03-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஒவ்வொரு அடியிலும்
ஸ்ரீமத் படி நடந்து கொண்டே இருங்கள். இது பிரம்மாவின் வழியா
அல்லது சிவபாபாவினுடைய வழியா என்பதில் குழம்பாதீர்கள்.
கேள்வி:
நல்ல மூளை உடைய குழந்தைகள் எந்த
ஒரு ஆழமான விஷயத்தை சுலபமாகவே புரிந்து கொள்ள முடியும்?
பதில்:
பிரம்மா பாபா புரிய வைத்துக்
கொண்டிருக்கிறாரா, இல்லை சிவபாபாவா என்ற விஷயத்தை நல்ல மூளை
உடையவர்கள் சுலபமாகவே புரிந்து கொண்டு விடுவார்கள். ஒரு சிலரோ
இதில் தான் குழம்பி விடுகிறார்கள். குழந்தைகளே பாப்தாதா
இருவரும் சேர்ந்திருக் கிறார்கள். நீங்கள் குழம்பாதீர்கள் என்று
பாபா கூறுகிறார். ஸ்ரீமத் என்று புரிந்து நடந்து கொண்டே
இருங்கள். பிரம்மாவின் வழிக்குக் கூட சிவபாபா தான் பொறுப்பாளர்
ஆவார்.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார். பிராமணர் களாகிய நாம் தான் ஆன்மீகத் தந்தையை
அறிந்திருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். உலகத்தில்
எந்த மனிதர்களும் யாரை காட்ஃபாதர் அல்லது பரமபிதா பரமாத்மா
என்று கூறுகிறார் களோ அந்த ஆன்மீகத் தந்தையை அறியாமல்
இருக்கிறார்கள். அந்த ஆன்மீகத் தந்தை வரும் பொழுது தான்
ஆன்மீகக் குழந்தைகளுக்கு தன் அறிமுகத்தை அளிக்கிறார். இந்த
ஞானம் சிருஷ்டி யின் ஆரம்பத்திலும் இருப்பதில்லை சிருஷ்டியின்
முடிவிலும் இருப்பதில்லை. இப்பொழுது உங்களுக்கு ஞானம்
கிடைத்துள்ளது. இது சிருஷ்டியின் முடிவு மற்றும் ஆரம்பத்திற்கு
இடைப் பட்ட சங்கமயுகம் ஆகும். இந்த சங்கம யுகத்தைக் கூட
அறியாமல் உள்ளார்கள் என்றால் பின் தந்தையை எவ்வாறு அறிந்து
கொள்ள முடியும். ஹே பதீத பாவனரே ! வாருங்கள், வந்து தூய்மை
ஆக்குங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் பதீத பாவனர் யார்
மற்றும் அவர் எப்பொழுது வருவார் என்பது தெரியாது. நான் யாராக
இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்று என்னைப் பற்றி யாருமே
அறியாமல் உள்ளார்கள் என்று தந்தை கூறுகிறார். நான் வந்து
அறிமுகம் அளிக்கும் பொழுது தான் என்னை அறிந்து கொள்ள முடியும்.
நான் என்னைப் பற்றியும் படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய
அறிமுகத்தையும் சங்கமயுகத்தில் ஒரே ஒரு முறை வந்து அளிக்கிறேன்.
கல்பத்திற்குப் பிறகு மீண்டும் வருகிறேன். உங்களுக்கு என்ன
புரிய வைக்கிறேனோ அது மீண்டும் மறைந்து போய் விடுகிறது.
சத்யுகம் முதற் கொண்டு கலியுக கடைசிவரையும் எந்த ஒரு மனிதர்
கூட பரமபிதா பரமாத்மாவாகிய என்னை அறியாமல் உள்ளார்கள். பிரம்மா,
விஷ்ணு, சங்கரன் பற்றி கூட தெரியாது. என்னை மனிதர்கள் தான்
அழைக்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரனை அழைக்கிறார்களா என்ன?
மனிதர்கள் துக்கம் அடையும் பொழுது தான் அழைக்கிறார்கள்.
