இருக்கின்றனரோ அப்போது தங்களையே நிந்தனை செய்கின்றனர். நான் உங்களை தூய்மை யாக்கினேன், பிறகு நீங்கள் தூய்மை இழந்தீர்கள், எதற்கும் பயன்படாமல் ஆகிவிட்டீர்கள் என தந்தை கூறுகின்றார். எப்போது அவ்வாறு தூய்மை இல்லாதவர்களானீர்களோ அப்போது மீண்டும் தூய்மைபடுத்த நான் வரவேண்டியதாகிறது. இந்த நாடகச் சக்கரம் திரும்பவும் சுழல்கிறது. சொர்க்கத்திற்குச் செல்ல தெய்வீக குணமும் வேண்டும். கோபம் இருக்கக் கூடாது. கோபப்பட்டால் அவர்கள் அசுரர் என அழைக்கப்படுவர். மிகவும் அமைதியான மனநிலை வேண்டும். கோபப்பட்டால் இவர்களிடம் கோபத்தின் பூதம் இருக்கிறது என சொல்வர்கள். யாரிடத்திலாவது ஏதேனும் பூதம் இருந்தால் அவர்கள் தேவதை ஆக முடியாது. நரனிலிருந்து நாராயணன் ஆக முடியாது. தேவதைகள் என்றாலே நிர்விகாரி, எவ்வாறு ராஜா-ராணியோ அவ்வாறு பிரஜைகளும் நிர்விகாரியாக இருப்பார்கள். பகவான் தந்தையே வந்து சம்பூர்ண நிர்விகாரி ஆக்குகின்றார். நல்லது

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தையிடம் தூய்மைக்கான வாக்குறுதி செய்த பிறகு தங்களை மாயாவின் சண்டை யிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும்; ஒருபோதும் மாயாவிற்கு அடிமையாகக் கூடாது. இந்த வாக்குறுதியை மறக்கக் கூடாது, ஏனென்றால் இப்போது தூய்மையான உலகிற்குச் செல்ல வேண்டும்.

2. தேவதை ஆவதற்கு மனநிலையை மிகவும் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த பூதத்தையும் நுழைய விடக் கூடாது. தெய்வீக குணத்தை தாரணை செய்ய வேண்டும்.

வரதானம்:
பரிஸ்தா சொரூபத்தின் நினைவின் மூலம் தந்தையின் குடை நிழலின் அனுபவம் செய்யக் கூடிய தடைகளை வென்றவர் ஆகுக.

அமிர்தவேளை எழுந்ததும் நான் பரிஸ்தா என்பதை நினைவில் கொண்டு வாருங்கள். பிரம்மா பாபாவிற்கு பிடித்த இந்த பரிசு கொடுக்கும் போது தினமும் அமிர்தவேளையில் பாப்தாதா உங்களை தனது புஜங்களில் அமர்த்திக் கொள்வார். பாபாவின் புஜங்கள் மற்றும் அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறேன் என்ற அனுபவம் செய்வீர்கள். யார் பரிஸ்தா சொரூபத்தின் நினைவில் இருப்பார்களோ, அவர்கள் முன் எந்த பிரச்சனை அல்லது தடைகள் வந்தாலும் தந்தை அவர்களுக்கு குடை நிழலாக ஆகிவிடுவார். ஆக தந்தையின் குடை நிழல் அல்லது அன்பின் அனுபவம் செய்து தடைகளை வென்றவர்களாக ஆகுங்கள்.

சுலோகன்:
சுக சொரூப ஆத்மா சுய ஸ்திதியின் மூலம் பிரச்சனைகள் மீது எளிதாக வெற்றி அடைந்து விடுவார்.