03-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த எல்லையற்ற நாடகத்தை சதா நினைவில் வைப்பீர்களானால் அளவற்ற குஷி இருக்கும். இந்நாடகத்தில் யார் நல்ல முயற்சியாளர்களாக மற்றும் இணையற்ற வராக (ஈடுபாட்டுடன்) உள்ளனரோ, அவர்களுக்குப் பூஜையும் அதிகம் நடைபெறுகின்றது.

கேள்வி:
எந்த ஒரு நினைவு உலகத்தின் அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுவித்து விடுகிறது? மகிழ்ச்சியாக இருப்பதற்கான யுக்தி என்ன?

பதில்:
இப்போது நாம் வருங்கால புது உலகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது சதா நினைவிருக் கட்டும், வருங்காலத்தின் குஷியில் இருப்பீர்களானால் துக்கங்கள் மறந்து போகும். விக்னங்களின் உலகத்தில் விக்னங்களோ வரும், ஆனால், இவ்வுலகில் நாம் இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கப் போகிறோம் என்பது நினைவிருந்தால் மகிழ்ச்சியாக இருப்போம்.

பாடல்:
எழுந்திருங்கள் மணமகள்களே, எழுந்திருங்கள்............

ஓம் சாந்தி.
இந்தப் பாடல் மிக நன்றாக உள்ளது. பாடலைக் கேட்டதுமே மேலிருந்து தொடங்கி 84 பிறவி களின் இரகசியம் புத்தியில் வந்து விடுகின்றது. இதுவும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் பட்டுள்ளது, நீங்கள் எப்போது மேலிருந்து வருகிறீர்களோ, அப்போது சூட்சுமவதனத்தின் வழியாக வருவதில்லை. இப்போது சூட்சும வதனத்தின் வழியாகச் செல்ல வேண்டும். சூட்சுமவதனத்தை பாபா இப்போது தான் காட்டுகிறார். சத்யுக-திரேதாவில் இந்த ஞானத்தின் விசயமும் இருக்காது. சித்திரங்கள் முதலியனவும் இருக்காது. பக்தி மார்க்கத்திலோ எண்ணற்ற சித்திரங்கள் உள்ளன. தேவிகள் முதலியோரின் பூஜைகளும் அதிகம் நடைபெறுகின்றன. துர்க்கா, காளி, சரஸ்வதி எல்லாம் ஒருவர் தான், ஆனால் பெயர்கள் எத்தனை வைத்து விட்டனர்! யார் நல்ல புருஷார்த்தம் செய்திருப்பார்களோ, ஒப்பற்றவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்குப் பூஜையும் அதிகம் நடக்கும். நீங்கள் அறிவீர்கள், நாம் தான் பூஜைக்குரிய நிலையிலிருந்து பூஜாரி ஆகி பாபாவின் மற்றும் தன்னுடைய பூஜையைச் செய்கிறோம். இவரும் (பிரம்மா பாபா) நாராயணரின் பூஜை செய்து வந்தார் இல்லையா? அற்புதமான விளையாட்டு! எப்படி நாடகம் பார்ப்பதால் குஷி ஏற்படு கின்றது இல்லையா? அதுபோல் இதுவும் எல்லையற்ற நாடகமாகும். இதை யாரும் அறிந்திருக்க வில்லை. உங்களது புத்தியில் இப்போது முழு டிராமாவின் இரகசியம் உள்ளது. இந்த உலகத்தில் எவ்வளவு அளவற்ற துக்கம்! நீங்கள் அறிவீர்கள், இப்போது இன்னும் கொஞ்சம் சமயம் உள்ளது. நாம் புது உலகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். வருங்காலத்தின் குஷி இருக்கிறது என்றால் இந்த துக்கத்தை விடுவித்து விடுகின்றது. எழுதுகின்றனர், பாபா, அதிக விக்னங்கள் ஏற்படுகின்றன, நஷ்டம் ஏற்பட்டு விடுகின்றது. பாபா சொல்கிறார், எந்த விக்னம் வந்தாலும், இன்று இலட்சாதி பதியாக இருக்கலாம், நாளை ஒன்றுமில்லாதவர்களாக ஆகி விடுகிறீர்கள். நீங்களோ வருங்காலத் தின் குஷியில் இருக்க வேண்டும் இல்லையா? இதுவே இராவணனின் அசுர