சூட்சும வதனத்தினுடைய விஷயமே கிடையாது. ஆன்மீகத் தந்தை வந்து
தனது ஆன்மீகக் குழந்தை களுக்கு அதாவது ஆத்மாக்களுக்கு வந்து
புரிய வைக்கிறார். நல்லது, ஆன்மீகத் தந்தையின் பெயர் என்ன? பாபா
என்று யாரை அழைக்கிறோமோ அவருக்கு அவசியம் ஏதாவது பெயர் இருக்க
வேண்டும். உண்மையில் சிவன் என்ற ஒரே ஒரு பெயர் தான்
பாடுகிறார்கள். இந்த பெயர் பிரசித்தமானதாகும். ஆனால் மனிதர்கள்
அநேக பெயர்களை வைத்துள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் தங்களுடைய
புத்தியில் தோன்றுவதைக் கொண்டு இந்த லிங்க ரூபத்தை
அமைத்துள்ளார்கள். பிறகும் பெயர் சிவன் என்பதே ஆகும். நான் ஒரு
முறை வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். வந்து முக்தி ஜீவன்
முக்தியின் ஆஸ்தியை அளிக்கிறேன். மனிதர்கள் முக்தி தாமம்,
நிர்வாண தாமம் என்று பெயரைக் கூறுகிறார்கள் என்றாலும் கூட
ஒன்றுமே அறியாமல் உள்ளார்கள். தந்தையையும் அறியாமல் உள்ளார்கள்.
தேவதைகளையும் அறியாமல் உள்ளார்கள். தந்தை பாரதத்தில் வந்து
எப்படி ராஜதானி ஸ்தாபனை செய்கிறார் என்பது யாருக்குமே தெரியாது.
பரமபிதா பரமாத்மா எப்படி வந்து ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின்
ஸ்தாபனை செய்கிறார் என்ற எந்த விஷயங்களும் சாஸ்திரங்களில் கூட
கிடையாது. அப்படியின்றி சத்யுகத்தில் தேவதைகளுக்கு இருந்த ஞானம்
மறைந்து போய் விட்டது என்பதல்ல. ஒரு வேளை தேவதை களிடமும் இந்த
ஞானம் இருந்திருந்தது என்றால், அது வழி வழியாக வந்து கொண்டே
இருந்திருக் கும். இஸ்லாமியர், பௌத்தர் ஆகியோருடைய ஞானம் வழி
வழியாக வந்து கொண்டே இருக்கிறது. இந்த ஞானம் மறைந்து
போய்விடுகிறது என்பதை எல்லோரும் அறிந்துள்ளார்கள். நான் வரும்
பொழுது எந்த ஆத்மாக்கள் (பதீதமாக) தூய்மையற்றவர்களாகி
இராஜ்யத்தை இழந்து அமர்ந்துள்ளார்களோ அவர்களை வந்து மீண்டும்
தூய்மையாக ஆக்குகிறேன். பாரதத்தில் இராஜ்யம் இருந்தது. பிறகு
எப்படி இழந்தார்கள் என்பது கூட யாருக்கும் தெரியாது. எனவே
குழந்தைகளுடைய புத்தி எவ்வளவு கீழ்த்தரமாக ஆகி விட்டுள்ளது
என்று தந்தை கூறுகிறார். நான் குழந்தைகளுக்கு இந்த ஞானத்தை
அளித்து பாக்கியத்தை அளிக்கிறேன். பிறகு எல்லோரும் மறந்து
விடுகிறார்கள். எப்படி தந்தை வந்தார், எப்படி குழந்தைகளுக்கு
கல்வி அளிக்கிறார், இவை அனைத்தையும் மறந்து விடுகிறார்கள்.
இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. குழந்தைகளுக்கு சிந்தனைக்
கடலைக் கடைவதற்கான (ஞான மனனம் செய்தல்) உயர்ந்த புத்தி வேண்டும்.
நீங்கள் படித்து கொண்டே வந்திருக்கும் சாஸ்திரங்கள் ஆகியவற்றை
சத்யுக திரேதாவில் படிக்க வில்லை என்று தந்தை கூறுகிறார். அங்கு
அவை இல்லவே இல்லை. நீங்கள் இந்த ஞானத்தை மறந்து விடுகிறீர்கள்.
பிறகு கீதை போன்ற சாஸ்திரங்கள் எங்கிருந்து வந்தது? யாரெல்லாம்
கீதையைக் கேட்டு இந்த பதவியை அடைந்தார்களோ அவர்களே அறியாமல்
இருக்கும்பொழுது மற்ற எல்லோரும் எப்படி அறிந்து கொள்ள முடியும்.
