02-12-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய தீபத்தை
சுயம் நீங்களே பாதுகாக்க வேண்டும். புயல்களிலிருந்து
காப்பாற்றப்பட்டு இருக்க வேண்டும் என்றால் ஞான யோகத்தின்
எண்ணெய் (நெய்) அவசியம் வேண்டும்.
கேள்வி:
எந்த ஒரு புருஷார்த்தம் (முயற்சி)
மறைமுகமான (குப்தமான) தந்தையிடமிருந்து மறைமுகமான (குப்தமான)
ஆஸ்தியை அளிக்கிறது?
பதில்:
உள்முகமாக அதாவது மௌனமாக இருந்து
தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் (குப்தமான) மறைமுகமான ஆஸ்தி
கிடைத்து விடும். நினைவில் இருந்தபடியே சரீரம் விடுபட்டு
விட்டது என்றால் மிகவும் நல்லது. இதில் எந்த ஒரு கஷ்டமும்
கிடையாது. நினைவினுடன் கூடவே ஞான யோகத்தின் சேவை கூட செய்ய
வேண்டும். அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் கர்மனா சேவை
செய்யுங்கள். அநேகருக்கு சுகம் அளித்தீர்கள் என்றால் ஆசீர்வாதம்
கிடைக்கும். நடத்தை மற்றும் உரையாடல் மிகவும் சாத்வீகமானதாக (நற்பண்புகள்
நிறைந்ததாக) இருக்க வேண்டும்.
பாடல்:
பலவீனமானவருடன் பலவானின் சண்டை.....
ஓம் சாந்தி.
இது போன்ற பாடலைக் கேட்கும் பொழுது ஒவ்வொருவரும் தன் மீதே "விசார்
சாகர் மந்தன்" (ஞான மனனம்) செய்ய வேண்டும் என்று பாபா புரிய
வைத்துள்ளார். மனிதர்கள் இறந்து விடும் பொழுது 12 நாட்கள் தீபம்
ஏற்றி வைக்கிறார்கள் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள்.
நீங்கள் பின்னர் இறப்பதற்காக ஏற்பாடுகள் செய்து
கொண்டிருக்கிறீர்கள். மேலும் தங்களது ஜோதியை புருஷார்த்தம் (முயற்சி)
செய்து தாங்களே ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள். புருஷார்த்தம் (முயற்சி)
கூட மாலையில் வருபவர்களே செய்கிறார்கள். பிரஜைகள் இந்த மாலையில்
வருவதில்லை. நாம் வெற்றி மாலையில் முதலில் செல்ல வேண்டும் என்ற
புருஷார்த்தம் செய்ய வேண்டும். தீபம் அணைந்து போய் விடும்
வகையில் எங்காவது மாயை என்ற பூனை புயல்களைக் கிளப்பி விகர்மங்
கள் செய்விக்காமல் இருக்க வேண்டும். இப்பொழுது இதில் ஞானம்
மற்றும் யோகம் இரண்டு பலமும் வேண்டும். யோகத்துடன் கூடவே
ஞானமும் அவசியம் ஆகும். ஒவ்வொருவரும் தங்களது தீபத்தைப்
பாதுகாக்க வேண்டும். கடைசிவரையும் புருஷார்த்தம் நடக்கவே வேண்டி
உள்ளது. ஓட்டப் பந்தயம் நடந்து கொண்டே இருக்கிறது. எனவே
எங்காவது ஜோதி (தீவிரம்) குறைந்து விட கூடாது என்று மிகவும்
கவனம் கொள்ள வேண்டும். எனவே யோகம் மற்றும் ஞானத்தின் நெய்
தினமும் ஊற்ற வேண்டி உள்ளது. யோக பலத்தின் வலிமை இல்லை என்றால்
பந்தயத்தில் ஓட முடியாது. பின்னால் தங்கி விடுவார்கள். பள்ளிக்
கூடத்தில் "சப்ஜெக்ட்" - பாடங்கள் இருக்கும். பார்க்கிறார்கள்
- நாம் இந்த பாடத்தில் கூர்மையாக இல்லை. எனவே கணக்கில் அதிகமான
முயற்சி செய்கிறார்கள். இங்கும் அவ்வாறே. ஸ்தூல சேவையினுடைய (சப்ஜெக்ட்)
பாடங்கள் கூட மிகவும் நன்றானது. நிறைய பேரினுடைய ஆசீர்வாதம்
கிடைக்கிறது. ஒரு சில குழந்தைகள் ஞானத்தின் சேவை செய்கிறார்கள்.