உலகம். போகப்போக ஏதாவதொரு விக்னம் ஏற்படும். இந்த உலகத்தில் இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளன. பிறகு நாம் அளவற்ற சுகத்தில் செல்வோம். பாபா சொல்கிறார் இல்லையா! நேற்று கருப்பாக இருந்தார், கிராமத்துச் சிறுவனாக இருந்தார். இப்போது பாபா நமக்கு ஞானம் தந்து வெள்ளையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அறிவீர்கள், பாபா விதைரூபமாக உள்ளார். சத்தியமாக, சைதன்யமாக உள்ளார். அவர் மேன்மையான பரம் ஆத்மா எனச் சொல்லப்படுகிறார். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்த இடத்தில் வசிப்பவர். புனர்ஜென்மத்தில் அவர் வருவதில்லை. நாம் அனைவரும் பிறப்பு-இறப்பில் வருகிறோம். அவர் ரிசர்வ்டாக (பிறப்பு-இறப்புக்கு அப்பாற் பட்டவராக) உள்ளார். அவரோ கடைசியில் வந்து அனைவருக்கும் கதி-சத்கதி அளிக்க வேண்டும். நீங்கள் ஜென்ம-ஜென்மாந்த ரமாகப் பாடியே வந்திருக்கிறீர்கள் - பாபா, நீங்கள் வருவீர்களானால் நாங்கள் உங்களுடையவர் களாகவே ஆகிவிடுவோம். எனக்கோ ஒரு பாபாவைத் தவிர வேறு யாருமே கிடையாது. நாங்கள் பாபாவுடன் கூடத் தான் செல்வோம். இது துக்கத்தின் உலகம். பாரதம் எவ்வளவு ஏழையாக உள்ளது! பாபா சொல்கிறார், நான் பாரதத்தைத் தான் பணக்கார நாடாக ஆக்குவதற்காக வந்திருந்தேன். பிறகு இராவணன் நரகமாக்கியுள்ளான். இப்போது குழந்தைகள் நீங்கள் பாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். இல்லற விவகாரங்களிலும் கூட அநேகர் உள்ளனர். அனைவரும் இங்கேயோ அமர்ந்துவிட முடியாது. இல்லற விவகாரங்களில் தாராளமாக இருங்கள். வண்ண ஆடைகளை அணிந்து கொள்ளுஙகள், யார் சொல்கிறார்கள், வெள்ளை ஆடைதான் அணிய வேண்டும் என்று? பாபா ஒருபோதும் யாருக்கும் அதுபோல் சொல்லவில்லை. உங்களுக்கே நன்றாகத் தோன்றவில்லை. அதனால் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறீர்கள். இங்கே நீங்கள் வெள்ளை ஆடை அணிந்து அமர்ந்திருக்கலாம். ஆனால் வண்ண ஆடை அணிபவர்கள், அந்த ஆடையிலேயே கூட அநேகருக்கு நன்மை செய்ய முடியும். பவித்திரமாகுங்கள் என்று பகவான் சொல்கிறார் என தாய்மார்கள் தங்கள் கணவன்மாருக்கும் சொல்ல வேண்டும் - . தேவதைகள் பவித்திரமாக உள்ளனர். அதனால் தான் அவர்களுக்குத் தலைவணங்குகின்றனர். பவித்திரமாக ஆவதோ நல்லது தான் இல்லையா? இப்போது நீங்கள் அறிவீர்கள், இது சிருஷ்டியின் கடைசி நேரம். அதிகமான பணம் என்ன செய்யும்? தற்காலத்தில் எவ்வளவு கொள்ளைகள் நடைபெறு கின்றன! இலஞ்சம் வாங்குவது எவ்வளவு நடைபெறுகின்றது! இது இப்போதைய சமயத்தின் பாடலாக உள்ளது - யாருடைய செல்வம் மண்ணுக்குள் புதைக்கப் பட்டுள்ளதோ, அதெல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விடும்......... யார் தனது செல்வத்தை இந்நேரம் பரமாத்ம காரியங்களில் செலவழிக்கிறார்களோ, அவர்களது செல்வம் அநேகப் பிறவிகள் பயனுள்ளதாக இருக்கும்........ அந்த செல்வந்தரோ (பரமாத்மா) இப்போது முன்னிலையில் உள்ளார். புத்திசாலிக் குழந்தைகள் தங்களிடம் உள்ள அனைத்தையும் அந்த செல்வந்தராகிய பரமாத்மாவின் பெயரில் பயனுள்ளதாக ஆக்குவார்கள்.

