02.11.25 காலை முரளி
ஓம் சாந்தி 31.10.2007 பாப்தாதா,
மதுபன்
தனது சிரேஷ்ட சுபாவத்தின் பெருமிதத்தில் இருந்து, நடக்க
முடியாததை நடக்கக் கூடியதாக ஆக்கி, கவலையற்ற மகாராஜா ஆகுங்கள்
இன்று பாப்தாதா தம்முடைய நாலாபுறமும் உள்ள சிரேஷ்ட சுவமான்தாரி
விசேஷ குழந்தை களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு
குழந்தையின் சுவமான் அவ்வளவு விசேஷமாக உள்ளது - அது உலகத்தில்
எந்த ஓர் ஆத்மாவுக்கும் கிடையாது. நீங்கள் அனைவரும் உலக
ஆத்மாக்கள் அனைவரின் மூதாதையரும் கூட மற்றும் பூஜைக்குரியவரும்
ஆவீர்கள். முழு சிருஷ்டியின் வேரில் ஆதார மூர்த்தி நீங்கள்
இருக்கிறீர்கள். முழு உலகத்தின் மூதாதையர், முதல் படைப்பு
நீங்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் விசேஷத் தன்மையைப்
பார்த்துக் குஷி அடைகிறார். சிறு குழந்தையாக இருந்தாலும் சரி,
வயதான தாய்மார்களாக இருந்தாலும் சரி, இல்லறவாசிகளாக இருந்தாலும்
சரி, ஒவ்வொருவருக்கும் தனித்தனி விசேஷத் தன்மைகள் உள்ளன.
இப்போது எவ்வளவு தான் பெரிய-பெரிய விஞ்ஞானிகளாக இருந்தாலும்
உலகத்தின் கணக்குப்படி விசேஷமானவர்கள் - இயற்கையை வென்றவர்கள்,
சந்திரன் வரையிலும் கூட சென்று சேர்ந்துள்ளனர். ஆனால் இவ்வளவு
மிகச்சிறிய ஜோதி சொரூப ஆத்மாவை அறிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் இங்கே சின்னஞ்சிறிய குழந்தை கூட நான் ஆத்மா என்று ஜோதி
பிந்துவை அறிந்துள்ளது. பெருமிதத்தோடு குழந்தை சொல்கிறது - நான்
ஆத்மா! எவ்வளவு தான் பெரிய மகாத்மாக்களாயினும், மற்றும் பிராமண
தாய்மார்கள் உள்ளனர், தாய்மார்கள் பெருமிதத் தோடு சொல்கிறார்கள்
- நாங்கள் பரமாத்மாவை அடைந்து விட்டோம். அடைந்து விட்டீர்கள்
இல்லையா? மேலும் மகாத்மாக்கள் என்ன சொல்கிறார்கள்? பரமாத்மாவை
அடைவது மிகவும் கஷ்டம். இல்லறவாசிகள் சவால் விடுகிறார்கள் -
நாங்கள் அனைவரும் இல்லறத்தில் இருந்து கொண்டே, கூடவே வாழ்ந்து
கொண்டு பவித்திரமாக இருக்கிறோம். ஏனென்றால் எங்களுக்கு நடுவில்
தந்தை இருக்கிறார். எனவே இருவரும் சேர்ந்து வாழ்ந்து
கொண்டிருந்தாலும் சுலபமாக பவித்திரமாக இருக்க முடிகிறது.
ஏனென்றால் பவித்திரதா நமது சுயதர்மம். பர தர்மம் (வேறு தர்மம்)
என்றால் கடினமாக இருக்கும். சுய தர்மம் சகஜமானது. மற்றும்
மக்கள் என்ன சொல்கிறார் கள்? பஞ்சும் நெருப்பும் அருகருகே
இருக்க முடியாது, மிகவும் கஷ்டம் என்கிறார்கள். நீங்கள்
அனைவரும் என்ன சொல்கிறீர்கள்? மிகவும் சுலபம். உங்கள்
அனைவருக்கும் ஆரம்பத்தில் ஒரு பாடல் இருந்தது - எவ்வளவு தான்
சேட், ஸ்வாமியாக இருந்தாலும் ஒரு தந்தையை அறிந்து கொள்ளவில்லை.