தேவதைகள் கூட அறிந்து கொள்ள முடியாது. நாம் மனிதனிலிருந்து
தேவதை எப்படி ஆனோம் என்று. அந்த புருஷார்த்தத்தின் (முயற்சி)
பாகமே முடிந்து போய்விட்டது. உங்களது (பிராலப்தம்) பாக்கியம்
ஆரம்பமாகியது. அங்கு இந்த ஞானம் எப்படி இருக்க முடியும்? இந்த
ஞானம் முந்தைய கல்பத்தைப் போல மீண்டும் கிடைத்துக்
கொண்டிருக்கிறது என்று தந்தை புரிய வைக்கிறார். உங்களுக்கு
இராஜயோகம் கற்பிக்கப்பட்டு பிராலப்தம் (பலனை) அளிக்கப்படுகிறது.
பிறகு அங்கோ துர்கதி இருக்காது. எனவே ஞானத்தின் விஷயம் கூட எழ
முடியாது. ஞானம் இருப்பதே சத்கதியை அடைவதற்காக. அதை அளிப்பவர்
ஒரு தந்தை ஆவார். சத்கதி மற்றும் துர்கதி என்ற வார்த்தை
இங்கிருந்து வெளிப்படுகிறது. சத்கதியை பாரதவாசிகள் தான்
பெறுகிறார்கள். ஹெவென்லி காட்ஃபாதர் ஹெவெனைப் (சொர்க்கம்)
படைத்தார் என்று நினைக்கிறார்கள். எப்பொழுது படைத்தார்? இது
எதுவுமே தெரியாது. சாஸ்திரங்களில் லட்சக்கணக்கான வருடங்கள்
என்று எழுதி விட்டுள்ளார்கள். குழந்தைகளே உங்களுக்கு மீண்டும்
ஞானம் அளிக்கிறேன். பிறகு இந்த ஞானம் முடிந்து போய் விடும்
பொழுது பக்தி ஆரம்பமாகிறது என்று தந்தை கூறுகிறார். அரைக்
கல்பம் ஞானம் இருக்கும். அரைக் கல்பம் இருப்பது பக்தி. இது கூட
யாருக்குமே தெரியாது. சத்யுகத்திற்கு ஆயுளே லட்சக் கணக்கான
வருடங்கள் கொடுத்து விட்டுள்ளார்கள். பிறகு எப்படித் தெரிய
வரும்? 5 ஆயிரம் வருடங்களின் விஷயம் கூட மறந்து விட்டுள்ளார்கள்.
யுகங்களே நான்கு தான். நான்கு யுகங்களினுடைய சமமான காலம் 1250
வருடங்கள் ஆகும். பிராமணர்களினுடையது இது சிறிய யுகம் ஆகும்.
அந்த 4 யுகங்களை விட இது மிகவும் சிறிய யுகமாகும். எனவே தந்தை
பல்வேறு வழிகளில் புதுப் புது பாயிண்ட்டுகளை சுலபமான வழியில்
குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். தாரணை
நீங்கள் செய்ய வேண்டும். உழைப்பு நீங்கள் செய்ய வேண்டும்.
நாடகப்படி என்ன புரிய வைத்துக் கொண்டு வந்துள்ளேனோ அந்த பாகம்
நடந்து கொண்டு வருகிறது. எது கூற வேண்டி இருந்ததோ அதையே இன்று
கூறிக் கொண்டு இருக்கிறேன். வெளிப் பட்டு கொண்டே இருக்கிறது.
நீங்கள் கேட்டு கொண்டே போகிறீர்கள். நீங்கள் தான் தாரணை செய்ய
வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும். நான் ஒன்றும் தாரணை
செய்ய வேண்டிய தில்லை. உங்களுக்குக் கூறுகிறேன். தாரணை செய்விக்
கிறேன். தூய்மை இல்லாதவர்களை தூய்மை ஆக்கக் கூடிய பார்ட் என்
ஆத்மாவில் உள்ளது. முந்தைய கல்பத்தில் என்ன புரிய வைத்தேனோ
அதுவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் என்ன கூறப்போகிறேன்
என்பது எனக்கு முன்கூட்டியே தெரியாது. இவருடைய ஆத்மா
வேண்டுமானால் ஞான மனனம் செய்து கொண்டிருக்கலாம். இவர் ஞான மனனம்
செய்து கூறுகிறாரா இல்லை பாபா கூறுகிறாரா என்பது மிகவுமே ஆழமான
விஷயங்கள் ஆகும். இதில் மிகவுமே நல்ல மூளை வேண்டும். யார்
சேவையில் மூழ்கி இருப்பார்களோ அவர்களுக்குள் தான் ஞான மனனம்
நடந்து கொண்டிருக்கும்.