நாளுக்கு நாள் சேவை அதிகமாகிக் கொண்டே போகும். ஒரு முதலாளிக்கு
6-8 கடைகள் கூட இருக்கும். எல்லாமே ஒன்று போல நடப்பதில்லை. ஒரு
கடையில் குறைவான வாடிக்கையாளர்கள் மற்றொன்றில் அதிகமாக
இருப்பார்கள். உங்களுக்கு இரவில் கூட நேரம் கிடைக்காத
அப்பேர்ப்பட்ட நாட்கள் கூட வரப்போகிறது. ஞானக் கடலான பாபா
வந்துள்ளார். அழிவற்ற ஞான ரத்தினங்களால் பையை நிரப்புகிறார்
என்பது அனைவருக்கும் தெரிய வரப் போகிறது. பிறகு நிறைய
குழந்தைகள் வருவார்கள் -கேட்கவே வேண்டாம். ஒருவர் மற்றொரு
வருக்கு கூறுகிறார்கள் அல்லவா? "இங்கு இந்த பொருள் மிகவும்
நன்றாக மலிவாகக் கிடைக்கிறது". இந்த இராஜயோகத்தின் கல்வி
மிகவும் சகஜமானது என்பதை குழந்தைகளாகிய நீங்களும்
அறிந்துள்ளீர்கள். அனைவருக்கும் இந்த ஞான ரத்தினங்கள் பற்றி
தெரிய வந்து விடும் பொழுது வந்து கொண்டே இருப்பார்கள். நீங்கள்
இந்த ஞானம் மற்றும் யோகத்தின் சேவை செய்கிறீர்கள். யார் இந்த
ஞான யோகத்தின் சேவை செய்ய முடியவில்லையோ பிறகு கர்மனா
சேவைக்குக் கூட மார்க்குகள் உள்ளது. அனைவருடைய ஆசீர்வாதம்
கிடைக்கும். ஒருவருக்கொருவர் சுகம் அளிக்க வேண்டி உள்ளது. இதுவோ
மிகமிக மலிவான சுரங்கம் ஆகும். இது அழிவில்லாத வைர
வைடூரியங்களின் சுரங்கம் ஆகும். 8 ரத்தினங்களின் மாலை
அமைக்கிறார்கள் அல்லவா? பூஜிக்கவும் செய்கிறார்கள் ஆனால் இந்த
மாலை யாருடையது என்பது யாருக்கும் தெரியாது.
நாம் தான் எப்படி பூஜிக்கத்தக்க நிலையிலிருந்து பூசாரி ஆகிறோம்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது மிகவும்
அதிசயமான ஞானமாகும். இது பற்றி உலகத்தில் யாருக்கும் தெரியாது.
இப்பொழுது அதிர்ஷ்ட நட்சத்திரங்களாக இருக்கும் குழந்தைகளாகிய
உங்களுக்குத் தான் நாம் சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தோம்
என்ற நிச்சயம் உள்ளது. இப்பொழுது நரகத்தின் அதிபதியாக ஆகி
விட்டுள்ளோம். சொர்க்கத்தின் அதிபதியாக இருக்கும் பொழுது புனர்
ஜென்மம் கூட அங்கு தான் எடுப்பார்கள். இப்பொழுது மீண்டும் நாம்
சொர்க்கத்தின் அதிபதியாக ஆகிக் கொண்டிருக்கிறோம்.