மிகச்சிறிய ஆத்மாவாகிய புள்ளியை அறியவில்லை. ஆனால் குழந்தைகள்
நீங்கள் அனைவரும் அறிந்து கொண்டு விட்டீர்கள். அடைந்து
விட்டீர்கள். இவ்வளவு நிச்சயம் மற்றும் பெருமிதத்துடன்
சொல்கிறீர்கள். நடக்க முடியாததும் நடந்து விடும். பாப்தாதாவும்
ஒவ்வொரு குழந்தையையும் வெற்றி ரத்தினமாகப் பார்த்து மகிழ்ச்சி
அடைகிறார். ஏனென்றால் குழந்தைகள் தைரியம் வைத்தால் தந்தை உதவி
செய்கிறார். எனவே உலகத்திற்கு எது நடக்க முடியாததாக உள்ளதோ, அது
சுலபமாகவும் நடக்கக் கூடியதாகவும் ஆகி விட்டது. பெருமிதம்
உள்ளது - நாம் பரமாத்மாவின் நேரடிக் குழந்தைகள். இந்த நஷாவின்
காரணத்தால், நிச்சயத்தின் காரணத்தால், பரமாத்மாவின்
குழந்தைகளாக இருக்கும் காரணத்தால் மாயாவிடம் இருந்தும் கூட
தப்பித்து விட்டீர்கள். குழந்தை ஆவது என்றால் சகஜமாகத்
தப்பித்துக் கொள்வது. ஆக, குழந்தை களாக இருக்கிறீர்கள், மற்றும்
அனைத்து விக்னங்களில் இருந்தும், பிரச்சினைகளில் இருந்தும்
விடுபட்டு இருக்கிறீர்கள்.
ஆக, தனது இவ்வளவு சிரேஷ்ட சுவமானை அறிந்திருக்கிறீர்கள் இல்லையா?
ஏனென்றால் நீங்கள் அமைதி சக்தி மூலம், மாற்றக்கூடிய சக்தியைக்
காரியத்தில் ஈடுபடுத்துகிறீர்கள். எதிர்மறையை நேர்மறையாக மாற்றி
விடுகிறீர்கள். மாயா எவ்வளவு தான் பிரச்சினை ரூபத்தில்
வந்தாலும் நீங்கள் மாற்றும் சக்தி மூலம், அமைதி சக்தி மூலம்
பிரச்சினையைத் தீர்வு சொரூபமாக ஆக்கி விடுகிறீர்கள். காரணத்தை
நிவாரண ரூபமாக மாற்றி விடுகிறீர்கள். அவ்வளவு சக்தி உள்ளது
இல்லையா? கோர்ஸும் நடத்துகிறீர்கள் இல்லையா? எதிர்மறையை
நேர்மறையாக மாற்றுவதற் கான விதி கற்றுத் தருகிறீர்கள். அந்தப்
பரிவர்த்தன் சக்தி பாபாவிடமிருந்து ஆஸ்தியாகக் கிடைத்துள்ளது.
ஒரு சக்தி மட்டுமில்லை. சர்வசக்திகள் பரமாத்ம ஆஸ்தியாகக்
கிடைத்துள்ளன. அதனால் பாப்தாதா ஒவ்வொரு நாளும் சொல்கிறார்.
ஒவ்வொரு நாளும் முரளி கேட்கிறீர்கள் இல்லையா? தினந்தோறும் பாபா
இதைத் தான் சொல்கிறார் - தந்தையை நினைவு செய்யுங்கள், ஆஸ்தியை
நினைவு செய்யுங்கள். பாபாவின் நினைவும் கூட சகஜமாக ஏன் வருகிறது?