உண்மையில் கன்னிகைகள் பந்தனத்திலிருந்து விடுபட்டவர்களாக
இருப்பார்கள். அவர்கள் இந்த ஆன்மீக படிப்பில் ஈடுபட்டு விட
வேண்டும். பந்தனமோ எதுவும் இல்லை. குமாரிகள் நன்றாக முன்னேறிச்
செல்லலாம்.அவர்களுக்கு வேலையே கற்பது மற்றும் கற்பிப்பது.
அவர்கள் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. குமாரி நல்ல முறையில்
இந்த ஞானத்தை புரிந்து கொண்டு விட்டார் என்றால் எல்லோரையும்
விட நல்லவராக இருப்பார். புத்திசாலியாக இருந்தார் என்றால்
அவ்வளவு தான், இந்த ஆன்மீக சம்பாத்தியத்தில் ஈடுபட்டு விடுவார்.
ஒரு சிலரோ ஆர்வத்துடன் லௌகீக கல்வியைக் கற்றுக் கொண்டே
இருக்கிறார்கள். இதனால் எந்த லாபமும் இல்லை என்று புரிய
வைக்கப்படுகிறது. நீங்கள் இந்த ஆன்மீகப் படிப்பை படித்து
சேவையில் ஈடுபட்டு விடுங்கள். அந்த படிப்போ எந்த வேலைக்கும்
ஆவதில்லை. படித்து விட்டு இல்லற விவகாரங்களில் சென்று
விடுகிறார்கள். இல்லறத்தின் தாய்மார்கள் ஆகி விடுகிறார்கள்.
கன்னிகைகளோ இந்த ஞானத்தில் ஈடுபட்டு விட வேண்டும். ஒவ்வொரு
அடியிலும் ஸ்ரீமத்படி நடந்து தாரணையில் ஈடுபட்டு விட வேண்டும்.
மம்மா ஆரம்ப முதலே வந்தார், உடன் இந்த படிப்பில் ஈடுபட்டு
விட்டார். எத்தனை குமாரிகளோ காணாமல் போய் விட்டார்கள்.
குமாரிகளுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஸ்ரீமத்படி நடந்தார்கள்
என்றால் மிகவுமே ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆகி விடுவார்கள். இது ஸ்ரீமத்
ஆகுமா இல்லை பிரம்மாவின் வழியா - இதில் தான் குழம்பி
விடுகிறார்கள். பிறகும் இது பாபாவின் ரதம் அல்லவா? இவர் மூலமாக
ஏதாவது தவறு ஏற்பட்டாலும் கூட நீங்கள் ஸ்ரீமத்படி நடந்து கொண்டே
இருந்தீர்கள் என்றால், அவர் (சிவபாபா) தானாகவே சரி செய்து
விடுவார். ஸ்ரீமத் கிடைப்பது கூட இவர் மூலமாகத் தான்.
எப்பொழுதுமே ஸ்ரீமத் கிடைக்கிறது என்று புரிந்திருக்க வேண்டும்.
பிறகு என்ன ஆனாலும் சுயம் அவர் பொறுப்பாளி ஆவார். இவர் மூலமாக
எது நடந்தாலும் நான் பொறுப்பாளி ஆவேன் என்று பாபா கூறுகிறார்.