பிராமணர்களாகிய உங்களுக்கு தான் இந்த சங்கமயுகம் பற்றித்
தெரியும். மறுபுறம் முழு உலகமும் கலியுகத்தில் உள்ளது. யுகமோ
தனித்தனியானது ஆகும் அல்லவா? சத்யுகத்தில் இருக்கும் பொழுது
புனர்ஜென்மம் சத்யுகத்தில் எடுப்பார்கள். இப்பொழுது நீங்கள்
சங்கமயுகத்தில் உள்ளீர்கள். உங்களில் யாராவது சரீரம் விட்டு
விட்டார்கள் என்றால் சம்ஸ்காரங்களுக்கேற்ப பின்னர் இங்கேயே
வந்து பிறவி எடுப்பார்கள். பிராமணர்களாகிய நீங்கள்
சங்கமயுகத்தினர் ஆவீர்கள். அந்த சூத்திரர்கள் கலியுகத்தினர்
ஆவார்கள். இந்த ஞானம் கூட உங்களுக்கு இந்த சங்கமத்தில்
கிடைக்கிறது. பி.கு.வாக (பிரம்மா குமார்-குமாரிகள்) இருக்கும்
ஞான கங்கைகளாகிய நீங்கள் நடைமுறையில் இப்பொழுது சங்கமயுகத்தில்
உள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் ஓட்டப் பந்தயத்தில் செல்ல
வேண்டும். கடைகளைப் பராமரிக்க வேண்டும். ஞான யோகத்தின் தாரணை
ஆக வில்லை என்றால் கடைகளைப் பராமரிக்க முடியாது. சேவைக்கான
வெகுமதியோ பாபா அளிக்கக் கூடியவர் ஆவார். யக்ஞம் (வேள்வி)
படைக்கப்படும் பொழுது பல்வேறு விதமான பிராமணர்கள் வந்து
விடுகிறார்கள். பிறகு ஒரு சிலருக்கு அதிகமான தட்சணை கிடைக்கிறது.
ஒரு சிலருக்கு குறைவாக கிடைக்கிறது. இப்பொழுது இது பரமபிதா
பரமாத்மா ருத்ர ஞான யக்ஞத்தைப் படைத்துள்ளார். நாம் பிராமணர்கள்
ஆவோம். நம்முடைய தொழிலே மனிதனை தேவதையாக ஆக்குவது ஆகும். நாம்
இந்த வேள்வியில் மனிதனிலிருந்து தேவதையாக ஆகிக்
கொண்டிருக்கிறோம் என்று கூறும் வகையில் அப்பேர்ப்பட்ட வேள்வி
வேறு எதுவுமே கிடையாது. இப்பொழுது இதற்கு ருத்ர ஞான யக்ஞம்
அல்லது பாட சாலை என்றும் கூறப்படுகிறது. ஞானம் மற்றும் யோகத்
தினால் ஒவ்வொரு குழந்தையும் தேவி தேவதையின் பதவியை அடைய
முடியும். பாபா ஆலோசனையும் அளிக்கிறார். நீங்கள்
பரந்தாமத்திலிருந்து பாபா கூடவே வந்துள்ளீர்கள். நாம் பரந்தாம
நிவாசி ஆவோம் என்று நீங்கள் கூறுவீர்கள். இச்சமயத்தில் பாபாவின்
வழிப்படி நாம் சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம்.
யார் ஸ்தாபனை செய்வார்களோ அவர்கள் தான் அவசியம் எஜமானர் ஆகி
விடுவார்கள். இந்த உலகத்தில் நாம் "மோஸ்ட் லக்கியெஸ்ட்" மிகவுமே
அதிர்ஷ்டம் நிறைந்த ஞான சூரியன், ஞான சந்திரன் மற்றும் ஞான
நட்சத்திரங்கள் ஆவோம். அமைப்பவர் ஞானக் கடல் ஆவார். அந்த
சூரியன் சந்திரன் நட்சத்திரங்களோ ஸ்தூலத்தில் உள்ளன. அவற்றுடன்
நாம் ஒப்பிடப்படுகிறோம். எனவே நாம் கூட ஞான சூரியன், ஞான
சந்திரன் மற்றும் ஞான நட்சத்திரங்களாக உள்ளோம். நம்மை அது போல
உருவாக்குபவர் ஞானக் கடல் ஆவார். பெயரோ இடப்படும் அல்லவா? ஞான
சூரியன் அல்லது ஞானக் கடலுக்கு நாம் குழந்தைகள் ஆவோம். அவரோ
இங்கு வசிப்பவர் அல்ல. நான் வந்து உங்களை எனக்குச் சமமாக
ஆக்குகிறேன் என்று பாபா கூறுகிறார். ஞான சூரியன்,
நட்சத்திரங்களாக நீங்கள் இங்கு ஆக வேண்டும். உண்மையில் நாம்
வருங்காலத்தில் பின்னர் இங்கேயே சொர்க்கத்தின் அதிபதி ஆகி
விடுவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லாமே (புருஷர்த்தம்)
முயற்சியைப் பொருத்தது ஆகும். நாங்கள் மாயை மீது வெற்றி
அடைவதற்கான படை வீரர்கள் ஆவோம். அந்த மனிதர்கள் மனதை
வசப்படுத்து வதற்காக எவ்வளவு ஹட யோகம் ஆகியவை செய்கிறார்கள்.