எப்போது ஆஸ்தியின் பிராப்தியை நினைவு செய்கிறீர்களோ, அப்போது
பாபாவின் நினைவு பிராப்தியின் காரணத்தால் சகஜமாக வந்து
விடுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த ஆன்மிக நஷா உள்ளது,
மனதில் பாடல் பாடுகின்றனர் - எதையெல்லாம் அடைய வேண்டுமோ, அவற்றை
அடைந்து விட்டோம். அனைவரின் மனதிலும் இது தானாகவே பாடலாக
இசைக்கிறது இல்லையா? பெருமிதம் உள்ளது இல்லையா? எவ்வளவு இந்தப்
பெருமிதத்தில் இருக்கிறீர்களோ, அப்போது பெருமிதத்தின் அடையாளம்,
கவலையற்று இருப்பீர்கள். சங்கல்பத்தில், பேச்சில், அல்லது
சம்பந்தம்-தொடர்பில் எந்த விதமான கவலையிருக்கிறது என்றால்
பெருமிதம் இல்லை. பாப்தாதா கவலையற்ற மகாராஜாவாக
ஆக்கியிருக்கிறார். சொல்லுங்கள், கவலையற்ற மகாராஜாவா நீங்கள்?
கவலையற்ற மகாராஜா என்றால் கை உயர்த்துங்கள். கவலை யற்றவர்களா?
அல்லது அவ்வப்போது கவலை வந்து விடுகிறதா? நல்லது. எப்போது தந்தை
கவலையற்றவரோ, அப்போது குழந்தைகளுக்கு என்ன கவலை?
பாப்தாதாவோ சொல்லியிருக்கிறார் - அனைத்துக் கவலைகளையும் அல்லது
எந்த விதமான சுமை இருந்தாலும் பாப்தாதாவிடம் கொடுத்து விடுங்கள்.
தந்தை கடல் இல்லையா? எனவே சுமை அனைத்தும் உள்ளடங்கி விடும்.
சில நேரம் பாப்தாதா குழந்தைகளின் ஒரு பாடலைக் கேட்டுப்
புன்சிரிக்கிறார். என்ன பாடல் தெரியுமா? என்ன செய்வது, எப்படிச்
செய்வது அவ்வப்போது பாடுகிறீர்கள் இல்லையா? பாப்தாதாவோ கேட்டுக்
கொண்டே இருக்கிறார். ஆனால் பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும்
இதைத் தான் சொல்கிறார் - ஹே இனிய குழந்தைகளே, செல்லக்
குழந்தைகளே, சாட்சியாக இருந்து பார்க்கும் ஸ்திதியின்
இருக்கையில் செட்டாகி விடுங்கள் மற்றும் இருக்கையில் செட்டாகி
விளையாட்டைப் பாருங்கள். மிகுந்த மஜா வரும். ஆஹா! திரிகாலதரிசி
ஸ்திதியில் நிலைத்து விடுங்கள். இருக்கையிலிருந்து கீழே
வருகிறீர்கள், அதனால் அப்செட் ஆகிறீர்கள். செட்டாகி விட்டால்
அப்செட் ஆக மாட்டீர்கள். எந்த மூன்று பொருள்கள் குழந்தைகளைக்
குழப்பி விடுகிறது? 1. சஞ்சல மனம். 2. அலைகின்ற புத்தி 3. பழைய
சம்ஸ்காரங்கள். பாப்தாதாவுக்குக் குழந்தைகளின் ஒரு விஷயத்தைக்
கேட்டுச் சிரிப்பு வருகிறது. என்ன விஷயம் தெரியுமா?
சொல்கிறார்கள் - பாபா, என்ன செய்வது, என்னுடைய பழைய
சம்ஸ்காரங்கள் உள்ளன இல்லையா? பாப்தாதா புன்சிரிக்கிறார்.