நாடகத்தில் இந்த ரகசியம் பொருந்தி உள்ளது. இவரையும் திருத்த
முடியும். பிறகும் தந்தை ஆவார் அல்லவா? பாப்தாதா இருவரும்
சேர்ந்திருப் பதால் குழம்பி விடுகிறார்கள். சிவபாபா கூறுகிறாரா
இல்லை பிரம்மா கூறுகிறாரா என்று தெரியவில்லையே! சிவபாபா தான்
வழி கூறுகிறார் என்று நினைத்தால் ஒரு பொழுதும் ஆடிப் போக
மாட்டார்கள். சிவபாபா என்ன புரிய வைப்பாரோ அது சரியானதாகத் தான்
இருக்கும் .பாபா நீங்கள் தான் எனது தந்தை, ஆசிரியர், குரு என்று
நீங்கள் கூறுகிறீர்கள். எனவே ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் அல்லவா?
என்ன கூறுகிறாரோ அதன்படி நடங்கள். எப்பொழுதுமே சிவபாபா
கூறுகிறார் என்று உணர்ந்திருங்கள். அவர் (கல்யாணகாரி) நன்மை
செய்பவர். ரதம் ஆகும் அல்லவா? இது பிரம்மாவின் ஆலோசனையா, இல்லை
சிவனினுடையதா என்று தெரியவில்லையே என்று ஏன் குழம்புகிறீர்கள்?
சிவபாபா தான் புரிய வைக்கிறார் என்று நீங்கள் ஏன் நினைப்பதில்லை.
ஸ்ரீமத் என்ன கூறுகிறதோ அதை செய்து கொண்டே இருங்கள்.
மற்றவர்களுடைய வழியில் நீங்கள் ஏன் தான் வருகிறீர்கள்?
ஸ்ரீமத்படி நடப்பதால் ஒரு பொழுதும் தூங்கி விழ மாட்டீர்கள்.
ஆனால் நடக்க முடிவதில்லை. குழம்பி விடுகிறார்கள். நீங்கள்
ஸ்ரீமத் மீது நிச்சயம் வைத்தீர்கள் என்றால் நான் பொறுப்பாளி
என்று பாபா கூறுகிறார். நீங்கள் நிச்சயமே வைப்பதில்லை என்றால்
நான் கூட பொறுப்பாளி இல்லை. ஸ்ரீமத்படி நடக்கவே வேண்டும் என்று
எப்பொழுதும் புரிந்து இருங்கள். அவர் என்ன கூறினாலும் சரி.
அணைத்தாலும் சரி, அடித்தாலும் சரி - இது அவருக்கான பாடல் ஆகும்.
இதில் உதைக்கும், அடிக்கும் விஷயம் ஒன்றும் கிடையாது. ஆனால்
எவரொருவருக்கும் நிச்சயம் ஏற்படுவதே மிகவும் கடினமாக உள்ளது.
நிச்சயம் முழுமையாக ஏற்பட்டு விட்டால் கர்மாதீத நிலை ஏற்பட்டு
விடும். ஆனால் அந்த நிலை ஏற்படுவதற்கும் நேரம் வேண்டும். அது
கடைசியில் ஏற்படும். இதில் மிகவுமே உறுதியான நிச்சயம் வேண்டும்.
சிவபாபா மூலமாகவோ ஒரு பொழுதும் எந்த ஒரு தவறும் ஏற்பட முடியாது.
இவர் மூலமாக ஏற்படக்கூடும். இவர்கள் இருவருமே
சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் சிவபாபா புரிய வைக்கிறார் என்ற
நிச்சயம் கூட நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அதன்படி நாம்
நடக்க வேண்டும். எனவே பாபாவின் ஸ்ரீமத் என்று புரிந்து நடந்து
கொண்டே செல்லுங்கள். அப்பொழுது தவறானதும் நேரானதாக ஆகி விடும்.
சில இடங்களில் தவறாகப் புரிந்து கொள்வதும் ஆகிவிடுகிறது.
சிவபாபா மற்றும் பிரம்மா பாபாவின் முரளியைக் கூட மிகவும் நல்ல
முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பாபா கூறினாரா இல்லை இவர்
கூறினாரா? அப்படியின்றி பிரம்மா பேசுவதே இல்லை என்பதல்ல. ஆனால்
பாபா புரிய வைத்துள்ளார் - நல்லது. இந்த பிரம்மாவிற்கு ஒன்றுமே
தெரியாது என்று வைத்துக் கொள்வோம். சிவபாபா தான் எல்லாமே
கூறுகிறார். சிவபாபாவின் ரதத்திற்கு ஸ்நானம் செய்விக்கிறேன்.