மனிதர்களோ, அனைவரும் பதீதமானவர்கள், பதீதமானவர்களுக்கு தானம் செய்கின்றனர். இங்கோ புண்ணிய ஆத்மாக்களின் தானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிராமணர்களைத் தவிர வேறு யாரோடும் தொடர்பு கிடையாது. நீங்கள் புண்ணிய ஆத்மாக்கள். நீங்கள் புண்ணியத்தின் காரியத்தைத் தான் செய்கிறீர்கள். இந்தக் கட்டடங்கள் உருவாகின்றன. அவற்றிலும் நீங்கள் தான் தங்குகிறீர்கள். பாவத்தின் விசயம் எதுவும் கிடையாது. எவ்வளவு பணம் உள்ளதோ, அதை பாரதத்தை சொர்க்கமாக்குவதற்காகச் செலவு செய்து கொண்டே இருக்கிறார்கள். தன்னுடைய வயிற்றுக்குக் கூட ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு சொல்கின்றனர்-பாபா, என்னுடைய ஒரு செங்கலை யாவது இதில் வைத்தால் அங்கே எனக்கு மாளிகை கிடைத்து விடும். எவ்வளவு புத்திசாலிக் குழந்தைகள்! கற்களுக்கு பதிலாகத் தங்கம் கிடைக்கின்றது. சமயமும் இன்னும் கொஞ்சமே உள்ளது. நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்கள்! கண்காட்சி, மேளாக்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பெண் குழந்தைகள் தீவிரமாக வேண்டும். எல்லையற்ற தந்தை யுடையவர்களாக ஆவதில்லை, மோகத்தை விடுவதில்லை. பாபா சொல்கிறார், நான் உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தேன், இப்போது மீண்டும் உங்களை சொர்க்கத்திற்காகத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். ஸ்ரீமத்படி நடப்பார்களானால் உயர்ந்த பதவி பெறுவார்கள். இந்த விசயங்களை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. முழு சிருஷ்டிச் சக்கரமும் உங்கள் புத்தியில் உள்ளது - மூலவதனம், சூட்சுமவதனம் மற்றம் ஸ்தூலவதனம். பாபா சொல்கிறார் - குழந்தைகளே, சுயதரிசனச் சக்கரதாரி ஆகுங்கள். மற்றவர்களுக்கும் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். இந்தத் தொழில் பாருங்கள், எப்படி உள்ளது? தானும் தனவானாக, சொர்க்கத்தின் மாலிக்காக ஆக வேண்டும், மற்றவர்களையும் ஆக்க வேண்டும். புத்தியில் இது தான் இருக்க வேண்டும் - யாருக்கு எப்படி வழி சொல்வது? டிராமாவின் அனுசாரம் எது நடந்து முடிந்ததோ அது டிராமா. விநாடிக்கு விநாடி என்ன நடைபெறுகிறதோ, அதை நாம் சாட்சியாக இருந்து பார்க்கிறோம். குழந்தைகளுக்கு பாபா திவ்ய திருஷ்டி மூலம் சாட்சாத்காரம் செய்விக்கிறார். இன்னும் போகப்போக நீங்கள் அதிக சாட்சாத்காரங்கள் பார்ப்பீர்கள். மனிதர்கள் துக்கத்தில் கூக்குரலிட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் குஷியில் கை தட்டிக் கொண்டே இருப்பீர்கள். நாம் மனிதரில் இருந்து தேவதை ஆகிறோம் என்றால் அவசியம் புதிய உலகம் வேண்டும். அதற்காக இந்த விநாசம் நின்று கொண்டுள்ளது. இதுவோ நல்லது