எப்போது சொல்லவே செய்கிறீர் களோ - என்னுடைய சம்ஸ்காரங்கள்
என்றால் என்னுடையவையாக ஆக்கிக் கொண்டீர்களா? ஆக,
என்னுடையவற்றின் மீதோ அதிகாரம் இருக்கவே செய்கிறது. எப்போது
பழைய சம்ஸ்காரங் களைத் தனதாக்கிக் கொண்டீர்களோ, அப்போது
என்னுடையது என்ற இடத்தை அது பிடித்துக் கொள்ளும் இல்லையா? எனது
சம்ஸ்காரம் என்று பிராமண ஆத்மா சொல்ல முடியுமா? எனது-எனது எனச்
சொல்லியிருக்கிறீர்கள் என்றால் அந்த எனது தனது இடத்தை
உரிமையுடன் பிடித்துக் கொண்டது. பிராமணர்கள் நீங்கள் எனது எனச்
சொல்ல முடியாது. இவை பழைய பிறவியின் சம்ஸ்காரங்கள். சூத்திர
வாழ்க்கையின் சம்ஸ்காரங்கள். பிராமண வாழ்க்கையினுடையவை அல்ல.
ஆக, எனது-எனது எனச் சொல்லியிருக்கிறீர்கள் என்றால் அதுவும் கூட
எனது என்று அதிகாரத்தில் அமர்ந்து விடுகிறது. பிராமண
வாழ்க்கையின் சிரேஷ்ட சம்ஸ்காரத்தைப் பற்றி அறிவீர்கள் இல்லையா?
மேலும் இந்த சம்ஸ்காரத்தை நீங்கள் பழையது எனச் சொல்கிறீர்கள்.
அதுவும் பழையது இல்லை. சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்கள் பழையதிலும்
பழைய சம்ஸ்காரம் அநாதி மற்றும் ஆதி சம்ஸ்காரம் ஆகும். இதுவோ
துவாபர, மத்திய காலத்தின் சம்ஸ்காரம். ஆக, மத்திய கால
சம்ஸ்காரத்தை பாபாவின் உதவியுடன் முடித்து விட வேண்டும். இது
ஒன்றும் கஷ்டமானது இல்லை. ஆனால் என்ன நடக்கிறது? பாபா எப்போதுமே
உங்களோடு இணைந் திருப்பவர், அவர் நம்மோடு இணைந்தே இருக்கிறார்
என்பதை அறிந்தும் சகயோகம் பெற்றுக் கொள்வதில்லை.
இணைந்திருப்பதன் அர்த்தமே சமயத்தில் சகயயோகி என்பது தான். ஆனால்
சமயத்தில் சகயோகம் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் மத்திய
காலத்தின் சம்ஸ்காரம் மகான் ஆகி விடுகிறது.
பாப்தாதாவுக்குத் தெரியும் - குழந்தைகள் அனைவருமே பாபாவின்
அன்புக்குப் பாத்திரமானவர்கள் தாம். உரிமையுள்ளவர்கள் தாம்.
அன்பின் காரணத்தால் தான் அனைவரும் தங்கள் வீட்டுக்கு வந்து
சேர்ந்திருக்கிறீர்கள் என்பது பாபாவுக்குத் தெரியும்.
வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாலும் சரி, உள்நாட்டிலிருந்து
வந்திருந்தாலும் சரி, அனைவரும் பரமாத்ம அன்பின் கவர்ச்சியால்
தங்கள் வீடு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். சொல்லுங்கள்,
அனைவரும் அன்பெனும் கயிற்றால் கட்டப்பட்டு இங்கே வந்து
சேர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? இந்தப் பரமாத்ம அன்பு மனதுக்கு
ஆறுதலளிப்பதாகும். நல்லது - யார் முதல் தடவையாக இங்கே வந்து
சேர்ந்திருக் கிறீர்களோ, அவர்கள் கை உயர்த்துங் கள். கை
அசையுங்கள். நல்வரவாகட்டும்.
இப்போது பாப்தாதா என்ன வீட்டுப்பாடம் கொடுத்திருந்தாரோ,
நினைவுள்ளதா வீட்டுப்பாடம்? நினைவு உள்ளதா? பாப்தாதாவிடம் பல
விதமான ரிசல்ட்டுகள் வந்துள்ளன. அனைவரின் ரிசல்ட்டும் வரவில்லை.
சிலரிடம் இருந்து இத்தனை சதவிகிதம் என வந்துள்ளது. ஆனால்
இப்போது என்ன செய்ய வேண்டும்? பாப்தாதா எதை விரும்புகிறார்?