நீங்களோ ஹடயோகம் ஆகியவை செய்ய முடியாது. நீங்கள் எந்த ஒரு
கடினமானதையும் செய்ய வேண்டியதில்லை என்று பாபா கூறுகிறார்.
என்னிடம் நீங்கள் வர வேண்டி உள்ளது. எனவே என்னை நினைவு
செய்யுங்கள் என்று மட்டும் கூறுகிறேன். நான் குழந்தைகளாகிய
உங்களை அழைத்துச் செல்ல வந்துள்ளேன். இது போல வேறு எந்த
மனிதரும் கூற முடியாது. ஒருவர் தங்களை இறைவன் என்று வேண்டு
மானாலும் கூறிக் கொள்ளட்டும். ஆனால் தங்களை கைடு (வழிகாட்டி)
என்று கூற முடியாது. நான் முக்கியமான வழிகாட்டி மற்றும்
காலன்களுக்கெல்லாம் காலன் ஆவேன் என்று பாபா கூறுகிறார். ஒரு
சத்தியவான் சாவித்திரியின் கதை உள்ளது அல்லவா? அவர்களுடையது
சரீரங்கள் மீதான அன்பாக இருந்த காரணத்தால் துக்கமடைந்து
கொண்டிருந்தார்கள். நீங்களோ குஷிப்படுகிறீர்கள். நான்
உங்களுடைய ஆத்மாவை அழைத்துச் செல்வேன். நீங்கள் ஒரு பொழுதும்
துக்கமடைய மாட்டீர்கள். நமது பாபா (ஸ்வீட் ஹோம்) இனிமையான
இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார் என்பதை
அறிந்துள்ளீர்கள். அந்த இல்லத்திற்கு முக்தி தாமம் நிர்வாண
தாமம் என்று கூறப்படுகிறது. நான் அனைத்து காலன்களுக்கெல்லாம்
காலன் ஆவேன் என்று கூறுகிறார். அந்த காலனோ ஒரு ஆத்மாவைக்
கூட்டிச் செல்கிறான். நானோ எவ்வளவு பெரிய காலன் ஆவேன். 5 ஆயிரம்
வருடங்களுக்கு முன்பேயும் நான் கைடு (வழிகாட்டி) ஆகி அனைவரையும்
அழைத்துச் சென்றிருந்தேன். மணமகன் மணமகள்களை திரும்ப அழைத்துச்
செல்கிறார். எனவே அவரை நினைவு செய்ய வேண்டி உள்ளது.
இப்பொழுது நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். பிறகு இங்கு
வருவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். முதலில் "ஸ்வீட் ஹோம்"
இனிமையான இல்லத்திற்குச் செல்வீர்கள். பிறகு கீழே வருவீர்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் சொர்க்கத்தின் நட்சத்திரம் ஆவீர்கள்.
முன்பு நரகத்தில் இருந்தீர்கள். நட்சத்திரங்கள் என்று
குழந்தைகளுக்குக் கூறப்படுகிறது. அதிர்ஷ்ட நட்சத்திரங்கள்
வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப உள்ளார்கள். உங்களுக்கு
பாட்டனாரின் சொத்து கிடைக்கிறது. மிகவுமே வளமுள்ள சுரங்கம்
ஆகும். மேலும் இந்த சுரங்கம் ஒரே ஒரு முறை தான் வெளிப்படுகிறது.
அந்த சுரங்கங்களோ நிறைய உள்ளன அல்லவா? வெளிப்பட்டுக் கொண்டே
இருக்கின்றன. யாராவது வந்து தேடினார்கள் என்றால் நிறைய உள்ளன.
இதுவோ ஒரே ஒரு முறை மட்டுமே கிடைக்கும் ஒரே ஒரு சுரங்கம் -
அழிவற்ற ஞானரத்தினங்களினுடையது கிடைக்கிறது. அந்த புத்தகங்களோ
நிறைய உள்ளன. ஆனால் அவற்றை ரத்தினங்கள் என்று கூற மாட்டார்கள்.