தான் இல்லையா? மனிதர்கள் நினைக்கின்றனர், தங்களுக்குள் அடித்துக் கொள்ளக் கூடாது, அமைதி நிலவ வேண்டும் என்று. ஆனால் இதுவோ டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. இரண்டு குரங்குகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டன என்றால் வெண்ணெய் இடையில் மூன்றாமவருக்குக் கிடைத்தது. ஆக, இப்போது பாபா சொல்கிறார் - தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், அனைவருக்கும் வழி சொல்லுங்கள். இருப்பதும் சாதாரணமாக, உண்பதும் சாதாரணமாக இருக்க வேண்டும். அவ்வப்போது உபசாரமும் செய்யப்படுகின்றது. எந்த பண்டாராவிலிருந்து சாப்பிட்டார்களோ, அவர்கள் சொல்கின்றனர், பாபா, இவையனைத்தும் உங்களுடையவை. பாபா சொல்கிறார், டிரஸ்டியாக இருந்து பரிபாலனை செய்யுங்கள். பாபா, அனைத்துமே தாங்கள் தந்தவை. பக்தி மார்க்கத்தில் ஒரு பேச்சுக்காக மட்டும் சொல்லிவிடு கின்றனர். இப்போது நான் உங்களுக்குச் சொல்கிறேன், டிரஸ்டி ஆகுங்கள். இப்போது நான் முன்னிலையில் உள்ளேன். நானும் டிரஸ்டி ஆகிப் பிறகு உங்களை டிரஸ்டி ஆக்குகிறேன். எதைச் செய்தாலும் கேட்டுக் கொண்டு செய்யுங்கள். பாபா ஒவ்வொரு விசயத்திலும் அறிவுரை தந்து கொண்டே இருப்பார். பாபா, கட்டடம் கட்டலாமா, இதைச் செய்யலாமா எனக் கேட்டால் செய்யுங் கள் எனச் சொல்வார். மற்றப்படி பாவாத்மாக்களுக்குக் கொடுக்கக் கூடாது. பெண் குழந்தை ஞானத்தில் இல்லை என்றால், திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் என்றால் என்ன செய்ய முடியும்? பாபாவோ புரிய வைக்கிறார், நீங்கள் ஏன் அபவித்திரமாகிறீர்கள்? ஆனால் யாருடைய அதிர்ஷ்டத்திலாவது இல்லை என்றால் பதீதம் ஆகிவிடுகின்றனர். அநேக விதமான கேஸ்களும் (வழக்கு) நடைபெற்றுக் கொண்டே உள்ளன.. பவித்திரமாக இருந்தாலும் மாயாவின் அடி விழுந்து விடுகின்றது. கெட்டுப் போகின்றனர். மாயா மிகவும் சக்தி வாய்ந்தது. அவர்களும் காம வசப்பட்டு விடுகின்றனர். பிறகு இது மாயாவின் விதி எனச் சொல்லப்படுகின்றது. இந்த நிமிடம் வரை என்னென்ன நடந்ததோ, கல்பத்திற்கு முன்பும் கூட நடந்துள்ளது. எதுவும் புதிதல்ல நல்ல காரியம் செய்வதில் விக்னத்தை ஏற்படுத்துகின்றனர். புது விசயமல்ல. நாமோ உடல்-மனம்-செல்வத்தால் பாரதத்தை அவசியம் சொர்க்கமாக்க வேண்டும். அனைத்தையும் பாபா மீது அர்ப்பணம் செய் வோம். குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், நாம் ஸ்ரீமத்படி இந்த பாரதத்திற்கு ஆன்மிக சேவை செய்து கொண்டிருக்கிறோம். உங்கள் புத்தியில் உள்ளது, நாம் நம்முடைய இராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். பாபா சொல்கிறார், இந்த ஆன்மிக மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்தை மூன்றடி நிலத்தில் திறந்து வையுங்கள். இதன் மூலம் மனிதர்கள் சதா ஆரோக்கியமானவர்களாக, செல்வந்தர்களாக ஆக வேண்டும். மூன்றடி நிலம் கூட யாரும் தருவதில்லை. பி.