பாப்தாதா இதைத் தான் விரும்புகிறார் - அனைவரும் பூஜைக்குரிய
ஆத்மாக்கள், எனவே பூஜைக்குரிய ஆத்மாக்களின் விசேஷ லட்சணம்
ஆசிர்வாதம் கொடுப்பதேயாகும். ஆக, நீங்கள் அனைவரும் பூஜைக்குரிய
ஆத்மாக்கள் என்பதை அறிவீர்களா? ஆக, இந்த ஆசிர்வாதம் கொடுப்பது,
அதாவது ஆசிர்வாதம் பெறுவது என்பது புரிந்து கொள்ளப்பட்டதாக ஆகி
விடுகிறது (அண்டர்ஸ்டுட்). யார் ஆசிர்வாதம் கொடுக்கிறாரோ,
யாருக்குக் கொடுக்கிறாரோ, அவருடைய மனதிலிருந்து
கொடுப்பவருக்காக அடிக்கடி ஆசிர்வாதம் வெளிப்படுகிறது. எனவே ஹே
பூஜைக்குரிய ஆத்மாக்களே! உங்களுடைய மூல சம்ஸ்காரமோ
ஆசிர்வாதங்கள் கொடுப்பது தான். அநாதி சம்ஸ்காரம் ஆசிர்வாதம்
கொடுப்ப தாகும். எப்போது உங்கள் ஜட சித்திரங்களும்
ஆசிர்வாதங்களைக் கொடுத்துக் கொண்டுள்ளனவோ, அப்போது சைதன்ய
பூஜைக்குரிய ஆத்மாக்களாகிய உங்களுக்கோ, ஆசிர்வாதம்
கொடுப்பதென்பது இயற்கையான சம்ஸ்காரமாகும். இதை எனது சம்ஸ்காரம்
எனச் சொல்லுங்கள். மத்திய, துவாபர யுக சம்ஸ்காரம்
இயற்கையானதாகவும், இயல்பானதாகவும் ஆகி விட்டது. உண்மையில் இந்த
சம்ஸ்காரம் ஆசிர்வாதம் கொடுப்பதற்கான நேச்சுரல் நேச்சர் ஆகும்.
எப்போது யாருக்காவது ஆசிர்வாதம் கொடுக்கிறீர்களோ, அப்போது அந்த
ஆத்மா எவ்வளவு குஷியடைந்து விடுகிறது! அந்தக் குஷியின்
வாயுமண்டலம் எவ்வளவு சுகம் தருவதாக உள்ளது! எனவே யாரெல்லாம்
வீட்டுப்பாடம் செய்திருக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும்,
வந்திருந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி, ஆனால்
பாப்தாதாவுக்கு முன்னிலையில் இருக்கிறார்கள். ஆக, பாப்தாதா அவர்
களுக்கு வாழ்த்து சொல்கிறார். வீட்டுப்பாடம்
செய்திருக்கிறீர்கள் என்றால் அதைத் தங்களின் நேச்சுரல்
நேச்சராக ஆக்கிக் கொண்டு இனிமேலும் செய்து கொண்டு, செய்ய
வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் சிலர் கொஞ்சம்
செய்திருக்கலாம், செய்யாமலும் இருக்கலாம். அவர்கள் அனைவரும்
நான் சதா பூஜைக்குரிய ஆத்மா, நான் பாபாவின் ஸ்ரீமத்படி நடக்கக்
கூடிய விசேஷ ஆத்மா, இந்த ஸ்மிருதியை (நிலையை) அடிக்கடி தனது
நினைவு மற்றும் சொரூபத்தில் கொண்டுவர வேண்டும். ஏனென்றால்
ஒவ்வொருவரிடமும் நீங்கள் என்னவாக ஆகப்போகிறீர்கள் என்று
கேட்கும் போது அனைவருமே லட்சுமி-நாராயண் ஆகப்போகிறோம் என்று
தான் சொல்கிறார்கள். இராம்-சீதாவில் யாரும் கை உயர்த்துவதில்லை.