சிவபாபாவின் பண்டாராவிற்குச் (பண்டகசாலை) சேவை செய்கிறேன் - இது
நினைவிலிருந்தால் கூட மிகவுமே நல்லது. சிவபாபாவின் நினைவில்
இருந்து என்ன செய்தாலும் அநேகரை விட முன்னால் செல்ல முடியும்.
முக்கியமான விஷயமே சிவபாபா வினுடைய நினைவாகும் அ மற்றும் ஆ (அப்பா
மற்றும் ஆஸ்தி) மற்றது எல்லாம் விளக்கமே ஆகும்.
தந்தை புரிய வைப்பதன் மீது கவனம் செலுத்த வேண்டும். தந்தை தான்
பதீத பாவனர், ஞானக்கடல் ஆவார் அல்லவா? அவர் தான் அசுத்தமான
சூத்திரர்களை வந்து பிராமணர்களாக ஆக்குகிறார். பிராமணர்களைத்
தான் தூய்மை ஆக்குகிறார். சூத்திரர்களை தூய்மை ஆக்குவ தில்லை.
இந்த எல்லா விஷயங்களும் எந்த ஒரு பாகவதம் போன்றவற்றில் இல்லை.
கொஞ்சம் கொஞ்சம் வார்த்தைகள் உள்ளன. இராதை கிருஷ்ணர் தான்
இலட்சுமி நாராயணர் ஆவார்கள் என்பது கூட மனிதர்களுக்குத்
தெரியாது. குழம்பி விடுகிறார்கள். தேவதைகள் இருப்பதே சூரிய
வம்சத்தினர் மற்றும் சந்திர வம்சத்தினராக! இலட்சுமி நாராயணரின்
பரம்பரை, சீதை இராமனின் பரம்பரை. பாரதவாசி இனிமையான குழந்தைகளே
! (ஸ்வீட் சில்ட்ரன்) நினைவு செய்யுங்கள் என்று தந்தை
கூறுகிறார். இலட்சக்கணக்கான வருடங்களின் விஷயமே கிடையாது.
நேற்றைய விஷயம் தான். உங்களுக்கு இராஜ்யம் அளித்திருந்தேன்.
இவ்வளவு ஏராளமான பணம், செல்வம் அளித்தேன். தந்தை முழு உலகிற்கு
உங்களை அதிபதியாக ஆக்கினார். வேறு எந்த கண்டங்களும்
இருக்கவில்லை. பிறகு உங்களுக்கு என்ன ஆயிற்று! வித்வான்கள்,
ஆசிரியர்கள், பண்டிதர்கள் யாருமே இந்த விஷயங்களை அறியாமல்
உள்ளார்கள். அட, பாரதவாசிகளே! உங்களுக்கு இராஜ்ய பாக்கியம்
கொடுத்திருந்தேன் அல்லவா என்று தந்தை தான் கூறுகிறார். இவ்வளவு
உங்களுக்கு செல்வம் கொடுத்திருந்தேன், பிறகு நீங்கள் எங்கே
இழந்தீர்கள் என்று சிவபாபா சொல்கிறார் என்று தான் நீங்களும்
கூறுவீர்கள். தந்தையினுடைய ஆஸ்தி எவ்வளவு பலம் பொருந்தியது?.
தந்தை தான் கேட்பார் அல்லவா? அல்லது லௌகீக தந்தை சென்று இறந்து
விட்டார் என்றால் நண்பர்கள் உறவினர்கள் கேட்கிறார்கள். தந்தை
உங்களுக்கு இவ்வளவு செல்வம் அளித்தார் எல்லா வற்றையும் எங்கே
இழந்தீர்கள்? இவரோ எல்லையில்லாத தந்தை ஆவார். தந்தை சோழியி
லிருந்து வைரமாக ஆக்கினார். இவ்வளவு இராஜ்யம் அளித்தார், பிறகு
செல்வமெல்லாம் எங்கே போயிற்று? நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்?
யாருக்குமே புரிய வருவதில்லை. இவ்வளவு ஏழை யாக எப்படி ஆனீர்கள்
என்று பாபா சரியாகத் தான் கேட்கிறார் என்று நீங்கள்
புரிந்துள்ளீர்கள். முதலில் எல்லாமே சதோபிரதானமாக இருந்தது.