கே. மாயாமந்திரம் செய்வார்கள், சகோதர-சகோதரி ஆக்கி விடுவார்கள் என்று. உங்களுக்காக டிராமாவில் மிக நல்ல யுக்தி உருவாக்கப் பட்டுள்ளது. சகோதர-சகோதரிகள் தங்களுக்கள் தீய பார்வை வைக்க முடியாது. தற்போதைய உலகிலோ அவ்வளவு அசுத்தம் உள்ளது! கேட்கவே வேண்டாம். ஆக, எப்படி பாபாவுக்கு இரக்கம் வந்ததோ, அதுபோல் குழந்தை களாகிய உங்களுக்கும் வர வேண்டும். எப்படி பாபா நரகத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக் கிறாரோ, அவ்வாறே இரக்க மனம் உள்ள குழந்தைகளாகிய நீங்களும் பாபாவுக்கு உதவியாளராக ஆக வேண்டும். பணம் இருந்தால் மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்தைத் திறந்து கொண்டே செல்லுங்கள். இதில் அதிக செலவுக்கான எந்த ஒரு விசயமும் கிடையாது. சித்திரங் களை மட்டும் வையுங்கள். யார் கல்பத்திற்கு முன் ஞானத்தைப் பெற்றிருப்பார்களோ, அவர்களின் புத்தியின் பூட்டு திறந்து கொண்டே போகும். அவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எவ்வளவு குழந்தைகள் படிப்பதற்காக தூர-தூரத்திலிருந்து வருகின்றனர்! பாபா இப்படியும் பார்த்திருக்கிறார்-இரவில் ஒரு கிராமத்திலிருந்து வருகின்றனர், காலையில் சென்டருக்கு வந்து பையை நிரப்பிக் கொண்டு செல்கின்றனர். பையிலிருந்து துவாரத்தின் வழியாக வெளியில் சிந்துகிற மாதிரியும் இருக்கக் கூடாது. (பை காலியாகி விட்டால்) அவர்கள் பிறகு என்ன பதவி பெறுவார்கள்? குழந்தைகளாகிய உங்களுக்கோ மிகுந்த குஷி இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார், எல்லையற்ற ஆஸ்தி தருவதற்காக. எவ்வளவு சகஜமான ஞானம்! பாபா புரிந்து கொண்டிருக்கிறார், யார் முற்றிலும் கல்புத்தியாக உள்ளனரோ, அவர்களைப் தங்க புத்தி உள்ளவர்களாக ஆக்க வேண்டும். பாபாவுக்கோ மிகுந்த குஷி இருக்கிறது. இவர் குப்தமாக உள்ளார் இல்லையா? ஞானமும் குப்தமானது. மம்மா-பாபா இந்த இலட்சுமி-நாராயணராக ஆகின்றனர் என்றால் நாம் பிறகு குறைவாக ஆவோமா என்ன? நாமும் சேவை செய்வோம். ஆக, இந்த நஷா இருக்க வேண்டும். நாம் யோகபலத்தின் மூலம் நம்முடைய இராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். இப்போது நாம் சொர்க்கத்திற்கு மாலிக் (எஜமானர்) ஆகிறோம். அங்கே பிறகு இந்த ஞானம் இருக்காது. இந்த ஞானம் இப்போதைய சமயத்திற்கானது. நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) புத்திசாலி ஆகி தன்னிடமுள்ள அனைத்தையும் செல்வந்தராகிய பரமாத்மாவின் பெயரில் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். பதீதமானவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது. பிராமணர்களைத் தவிர வேறு யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