16 கலை சம்பூர்ணம் ஆக வேண்டும் என்ற லட்சியம் உள்ளதென்றால், 16
கலை என்றால் பரம பூஜைக்குரியவர். பூஜைக்குரிய ஆத்மாவின் கடமை -
ஆசீர்வாதம் கொடுப்பது. இந்த சம்ஸ்காரத்தை நடமாடும் போதும்
சுற்றி வரும் போதும் சதா காலத்திற்காகவும் உருவாக்குங்கள்.
பூஜைக்குரியவராகவே இருக்கிறீர்கள். 16 கலைகள் நிரம்பியவராகவே
இருக்கிறீர்கள். லட்சியமோ இது தான் இல்லையா?
பாப்தாதா குஷியடைகிறார் - யாரெல்லாம் செய்திருக்கிறார்களோ,
அவர்கள் தங்கள் நெற்றியில் வெற்றித் திலகத்தை பாப்தாதா மூலம்
இட்டுக் கொண்டு விட்டார்கள். அதோடு சேவையின் செய்தியும்
பாப்தாதாவுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும், வர்க்கங்களின்
தரப்பிலிருந்தும், சென்டர் களில் இருந்தும் மிக நல்ல
ரிசல்ட்டுடன் வந்து சேர்ந்திருக்கிறது. எனவே ஒன்று,
வீட்டுப்பாடம் செய்தமைக்கு வாழ்த்து, மற்றும் அதோடு
சேவைக்காகவும் வாழ்த்துகள், பல கோடி மடங்கு! பாப்தாதா
பார்த்தார் - ஒவ்வொரு கிராமத்திலும் செய்தி கொடுப்பதற்கான சேவை
மிக நல்ல விதத்தில் பெரும்பாலான ஏரியாக்களில்
செய்திருக்கிறீர்கள். ஆக, இந்த சேவையும் இரக்க மனம் உள்ளவராகிச்
செய்திருக்கிறீர்கள். எனவே சேவையின் ஊக்கம்-உற்சாகத்தில்
ரிசல்ட்டும் நன்றாகக் காணப்படுகிறது. இது முயற்சி (உழைப்பு)
செய்யவில்லை, ஆனால் பாபாவின் அன்பு, அதாவது செய்தி கொடுப்பதன்
மூலம் அன்பு, அன்பில் சேவை செய்திருக்கிறீர்கள். எனவே அன்பின்
பிரதிபலனாக அனைத்து சேவாதாரிகளுக்கும் தானாகவே பாப்தாதாவின் பல
கோடி மடங்கு அன்பு கிடைக்கிறது மற்றும் கிடைத்துக் கொண்டே
இருக்கும். அதோடு அனைவரும் தங்கள் அன்பான தாதியை மிகுந்த
அன்போடு நினைவு செய்து கொண்டு தாதிக்கு அன்பின் பிரதிபலனைக்
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அன்பின் நறுமணம்
பாப்தாதாவிடம் மிக நல்ல விதத்தில் வந்து சேர்ந்துள்ளது.
இப்போது மதுபனில் என்னென்ன காரியங்கள் நடந்து கொண்டுள்ளனவோ, அது
வெளிநாட்டின ருடையதாக இருந்தாலும் அல்லது பாரதத்தைச்
சேர்ந்தவர்களுடையதாக இருந்தாலும் அந்த அனைத்துக் காரியங்களும்
ஒருவர் மற்றவரின் சகயோகம், மதிப்பு வைப்பதன் ஆதாரத்தில் மிக
நன்றாக வெற்றி பெற்றுள்ளன. ஏனென்றால் வெற்றியோ உங்கள் கழுத்து
மாலையாகவே உள்ளது. பாபாவின் கழுத்துக்கும் நீங்கள் மாலையாக
இருக்கிறீர்கள். ஆக, கழுத்து மாலை (ஹார்) ஒரு போதும்
தோல்வியடைய (ஹார்) முடியாது. ஆக, மாலை ஆக வேண்டுமா அல்லது
தோல்வி அடைய வேண்டுமா? இல்லை தானே? மாலை ஆவது நல்லது இல்லையா?