பாபாவிற்கு ஞானக் கடல் என்று கூறப்படுகிறது. அழியாத ஞான
ரத்தினங்களின் நிராகார களஞ்சியம் (கடல்) ஆவார். இந்த
ரத்தினங்களால் நாம் பைகளை நிரப்பி கொண்டே இருக்கிறோம்.
குழந்தைகளாகிய உங்களுக்கு குஷி இருக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் போதை (பெருமிதம்) கூட இருக்கும். கடைகளில்
வியாபாரம் அதிகமாக நடக்கும் பொழுது பெயரும் புகழும் ஏற்படுகிறது.
இங்கு பிரஜைகளையும் அமைத்து கொண்டிருக்கிறீர்கள். பின் வாரிசும்
அமைத்து கொண்டி ருக்கிறீர்கள். இங்கிருந்து இரத்தினங்களின் பையை
நிரப்பிச் சென்று தானம் அளிக்க வேண்டும். பரமபிதா பரமாத்மா தான்
ஞானக் கடல் ஆவார். அவர் ஞான ரத்தினங்களால் பையை நிரப்புகிறார்.
மற்றபடி இரத்தினங்களின் தட்டுக்களை நிரப்பி தேவதை களுக்கு
அளிப்பதாகக் காட்டும் அந்த கடல் ஒன்றும் கிடையாது. அந்த
கட--ருந்து இரத்தினங்கள் கிடைப்பதில்லை. இது ஞான இரத்தினங்கள்
பற்றிய விசயம். நாடகத்தின் படி மீண்டும் இரத்தினங்களின்
சுரங்கம் உங்களுக்கு கிடைக்கிறது. அங்கு ஏராளமான வைர
வைடூரியங்கள் இருக்கும். அவற்றினால் பின்னர் பக்தி
மார்க்கத்தில் கோயில்கள் ஆகியவை கட்டுவார்கள். பூகம்பம் ஆகியவை
ஏற்படுவதால் எல்லாமே உள்ளே சென்று விடுகிறது. அங்கு மாளிகைகள்
ஆகியவையோ நிறைய உருவாக்கப்படும். ஒன்று மட்டும் அல்ல. இங்கு
கூட ராஜாக்களுக் கிடையே நிறைய போட்டிகள் இருக்கின்றன. முந்தைய
கல்பத்தில் எப்படி வீடுகளைக் கட்டினார்களோ மீண்டும் முற்றிலும்
சரியாக அவ்வாறே அமைப்பார்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். அங்கோ மிகவும் சுலபமாக வீடுகள் ஆகியவற்றை
அமைக்க கூடும். (சையன்ஸ்) விஞ்ஞானம் மிகவுமே உதவுகிறது. ஆனால்
அங்கு சையன்ஸ் என்ற வார்த்தை இருக்காது. சையன்ஸ்-க்கு
ஹிந்தியில் விஞ்ஞானம் என்று கூறுகிறார்கள். தற்காலத் திலோ
விஞ்ஞானபவன் என்ற பெயரும் வைத்துள்ளார்கள். விஞ்ஞானம் என்ற
வார்த்தை ஞானத் துடன் கூட பொருந்துகிறது. ஞானம் மற்றும்
யோகத்திற்கு விஞ்ஞானம் என்று கூறுவார்கள். ஞானத் தினால்
ரத்தினங்கள் கிடைக்கின்றன. யோகத்தினால் நாம் எவர் ஹெல்தி (என்றும்
ஆரோக்கிய மானவராக) ஆகிறோம். இது ஞானம் மற்றும் யோகத்தின் நாலேஜ்
(அறிவு) ஆகும். இவற்றினால் பிறகு வைகுண்டத்தின் பெரிய பெரிய
மாளிகைகள் உருவாக்குவார்கள். நாம் இப்பொழுது இந்த முழு
ஞானத்தையும் அறிந்துள்ளோம். நாம் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக்
கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். உங்களுக்கு
இந்த தேகத்தின் மீது எந்த பற்றும் கிடையாது. ஆத்மாக்களாகிய நாம்
இந்த சரீரத்தை விட்டு விட்டு சொர்க்கத்திற்குச் சென்று புதிய
சரீரத்தை எடுப்போம். அங்கும் நாம் ஒரு பழைய உடலை விட்டு சென்று
புதியதை எடுப்போம் என்பதை புரிந்திருப்போம். அங்கு எந்த ஒரு
துக்கமோ அல்லது கவலையோ இருக்காது. புதிய சரீரம் எடுக்கிறார்கள்