பிறகு கலைகள் குறைந்து கொண்டே போயின, அதனால் எல்லாமே குறைந்து
கொண்டே போயிற்று. சத்யுகத்திலோ சதோபிரதானமாக இருந்தார் கள்.
இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. இராதா கிருஷ்ணரை விட
இலட்சுமி நாராயணரின் பெயர் அதிகமாக பிரபலமாக உள்ளது. அவர்களைப்
பற்றி எந்த ஒரு நிந்தனை செய்யும் விஷயமும் எழுதவில்லை. மற்ற
எல்லோரையும் நிந்தித்து எழுதி உள்ளார்கள். லட்சுமி நாராயணருடைய
ராஜ்யத்தில் எந்த ஒரு அரக்கனும் இருந்ததாகக் கூறுவதில்லை. எனவே
இவை புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். பாபா ஞான
செல்வத்தினாலே பைபை நிரப்பிக் கொண்டிருக்கிறார். குழந்தைகளே !
இந்த மாயையிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று தந்தை கூறுகிறார்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. புத்திசாலி ஆகி உண்மையான சேவையில் ஈடுபட்டு விட வேண்டும்.
பொறுப்பாளர் ஒரு தந்தை ஆவார், எனவே ஸ்ரீமத்தில் சந்தேகம் எழக்
கூடாது. நிச்சயத்தில் ஆடாது இருக்க வேண்டும்.
2. ஞான மனனம் செய்து தந்தையின் ஒவ்வொரு அறிவுரை மீதும் கவனம்
செலுத்த வேண்டும். சுயம் ஞானத்தை தாரணை செய்து மற்றவர்களுக்கும்
கூற வேண்டும்.
வரதானம்:
தன்னுடைய அனாதி, ஆதி ரியல் ரூபத்தை ரியலைஸ் செய்யக்கூடிய
சம்பூரணத் தூய்மையானவர் ஆகுக.
ஆத்மாவினுடைய அனாதி மற்றும் ஆதி ஆகிய இரண்டு காலங்களின்
உண்மையான சொரூபம் தூய்மை ஆகும். தூய்மையற்ற நிலை என்பது
செயற்கையானது, சூத்திரர்களின் பரிசு ஆகும். சூத்திரர்களின்
பொருளை பிராமணர்கள் பயன்படுத்த முடியாது, எனவே, அனாதி, ஆதி
ரியல் ரூபத்தில் நான் தூய்மையான ஆத்மா ஆவேன் என்ற இந்த
சங்கல்பம் மட்டும் செய்யுங்கள், யாரைப் பார்த்தாலும்
அவர்களுடைய உண்மையான (ரியல்) ரூபத்தைப் பாருங்கள், உண்மையை
உணருங்கள் (ரியலைஸ்), அப்பொழுது சம்பூரணத் தூய்மையாகி,
முதல்தரமான, ஏர்கண்டிஷன் டிக்கெட்டிற்கான அதிகாரி
ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
பரமாத்ம ஆசீர்வாதங்களினால் தன்னுடைய பையை நிறைத்துக்
கொள்ளுங்கள், அப்பொழுது மாயா அருகில் வரமுடியாது.
அவ்யக்த இஷாரே: இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனத்திலிருந்து
விடுபட்டு ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்
பெரும்பான்மை குழந்தைகள் இப்பொழுது இரும்புச் சங்கிலிகளையோ
வெட்டிவிட்டார்கள், ஆனால், மிகவும் நுட்பமான மற்றும் இராயலான
நூல் இப்பொழுதும் கட்டிப் போட்டுள்ளது. சிலர் பெர்சனாலிட்டியை
(தனித்துவம்) உணரக்கூடியவர்கள், தனக்குள் நல்லவைகளோ இல்லை,
ஆனால், நான் மிகவும் நல்லவர், நான் மிகவும் முன்னேறிக்
கொண்டிருக்கின்றேன் என்ற உணர்வு ஏற்படுகின்றது. இந்த ஜீவன்
பந்தனத்தின் நூல் பெரும்பான்மையினரிடம் உள்ளது. பாப்தாதா
இப்பொழுது இந்த நூல்களில் இருந்தும் முக்தி, ஜீவன்முக்தி
அடைந்திருப்பதைப் பார்ப்பதற்கு விரும்புகின்றார்கள்.