ஆக, ஒரு போதும் தோல்வியடையக் கூடாது. தோல்வி அடைபவர்களோ, பல
கோடி ஆத்மாக்கள். நீங்கள் மாலை (ஹார்) ஆகி கழுத்தில்
அணியப்பட்டு விட்டவர்கள். அப்படித் தான் இல்லையா? எனவே
சங்கல்பம் செய்யுங்கள் - அன்பில் மாயா எவ்வளவு தான் புயல்களை
எதிரில் கொண்டு வந்தாலும் மாஸ்டர் சர்வ சக்திவான் ஆத்மாக்களின்
முன்னால் புயலோ பரிசாகி விடும். அந்த மாதிரி வரதானத்தை சதா
நினைவு செய்யுங்கள். எவ்வளவு தான் உயர்ந்த மலையாக இருந்தாலும்
மலை மாற்ற மடைந்து பஞ்சாகி விடும். இப்போது சமயத்தின்
சமீபத்தின்பிரமாணம் வரதானங்களை ஒவ்வொரு சமயமும் அனுபவத்தில்
கொண்டு வாருங்கள். அனுபவங்களின் அத்தாரிட்டி ஆகுங்கள்.
எப்போது விரும்புகிறீர்களோ, அப்போது தனது அசரீரி ஆவதற்கான, ஃபரிஸ்தா
சொரூபம் ஆவதற்கான பயிற்சியைச் செய்து கொண்டே இருங்கள்.
அவ்வப்போது பிராமணன், அவ்வப்போது ஃபரிஸ்தா, அவ்வப்போது அசரீரி,
நடமாடும் போதும் சுற்றி வரும் போதும், காரியங்கள் செய்யும்
போதும் கூட ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் ஒதுக்கி அப்பியாசம்
செய்யுங்கள். சோதித்துப் பாருங்கள் - எந்த சங்கல்பம்
செய்தீர்களோ, அதே சொரூபத்தை அனுபவம் செய்தீர்களா? நல்லது.
நாலாபுறம் உள்ள சதா சிரேஷ்ட சுவமான்தாரி, சதா தன்னைப் பரம
பூஜைக்குரியவர் மற்றும் மூதாதையர் என்ற அனுபவம் செய்யக்கூடிய,
சதா பாபாவின் மன சிம்மாசனத்தில் அமரக் கூடியவர், புருவமத்தியின்
ஆசன தாரியாக, சதா சிரேஷ்ட ஸ்திதியின் அனுபவங்களில் நிலைத்
திருக்கக் கூடிய, நாலாபுறம் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும்
அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே! அனைத்துத் தரப்பிலிருந்தும்
அனைவரின் கடிதங்கள், ஈமெயில், செய்திகள் அனைத்தும்
பாப்தாதாவிடம் வந்து சேர்ந்துள்ளன. ஆக, சேவையின் பலன் மற்றும்
பலம், அனைத்து சேவாதாரி களுக்கும் கிடைத்துள்ளன மற்றும்
கிடைத்துக் கொண்டே இருக்கும். அன்பின் கடிதங்களும் நிறைய
வருகின்றன. மாற்றும் சக்தி உள்ளவர்களுக்கு பாப்தாதா அமர் பவ
என்ற வரதானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எந்த
சேவாதாரிகள் ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்றியிருக் கிறார்களோ,
அதுபோல் பின்பற்றக் கூடிய குழந்தைகளுக்கு பாப்தாதா சொல்கிறார்
- சதா கட்டளைப்படி நடக்கிற குழந்தைகளே ஆஹா! பாப்தாதா இந்த
வரதானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் மற்றும்
அன்புள்ளவர்களுக்கு மிகமிக அன்போடு மனதில் நிறைத்திருக்கும்
மிக அன்பான மற்றும் மாயாவின் தடைகளைக் கடந்து விட்டவர்களுக்கும்
இந்த வரதானத்தை அளிக்கிறார். நல்லது.