என்றால் நல்லது தானே! எப்படி முந்தைய கல்பத்திலும் ஆகி
இருந்தோமோ அவ்வாறே பாபா நம்மை ஆக்கிக் கொண்டிருக்கிறார். நாம்
மனிதனிலிருந்து தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறோம். உண்மையில்
முந்தைய கல்பத்திலும் அநேக தர்மங்கள் இருந்தன. கீதையில் ஒன்றும்
இது கிடையாது. பிரம்மா மூலமாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின்
ஸ்தாபனை என்று பாடப்படுகிறது. அநேக தர்மங்களின் விநாசம் எப்படி
ஆகிறது என்பதை நீங்கள் புரிய வைக்க முடியும். இப்பொழுது ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது. தேவி தேவதா தர்மம் மறைந்து
விட்டிருக்கும் பொழுது தான் பாபா வந்திருந்தார். பிறகு பரம்பரை
பரம்பரையாக எவ்வாறு நடந்திருக்க முடியும். இது மிகவும் சுலபமான
விஷயங்கள் ஆகும். எதனுடைய விநாசம் (அழிவு) ஆகியது? அநேக
தர்மங்களினுடைய விநாசம். எனவே இப்பொழுது அநேக தர்மங்கள் உள்ளன
அல்லவா? இச்சமயம் முடிவின் நேரம் ஆகும். முழு ஞானம் புத்தியில்
இருக்க வேண்டும். அப்படியின்றி சிவபாபா தான் புரிய வைக்கிறார்
என்பதல்ல. இந்த பாபா எதுவுமே கூறுவதில்லையா என்ன? இவருடையதும்
பாகம் உள்ளது. ஸ்ரீமத் பிரம்மாவினுடையதும் பாடப்பட்டுள்ளது.
கிருஷ்ணருக்காக ஸ்ரீமத் என்று கூறுவதில்லை. அங்கோ எல்லோருமே
ஸ்ரீ (உயர்ந்தவர்களாக) இருப்பார்கள். அவர்களுக்கு வழி
கூறுவதற்கான அவசியமே இருக்காது. இங்கு பிரம்மாவின் வழியும்
கிடைக்கிறது. அங்கோ ராஜா ராணி எப்படியோ அப்படியே பிரஜைகள் -
அனைவருடையதும் சிரேஷ்டமான (சிறந்த) வழியாக இருக்கும். அவசியம்
யாரோ கொடுத்திருக்க வேண்டும். தேவதைகள் ஸ்ரீமத் உடையவர்கள்
ஆவீர்கள். ஸ்ரீமத்தினால் தான் சொர்க்கம் அமைகிறது. அசுர
வழியினால் நரகம் அமைந்தது. ஸ்ரீமத் சிவனுடையது ஆகும். இந்த
எல்லா விஷயங் களும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஆகும்.
இவை அனைத்தும் சிவபாபாவினுடைய கடைகள் ஆகும். குழந்தைகளாகிய நாம்
நடத்தக் கூடியவர்கள் ஆவோம். யார் நன்றாக கடையை நடத்து கிறாரோ
அவருக்கு பெயர் புகழ் கிடைக்கிறது. எப்படி வியாபாரங்களில்
நடக்கிறதோ மிகச் சரியாக அவ்வாறே இங்கும் நடக்கிறது. ஆனால் யாரோ
ஒருவர் தான் இந்த வியாபாரம் செய்கிறார்கள். வியாபாரமோ எல்லோரும்
செய்ய வேண்டும். சிறிய குழந்தைகள் கூட ஞானம் மற்றும் யோகத்தின்
வியாபாரம் செய்ய முடியும். சாந்திதாமம் மற்றும் சுக தாமம் -
அவ்வளவே ! .புத்தியில் அவற்றை நினைவு செய்ய வேண்டும். அந்த
மனிதர்கள் ராம் - ராம் என்பார்கள். இங்கு மௌனமாக இருந்து நினைவு
செய்ய வேண்டும். எதுவுமே வாயால் கூற வேண்டியது இல்லை. சிவபுரி
விஷ்ணுபுரி - மிகவும் சுலபமான விஷயங்கள் ஆகும். ஸ்வீட் ஹோம் (இனிமையான
இல்லம்) ஸ்வீட் ராஜதானி நினைவில் உள்ளது. அவர்கள் ஸ்தூல
மந்திரம் கொடுக்கிறார்கள். இது சூட்சுமமான மந்திரம் ஆகும்.