2) புத்தி என்ற பையில் இருந்து ஞானம் வெளியேறி விடுகிற மாதிரி துவாரம் எதுவும் இருக்கக் கூடாது. எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஆஸ்தி தருவதற்காகப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். இந்த குப்தமான குஷியில் இருக்க வேண்டும். பாபாவுக்கு சமமாக இரக்க மனம் உள்ளவராக ஆக வேண்டும்.

வரதானம்:
சம்பன்னதா (முழுமை நிலை) மூலமாக சந்துஷ்டத்தா (திருப்தி) அனுபவம் செய்பவராக சதா முக மலர்ச்சியுடன், வெற்றியாளர் ஆகுக

யாரொருவர் அனைத்து பொக்கிஷங்களாலும் நிரம்பியருப்பாரோ அவரே சதா திருப்தியாளர் ஆவார். திருப்தி என்பது முழுமை. தந்தை முழுமையாக இருப்பதால் மகிமையில் கடலென சொல்லப்படுகிறது. அவ்வாறே குழந்தைகளான நீங்களும் மாஸ்டர் கடல் என முழுமையாக இருந்தால் சதா குஷியில் நடனமாடுவீர்கள். தன்னுள் குஷியைத் தவிர வேறு எதுவும் வர முடியாது. தானே முழுமையாக இருப்பதால் எவருடனும் தொந்தரவு அடைய மாட்டார்கள். தடை, குழப்பம் எதுவாயினும் விளையாட்டாக அனுபவம் ஆகும். இன்னல்கள் மனம் மகிழ்விக்கும் சாதனமாகி விடும். நம்பிக்கை புத்தி உள்ள காரணத்தால் சதா மகிழ்ச்சியுடனி வெற்றி அடைவார்கள்.

சுலோகன்:
பாதகமான இன்னல்களைக் கண்டு பயப்படாமல் அதன் மூலம் பாடம் பயின்று தன்னை பரிபக்கவமாக்குங்கள்.

மாதேஷ்வரிஜி அவர்களின் விலைமதிப்பற்ற மகாவாக்கியம்

1. பரமாத்மா குரு, டீச்சர், தந்தையின் உருவில் விதவிதமான உறவுகளின் ஆஸ்தியைத் தருகிறார்.

பரமாத்மா மூன்று ரூபங்களில் தாரணை செய்து ஆஸ்தியை தருகிறார். அவர் நமது தந்தை யாகவும் கூட இருக்கிறார், ஆசிரியராகவும், குருவாகவும் இருக்கிறார். இப்பொழுது தந்தையுடன் தந்தை என்ற உறவு இருக்கிறது, ஆசிரியருடன் ஆசிரியர் என்ற உறவு இருக்கிறது, குருவுடன் குரு என்ற உறவு இருக்கிறது. ஒருவேளை தந்தையிடமிருந்து நாம் விலகி சென்றுவிட்டால், ஆஸ்தி எவ்வாறு கிடைக்கும்? நாம் தேர்ச்சி பெற்று ஆசிரியரின் மூலம் சான்றிதழைப் பெறும்பொழுது தான் ஆசிரியரின் ஓத்துழைப்பு கிடைக்கும். தந்தைக்கு நேர்மையாகவும், கட்டளைக்கு கீழ்படியும் குழந்தையாகி டைரக்ஷன் படி நடக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் பாக்கியம் உருவாகாது. மேலும் முழுமையான சத்கதியைக் (நல்நிலையை) கூட அடைய முடியாது. அடுத்து தந்தையிடமிருந்து தூய்மையின் ஆஸ்தி பெற முடியாது. ஒருவேளை நீங்கள் தீவிர முயற்சி செய்கிறீர்கள் என்றால், 100 மடங்கு பலன் கொடுப்பேன் என்று பரமாத்மா உறுதிமொழி அளித்திருக்கிறார். சொல்வதற்காக மட்டும் அல்ல, அவருடன் உறவு கூட ஆழமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் சொல்லுங்கள், நிரந்தரமாக என்னை நினைவு செய் என்று அர்ஜுனனுக்கு கூட கட்டளை கொடுக்கப்பட்டது, பரமாத்மா சக்திசாலியானவராகவும், சர்வசக்தி வானாகவும் இருக்கிறார், குழந்தைகள் கூட பாபாவின் கட்டளையை கடைப்பிடிக்கும் பொழுது, அவர் தன்னுடைய உறுதி மொழியை அவசியம் கடைப்பிடிப்பார். அனைவரிடமிருந்து புத்தியின் நினைவை நீக்கி ஒரு பரமாத்மாவோடு இணைக்கும் பொழுது தான் அவரிடமிருந்து முழுமையான ஆஸ்தி கிடைக்கும்.