இப்போது அனைவரின் மனதிலும் என்ன மாதிரியான ஊக்கம் வந்து
கொண்டிருக்கிறது? ஒரே ஓர் ஊக்கம் - பாபாவுக்கு சமமாக ஆகியே தீர
வேண்டும். இந்த ஊக்கம் இருக்கிறது இல்லையா? பாண்டவர்கள் கை
உயர்த்துங்கள். ஆகியே தீர வேண்டும். பார்க்கலாம், ஆகலாம்
என்றெல்லாம் சொல்லக் கூடாது. ஆனால் ஆகியே தீர வேண்டும். பக்கா.
பக்கா? நல்லது. ஒவ்வொருவரும் அவரது ஓ.கே. கார்டைத் தங்களின்
டீச்சரிடம் சார்ட் ரூபத்தில் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதிகம் எழுதக் கூடாது. ஒரு கார்டு பெற்றுக் கொள்ளுங்கள், அதில்
ஓ.கே. என எழுதுங்கள். எழுதுங்கள் அல்லது கோடு போடுங்கள். போதும்.
இதையோ செய்ய முடியும் இல்லையா? நீளமான கடிதம் வேண்டாம். நல்லது.
ஆசீர்வாதம்:
சங்கமயுகத்தில் பிரத்தியட்ச பலன் மூலம் சக்திசாலி ஆகக்கூடிய சதா
சக்திசா- ஆத்மா ஆகுக.
சங்கமயுகத்தில் எந்த ஆத்மாக்கள் எல்லையற்ற சேவைக்கு நிமித்தம்
ஆகிறார்களோ, அவர்களுக்கு நிமித்தமாவதற்கான பிரத்தியட்ச (பழம்)
பலனாக சக்தியின் பிராப்தி கிடைக்கிறது. இந்தப் பிரத்தி யட்ச
பலன் தான் சிரேஷ்ட யுகத்தின் பலனாகும். இந்தப் பழத்தை
உண்ணக்கூடிய சக்திசாலி ஆத்மா எந்த ஒரு பரிஸ்திதியின் மீதும்
சகஜமாகவே வெற்றி யடைவார். அவர்கள் சக்திசாலி தந்தையுடன்
இருக்கும் காரணத்தால் வீணானவற்றில் இருந்து சகஜமாகவே விடுபட்டு
விடு வார்கள். நச்சுப் பாம்புக்கு சமமான பரிஸ்திதி மீதும் கூட
அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். எனவே ஞாபகார்த்தமாகக்
கிருஷ்ணர் பாம்பின் தலை மீது நடனமாடியதாகக் காட்டுகின்றனர்.
சுலோகன்:
பாஸ் வித் ஆனர் ஆகி கடந்த (பாஸ்ட்) காலத்தைக் கடந்து (பாஸ்)
செல்லுங்கள் மற்றும் சதா பாபாவுக்கு அருகிலேயே (பாஸ்) இருங்கள்.
அவ்யக்த சமிக்ஞை - அசரீரி அல்லது விதேகி ஸ்திதியின் பயிற்சியை
அதிகப்படுத்துங்கள்
எப்படி பாபா அசரீரியிலிருந்து சரீரத்தில் வருகிறாரோ, அது போலவே
குழந்தைகளும் கூட அசரீரி ஆகி சரீரத்தில் வர வேண்டும். அவ்யக்த
ஸ்திதியில் நிலைத்திருந்து பிறகு வ்யக்தத்தில் (சரீரத்தில்) வர
வேண்டும். எப்படி இந்த சரீரத்தை விடுவதும் சரீரத்தை
எடுப்பதுமான அனுபவம் அனைவருக்கும் உள்ளதோ, அதே போல் எப்போது
விரும்புகிறீர்களோ, அப்போது சரீர உணர்வை விட்டு அசரீரி ஆகி
விடுங்கள் மற்றும் எப்போது விரும்புகிறீர்களோ, அப்போது சரீரத்தை
ஆதாரமாக எடுத்துக் கர்மங்களைச் செய்யுங்கள். முற்றிலும் இது
போலவே அனுபவம் செய்யுங்கள் - எப்படி இந்த ஸ்தூல ஆடை (சரீரம்)
தனியாக உள்ளது மற்றும் ஆடையை அணிகின்ற நான் ஆத்மா தனியாக
இருக்கிறேன்.