மிகவும் சூட்சுமமான நினைவு ஆகும். இந்த நினைவு மட்டும்
செய்வதாலேயே நாம் சொர்க்கத்தின் அதிபதி ஆகி விடுகிறோம். ஜபிக்க
வேண்டியது எதுவும் இல்லை. நினைவு மட்டுமே செய்ய வேண்டும்.
சப்தம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. (குப்தமான) ரகசியமான
பாபாவிடமிருந்து ரகசியமான ஆஸ்தியை மௌனமாக இருப்பதால் மற்றும்
உள்முகமாக இருப்பதால் நாம் அடைந்து விடுகிறோம். இதே நினைவில்
இருந்தபடியே சரீரம் விடுபட்டு விட்டால் மிகவும் நல்லதாகும்.
எந்த கஷ்டமும் கிடையாது. யாருக்கு நினைவு நிலைப்பதில்லையோ
அவர்கள் தங்கள் பயிற்சியை செய்ய வேண்டும். என்னை நினைவு
செய்தீர்கள் என்றால் அந்த் மதி சோ கதி (கடைசியில் புத்தி
எவ்வாறோ அவ்வாறே கதி) ஆகி விடும் என்று பாபா கூறுகிறார் என்பதை
அனைவருக்கும் சொல்லுங்கள். நினைவினால் விகர்மங்கள் விநாசம் ஆகி
விடும் மற்றும் நான் சொர்க்கத்திற்கு அனுப்பி விடுவேன்.
புத்தியோகத்தை சிவபாபாவிடம் ஈடுபடுத்துவது மிகவும் சுலபம் ஆகும்.
பத்தியம் (கட்டுப்பாடுகள்) கூட முழுமையாக இங்கேயே தான் செய்ய
வேண்டும். சதோபிரதானமாக ஆகிறீர்கள் என்றால் எல்லாமே
சாத்வீகமானதாக இருக்க வேண்டும் - நடத்தையும் சாத்வீக மானதாக,
பேசுவதும் (சாத்வீகமானதாக) நல்ல பண்புகள் இருக்க வேண்டும். இது
தான் உங்களிடம் நீங்கள் உரையாடுவது ஆகும். துணைவரிடம் அன்புடன்
பேச வேண்டும். அன்பான வார்த்தைகள் எப்பொழுதுமே விலைமதிப்பிட
முடியாதவை என்று பாடலிலும் உள்ளது அல்லவா?
நீங்கள் "ரூப்-பஸந்த்" (ஞானம் கேட்டு, நடைமுறையில் யோக வாழ்வை
மழை போன்று பொழிபவர்கள்) ஆவீர்கள். ஆத்மா ரூபம் ஆகிறது. ஞானக்
கடல் தந்தை ஆவார். எனவே அவசியம் வந்து ஞானத்தைத் தான் கூறுவார்.
நான் ஒரே ஒரு முறை வந்து சரீரத்தை தாரணை செய்கிறேன் என்று
கூறுகிறார். இது குறைந்த மாயா ஜாலம் கிடையாது. பாபா கூட "ரூப்-பஸந்த்"
ஆவார். ஆனால் நிராகாரமானவரோ உரையாட முடியாது. எனவே சரீரத்தை
எடுத்துள்ளார். ஆனால் அவர் புனர் ஜென்மத்தில் வருவதில்லை.
ஆத்மாக்களோ புனர் ஜென்மத்தில் வருகிறார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் பாபாவிடம் சமர்ப்பணம் ஆகிறீர்கள். ஆக
பாபா கூறுகிறார். பிறகு பற்று இருக்கக் கூடாது. தனதென்று
எதையும் நினைக்காதீர்கள். பற்றினை நீக்குவதற்காகத் தான் பாபா
யுக்திகளைக் (வழிமுறைகளை) கூறுகிறார். ஒவ்வொரு அடியிலும்
தந்தையிடம் கேட்க வேண்டி உள்ளது. மாயை எப்பேர்ப்பட்டது என்றால்
ஓங்கி அறைந்து விடுகிறது. முழுமையான குத்து சண்டை ஆகும். நிறைய
பேரோ அடி வாங்கிய பின் சுதாரித்துக் கொண்டு விடுகிறார்கள்.