2. அனைத்து மனித ஆத்மாக்களும் மறுபிறவியில் வருகிறார்கள்.

யாரெல்லாம் தர்மத்தை (மதத்தை) ஸ்தாபனை செய்வதற்கு வருகிறார்களோ, அவர்கள் மறுபிறவி எடுத்து தனது தர்மத்தின் பாலனை (வளர்ப்பு) செய்ய வருகிறார். அவர்கள் தானும் முக்தி அடைவதில்லை, மற்றவர்களுக்கும் முக்தி கொடுப்பதில்லை. ஒருவேளை அவ்வாறு முக்தி பெற்று விடுகிறார்கள் என்றால், மற்றபடி முக்தி பெறாதவர்கள் மட்டும் தான் உலகத்தில் இருப்பார்கள். ஆனால் பாவ ஆத்மாகள் இருந்து விடுவார்கள், புண்ணிய ஆத்மாக்கள் சென்று விடுவார்கள் என்பது அல்ல. சந்தியாசிகள் நிர்விகாரிகளாக இருக்கிறார்கள், ஒருவேளை அவர்கள் முக்தி பெற்று விட்டார்கள் என்றால், பாவ ஆத்மாக்கள் இருந்து விடுவார்கள், பிறகு சந்நியாசிகளின் வளர்ச்சி அதிகரிப்பதைப் பார்க்க முடியாது, மேலும் அவ்வாறு உலகம் இயங்காது. புண்ணிய ஆத்மாக்கள் தூய்மையின் ஆதாரத்தினால் உலகத்தை தாங்கிப் பிடித்து கொண்டிருக்கிறார்கள், அதனால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் காமவிகாரம் என்ற நெருப்பினால் உலகம் எரிந்து சாம்பலாகிவிடும். இடையில் (நாடகத்திற்கு) யாராவது முக்தி பெற்றுவிடுவார்கள் என்பது சட்டம் கிடையாது. மரத்தினுடைய ஒரு இலை கூட விதையினுள் ஐக்கியமாகி விட முடியாது. மரம் உருவாகி வளர்ச்சியை அடைந்து தளர்ச்சியடைந்து விட வேண்டும், மீண்டும் புதிய மரம் உருவாகும். ஆகையால் தர்மத்தை ஸ்தாபனை செய்ய யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, அவர்கள் பிறகு பாலனை அவசியம் செய்கிறார்கள், ஆனால் நாம் யாருடைய துணையைப் பற்றியுள்ளோமோ, அவர் அநேக அதர்மத்தை அழிக்கும் பொழுது தான் ஒரு தர்மம் ஸ்தாபனை ஆகிறது, இவர் ஸ்தாபனை, விநாசம் மற்றும் பாலனை மூன்றின் காரியத்தை செய்கிறார், மற்ற தர்ம பிதாக்கள் ஸ்தாபனையின் காரியத்தை செய்கிறார்கள், விநாசத்தின் காரியம் செய்வதில்லை, விநாசத்தின் காரியத்தை செய்ய வைப்பது பரமாத்மாவின் கையில் இருக்கிறது, ஆகையால் அவரை திரிமூர்த்தி என்று சொல்லப் படுகிறது. நல்லது. ஓம் சாந்தி

அவ்யக்த சமிக்ஞை : சத்தியம் மற்றும் பண்பு நிறைந்த கலாச்சாரத்தை தனதாக்குங்கள்

ஆவேசத்தில் வந்து ஒருவர் சத்தியத்தை நிரூபிக்க முற்பட்டால் அவசியம் அதில் ஏதா ஒரு பொய்மை இருப்பதாகும். சில குழந்தைகளின் வார்த்தை நான் சொல்வது அனைத்திலும் உண்மை, 100 சதவீதம் உண்மை சொல்கிறேன். ஆனால் சத்யத்தை நிரூபிக்க வேண்டியதில்லை. சத்ய மெனும் சூரியனை மறைக்க முடியாது. எத்தனை மதிர்சுவர் இடைய வந்தாலும் சத்தியத்தின் ஒளியை ஒருபோதும் மறைக்க முடியாது. நாகரீகமான சொல்-லும், நடத்தையிலுமே தான் வெற்றி அமைந்துள்ளது.