எழுதவும் செய்கிறார்கள் - பாபா மாயை ஓங்கி அறைந்து விட்டது.
முகத்தை கருப்பாக்கி விட்டது. நான்கு அடுக்கு மாடியிலிருந்து
கீழே விழுந்தது போல. கோபப்பட்டார் என்றால் மூன்றாவது அடுக்கு
மாடியிலிருந்து விழுந்தது போல. இது மிகவுமே புரிந்து கொள்ள
வேண்டிய விஷயங்கள் ஆகும். இப்பொழுது பாருங்கள் குழந்தைகள் (டேப்)
ஒலி நாடாவிற்காகவும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பாபா டேப்
அனுப்பி கொடுங்கள் அப்பொழுது நாங்கள் (அக்யூரேட்) மிகச் சரியாக
முரளி கேட்க முடியும். இதுவும் ஏற்பாடு ஆகிக் கொண்டிருக்கிறது.
நிறைய பேர் கேட்டார்கள் என்றால் நிறைய பேரினுடைய (புத்தி என்ற)
கதவு திறந்து விடும். நிறைய பேருக்கு நன்மை ஆகும். மனிதர்கள்
கல்லூரி திறக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அடுத்த பிறவியில்
அதிகமான கல்வி கிடைக்கிறது. பாபாவும் கூறுகிறார் - "டேப் மெஷீன்"
வாங்கினீர்கள் என்றால் அநேகருக்கு நன்மை ஏற்படும் விடும்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சதோபிரதானமாக ஆக வேண்டுமானால் மிக மிக கட்டுப்பாடுகளுடன்
நடக்க வேண்டும். தங்களுடைய உணவு பழக்கங்கள், பேசுவது மற்றும்
நடத்தை அனைத்தையும் சாத்வீகமாக வைத்திருக்க வேண்டும். தந்தைக்கு
சமமாக "ரூப்-பஸந்த் (ஞான யோகத்துடன் கூடியவராக) ஆக வேண்டும்.
2. அழியாத ஞான ரத்தினங்களின் நிராகாரி களஞ்சியத்தின் மூலம்
தங்களது பையை நிரப்பி அளவற்ற குஷியில் இருக்க வேண்டும். மேலும்
மற்றவர்களுக்கும் இந்த ரத்தினங்களை தானமாக அளிக்க வேண்டும்.
வரதானம்:
மோகத்தை அறவே நீக்கி துக்கம், அமைதியின்மையின் பெயர்
அடையாளத்தையும் அகற்றி விடுபவராக, நினைவின் சொரூபமாகுக
யாரொருவர் எப்போதும் ஒருவர் நினைவில் இருப்பாரோ அவரது மனோநிலை
(ஏக்ரஸ்) ஒரே ரசனையில் சீராக இருக்கும். ஏக்ரஸ் நிலையின் பொருள்
யாதெனில் ஒருவர் மூலமாக சர்வ சம்பந்தம், சர்வ பிராப்திகளின்
ரசனையை அனுபவம் செய்வதாகும். யாரொருவர் தந்தையை சர்வ
சம்பந்தத்தாலும் தனதாக்கி நினைவின் சொரூபமாக இருப்பாரோ அவர்
சுலபமாகவே மோகத்தை நீக்கியவராவார். மோகத்தை நீக்கியவருக்கு
ஒருபோதும் வருமானம் ஈட்டுபவதிலோ, செல்வத்தை பாதுகாப்பதிலோ,
எந்த வியாதியின் வசமோ துக்கத்தின் அலை வர முடியாது. நஷ்டமோகா
என்றாலே துக்கம் அசாந்தியின் பெயர் அடையாளமும் இல்லதாத
நிலையாகும். எப்பொழுதும் கவலையற்ற நிலை.
சுலோகன்:
இரக்க மனதுடன் அனைவருக்கும் ஆசிகள் வழங்கிக் கொண்டிருப்பவரே
மன்னிப்பராகின்றார்.